in , ,

தகிக்கும் என்னுள் தஞ்சமென அவள!! – 5

அத்தியாயம் – 5

ருத்ரேஷ்சின் கருப்பு நிற வெளிநாட்டுக்கார் வழுக்கிக்கொண்டு நின்றது  அந்த பங்களாவின் முன் .

அங்கே அவனுக்கு முன் காத்துத்திருந்த பாடி கார்ட்ஸ் வேகமாக வந்து அவனது காரின் கதவை திறந்து விட , கண்களில் கூலர்ஸ் அணிந்தபடி கம்பீரமாய் இறங்கினான் ருத்ரேஷ்.

காரை விட்டு வெளியே வந்தவன் தனக்கே உரிய நடையுடன் அந்த வீட்டிற்குள் செல்ல அவன் பின்னே கபிலனும் சென்றான்.

பாடிகார்ட்ஸ் எல்லோரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறை படி வீட்டின் வெளியே பாதுகாக்க நின்று கொண்டனர்.

ருத்ரேஷ் வீட்டிற்குள் நுளைய அப்போது வரவேற்பறையில் உள்ள சோபாவில் அமர்ந்து இவனை எதிர்பார்த்துக் காத்திருந்த இவனது தந்தை இவனை கண்டதும் இருக்கையை விட்டு எழுந்து ” மை டியர் சன் ” என்று மகிழ்ச்சியாய் கூறியவாறு ருத்ரேஷை சென்று  அணைத்துக்கொண்டார்.

அவர் அணைத்ததும் பதிலுக்கு அவரை லேசாய் அணைத்தவன் அவரை விட்டு விலகி நின்றான்.

சுதீப் வர்வா,   ருத்ரேஷை  ‘என் மகன்’ என்று பெருமை பொங்க பார்த்த படி ” ஹௌ ஆர் யு மை பாய் ” என்று கேட்க.

அதில் அவரை பார்த்து சாதரணமாக ” பைன் டாட் ” என்று பதில் அளித்தவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

என்றும் போல இன்றும் தனது மகனின் மௌனம் சுதீப் வர்வாவை வாட்டியது ஆனால் அதை முகத்தில் காட்டாதவர் அவனோட வீட்டின் உள் சென்றார்.

கபிலனுக்கும் சுதீப்பின் நிலையை பார்த்து வருத்தமாக தான் இருந்தது. ஆனால் தனது பாஸிசின் மௌனத்திற்கு பின் எதாவது காரணம் இருக்கும் என்று உறுதியாய் நம்பியவன் அதை பற்றி மேற்கொண்டு சிந்திக்காமல் அவர்களுடன் உள்ளே சென்றான்.

ஹாலிலுக்கு  ருத்ரேஷ் வந்ததும் ” பையா ”      ” அண்ணா ” என்று வேவ்வேறாக கூவிய இரு குரல்களுக்கு சொந்தகார்கள்  வேகமாக வந்து அவனை அணைத்துக்கொண்டனர் .

ருத்ரேஷ்சோ அந்த இருவரின் தீடீர் செயலை எதிர்பாக்காத காரணத்தால் குனிந்து அந்த இருவரையும் முறைக்க.

அதில் அசடு வழிந்த அந்த இருவர் ” ஹி..ஹி.. சாரி அண்ணா “என்றவாறு விலகினர்.

ஆம் அது ருத்ரேஷ் வர்வாவின் இரட்டை தங்கைகள் தான் .

இருவரும் ‘ நாண் ஐடன்டிக்கல் டிவின்ஸ்’ என்பதால் வேறு வேறு தோற்றத்தை கொண்டவர்கள்.

மூத்தவள் அப்படியே சுதீப் வர்வாவின் ஜாடையில் இருப்பாள் அவள் பெயர் “சாக்க்ஷி வர்வா”.

