in

காதல் எனும் மாயவலை 40

காதல் எனும் மாயவலை

அத்தியாயம் நாற்பது

இரண்டு வருடத்துக்கு முன்பு…

அது ஒரு குட்டி சுவர். அதன் மீது அமர்ந்திருந்த இருவர் கணபதி கூடப் பேசிக்கொண்டே நடந்து வரும் காயத்ரியை பார்த்து கேவலமான விமர்சனம் செய்தார்கள்.

கதிர், “மச்சி அங்க பாருடா அந்தப் பொண்ணை! சான்ஸே இல்ல செமயா இருக்கா டா! பதினைந்து வயசு பொண்ணு மாதிரியா இருக்கா? பதினெட்டு வயசு பொண்ணோட உடல் கட்டு, அதற்கேற்ற வளர்ச்சி கொண்ட உடல் அங்கங்கள்.” எனப் பார்வையிலயே கற்பழித்தான்.

அவனின் நண்பன், “ஆமா டா! அவ உண்மையில் செம கட்டை தான். ஆனால் என்ன? உன் பக்கத்து வீட்டு பொண்ணு தான் பேரு, எப்போ பார்த்தாலும் அந்த அழும் முஞ்சி கணபதி கூடவே சுற்றிக்கிட்டு இருக்கா! இதற்கு நீ ஒரு முடிவு கட்டியே ஆகணும் மச்சி, நம்ம ஏரியா ல யார் மாஸ் என்று அவளுக்குப் புரிய வை! அந்த மாஸ் பத்தாவது படிக்கும் அந்தக் கணபதிக்கா? இல்ல உனக்கா? இதுக்குப் பதில் தெரிஞ்சே ஆகணும்.”

தங்களின் வழியே சென்று கொண்டு இருந்த கணபதியும் காயத்ரியையும் அருகே அழைத்தனர்.

கணபதி, “என்னணா? சொல்லுங்க..”.

கதிர் கணபதிக்கு பளார் என ஓர் அடி கொடுக்க, அந்த அடியை வாங்கிய கணபதியோ, “நான் என்ன தப்பு பண்ணேன்? எதுக்கு ணா அடிச்சிங்க?”.

கதிர், “அடிங்கு! நீ பேசாதே. அடியே காயத்ரி நா எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இந்த #”₹** சுத்தத! சுத்ததன்னு, அதையும் மீறி சுத்துற நீ.. &₹&₹” எனத் தகாத வார்த்தைகள் சொல்லி திட்டினான்.

அவன் வாயை மூடிய நொடி அவன் கன்னத்தில் தன் செருப்பால் பல அடிகள் வழங்கிருந்தாள் காயத்ரி.

காயத்ரி, “என்னைக் கேவலமா சொன்ன கூடப் போன போகுது சொல்லி மன்னித்து விடுவேன். ஆனா என் கணபதியை பற்றிக் கேவலமா ஒரு வார்த்தை சொன்னே! சொன்ன வாயை உடைப்பேன்.”

இப்படியெல்லாம் சொன்னவள் கணபதி சொல்ல சொல்ல கேட்காமல் அவனை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

இங்கோ தன்னைச் செருப்பால் அடித்தவளை பழி தீர்க்கும் வெறியில் கதிர் இருக்க அதற்கு எண்ணெய் ஊற்றுவது போல அவனின் நண்பன், “மச்சி உன்னையே அவ அடிச்சுட்டால! இனி அவள சும்மா விடக் கூடாதுடா. எனக்குத் தெரிஞ்ச நாலு பசங்க இருக்காங்க. ஒரு வார்த்தை சொன்னா போதும். காதும் காதும் வச்ச மாதிரி அவளைக் கடத்திட்டு வந்துடுவாங்க.

அப்புறம் என்னடா? ஒரு வாரம் நம்ம இடத்திலேயே வெச்சுச் செய்வோம். அந்த அவமானத்திலேயே அவ கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துருவ, இல்ல உன் கால்ல விழுந்து கெஞ்சி அவளைக் கொல்ல சொல்லி கேட்பா. என்ன மச்சி சொல்ற? பசங்களைக் கூப்பிடட்டுமா?” எனச் சொல்லி சிரித்தான்.

கதிர், “ம்ம்.. கூப்பிடு மச்சி. இதுக்கு மேல அவள சும்மா விட மாட்டேன். இப்ப நா இருக்குற கோபத்தில் இந்த நொடியே அவளே ஏதாவது பண்ணனும் தோணுது.” என்றான் வெறி குரலில்.

