in , , , , ,

26. உனது விழிகளின் வழியே எனது தேடல்..!

மிளிர் மீண்டும் மீண்டும் இனியனுக்கு அழைப்பு விடுக்க, அது எடுக்க படாமலேயே போக, இன்னும் பதறிப் போனது அவளுக்கு.

“மிளிர்… என்னாச்சு சொல்லு… யாருக்கு போன் பண்ணற…” அவளின் பதற்றம் அக்னியையும் தொட்டிருந்தது.

“ஒன்னுமில்ல…  இனியன தான் கூப்பிடறேன்… நீங்க பதறாதீங்க…” என்றவள், “சீக்கரம் போங்கண்ணா…” என்று ஓட்டுனரை முடுக்கவும் தவறவில்லை.

“இவ்வளவு ட்ராபிக்ல எப்படிம்மா வேகமா போக முடியும்…”

“ப்ளீஸ் ண்ணா நிறைய ரத்தம் போகுது… பக்கத்துல இருக்க ஏதாவது கிளினிக் கூட போங்க… ப்ளீஸ்…”

“அங்கலாம் போனா சேக்க மாட்டாங்கம்மா… கத்திகுத்து கேஸ் இது…”

“ஐய்யோ அண்ணா அவர் போலீஸ் தான்… எப்படியும் ட்ரீட்மென்ட் குடுக்க வச்சுடலாம்… நீங்க கொஞ்சம் சீக்கரம் மட்டும் போங்க ப்ளீஸ்…” என்றவள் இனியனை தொடர்ந்து அழைக்கவும் தவறவில்லை.

அவன் எடுக்கவில்லை எனவும் அடுத்து கடைக்குதான் அழைத்தாள். எடுத்தென்னவோ நாதர் தான். அவரின் பேச்சைக் கொண்டே இனியன் அங்கில்லை என உணர்ந்துக் கொண்டவள், அவரை பயப்படுத்த விரும்பாது எதுவும் கூறாது வைத்துவிட்டாள். அன்றி அவளுக்குமே அது நிச்சயமான தகவல் இல்லையே. அப்படி இருக்க நாதரை வேறு பயம் காட்டுவானேன்.

அடுத்து யாரிடம் விசாரிப்பது என யோசனையை ஓட்டியவளுக்கு சட்டென்று நினைவு வந்தது சூர்யா மட்டுமே. அந்த போனில் பேசியவன்கூட சூர்யாவை பார்த்துக்கொண்டு இனியன் நிற்பதாக தானே கூறினான் என்று எண்ணியவளாக, தனது அழகு நிலையத்திற்கு அழைத்தாள்.

“ஹலோ… மிளிர் ப்யூட்டி பார்லர்…”

“சூர்யா… நான் மிளிர் பேசறேன்…”

“சொல்லுங்க அக்கா…”

“சூர்யா பக்கத்துல எங்கையாவது இனியன் இருக்கானானு பாரேன்…”

“அவர் ஏன்க்கா இங்க வரப் போறாரு… அப்படி அவர நான் பாக்கலையே எங்கையும்…”

“பச்… எங்கையாவது மறைஞ்சு நின்னு உன்ன தான் பாத்துட்டு இருப்பான்… நல்லா தேடிப் பாரு சூர்யா…”

“ஏன் அக்கா… அவ்வளவு சொல்லியும் திரும்பவும் இனியனுக்கு ஹேப் கொடுத்து இருக்கீங்க… எல்லாம் தெரிஞ்சும் எப்படிக்கா உங்களால அது முடியுது…”

“ஐய்யோ… சூர்யா சொல்லறத முதல கேளு… இனியனோட உயிருக்கு ஆபத்து… அவன தேடு முதல… அப்படி ஏதாவதுனா உடனே ஆம்புலன்ஸுக்கும் போலீஸூக்கும் இன்ஃபார்ம் பண்ணு… நம்ம அக்னி சாரோட ஸ்டேஷன்ல இருக்க மணி அண்ணா நம்பர் தெரியும் தானே… அவர கூப்பிட்டு இன்ஃபார்ம் பண்ணு…” அவள் சொல்லி முடிக்கும் முன்னே போன் ரிசீவரை அப்படியே போட்டுவிட்டு இனியனை தேடி ஓடி இருந்தாள் சூர்யா…

சுற்றி எங்கும் தேடி அலைந்து அவன் கிடைக்காமல் போகவே, ஒருவேளை இங்கில்லையோ என்ற எண்ணத்தில் அவள் செல்ல நினைக்கையில் தான் குறுகலான ஒரு சந்திலிருந்து மெல்லிய முணகல் கேட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இனியனின் குரல்தான் என கண்டுக் கொண்டவள், வேகமாக அந்த சந்தின் உள்ளே எட்டிப் பார்க்க, அணிந்திருக்கும் ஆடையின் வண்ணம்கூட கண்டறிய முடியாதபடி உடலெங்கும் குருதி வழிந்தோட திறந்த சாக்கடையில் விழுந்துக் கிடந்தான் இனியன்.

