in , , , ,

23 நினைவைத் தேடும் நிலவே

பதிவு 23

   

               நிலாவை சமாதானம் செய்து அவளை கிளம்ப சொல்லிவிட்டு அவளுடைய குடும்பத்தினரும் கிளம்பி தயாராக காத்திருக்கயில் வந்தான் ஒருவன்.. அவனை ஏற்கனவே நிலாவின் வீட்டை சார்ந்தவர்கள் பார்த்தபடியினால் அவன் வந்து புறப்பட சொன்னதுமே புறப்பட்டுவிட்டனர்… வெளியே அவர்கள் போகும் வேனோடு இரண்டு கார்களும் நிறுத்தப்பட்டிருக்க நிலாவை அவன் காரில் ஏறிக்கொள்ள சொன்னான்.. நிலாவுடனே விக்ரமும், ப்ரஷாவும் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டது… ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவனை ப்ரஷா விடாமல் பார்த்தபடியே வர நிலா அவள் தலையில் ஒரு குட்டு குட்டினாள்…

             “ஆஆஆ, வலிக்குதுடி…”

             “நல்லா வலிக்கட்டும்.. அங்க என்ன பார்வை வேண்டிக்கெடக்கு.. கொன்னுடுவேன், மூடிக்கிட்டு வா…”என்க ப்ரஷா அவசரமாக சொன்னாள்…

            “ஐயோ நிலா, நான் இவர ஏற்கனவே பாத்துருக்கேன்.. எங்கேஜ்மெண்ட் பங்சனுக்கு கூட வந்திருந்தார் உனக்கு நியாபகம் இல்லியா?…” இவர்கள் இருவரும் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு வந்தனர்…

           “நிச்சயதார்த்தத்துக்கு ஆயிரம் பேர் வந்துருப்பாங்க, இப்போ அதுல என்ன ப்ராப்ளம் உனக்கு?…”

           “லூசக்கா, ப்ராப்ளம் எதுவும் இல்ல… இவர நான் உன் எங்கேஜ்மெண்டுக்கு முன்னவே எங்கேயோ எங்கேயோ…”என்று பலமாக யோசிக்க கண்ணாடி வழியாக ப்ரஷாவை பார்த்தவன் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க, அவள் நேரடியாகவே

கேட்டுவிட்டாள்…

            “சார் நீங்க நிலாக்காவோட எங்கேஜ்மெண்டுக்கு வந்திங்க தானே…” என்க அவன் சொன்னான்

          “ம்ம்ம்ம், ஆமா..” என்று..

          “ஆமா நீங்க எந்த ஊரு? உங்கள நான் வேற எங்கேயோ… ஹான் கண்டுபிடிச்சுட்டேன்.. உங்கள நான் என்னோட ஸ்கூல் ஃபங்சன் அப்போ பாத்துருக்கேன்.. நீங்க தானே மிஸ்டர்.கௌதம் சக்கரவர்த்தி, இராஜேந்திர சக்கரவர்த்தியுடைய பேரன்…” என்க அவன் அதற்கும் ஆமாம் என்று தலையசைத்துவிட்டு விக்ரமோடு எதையோ சாதாரணமாக பேசிக்கொண்டு வந்தான்…

             இங்கே நிலாவின் அருகில் அமர்ந்திருந்த ப்ரஷாவிற்கு அதன் பிறகு இருப்புகொள்ளவில்லை… நிலாவிடம் கதைகதையாக கௌதமை பற்றி சொல்லிகொண்டே வர, நிலாவின் கவனம் முழுக்க அவளிடத்தில் இருந்தால்தானே! சித்தார்த்திற்கு கௌதமோடு எப்படி பழக்கம் ஏற்பட்டது என்று அவள் தீவிர சிந்தனையில் இருக்க, அதனை அவனிடத்திலேயே கேட்டுவிடலாமா என்று, தயங்கி தயங்கி யோசித்து விட்டு அவனிடம் கேட்க நினைக்கையில் அவர்கள் வர வேண்டிய இடம் வந்து சேர்ந்தது.. பளிச்சென்ற விளக்குகளால் கோட்டை அலங்கரிக்கபட்டிருக்க தூரத்தில் வரும் பொழுதே அனைவராலும் சித்தார்த்தின் அரண்மனையை பார்க்க முடிந்தது..

         பகலிலேயே விளக்குகளை ஒளிரவிட்டு  ஒளிவெள்ளத்தில் காட்சியளித்த கோட்டையை கண்டு அது ஏதோ பழங்கால சுற்றுல தளம் போல என்று நினைதது நிலா அவளுடைய நினைவுகளிலேயே மூழ்கியிருக்கையில் கார் அக்கோட்டையின் முன் நுழைவு வாயிலிற்குள் நுழைந்தது.. 

