in

நீயே என் முதல் குழந்தை 33

அத்தியாயம் 33

தங்கள் அறையிலிருந்து வெளியே வந்த வம்சி.. சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்த ஷ்யாமிடம் வந்தவன்…”டேய் மச்சி… ஒரு நிமிசம் எழுந்து நில்லு.” எனவும் “ஏண்டா?” என்ற ஷ்யாமை முறைக்க..”சரி..சரி.. முறைக்காத..” என்றவாறே எழுந்து நின்றவனை இறுக அணைத்துக்கொண்டு…”மச்சி நான் இன்னைக்கு ரொம்ப்ப்ப்ப சந்தோசமா இருக்கேண்டா..அதுக்கு முழு காரணமும் நீதான்..நானும் ரஞ்சியும் சேரணும்னு எங்ளைவிட நீதான ஆசைப்பட்ட்… ஆசைப்பட்டதோட இல்லாம….எங்களை சேர்த்து வைக்க எவ்வளவு கஷ்டப்பட்ட….

 உன் கூட சேர்ந்து வைஷும்.. தான் உன்னை மாதிரி ஒரு நண்பனும், வைஷு மாதிரி தங்கச்சியும்… கிடைக்க.. நான் ரொம்ப கொடுத்து வ்ச்சிருக்கணும் மச்சி… நீங்க இல்லைன்னா நான் என்ன ஆகியிருப்பேன்… ” என்று உணர்ந்து கூற.. ஷ்யாமிற்கு லேசாக கண்கலங்கிய்யது… தானும் வம்சியை அணைத்தவனுக்கு பேச்சு வரவில்லை..இருந்தும் தன்னை சமாளித்து கொண்டு..”மச்சி நீ கஷ்டப்பட்றை பார்த்துட்டு யாரோ போல இருக்க.. நான் உன் சொந்தம் இல்லை மச்சி.. உன் நண்பன்..” என்றவன்  

”எனக்கு உன் சந்தோசம் முக்கியம்.. நீ வெளி உலகத்துக்கு வி.கே வா பிஸினெஸ்மேனாக.. கம்பீரமா தெரியலாம்.. ஆனால் உன் மனசு படும் வேதனையும், அன்பிற்ககாக ஏங்குவதையும் கூட இருந்து நான் பார்த்திருக்கேன்.. ஏன் நானும் அதே வேதனை அடஞ்சிருக்கேன்.. எப்ப என் லைஃப்ல வைஷு வந்தாளோ…அப்பவே என் ஏக்கம், துக்கம் எல்லாம் போயிருச்சு.. வெளில இருந்து பார்த்தால்.. நான் அவளை பார்த்துக்கிற மாதிரி தெரியும்.. ஆனால் அவதான் என்னை குழந்தை மதிரி பார்த்துக்கிறா…”

“என் லைஃப் ரொம்ப சந்தோசமா போகுது மச்சி…அதுக்கு முழு காரணமும் நீ… நான் சந்தோசமா இருக்கிற மாதிரி நீயும் சந்தோசமா இருக்கணும்.. நினச்சேன்..  அதுக்காகத்தான் இவ்வளவும் நான் நினச்ச மாதிரியே எல்லாம் ஹேப்பியா முடிஞ்சிருச்சு.. ஐ யம்… சோ ஹேப்பி ஃபார் யூ மச்சி” ஷ்யாம் மகிழ்ச்சியுடன் கூற..

“இங்க என்ன ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கு.. அதுவும் நான் இல்லாம.. செல்லாது.. செல்லாது..”என்றவாறே.. வந்து வைஷூ இருவரின் நடுவிலும் நின்று கொண்டாள்..இருவரும் புன்னகையுடன் அவளை தோளோடு அணைத்து கொண்டனர்..

”நான் மஞ்சு பேபியும், ஸ்ரீ குட்டியும் என்ன செய்றாங்கன்னு பார்க்கிறேன்..” என்றுவிட்டு வம்சி வெளியே செல்ல.. “என்ன மாமூ என்ன ஆச்சு..? ஏன் உங்க முகம்  ஒருமாதிரி இருக்கு?” என வைஷு.. கேட்க.. “அது ஒண்ணும் இல்ல செல்லாக்குட்டி உன் மாமூ கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.. இப்ப ஐயம் ஓகே டா நானும் போய் குட்டீஸ்களை பார்க்கிறேன்” என்றுவிட்டு அவனும் வெளியே சென்றான்.. வளியே வந்த ஷ்யாம் அங்கு கண்ட காட்சியில் ஒரு நொடி வாய்பிளந்து நின்றவன்..