அவளுக்கு அடுத்து சில நிமிட இடைவேளைக்குப் பின் பிறந்தவள் அப்படியே கஸ்தூரியின் ஜாடையில் இருப்பாள் அவள் பெயர் ” தீக்க்ஷி வர்வா”

ருத்ரேஷ் தன் இரு தங்கைகளையும் முறைத்துக்கொண்டு நிற்க அவர்களோ அசடு வழிப்துக்கொண்டு நின்றனர்.

அவர்களுக்கு தெரியும்  தங்கள் அண்ணனுக்கு இது போல எந்த பார்மேலெட்டீசும் பிடிக்காது என்று… ஆனால்  என்ன செய்வது எப்போதாவது சந்திக்கும் தங்கள்  அண்ணனை பார்த்தவுடன் பாசத்தை வெளிபடுத்துகின்றனர். அதற்கு அவன் முறைத்தாலும் கூட கண்டுகொள்ளமாட்டார்கள் ‘ நீ என்ன வேண்டுமானாலும் சொல் நாங்கள் இப்படி தான் எங்கள் அன்பை வெளிபடுத்துவோம் ‘ என்பது போல அதையே திரும்ப திரும்ப செய்து ருத்ரேஷின் தங்கைகள் என்று நிறுபித்தனர்.

இரவருக்கும் தங்கள் அண்ணன் என்றால் கொள்ளை பிரியம் ருத்ரேஷுக்கும் அவ்வாறு தான் ஆனால் அதை வெளிகாட்ட மாட்டான்.

இருவரும் ஒரு சேர ருத்ரேஷை பார்த்து ” சாரி அண்ணா இனி இது மாதிரி செய்ய மாட்டோம் ” என்று கண்களை சுருக்கி பாவம் போல் சொல்ல அதில் அவர்களை ஒரு முறை அழுத்தமாக பார்த்தவன் போனால்  போகிறது போல ” ஓகே” என்றான்.

ஹால் சோபவில் ருத்ரேஷ் அமர்ந்திருக்க அவனது இரு புறமும் சாக்க்ஷி மற்றும் தீக்க்ஷி அமர்ந்திருந்தனர்.

கபிலன் சுதீப் அருகில் நின்று கொண்டு அவரிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

இரு பெண்களும் தங்கள் அண்ணனிடம் கதையளந்துக்கொண்டு இருக்க அவனோ தனது போனில் கவனத்தை செலுத்தியவாறு ” ம்…ம்…ம்..” என்றான்.

அவனது ஒற்றை பதிலே தங்களுக்கு போதும் என்று நினைத்த பெண்கள் தங்கள் காலேஜ் கதை, அது இது என பேசிக்கொண்டே போக சரியாய் அச்சமயம் ருத்ரேஷின் போன் வைபிரேட் ஆனது .

அதில் சோபாவில் இருந்து எழுந்தவன் அந்த கால்லை அட்டெண்ட் செய்து காதில் வைத்தபடி எவரையும் கண்டுக்கொள்ளாமல் தனக்கென அந்த வீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி படி ஏறி சென்றான்.

தங்கள் அண்ணனின் இச்செயல் என்றும் நடப்பது என்றாலும் பெண்களின் முகம் சூம்பிப்போனது .

கபிலனிடம் பேசியபடி  இவர்களை பார்த்துக்கொண்டிருந்த சுதீப் ருத்ரேஷ் எழுந்து சென்றதையும் அதற்கு தன் மகள்களின் முகம் சூம்பிப்போனதையும் பார்த்தவருக்கு நெஞ்சில் எதோ வலி எழுந்தது.

அதை மேற்கொண்டு பார்க்க முடியாதவர் கபிலனிடம் எதையோ கூறிவிட்டு தனது அறைக்கு சென்று அடைந்தார்.

