in , , ,

35.நீ என் சினாமிகா

        35. நீ என் சினாமிகா

வீட்டின்  கதவை திறந்ததும் பொருட்கள் எல்லாம் சிதறியிருக்க, ஆங்காங்கே சிவப்பு இரத்தத்துளிகள் இருப்பதை கண்டதும் பெண்ணவளுக்கு தூக்கி வாரிப் போட்டது என்றால்  ருத்ரனுக்கோ அந்நிலை கண்டு அதிர்ச்சியடைந்தான்….

அம்மும்மா, பப்பா என்று கத்திக் கொண்டே அவள் முன்னோக்கி செல்ல,  திடீரென அவள் பின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் அங்கு ருத்ரன் இல்லாததை கண்டு, பேரதிர்ச்சி அடைந்தாள்… அதற்குள் வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட, ருத்ரா என்னங்க…. என்று மாறிமாறி பயத்தில்  கத்திக் கொண்டிருந்தாள் சினாமி….

வாட் தி ஹெல் இஸ் கோயிங் ஆன்? என்று கத்திக்கொண்டே அந்த இருட்டு அறையில் நின்றிருந்தவளின் தோள்களை யாரோ ஒருவன் வந்து பிடிக்க, முதலில் திடுக்கிட்டவள் தன் கைகளைக் கொண்டு ஓங்கி தாக்க சென்றாள்…

                              *

மித்ரனுக்கு அழைப்பு வர, போனை எடுத்தவன், ” சொல்லுமா என்ன விசயம்?” என்று கேட்டவன், அவள் கூறிய பதிலைக் கேட்ட நொடி, “சத்யா  ஆர் யூ ஓகே?” என்றான்.

” ஐ அம் நாட் ஓகே மித்து. வைரல் பீவர்னு சொல்றாங்க? ஹாஸ்பிடல் கூப்பிட்டு போக கூட யாருமில்லை”

“ஆகாஷ் எங்க போனான்? அசால்டா இருக்காத சத்யா… பர்ஸ்ட் நீ ஹாஸ்பிடல் போ. நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை. அடம்பிடிக்காத.”

“மித்து அவன் எதோ வேலை விசயமா வெளிய போய்ருக்கான்… ஹாஸ்பிடல் தனியா போனா  கூட எதாவது சொல்லுவாங்கபா… கூட யாரும் வரலையானு கேட்பாங்க… எனக்கு தான் யாருமில்லையே…அத அவங்க கிட்ட சொல்ல முடியுமா?” 

” ஏய் லூசு…இப்படி எல்லாம் பேசாத… இப்போ நீ ஹாஸ்பிடல் போ…நான் நாளைக்கே உன்னை வந்து பார்க்குறேன்.” என்று கூறியவன் போனை வைத்துவிட அவனது யோசனை முழுவதும் அடுத்த நாள் விடியலையே இருந்தது… கயலை கல்லூரியில் சேர்க்க, தானே அழைத்துச் செல்வதாக, அவன் மாமாவிடம் கூறியிருந்தான்… அவரும் சரி என்று சொன்னதால், இன்று இரவு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த வேளையில் தான் வாணி அவனை அழைத்திருந்தாள்…

கயலை கல்லூரியில் சேர்த்த பிறகு வாணியை ஒரு எட்டு பார்த்து விட்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டவன், தனது உடைமைகளை எடுத்து வைத்து தயாராகிக் கொண்டிருந்தான்…

                          *

“வாணி நீ என்ன நினைக்குறனே புரியலை? அடுத்த பிளான் என்ன?” என்று தாடையில் தன் விரலால் பிடித்துக் கொண்டே ஒற்றை புருவத்தை தூக்கி கேட்டான் ஆகாஷ்…

” பார்க்க தான போற? உனக்கே புரியும் ஆகாஷ்…மித்துவை பொறுத்தவரை அவங்க ஊருல இருக்குற வரைக்கும்  நம்மலால ஒன்னுமே பண்ண முடியாது… இப்போ சென்டிமென்ட்டா  தாக்குனா நிச்சயமா அவனுக்கு என் மேல அட்டேன்சன் கிடைக்கும் இல்லையா?”