சிறுதும் தாமதிக்காது அக்கம் பக்கம் இருந்தவர்களை அவள் உதவிக்கு அழைக்க, அவர்கள் வரும் முன்னே ஓடிச் சென்று அவனை மடித்தாங்கி இருந்தாள் அவள்.

“டேய்… என்ன பாருடா… இனியா… உனக்கு ஒன்னுமில்ல… என்ன பாரு…” என அவனை நினைவுக்கு கொண்டு வர முயல, மெல்ல கண்திறந்து பார்த்தவன், அவளைக் கண்டதும் ஒரு நிம்மதியோடு மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

அதற்குள் உதவிக்கு வந்தவர்கள் அவன் இருக்குமிடம் கண்டு தயங்க, “யாரவது கொஞ்சம் தண்ணீயாவது குடுங்க ப்ளீஸ்… நான் அவன கிளின் பண்ணிடறேன்…” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்தை விலக்கிக் கொண்டு இருவர் வந்து இனியனை தூக்கினார்கள். 

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா…”

“என்னம்மா… இதுக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு… ஒரு உயிரவிட சொக்காவா முக்கியம்… அதுவும் இல்லாம நாங்க இந்த நாத்துலையே பழகுனவங்க தானே…”என்று சொன்னவர்கள் இருவருமே அரசாங்க துப்பறவு தொழிலாளர்கள்.

மெல்ல இனியனை வெளியே தூக்கி வந்தவர்கள், பக்கத்திலிருந்த ஒரு டீக்கடையில் ஒரு குடம் தண்ணீரை வாங்கி அவனை தூய்மைபடுத்தி, கொஞ்சமாய் தண்ணீரை அவனுக்கு புகட்ட, கொஞ்சமாய் தெம்பு பிறந்திருத்தது இனியனுக்கு. 

அதற்குள் அழைத்திருந்த ஆம்புலன்ஸும் வந்துவிட, அவசர அவசரமாக அவனை அதிலேற்றி, மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றிருக்க, மிளிர் வலிந்து அறிவுருத்தியதால் அரசு மருத்துவமனைக்கே இனியன் அழைத்துச் செல்லப் பட்டிருத்தான்.

இங்கே அக்னியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க நல்ல வேளையாக கத்தி சதையை மட்டுமே கிழித்திருந்தது. நான்கு தையல்கள் போடப்பட்டு கொஞ்ச நாட்கள் ஓய்வெடுக்கும் படி கூறி அனுப்பி வைத்தனர்.

“ஒ.கே… நாம ஊருக்கு கிளம்பலாம்…” என்றவளை இழுத்து பிடித்து நிறுத்தினான் அக்னி.

“என்னதான் நடக்குது இங்க… இனியனுக்கு என்ன… நீ பாட்டுக்கு யார் யாருக்கோ போன் பண்ணற… என்ன ஒருத்தன் கத்தியால குத்தறான்… நீ என்னனா ஒன்னுமே சொல்லாம, வா போகலாங்கற… இப்ப இங்க என்ன நடக்குதுனு தெரிஞ்சாகனும்…”

“தெரிஞ்சுக்க எதுவும் இல்ல… இனிமே இந்த விசயத்துல நாம ஒன்னும் பண்ணப் போறதில்லை… போதும்…  இதோட எல்லாத்தையும் விட்டுடலாம்… எதையும் கண்டுபிடிக்க வேண்டாம் எனக்கு…”

“எனக்கு கண்டு புடிச்சே ஆகனும்… ஏன்னா இது நான் அட்டன் பண்ண கேஸ்… அத தப்ப முடிச்சுருக்கேனு தெரிஞ்சும் அப்படியே என்னால விட முடியாது…”

“இல்ல… என் மகி விபத்துல தான் இறந்துப் போய்ட்டா… தினேஷும் தற்கொலைதான் பண்ணிகிட்டான்… இதுல கண்டுபிடிக்க புதுசா ஒன்னுமில்ல… போதும் இதோட விட்டுடலாம்… ப்ளீஸ்… எனக்காக… இத இப்படியே விட்டுடுங்க மித்து…”

“மிளிர் என்ன பாரு… என்னாச்சு உனக்கு… என்கிட்ட சொல்லுடா… யார் போன் பண்ணா உனக்கு… தவசீலனா… உன்ன மிரட்டுனானா… அவன்தான் என்ன ஆள்வச்சு குத்துனதா… சொல்லுடா என்னாச்சுனு சொன்னாதானே எனக்கு தெரியும்…”

“ப்ளீஸ் மித்து… நான் சொல்லறத புரிஞ்சுக்கோங்க… நீங்க எதையும் தெரிஞ்சுக்க வேண்டாம்… இனிமேலும் யாரையும் இழக்க எனக்கு உடம்புலையோ மனசுலையோ தெம்பில்ல… ப்ளீஸ் விட்டுடுங்க இதோட…” 

“என்னால எதையும் விட முடியாது… இதோட சீரியஸ்நஸ் தெரியாம பேசிட்டு இருக்க நீ… நமக்கு தெரிஞ்சே இரண்டு கொலை… தெரியாம எத்தனையோ… ஒரு விசயத்த மறைக்கவே இத்தன கொலை பண்ணறானா… அது எவ்வளவு பெரிய விசயமா இருக்கனும்… புரிஞ்சிக்கோ மிளிர்… அவனால இனிமே யாரும் பாதிக்க படகூடாது.