சாக்க்ஷிக்கோ அண்ணன் சென்றது வருத்தமாக தான் இருந்தது ஆனால் இது தானே அவனது இயல்பு என்று நினைத்தவள் இதற்கு மேல் இங்கிருந்து தான் என்ன செய்ய போகிறோம் என்று நினைத்து தீக்க்ஷியிடம் கூறிகொண்டு மேல் தளத்தில் இருக்கும் தன் அறைக்கு சென்று விட்டாள்.

தீக்க்ஷியின் நிலையும் இது தான் ஆனால் அவளால் அதிலிருந்து சீக்கரம் வெளிவர முடியவில்லை ‘எப்போ அண்ணா நம்ம எல்லாம் சேர்ந்து எல்லா குடும்பத்த போல ஒற்றுமையாவும் சந்தோஷமாவும் இருக்க போறோம்…?? ‘என்று கண்களை மூடி வேதனையாக தனக்குள் நினைத்தவள் பின் என்றும் போல தனது வேதனையை தனக்குள் புதைத்தபடி கண்களை திறக்க …சரியாய் அச்சமயம் அவள் கண்ணில் விழுந்தான் கபிலன்.

அந்த வீட்டு வேலையாளிடம் சகஜமாக ஏதோ பேசி சிரித்தபடி இருந்தான் .  கபிலன் அப்படி தான் , யார் ? யவர்?  என்று  சிறிதும் ஸ்டேட்டஸ் பார்க்காமல் எல்லோரிடம் சகஜமாய் பேசும் குணமுடையவன் .இவனது இந்த குணமே தீக்க்ஷியை மிகவும்  கவர்ந்தது.

ஏனென்றால் தீக்க்ஷியும் அது போல தான் எல்லோரிடமும் சகஜமாய் பேசி நட்பு பாராட்டுவாள் மறந்தும் தன் செல்வநிலையை வெளிகாட்டாமல் எளிமையாய் இருப்பாள்.

இவள் தன்னை மறந்து கபிலனையே பார்த்துக்கொண்டு இருக்க அப்போது வேலையாளை அனுப்பி வைத்து   எதெர்ச்சியாய் இவள் புறம் திரும்பிய கபிலன் இவள் பார்ப்பதை பார்த்து சிறு புன்னகையுடன்  ” ஹாய் மேடம்” என்று தன் கைகளை ஆட்டினான்.

கபிலன் ருத்ரேஷ் வர்மாவுக்கு பி.ஏ ஆனா புதிதில் இங்கு வந்த போது சுதீப் மற்றும் தீக்க்ஷி இவனுடன் சகஜமாய் பேசினர் .

அதில் இருந்து தீக்க்ஷிக்கும் இவனுக்கும் ஒரு நட்பு வளையம் உருவானது.

தன்னை நோக்கி கபிலன் கையாட்டியதும் கனவில் இருந்து விளித்துக்கொண்ட தீக்க்ஷி பதிலுக்கு அவனை பார்த்து புன்னகைத்தபடி அவன் அருகில் சென்றாள்.

“ஹாய்  கபிலன் எப்படி இருக்கீங்க ? ” என்று புன்னகையுடன் வினவ பதிலுக்கு அதே புன்னகையுடன் ” ஐயம் ஆல்வேஸ்  பைன் மேடம் நீங்க எப்படி இருக்கீங்க ?” என்று பதில் கேள்வி கேட்டான்.

அதில் அவனை பார்த்து தீக்க்ஷி முறைக்க …

” என்னாச்சு மேடம் , நான்  எதாச்சு தப்பா சொல்லிட்டேனா ” அவள் முறைப்பு எதற்கென்று புரியாமல் கேட்டான்.

அதில் மேலும் அவனை முறைத்தவள் ” எத்தனை தடவை  சொல்லுறது கபிலன் என்னை மேடம்னு கீடம்னு எல்லாம்  கூப்பிடாதிங்கனு , சும்மா அப்படியே கூப்பிட்டா என்ன அர்த்தம் … ஆங்…கால் மீ தீக்க்ஷி …கபிலன் !! ” கோபமாக ஆரம்பித்தவள் என்ன என்று அறியாத ஒரு குரலில் முடித்தாள்.

