in , , ,

கை நீட்டி அழைக்கிறேன்- part 28

Part 28

 மாடிக்கு சென்ற அர்ஜுன், “மாமா.. ” என தயங்கி வாயிலில் நிற்க.
“உள்ள வா அர்ஜுன்” என அழைத்தார் சுரேஷ். பத்மாவும் அழுதிருந்தார் என்பது பார்த்தவுடன் புரிந்தது. கார்த்தி முகத்தில் எந்த ஒரு உணர்ச்சி பிரதிபலிப்பும் இல்லாமல் சுரேஷின் அருகில் உட்கார்ந்திருந்தான்.
என்ன பேசுவது என தெரியாமல் குழப்பத்தில் நின்றான். யாரை சமாதானம் செய்வது முதலில், என்ன சொல்லி சமாதானம் செய்வது?

“சுகந்தி உள்ள இருக்கா அர்ஜுன். போய் பேசு” என்றார் சுரேஷ். 

“சரி மாமா. அத்தை சாப்பாடு போட்டு குடுங்க தட்டுல. நான் அவளை சாப்பிட வைக்கிறேன்” அவர் உடனே உள்ள சென்று எடுத்து வந்தார்.
“நீங்க எல்லாரும் சாப்பிடுங்க” என்றவன் உள்ளே சென்றான். பத்மா அவர்களுக்கு தனிமை கொடுத்து கதவை சாத்தினார்.

 ஜன்னல் அருகே நின்றிருந்தாள், தட்டை மேஜை மீது வைத்து விட்டு அவள் அருகே சென்றான். அவளை தன் பக்கம் திருப்பி அவள் முகத்தை தன் கையில் ஏந்தினான். அழுது அழுது கண்கள் சிவந்து, முகமெல்லாம் வாடி போய், வலித்தது அவளை பார்க்கையில். நான்கு வயது குட்டி பெண்ணாக இந்த வீட்டிற்கு அவள் வந்தபோது சில நாட்களில் இவன் பள்ளியிலேயே சேர்த்துவிட பட்டாள். மிரண்ட பார்வையும், கண்ணில் தேங்கிய கண்ணீரும், குழிவிழும் கன்னங்களும், படிய வாரிய ரெட்டை குடுமியுமாக அவளை முதன் முதலில் பள்ளி சீருடையில் பார்த்தபோது பத்மா அவனிடமும் பூரணியிடமும்  “பத்திரமா பாத்துக்கோ அவ ரொம்ப அழுதா ஃபீவர் வந்துரும்” என சொன்னது தான். பூரணி ஒரு பாடிகார்ட்டும் அர்ஜுன் இன்னொரு பாடிகாரட்டும் ஆகி போயினர். இவர்கள் எல்லாருக்கும் சேர்த்து பாதுகாவலர்கள் விஷ்வா ஷம்மு. அர்ஜுன் என அழைக்க வராமல் மழலையாய் அஜ்ஜு என்பாள். அந்த குட்டி பெண்ணாக தான் இப்போதும் கண்ணுக்கு தெரிந்தாள்.
“ஏய் அழகி! ஏன்டீ இப்படி? கஷ்டமா இருக்கு டீ அழாத மா. ஏன் டீ இந்த அரை லூஸு பையனை லவ் பண்ண? உன்னை அழாத பாத்துக்கறேன்னு சொல்லிட்டு நீ அழ நானே காரணமாயிட்டேன் டா. நான் போடுற மொக்கைக்கு எல்லாம் சளைக்காம சிரிக்குற, இருபத்தி அஞ்சு வயசாக போகுது இன்னும் சீரியஸ்னெஸ் இல்லாம இப்பவும் ஸ்கூல் பையன் மாதிரி விளையாட்டு தனமா இருக்கிறவனை ஏன் நம்புறே? இப்ப கூட உன்னையோ உன்னை பெத்தவங்களையோ என்ன சொல்லி சமாதானம் பண்ணுறதுனு தெரியலை, இப்படி ஒரு மக்கை எதுக்கு டீ லவ் பண்ண?” அவன் கன்னத்திலும் கண்ணீர் உருண்டோட. அவள் கண்களில் தொலைந்து பேசும் சக்தியை இழந்தான். அவனை இறுக அணைத்து கொண்டு, அவன் மார்பில் சாய்ந்தாள்

“குட்டிமா ஸாரி..” அவனை வாயை மூடும் படி சைகை செய்தவள், ” அஜ்ஜு நீ போடுறது மொக்கையா இருந்தாலும் உன் இன்டென்ஷன் உண்மையானது- எல்லாரையும் எப்பவும் சிரிக்க வெச்சு பாக்கணும். 