மறுவிநாடி முகத்தில் கோபம் பொங்க..” டேய் உன்னை.. சும்மா விடமாட்டேண்டா…எவ்வளவு தைரியம் இருந்தால் நீ இப்படி செய்வ?… என்று கத்திக்கொண்டே… ஓட.. உள்ளே சமயல் செய்து கொண்டிருந்த வைஷுவும்.. அப்பொழுதுதான் விழித்து எழுந்து கீழே வந்த அபியும், ஷ்யாமின் குரலை கேட்டு பதட்டத்துடன்.. வெளியே ஓடிவந்து பார்த்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்…

”ஆம் அங்கு வம்சி மஞ்சரியுடனும், ஸ்ரீயுடனும் தரையில் உருண்டு, பிரண்டு விளையாடி கொண்டிருக்க.. அதை பார்த்த ஷ்யாம் ‘என்னை விட்டு இவர்கள் மட்டும் எப்படி விளையாடலாம்..?’ என்ற கோபத்தில் வீர வசனம் வம்சியுடன் சண்டைக்கு சென்றவன் பின் தானும் அவர்களுடன் ஐக்கியமாகிவிட…அதை பார்த்த பெண்கள் இருவரும் திகைத்து..பின்பு அவர்களின் சேட்டையை ரசிக்க ஆரம்பித்தனர்…

அதுவரை கம்பீரமகவும்… மிடுக்குடனும் பார்த்திருந்த ஆண்கள இருவரையும்.. இன்று குழந்தையோடு குழந்தையாக.. அவர்களுடன் சரிக்கு சரி விளையாடுவது பார்க்கவே அவ்வளவு நிறைவாக இருந்தது இரு பெண்களுக்கும்.. அதிலும் வம்சி..தரையில் குப்புற படுத்து துப்பாக்கியை ஏந்தி இருப்பது போல் பாவனை செய்ய அவன் அருகில் மஞ்சரியும், ஸ்ரீயும்  அதே போல் செய்து..”ப்பா சீக்கிரம் சுடுங்கப்பா. எனிமி நம்மளை அட்டாக் செய்ய வர்றாங்க…” தன் தந்தைக்கு உத்தரவிட…

அவனும் மகள் சொல்லே வேதம் என்பது போல்..”ட்மீல்..”என்று வாயில் சத்தம் கொடுத்து… எதிரியாகிய ஷ்யாமை சுட… ஷ்யாம் மயங்கி விழ மஞ்சரியும் ஸ்ரீயும்.. “ஹே..” என உற்சாக கூச்சலிட.. அதை பார்க்க..பார்க்க அபிக்கு மனம் விம்மியது.. ஏனோ தங்கள இருவரும் உரிய இடத்திற்கு வந்து சேர்ந்த நிம்மதி…அபியின் மனதில் தோன்ற வம்சியையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

முடியெல்லாம் கலைந்து, அவன் போட்டிருந்த ஆகாய நீலவண்ண சட்டை இப்பொழுது காபி கலராக மாறியிருக்க… முகத்தில் ஆங்காங்கே…மண் ஒட்டியிருக்க.. வாய்கொள்ளா புன்னைகையுடன் குழந்தைகளுடன் விளையாடியவனை பார்க்க தெவிட்டவே இல்லை.. அபிக்கு.. பிள்ளைகளுடன் விளையாடி கொண்டிருந்த வம்சிக்க்கு  ஏதோ உணர்வு தோன்ற.. வேகமாக நிமிர்ந்து பார்க்க..அங்கு அபி தனையே பார்ப்பதை உணர்ந்து.. அவன் கண் சிமிட்ட.. அவனின் குறும்பில் சிரிப்பு வந்தாலும் அதை மறைத்து அவனை முறைத்து பார்க்க…அவளின் கள்வனோ இப்பொழுது உதடு குவித்து காண்பிக்க..அதில் விதிர்த்து சுற்றும் முற்றும் பார்க்க… வைஷுவை பார்க்க அவளோ பார்வையை இவள் புறம் திருப்பவே இல்லை..