” ம்ம்ம் வாஸ்தவம் தான்… ஆனால் சென்டிமென்ட், காதலா மாறும்னு மட்டும் தப்பு கணக்கு போடாத… அதுக்கு நீ இன்னும் நிறைய பண்ணனும்…

“ஹாஹாஹா…  இது கூட தெரியாமல் நான் இருப்பனா? மித்துவ பொறுத்தவரை சென்டிமென்ட் தான் லீட் கொடுக்கும்… அத வச்சு தான் அவன் வாழ்க்கையில நான் நுழைய போறேன்… அப்புறம் அந்த பேமலியே என் கையில… அந்த குடும்பத்தை ஆட்டி வைக்க போறேன்.” என்று கூறிக்கொண்டே விசமமாக தன் இதழ்களால் சிரித்தவளின் கண்கள் முழுவதும் பழி வாங்கும் உணர்ச்சியே நிரம்பி இருந்தது… 

                              *

தன்னை ஒரு கைபிடித்ததும் அதை தாக்குவதற்காக திரும்பிய அந்த நொடி அவளது கைகளை பிடித்து நிறுத்தவும், மின்சாரம் வரவும் சரியாக இருந்தது. அப்போது தான் திரும்பி பார்த்தாள் அது தன்னவன் என்று… சுற்றி பார்க்க, அவளை சுற்றி அக்கம்பக்கத்தினர் அவளது பப்பா, என அனைவரும் இருந்தனர்…இன்னும் இரண்டு மணி நேரத்தில என் பேபியோட பிறந்தநாள் என்று கூறிக் கொண்டே கையில் கேக்கோடு வந்தார் அம்முமா…

அவர்கள் அனைவரையும் கண்டதும் ஆச்சர்யத்தில் முகம் மலர்ந்தவள்…. ” என்னயா நடக்குது இங்க…. சர்பிரைஸ இவ்வளவு டெரர் ஆகவா பண்ணுவீங்க?” 

“இப்படி எல்லாம் பண்லனா? நாங்க எப்படி பெருமையா சொல்றது சினாமியோடு அப்பா அம்மானு.” என்றுக் கூறிக்கொண்டே அமகர்தா விக்ரமின் முகத்தை பார்த்தார். அவரும் புன்னகையோடு ஆம் என்பது போல தலையாட்டினார்…

“ஓ அப்படி…. என்று கூறிக் கொண்டே தன்னவனை திரும்பி பார்த்தவள் ஆமா நீங்க ஏன் காணாம போனீங்க? அதான் எனக்கு  பதட்டம் இன்னும் அதிகம் ஆகிடுச்சு.” 

“வெளிய யாரோ ஓடுன மாதிரி சத்தம் கேட்டுச்சு… பார்த்தால் இசான் தான்… இரண்டு கொட்டு வச்சதுல பையன் சர்பிரைஸ்னு சொல்லிட்டான்… அப்புறம் நானும் வந்து அதுல கலந்துகிட்டேன் சிமி.”

“சரிங்க மஹி.” என்று புன்னகைத்துக் கொண்டே தனது அப்பா அம்மாவை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். “இப்படிலாம்  பண்ணாதீங்க பப்பா அம்முமா பீ மெச்சூர்டு. ஏன்னா ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காது.”….

“பார்ரா நம்ம சினாமியா இது….பரவாயில்லை நம்ம பொண்ணு நல்லா வளர்ந்துட்டாலங்க… ரொம்ப பொறுப்பாவும் ஆகிட்டா.”

” ஆமா ஜானு என் பொண்ணு எது சொன்னாலும் சரியாக தான் இருக்கும்… ஏன்னா என் பொண்ணாச்சே….”