உனக்கு பொறுப்பு இல்லைனு என்கிட்ட சொல்லாத – நம்ம ரெண்டு ஃபேமிலிக்காக நீ என்ன வருங்கால ப்ளான் வச்சிருக்கனு எனக்கு தெரியாதா? பூரணியை தங்கச்சியா நினைச்சிருக்குறது மட்டுமில்லை அவளுக்கு ஸ்கூல் டேஸ்லேந்து  நீ டியூஷன் எடுத்து சம்பாதிச்சு சேவிங்க்ஸ் போட்டுட்டு வரது எனக்கு தெரியாதா? 

விச்சு அண்ணா சொன்னாரு, நேத்து கார்த்தி சொன்னானாம் லவ் பண்ணா அர்ஜுன் மாமா மாதிரி இருக்கணும், சின்சியரா அக்காவை லவ் பண்ணாரு, பெரியவங்க பர்மிஷன் வாங்கி தன்னை தகுதியானவனா நிரூபிச்சி அக்காவை கல்யாணம் பண்றாரு அப்படீன்னு” நிமிர்ந்து அவன் கண்களை பாரத்தவள் “அண்ணா இதை சொல்லும் போது எவ்வளவு பெருமையா சந்தோஷமா இருந்தது தெரியுமா? 

உன்னை சுத்தி இருக்குறவங்க அழுதா நீ அழுவ, அவங்களை சிரிக்க வைக்க கோவத்தை போக்க, மங்கி பிராண்டு வேலை பண்ணுவ” அந்த பெயரை கேட்டதும் அவன் முகம் சுருக்க, அவள் சிரித்தாள். “குடும்பத்துல எல்லார் மேலையும் ஒரே மாதிரி பாசம் வெச்சிருக்க. நண்பர்களோ, குடும்பமோ அவங்க சந்தோஷத்துக்காக எதையும் செய்வ. இந்த மாதிரி மனசு எத்தனை பேருக்கு மாமா இருக்கு? 

இப்படி ஒருத்தனை நான் லவ் பண்ணாம இருந்தா தான்டா ஆச்சரியம். ஏன்னா நான் என் வாழ்க்கை துணையா எதிர்பார்த்ததும் இந்த மாதிரி ஒருத்தனை தான். நீ எனக்கே எனக்காக ஸ்பெஷலி மேட் பீஸ் டா அழகா ” என்று அவன் கன்னம் பிடித்து கொஞ்சியவள் அவன் கண்ணீரை துடைத்து அவன் கன்னத்தில் தன் இதழ் பதிக்க. 

வழக்கமாக நெருக்கமான தருணங்களை அவன் கோரும் போது தயங்குபவளே இன்று முதல் அடியை எடுத்து வைக்க ஆச்சரியமாக, “உன்னோட ரைட்ஸை பதிவு பண்றியா டீ அழகி?” என அவன் கண்ணடித்து அணைப்பை இன்னும் இறுக்க.

“எனி அப்ஜெக்ஷன்?” என்று கேட்டு அவனுக்கு அதிர்ச்சி அளித்தவள், அவனை நாற்காலியில் தள்ளி அவன் மடியில் உட்கார்ந்து “ஐ லவ் யு மாமா” என்று மேலும் அதிர்ச்சி அளித்து பின் இதழ் முற்றுகையால் பேரின்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினாள். மூச்சிறைக்க அவனிடமிருந்து பிரிந்தவளை பார்த்து, “பேபி நான் அழுது நீ இப்படிலாம் சமாதானம் பண்றதா இருந்தா நான் மெகா சீரியல் பாத்து கூட அழ தயார் டீ ” என்க.

 “சீ போடா” என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். 

“ஏய் ஐயோ கதவு!” என்றான்.