அவளது குரல் மாற்றத்தை உணராத கபிலன் அவளது கூற்றுக்கு ஒரு சமாளிப்பு புன்னகையை சிந்த.

அந்த புன்னகையில் விழபோகிறேன் என்று சொன்ன மனதை கஷ்டபட்டு பிடித்து நிறுத்தியவள் ” எப்ப பாரு சிரிச்சு மளுப்புறதே உங்களுக்கு வேலையா போச்சு ” என்று அவனை குறை கூறினாள்.

அதற்கும் சிரித்தானே தவிற பதில் ஏதும் சொல்ல வில்லை ‘ அவனை பொறுத்த வரை தனது பாஸ்சிற்கு எத்தனை மதிப்போ அதே மதிப்பை தான் அவரது தங்கைக்கும் கொடுப்பான் அதில் தீக்க்ஷியை பேர் சொல்லி அழைக்கக் கூட அவன் விரும்பவில்லை “..

அவள் கேள்விகளுக்கு அவன் சிரித்து மளுப்ப அதில் கடுப்பானவள் ” இங்க பாருங்க கபிலன் , இப்ப எந்த வாய் என்னை மேடம்னு கூப்பிடுதோ கூடிய சீக்கரம் அதே வாய் என்னை தீக்க்ஷினு கூப்பிடும்” என்றவள் சிறு இடைவேளை விட்டு அவன் கண்களை ஆழ்ந்து நோக்கிவாறு ” கூப்பிட வைப்பேன் ” என்றாள் அழுத்தமாய்.

அதில் அவளது கண்களில் தெரிந்த எதோ ஒன்று புரியாமல் கபிலன் உற்று பார்க்க அதற்குள் தன்னை சுதாரித்துக்கொண்டவள்  அவனை பார்த்து அட்டகாசமான  சிரிப்புடன் ” பெட் வச்சிக்கிலாமா ” என்றாள் ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி .

அதில் அவளை பார்த்த கபிலன்  ” சும்மா விளையாடாதிங்க மேடம் ” என்றான் சிறு சிரிப்புடன்.

” ஹே …சீரியஸ்சா பா ..ஐயம் நாட் ஜோக்கிங் ” என்றவள் அவனை வம்பிளுக்கும் பொருட்டு ” ஒரு வேளை உங்களுக்கு பயமா இருந்தா சொல்லுங்க ..பெட் வேண்டாம்னு நான் உங்கள விட்டிடுறேன் ” என்றாள் வேண்டுமென்றே.

அவள் நினைத்தது போலவே அவள் சொன்னதை கேட்ட கபிலன்  அட்டகாசமாக சிரித்தபடி ” ஹா..ஹா..ஹா பயமா  ? எனக்கா ? ஃபன்னி …” என்றவன் அவளை பார்த்து ” ஓகே பெட்டுக்கு நான் ரெடி ” என்றான்.

அவன் அவ்வாறு சொன்னதும் துள்ளிகுதிக்க இருந்த மனதை அடக்கியவள் ”  தட்ஸ் பைன்.!!  ஒரு வேளை பெட்டுல நான் ஜெய்ச்சா  , நான் அப்போ என்ன சொன்னாலும் நீங்க கேக்கணும் ஓகே வா ? ” என்று கேட்க.

அதில் அவளை பார்த்து ” யா..நோ புராபுளம்  பிகாஸ் எப்படியும் நான் உங்களை  பெயர் சொல்லி கூப்பிட போறதும்  இல்லை சோ நீங்க செய்க்க போறதும் இல்லை ” என்று கூலாக சொல்ல.

அதில் பல்லை கடித்தவள் ” அதையும் தான் பார்ப்போம் ” என்றாள் அவனை பார்த்து .

