in

கோம்ஸ் – மழைக்காலம்(பாகம் 1) – மழை 16 – 20

மழை 16:

மாலினி, ஷங்கர் கூல் டோவ்ன்.. கேன்டீன் போகலாம்”

 

“staffs பார்த்தா” என்று தயங்கவும், மாலினி, நந்தினியும் பிருந்தாவும் அங்க தான் இருக்காங்க.. எனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நம்ம பசங்க எப்படியும் அங்க தான் இருப்பாங்க.. ஸோ நோ ப்ராப்ஸ்

ஷங்கர் அமைதியாக வரவும் மாலினி, உனக்கு இவ்வளவு கோபம் வருமா?”

 

இது தான் முதல் முறை நான் கோபப் படுறது”

மாலினி சிறு ஆச்சரியத்துடன் பார்க்கவும், அவன், நிஜம் மாலினி” என்று கூறி புன்னகைத்தான்.

மாலினி குறும்பு சிரிப்புடன், இப்ப மட்டும் ஏன் இவளோ கோபம்?”

 

ஏதோ சொல்லவந்த ஷங்கர் மாலினியின் முகத்தை பார்த்ததும் சிறு வெக்கத்துடன் சிரித்தான்.

ஹே பசங்க கூட வெக்கப் படுவீங்களா?”

 

மாலினி.. மோனி………….” என்று தயங்கவும், மாலினி, அன்னைக்கு மோனி கிட்ட ப்ரொபோஸ் பண்ணியா?”

ஷங்கர் இல்லை என்று தலையை ஆட்டினான்.

மாலினி, ஹ்ம்ம்.. இப்ப உன் காதலை சொல்லாத.. அதை புரிஞ்சிக்கிற பக்குவம் அவளுக்கு இல்லை.. அது மட்டுமில்லை.. இது காதல் தானா னு நீ தெளிவா அனலைஸ்……………”

 

இதில் நான் தெளிவா தான் இருக்கிறேன்”

 

மாலினி புன்னகைத்தாள். ஷங்கர், ரியலி மாலினி.. நான் என் அம்மா கிட்ட கூட பேசிட்டேன்”

 

அட பாவி.. எப்போ பேசினஅம்மா என்ன சொன்னாங்க?

 

அது.. முந்தாநேத்து தான் சொன்னேன்.. அம்மா எதிர் பார்த்தேன்‘ னு சொன்னாங்க”

 

ஸோ வீட்டில் முழு நேரமும் மோனி புராணம் பாடியிருக்க!”

 

ஷங்கர் சிரித்தான். பிறகு சிறு தயக்கத்துடன், மாலினி அன்னைக்கு…………”

 

அது உங்க பெர்சனல்…………..”

 

இல்லை மாலினி உனக்கு தெரிறது தான் பெட்டெர்.. ஆர்லி என்ன சொல்லி மிரிட்டினா னு தெரியலை.. ஸோ உனக்கு தெரியனும்.. ஆனால் என்னை தப்ப நினைக்காத மாலினி ப்ளீஸ்..

(மாலினி மனதினுள் ‘என்ன பண்ணான்? ஏன் இப்படி தயங்குறான்.. பீல் பண்றான்?’ என்று கேட்டுக் கொண்டாள்)

நான் வேணும் னு செய்யலை.. என்னை அறியாம தான்.. 

அன்னைக்கு லஞ்ச் பிரேக்கில் மோகனா முகபாவங்களையே பார்த்துட்டு இருந்த நான் என்னையே மறந்த நிலையில் இருந்தேன்.. அப்போ அவ என்னை திரும்பி பார்க்கவும்………….. உதட்டசைவில் சின்னதா…… சின்னதா முத்தம் குடுத்துட்டேன்..”

 

மாலினி அதிர்ந்தாள்.

அட பாவி.. இப்படியா பண்ணுவ?”

 

ஷங்கர் பெரிதும் வருந்திய குரலில், இல்லை மாலினி.. எனக்கே தெரியாம தான்…

மோனி முகத்தில் பயத்தை பார்த்ததும் தான் என்ன பண்ணேன் என்பதே உரைத்தது.. அம் வெரி சாரி மாலினி..”

 

அதான் அன்னைக்கு என் கையை பிடிச்சுட்டு பயமா இருக்குது மாலு‘ னு சொன்னாளா! ஹ்ம்ம்.. சமாளிக்கிறேன்.. முதல்ல இந்த ஆர்லி என்ன மிரட்டினா னு கேட்டு தெரிஞ்சுக்கணும்”

 

அவ ஏன் மோனியை மிரட்டினா?”

 

கேன்டீன் வாசலுக்கு வந்திருந்தனர். மாலினி புன்னகையுடன், சிம்பிள் அவ உன்னை லவ் பண்றா” என்று கூறிவிட்டு தன் தோழிகள் இருந்த இடத்திற்கு சென்றாள்.

வாட்?” என்று ஷங்கர் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான்.

அப்போது அங்கே வந்த கிருஷ்ணமூர்த்தி அவனது தோளை தொட்டு, இங்கேயே நின்னு என்ன பண்ணிட்டு இருக்க?”

 

ஹ்ம்ம்.. மாலினி ஒன்னு சொன்னா.. அதான்…………” என்று இழுத்தான் ஷங்கர்.

என்ன சொன்னா?”

 

ஹ்ம்ம்.. அதை அப்பறம் சொல்றேன்.. வா உள்ள போகலாம்”

 

இருவரும் உள்ளே சென்றனர்.

இதே நேரத்தில் CSE வகுப்பறையில் –

ராஜசேகர் ஜெனிஷாவிடம் ஒரு பரிசு பொருளை நீட்டினான்.

ஜெனிஷா அதை வாங்காமல், என்ன இது?”

 

சின்ன கிப்ட்”

 

எதுக்கு?”

ராஜசேகர் கண்ணில் காதலுடன், உனக்கே தெரியும்”

 

அந்த பார்வையில் ஒரு நொடி தடுமாறினாலும் தன்னை சமாளித்து, ஒன்னும் அறியாதவள் போல், எனக்கு தெரியாதே! எதுக்கு இந்த கிப்ட்?”

 

ஜெனிஷா என்ன தான் சமாளித்தாலும் அவளை அறியாதவனா ராஜசேகர்!!!

ராஜசேகர் வழக்கமான வசீகர புன்னகையுடன், சரி.. எனக்கு குடுக்கணும் னு தோனுச்சு குடுக்கிறேன்”

ஜெனிஷா கண்ணில் சிறு புன்னகையுடன், எனக்கு வாங்கணும் னு தோனலையே”

 

 ஹ்ம்ம்.. என்ன பண்ணலாம்!” என்று சிறிது யோசிப்பது போல் பாவனை செய்தவன், ஆஷாவிடம், ஆஷ்.. உனக்கு வாங்க இஷ்டமா?”

 

ஜெனிஷாவை ஓரப்பார்வை பார்த்த ஆஷா புன்னகையுடன், ஓ எஸ்” என்று தலையை ஆட்டினாள்.

ஜெனிஷா எரிச்சலுடன், அடுத்தவங்களுக்கு வாங்கினதை உன் தலையில் கட்டுறான்.. நீயும் வெக்கமே இல்லாம இளிச்சுட்டு வாங்க போற”

 

ஆஷா, அடுத்தவங்களா! நீ அடுத்தவங்க இல்லையே ஜெனி.. ஸோ எனக்கு நோ ப்ராப்ஸ்.. நீ குடு சேகர்” என்று கையை நீட்டவும், ராஜசேகர் குறுஞ் சிரிப்புடன் ஜெனிஷாவை பார்த்தபடியே பரிசு பொருளை நீட்டவும், ஜெனிஷா அவசரமாக அதை பிடுங்கினாள்.

ராஜசேகர் அவளையே பார்த்தபடி சிரித்துக் கொண்டு நின்றான்.

ஆஷா, ஏய்! நீ எதுக்கு பிடுங்குறஅ………………..”

 

ஜெனிஷா ராஜசேகரை முறைத்துக் கொண்டே, அவன் எனக்கு தானே வாங்கிட்டு வந்தான்”

ஆஷா, அதை தான் வேண்டாம் னு சொல்லிட்டியே”

 

ஜெனிஷா இப்பொழுதும் ராஜசேகரை முறைத்துக் கொண்டே, இப்போ வேணும் னு சொல்றேன்”

 

ஆஷா, பதில் இங்க லுக் அங்கயா!”

 

உன் வேலையை மட்டும் பாரு”

 

தோடா.. உங்க போதைக்கு நான் ஊறுகாவா!!!”

 

ராஜசேகர் சிரிப்புடன் ஜெனிஷாவை பார்த்துக் கொண்டு இருக்க, ஜெனிஷா தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இவர்களை பார்த்த ஆஷா, ஹ்ம்ம்.. இனி என்ன பேசுனாலும் இதுங்க காதில் விழாது… ஒரு டயலாக் அ வேஸ்ட் பண்ணிட்டியே ஆஷ்!” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் வகுப்பறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆசிரியர்கள் யாரும் வருகிறார்களா என்று வெளியே நோட்டமிட தொடங்கினாள்.

ராஜசேகர் மென்மையான குரலில், பிரிச்சு பாரு”

 

ஜெனிஷா பிரித்து பார்த்தாள். உள்ளே அழகான பேனா இருந்தது.

ஜெனிஷாவிற்கு அது மிகவும் பிடித்திருந்தது, ஆனால் சிறிது சுருங்கி முகத்துடன் அதை அவனிடம் நீட்டி, பென் வேணாம்..” என்றாள்.

ஏன்?”

 

பென் வாங்கினா அவங்களுக்குள் பிரெண்ட்ஷிப் கட் ஆகிடும்”

 

ராஜசேகர் உல்லாசமாக சிரித்தபடி, பிரெண்ட்ஷிப் தானே கட் ஆகும்.. அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை.. நீயே வச்சுக்கோ” என்றான்.

ஜெனிஷா சிறு தடுமாற்றத்துடன் ராஜசேகரை பார்க்காமல், இல்ல.. அது…” இழுக்கவும்,

ராஜசேகர் சிறிது வாய்விட்டு சிரித்தான்.

அந்த பார்வைக்கும்  இந்த வெக்கத்துக்கு நாளைக்கு ஒரு ஸ்பெஷல் கிப்ட் தரேன்” என்று கூறி சென்றுவிட்டான்.

இரண்டு நொடிகள் கழித்து ஜெனிஷா நிமிர்ந்து பார்க்க, ராஜசேகரை வகுப்பறையில் காணாமல் ஏமாற்றமடைந்தாள்.

“நனநன நனா.. நனநன நனா..

ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா

ஒரே ஓர் ஆற்றில்.. ஒரே ஓர் ஓடம்..

தள்ளாடும் உன்னை தாங்குவானா!

வா என்று கட்டளையிட்டானா!

முத்தத்தில் கைவிலங்கிட்டானா!

கைதாகினாள் ஜெனிஷா…..” என்று பாஹுபலி திரைப்பட பாடலை ஜெனிஷாவிற்கு ஏற்ப மாற்றி ஆஷா பாட,

ஜெனிஷா, ஏய்!”

 

பாருடா… நம்ம ஜெனிக்கு கூட வெக்கம் வருது!!!”

 

ரொம்ப பண்ணாதடி”

 

ஆஷா மனநிறைவோடு சிரித்துவிட்டு, எப்பா உன்னை ஒத்துக்க வைக்குறதுக்குள்ள நான் என்னலாம் பண்ணவேண்டியது இருக்குது?”

 

நீ என்னடி பண்ணசும்மா கதை விடாத”

 

ஹ்ம்ம்.. ஏன் சொல்ல மாட்ட.. வேணும் னு உன்னை உஷுபேத்தி விட்டேன்.. அது கூட பரவா இல்லைஇப்போ நீங்க ரெண்டு பேரும் லவ்ஸ் பண்ண நான் காவல் காத்தேன் பாரு………….”

ஜெனிஷா அலட்டிக் கொள்ளாமல், இதை விட உனக்கு வேற என்ன வேலை?”

 

அடி பாவி! இதை தான் உன் வேலையை பாரு னு சொன்னியா”

 

பின்ன வேற என்ன னு நினைச்ச?”

படு பாவி.. பேச்சுகாது இல்லை‘ னு சொல்றியா?”

 

இப்போ ஒரு பேச்சு அப்பறம் ஒரு பேச்சு னு கிடையாது.. இந்த நிஷா எப்போதுமே ஒரே பேச்சு தான்”

 

ஹ்ம்ம்.. ஜெனி போய் நிஷா வா.. ரொம்ப தான் முன்னேற்றம்.. அது சரி எனக்கு ஒரு டவுட் மேடம்”

ஜெனிஷா ‘என்ன’ என்பது போல் பார்க்கவும் ஆஷா, கொஞ்ச நாள் முன் அவன் ஒரு லூசு.. நானாது லவ்-வாது‘ னு சொன்னது நீங்க தானே மேடம்!”

 

ஜெனிஷா தன் வலது காதை தேய்த்தபடி, நீ ஏதும் பேசுனியா ஆஷ்எனக்கு எதுவுமே கேட்கலையே!”

 

ஹ்ம்ம்.. எல்லாம் என் நேரம்.. காலக் கொடுமை”

 

இப்போ கூட ஏதும் கேட்கலை ஆஷ்”

 

ஹ்ம்ம்.. இன்னைக்கு சாயங்காலம் ENT கிட்ட கூட்டிட்டு போறேன்.. சரியாகிடும்”

 

என்ன சொல்றசாயங்காலம் என்னை தனியா போக சொல்றியா.. ஓகே டி”

 

கேன்டீன்:

மாலினி ஆர்லியுடன் நிகழ்ந்த உரையாடலை சொல்லி முடித்திருக்க, பிருந்தா கோபமாக, இன்னும் ரெண்டு அடி குடுத்திருக்கணும்.. மோனி குழந்தையை போய் என்ன பாடு படுத்தி இருக்கா..”