“நான் போறேன்… நீங்க வறீங்களா இல்லையா…”

“நான் என்ன பேசிட்டு இருக்கேன்… நீ என்ன பேசற…”

“தோ பாருங்க… இத கண்டுபிடிக்க போய் தான் என் மகி செத்தா… இதோ இப்ப நீங்களும் இனியனும்… எனக்கு என்ன ஆனாக்கூட பரவாயில்ல… ஆனா மத்தவங்களுக்கு ஒன்னுனா அத தாங்கற சக்தி எனக்கு இல்ல… யார் வேணா என்ன வேணா பண்ணட்டும்… நமக்கு எதுக்கு அது… நாம நிம்மதியா இருக்க என்ன வழியோ அத மட்டும் பண்ணுவோம்…”

“எது… இத இப்படியே விட்டுட்டு போனா நீ நிம்மதியா இருந்துடுவீயா… பைத்தியமாகிடுவடி… மகிய பத்தி யோசிச்சு யோசிச்சே பைத்தியம் ஆகிடுவ…”

“ஆனா ஆகிட்டு போறேன்… வேற யாருக்கும் எதுவும் ஆகாதுல… அது போதும் எனக்கு…” என்றவள் அவனையும் எதிர்பார்க்கமல் விறுவிறுவென்று செல்ல, பின்பு அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவன், வேறு வழியின்றி அவளுடனே சென்றான்.

நேராக பேருந்து நிலையத்திற்கு வந்தவள் இருவருக்கும் சேர்த்து டிக்கெட்டை எடுத்துக்கொண்டு தங்கள் ஊர் பேருந்தில் ஏறியேவிட்டாள். அக்னி என்ன சொல்லியும் எந்த பயனும் இல்லை. கடைசி வரைக்கும் இனியனுக்கு என்னவென்றும் சொல்லவில்லை அவள். அவனால் செய்ய முடிந்ததெல்லாம் அவளறியாமல் அந்த நம்பரை குறித்துக் கொள்வது மட்டுமே.

இரவு ஏழு மணிப் போல தங்கள் ஊருக்கு வந்தவள், நேராக இனியனை அனுமதித்திருந்த மருத்துவமனைக்கு சென்றுப் பார்க்க, எத்தனை சோர்விருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளி அக்னியுமே இனியனை பார்க்கதான் சென்றான்.

இனியனுக்கு வலது தொடை எழும்பில் முறிவு ஏற்பட்டிருக்க, எழுந்து நடக்கவே ஆறு மாதங்களுக்கு மேலாகும் என்றுவிட்டனர். இது அன்றி கைகால்களிலும் உடலிலும்  ஆங்காங்கே அடிப்பட்டு கன்றிப் போய் இருந்தது. இனியனிடம் விசாரிக்க முதலில் தலையின் பின்புறமாக யாரோ பலமாக தாக்கினார்கள்… ஆனால் அதன்பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை என்பதே அவனின் பதிலாக இருந்தது.

இனியனுக்கு துணையாக சூர்யா மட்டுமே உடனிருந்தாள். நாதருக்கும் வசுவுக்கும் சொல்ல வேண்டாமென மிளிர்தான் சொல்லி இருந்தாள். ஏதோ இப்போது தான் மிளிர் பழையபடி நடமாடுகிறாள் என கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்கள். அந்த நிம்மதியையும் கெடுக்க மிளிர் விரும்பவில்லை. எப்படியாவது சமாளித்துவிட்டு, அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றபின் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். மிளிரும் சென்னையிலிருந்து வர குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகுமென்று சொல்லியிருக்க, அவளை தேடவும் மாட்டார்கள்… ஆதலால் தானே இருந்து கவனித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து தங்கியும் விட்டாள். சிறிது நேரம் அங்கிருந்த அக்னி எப்படியும் பிறகு அவளிடம் பேசி புரிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பிவிட்டான். ஆனால் அது அத்தனை சுலபம் இல்லை என்பதை மிளிர் அவனுக்கு ஒவ்வொரு நாளும் உணர்த்தினாள். எத்தனை எத்தனையோ விதமாக கேட்டுப் பார்த்தும் கெஞ்சிக் கொஞ்சிப் பார்த்தும், அவளுடன் யார் பேசியது என்ன பேசியது என்று அவள் கடைசி வரை சொல்லவேயில்லை… இதைப்பற்றி அக்னி பேச்சை ஆரம்பித்தாளே, “இத்தோடு இதை நிறுத்திக் கொள்ளலாம்…” என்பது தான் அவள் பதிலாய் இருந்தது. அவளின் அதித பிடிவாதத்தில் அவன் தான் திணறி திக்குமுக்காடி, அடுத்து என்ன செய்வதென்று தெரியாது விழிப் பிதுங்கி நின்றான்.

                        -தேடல் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 2 சராசரி: 3.5]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

வாழ்க்கை

வளையோசை