” ம்ம் லெட்ஸ் சீ.. ” என்றவன் அவளை பார்த்து ” நான் இந்த பெட்டுல வின் பண்ணா இனிமே நீங்க என்கிட்ட  உங்க நேம் சொல்லி கூப்பிட சொல்ல கூடாது ஓகே வா ” என்று அவளை போலவே கேட்க.

அதில் அவனை பார்த்து உதட்டை சுளித்தவள் ” அது நடக்கும் போது பாப்போம் ” என்றாள் கடுப்பாக.

அதில் இவன் ஏதோ சொல்ல வர அதற்குள் அவனது போன் ஒலித்தது அதில் தீக்க்ஷிதாவை பார்த்து ” எக்ஸ்கியூஸ் மீ..” என்றவன் செல்போனை அட்டெண்ட் செய்து காதில் வைத்தபடி வெளியே சென்றான்.

பொகும் அவனை பார்த்து ” பெயர் சொல்லி கூப்பிட மாட்டேன்னு எவ்வளவு கான்பிடன்ட்டா சொல்லுற டா நீ !! …இரு இரு இதே வாயில இருந்து என் பெயரை மட்டும் இல்லை ..செல்லம் , புச்சி , அம்முனு இப்படி வித விதமா கொஞ்ச வைக்கல என் பேரு தீகக்ஷி வர்வா  இல்ல டா என் மீசை மாமா ” என்று மனதில் அவனிடம் பேசிய படி அவன் சென்ற பாதையையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் அந்த காதல் பேதை.

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய

எப்போது என் உண்மை நிலை அறிய  

தாங்காமலும் தூங்காமலும்

நாள் செல்லுதே

இல்லாமலே நித்தம் வரும் கனவு

கொல்லாமல் கொல்ல

சுகம் என்னென்று சொல்ல

நீ துணை வர வேண்டும்

நீண்ட வழி என் பயணம் ……..

***********************************

மணிமேகலையோ இங்கு மல்லிகாவின் வீட்டில் நன்றாக ஒட்டிக்கொண்டாள் ..

கிராமத்தில் வறுமையில் வாடிய மல்லிகாவும் அவள் கணவரும் பிழைக்க மும்பையை வந்தடைந்தனர் .

வந்த புதிதில் கூலி வேலையில் ஈடுப்படவர்கள் பின் அதில் சேமித்த பணத்தை கொண்டு ரோட்டு ஓரம் ஒரு தள்ளு வண்டி  கடை போட்டனர்.

அதில் வந்த பணத்தில்  அவர்களின் வயறும் தாராளமாய் நிறைந்தது, இப்படியே இருந்த சமையம் தான் ரோட்டு கடையில் தனது மனைவியுடன் வேலைசெய்துகொண்டிருந்த மல்லிகாவின் கணவர் மாரடைப்பில் நெஞ்சை பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்தார்.

ஹாஸ்பிட்டல் எடுத்துச்சென்றும் பயன் என்னவோ பூஜியம் தான் . ஆம் அவர் உயிர் அவரை விட்டு பிரித்துவிட்டது.

பன்னிரண்டு வயது குழந்தை வைத்துக்கொண்டு கணவன் இல்லாமல் அந்த மும்பை மாநகரில் சிங்கப்பெண்ணாய் அன்று முதல் இதோ இன்று வரை உழைத்துக்கொண்டு இருக்கிறார் மல்லிகா.

ஆரம்பத்தில் கணவனை எண்ணிக் கலங்கினாலும் பின் நிதர்சனம் புரிய தன் மகனுக்காக வாழ ஆரம்பித்து விட்டார்.

அப்படி சென்று கொண்டிருந்த சமயம் தான் இவர் மணிமேகலையை சந்தித்தது , அவள் கதையை கேட்டு தன்னுடனே தன் வீட்டுக்கு அவளை கூட்டிச்சென்றது எல்லாம்.