” இல்லை மாமானாரே, இப்போ அவ என் பொண்டாட்டி,  அதான் கொஞ்சம் தெளிவா பேசுறா.” என்று தன் மீசையை முறுக்கிக் கொண்டு அவன் கூறினாலும் ஒரு புறம் தன் மனைவியின் பிறந்தநாள் என்பது கூட அறியாமல் இருந்ததை எண்ணி வருத்தமும் அவனுள்ளே இருந்தது…

“சரி விடுங்க பாஸ்… இரண்டுமே மாற போறதில்லை. மஹிந்தர் விக்ரம் சிங்கோட பொண்ணும் நான் தான், மஹேந்திர ருத்ரன் அவர்களுடைய துணைவியும் நான் தான்.. சரி வாங்க வாங்க.. ஆக வேண்டியதை பார்ப்போம்.” என்று கூறிக் கொண்டே அனைவரிடமும் மனமகிழ்ச்சோடு பேசிக் கொண்டிருந்தாள். ருத்ரனுக்கும் சினாமிகாவிற்கும் திருமண பரிசுகளையும் அக்கம் பக்கத்து உறவினர்கள் கொடுத்தனர்…

இரவு பன்னிரண்டு மணியை நெறுங்கியதும், சினாமி கேக்கை வெட்ட அனைவரும் கைத்தட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்…பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு அவரவர் வீட்டுக்கு செல்ல, சிரித்த முகத்தோடு உறங்குவதற்காக சென்றாள் சினாமி…

“செம சர்பிரைஸ்ல மஹி… நான் எதிர்பார்க்கவே இல்லை… உண்மைய சொல்லனும்னா? என் பிறந்தநாள் எனக்கு நியாபகமே இல்லை.” என்றவள் கூறிக் கொண்டே இருக்க, அவனோ சன்னலின் அருகே நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்….

” ஓய் உங்க கிட்ட தான் சொல்றேன்….ஏன் இந்த மௌனம்.” என்று கூறிக் கொண்டே அவனது அருகில் வந்தவள் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்….

அவளது தலையை வருடி விட்டவன், ” என் காதலி மற்றும் என் மனைவி உன் பிறந்தநாள் எனக்கு தெரியாம போய்டுச்சு..அதான் கஷ்டமா இருக்குடி.” என்று கூறியவனது முகத்தை பார்த்தவளோ, ” மஹி நான் சொல்லிருந்தால் தானே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்… நாளைக்கு புல்லா பர்த்டே பேபியை சந்தோசமா பார்த்துக்கோங்க…
அவ்வளவுதான்.” என்று கூறிக்கொண்டே மேலும் அவனுள் புதைந்தாள்….

“கண்டிப்பா என் பேபியை நல்லாவே பார்த்துப்பேன்.” என்றுக் கூறிக்கொண்டே அவளது நெற்றியில் முத்தம் பதித்தான்…

“அப்புறம் என்ன பாஸ் வாங்க தூங்குவோம்.” தன்னவனது கைகளை பிடித்துக்கொண்டே அழைத்துச் சென்றாள்.

தன் முன்னே செல்பவளையே மெய்மறந்து பார்த்துக் கொண்டே வந்தான் ருத்ரன்….தன்னையே வைத்த   கண் வாங்காமல் பார்த்து கொண்டு வருபவனை கண்டும் காணததுமாகவே வந்தவள் அவனை கட்டிலின் மீது படுக்க சொல்லிவிட்டு, போர்வையை விரித்து போர்த்திவிட்டாள்…

“என்னடி ரொம்ப தான் பண்ற? நான் என்ன சின்ன குழந்தையா? ரவுடி”

“ஆமா ருத்ரா… இன்னைக்கு என் மஹி பேபி நிஜமாவே பேபி மாதிரி தான் இருக்கீங்க?”

“அடடா, அப்போ பேபிக்கு ஒரு முத்தம் வேணும், அப்புறம் கொஞ்சனும்.” என்றதும் அவளது முகத்தில் தன்னாலே சிரிப்பு மலர்ந்தது… “ஒரு பேச்சுக்கு பேபினு  சொன்னா? கொஞ்சனுமா மஹி” என்று கூறிக் கொண்டே அவனது மீசை இழுத்து விட்டவள் , ” மஹி பாப்பா நீ ஒரு மீசை வச்ச பாப்பா… என் செல்ல புஜ்ஜி பாப்பா என்று கூறிக்கொண்டே அவனது கன்னத்தை ஆட்டியதில், நிஜமாகவே குழந்தை போல மாறினான் ருத்ரன்…