 ஷ்யாமை பார்க்க அவன் குழந்தைகளோடு மல்லுகட்டி கொண்டிருக்க.. அதை பார்த்தவளுக்கு அப்பொழுதுதான் மூச்சே சீரானது… ‘சரியான கள்ளன்..’ அவனை வைதவள்.. வைஷூவிடம் “வைஷூ போய் பிள்ளைகளை கூட்டிட்டு வா..விளையாண்டது போதும் அவங்க ட்ரெஸ்ஸெல்லாம் ரொம்ப மண்ணாகிடுச்சு.. அப்படியே அந்த பெரிய பிள்ளைகளோட முதுகுல ரெண்டு போட்டு கூட்டிட்டு வா”

 என சொல்ல..அவள் புன்னகையுடன் தலையாட்டி சென்றாள்.. அனைவரையும் அழைத்து வந்த வைஷு அபியின் முன்னால் நிற்க வைக்க…அவர்களை பொய் கோபத்துடன் முறைத்து பார்த்தவள்…”இது என்ன ட்ரெஸ்ஸல்லாம் இவ்வளவு அழுக்கா ஆகிறவரைக்கும் விள்யாட்டு.. இது என்ன புது பழக்கம்?”என்று மிரட்டியவள்..

அவங்கதான் சின்ன குழந்தைங்க… சரி. உங்க ரெண்டுபேருக்கும் என்ன..? பாருங்க எவ்வளவு மண்ணு…? இந்த ட்ரெஸ்ஸை நீங்கதான் துவைக்கணும்.. இதுதான் உங்களுக்கு பனிஷ்மெண்ட்..” என்றுவிட்டு வைஷுவை பார்த்து கண்களை சிமிட்ட.. அவள் வாயில் கை வைத்து சிரிப்பை அடக்கி கொண்டாள்.. “மச்சி என்னடா..சரியான ஹிட்லரை போய் காதலிச்சு கல்யாணம் செஞ்சிருக்க..பாவம்டா நீ வாஷிங் மெஷின் எப்படி இருக்கும்னு கூட தெரியாத நீ எப்படிதான் இதை வாஷ் செய்ய போறியோ..”  நண்பனுக்காக அனுதாபப்பட்டவன்…

“எனக்கு எந்த பிரச்சினையும் இல்லப்பா என் ட்ரெஸ்ஸை என் வைஷு வாஷ் செஞ்சு தருவா..” என்று கெத்தாக கூறியவனின் எண்ணத்தை புரிந்தவளாக..”வைஷூ நீ யருக்காவது உதவி செஞ்ச..உன் தலையில கொட்டு விழும் ..”என்று வைஷுவயும் மிரட்டி வைத்தாள்.. இதை எல்லாம் தன் அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரனுக்கு அபியின் அதட்டலும், வம்சியின் பணிவும் அதைவிட வ்ம்சியின் சிறுபிள்ளை சேட்டையும் பார்த்தவருக்கு.. வம்சியின் இந்த புதிய பரிணாமம் அவருக்கு வியப்பாகவும் கூடவே மகிழ்ச்சியாகவும் இருந்தது..

”அபிம்மா..சும்மா இருந்தவனை தூண்டிவிட்டு விளையாட கூப்பிட்டது இவன் தான்… உன் அண்ணா பாவம் தான… என்னை இந்த பனிஷ்மெண்ட்ல இருந்து ரிலீஃப் செய்யேன்..”பாவம் போல் முகத்தை வைத்து ஷ்யாம் கெஞ்ச.. அதில் யோசித்தவள்.. “ எனக்கென்னமோ.. அப்படி தெரியலையே அண்ணா..நாங்க பார்க்கிறப்ப நீங்கதான் அதில மும்மரமா இருந்த மாதிரி இருந்துச்சு..” என்றுவிட்டு “என்ன வைஷு அப்படித்தான..? வைஷுவயும் துணைக்கு அழைத்தாள்.. வைஷுவிற்கு சிரிப்பை அடக்குவதே பெரும்பாடாக இருக்க.. பேச்சு வராம்ல் ஆம் என்று தலை அசைத்தவளை.. ’கிராதகி, சதிகாரி சமயம் பார்த்து காலை வாரிட்டா..’ மனைவியயை மனதில் வறுத்தெடுக்க.. இதை எல்லாம் குணிந்த தலை நிமிராமல் கேட்டு கொண்டிருந்த வம்சிக்கும் சிரிப்பாக இருக்க..திரும்பி மஞ்சரியை பார்த்தான்.. அவளும் தகப்பன் செயலை பின்பற்றுவதுபோல் தலை குணிந்தே இருந்தாள்.. இரண்டு கையிலும் வாயை மூடிக்கொண்டு..