 

மாலினி, ஹ்ம்ம்.. மோனி CSE டிப்பார்ட்மென்ட் எடுத்துருக்கலாம்” என்று சோகமாக கூறினாள்.

நந்தினி, கவலைப் படாத மாலினி.. ஷங்கர் பார்த்துப்பான்”

 

மாலினி, ச்ச்.. அவன் எப்போதும் கூடவே இருந்து பார்த்துக்க முடியுமா?”

 

பிருந்தா, அதான் வாழ்க்கை முழுவதும்  பார்த்துக்க சார் ரெடியா இருக்காரே!!!”

[ஷங்கர் மோகனாவை காதலிப்பதை மட்டும் மாலினி கூறியிருந்தாள்.. அவனின் அந்தரங்கமான விஷயத்தை பற்றி சொல்லவில்லை]

மாலினி மெலிதாக சிரித்தாலும் அவள் முகத்தில் கவலையின் ரேகை ஓடியது. அவளது தோளை தட்டி நந்தினி, கவலைப் படாதே.. அவளுக்கும் பக்குவம் வரணும் தானே! அதுக்காக தான் கடவுள் இந்த விளையாட்டை நடத்துறாரோ என்னவோ!”

 

மாலினி வரவழைத்த சிறு புன்னகையுடன், ஹ்ம்ம்…” என்றாள்.

நந்தினி மாலினியிடம், அம்மா காலையிலேயே கல்யாண வீடு னு கிளம்பினதால் நான் லஞ்ச் கொண்டுவரலை.. நீ ஏன் கொண்டு வரலை?”

 

மாலினி சிறு புன்னகையுடன், அதே பெரிய கதை தான் காரணம்.. போனில் சொல்றேன் டா.. இங்க வேண்டாம்”

 

பிருந்தா, எப்போதும் சஸ்பென்ஸ் வைக்கிறதே உனக்கு வேலையா போச்சு”

 

மாலினி புன்னகைத்துவிட்டு, ஹ்ம்ம்.. சரி.. எனக்கு தக்காளி சாதம்.. நட்டீஸ் உனக்கு சாம்பார் சாதம் தானே!”

நந்தினி, நட்டீஸ் ஆ!”

 

“ஆமா எப்பவும் ஸ்வீட்டா பேசுறியே! என்னோட பேவரெட் சாக்லெட் நட்டீஸ் தான்..  அதான் நண்ட்ஸ் என்ற பெயரை நட்டீஸ் ஆ மாத்திட்டேன்”

 

நந்தினி புன்னகைக்க, பிருந்தா முறைப்புடன், “இவ எப்பயும் ஸ்வீட்டா பேசுறாளா? என்னிடம் கேட்டா மிர்ச்சி மிளகா னு தான் சொல்வேன்”

 

“அது உன் அனுபவம் இது என் அனுபவம்” என்று மாலினி புன்னகையுடன் கூறினாள்.

நந்தினி பிருந்தாவை முறைக்க அவள், “பாரு இப்போ கூட முறைக்க தான் செய்றா”

 

“நான் போய் வாங்கிட்டு வரதுக்குள் உங்க சண்டையை முடிங்க” என்றபடி எழ, நந்தினி, “இரு.. நானும் வரேன்” என்றபடி எழுந்தாள்.

 

ஓரடி எடுத்து வைத்த மாலினி திரும்பி, ஹே பிந்துஸ்…………”

 

பிருந்தா பல்லை கடித்துக் கொண்டு, “ஹே அப்படி கூபிடாத”

 

மாலினி, சரி..சரி..உனக்கு என்ன வேணும்?”

 

நான் தான் லஞ்ச் கொண்டு வந்துட்டேனே.. நீங்க ரெண்டு பேரும் தான் கொண்டு வரலை”

மாலினியும் நந்தினியும் பிருந்தாவை ஆச்சரியமாக பார்க்க, பிருந்தா, நீங்க தானே உடம்பை குறை னு சொன்னீங்க” என்று எழும்பாத குரலில் முணுமுணுக்க, மாலினி மயக்கம் வருவது போல் நடித்தாள்.

பிருந்தா மாலினியை முறைக்க, நந்தினி, என்னால நம்பவே முடியலை மாலு”

மாலினி, ஹ்ம்ம்.. என்னாலையும் தான்.. நம்பமுடியவில்லை.. வில்லை..வில்லை..” என்று பாடினாள்.

பிருந்தா, ஓவரா சீன் போடாம போய் வாங்கிட்டு வா.. எனக்கு பசிக்குது..”

 

மாலினியும் நந்தினியும் புன்னகையுடன் உணவை வாங்க சென்றனர். செல்லும் போது நந்தினி யோசனையுடன், நீ என்ன நினைக்கிற மாலு?”

 

எதை?”

 

பிருந்தா எடை குறைக்கும் எண்ணத்தை  பற்றி”

 

ஹ்ம்ம்.. யோசிக்க வேண்டிய விஷயம் தான்”

அப்பொழுது அங்கே வந்த ஸ்ரீராமன், மாலினி” என்று அழைக்க, மாலினி முகத்தில் எரிச்சலை காட்டி விலக, அவன், மாலினி ப்ளீஸ்.. எதுக்கு கோபப் படுற னு காரணத்தை சொல்லு”

மாலினி கோபமாக, உனக்கே தெரியும்”

 

சத்தியமா தெரியாது”

 

பொய்யா சத்யம் செய்றதுலாம் உனக்கு அவளோ ஈஸி யா இருக்குது!!!!”

 

ஸ்ரீராமனுக்கு உண்மையாவே மாலினியின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை. அவன், மாலினி ப்ளீஸ்” என்று உண்மையாகவே கெஞ்சவும்,

மாலினி, முந்தா நேத்து இவனிங் சேகர்சிவா கிட்ட என்ன சொன்ன?”

 

ஸ்ரீராமன் அதிர்ந்தான். நொடி பொழுதில் தன்னை சமாளித்துக் கொண்டு, ஒன்..னும்.. சொல்லலையே”

மாலினி அவனை கடுமையாக முறைத்தாள்.

“..”

ஓகே.. நேத்து ஏன் நீ வரலை?”

 

அது.. உடம்பு சரி இல்லை”

 

ஏன் சரி இல்லாம போச்சு?”

 

இதுக்குலாமா காரணம் இருக்கும்?”

 

சை.. உன் கூட பேசுறதே வேஸ்ட்” என்று கூறி மாலினி செல்ல, ஸ்ரீராமன் அவசரமாக, மாலினி.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ரொம்ப சாரி.. நான் பேசினது தப்பு தான்.. நான் ஏன் அப்படி………………..”

 

போய்டு.. இங்க இருந்து போய்டு.. இல்ல கேவலப் பட்டுபோவ..”

 

மாலினி ப்ளீஸ்.. நா………………………………….

மாலினி தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, சை” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

ஸ்ரீராமன் பசங்க இருந்த இடத்திற்கு சென்றான்.

[கேன்டீன் விதிமுறை பற்றி சொல்லவே இல்லையே.. இடது புறம் பசங்க என்றும் வலது புறம் பொண்ணுங்க என்றும் தான் அமர வேண்டும்.. பசங்க பொண்ணுங்க சேர்ந்து அமரவே கூடாது.. நடுவில் ஆசிரியர்களுக்கான இடம்.. இடது புறம் பொண்ணுக அமரக் கூடாது, அதே போல் வலது புறம் பசங்க அமரக் கூடாது]

ஸ்ரீராமன் வருவதை பார்த்த சிவகுரு சிரிப்புடன் சத்தமாக சக்திவேலிடம், அசிங்கப் பட்டான் ஆட்டோக்காரன்” என்று சந்தானம்(நகைச்சுவை நடிகர்) போல் கூறினான்.

ஸ்ரீராமன் சிவகுருவை முறைத்து மனதினுள் கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டே வேறு மேஜையில் அமர்ந்தான்.

சிவகுரு சிரிப்பின் நடுவே, ஐயோ ஐயோ” என்று இப்பொழுது வடிவேல்(நகைச்சுவை நடிகர்) போல் கூறினான்.

ஸ்ரீராமன் எழுந்துவந்து, டேய் என்ன நக்காலா?”

 

ஆமா அதுக்கு இப்போ என்னங்கிற?”

 

ஸ்ரீராமன் குரலை உயர்த்தி, டேய்!”

சிவகுரு வலது கையை ஆட்டி, போடா.. போடா..” 

 

ஸ்ரீராமன் பல்லை கடித்து, உன்னை” என்று கூறி சிவகுரு சட்டையை பிடிக்க,

சிவகுரு அலட்டிக் கொள்ளாமல் அவனது கையை தட்டி விட்டு, சும்மா வெட்டி சீன் போடாத.. அன்னைக்கு வாங்கினது பத்தாதா!!!”

கிருஷ்ணமூர்த்தி, குரு கேன்டீனில் எதுக்கு சண்டை!” என்று கூறி இருவரையும் அடக்கினான்.

மாலினி தங்கள் மேஜைக்கு சென்றதும், பிருந்தா, என்னடி ஒன்னும் வாங்காம வர?”

 

மாலினி எதுவும் பேசவில்லை, கோபமும் எரிச்சலுமாக இருந்தாள்.

பிருந்தா, என்னாச்சுடி?”

 

மாலினி தண்ணீரை எடுத்து குடித்து தன்னை நிதானத்திற்கு கொண்டு வர முயற்சித்தாள். நந்தினி இரண்டு தட்டுக்களுடன் வந்தமர்ந்தாள்.

பிருந்தா ஏதோ கேட்க வாய் திறக்கும் முன் நந்தினி கறாரான குரலில், சாப்பிடு பிருந்தா.. அப்பறம் பேசலாம்” என்றவள், மாலு உனக்கும் சேர்ந்து தான் சொல்றேன்”

 

மாலினி, ஹ்ம்ம்..” என்று கூறி உண்ணத் தொடங்கினாள்.

பிருந்தாவிற்கு தான் விஷயம் என்னவென்று தெரியாமல் தலை வெடித்துவிடும் போல் இருந்தது, உணவு உள்ளே இறங்கவே இல்லை. தன்னை ஒருவாறு சமாளித்துவிட்டு நிமிர்ந்த மாலினி பிருந்தாவின் இந்த அவஸ்த்தையை பார்த்து சிரித்துவிட்டாள்.

பிருந்தா கெஞ்சலாக, இப்போ எதுக்கு டி சிரிக்கிறஇதையாது சொல்”

 

மாலினி சிரிப்புடன், ஹ்ம்ம்.. நீ சாப்பிட்டதுக்கு அப்பறம் சொல்றேன்”

 

பிருந்தா மாலினியை முறைக்க, நந்தினி மாலினியிடம், எப்படி டி! இபப்டி டக்குனு ரிலாக்ஸ் ஆகுற?”

மாலினி சிறு புன்னகையுடன், அப்பா கொடுத்த ட்ரைனிங்” என்றாள்.

பிருந்தா, ஹே இப்போ என்ன விஷயம் னு சொல்ல போறியா இல்லையா?”

 

மாலினி, சொல்லலைனா என்ன மேடம் செய்றதா ஐடியா?”

 

உன் முதுகுல ரெண்டு போடுவேன்”

 

ரெண்டு தானே.. தாராளமா ரெண்டு னு எழுதிக்கோ”

 

எப்பா.. உன் கடி தாங்கலை”

 

ஓகே.. ஓகே.. விஷயத்தை சொல்றேன்….” என்று கூறி நடந்ததை சொன்னாள்.

பிருந்தா, அது ஒரு ஜென்மம் னு நீ நின்னு வேற விளக்கம் குடுத்தியாக்கும்” என்றவள் நந்தினி பக்கம் திரும்பி, நீ என்ன பண்ணிட்டு இருந்தஇவளை இழுத்துட்டு வரவேண்டியது தானே”  

“சரி விடு” என்று அவளை சமாதானம் செய்து உணவை முடித்துக் கொண்டு வகுப்பிற்கு சென்றனர்.

மாலையில் அருணாசலத்திற்காக மாலினி கல்லூரி வாசல் அருகே இருந்த மரத்தடியில் தனியாக நின்று காத்துக் கொண்டிருந்த போது, பின்னால் இருந்து யாரோ மாலினி‘ என்று அழைக்கவும் திரும்பி பார்த்தவளின் முகம் கோபத்தில் சிவந்தது.

யாரு னு யோசிக்கிறீங்க? ஸ்ரீராம் னு தானே! அது தான் இல்லை, அழைத்தது சீனியர் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் மாலினி அருகே வந்து, குற்ற-உணர்வில் எழும்பாத குரலில் அவள் முகத்தை பார்க்கும் துணிவின்றி தரையை பார்த்து, அம் டெரிபிலி சாரி மாலினி..” என்றான்.

மாலினி ஆச்சரியமாக பார்த்தாள், அதே நேரத்தில் அவள் மனத்தில் ‘நடிக்கிறானோ!’ என்ற சிறு சந்தேகமும் இருந்தது.

கிருஷ்ணன், பசங்க ஏத்திவிட்டதுல தான்.. ச்ச்.. எனிவே தப்பு தப்பு தான்.. அங்கிளுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன் னு சொல்லிடு.. இனி என்னால் உனக்கு கண்டிப்பா தொந்தரவு இருக்காது.. ஒன்ஸ் அகேன் சாரி மாலினி.. ஏதாவது உதவி தேவைபட்டால் உனக்கு விருப்பம் இருந்தால் தயங்காம கேள்” என்று கூறி மாலினியின் பதிலை எதிர் பாராமல் சென்றுவிட்டான்.

எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று தானே யோசிக்கிறீங்க! எப்படி என்று கொஞ்சம் டார்டாயிஸ் காயில் சுத்திப் பார்ப்போம் வாங்க…………..

முன்தினம் இரவு வெற்றிவேல் மிரட்டலுக்கு பிறகு கிருஷ்ணன் வீட்டிற்கு தான் மூவரும் சென்றனர்.