” சிமிமா” என்று தன்னவளது இடையை இறுக பற்றியபடியே படுத்தவனோ, “என்னை விட்டு எப்போதுமே போய்டாதாடி… எப்போதும் இப்படியே என்னை கொஞ்சுவியா?” என்று குழந்தையை போலவே அவன் கேட்க, அவனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டவளோ, “நிச்சயமா உன்னை விட்டு நான் போகவே மாட்டேன்… நீ என் செல்ல பாப்பா” என்று குழந்தையை தேற்றி உறங்க வைப்பது போன்று அவனை உறங்க வைத்தவள், அவன் உறங்கியதும், எழுந்து அருகில் சென்று அவனை அணைத்துக் கொண்டே உறங்கினாள்….

கணவன் மனைவி உறவு என்பது மஞ்சள் கயிற்றால் உருவாக்கப்பட்ட பந்தம் மட்டுமல்ல… இருவெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டிருக்கும் ஆண் மற்றும் பெண் ஒரே மைய புள்ளியான திருமணம் என் பந்ததில் இணைகின்றனர்… ஒருவருக்கொருவர் தன் துணையோடு ஒன்றினைந்து ஒரு நல்ல நண்பர்களாகவும், தாய்மையோடும், அரவணைப்போடும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக வாழும் வாழ்க்கையில் காதல் மிக அவசியம்… அப்படிபட்ட காதலோடு இனிய இரவின் மடியில் துயில் கொண்டிருந்தனர் சினாமிகாவும் ருத்ரனும்…

                            *

சந்திரன் அழகாய் நடுவானில் வலம் வந்துக் கொண்டிருந்த நள்ளிரவு வேளையில், கயலோடு சென்னை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தான்…
பாடல் அழகாய் இசைத்துக் கொண்டிருந்தது…

என் இரவுகள்,என் இரவுகள் உனதுமுகம் பார்த்துவிடிய ஏங்குதடி!இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய், எனக்குளுள் உன்னை நீ ஊற்றிவிட்டாய், மூழ்கினேன் நான், உன் கண்ணிலே….
முன்பனியா, முதல் மழையா….

பாடல் ஒரு புறம் இசைத்தாலும் தன் மாமனை மனதில் சுமந்தவளோ எதுவும் பேசாது மௌனமாய் அமர்ந்து வந்தாள்… என்றும் பேசிக் கொண்டே இருப்பவள் இப்போதெல்லாம் அவள் மௌனமே உருவாய் மாறியதற்கு தான்  காரணமாக மாறிவிட்டோமே என்ற கவலை அவனுள் இருந்துக் கொண்டே இருந்தது….

“ஏய் அழகி என்ன உம்முனு வர, இப்போ எல்லாம் இந்த சொத்தான கண்டுக்கவே மாட்டிங்குற?” என்றபடி காரை ஓட்டிக் கொண்டே கேட்டான்…

“அப்படி எல்லாம் இல்லைங்க. சும்மா தான். ” என்று கூறிக் கொண்டே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்…
அவள் பேச விரும்பவில்லை என்பதே அவனது மனதை வதைத்தது.

வழியில் பாதி தூரம் செல்லும் போதே , கயலுக்கு வாந்தி வருவது போன்ற எண்ணம் தோன்றியது… இதற்கு முன் ரொம்ப தூரம் அவள் பயணம் செய்யும் சூழ்நிலை அமைந்ததே இல்லை…முதல் முறை என்பதால் அவளுக்கு தலை எல்லாம் சுற்றியது போல எண்ணம் தோன்றியது… இருந்தும் மாமாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற நோக்கில் வாயை தன் கைகளால் பொத்திக் கொண்டே அமைதியாக வந்தாள் கயல்…

அவளையும் மீறி ஒரு கட்டத்தில் கொமட்டலாக வாந்தி வந்துவிட தன் கைக் கொண்டு அடக்க முற்பட்டாள்… அவளது சத்தம் கேட்டு தன் காரை அவன் நிறுத்தவும் அவள்  காரில் வாந்தி  எடுக்கவும் சரியாக இருந்தது…