          ‘நாம் ஏன் இங்கே வருகிறோம்? ஒரு வேலை இது திருமண மண்டபம் போல வசதிபடைத்தவர்களுக்காக கட்டப்பட்ட இடமோ!…’ என்ற சிந்தனையினுடனே அவள் பயணிக்க விக்ரமை பார்த்து சாதாரணமாக கேட்டாள்…

          “விக்ரம் கல்யாணம் சித்தார்த்தோட வீட்டுலன்னு தானே சொன்னாங்க.. நாம ஏன் இங்க வர்றோம்? இது என்ன மண்டபமா?…”என்க காரை ஓட்டிக்கொண்டிருந்தவன் சட்டென்று காரை நிறுத்திவிட்டு திரும்பி நிலாவை பார்த்துவிட்டு விக்ரமை பார்த்து கேட்டான்…

           “என்ன விக்ரம் உங்க தங்கை இப்படி கேட்குறாங்க? அவங்களுக்கு எதுவும் தெரியாதா?..”என கேட்க, இல்லை என்ற தலையசைப்புடனே சொன்னான்…

          “சித்தார்த் தான் சார் எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு…”

          “முட்டாள்தனம் பண்ணிட்டு இருக்கான் அவன்…”என்றவன் சட்டென்று நிலாவின் பக்கமாக திரும்பி சொன்னான்… “இங்கே பாரும்மா.. இது நீ நினைக்குற மாதிரி மண்டபம் எல்லாம் இல்ல, இதான் சித்தார்த்தோட வீடு.. அபிமன்யு பேமிலி பத்தி நீ கேள்விபட்டதில்லையா? “என்க அவள் திருதிருவென விழித்தாள்.. அதேசமயம் ப்ரஷாவோ துள்ளிக்குதிக்காத குறையாக கத்தினாள்…

            “வாவ்… வாட் எ சர்ப்ரைஸ்.. சித்தார்த் அத்தான் அரசபரம்பரையை சேர்ந்தவரா?…” என சொல்ல அவ்வளவு தான் நிலாவிற்கு மயக்கமே வந்துவிட்டது…

            “வாட்? அரச பரம்பரையா?…”

           “ம்ம்ம்ம், ஆமாக்கா.. மகாபாரதத்துல வந்த அர்ஜுனன் வழி வந்தவங்கன்னு நினைக்குறேன்… அப்படி தானே கௌதம் சார்…”

           “ம்ம்ம்ம், பரவாயில்லையே உனக்கு எல்லாமே தெரிஞ்சுருக்கு…”என்றபடியே அவன் காரை எடுக்க நிலா பயத்தில் எச்சில் விழுங்கியபடியே சிறு எறும்பின் முன்னே யானைப் போல பூதாகரமாக காட்சியளித்த கோட்டையை பார்த்தாள்…

தான் காண்பதெல்லாம் கனவா நனவா என்பதை அவள் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே மளமளவென்று எல்லாம் நடந்து முடிந்தது..   நிலாவையும் அவளின் குடும்பத்தை சார்ந்தவர்களையும் வரவேற்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கோட்டையின் மேற்கு வாயில்புற அறைகளுக்கு அழைத்து சென்றனர்… 

             அரண்மனைக்குள் நுழைந்தவர்கள் அனைவருக்குமே அங்கே நடப்பதையெல்லாம் பார்க்க பார்க்க பிரம்மாண்டமாக தான் இருந்தது… இமைக்க மறந்து அங்குல அங்குலமாக அவர்கள் சுவற்றில் வரைந்த ஓவியங்களை பார்த்தபடியே வாய்பிளந்து நிற்க, எவருக்குமே எதையுமே பேசிக்கொள்ள தோன்றவில்லை…

             நிலா தான் பயத்தின் உச்சத்தில் இருந்தாள்..சித்தார்த்தின் குடும்ப பிண்ணனியை எவரும் அறியக்கூடாது என்பதற்காக தான் திருமண பத்திரிக்கை கூட அடிக்கவேண்டாம் என்று சொல்லியிருக்கிறான் என்று தோன்ற பயத்தில் அவளுக்கு கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது… இத்தனை உயரத்தில் இருப்பவனோடு தான் எந்த விதத்தில் பொறுத்தமாவோம்? நடப்பதெல்லாம் யாருடைய நன்மைக்காக நடக்கிறது? இவையாவும் விதியின் விளையாட்டா? என்று தனக்குள்ளேயே சொல்லி புலம்பியபடியே வலம்வர, அவள் குடும்பத்தினர்கள் எல்லாம்  மலைப்பில் இருந்து தெளிந்தவர்களாக நிலாவின் வாழ்வை எண்ணி பூரித்து போய் அவளை கட்டிக்கொண்டு சந்தோசித்தனர்…