அவர்கள் செல்லவும் கிருஷ்ணனின் நண்பன் ராஜீவ் எதிரே வந்தான்.

(ராஜீவ்-இரண்டாம் ஆண்டு IT மாணவன் – கல்லூரியின் முதல் நாள் பார்த்தோமே!

மாலினி ‘அண்ணன்’ என்று அழைத்து பல்பு கொடுத்தாளே!)

கிருஷ்ணனின் தோற்றத்தை பார்த்த ராஜீவ் அவசரமாக அவன் அருகே சென்று, டேய்.. என்னாச்சு?”

 

கிருஷ்ணன், நீ எங்க இங்க?”

 

உன்னை பார்க்க தான் வந்தேன். நீ இல்லைனதும் வீட்டுக்கு கிளம்புனேன்.. உனக்கு என்ன ஆச்சு?”

 

கிருஷ்ணன் பதில் சொல்ல முடியாமல் தலை குனிய, ராஜீவ், கிருஷ்ணா என்ன ஆச்சு?”

 

வீடுக்குள்ள போய் பேசலாம் டா”

 

ஹ்ம்ம்.. சரி வா”

 

கிருஷ்ணன் நடந்ததை சொல்லி முடித்ததும் ராஜீவ் கோபமாக, என்ன காரியம் பண்ணியிருக்க கிருஷ்ணா! இந்த விஷயம் உன் அப்பா அம்மாவுக்கு தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாங்க னு யோசிச்சியாமாலினி அப்பா போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்து இருந்தால் இந்நேரம் நீ ஜெயிலில் தான் இருக்கணும்.. உன் எதிர் காலமே அவுட்.. இவன்க தான் கிறுக்குத் தனமா ஏதோ சொன்னான்க னா உனக்கு அறிவு இல்லை?”

மற்ற இருவரும், டேய்.. அவளை சும்மா விட சொல்றியா?”

 

ராஜீவ் அவர்களை முறைத்தான், பிறகு கிருஷ்ணனை பார்த்து, கிருஷ்ணா கிளம்பு” என்றான்.

கிருஷ்ணன் அவனை பார்க்கவும், ராஜீவ், நீ இந்த நிலமையில் தனியா இருக்க வேண்டாம். என் வீட்டிற்கு வா”

அந்த இருவரில் ஒருவன், நாங்க தான் இருக்கோமே டா”

 

ராஜீவ், அது தான் என் பயமே! கிருஷ்ணா நீ கிளம்பு” என்றவன், “இரு இரு.. முதலில் உன் காயத்திற்கு மருந்து போடுறேன்.. டெட்டால் ஆர் சவ்லான் இருக்கா?”

 

கிருஷ்ணன், ஹ்ம்ம்.. அந்த ஸெல்ப்” என்று கூறி ஒரு இடத்தை காட்டினான்.

ராஜீவ் அதை எடுத்து வந்து மூவரின் காயங்களுக்கும் தடவினான். பிறகு, கிருஷ்ணா என் பைக் இங்கேயே இருக்கட்டும்.. உன் காரிலேயே போய்டலாம்.. நான் ஓட்டுறேன்..” என்றவன் அந்த இருவர் பக்கம் திரும்பி, உங்களை எங்கே ட்ராப் பண்ணனும்?”

ஒருவன் கோபத்துடன் “ராஜீவ் நீ பண்றது சரி இல்லை”

 

ராஜீவ், எது சரி எது தப்பு னு  எனக்கு தெரியும்.. ஐயோ பாவம் னு தான்  ட்ராப் பண்றேன் னு சொன்னேன்.. ரொம்ப பேசுன எப்படியோ போ னு கிளம்பிட்டே இருப்பேன்”

மற்றொருவன், டேய்.. ஓவரா பேசாத.. டேய் கிருஷ்ணா உனக்காக தானே நாங்க வந்தோம்.. இவன் என்னவோ பேசுறான் நீயும் அமைதியா இருக்க?” என்று கிருஷ்ணனிடம் பாய,

கிருஷ்ணன் பதில் சொல்லும் முன் ராஜீவ், நீங்க எதுக்காக வந்தீங்க னு எனக்கு தெரியும் டா.. கிருஷ்ணன் என்னோடு வரான். உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ போடா”

மற்றொருவன் ராஜீவ் சட்டை பிடிக்க கிருஷ்ணன், போதும் டா.. பட்டது போதும் டா.. கிளம்புங்க”

மற்றொருவன், கிருஷ்ணா நீ பின்னாடி பீல் பண்ணுவ”

 

கிருஷ்ணன் சிறு விரக்த்தியுடன் உதட்டை சுளித்தான். அந்த இருவரும் ராஜீவை முறைத்துவிட்டு கிளம்பினார்கள்.

கிருஷ்ணன், அதான் அவன்க கிளம்பிட்டாங்களே  நான் இங்கேயே இருந்துக்கிறேன் ராஜ்”

 

டிரஸ் மாத்திட்டு வா.. கிளம்பலாம்”

 

கிருஷ்ணன் அப்படியே அமர்ந்திருக்கவும் ராஜீவ் அவன் அருகில் சென்று அமர்ந்து அவன் கைகளை பற்றி, கிருஷ்ணா.. நடந்ததையே யோசிச்சிட்டு இருக்காத.. அதை விட்டு வெளியே வா.. ஏதோ கெட்ட நேரம்.. தப்பான சகவாசம்.. விடு டா..”

 

கிருஷ்ணன் அமைதியாகவே இருந்தான்.

ராஜீவ், என்ன நினைக்கிற டா..”

 

“..”

 

கிருஷ்ணா.. ஸ்பீக் அவுட்..”

கிருஷ்ணன் கண்கள் கலங்க, என் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா.. ச.. எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் டா.. அவங்க மட்டும் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்து இருந்தா”

 

தப்பை உணர்ந்துட்ட தானே.. விடு டா”

 

நாளைக்கு காலேஜில் தெரிய வந்தா”

தெரியாது”

 

எப்படி சொல்றஇவன்க சும்மா இருப்பான்களா?”

 

 இந்த விஷயம் லீக் ஆச்சுனா அவன்க பெயரும் தான் வெளியே வரும் ஸோ அமைதியா தான் இருப்பான்க”

 

எனக்கு அப்படி தோணலை.. அங்கேயே என்னை மாட்டிவிட்டுட்டு அவன்க எஸ்கேப் ஆக தான் ரெடியா இருந்தானுங்க”

 

ஹ்ம்ம்.. பார்க்கலாம்.. மாலினி அப்பா, போலீஸ் னு இன்வால்வ் ஆகியிருக்கிறதால் அமைதியா தான் இருப்பான்க னு நினைக்கிறேன் “

 

ஹ்ம்ம்.. அவன்க சொல்லும் போது கரெக்ட் னு தான் தோனுச்சு டா.. பட் இப்போ தான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணியிருக்கேன் னு புரிது டா.. 

மாலினி சேர்மன் கிட்ட பேசும் போது என்னை மாட்டிவிடுறது போல் கூட பேசலை டா.. ஜஸ்ட் நான் ப்ரொபோஸ் பண்ணேன் அவ ரிஜெக்ட் பண்ணா னு டிசென்ட்டா சொல்லிட்டு விட்டுட்டா டா.. குடிச்சுட்டு இவன்க பேச்சை கேட்டு.. சை..” 

விடு கிருஷ்ணா.. அவன்க குணம் அது”

 

காரில் வரும் போது கூட ஏதோ சொன்னான்க பட் போலீஸ் ஷாக்-கில் இருந்ததால் அதை கவனிக்கலை.. எப்படி டா அவன்க கிட்ட இருந்து விலகுறது னு யோசிச்சுட்டு இருந்தேன் டா.. தேங்க்ஸ் டா” என்று கூறி ராஜீவை அணைத்துக் கொண்டான் கிருஷ்ணன்.

ராஜீவ் கிருஷ்ணனின் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்தான்.

எப்பொழுதும் விளையாட்டுத் தனமாக இருக்கும் ராஜீவின் மறுபக்கத்தை பார்த்த கிருஷ்ணன் அன்று தான் ராஜீவின் நட்பை முழுமையாக புரிந்து கொண்டான்.

இந்த கிருஷ்ணன் இயல்பில் நல்லவன் தான் ஆனால் தவறான சகவாசத்தால் தவறான பாதையில் செல்ல இருந்தான், ராஜீவின் நட்பு அவனை மீண்டும் நல்வழி படுத்தியது.

ஹ்ம்ம்.. இந்த கல்லூரி பருவத்தில் நல்ல நட்பும், பெற்றோரின் கவனிப்பும் ரொம்ப முக்கியம்.. தவறான சகவாசத்தால், ஒரே ஒரு செயலால், ஒருவனின் வாழ்க்கையே மாறிவிடும் என்பதற்கு இந்த கிருஷ்ணன் ஒரு உதாரணம்.

இவனது நல்ல காலம், இவன் தப்பி விட்டான் ஆனால் இன்றும் எத்தனையோ மாணவர்கள்/மாணவிகள் தவறான சகவாசத்தால் தவறான வழியில் சென்று, நல்வழி திரும்பும் வாய்ப்பையும் தவறவிட்டுவிட்டு பின்னாளில் வருந்துகிறார்கள். தங்களை வருத்துவதோடு தங்கள் பெற்றோர்களையும் வருத்தி, தலை குனிய செய்கிறார்கள்.

என்ன பா.. ஓவரா கருத்து சொல்லிட்டேனா! ஓகே வாங்க நாம நிகழ் காலத்திற்கு செல்வோம்…………….

சீனியர் கிருஷ்ணன் செல்லவும், அங்கே அவசரமாக வந்த கிருஷ்ணமூர்த்தி, என்ன மாலினி.. எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டான்.

மாலினி முகம் திருப்ப, கிருஷ்ணமூர்த்தி, கோபத்தை அப்பறம் காட்டிக்கலாம்.. இப்ப அவன் என்ன சொன்னான் னு சொல்லு”

மாலினி கிருஷ்ணமூர்த்தியை பார்த்தாள் .

நான்  காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டேன் னு நம்புறியாஇல்லையா?”

 

மாலினி உணர்ச்சியற்ற குரலில், அவன் எதுவும் பிரச்சனை பண்ணலை.. சாரி சொன்னான்.. அவனால் இனி பிரச்சனை இருக்காது னு சொன்னான்.. என் அப்பா கிட்ட தேங்க்ஸ் சொல்ல சொன்னான்.. ஏதாவது உதவி தேவைனா கேளு னு சொல்லிட்டு போய்ட்டான்”

 

கிருஷ்ணமூர்த்தி சிறு யோசனையுடன் “ஹ்ம்ம்.. ஓகே.. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு”

 

ஹ்ம்ம்..”

 

எனக்கு தெரிஞ்சவரை நீ ஒருவரை கரெக்ட்-டா தான் ஜட்ஜ் பண்ணுவ.. நீ என்ன நினைக்கிற?”

ஹ்ம்ம்.. நடந்ததுக்கு பீல் பண்றது போல் தான் தெரியுது.. குற்ற-உணர்வவில் பேசினது போல் தான் தெரிஞ்சுது.. பார்க்கலாம்”

 

தேங்க்ஸ்”

 

உன்னை நம்புறேன் னு சொல்லாம சொன்னதுக்கா? ஆனா என் கோபம் அப்படியே தான் இருக்குது”

 

கிருஷ்ணமூர்த்தி மெலிதாக புன்னகைத்தான். மாலினி முறைத்தாள்.

கிருஷ்ணமூர்த்தி, விட்டா எரிச்சுடுவ போல.. சரி.. மார்னிங் என்ன கேட்க வந்த?”

 

ஏன்அது தெரிஞ்சு தான் முகத்தை திருப்புனியாக்கும்?”

 

கிருஷ்ணமூர்த்தி சிறு புன்னகையுடன், என் காயத்தை பற்றி கேட்க தானே வந்த?”

 

மாலினி ஆச்சரியமாக பார்க்க, கிருஷ்ணமூர்த்தி விரிந்த புன்னகயுடன், என்ன மேடம் சரியா சொல்லிட்டேனா?”

 

அதுக்கு எதுக்கு திரும்புன?”

 

தனியா கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்.. கிளாஸ்ஸில் அத்தனை பேர் முன்னாடி கேட்கிற! நாமோ இதுவரை பேசினது கூட இல்லை.. ஸோ…. என் காயத்தை பற்றி உனக்கு எப்படி தெரியும்என்ன நடந்துதுஎன்ன நடக்குதுனு பசங்க கேட்டாயோசிக்க வேண்டாமா?”

ஓ “

 

என்ன ஓ?”

 

யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. சாரி”

 

சரி விடு..”

 

“ஆனா ஒன்னு”

 

“என்ன?”

 

“இந்த விஷயத்தில் என்ன நடந்தது னு மற்றவர்களை பேச விட கூடாது தான் ஆனா பொதுவா என்ன நடக்குது னு பேசுவாங்களோ னு பயந்து போலியா இருக்க என்னால் முடியாது.. நான் நானா தான் இருப்பேன்.. நமக்குள் இருக்கும் நட்பை ஒவ்வொருத்தர் கிட்ட போய் விளக்கம் குடுக்கணும்……………”

 

“அவசியம் இல்லை தான்..” என்று கிருஷ்ணமூர்த்தி முடிக்கவும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவளின் முகம் புன்னகையில் மலர்ந்தது. அவனும் புன்னகைத்தான்.

 

மாலினி, மௌனகுரு எங்கநீ மட்டும் தனியா வர?”

 

அவனும் நானும் தான் வந்துட்டு இருந்தோம்.. கிருஷ்ணனை பார்த்ததும் நான் அவசரமா வந்தேன்..” என்று கூறி திரும்பி பார்க்க, புழா இவர்கள் அருகே வந்து கொண்டிருந்தான்.