” மேகலை ….மேகலை எங்க இருக்க ” என்று மணிமேகலையை தேடியபடி குரல் கொடுத்துக்கொண்டே அந்த சிறு வீட்டிற்குள் நுளைந்தார் மல்லிகா.

குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே வந்தவர் அவள் கிச்சனில் இருப்பதை பார்த்து ” நீ …இங்க தான் இருக்கியா ” என்றவாறு இடுப்பில் கைவைத்த படி அவளை முறைக்க.

கிச்சனில் பட பட வென எல்லா வேலையும் செய்து கொண்டிருந்த மணிமேகலைக்கு  வேலைசெய்யும் மும்மரத்தில் முதிலில் மல்லிகா அழைத்தது காதிலே விழவில்லை பின் அவரது அழைப்பு கேட்க ‘ க்கா…நான் இங்க இருக்கேன் !’ என்று குரல் கொடுப்பதற்கு முன் அவரே அங்கு வந்துவிட்டார்.

வந்ததும் அல்லாமல் இடுப்பில் கைவைத்தபடி அவளை முறைக்க …அதில் ‘ ஏன் இப்போ  அக்கா  என்னை முறைக்குறாங்க …ஒருவேளை எதாச்சும் தப்பு செஞ்சிட்டோமோ ‘ என்று பதட்டமாக எண்ணியவள்  பாவமாக மல்லிகாவை பார்த்தாள்.

மல்லிகாவோ அவளை மேலும் முறைத்தவாறு அவள் அருகில் வர இவளோ ” ஐயோ அக்கா அடிச்சுபுடாதிங்க !!” என்று சொல்லிபடி கண்களை இறுக்கமூடிக்கொண்டாள்.

இவளது இந்த செய்கையில் தன் தலையிலேயே அடித்துக்கொண்ட மல்லிகா அவள் அருகில் சென்று கேஸ் ஸ்டவ்வை ஆப் செய்து மீண்டும் அவளை பார்க்க அவளோ ” என்ன அடிக்கவே இல்லை ” என்று எண்ணியபடி ஒற்றை கண்ணை மட்டும் திறந்து மல்லிகாவை பார்த்தாள்.

அதில் அவர் மேலும்  தன்னை முறைத்துக்கொண்டு நிற்பது தெரிய எச்சிலை கூட்டி விழுங்கியவள் ” என்னாச்சு அக்கா நான் எதாச்சு தப்பு பண்ணிட்டேனா ?? ” என்று அப்பாவியாக வினவ.

இவளது அப்பாவி தனத்திலும் பயத்திலும் தனது முறைப்பை கைவிட்ட மல்லிகா ” என்ன மேகலை நீ !! எந்தனை தடவ நான் உங் கிட்ட சொல்லுறது இப்படி எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யாதனு …  என் பேச்சையே கேக்க கூடாதுனு முடிவுல இருக்கியா நீ ” என்று அவளை பார்த்து கேட்டவர்.

அவளது கையை பற்றி இழுத்து அதில் இருந்த கொப்பழத்தை பார்த்து வருத்தமான குரலில் ” பாரு  சொல்ல சொல்ல கேக்காம வடை சுடுறேன்னு சொல்லி   எப்படி கையை சுட்டு வச்சிருக்கிறேன்னு …இன்னும் அந்த காயம் கூட ஆறல அதுக்குள்ள எல்லாவேலையும் இழுத்து போட்டுகிட்டு செய்யுற …காலைல மார்கெட்டுக்கு போய் கடைக்கு தேவையான காய்கறி வாங்கிட்டு வரதுக்குள்ள மொத்த வீட்டு வேலையும் இழுத்து போட்டு செஞ்சு முடிச்சிடுற  …” என்று வருத்தமாக சொல்ல.