இதெல்லாம் ட்யூஷன் முடிந்து வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த சரவ் காதில் தெளிவாக விழுந்தது.

சரவ், ‘என் அக்கா மேலயே கை வைக்கவா பிளான் பண்றீங்க? இருங்கடா உங்களையும் சேர்ந்து வர போற அந்த நாலு தடி மாடுகளையும் ஒரு வழி பண்றோம்.’ என நினைத்தவன் அதற்குத் திட்டத்தை வீட்டுக்கு போகும் வழியிலேயே தீர்மானித்தான்.

**************

வீட்டில்..

காயத்ரி, “அத்தை! மாமா! கௌசி! சீனு அண்ணா! எல்லாருமே எங்க இருக்கீங்க? ஹாலுக்கு வாங்க.” என வீடே அதிர சத்தம் போட்டாள்.

கௌசி, “அடியே லூசு! கத்தலுக்குப் பிறந்தவளே! இப்ப எதுக்குப் பைத்தியம் பிடிச்ச மாதிரி கத்திக்கிட்டு இருக்க? என்னடி ஆச்சு?” எனக் கேட்டாள்.

பார்வதி, “மருமகளே! என்னம்மா ஆச்சு? என் செல்லத்துக்கு என்ன கோவம்?” என அன்பான குரலில் கேட்டார்.

சிவநேசன், “காயத்ரி, என்னம்மா கண்ணெல்லாம் சிவந்து இருக்கு. கணபதி எதாவது சொல்லி திட்டிட்டானா? அடேய் மகனே! அடி வேணுமா?” எனக் கேட்டார்.

சீனு, “கணபதி, இவளுக்கு என்னடா ஆச்சு? எதுக்கு ஓவரா சவுண்டு விடுறா?” என அவன் பங்குக்குக் கேட்டான்.

கணபதி, “நண்பா, பிளீஸ் என்னை எதுவும் கேட்காத. இவ்வளவு நேரமா அவ திட்டிய திட்டலில் ஒரு பக்க காதே கேட்காம போச்சு. திரும்பி வாய்த் திறந்தேன் வை, இன்னொரு காதும் கேட்காத மாதிரி பண்ணிடுவ.” என்றவன் காதை மூடிக் கொண்டான்.

காயத்ரி, “அப்ப நான் ராட்சசி! கொடுமைக்காரி! உன்னை எப்ப பாத்தாலும் அட்வைஸ் பண்ணி கொல்றேன். அதான? அப்படித் தான சொல்ல வர?” எனக் கேட்டு முறைத்தாள்.

கணபதி, “நான் ஒன்னும் அப்படிச் சொல்லல. உன்ன பத்தி நீயே தான் இப்ப சொல்லிகிட்டே.” என்றவன் சிறு கேலி சிரிப்புச் சிரித்தான்.

காயத்ரி, “அத்தை! மாமா! இங்க பாருங்க இவன? உங்க முன்னாடியே இந்த லூசு எப்படி எல்லாம் சொல்றான். போங்க! நா இவன கல்யாணம் பண்ணிக்க மாட்டே. என் கிளாஸ்லையே என் பின்னாலேயை நாலு அஞ்சு பசங்க சுத்துறாங்க. அதில் எவனையாவது செட் பண்ணி லவ் பண்ண போறேன். இவனுக்கு நான் செட்டே ஆக மாட்டேன்.” எனச் சொல்லி தன் கண்ணைக் கசக்கி கொண்டாள்.

பார்வதி, “ஐயோ! என் செல்லமே! விடுமா. இவனை விட அழகா! அன்பா! உன்னை ரொம்பவே காதலிக்கும் ஒரு நல்ல பையனா பார்த்து அத்தை நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” என்றார்.

கணபதி, “ஓய் அம்மா! நீ உண்மையில் அம்மாவா? இல்ல என் வாழ்க்கையோட எதிரியா? உனக்கு முன்னாடி ஒருத்தி உன் பையனை பிடிக்கல சொல்லி ப்ரேக் அப் பண்றா! அதைத் தடுக்காமல் என்னை விட அவளுக்குப் பெஸ்ட் ஒருத்தனை கொண்டு வரேன் சொல்ற. ஓ! பையனை விட உனக்கு உன் மருமகள் தான் முக்கியமா போய்ட்டா அப்படித்தான? அப்பா! நீங்களும் அம்மா பக்கமா?.” எனக் கோபத்தில் கேட்பது போல நடித்தான்.