மாலினி, ஹ்ம்ம்.. தேங்க்ஸ் சொல்ல மாட்டேன்.. இது உன் கடமை..”

 

நான் கேட்கலையே!”

 

கேட்டாலும் கிடைக்காது”

கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தான். புழா இவர்கள் அருகே வந்திருந்தான்.

மாலினி புன்னகயுடன், ஹாய் புழா” என்றாள் .

புழா சிறு புன்னகையுடன் , ஹாய்”

 

மாலினி, ஒழுங்கா சிரிச்சா குறைந்திர மாட்ட.. ஸோ முழுசா சிரி”

 

புழா மென்மையாக புன்னகைத்தான்.

மாலினி கிருஷ்ணமூர்த்தியிடம், உன்னிடமாவது பேசுவானா?”

 

நான் பத்து வார்த்தை பேசுனா ரெண்டு வார்த்தை பேசுவான்”

 

கஷ்ட காலம்”

 

புழா கிருஷ்ணமூர்த்தியை பார்க்க, அவன் மாலினியிடம், ஓகே மாலினி நாளைக்கு பார்க்கலாம்..”

ஹ்ம்ம்.. ஓகே..” என்று கிளம்பியவள், மூர்த்தி” என்று அழைத்தாள்.

இருவரும் திரும்பி பார்க்க, மாலினி, ஆயின்மென்ட் ஒழுங்கா போடு”

 

கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தான்.

டேய்.. சிரிக்காத.. ஒழுங்கா போடு”

 

டேய் யா”

ஹ்ம்ம்.. அருணாவையே டேய் சொல்லுவேன்..”

 

கஷ்ட காலம்”

 

எனக்கு தானே! உன்னை சாமளிக்குறது தானே!” 

 

நான் அப்பாவை சொன்னேன்”

 

அப்பா அப்படி ஒன்றும் சொல்லமாட்டார்” என்று கூறி மாலினி அழகு காட்டினாள்.

அப்பொழுது அருணாசலம் காரில் வந்தார்.

அருணாசலம், ஹாய் மூர்த்தி! ஹாய் புழா!”

 

நேற்று தன்னை ‘கிருஷ்ணா’ என்று அழைத்தவர் இன்று ‘மூர்த்தி’ என்று அழைப்பதை கவனித்த கிருஷ்ணமூர்த்தி மாலினி மேல் அவர் கொண்ட பாசத்தை மேலும் புரிந்துக் கொண்டான்.

கிருஷ்ணமூர்த்தி புன்னகையுடன், ஹாய் பா” என்று கூறி, புழாவிடம், மாலினி அப்பா” என்றான்.

புழா புன்னகையுடன், ஹாய் பா” என்றான்.

மாலினி, இன்னைக்கு புயல் தான் வரபோகுது”

 

மூவரும் மாலினியை யோசனையுடன் பார்க்க அவள் தந்தையை பார்த்து, புழா ஒழுங்கா சிரிச்சுடானே! அப்போ புயல் மழை தானே வரும்”

மூவரும் சிரித்தனர்.

மாலினி, ஐயோ! புயல் நிச்சயம்… அப்பா நாம சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம்”

 

அருணாசலம், பாவம்.. விட்டுரு டா”

 

நீங்க சொல்றதால் இன்னைக்கு விடுறேன்”

கிருஷ்ணமூர்த்தி, ஓகே பா.. நாங்க கிளம்புறோம்”

 

அருணாசலம், ஓகே பா” என்று கூற, மாலினி, பாய் மூர்த்தி.. பாய் மௌனகுரு” என்று கூறி காரில் ஏறினாள்.

காரில் செல்லும் போது அருணாசலம், எப்படி டா மூர்த்திக்கு இன்னும் நிக் நேம் வைக்காம இருக்க?”

 

ஷங்கருக்கு கூட தான் வைக்கலை.. பட் வைக்கணும்..”

 

அதானே பார்த்தேன்”

இருவரும் புன்னகைத்தனர்.

அருணாசலம், மோகன் வீட்டுக்கு தானே போகணும்?”

 

என் செல்ல அருணா” என்று கூறி தந்தை தோளில் சாய்ந்தாள் மாலினி.

மழை 17:

மாலினி ஆர்லி மற்றும் ஷங்கருடன் நிகழ்ந்த உரையாடலை சொல்லி முடித்ததும் அருணாசலம், மோகனாவை பார்க்க ஷங்கரை கூட்டிட்டு போறது……………..”

 

ஆர்லிய வெறுப்பேத்த சொன்னது..”

 

நீ செஞ்சது தப்பு.. ஷங்கர் மனசில் பால்ஸ் ஹோப் குடுத்து இருக்க”

 

அது அப்போ யோசிக்காம பேசிட்டேன் தான்.. பட் ஷங்கர் ரொம்ப நல்ல பையன்.. நான் சொன்னப்ப கூட ஆர்லி முன்னாடியே  தயங்க தான் செய்தான்.. தென் இவனிங் கூப்பிட்டப்ப நான் வரது சரிவராது..  நிறைய விஷயம் யோசிக்கணும்.. மோனி பயம் போன பிறகு நான் அவளை பார்த்தா தான் சரி வரும் இல்லை மேலும் பயப்படுவா.. முக்கியமான விஷயம் மோனி பேரென்ட்ஸ்.. அவங்க என்ன நினைப்பாங்க னு தெரியாம.. ஹ்ம்ம்.. யோசிச்சு பார்த்தா உனக்கே புரியும்..” னு சொல்லிட்டான்.. ஸோ நைஸ் பாய்”

 

ஹ்ம்ம்.. நைஸ் பாய் தான்.. நீ இனிமேல்…………..”

இப்படி யோசிக்காம பேச மாட்டேன்.. அதுவும் செல்வி ஆன்ட்டி பத்தி தெரிஞ்சும் யோசிக்காம பேசினது தப்பு தான்.. சாரி பா”

[மோகனாவின் அன்னை செல்விக்கு ஆண்-பெண் பேதமின்றி பழகுவதில் பிடித்தம் கிடையாது]

குட்.. இனி யோசிச்சு பேசு.. எப்போதும் இதை நினைவில் வச்சுக்கோ மாலு.. நாம பேசுறதில், ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்.. ஸோ யோசிச்சு பேசணும்”

 

ஓகே.. ஓகே.. ஓகே..”

 

அருணாசலம் புன்னகைத்தார்.

(என்னதான் அலுத்துக் கொள்வது போல் மாலினி பேசினாலும், தான் சொன்னதை அவள் மனதினுள் பதித்திருப்பாள் என்பதை நன்கு அறிந்ததால், புன்னகைத்தார்.)

மாலினி சிறு கோபத்துடன், அந்த நாதாரி  எப்போ என் கிட்ட அடி வாங்க போறான் னு தெரியலை”

 

யாரை டா சொல்ற? ஸ்ரீராம் ஆஎன்ன பண்ணான்?”

 

அந்த நாதாரியே தான்.. சேகர் கிட்ட என்ன பேச்சு பேசுனான்! இன்னைக்கு இளிச்சுட்டு வந்து நிக்குறான்.. அவனை”

 

பசங்க குணம் அப்படி தான் டா.. நான் M.Sc படிச்சப்ப, 38 பசங்க 7 பொண்ணுங்க.. சில பசங்க பொண்ணுங்க கிட்ட நார்மலா பேசுறது போல் பேசிட்டு எங்களிடம் வந்து அது என் ஆள் னு சண்டை போடுவான்க.. அது அவன்க நேச்சர்.. நீ தான் பில்ட்டர் பண்ணி பழகனும்”

 

என்ன நேச்சரோ! தைரியம் இருந்தா அந்த பொண்ணு முன்னாடியே சண்டை போட வேண்டியது தானே.. அது என்ன பிரெண்ட் னு அவ கிட்ட பழகிட்டு அவ பின்னாடி என் ஆள்‘ னு சொல்றது! மானம் கெட்ட பொழப்பு.. சை”

 

அவனை பற்றி தெரிஞ்சுடுச்சு.. ஸோ இனி விலகிடு.. அவனை பற்றி யோசிக்காத.. விடு டா.. வேற எதுவும் இன்ட்ரெஸ்டிங் ஆ நடக்கலையா?”

 

ஓ நடந்துதே! சிவா புண்ணியத்தில் பிருந்தா டயட் இருக்க போறா”

 

அருணாசலம் ஆச்சரியமாக பார்க்கவும், மாலினி புன்னகையுடன், நாங்களும் இப்படி தான் ஷாக் ஆனோம்.. பட் உண்மையாவே டயட்டில் இருப்பது போல் தான் தெரியுது.. ஐ தின்க் சிவா பிருந்தாக்கு ரூட் விடுறான்”

 

சிவா மனசுல பிருந்தா வா” என்று கூறி அருணாசலம் புன்னகைத்தார்.

மாலினி புன்னகையுடன், பிருந்தா மனசிலும் சிவா இருக்கலாம்.. கொஞ்ச நாள் போனா கிளியர் ஆகும்”

சிறிது யோசித்த மாலினி, எனக்கு ஒரு டவுட் பா! காலேஜ் திறந்து ஒரு மாசம் தான் ஆகுது, அதுக்குள்ளேயே எப்படி லவ் பண்ண ஆரம்சிடுறாங்க!

என் கிளாஸ்லேயே சிங்கில் சைடு லவ் போக மூணு ஜோடிகள் இருக்குது.. இதுல மத்த டிப்பார்ட்மென்ட்ஸ் சேர்த்தா எத்தனை ஜோடிகள் இருக்குது தெரியுமா?”

 

அருணாசலம் சிறு புன்னகையுடன், இந்த காலத்து பசங்க பொண்ணுங்க ரொம்ப பாஸ்ட் ஆ தான் இருக்கிறீங்க..

நிறைய ஜோடிகள் னு சொல்ற பட் அதில் எத்தனை உண்மையான காதல் னு போக போக தான் தெரியும்..

சிலது டைம் பாஸ் ஆ இருக்கும்

சிலது ஜஸ்ட் பிஸிகல் அட்ரக்சன் ஆ இருக்கும்

சிலது இன்பக்சுவேஷன் ஆ இருக்கும்,

இன்னும் சிலது எனக்கும் ஆள் இருக்குது‘ னு சொல்லிக்கிறதுக்காக கூட இருக்கும்..”

 

என்னவோ போ.. “ என்று மாலினி அலுத்துக் கொள்ளவும் அருணாசலம் சிரித்தார்.

மோகனா வீட்டிற்கு வந்திருந்தனர்.

மோகனா சுவற்றில் சாய்ந்து கட்டிலில் அமர்ந்திருந்தாள், காய்ச்சல் இல்லை என்றாலும் சிறிது சோர்வாக தெரிந்தாள்.

மோகனா மாலினியை பார்த்ததும் சிறு பயம் கலந்த குரலில், ஹே மாலு.. நெத்தில என்ன காயம்?”

 

 “செவத்துல(சுவற்றில்) இடிச்சுட்டேன்.. இதை விடு.. நீ எப்படி இருக்க?”

 

ஓ! செல்வா தான் ஏதோ செஞ்சுடானோ னு நினைச்சேன்.. ரொம்ப வலிக்குதா மாலு?” என்று கவலையுடன் கேட்டாள்.

மோனி.. மோனி.. செல்வா என்னை ஒன்றும் செய்ய மாட்டான்.. நீ பயப்பட கூடாது ஓகே யா?”

 

மோகனா சரி என்பது போல் தலையை ஆட்டினாள்.

மாலினி அருணாச்சலத்தை பார்க்க, அவர், நீங்க பேசிட்டு இருங்க.. நாங்க ஹாலில் இருக்கோம்” என்று கூறி மோகனையும் செல்வியையும் அழைத்து சென்றார்.

மாலினி மோகனா அருகில் அமர்ந்து மென்மையாக பேச தொடங்கினாள்.

மோனிஆர்லி என்ன சொல்லி உன்னை பயமுறுத்தினா?”

 

மோகனா சிறிது மிரட்சியுடன் பார்க்க, மாலினி மோகனாவின் கையை ஆதரவாக பற்றி, மோனி பயப்படக் கூடாது னு சொன்னேனே.. ஆர்லி என்ன சொன்னா னு சொல்லுஅவ சொன்னது சரியா தப்பா னு நான் சொல்றேன்”

 

அது.. அது”

 

நீ என்னை நம்புற தானே”

 

ஹ்ம்ம்” என்று வேகமாக தலையை ஆட்டினாள் மோகனா.

அப்போ சொல்லு..”

மோகனா தயக்கத்துடன், குழந்தை போல், நான் சொல்வேன் ஆனா நீ ஷங்கரை திட்டக் கூடாது.. ஓகே வா?”

 

ஆர்லி பற்றி தானே கேட்டேன்.. நான் ஏன் ஷங்கரை திட்ட கூடாது?”

 

ஆர்லி சொன்னா நீ ஷங்கரை திட்டுனாஏற்கனவே உன் மேல் கோபமா இருக்கிற செல்வா உன்னை அடிப்பான் னு”

 

ஆர்லி தெரியாம சொல்லி இருக்கா.. செல்வா என்னை ஒன்னும் செய்ய மாட்டான்..”

 

அவன் ஏதாவது செஞ்சுட்டா?” என்று பயந்தாள் மோகனா.

மோனி நான் சரியா தானே சொல்வேன்?”

 

ஹ்ம்ம்”

அப்போ பயப்படாத.. ஷங்கருக்கும் செல்வாக்கும் சம்பந்தம் இல்லை.. ஸோ நான் ஷங்கரை திட்டுனா செல்வா ஒன்னும் செய்ய மாட்டான்.. சரியா?”

 

மோகனா அரை மனதுடன் “சரி” என்றாள்.

மாலினி, ஆர்லி வேற என்ன சொன்னா?”

 

மோகனா யோசனையுடன், ஷங்கர் செஞ்சதை உன்னிடம் சொல்ல கூடாது னு சொன்னா.. அவன் செஞ்சதை சொல்றேன் ஆனா நீ அவனை திட்டக் கூடாது”

 

மோனி செல்வா என்னை ஒன்னும் செய்ய மாட்டான் னு சொன்னேனே.. திரும்ப ஏன் இப்படி சொல்ற?”