                எப்பொழுதும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பவள் இன்று மௌனியாகி நிற்க நேரம் கடந்துகொண்டே இருந்தது.. ஏதோ உயிருள்ள சிலை போல வருவோர் போவோர் என அனைவரும் சொன்னதையெல்லாம் செய்தாள்… சித்தார்த்தின் உறவுக்கார பெண்மணி ஒருவர் கொண்டு வந்து கொடுத்த உடையை போட்டுக்கொண்டாள்.. பல்லக்கில் வைத்து இவளை அனைவரும் தூக்கி செல்ல எவற்றிலுமே கவனத்தை செலுத்தாமல் போனாள்… செயற்கையாக உருவாக்கப்பட்ட வெட்டவெளி மண்டபத்தில் கொண்டு சென்று பல்லக்கை இறக்கியதும் இறங்கியவளை ஒரு கூட்டம் வரவேற்று அழைத்து செல்ல, அடுத்த சில மணித்துளிகளில் ஒன்பது குதிரைகள் கட்டப்பட்ட தேர் போன்ற ரதத்தில் சித்தார்த் ஏதோ ராஜா தோரணையில் வந்து இறங்கி நின்றான்…

                இருவரையுமே ஒன்றாக அழைத்து வந்து ஹோமகுண்டத்தின் முன்னே நிறுத்தப்பட அவர்களின் முறைப்படி சடங்குகள் ஆரம்பமானது.. வேள்விகள் முடிந்ததும் விக்ரம் தன் கையால் ஒவ்வொரு பிடியாக அரிசியை அள்ளிக்கொடுக்க சித்தார்த் அதனை வாங்கி நெருப்பில் இட்டான்.. அடுத்ததாக சோனாலியும் இந்திரஜித்தும் நிலாவிடத்தில் திருமண உடையையும் நகைகளையும் கொடுக்க அவளை அழைத்துக்கொண்டு பணிப்பெண்கள் சென்றனர்… 

              பியூட்டிசியனின் உதவியோடு அவள் இப்பொழுது தேவதையென தயாராகி  வர வெளியே அடுத்த சடங்குகள் அவளுக்காக காத்திருந்தன.. நிலாவை பெற்றவர்கள் தங்கள் மகளை மருமகனுக்கு கன்னியாதானம் செய்து கொடுப்பது.. அதுவும் நடந்து முடிந்தது… திருமணம் என்ற ஒன்று இரண்டு ஆத்மாக்களின் சங்கமமோ இல்லை உடல்களின் சங்கமமோ இல்லையே.. இரண்டு குடும்பங்களின் சங்கமம், உணர்வுக்குவியல்களின் சங்கமம்.. என்ன தான் சந்தோசத்தோடு மகளை கன்னியாதானம் செய்துகொடுத்தாலும் விழிகளின் ஓரத்தில் வந்து சென்ற கண்ணீர்துளிகளை பெற்றவர்கள் மட்டுமல்ல பிள்ளைகளாலும் கட்டுப்படுத்தமுடியாது…

                கன்னியாதானம் முடிந்த கையோடு நிலாவும் சித்தார்த்தும் திரும்பவும் வேள்விகளில் அமர்ந்தனர்.. குருமார்கள் சொன்ன மந்திரங்களை அர்ச்சனை தூவி சொல்லி முடித்ததும் இருவர் உடைகளுக்கும் முடிச்சிட்டு ஏழு வளையங்கள் சுற்றி வந்ததும் திருமணம் முக்கால்வாசிமுடிந்துவிடும்… ஒன்று இரண்டு என்று ஒவ்வொரு முறை வலம்வரும்பொழுதும் இருவருமே தங்களை சத்தியத்திற்குள் உட்படுத்திகொள்ள வேண்டும் என்பது பொருள்..  அதாவது ஏழு சபதங்களை ஏற்கவேண்டும்.. கடவுளின் பூரண ஆசிர்வாதத்தையும் கரம்பிடித்தவர்களோடு நாம் பெற செய்வதாகும்…அப்படியே இருவரும் செய்து முடித்தனர்