சிவநேசன், “மகனே, இந்த விஷயத்தில் என் தலையை உருட்ட பார்க்காத. நான் ஏதாவது கருத்துச் சொல்லப்போனால் என் சாப்பாட்டில் கை வச்சுடுவா உன் அம்மா. நமக்குச் சோறு தான் முக்கியம். நீ ஆள விடு.” என்றார் கை கும்பிட்டவாறு.

சீனு, “அப்பா, இப்பதான் தெரியுது நீங்க எப்படி இவ்வளவு பெரிய பிசினஸ் மேனா இருக்கிங்கன்னு, என்னமா பேசுறீங்க? சத்தியமா சொல்றேன். நீங்க மட்டும் அரசியலுக்கு வந்த ஒரே வருஷத்துல நீங்க தான் முதலமைச்சர், சிஎம். செம்ம நடிப்பு.” என்றான் கைதட்டிக் கொண்டே.

சிவநேசன், “ரொம்ப நன்றி சீனு. உன் பாராட்டில் உடம்பெல்லாம் கூசுது.” என்றவன் அதன் போலவே நடித்தும் காண்பித்தார்.

கௌசி, “அட! கொஞ்ச நேரம் எல்லாரும் சும்மா இருங்க. அடியை காயத்ரி! உன் பிரச்சினை என்னன்னு இன்னும் நீ சொல்லல.” என்றாள்.

காயத்ரி, “ம்ம்.. சொல்றேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன நடந்ததுனா..?” என ஆரம்பித்தவள் அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தாள்.

அவள் சொல்லி முடிந்த நொடியில் சிவநேசன், பார்வதி, சீனு, கௌசி என எல்லாரும் ஓங்கி சிரிக்க, கணபதி வந்த சிரிப்பை அடக்கி கொண்டிருந்தான்.

காயத்ரியோ தனக்கு யாருமே ஆதரவு இல்லையோ? என நினைத்து ஓவென்று அழ, அவளை உடனே தன் தோளில் சாயவைத்துச் சமாதானம் செய்தார் பார்வதி.

அப்பவும் சீனு, கௌசி சிரிக்க அவர்களின் சிரிப்பில் தன்னைக் கட்டுபடுத்த முடியாது கணபதியும் சிரிக்க ஆரம்பித்தான்.

இந்தக் கூத்தை எல்லாம் வாசலில் நின்று பார்த்த சரவ், ‘இதற்கு மேல் இங்கயே நின்னா வேலைக்கே ஆகாது’, எனப் புரிந்தவன் உள்ளே வந்தான்.

அவனைக் கண்ட காயத்ரி, “இதோ என் தம்பி வந்துட்டான். இப்போ சிரிங்க பார்க்கலாம். சரவ் குட்டி, ரொம்பவே சிரிக்கிறாங்க டா.” எனச் சொல்லி அவனிடம் ஒரு தடவை நடந்தது எல்லாம் சொன்னாள்.

அதல்லாம் கேட்டவன் ஓர் உண்மையான அன்புள்ள தம்பி போல் அவளுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தான்.

சரவ், “உங்க யாருக்குமே கொஞ்சம் கூட அறிவே இல்லையா? அவ எவ்வளவு கஷ்டப்பட்டு வராத கண்ணீரை வர மாதிரி நடிக்கிறா! அவளைப் போய்க் கிண்டல் பண்றீங்க? ச்சே! இப்படிப் பண்ண அவ நடித்த நடிப்புக்கு எண்ணம் மரியாதை? உங்களை மாதிரி நானும் அவ நடிக்கிறா தெரிஞ்சும் சிரிக்காம இல்ல? அதே மாதிரி உங்களால் முடியாதா?. காயத்ரி அக்கா, நீ கவலப்படாத! நா இருக்கேன். நீ நல்லா அழுகிற மாதிரி நடி. உன் நடிப்புக்கு நானும் சப்போட் பண்றேன்.” என்றான் ஓர் உண்மை தம்பியாக.

காயத்ரி, “தம்பி சரவணா, நீ ஆதரவா பேசுறியா? இல்ல அவங்கள மாதிரி கிண்டல் பண்றியா? முகத்துல மட்டும் கோபம். ஆனா கண்ணில் கேலி பார்வை. உன்னை நம்பலாமா? வேண்டாமா?” எனத் தீவிர யோசனையில் கேட்டாள்.