 

அது ஓகே தான்..”

 

அப்பறம் என்ன?”

 

அது வந்து.. (தயக்கத்துடன்) ஷங்கர் பாவம் தானே அதான் திட்டாத னு சொன்னேன்”

 

மோகனாவின் இந்த பதிலில் இருந்தே மாலினிக்கு அவளது மனம் புரிந்தது, இருந்தாலும் இது வெறும் பிடித்தம் மட்டும் தானா இல்லை அதற்கும் மேல் போகும் அன்பா என்று தெரிந்து கொள்ள, பேச்சு கொடுத்தாள்.

மாலினி சிறு புன்னகையுடன், அவன் தப்பு செய்யலை னா திட்ட மாட்டேன்”

 

“…”

 

என்ன?”

 

ஹ்ம்ம்.. அவன் செஞ்சது தப்பு தான் ஆனா நீ திட்டக் கூடாது”

 

ஏன்?”

 

அது.. அது.. ஹ்ம்ம்.. அவன் குட் பாய்”

 

குட் பாய்ஸ் யாராச்சும் தப்பு செய்வாங்களா?”

சிறிது யோசித்த மோகனா, நான் குட் கேர்ள்  தானே! நான் தப்பு செஞ்சிருக்கேனே!”

 

மோகனா இந்தளவிற்கு சிந்திப்பதை நினைத்து மாலினி மனதினுள் வியந்தாள். மாலினிக்கு இப்பொழுது மோகனாவின் மனம் தெள்ள தெளிவாக புரிந்தது, மோகனா எதுவரை சமாளிக்கிறாள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் மேலும் பேச்சை வளர்த்தாள்.

மாலினி சிறு புன்னகையுடன், நீ குட் கேர்ள் தான்.. நீ தப்பு செஞ்சா நான் என்ன செய்வேன்?”

 

திட்டுவ”

 

அப்போ ஷங்கர் தப்பு செஞ்சா திட்டலாம் தானே!”

 

ஆம்‘ என்பது போல் தலையை ஆட்டிய மோகனா மறு நொடியே மறுப்பாக ஆட்டி, ஹம்.. அவன் தான் சாரி கேட்டானே! இனி செய்ய மாட்டேன் னு சொல்லிட்டானே!” என்று கூறியவள், கண்ணில் சிறு அச்சத்துடன், ஆனா ஆர்லி அவன் சாரி சொல்லிட்டு சொல்லிட்டு திரும்ப செய்வான்.. அதுவும்.. அதுவும்..” என்று தயங்கியவளின் கண்கள் கலங்கின.

மாலினி மோகனாவின் தோளை பற்றி, மோனி பயப்படக் கூடாது.. ஆர்லி தேவை இல்லாம பயமுறுத்தி இருக்கா.. ஷங்கர் குட் பாய் னு நீயே சொன்னியே.. நீ சாரி கேட்டபின் அந்த தப்பை திருப்பி செய்வியா? மாட்ட தானே.. ஷங்கரும் செய்ய மாட்டான்.. அன்னைக்கு ஏதோ தெரியாம அப்படி செஞ்சிட்டான்.. இனி அப்படி செய்ய மாட்டான்.. இன்னைக்கு கூட என்னிடம் என்ன சொன்னான் தெரியுமா?

மோனி கிட்ட ரொம்ப சாரி கேட்டேன் னு சொல்லு‘ னு தான் சொன்னான்..”

 

மோகனா கலங்கிய விழிகளுடன் அதிர்ச்சியுடன், உனக்கு.. உனக்கு தெரியுமா மாலுஅவன் என்ன செஞ்சான் னு தெரியுமா?”

 

தெரியும் டா.. இன்னைக்கு அவனே சொன்னான்.. நான் திட்டுறதுக்கு முன் அவனே ரொம்ப சாரி கேட்டான்.. உன்னிடமும் சாரி கேட்க சொன்னான்.. நீ எப்படி இருக்க னு கேட்டான்.. உன்னை நினைச்சு ரொம்ப கவலை பட்டான்”

 

மோகனா சிறு புன்னகையுடன், ஷங்கர் குட் பாய் தானே மாலு?”

 

மோகனாவின் கண்களை துடைத்துவிட்டபடியே மாலினி, ஹ்ம்ம்.. குட் பாய் தான்” என்று சிறு புன்னகையுடன் கூறினாள்.

அப்பறம் ஏன் ஆர்லி அப்படி சொன்னா?”

 

நான் சொன்னா கேட்ப தானே மோனி”

 

ஹ்ம்ம்”

 

ஆர்லி கிட்ட இனி நீ பேச கூடாது சரியா?”

 

மோகனா குழப்பத்துடன், ஏன் மாலுஅவ நம்ம பிரெண்ட் தானே!”

 

மாலினி இறுகிய முகத்துடன், அவ பேட் கேர்ள் மோனி.. நீ அவ கூட சேராத.. அவ உன்னிடம் கோபமா பேசுனா பயபடாம நீயும் கோபமா பேசணும்.. அவ உன்னை மிரட்டினா நீயும் மிரட்டிடு.. சரியா?”

 

ஒன்றும் புரியாமலேயே மோகனா சரி‘ என்று தலையை ஆட்டினாள்.

மோகனா யோசனையில் இருக்கவும் மாலினி, என்ன மோனிஎன்ன டவுட்கேளு”

நீ ஏன் ஆர்லியை பேட் கேர்ள் சொல்ற?”

 

‘என்ன சொல்வது? எப்படி புரிய வைக்கிறது?’ என்று மாலினி திணற, மோகனா தானே ஒரு காரணத்தை யோசித்து கேட்டாள்.

மோகனா, அவ பொய் சொல்லி என்னை பயபுறுத்தினதால் அப்படி சொல்றியா மாலு?”

மாலினி மோகனாவின் கன்னத்தில் கை வைத்து சிறிது அழுத்தி, ஆமா டா” என்றாள்.

மோகனாவிற்கு அடுத்த சந்தேகம் எழுந்தது.

அவ என்னை பயபுறுத்திடே இருப்பாளா?”

 

நீ தைரியமா அவளை திட்டிட்டா பயமுறுத்த மாட்டா”

 

ஓ.. அதான் அவ கிட்ட கோபமா பேச சொன்னியாஆனா எனக்கு தான் கோபமே வராதே!”

மாலினி மனதினுள், ஐயோ மோனி செல்லம் உன்னை என்ன தான் டா செய்றது.. ஒழுங்கா மார்க் வாங்கி இருந்தா CSE யே வந்துருப்பியே! என்று புலம்பினாள்.

மாலினி, ஓகே நீ கோபமா பேச வேண்டாம்.. பட் அவ சொல்றதை நம்பக் கூடாது.. பயப்படக் கூடாது.. அவ என்ன சொன்னாலும் உடனே என்னிடமோ ஷங்கரிடமோ சொல்லிடனும் சரியா?”

ஹ்ம்ம்.. ஓகே”

 

இப்ப சொல்லு ஆர்லி ஷங்கர் பத்தி என்ன சொன்னா?”

 

மோகனா அன்று நடந்ததை(மதிய இடைவெளியில் இருந்து மாலை வரை நடந்ததை) அப்படியே ஒப்பித்தாள்.

மோகனா சொன்னதை கேட்டதும் மாலினிக்கு ஆர்லி மேல் பெரும் கோபம் வந்தது, மேலும் அவள் மோகனாவை சும்மா விடமாட்டாள் என்று நினைத்த மாலினி, ஆர்லியை எதிர்க் கொள்ள, மோகனாவை தயார்படுத்த வேண்டும் என்று நினைத்தாள்.

மாலினி, மோனி.. இப்போ மூணு விஷயம் சொல்ல போறேன். நல்லா கவனி..”

 

ஹ்ம்ம்..”

 

முதல் விஷயம்.. செல்வா  ஒரு விஷயத்தில் என்னை தப்பா நினைச்சிட்டு இருக்கிறான்உண்மை தெரிந்ததும் கோபம் போய்டும்.. ஸோ அவனால் எனக்கு எந்த ஆபத்தும் கிடையாது.. அவன் என்னை ஒன்னும் செய்ய மாட்டான்.. புரிதா..”

 

ஹ்ம்ம்..”

 

ரெண்டாவது.. ஷங்கர் குட் பாய் தான்.. இனி அப்படி செய்ய மாட்டான்.. என்னை நம்புறது போல் அவனை நீ நம்பலாம்.. ஏதும் சந்தேகம் வந்தால் அவனிடம் கேள்.. அவன் சொல்வதை கேட்டு நடந்துக்கோ.. என்னை போல் அவனும் உன் நல்லதிற்………….”

 

நான் தான் உன்னிடம் கேட்டுப்பேனே மாலு.. ஏன் அவனிடம் கேட்க சொல்ற?”

ஒரு நொடி தயங்கிய மாலினி, நிதானமாக பேசினாள், நேத்தே CSE IT னு கிளாஸ் பிரிச்சிட்டாங்க”

 

மாலு…. அப்போ நான் தனியாவா… ஹும்கூம்.. நான் மாட்டேன்….”

மோனி.. ஏற்கனவே தெரிஞ்சு தானே காலேஜ் சேர்ந்தஎப்படியும் கிளாஸ் பிரிச்சிருவாங்க னு தெரிஞ்சது தானே.. என்ன கொஞ்சம் சீக்கிரம் பிரிச்சிட்டாங்க அவ்ளோ தான்..”

 

ஹ்ம்ம்.. மாலு”

 

மோனி கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் பட் அப்பறம் பழகிடும்சரியா”

 

ஹ்ம்ம்..”

 

உன் கூட தான் ஷங்கர் இருப்பானே!”

 

மோகனாவின் முகம் ஒரு நொடி மலர்ந்தாலும் அடுத்த நொடியே வாடியது, ஹ்ம்ம்.. நீ இருக்க மாட்டியே” 

 

கிளாஸ் டைம் கிளாஸ் தான் கவனிக்கணும். ஸோ எந்த கிளாஸ்ஸில் இருந்தா என்னபிரேக் டைமில் நீ என் கிளாஸ்க்கு வந்துரு.. தட்ஸ் ஆல்..”

 

ஹ்ம்ம்..”

 

மோனி.. இப்படி யோசிச்சு பாரு.. சப்போஸ் உனக்கு இந்த காலேஜில் இடம் கிடைக்கலை னா நீ வேற காலேஜ் போயிருப்ப.. அதுக்கு இது பெட்டெர் தானே.. (மாலினி சிரித்த முகத்துடன் தொடர்ந்தாள்) நாம ஒரே காலேஜ்.. பிரேக் டைமில் ஒன்னா ஸ்பென்ட் பண்ணலாம் ஜாலியா பேசலாம்..”

 

மோகனாவும் புன்னகையுடன், “ஆமா ல”

 

ஆமா”

 

மோகனாவின் புன்னகை விரிந்தது.

மாலினி, எப்போதும் இப்படியே சிரிச்சுட்டே இருக்கனும்”

 

எப்போதும் சிரிச்சுட்டே இருந்தா லூசு னு சொல்லுவாங்க மாலு”

 

ஒரு நொடி ஆச்சரியப் பட்ட மாலினி, அது கரெக்ட் தான்.. எப்போதும் னு நான் சொன்னது.. எந்த விஷயமா இருந்தாலும் அதை நினைத்து கலங்காமபாசிடிவ் எனர்ஜியோடு யோசிச்சுசால்வ் பண்ணிட்டுசிரிச்ச முகமா இருக்கணும்”

 

ஓ”

மாலினி புன்னகைத்தாள்.

மோகனா, மூணு விஷயம் னு சொன்னியே மாலு.. மூணாவது என்ன?”

 

இப்போ சொன்ன ரெண்டு விஷயமும் உனக்கு புரிஞ்சதை சொல்லு”

 

ஹ்ம்ம்.. பஸ்ட் ஒன் – செல்வா நல்லவன் தான்உன்னை எதுவும் செய்ய மாட்டான்..

செகண்ட் – (புன்னகையுடன் பேசினாள்) ஷங்கர் குட் பாய்.. உன்னை போல் எனக்கு வெரி குட் பிரெண்ட்.. என்னை நல்லா பார்த்துப்பான்.. எதுவும் டவுட் னாநீ இல்லை னா அவனிடம் கேட்டு அவன் சொல்வது போல் நடந்துக்கணும்.. ஓகே யா?”

 

மாலினி புன்னகையுடன், கரெக்ட்”

 

ஹ்ம்ம்.. இப்போ மூணாவது விஷயம் சொல்லு”

மாலினி தீவிரமான குரலில் பேசத் தொடங்கினாள்.

நல்ல கவனி மோனி.. இது தான் ரொம்ப முக்கியமான விஷயம்..  இனி நீ ஆர்லி கூட பேசக் கூடாது.. நீ அவ கூட பேசுனா நான் உன் கூட பேச மாட்டேன்…….”

 

மாலு.. நான் கண்டிப்பா அவ கூட பேசமாட்டேன்..” என்று அவசரமாக மோகனா கூறினாள்.

குட்..  அவளே வந்து பேசினாலும் நீ பேச கூடாது.. அவ காரணம் கேட்டு  தொந்தரவு பண்ணா, ‘மாலு உன் கூட பேச கூடாது னு சொல்லிருக்கா‘ னு சொல்லிடு..”

 

ஹ்ம்ம்..”

மாலினி கறாரான குரலில் பேசினாள், அவ திட்டினாலோ மிரட்டினாலோ பதிலுக்கு நீயும் திட்டனும்.. எனக்கு கோபம் வராது னு சொல்லாதகொஞ்சம் கொஞ்சமா உன்னை நீ மாத்திக்கணும்.. எதுகெடுத்தாலும் பயப்படக் கூடாது.. தைரியமா இருக்கணும்.. என்ன புரிதா?”