ஷ்யாம் வம்சியின் காதோரம் குணிந்து.. “நீ எல்லாம் ஹீரோன்னு சொல்லிராத.. எல்லாரும் உன்னை பார்த்து சிரிப்பாங்க.. இப்படி மனைவிக்கு பயந்தவங்களை எல்லாம் ஹீரோ லிஸ்ட்ல சேர்க்க மட்டாங்களாம்..அதனால என்ன செய்ற.. ஒழுங்கா.. அபியை எப்படியாவது சமாதானம் செஞ்சு, மனசை மாத்தி இந்த பனிஷ்மெண்ட்ல இருந்து காப்பாத்துற” என்று மிரட்ட்டியவனை முறைத்தவன்.. “உனக்கு எதுக்குடா நான் ஹீரோவா இருக்கணும்..? நான் என் ரஞ்சிக்கு மட்டும்தாண்டா…” என்று என்ற வம்சி..

“சரி நீ ரொம்ப அழற… நான் என் ரஞ்சியை சமாதானம் செய்றேன்..” என்று கூறிய வம்சியை ஷ்யாம் நக்கல் பார்வை பார்க்க..அந்த பார்வையை அலட்சியம் செய்தவன்..” ரஞ்சி..”என்று அழைக்க..அதில் நிமிர்ந்து பார்த்தவள்.. அவன் கண்சிமிட்டியும், உதடு குவித்து முத்தம் கொடுத்தும்.. ”இந்த ஒருதடவை எங்களை மன்னிச்சிருடா… இனிமேல் இது மாதிரி செய்யவே மாட்டோம்… இல்லடா மஞ்சு..…” என்று  அவளை சமாதானம் செய்ய மகளையும் துணைக்கழைத்த வம்சியை.. வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தான் ஷ்யாம்…   

வம்சி அனைவரின் முன்பும் அவ்வாறு செய்ததில், அபியின் முகம் சிவக்க..இவங்க இன்னும் இங்கே இருந்தால் நிஜமாகவே எதாவது செஞ்சிருவான்.. சரியான கள்ளன்..’  அவனை முறைத்தவள்..”சரி..சரி இந்த ஒருதடவை உங்களை மன்னிச்சிட்றேன்.. அடுத்த தடவை விளையாட்றப்ப எங்களையும் கூப்பிடணும் சரியா..? இப்பா நீங்க போகலாம்..” என்று கெத்தாக கூற..

”ஹே மூவரும் உற்சாக கூச்சலிட.. மஞ்சு அபியின் கன்னத்தில் முத்தமிட்டு…”தாங்க்ஸ் மா..” என்று விட்டு உள்ளே ஓட.. அவளின் சேட்டையில் புன்னைகையுடன் நிமிர்ந்தவளுக்கு… வம்சி தன்னையே பார்த்துக்கொண்டு வருவது தெரிய..”என்ன..?”என்றவளிடம் “என் பேபி உனக்கு தாங்க்ஸ் சொன்ன மாதிரி நானும் உனக்கு தாங்க்ஸ் சொல்ல போறேன் ரஞ்சி..” என்று அருகில் வர,

அபி வைஷூவை திரும்பி பார்க்க.. அவள் எப்பொழுதோ பிள்ளைகளை குளிக்க வைக்க சென்றிருந்தாள்.. ஷ்யாமை பார்க்க.. அவன் அபி ’சரி..சரி..’ என்றபோதே உள்ளே சென்றுவிட்டிருந்தான்.. இப்பொழுது வம்சியும், ரஞ்சியும் மட்டும் தனித்திருக்க… தனக்கு வெகு அருகில் வந்திருந்தவனை..விழிவிரிய பார்த்திருந்தாள்…