சரவ், “இன்னுமா புரியல? சத்தியமா நா கிண்டல் தான் பண்ணேன். ஓர் உண்மையான தம்பியின் கடமை என்ன? தன்னோட அக்காவை நல்லா கிண்டல் பண்ணி கடுப்பு ஏத்தனும், முடிஞ்ச அவ தூங்கும் போது அவ முகத்தில் பிசாசு போல மேக்கப் பண்ணி விடணும், அவ முடியை வெட்டணும்.

இதல்லாம் உனக்குப் பண்ணனும் ஆசை தான். ம்ம்.. என்ன பண்றது? நீ அக்காவா மட்டும் இருந்தால் பரவாயில்ல. கூடவே என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கப் போறவ. அக்காவில் இருந்து அண்ணியா ப்ரோமோஷன் வாங்குவ. அந்த ஒரு காரணத்தால் கிண்டல் பண்றது, கடுப்பு ஏத்துறது விட்டு வேற எதுவும் பண்ணல.” என்றான்.

சிவநேசன், “அது என்ன உங்க எல்லாருமே சரவ் தம்பியா இருக்க முடியும்? அண்ணா, அக்கா, தம்பி, தங்கை, தோழன், தோழி என்று பல உறவுகள் உங்க இடையே மாறி மாறி வருது.” எனக் குழப்ப குரலில் சொன்னார்.

பார்வதி, “காயத்ரி, நீயே சரியான ஒரு விளக்கம் சொல்லு பார்க்கலாம்.” எனக் கேட்டார்.

காயத்ரி, “அத்தை, நம்ம கணபதிக்கு ரத்த சம்பந்தம் படி உண்மையான தம்பி சரவ். ஆனா, அன்பால் அவன் எங்க எல்லாருக்குமே தம்பியா இருக்கான். இப்போ கௌசி விஷயத்திலயே சிவநேசன் மாமாவின் சொந்த தங்கச்சி பொண்ணு இவ இல்லயே. அப்படி இருந்தாலும் அன்பால் சந்தியா (கௌசியின் அம்மா) அம்மாவை அவர் கூடப் பிறந்த தங்கச்சியா பார்த்தார்.

அந்தப் பழக்கம் அவரின் தங்கச்சி பொண்ணா இந்த வீட்டுக்குள் வந்தவள் இத்தனை வருடத்தில் உங்க சொந்த பொண்ணா இருக்கா. இதே போலச் சீனு.. சீனு அண்ணாவுக்கு நான் தங்கச்சி. அவனோட அப்பா அம்மாவுக்கு நா சொந்த பொண்ணு மாதிரி இருக்க.

அத்தை, நீங்க அடிக்கடி மருமகளே! காயத்ரி செல்லம்! காயத்ரி குட்டி! இப்படிப் பல விதமா என்னைக் கூப்பிட்டாலும் உங்களுக்கு நான் எப்பவுமே ஒரு பெஸ்ட் ப்ரெண்ட் தான? இன்னொரு மகள் போலத் தான? என் அப்பா அம்மாவின் இறப்புக்கு பிறகு அவங்க இல்லாத குறை தெரியாத மாதிரி இந்த ரெண்டு வருசமா என்னைப் பார்த்துக்கிட்டிங்க.

இப்படி நமக்குள் ரத்த சொந்தம் தாண்டி அன்பால் பல சொந்தங்கள் இருக்கு. எங்க அஞ்சு பேர் நடுவில் இருக்கும் அன்பு சொந்ததை மற்றவர்கள் மேல திணிக்காமல் இருக்கோம். இதில் குழப்ப ஒன்னும் இல்ல.” என்றாள் ஒரு நீண்ட விளக்கத்துடன்.

சரவ், “சரி! சரி! பேசியது போதும். வாங்க சாப்பிட போலாம்.” என்றவன் அதோடு அந்தப் பேச்சுக்களை முடிந்து வைத்தான்.

******************

இரவு கேமிங் ரூமில்..

சரவ் சாந்தனாகவும், கணபதி ருத்ரனாகவும், சீனு ஆனந்தனாகவும் பேச ஆரம்பித்தனர்.

ஆனந்தன், “அடேய்! அந்தப் பொறுக்கி நாய் தான் உன்னை அடிச்சான் என்றால் பதிலுக்கு அவன் கை கால்களை உடைத்து வரது விட்டுட்டு சும்மா ஏன்டா வந்த? இப்போ இந்தப் பொறுக்கி கதிர், அவன் ப்ரெண்ட் கூடச் சேர்த்து இன்னும் நாலு பொறுக்கிகள் வராங்க. இனி என்ன பண்றது சொல்லு.” என ருத்ரனை திட்டினான்.