ஹ்ம்..” என்று தலையை ஆட்டிய மோகனா, எப்படி மாத்திக்கிறது மாலு? அதுக்கு நான் என்ன செய்யணும்?” என்று கேட்டாள்.

மாலினி மனதினுள், இவளை மாத்துறது ரொம்ப கஷ்டம் பட் மாத்தி தான் ஆகணும்‘ என்று நினைத்துக் கொண்டாள்.

மாலினி, நீ தான் அதை யோசிக்கணும்”

 

மாலு” என்று மோகனா சிணுங்க, மாலினி, முதல்ல இப்படி சிணுங்குறதை நிறுத்து”

 

மோகனா கண்ணிமைக்காமல் மாலினியை பார்க்க, மாலினிக்கு பாவமாக தான் இருந்தது ஆனால் மோகனாவை மாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், மாலினி கறாராகவே நடந்துக் கொண்டாள்.

ஆர்லியிடம் பேசாதே ஆனால் அவள் திட்டினால் நீயும் திட்டுறஅதை விட்டுட்டு பயந்து போய் என்னிடம் வந்து அழுதநான் உன் கூட பேசவே மாட்டேன்”

 

மோகனா அதே நிலையில் தான் இருந்தாள்.

மாலினி, மோனி நான் சொன்னா சொன்னதை செய்வேன் னு உனக்கு தெரியும்.. நீ இனி ஆர்லிக்கு பயந்த நான் கண்டிப்பா உன் கூட பேசவே மாட்டேன்.. புரிதா?”

 

ஹ்ம்ம்”

மோகனாவின் அன்னை செல்வி சாப்பிட அழைக்கவும் இருவரும் சென்றனர். மோகனா அமைதியாகவே இருந்தாள்.

அதை பார்த்து அருணாசலம் கண்ணசைவில் என்ன?’ என்று மாலினியிடம் கேட்க, அவளும் கண்ணசைவில், நத்திங்.. அப்பறம் சொல்றேன் என்றாள்.

உணவை முடித்துக் கொண்டு அருணாசலமும் மாலினியும் கிளம்பினர்.

காரில் சென்று கொண்டிருந்த போது அமைதியாகவே வந்த மாலினியிடம் அருணாசலம், என்ன டா யோசிக்கிற? மோனி ரொம்ப பயந்து போயிருக்காளா?”

 

பயந்து இருந்தா.. இப்போ ஓகே தான்”

 

அப்பறம் என்ன டா யோசனை?”

 

யோசிக்க நிறைய இருக்கிறதே!”

 

என்ன?”

 

மாலினி மோகனாவிடம் பேசியதை கூறினாள். பிறகு,

இப்போ எனக்கு இருக்கிற டவுட்ஸ்..

1. என்ன தான் நான் செக் வச்சாலும் ஆர்லி மோனி கிட்ட பேசாம இருக்க மாட்டா! எப்படி மோனியை பார்த்துக்கிறது?

2. மோனி ஷங்கர் விஷயத்தில் யோசிச்சது.. அவனுக்கு சப்போர்ட் பண்ணது எல்லாம் அவ மனசை தெளிவுபடுத்துது.. பட் அதை அவ எப்போ உணர்வா னு தெரியலை.. பட் அவளுடைய சிந்திக்கும் திறன் கொஞ்சம் கூடியிருக்கிறது.. இந்த காதல் ஒரு குழந்தையை குமரியாக்குதே!

ஷங்கர்-மோனி, சேகர்-ஜெனிசிவா..  இவங்கலவ்லாம் எனக்கு சின்சியரா தான் படுது.. இந்த குறுகிய காலத்தில் இப்படி? எனக்கு புரியவே மாட்டிக்குது!!!!!!!!!!!!”

அருணாசலம் புன்னகைத்தார்.

மாலினி, சிரிக்காதீங்க! அம் சீரியஸ்.. நீங்க எப்போ அம்மாவை லவ் பண்ணீங்கஎத்தனை நாள்…………………”

 

நாளா! எத்தை நொடிகள் னு கேட்கணும்”

 

வாட்!”

அருணாசலம் புன்னகையுடன் “புஷ்பாவை பார்த்ததும் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்.. ஒரு கல்யாண வீட்டுல ரெண்டு வாண்டுகளை அவ மிரட்டிட்டு இருந்தப்ப தான் நான் அவளை பார்த்தேன்.. பார்த்ததும் இவ தான் என் மனைவி னு ஹார்ட்டில் பிக்ஸ் ஆகிருச்சு டா…”

 

அது எப்படி பா பார்த்ததும் இப்படி தோணும்?”

அருணாசலம் சிரித்தார்.

மாலினி, சிரிக்காம பதில் சொல்லுங்க”

 

டேய்! லவ் என்பது ஒரு பீலிங் அதை உணர தான் முடியும்விளக்கமெல்லாம் சொல்ல முடியாது”

 

அது ஏன் முடியாது? நான் உங்க மேல் வச்சிருக்க லவ்-வயோ நீங்க என் மேல் வச்சிருக்க லவ்-வயோ விளக்க முடியும் தானே!!!

 

மாலு.. உன் அம்மா மேல் இருக்கும் காதலை என்னால் எக்ஸ்ப்ளைன் பண்ண முடியும் பட் நீ கேட்பது.. சரி இதை சொல்லு.. உனக்கு ஏன் என் மேல் அதிக பாசம்இப்போனு இல்லை.. சின்ன வயசுல இருந்தேவிவரம் தெரியாத வயசுல இருந்தே உனக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும்”

ஸோ சிம்பள் எப்போதும் என்னை புரிந்துக் கொண்டு எனக்கு வேண்டியதை   நான் கேட்கும் முன்பே தருவீங்க.. என்னை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிறீங்க.. அறியாத வயசு என்றாலும் இது தான் காரணமா இருக்கும்”

 

மாலு.. காதலுக்கு காராணம் கிடையாது.. காரணம் இருந்தால் அது காதலே கிடையாது”

 

அப்போ எனக்கு உங்க மேல் லவ் இல்லையா?”

 

நீ இப்போ சொன்ன காரணம் ஏன் என் மேல் பாசம் என்பதற்கு இல்லை.. என் மேல் ஏன் அதிக  பாசம் என்பதற்கு தான்.. ஸோ புரிதா பாசம் லவ் இதுக்குலாம் காரணம் சொல்ல முடியாது”

 

என்னவோ போங்க”

அருணாசலம் புன்னகையுடன், உனக்கு லவ் வந்தா புரியும் டா”

 

அது என்னவோ எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையே! நான் லவ் பண்ணுவேன்னும் தோணலை” என்று தோளை குலுக்கினாள்.

 

நிறைய டவுட் னு சொன்ன!”

 

ஹ்ம்ம்.. சொல்றேன். பஸ்ட் டவுட் கிளியர் பண்ணுங்க”

 

ஷங்கர் கிட்ட மோனி சொன்னதை சொல்லு.. அவன் பார்த்துப்பான்”

 

நானும் இதை யோசிச்சேன் பட் நான் எபப்டி ஆர்லி சொன்னதை சொல்ல னு கொஞ்சம் தயக்கமா இருக்குது”

 

ஹ்ம்ம்.. நான் வேணும்னா பேசட்டா?”

 

ஹ்ம்ம்.. பார்க்கலாம்.. மோனி எப்படியும்  நாளானைக்கு தான் காலேஜ் வருவா.. நாளைக்கு ஷங்கர் கிட்ட பேசி பார்க்கிறேன். என்னால் சொல்ல முடியலை னா நாளைக்கு போனில் நீங்க பேசுங்க”

ஓகே.. வேற என்ன டவுட்?”

 

 

அந்த சீனியர் கிருஷ்ணன் விஷயம் தான்.. எப்படி இன்னைக்கே வந்து சாரி கேட்டான்அதுவும் சாரி கேட்குறதுக்குனே காலேஜ் வரை வந்திருக்கிறான்! அவன் பேசினது என்னவோ உண்மை போல தான் இருந்துது.. அவன் பார்வை கூட குற்ற-உணர்ச்சிமன்னிக்க வேண்டும் என்ற தவிப்பு இப்படி தான் இருந்தது”

 

எனக்கு தெரிந்து அவன் இயல்பில் நல்லவனா தான் இருக்கணும் ஏதோ  கெட்ட சகவாசத்தில் தெரியாம தப்பு செஞ்சுருப்பான்.. வீட்டுக்கு  போய் யோசிச்சு பார்த்திருப்பான்…. பீல் பண்ணிருப்பான்.. உன்னிடம் உடனே நேர்ல  மன்னிப்பு கேட்கணும் னு தோன்றியிருக்கலாம் “

 

ஹ்ம்ம்…”

 

பட்.. எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு டா”

 

மாலினி புன்னகையுடன், “sure.. டோன்ட் வொர்ரி”

மாலினி, லாஸ்ட் டவுட்.. நான் செல்வா கிட்ட பேசிறட்டாபேசி பக்குவமா உண்மையை சொல்லிடவா?”

 

திடீர்ன்னு ஏன் இப்படி யோசிச்ச? மோனி பயப்படுறா னா?”

 

அதுவும் ஒரு காரணம் தான்.. ஒரே கிளாஸ்ஸில் இருந்துட்டு சும்மா சும்மா காரணமே இல்லாம தேவையே இல்லாம முறைச்சிக்கிறதுஎன்னவோ போல் இருக்குது.. அதான்”

 

ஓகே.. பேசு.. பட் அவன் பொறுமையா கேட்கணுமே!”

 

அதே தான் என் யோசனையும்.. என்ன பண்ணலாம்?”

 

சிறிது யோசித்த அருணாசலம், அந்த இன்டர்-காலேஜ் காம்படிஷன்க்கு செல்வா போறான் தானே”

 

போ பா.. அதுக்கு என்னால் போக முடியாது”

 

மாலு.. இது என்ன சிறுபிள்ளைத் தனம்.. ஜெனிஷா வந்தா உனக்கென்ன?”

 

அவ தேவை இல்லாம சீண்டிட்டே இருப்பா.. நிம்மதியா போயிட்டு வர முடியாது.. எரிச்சலா இருக்கும்.. பஸ்ட் இயர் கேர்ள்ஸ் ஜெனி, ஆஷா தவிர வேற யாரும் செலக்ட் ஆகலை.. முக்கியமா ஆர்லியிடம்  மோனியை தனியா விட்டுட்டு என்னால் எப்படி போக முடியும்?”

 

மோனியை பார்த்துக்க தான் ஷங்கர் இருக்கானே! ஸோ மோனி பற்றி கவ……………..”

 

ஷங்கர் இருந்தா! மோனி என் கிட்ட தானே…………….”

 

நீ என்ன அவ கூடவே IT கிளாஸ்ஸில் இருக்கிறியா? அவ கூடவே மக்ஸிமம் இருப்பது அவன் தான்..”

இருந்தாலும்” என்று மாலினி இழுக்க அருணாசலம், மோனி பற்றி நீ கவலை படாத.. தென்…. ஜெனிஷா போறா னு நீ போகாம இருப்பது.. இது ஒரு காரணமா! அடுத்தவங்களுக்காக காரணமே இல்லாம நீ ஏன் உன் திறமையை வீணாக்குற?

என் லிட்டில் டார்லிங் அப்படி இல்லையே”

 

ஓகே.. நானும் போறேன்.. அவளுக்காக ஒன்னும் நான் போகலை னு சொல்லலை. முக்கிய காரணம் மோனி தான்.. 95% மோனி.. 5% தான் ஜெனி”

(வீடு வந்து சேர்ந்திருந்தனர்.)

அந்த 5% கூட ஏற்றுக்கொள்ளப் படாது”

 

ஓகே ஓகே.. தெரியாம சொல்லிட்டேன்..” என்று கூறியபடியே கதவை திறந்து இறங்கினாள் மாலினி.

வீட்டின் உள்ளே சென்றதும் மாலினி அன்னையை பார்த்து புன்னகையுடன், இன்னைக்கு தான் ஒரு விஷயம் புரிந்துது புஷ்”

 

புஷ்பா முறைக்கவும், அதை பொருட் படுத்தாமல், மாலினி, என்ன விஷயம் னு கேளு புஷ்ஷி கேட்

 

எப்படி டி இப்படி விதவிதமா என் பெயரை கொலை பண்ற?” 

 

அதுவா பூ.. உன் ரியாக்ஷன் பார்த்தும், உன் மேல் இருக்குற லவ்-லயும் அதுவா வருது”

 

வரும் டி வரும்.. நாலு சாத்து சாத்துனா! எல்லாம் காணாம போய்டும்”

 

எது காணாம போய்டும் ?”

 

ஹ்ம்ம்.. உன் கொழுப்பு”

 

அச்சோ.. ப்ளட்-டில்  கொலெஸ்ட்ரால் அதான் கொழுப்பு  கொஞ்சமாது இருக்கணும் இல்லாட்டி  கஷ்டமா போய்டும்.. இது கூட உனக்கு தெரியாதா புஷ்ஷு!

 

உன்னை…………….”

 

சரி இதை விடு.. என்ன விஷயம் னு கேட்கவே இல்லையே!”

நான் கேட்கலைனா சொல்லாம இருந்துருவியா!”

 

இல்லை தான்.. என்ன இருந்தாலும் நீ கேட்டு நான் சொல்றது தானே நல்லா இருக்கும்”

 

சரி.. சொல்லு என்ன விஷயம் புரிந்தது உனக்கு?”