அவளருகே வந்தவன் வெகு நிதானமாக அவள் முகத்தருகே குனிய..”ஹால்ல வச்சு இது என்ன முதல்ல தள்ளி போங்க…”என்றவாறு அவன் மார்பில் கை வைத்து தள்ள.. அந்த கையை விடாமல் பற்றியவன்…”ஓ என் டார்லிக்கு ஹால்தான் பிரச்சினையா..? அப்ப சரி.. என்றவன்.. அவளை கைகளில் அள்ளி கொண்டு தங்கள் அறைக்கு தூக்கி சென்று இறக்கி விட்டவன் அபி இருந்த கோலத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தான்.. “எதுக்கு சிரிப்பு..? என்றவளிடம்.. இப்ப எனோட சேர்ந்து நீயும் அழுக்காகிட்ட டார்லி.. ”சோ நாம ரெண்டுபேரும் சேர்ந்து குளிப்போமா..?” கண்ணடித்து கேட்டவனை..

தீயாய் உறுத்து விழித்தவள்..”உன் கண்ணை பிடுங்கி கையில கொடுத்துருவேண்டா.. இப்படி பேசற வாயை.. ஊசி வச்சு தச்சிருவேண்டா.” அவனை மிரட்ட.. ஏனோ வம்சிக்கு அவளின் மிரட்டலில் சிரிப்பாக வர வாய்விட்டு சிரித்தவனை.

”யூ ராஸ்கல்..”  என   

“தங்க் யூ..” என்றான்

“யூ ஃப்ராடு..”என்று துள்ள

“தங்க் யூ சோ மச் டார்லி..” என்று அவளின் கன்னத்தை தட்டிவிட்டு.. குளிக்க செல்ல..அவன் உள்ளே சென்றுவிட்ட்தை அறிந்து, தங்கள் அறையில் இருந்த பால்கனிபக்கம் வந்தவள்..  இவ்வளவு நேரமும் அவனின் குறும்பை   மனதிற்குள் ரசித்திருந்தவள் இப்பொழுது அடக்கமாட்டாமல் சிரித்தாள்..

நிமிர்ந்து வானத்தை பார்த்து..’அம்மா… அப்பா..  நான் இப்ப ரொம்ம்ம்ப சந்தோசமா இருக்கிறேன்… ரொம்ப பாதுகாப்பா இருக்கிறேன்.. மஞ்சுவோட.. அம்மா..அப்பா…நீங்க மஞ்சுவை பத்தி கவலை படாதீங்க மஞ்சுவை உயிரா பார்த்துக்க என் வசி வந்துட்டார்.. உங்க எல்லாருடைய ஆசீர்வாதமும் அவருக்கே கொடுத்திருங்க..அவங்க எப்பவும் நல்லா இருக்கணும்..” என்று வேண்ட.. எங்கிருந்தோ வந்த ஒரு துளி நீர் அவள் முகத்தில் பட்டு தெறிக்க.. ’மழைவருகிறது போல’ என்று நினைத்து கண்களை திறந்தவள்.. அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால்..,

அதை தன் பெற்றவர்களின் ஆசீர்வாதமாகவே கருதினாள்.. அதில் உடல் சிலிர்க்க புன்னகையுடன் நின்றிருந்தவளை.. அப்பொழுதுதான் குளித்து வந்த வம்சி பார்க்க…அந்தி சாயும் நேரம் சூரியன் தன் செங்கதிர்களை வீசி கொண்டிருக்க.. அது அவள் அணிந்திருந்த் மூக்குத்தியில் பட்டு அந்த செம்மை அவளின் முகத்தில் ஜொலிக்க ஒரு தேவலோக கன்னியாக அவனின் கண்களுக்கு தெரிந்தாள்..