சரவ், “இல்ல ஆனந்தா, ருத்ரன் பண்ணது சரி தான். இப்ப தான் ரெண்டு வருட போராட்டத்துக்குப் பிறகு அந்த மினிஸ்டர் நீலகண்டனின் பினாமிகள் யார் யாரான்று ஓரளவுக்குக் கண்டு பிடிச்சோம். இன்னும் நம்ம வேலை அதில் முடியல.

இதில் ரெண்டு வருசமா நம்ம பிளான் எக்ஸிக்யூட் பண்ண நா இந்த வயசில் ஹேக்கிங் கத்துக்கொண்டே ஒரு வருசமா ஒரு ஹேக்கிங் புரோகிராம் வச்சு ஒரு டிவைஸ் ரெடி பண்ணிட்டு இருக்கே.

நீங்க ரெண்டு பேருமே ஸ்கூல் படிப்பு போக அப்பா அம்மாவின் பர்மிஷன் ல பாக்ஸிங், கராத்தே கத்துக்கிட்டு வரிங்க. இதல்லாம் எதுக்கு? ஒரே நொடியில் நம்ம யாரென்று காட்டவா? இல்ல! இல்லவே இல்ல. அந்தக் கதிரை வேற வழியில் தான் போய்த் தாக்கனும்.” என்றான்.

ருத்ரன், “அதனால தான்டா எதையும் பண்ணமா வந்தேன். நீயே சொல்லுடா சாந்தா, என்ன செய்யலாம்?” எனக் கேட்டான்.

சாந்தன், “நம்ம டிவைஸ் டெஸ்ட் பண்ற டைம் இது. இதை வச்சு அவன் கதையை முடிப்போம்.” என்றான்.

ருத்ரன், “ம்ம்.. முடிப்போம். அவனை மட்டும் இல்ல அவனோட நண்பன், இன்னும் வர போற அந்த நாலு தடி மாடுகளையும் சேர்த்து வச்சுச் செய்யலாம். கொஞ்ச நாள் விட்டு வைக்கலாம் பார்த்தேன். பயபுள்ள இப்பவே வந்து செய்டா கேட்டு ஆடு அதுவே தலையைக் கொடுக்குது.” எனச் சொல்லி சிரித்தான்.

ஆனந்தன், “பிளான் என்னனு சொல்லுடா. அப்படியே பண்ணலாம்.” என்றான்.

சாந்தன், “நம்ம டிவைஸ் பத்தி சின்னதா ஒரு விளக்கம் முதல சொல்றேன். இதை வச்சு இன்டர்நெட் ல கனெக்ட் ஆகி இருக்கும் எல்லா டிவைஸூம் நம்ம கண்ட்ரோலுக்கு வரும். அதுவும் ஒரு மணிநேரத்திற்கு மட்டும் தான். அந்த நேரத்தில் நம்ம கனெக்ட் பண்ண சிஸ்டமில் இருக்குற வீடியோஸ், ஆடியோஸ், போட்டோஸ் எல்லாம் நம்ம கைவசம்.

சும்மா விளையாட்டுக்கு ஆரம்பித்த ஒன்று விஸ்வநாதன் மாமா, லக்ஷ்மி அத்தையின் இறப்புக்கு பிறகு இதையே முழு மூச்சாக நேரம் கிடைக்கும் போதல்லாம் ரெடி பண்ணேன். அதுக்குப் பல புக்ஸ் படிச்சு, தெரிஞ்சு, சில நேரத்தில் ரெண்டு மூன்று நாள் தொடர்ந்து தூக்கமே இல்லாமல் இதை ரெடி பண்ணிட்டேன். இது வரும் டெமோ தான். இந்த டிவைஸ் இப்போதைக்கு 100 மீட்டர்ஸ குள்ள தான் யூஸ் ஆகும். அதுக்கு ஏற்ற மாதிரி ஒரு பிளான் இருக்கு.” என்றவன் தன் திட்டம் சொல்லிவிட்டுச் சிரித்தான்.

அந்த மர்ம சிரிப்பில் மற்ற இருவரும் கூடக் கலந்து கொண்டனர்.

மாயவலை விழும்.🕸️🕸️🕸️

இப்படிக்கு,

உங்கள் கனவு காதலன்,

🏹விஜயன்🏹

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Vijayan

Story MakerContent Author

நினைவுகள் தொடர்கதை 12

2… 💕எனக்கானவள்💕 நீ தானே டி😍