 

நீ எப்போ திட்டினாலும்  அருணா  ஏன் சிரிச்சுட்டே.. ஹ்ம்ம்.. இல்லை இல்லை.. ரசிச்சு சிரிச்சுட்டே இருக்கார் னு புரிஞ்சுது”

புஷ்பா புரியாமல் பார்க்க மாலினி, ஒரு கல்யாண வீட்டுல ஏதோ ரெண்டு வாண்டுகளை நீ திட்டிட்டு இருந்தப்ப தான் உன் டார்லிங் உன்னை முதல் முதல பார்த்தாராமே! அதான் நீ எப்போ திட்டினாலும் மலரும் நினைவுகளா மைண்டு அங்க போய்டுது போல.. அதான் உன் திட்டை ரசிச்சுசிரிக்கிறார்”

அப்பொழுது தான் உள்ளே நுழைந்த அருணாச்சலத்தை புஷ்பா முறைக்க, அருணாசலம் சிறிது புன்னகைத்துவிட்டு, மாலினியிடம் மேடை ரகசியமாக, என்ன விஷயம் டா! என் டார்லிங் ஏன் இப்படி பாசமா பார்க்கிறா?”

மாலினி வாய்விட்டு சிரித்தபடி, பார்த்தியா நான் சொல்லலை.. அவர் ரசிச்சு சிரிப்பார் னு.. உன் முறைப்பு பாசமா தெரிதாம்..”

புஷ்பா பல்லை கடித்தப்படி, எதை எதை பொண்ணுகிட்ட பேசணும்னே தெரியாதா உங்களுக்கு! ஆள் தான் வளர்ந்துருக்கீங்க! கொஞ்சம் கூட வெவஸ்த்தையே இல்லை…………” என்று பொரிய தொடங்க, மாலினி புன்னகையுடன் அருணாச்சலத்திடம், என்ஜாய்” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றாள்.

மழை 18:

ஜெனிஷாவின் கைபேசிக்கு புது எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது..

உயிரோடு இருக்க 

ஒரு பிறவி போதும்..

உன் அன்பின் ஸ்பரிசத்துடன் 

வாழ பல ஜென்மம் வேண்டும் :-)”

 

அதை படித்ததும் ராஜசேகர் அனுபியிருப்பானோ என்று தோன்றியது ஜெனிஷவிற்கு.

ஜெனிஷா ஆஷாவை அழைத்தாள்.

ஆஷா, சொல்லு ஜெனி”

 

ராஜ் என் நம்பரை உன்னிடம் வாங்கினானா?”

 

அது யாரு ராஜ்?”

 

விளையாடாம பதிலை சொல்லுடி”

ஆஷா புன்னகையுடன், சேகர் உன் நம்பரை எப்பவோ வாங்கிடானே! ஏன் கேட்கிற?”

 

எப்போ வாங்குனான்?”

 

எப்போ உன்னிடம் அவன் காதலை சொன்னானோ அப்போ”

 

நீ எப்படி என்னிடம் கேட்காம குடுக்கலாம்?”

 

எதுக்கு கேட்கணும்?”

 

எதுக்கு கேட்கணுமா?”

 

ஆமா… எதுக்கு கேட்கணும்?”

 

ஓஹோ! அப்போ சரி.. வினோத் உன் நம்பரை ரெண்டு நாளா கேட்டுட்டு இருக்கான்.. நாளைக்கே குடுத்துறேன்”

 

ஹே.. அந்த லூசு கிட்ட என் நம்பரை குடுத்துறாத ஜெனி.. ப்ளீஸ் ப்ளீஸ்.. நீயும் சேகரை லவ் பண்ற னு தெரிஞ்சதால் தான் குடுத்தேன்.. அதுவும் சேகர் டீசென்ட் guy.. ப்ளீஸ் டி”

அது! அந்த பயம் இருக்கட்டும்.. ஏதோ ராஜ் டீசென்ட் guy னு சொன்னதால் விடுறேன்..”

 

அப்ப்பா” என்று நிம்மதி மூச்சு விட்ட ஆஷா, எதுக்கு திடீர் னு கேட்கிற?”

 

உன் கிட்ட ராஜ் நம்பர் இருக்கா?”

 

எப்பவாது நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லியிருக்கியா நீ?”

நம்பர் இருக்கா னு கேட்டேன்”

 

அதானே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டா! அது ஜெனி இல்லையே!”

 

தெரிது ல.. பதிலை சொல்லு”

 

இருக்கிறது.. நம்பர் **********”

 

ஜெனிஷா சிறிது வேறுபட்ட குரலில், மனப்பாடமா தெரியுமா?”

 

அம்மா தாயே உன் ஆள் நம்பர் எனக்கு மனப்பாடமா லாம் தெரியாது.. இயர்-போனில் பாட்டு கேட்டுட்டு இருக்கும் போது உன் போன் வந்தது.. அப்படியே அட்டென்ட் பண்ணேன்.. உன் நம்பர் சேகர்க்கு தெரியுமா னு நீ கேட்டப்பவே காண்டக்ட்ஸ் போய் அவன் நம்பர் சர்ச் பண்ணி எடுத்துட்டேன்.. போதுமா விளக்கம்.. என்னை ஆளை விடு” என்று கூறி அழைப்பை துண்டிக்க நினைக்க,

ஜெனிஷா, ஹே! எதுக்கு கேட்டேன் னு தெரிய வேண்டாமா?”

 

நான் கேட்டா.. சொல்லிட்டு தான் நீ மறுவேலை பார்ப்ப!”

 

அது ஒன்னும் இல்லை.. ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வந்துது அதான் அது ராஜ் தானா னு தெரிஞ்சுக்க கேட்டேன்”

 

ஹ்ம்ம்.. இனி.. டெய்லி 

சங்கீத சுவரங்கள் 

ஏழே கணக்கா 

இன்னும் இருக்கா

என்னவோ மயக்கம்‘ ” என்று பாடவும், ஜெனிஷா,

சும்மா இருடி”

 

பார்டா சேகர் பத்தி பேசினாலே ஜெனிக்கு வெக்க வெக்கமா வருது”

 

ஹே! நீ அடி வாங்க போற”

 

நீ சைக்கோ கிட்ட அடி வாங்காம இருந்தா சரி”

 

என்னடி சொல்ற?”

 

பின்ன இனி டெய்லி நைட் டுயுட்டி பார்த்துட்டு காலேஜில் தான் தூங்க போற..”

போடி.. மாட்டிக்காம தூங்க எனக்கு தெரியும்”

 

அப்போ இனி நிஜமாவே டெய்லி,

சங்கீத சுவரங்கள் 

ஏழே கணக்கா…………….

 

போடி.. உன் வேலையை பாரு”

 

இப்போ உன் வீடுக்குலாம் வர முடியாது மா.. அப்பறம் மிஸ்டர் சுரேஷ்(ஆஷாவின் தந்தை) என்னை பிச்சுடுவார்”

 

என்னடி உளறுற?”

 

நீ உன் வேலையை பாரு‘ னு சொன்னாலே தனி அர்த்தம் தானே!”

 

ஜெனிஷா புன்னகையுடன், காலேஜில் வச்சு னா தான் உனக்கு வாட்ச்-வுமன் வேலை.. இப்போ சொன்னது உன் சொந்த வேலை தான்”

 

நேரம் தான் டி”

 

நேரம் இப்போ 9.20″

 

அது எங்களுக்கும் தெரியும்.. நீ போய் கடலை போடு.. பை” என்று கூறி ஆஷா அழைப்பை துண்டித்தாள்.

புன்னகையுடன் சற்று யோசித்த ஜெனிஷா குறும்புடன் ராஜசேகர் எண்ணை அழைத்தாள்.

ஜெனிஷா கைபேசியில் ‘voice-modulator’ என்று ஒரு வசதி உண்டு, அதன் மூலம் பெண் குரலை ஆண் குரலாக மாற்றவும், ஆண் குரலை பெண் குரலாக மாற்றவும் முடியும்.

அந்த வசதியின் உதவியுடன் ராஜசேகருடன் ஆண் குரலில் பேசும் திட்டத்துடன் அழைத்தாள்.

ராஜசேகர் ஜெனிஷாவின் எண்ணை பார்த்ததும் மகிழ்ச்சியுடன், ஹலோ நிஷு” என்று கூற,

ஜெனிஷா ஆண் குரலில்(அதவாது அவள் எப்பொழுதும் போல் தான் பேசினாள் ஆனால் ‘voice-modulator’ on செய்து இருந்ததால் ஆண் குரல் போல் ராஜசேகருக்கு கேட்டது)

ஹலோ..கொஞ்ச நேரத்திற்கு முன் இந்த நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது.. நீங்க யார் சார்உங்களுக்கு யாரு வேணும்? “

 

ராஜசேகர் அதிர்ச்சியுடன் திணறவும், இங்கே ஜெனிஷா வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.

ராஜசேகர் கைபேசியை காதில் இருந்து எடுத்து பெயரை பார்த்தான்.

பிறகு, குழப்பமும் அதிர்ச்சியுமாக, மே ஐ ஸ்பீக் டு நிஷா.. ஜெனிஷா?”

 

ஜெனிஷா கறாரான குரலில், ஜெனிஷா வோ நிஷா வோ அப்படி யாரும் இல்லை.. ராங் நம்பர்” என்று கூறி பட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டு பலமாக சிரித்தாள்.

பெரும் குழப்பத்தில் இருந்த ராஜசேகர் ஆஷாவை அழைக்கலாம் என்று யோசித்தவன், மணியை பார்த்தான். மணி 9.25 என்பதால், ‘இந்த நேரத்தில் ஆஷாக்கு போன் செய்யலாமா?’ என்று தயங்கியவன், குறுஞ்செய்தி அனுப்பினான்.

தொந்தரவிற்கு மன்னிக்கவும்.. உடனே ஒரு சந்தேகத்தை தீர்த்துக்கணும்.. ********** இது நிஷா நம்பர் தானே?”

ஆஷாவிடமிருந்து பதில் வருவதற்குள் ராஜசேகர் நிலைமை திண்டாட்டமாக தான் இருந்தது.. அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. தலை வெடித்துவிடுவது போல் இருந்தது.

ஐந்து நிமிடங்களில் ஆஷா ராஜசேகரை அழைத்தாள்.

ஹலோ ஆஷ்! அது நிஷா நம்பர் தானே!”

 

ஆமா! ஏன் சேகர் என்ன ஆச்சு?”

 

நான் கொஞ்ச நேரத்துக்கு முன் மெசேஜ் அனுப்புனேன்.. அந்த நம்பரில் இருந்து போன் வந்துது.. ஒரு ஆண் தான் பேசினாங்கஜெனிஷா னு யாரும் இல்லை.. ராங் நம்பர் னு சொல்லி வச்சுட்டாங்க”

ஆஷா புன்னகையுடன், இப்போ தான் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி ஜெனி பேசினா.. ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வந்துது னு சொல்லி அது உன் நம்பர் தானா னு செக் பண்ண போன் பண்ணேன் னு சொல்லி உன் நம்பர் வாங்கினா.. 

ஸோ ஜெனி தான் ஏதோ விளையாடுறா னு நினைக்கிறேன்”

எப்படி ஆண் குரலில்?அவளுக்கு மிமிக்கிரி தெரியுமா?”

 

சிறிது யோசித்த ஆஷா சிரிப்புடன், மிமிகிரி தெரியாது பட் அவ செல்லில் வாய்ஸ் மாடுலேடர் உண்டு”

 

ராஜசேகர் புன்னகையுடன், ஓ! ஓகே ஆஷ்.. இனி நான் பார்த்துக்கிறேன்.. தேங்க்ஸ்”

 

ஆல் தி பெஸ்ட்”

 

தன்க் யூ”

 

சேகர் உன்னிடம் ரெண்டு விஷயம் சொல்லணும்”

 

என்ன?”

 

சொன்னா ட்ரீட் தரனும்”

 

உனக்கு இல்லாததா?”

 

ஜெனி முன்னாடி இப்படி சொல்லிடாத”

ராஜசேகர் சிரிப்புடன், நிஷா இருக்கும் போது நீ யாருனே எனக்கு தெரியாதே!”

 

அட பாவிகளா!”

 

ராஜசேகர் புன்னகையுடன், சரி சரி விஷயத்தை சொல்லு”

                              

என்னை யாரு னு தெரியாதவங்களிடம் சொல்ல முடியாது”

 

அது நிஷா முன்னாடி தான்.. இப்போ நீ யாரு! என் பெஸ்ட் பிரெண்ட் ஆச்சே!”

 

ஏதோ பழகி தொலைச்சுட்டேன்.. அதனால் சொல்றேன்.. அப்ட்டர் நூன் நீ போனதுக்கு அப்பறம் நாங்க பேசிட்டு இருந்தப்ப ஜெனி..  ‘இப்போ ஒரு பேச்சு அப்போ ஒரு பேச்சு னு கிடையாது.. இந்த நிஷா எப்போதும் ஒரே பேச்சு தான்‘ னு சொன்னா.. புரிதா!”

ராஜசேகர் புன்னகையுடன், புரியுது”

                             

தென்.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன் போன் பண்ணப உன்னை ராஜசேகர்-னோ சேகர்-னோ அவ கூப்பிடலை”

ராஜசேகர் எதிர்பார்ப்புடன், அப்பறம்!”

 

ஆஷா புன்னகையுடன், அதை உன் நிஷா கிட்டயே கேட்டுகோ”

 

ராஜசேகரும் புன்னகையுடன், ஓகே.. தேங்க்ஸ் ஆஷ்..”

 

உன் தேங்க்ஸ் யாருக்கு வேணும்.. ஒழுங்கா ட்ரீட் குடு”

 

கண்டிப்பா! எங்க வேணும்?”

 

ஹ்ம்ம்.. பெருசா என்ன கேட்டுற போறேன் சின்னதா ஒரு டின்னர் ‘Royal Le Meridien’ னில்

 

ஹலோ.. ஹலோ.. சிக்னல் இல்லை னு நினைக்கிறேன் ஆஷ்.. நாளைக்கு பார்க்கலாம் பை” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

ஆஷா புன்னகையுடன், ரெண்டும் நல்ல ஜோடி தான்‘ என்று நினைத்ததுக் கொண்டாள்.