அதில் அவரை பார்த்து புன்னகைத்தவள் ” ஐயோ அக்கா எனக்கு சமைக்கிறதுனா ரொம்ப பிடிக்கும் அதுமட்டும் இல்லாம வீட்டுல அப்படி என்ன பெரிய வேலையா நான் செய்யுற சும்மா பொழுது போக்குக்கு வீட்ட பெருக்கி , கொஞ்சம் பாத்திரம் கழுவி , இரண்டு மூணு துணிய துவைச்சு போடுறேன் இதெல்லாம் பெரியவிஷயமுன்னா  நீங்க எங்கிட்ட சண்டபோடுறீங்க…..” என்று நீட்டி முழக்க.

அவள் சொன்ன தினுசில் மல்லிகாவுக்கு சிரிப்பு வர …சிரிப்புடனே அவளை பார்த்தவர் ” நீ செய்யுறது கொஞ்சம் வேலையா ” என்றார் அவளை பார்த்து.

அதில் அவரை இப்போது செல்லமாக முறைத்த மேகலை  ” இங்க பாருங்க அக்கா , இந்த வீட்டுல வேலை செய்யுறது என் உரிமை …என் அக்கா வீடு நான் செய்யுறேன் அதை பத்தி இனி நீங்க கூட என் கிட்ட ஒரு வார்த்தை கேக்ககூடாது புரிஞ்சிதா ” என்று கஷ்டபட்டு  மிரட்டும் தோனியில் கேட்க.

அதில் அவளை பார்த்து பயபடுவது போல் பாசாங்கு செய்தவர் ” புரிஞ்சிது மாகாராணி அவர்களே ” என்றார் பணிவுடன்.

அவர் செயலை பார்த்து இப்போது சிரிப்பது மணிமேகலையின் முறையானது.

சிர்த்துக்கொண்டு ” அக்கா….” என்று சிணுங்க அதில் அவளை பார்தது புன்னகைத்தவர்

” வேலன் ஹால்ல இருக்கான் பாரு ..நீ அவன் கூட போய் உக்காந்து  டி.வி பாரு நான் உங்க இருண்டு பேருக்கும் டீயும் சினாக்ஸ்சும்  சஎடுத்திட்டு வரேன் ” என்று சொல்ல

அதில் அவள்  ” நான் உதவுறேன்…” என்று ஏதோ சொல்ல போக அதற்குள் அவளை தடுத்தவர் “மூச்ச்….ஒழுங்க போய் உக்காரு ” என்று சிறு அதட்டல் போட அது சரியாய் அவளிடம் வேலை செய்தது.

போகும் அவளை பார்த்த மல்லிகா அக்கணமே மனதில் கடவுளிடம் ” கடவுளே …இந்த பொண்ணுக்கு எந்த கொறையும் வைக்காம அவ மனசமாதிரியே நல்ல வாழ்கையை அமைச்சு கொடு பா அதே மாதிரி காணாம போன அவ தம்பியையும் சீக்ரமா அவ கண்ணுல காட்டு பா ” என்று  அவசர வேண்டுதல் வைத்தார்.

தொடரும்…

ஹாய் பிரெண்ட்ஸ்….

கதை எப்படி போகுது எதாவது கெஸ் இருக்கா … உங்களுக்கு ?? உண்மைய சொல்லனும்னா எனக்கே நான் நல்லா எழுதுறேனானு தெரியலை 😣..

பட் உங்க சப்போர்ட்ஸ் அண்ட் கமேண்ட் தான் எனக்கு எனர்ஜியை கொடுக்குது ….ரியலி உங்க லவ் அட்ண் சப்போர்ட்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பலத்தையும் உற்சாகத்தையும் கொடுக்குது…

லவ் யூ சோ மச் மை டியர் சிஸ்டர்ஸ் அண்ட் பிரெதர்ஸ்….

வித் லவ் …💜

தாரா பவி🖤🖤🖤🖤🖤

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 14 சராசரி: 4.3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Thaara Pavi

Story MakerContent Author

என் சண்டைக்காரி நீ தான்💞

9.நீ என் சினாமிகா