அவள் லேசாக அசையும் போதேல்லாம்.  சுரியனின் ஒலி பட்டு மின்னும் அவள் மூக்குத்தியின் ஜொலிஜொலிப்பை நாளெல்லாம் பார்த்துகொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றியது அந்த காதல் கள்வனுக்கு.. மெதுவாக அவள் அருகே வந்தவன்.. அவள் எதிர்பாராத வேளையில் அந்த மூக்குத்தியின் மேல அழுத்தமாக இதழ் பதித்து நிமிர்ந்தான்..

அதுவரை தன் மோன நிலையில் இருந்தவள்.. அவனின் முத்தத்தில் சுயநினைவடைந்து அவனை முறைத்து பார்க்க.. “ஹி..ஹி..உன்னை முதன் முதாலா நம்ம ஆஃபிஸ்ல பார்த்தப்ப.. உன் மூக்குத்திதான் என்னைய ஃப்ர்ஸ்ட் இம்ப்ரெஸ் செஞ்சது… அப்பவே இதை தொட்டு பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு….” மீண்டும் தன்னை அறியாமல் தன் மனதிலிருப்பதை சொல்லியவன் அதை மிருதுவாக வருடி கொடுக்க.. அவன் சொன்ன செய்தியில் அவளின் உள்ளம் துள்ள.. அவன் வருடியதில் தன்னை இழக்க ஆரம்பித்தவள்.. ’அடி ரஞ்சி மயங்கிறாத… இன்னும் ஒருவாரம் பொறுத்துக்க… உன் மனசுல இருக்கிற காதலையும், மஞ்சரி பற்றிய உண்மையையும் சொல்லிட்டு.. அப்பறம் மொத்தமா உன்னை கொடு..’ அவளின் மனது எச்சரிக்க.. உடனே தன்னை சுதாரித்து கொண்டு அவனை தள்ளிவிட்டு “எதுவா இருந்தாலும் தொடாம பேசுங்க” என்றுவிட்டு அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள்..

’இவ்வளவு நேரம் அமைதியா இருந்துட்டு இப்ப என்ன..?’ என்று குழம்பியவன் அவளிடம் “என்னாச்சு ரஞ்சி..?” என்றவாறே நெருங்கிய்வனை அவனின் செல் ஒலி கலைக்க.. அதை எடுத்து பார்த்தவன் ஷ்யாம் அழைத்திருந்தான்.. “மச்சி நான் ஆஃபீஸ் கிளம்பறேண்டா..அந்த ஜெர்மன் கம்பெனி ஒப்பந்த விசயமா சில ஃபைல் செக் செயணும் நீ ரெஸ்ட் எடு நான் கிளம்பறேன் அதை சொல்லத்தான் கால் செஞ்சேன்..” என்றுவிட்டு போனை அணைக்க போனவனை தடுத்த வம்சி.. தானும் வருவதாக சொல்லிவிட்டு போனை அணைத்தான்..

உடை மாற்றிவந்த வம்சி அபியிடம் ஆஃபீஸ் கிளம்புவதாக சொல்லவும்..’இந்த நேரத்திலேயா..?என்றவளிடம்..”ம்ம் என்ன செய்றது முதலாளிக்கு நேரம் காலம் பார்க்காம வேலை செஞ்சாதான்.. அவங்க வெற்றியை தக்க வச்சுக்க முடியும்..” என்றவனை ஒருமாதிரி பார்த்தவள்.. “சரித்திரம் திரும்புதா..?” என கேட்க.. முதலில் அவள் கேட்டது புரியாமல் விழித்தவன் புரிந்த பின்பு..

“எனக்கு என் குடும்பம்தான் முல்ல.. அப்பறம்தான் தொழில்.. இதை அடையறதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்.. அவ்வளவு சீக்கிரம் இதை உடைய விடமாட்டேன்..”தீவிரமாக கூற..