கயலு என்று பதறியவன், “ஒன்னு இல்லைடா வா என்று கதவை திறந்து விட்டவன் ஆள்நடமாட்டம் அற்ற அந்த சாலையில் அவளை அமர்த்தி அவளது தலையை பிடித்துக் கொண்டே வாந்தி எடுக்க கூறினான்…  அவள் முழுவதும் வாந்தி எடுத்து முடித்ததும் , தண்ணீர் பாட்டிலை கொடுத்தவன் அவளுக்கு கொடுத்து முகம் கழுவ சொன்னான்…

கயலு ஒன்னும்  இல்லை, கார் ட்ராவல் சேரல  போல…. வேற எதுவும் இல்லை… நான் காரை சுத்தம் பண்ணிட்டு வரேன்… நீ இந்த கல் மேல உட்காரு என்று அமர சொன்னவன், காரிற்குள் சென்று அவள் எடுத்த வாந்தியை தன் கைகளாலே துடைத்து எடுத்தவன்,  தண்ணீர் ஊற்றி கழுவினான்…அவனது இந்த செயலை பார்க்கும் போது மித்ரனின் மீதான அவளது அன்பு மேலும் அதிகரித்தது… ஒரு புறம் தன்னால் எவ்வளவு சிரமம்,  என்ற எண்ணமும் கயலின் மனதில் தோன்றியது…மித்ரனோ அவளிடம் வந்தவன் அவளது மடியில் சிதறிய வாமிட் துளிகளை தண்ணீர் விட்டு துடைக்க சென்றான்…

அவளோ தானே துடைப்பதாக கூற, “இல்ல கயலு விடு”, என்று கூறிக் கொண்டு அவளது துப்பாட்டா அனைத்தையும் துடைத்து விட்டான்… 

“சாரி மாமா நான் அப்போவே சொல்லிருந்தா வண்டியை நிறுத்தியிருப்பீங்க”

“கயலு எதுக்கு சாரி விடு… பார்த்துக்கலாம்.” என்று கூறியவன் அவள் தன்னை மாமா என்று அழைத்ததை நினைவில் நிறுத்தியபடி, “இப்போ என்ன சொன்ன?” என்று ஆவலோடு கேட்டான்…

“சாரி கேட்டேன் மாமா.” 

“மாமா இதே தான். சாரி நீ கேட்க கூடாதுடா… நான் தான் உன்கிட்ட கேட்கனும்…. சாரிடா.”என்று அவளது கைகளை பிடித்துக் கொண்டு மனதார கேட்டான். பின் இருவரும் காரில் ஏறி கிளம்பினர்.

                             *

வெய்யோன் தன் செங்கதிர்களை மெல்ல எழுப்பிக் கொண்டிருந்தது. சன்னலின் வழியே இருந்து கதிர்களை உள்நிலைத்திருந்தது. சிலுசிலுவென காற்று அழகாய் வீசிக் கொண்டிருக்க, தன் ஆழ்ந்த நித்திரையிலிருந்து கண்விழித்துப் பார்த்த சினாமியோ, தன் கண்களை ஆச்சர்யத்தில் விரித்தபடி, “நான் இப்போ எங்க இருக்கேன். இது என்ன இடம்? மஹி எங்க இருக்கீங்க?” என்று சத்தம் போட்டு எழுந்தவள் அந்த அறை முழுவதையும் அதிர்ச்சியோடு சுற்றும் முற்றும் தன் கண்களை சுழலவிட்டபடி பார்த்தாள். பின் பப்பா, அம்மும்மா என்று தேடிக் கொண்டே அந்த அறைக்கதவை திறக்க, திறக்க இயலாது போனதில் பெண்ணவளது பதட்டம் மென்மேலும் அதிகரித்தது. “இங்க என்னயா நடக்குது. நான் எப்படி இங்க? தைரியம் இருந்தால் முன்னாடி வந்து நில்லுயா?” என்று தன் கைகளை மடக்கிக் கொண்டு அந்த கதவை ஓங்கித் தட்டினாள் சினாமிகா.

                                 ~  தொடரும்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 2 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Dhivya Sree

Story MakerContent AuthorYears Of Membership

23 நினைவைத் தேடும் நிலவே

24 நினைவைத் தேடும் நிலவே