               ஏழு சபதங்களையும் ஏற்ற கையோடு மணமகளான நிலாவிற்கு சித்தார்த்தின் கையால் குங்குமம் வைத்ததும் அவர்களுக்கும் நூறு சதவிகித திருமண சடங்கு முடிந்ததாக அர்த்தமாகிவிடும்.. நிலாவின் நெற்றி வகிட்டிலே அவன் குங்குமம் வைத்துவிட அர்ச்சனை தூவப்பட்டது.. கடைசியாக மாங்கல்யம் என்ற பெயரில் கருப்பு நிற பாசிகள் கோர்க்கப்பட்ட வைர கற்கள் பதித்த டாலர் செயினை நிலாவிற்கு அவன் போட்டுவிட எட்டுத்திக்கும் பட்டாசுகளின் சப்தம் தான்…

             நிலா சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்வு அவளுக்கு கிடைத்தது.. ஆனால் அதனை ஏற்க தான் அவளுக்குள் அத்தனை தயக்கமே… திருமணம் முடிந்ததுமே விடிய விடிய கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்க எதையுமே ஏற்கும் மனநிலை இல்லாதவளாக அவள் நின்றாள்..  வருவோர் போவோர் என அத்தனை பேருமே வசதியில் அவனை ஒட்டியுள்ளவர்கள் தான்.. இத்தனை வசதி உள்ளவன் எதற்காக தன்னை திருமணம் செய்து கொண்டான்? என் மீது கொண்ட காதலுக்காகவா இல்லை ஷிவானியின் காதலுக்காகவா? வரவேற்பு மேடையில் பொம்மை போல எதுவும் பேசாமலேயே அவள் அமர்ந்திருக்க சித்தார்த்திற்கே ஏனோபோல் தான் இருந்தது…

              இவள் உண்மை தெரிந்தால் எப்படி நடந்துகொள்வாள் என்று தெரியாததால் தான் அவன் அவளிடத்தில் உண்மையை மறைத்ததே.. ஒருவேளை திருமணத்திற்கு முன்பாகவே தெரிந்து அவள் திருமணத்தையே நிறுத்திவிடவும் வாய்ப்பு இருக்கிறதே என்று அவன் நினைத்து பொறுமையாய் சொல்லலாம் என்று காத்திருக்க, இந்த கௌதம்… நண்பனை என்ன செய்தால் தேவலை என்று தோன்றிய நேரத்திலேயே கௌதமும் அவன் குடும்பத்தை சேர்ந்த சிலரும் வந்தனர்…

             “வாழ்க வளமுடன் டா புதுமாப்பிள்ளை…”என்று கட்டியணைத்தவனின் முதுகில் மொத்தியவன்…

            “வாடா நல்லவனே.. இரு உன்ன நான் அப்புறமா வச்சு செஞ்சுக்குறேன்…”என்று கௌதமோடு வந்த கௌரி, சரவணன், வசுந்தரா, தினகரன், ரூபா, பவித்ரா, நிவேதிதா என அனைவரையும் நிலாவிற்கு அறிமுகப்படுத்தினான்… இங்கே ஒரு விசயத்தை தெளிவுபடுத்த விரும்புறேன். சித்தார்த் வேற யாருமில்ல, ரூபாவோட அம்மா பவித்ராவின் அக்கா பார்கவியோட பையன் தான்.. அதாவது இவனும் ஒருவகையில சுமித்ராவிற்கு அண்ணன்முறையானவன் தான்..

             மற்றமொழிக்காரருகளோடு மட்டுமே தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசி அவ்வளவு நேரம் புரியாத பாசையை கேட்டுக்கொண்டிருந்தவள், தமிழ்க்குரலை கேட்டதுமே உற்சாகமாக ஏதோ நெருங்கிய சொந்தத்தை பார்த்ததை போல பேச ஆரம்பித்துவிட்டாள்…  அவர்கள் தாங்கள் கொண்டுவந்த பரிசுகளை நிலாவிடம் கொடுத்து புன்னகை முகமாய்  கட்டாயம் தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று வரவேற்றுவிட்டு செல்ல திரும்பவும் அவளிடத்தில் ஒரு ஒதுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது…

                 வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் உறங்க சென்றது விடியற்காலையை நெருங்கும்பொழுது தான்… விடாது நடந்த விழாக்களில் இரவெல்லாம் விழித்து கலந்து கொண்டதாலும், உறக்கமே இன்றி சுற்றியதாலும் அடித்துபோட்டார் போல உடல் வலிக்க, நிலா தனக்கென கொடுத்த புதிய அறையில் போய் படுத்தாள்.. அப்படி அவள் படுத்தது தான் படுத்த அடுத்த நிமிடமே உறங்கிப்போனாள்… 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 4 சராசரி: 4.8]

One Comment

Leave a Reply
  1. சூப்பர் சூப்பர். மூன்றாவது முறையாக படிக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

இன்று அன்றி(ல்)லை 15

24 நினைவைத் தேடும் நிலவே