 “டேய் கேடி! நீ வந்தவுடனே கதவு பூட்டின, எனக்கு தெரியாதுனு  நினைச்சியா?” என்ற படி எழுந்து போய் கை கழுவி விட்டு சாப்பாடு தட்டை எடுத்து வந்தாள். “நீ சாப்பிடலை இல்ல மாமா?” 

“முதல்ல எனக்கு பதில் சொல்லு. ஏன் இவ்வளவு அழுத?” என்றான்.

பெருமூச்செறிந்தவள், “நாம பூரணிக்காக கல்யாணத்தை தள்ளி போடுறதுனு யோசிச்சோம், அதுவும் அந்த பிடிவாதத்தை ஆரம்பிச்சது நான். அதுல ஸ்ட்ராங்காவும் இருந்தேன். உனக்கு ஜாதகத்துல கண்டம் இருக்குனு சொல்லியும் நான் பிடிவாதம் பிடிச்சது  தப்பு தான். எனக்கு நீங்க ரெண்டு பேரும் முக்கியம். இன்னிக்கு நடந்ததை பாத்தா எனக்கு உன்னை நினைச்சு கவலையா இருக்கு அஜ்ஜு. நீயா அவளானு யோசிச்சு பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடுச்சு. கடைசியில நீ தான்டா ஜெயிச்ச. என் பூ குட்டியை பாத்துக்க அண்ணா இருக்காங்க இனிமே. அப்பா கிட்ட கல்யாணத்தை வேணா இன்னும் சீக்கிரமா வைக்க சொல்லி கேக்கவா?” என்றாள். கண்களில் மீண்டும் கண்ணீர் கோர்த்து வேதனை ததும்ப நின்றவளை பார்க்கவே வலித்தது அர்ஜுனுக்கு. 

“அதை அப்புறம் பாக்கலாம் முதல்ல சாப்பிடு” அவளை படுக்கையில் உட்கார வைத்து ஒரு கவளம் எடுத்து அவளுக்கு ஊட்டினான், அவளும் அவனுக்கு ஊட்ட, அமைதியாக சாப்பிட்டு முடித்தனர்.  “இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வரவா மாமா? கொஞ்சம் தான சாப்பிட்ட காலைலேருந்து சாப்பிடலை வேற” அவன் கை கழுவி கொண்டிருக்கையில். இல்லை என தலையசைத்தான். அவளும் கை கழுவ.
அதிசயமாக பார்த்தான் அவளை.   அம்மாவும் சரியாக கணித்திருந்தார். எப்படி தான் இவர்களுக்கு புரிந்து விடுகிறது சொல்லாமலேயே சில விஷயங்கள்? 

உள்ளம் பூரித்தது தன்னவளை நினைத்து. வைத்த கண் வாங்காமல் அவளையே  பார்த்திருந்தான். தன் துப்பட்டாவால் அவன் முகம் துடைத்து அவன் கேசத்தை செல்லமாக கலைத்து என்ன என்றாள் அழகாக சிரித்து கொண்டே.

அவளை இழுத்து அணைத்து கழுத்து வளைவில் முகம் புதைத்தான், “நான் ரொம்ப லக்கி டீ அழகி” என்றான்
“நான் தான் மாமா ரொம்ப ஜாஸ்தி புண்ணியம் பண்ணியிருக்கேன். இப்படி குழந்தை மனசா, இன்னசென்டா ஒருத்தன் கிடைக்க” என்றாள். 

“நான் இன்னசென்ட் இல்லைனு ப்ரூவ் பண்ணவா” என குறும்பாக அவள் இடது காதில் கிசு கிசுத்து, அவள் கழுத்து வளைவில், தோளில் என தன் மீசையாலும் பின் இதழ்களாலும் மயில்தோகையாய் வருட. பின் காதோரம் தொடங்கி, தாடையில், வலது காதோரம், கழுத்து வளைவு, தோள் என தன் தடயத்தை பதிக்க;
கைகள் ஒரு புறம் அவனின் அழகியை அளவெடுக்க தொடங்கியிருந்தது. அவள் தலையை பின் புறமாய் சாய்த்து அவள் தாடையிலிருந்து கீழ்நோக்கி பயணித்து தொண்டை குழியில் ஒரு மெல்லிய முத்தம் கொடுக்க, அவளுக்கு சுவாசம் அங்கேயே சிக்கிக்கொண்டது. உடலில் ஏதேதோ மாற்றங்கள் தோன்றியதும் செய்வதறியாது இன்ப வேதனை கொடுத்தவனையே பற்றுகோலாக பற்றிகொண்டாள். இயற்கையாக ஏற்பட்ட அவளின் உடலின் மாறுதல்கள் அவனுக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்க, அவள் இதழை சிறையெடுத்தான். 