அபிக்குதான் என்னவோ போல் ஆகிவிட்டது..”சே என்ன வார்த்தை சொல்லிட்டேன்..  அவர் விளையாட்டுகு சொன்னதை சீரியஸ்ஸா எடுத்து பேசிட்டேனே ஐய்யோ அவர் மனசு என்ன பாடுபட்டிருக்கும்’ தன்னையே நொந்து கொண்டு.. வேகமாக அவனின் கையை பற்றி..”சாரி..சாரி.. ரொம்ப சாரிமா.. நான் ஏதோ யோசனையில அப்படி சொல்லிட்டேன்.. நீ அப்படி இல்லைன்னு தெரிஞ்சும் ஏதோ உளறிட்டேன்..என்ன மன்னிச்சிருங்கப்பா..” தேம்பிகொண்டே மன்னிப்பை வேண்ட,,

அவள் வேதனை படுவதை தாங்க முடியாமல்…தோளோடு அணைத்து கொண்டவன்..”சரி விடுடா… நான் எதுவும் மனசுல நினைக்கலை.. நான் வர கொஞ்சம் லேட் ஆகும் நீயும் பேபியும் சாப்பிட்டு தூங்குங்க..” என்றவன் வெளியே செல்ல..”நீங்க சாப்பிடாம போறிங்க.. வாங்க உங்களுக்கு சாப்பாடு எடுத்துவைக்கிறேன்” என்றுவிட்டு முன்னே செல்ல.. வம்சி சற்றுமுன் அவள் கேட்டதை மறந்து சந்தோசமாக அவள் பின் சென்றான்..

டைனிங்க் டேபிளில் ஷ்யாம், மஞ்சரி, வம்சி மூவருக்கும் உணவை பரிமாற.. வைஷூ ஸ்ரீயை கவனித்து கொண்டிருந்தாள்.. அபி வைஷுவிடம்..”மாமா எங்க வைஷு அவர் சாப்பிட வரலை என்று இயல்பாக கேட்க.. அவங்க சாப்பிட்றதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் அண்ணி..” எனவும்.. ம்ம் என்றவள்..

மூவரும் சாப்பிட்டு முடித்ததும் வம்சியும், ஷ்யாமும் அலுவலகம் கிளம்ப.. மஞ்சரியும் தானும் வருவதாக மூக்கை சுருக்கி தலை சரித்து பாவம்போல கேட்க.. அதில் தன்னை தொலைத்த வம்சி..அவளையும் கூட அழைத்து சென்றான்.. நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும் சீக்கிரம் தூங்க வைக்கணும் பா..” என்று மறுத்த அப்யிடம்.. நான் தூங்க வைக்கிறேன் ரஞ்சிமா.. நீ சாப்பிட்டு படுங்க..” என்றவேறே மூவரும் வெளியேறினர்..

அலுவலகத்திற்கு வந்த வம்சி அங்கிருந்த ஒரு நோட்டை எடுத்து மஞ்சுவிடம் கொடுத்து ட்ராயிங் வரைய சொல்லிவிட்டு இருவரும் தங்கள் வேலையில் மூழ்கினர்..ஏதோ ஒரு ஃபைலை எடுப்பதற்காக.. எழுந்த வம்சி அந்த ஃபைலை எடுக்க அதனருகில் இருந்த இன்னொரு ஃபைல் கீழே விழ.. அதை எடுத்து பார்த்தவனுக்கு முகத்தைல் புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள.. அந்த ஃபைலில் இருந்த புகைபடத்தை ஆசையாக வருடி கொடுத்து.. அதிலிருந்த குறிப்பை படித்து பார்க்க. முகத்தில் குழப்பம் மேலிட..

“பேபி. அன்னைக்கு அபிம்மாவோட அப்பா அம்மாவைபத்தி…என்ன சொன்னடா.. அப்பா நான் மறந்துட்டேன்..” என்று கேட்க.. அவனின் கேள்வியில் ஷ்யாம் திடுக்கிட்டு பார்க்க அபிம்மாவோட அப்பாவும், அம்மாவும் கூட சாமிகிட்ட போய்ட்டாங்க.. அதோட என் அப்பாவும், அம்மாவும் சாமிக்கிட்ட போய்ட்டாங்க நாங்க முதல்ல அங்க ஊட்டில இருந்தோமா அப்பதான் மண்ணு நிறயா வந்து..எங்க அப்பா அம்மாவயும், அபிம்மாவோட அப்பா அம்மாவையும்  சாமிக்கிட்ட கூட்டிட்டு போய்ருச்சு..” என்று சொல்ல..  வம்சி தன் கையிலிருந்த ஃபைலை நழுவவிட்டான்….

தொடரும்…………..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

13.கொள்ளை போன இதயம்

நித்தமும் தவிக்கிறேன் நீயின்றி 16