மென்மையான அவனின் இதழ் தீண்டலும், மேனியில் அவன் கைகளின் லீலையும் அவளை பித்தாக்கி கொண்டிருந்தது. சட்டென தன்னிலை உணர்ந்தவள் அவனை விலக்க முயல, அவன் விலகுவதாய் இல்லை. மிகவும் முனைந்து அவன் கைகளை தன்னிடமிருந்து விலக்கி அவன் மார்பில் கை வைத்து தள்ள. அவன் முகத்தில் இருந்த மாறுதல் இதுவரை அவள் கண்டிறாதது. 

சட்டென குளியலறையில் புகுந்து முகம் கழுவி தன்னை சரி செய்து கொண்டான் அர்ஜுன்.  வெளியே வந்து முகம் சிவந்து, மூச்சிறைக்க, இன்னும் சிலையென நிற்கும் தன்னவளை பார்த்து, “இது சும்மா அ னா, ஆவன்னா தான்… இதுக்கே இப்படி இருந்தா கல்யாணம் பண்ணிட்டு எப்படி படிப்ப எக்ஸாமுக்கு?” என்றான் விஷமமாய். அர்த்தம் புரிந்து அவள் மேலும் வெட்கத்தில் சிவக்க, கலைந்திருந்த அவள் தலையை கோதி, துப்பட்டாவையும் சரி செய்து விட்டு, “முகத்தை கழுவிட்டு வா டா, நான் கிளம்பறேன். குட் நைட்! என நெற்றியில் முத்தமிட்டு விலகினான். 

அவள் ஓய்வறையில் புகுந்து கொள்ள அவன் அவள் பெற்றோரிடம் பேசியது தெளிவாக கேட்டது, “சாப்பிட்டா அத்தை. கொஞ்சம் அப்ஸெட்டா தான் இருக்கா, தூங்கி எழுந்தா சரியாகிடுவானு நினைக்கிறேன். என் மேல இருக்குற அக்கறைல, பயத்துல கல்யாணத்தை சீக்கிரம் வெச்சிரலாம்னு சொல்றா. அவ அப்படி ஏதும் சொன்னா ஒத்துக்காதீங்க மாமா. அவ படிக்கணும். குறிச்ச தேதியிலேயே கல்யாணம் நடக்கட்டும். என்னை மன்னிசிடுங்க. தப்பு நடக்கும் போது பாத்துட்டு பேசாம இருக்க முடியலை. நேர்மையான மனுஷனா வளர்த்துட்டாரு அப்பா இன்னைக்கு நடந்தது அதுக்கான விளைவு” என்றான்.

“பத்திரிக்கை துறையும் இது மாதிரி தானப்பா. ஆரம்ப காலத்துல நானும் இது மாதிரி நிறைய ஃபேஸ் பண்ணியிருக்கேன். ஆனா பொண்ணோட வாழ்க்கைனு வந்தவுடனே என்னமோ உடம்புல இருக்கற தைரியம், தெம்பு எல்லாம் வத்தி போன மாதிரி ஆயிடுச்சு. எனிவே கொஞ்சம் கவனமா இரு” என்றார் அவன் கை பற்றி.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by அனு

வணக்கம்! என் பெயர் அனு. நான் housewife, இரண்டு குழந்தைகளின் தாய். புத்தகம் வாசிக்க மிகவும் பிடிக்கும். எழுதும் ஆர்வமும் உண்டு. பள்ளி கல்லூரி நாட்களில் எழுதியது உண்டு, டைரியில். நீண்ட இடைவேளைக்கு பிறகு எழுதும் ஆர்வம் தலைதூக்க, இந்த வலைதளம் வடிகாலாய் அமைந்திருக்கிறது. எனது எழுத்துக்களை வாசிக்கும் அனைவரைககும் நன்றி. 

Story MakerContent Author

கை நீட்டி அழைக்கிறேன்- Part 27

அதிகாரனே அதிரூபனே -16