ராஜசேகர் என்னிடமே உன் வேலையை காட்டுறியா நிஷு டார்லிங்! என்று கூறி புன்னகையுடன் ஜெனிஷாவை அழைத்தான்.

தன் அறைக்குள் சென்ற மாலினி, நந்தினி மற்றும் பிருந்தாவிற்கும் கான்ப்ரன்ஸ் காள் செய்து முன்தினம் நிகழ்த்த கடத்தல் சம்பவம் மற்றும் மோகனாவுடன் பேசியதை பற்றி கூறினாள்.

பிருந்தா, அப்போ கிருஷ்ணமூர்த்திக்கு காவலன்‘ னு நிக் நேம் வச்சிறலாம்”

 

நந்தினி, ஏய் லூசு.. இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாது”

 

மாலினி புன்னகையுடன், நமக்குள்ள பேசும் போது அப்படி கூப்பிடலாம்.. பட் மோனி முன்னாடி கூட யூஸ் பண்ணிடாத ஜில்ஸ்”

 

பிருந்தா, “sure..sure.. அப்பறம் அவளிடம் மல்லுகட்ட என்னால் முடியாதுடா சாமி.. ஆனா ஒன்னு மாலு.. நீ நேண்டி(nandy)க்கு சொன்ன பழமொழி நம்ம செல்லம்ஸ்க்கு தான் பொருந்தும்”

நந்தினி, ஸ்ஸ்ப்பா.. எப்ப பார்த்தாலும் இதே பேச்சு தானாடி உங்களுக்கு!”

பிருந்தா, போடி ஔவையார்”

 

நந்தினி, இந்த பேச்சுக்கு பதில் நான் ஔவையாராவே இருந்துட்டு போறேன்”

 

மாலினி சிரிப்புடன், ஜில்ஸ்.. இப்பவும் சொல்றேன் அந்த பழமொழி நந்துக்கு தான் அப்ட் ஆ பொருந்தும்.. மோனி பொறுத்தவரை.. அவ காதலை அவளே உணரலை..”

                                 

பிருந்தா, உணர்ந்தா மட்டும் என்ன செஞ்சுட போறா!”

           

மாலினி, அந்த கவலை ஷங்கரோடது.. அவன் பார்த்துப்பான்”

 

பிருந்தா, சரி அதை விடு.. அது மோனி பாடு ஷங்கர் பாடு.. எனக்கு ஒரு டவுட்” என்று ஒருமாதிரி குரலில் கேட்கவும், மாலினி, ஜில்ஸ் உன் சந்தேகத்தை அப்பறமா கேளு”

 

என்னடி எஸ்கேப் ஆகுற!”

 

நான் ஏன் எஸ்கேப் ஆறேன்! நந்து இருக்காளே.. நீ ஏடாகூடமா கேட்டா……….”

 

ஹலோ… ஸ்டாப்.. ஸ்டாப்.. நான் அப்படி எதுவும் கேட்க வரலை.. இன்பாக்ட்  நான் அதை பற்றியே யோசிகலை.. உன் நினைப்பு தான் அதுலேயே இருக்குது.. 

ஏய் ஔவையார் லைனில் தான் இருக்கிறியா! எப்போதும் என்னை மட்டும் சொல்லுவ! இப்போ உன் செல்ல மாலுவை ஒன்னும் சொல்லமாட்டியே!”

மாலினி அவசரமாக, ஹே! நீ அதை பற்றி தானே பேசிட்டு இருந்த அதான்………”

 

பிருந்தா, அதுலாம் செல்லாது செல்லாது.. ஹே ஔவையார் லைனில் இருக்கியா இல்லையாடி?”

நந்தினி, இருக்கேன்.. இருக்கேன்.. நான் சொல்லிட்டா மட்டும் ரெண்டு பேரும் திருந்திறவா போறீங்க!”

 

பிருந்தா, திருந்துற அளவுக்கு நாங்க என்ன தப்பு பண்றோம்?”

 

நந்தினி, ஓகே மாலு.. நாளைக்கு பார்க்கலாம்”

 

பிருந்தா அவரசமாக, ஹே! இருடி.. என் சந்தேகத்தை கேட்டுறேன்”

 

நந்தினி, கேட்டுத் தொலை”

 

பிருந்தா, என்டவுட்….என்னனா……..” என்று இழுத்து இழுத்து பேச, மாலினி, ஹேய் இழுவை.. பில்ட்-அப் போதும்.. விஷயத்துக்கு வா”

 

இல்லை.. இப்படி ஹீரோஹிசம் பண்ணி உன்னை காப்பாத்தி இருக்கானே கிருஷ்ணமூர்த்தி.. அவன் மேல்…………”

மாலினி, பிருந்தா.. ஹீ இஸ் மை பிரெண்ட்”

 

பிருந்தா, அப்படியா!”

 

தேவை இல்லாம ஓட்டாத பிருந்தா..”

 

ஒன்னும் இல்லாமையா மூர்த்தி‘ னு கூப்பிடுற”

 

லூசு.. எனக்கு அந்த ‘கிருஷ்ணா’-ங்கிற பெயரே அலர்ஜியா இருக்குது”

 

அது மட்டும் தான் காரணமா!”

 

பின்ன!”

 

பார்க்கலாம்டி”

 

என்னத்தை பார்க்க போற?”

 

எதை னு உனக்கே தெரியும்”

மாலினி பேசும் முன் நந்தினி, பிருந்தா” என்று சிறு கடுமையுடன் அழைக்க,

பிருந்தா, வந்துட்டாங்க பா டீச்சரம்மா”

 

மாலினி தீவிரமான குரலில், பிருந்தா அம் சீரியஸ்லி டெல்லிங்………….”

 

பிருந்தா சிறு புன்னகையுடன், ஓகே மேடம்.. ஓகே..” 

 

மாலினி மனதினுள், ‘இவ எதை சொன்னாலும் இப்போ ஒத்துக்க போறதில்லை கொஞ்ச நாளில் அவளே புரிஞ்சுப்பா’ என்று நினைத்துக் கொண்டாள்.

மாலினி, ஓகே பிரெண்ட்ஸ்.. நாளைக்கு பார்க்கலாம்.. பை” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

ஜெனிஷா தான் தன்னிடம் பேசியது என்பதை அறிந்ததும் அவளது குறும்பை ரசித்து புன்னகையுடன் அவளை அழைத்தான் ராஜசேகர்.

ராஜசேகரின் எண்னை பார்த்ததும் ‘வாய்ஸ் மாடுலேடர்’ ‘ஆன்’ செய்துவிட்டு, ஜெனிஷா,

ஹலோ”

 

ஹலோ நிஷா..

 

என்ன சார் இப்போ தானே ராங் நம்பர் னு சொல்லிட்டு வச்சேன்”

 

ஓ! சாரி சார்.. எப்படி னு தெரியலை சார்.. நான் என் வைஃப் நிஷா நம்பரை தான் காள் பண்றேன்.. பட்………………”

 

வைஃப் ஆ!”

 

அதில் உங்களுக்கு ஏன் சார் இவ்ளோ ஷாக்?”

 

எனக்கு.. எனக்கு ஒன்னும் ஷாக் இல்லையே!”

 

அப்படியா!”

 

ஹலோ மிஸ்டர்…………..”

 

ஓகே சார்.. நான் லண்ட் லைன்க்கு போன் பண்ணி என் வைஃப் கிட்ட பேசிக்கிறேன்.. தொந்தரவுக்கு மன்னிச்சிருங்க” என்று கூறி அழைப்பை துண்டிப்பது போல் பாவனை செய்ய,ஜெனிஷா அவசரமாக, ஹலோ.. ஹலோ”

 

என்ன சார்?”

 

லண்ட் லைன் நம்பர் உனக்கு எப்படி தெரியும்?ஆஷா கிட்ட பேசுனியா?”

 

ராஜசேகர் சிரிப்பை அடக்கிக் கொண்டு, அறியாதவன் போல், என் வைஃப் பிரெண்ட் நேம் உங்களுக்கு எப்படி சார் தெரியும்?”

 

நான் உன் வைஃப் ?”

 

ச ச.. என்ன சார் ஒரு ஆம்பளை எப்படி என் மனைவியா இருக்க முடியும்?”

டேய்!”

 

என்ன சார் மரியாதை குறையுது.. கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட் னு கேள்விபட்டது இல்லையா!”

 

நீ ஆஷா கிட்ட பேசுனியா!”

 

என் வைஃப் பிரெண்ட் கிட்ட நான் பேசுனா என்ன பேசலைனா உங்களுக்கு என்ன சார்?”

 

ஜெனிஷா வாய்ஸ் மாடுலேடரை அணைத்து விட்டு, டேய் நான் உன் வைஃப் ?”

 

ராஜசேகர் ஆச்சரியம் மிகுந்த குரலில், வாவ்! வாட் அ மஜிக்! எப்படி நிஷா?”

 

டேய் ரொம்ப நடிக்காத.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”

ராஜசேகர் காதல் மிகுந்த குரலில், எந்த கேள்விக்கு நிஷு?”

 

ஜெனிஷாவின் வேகம் குறைந்தது.

உனக்கே தெரியும்”

 

ராஜசேகர் புன்னகையுடன், ஆஷா கிட்ட இப்போ தான் பேசினேன்.. ஏன் நான் பேச கூடாதா?”

 

நான் அதை கேட்கலை”

 

அப்பறம்?”

 

“…”

 

சொல்லு நிஷு.. எதை கேட்கிறநீ சொன்னா தானே எனக்கு தெரியும்?”

ஜெனிஷா மனதினுள், நிஷா இவன் சரியான திருட்டு பையன்.. நீ வெக்கப்பட்ட வேலைக்கு ஆகாது.. இவன் ஓட்டிட்டே தான் இருப்பான் என்று கூறிக் கொண்டு, ஹ்ம்ம்.. நான் என்ன உன் வைஃப் ?”

 

ராஜசேகர் நிதானமாக அழுத்தமாக, ஆமா” என்றான். இரண்டு நொடிகள் இடைவெளி விட்டு ராஜசேகரே பேசினான், மென்மையாக காதலுடன், நீ எப்போ என் காதலை அக்செப்ட் பண்ணியோ அப்பவே நீ மனசளவில் என் மனைவி ஆகிட்ட நிஷா.. இதை மாற்ற யாராலும் முடியாது”

ஜெனிஷாவிற்கு பேச்சே வரவில்லை..

சின்னச்சிறு காரியத்திற்காக தன்னிடம் வழியும் பசங்களை மறைமுகமாக ஊக்குவித்து காரியம் சாதித்து இருக்கிறாள், பசங்களின் சைகாலஜி அறிந்தவள் தான்.. சில நல்ல பசங்கள் அவளிடம் உண்மையாக காதலை கூறியிருக்கிறார்கள் தான் ஆனால் அவர்களில் யார் மீதும் வராத காதல் உணர்வு எப்போதும் தன்னை சீண்டிய ராஜசேகர் மேல் வந்தது.. இந்த காதல் அனுபவம் அவளுக்கு முற்றிலும் புதுமையானது.. ராஜசேகரின் காதலில் கரைந்தாள்..

ஜெனிஷா காதலுடன், ஐ லவ் யூ ராஜ்” என்றாள்.

ராஜசேகர் விண்ணை தொட்ட உணர்வை பெற்றான். அவனுக்கு மகிழ்ச்சி தொண்டையை அடைக்க வார்த்தையே வரவில்லை.

சில நொடிகள் இனிமையான மௌனத்தில் கழிய, ராஜசேகர் தொண்டையை சீர் செய்துக் கொண்டு, நிஷு இன்னொரு தடவ சொல்லேன்” என்று கரகரத்த குரலில் கூற,

ஜெனிஷா சிறு வெக்கம் கலந்த புன்னகையுடன் தலையை முடியாது என்று ஆட்டினாள்.

[இது என்ன வீடியோ காள் ஆ ஜெனி! நீ தலையை ஆட்டினா அவனுக்கு எப்படி தெரியும்!]

ராஜசேகர், நிஷு.. லைனில் தானே இருக்க?”

 

ஹ்ம்ம்”

 

என்ன அமைதியா மாறிட்ட!”

ஜெனிஷாவிற்கே தன் அமைதி ஆச்சரியமாக இருந்தது. தானா இப்படி மெளனமாக இருப்பது! இவனின் குரலுக்கே வெக்கப் படுவது! என்று பெரிதும் ஆச்சரியம் கொண்டாள், ஆனால் இது அவளுக்கு மிகவும் பிடித்தது.

நிஷு.. பதில் சொல்லு”

 

நீ தான் மாத்திட்ட”

கர்வம் கலந்த மகிழ்ச்சியுடன் ராஜசேகர், அப்படியா!”

 

எதுக்கு போன் பண்ண?”

என் வைஃப் கிட்ட பேச காரணம் வேணுமா?”

 

ராஜ்”

 

என்ன நிஷு டார்லிங்”

 

என்னை.. ஹ்ம்ம்.. எப்படி என் மேல் லவ் வந்துது?”

 

உனக்கு என் மேல் எப்படி லவ் வந்தது?”

 

நான் தான் பஸ்ட் கேட்டேன்”

 

நீயே பஸ்ட் பதிலும் சொல்லிடு”

 

இது சீடிங்”

ராஜசேகர் சிரிப்புடன், சொல்லு நிஷு.. எப்படி என் மேல் லவ் வந்தது?”

 

தெரியலையே! எனக்கே அது ஆச்சரியமா தான் இருக்குது”

 

அடி பாவி”

ஜெனிஷா சிரித்தாள்.

ராஜசேகர், என்ன சிரிப்பு?”

 

ஓகே நீ சொல்லு என் மேல் எப்படி லவ் வந்துது?”

 

லவ்க்கு காரணம் கிடையாது நிஷு.. காரணம் இருந்தா அது லவ்யே இல்லை”

 

இந்த இத்து போன வசனத்தை மாத்துங்க டா”

 

ஓல்ட் இஸ் கோல்ட் நிஷு.. அண்ட் இட்ஸ் ட்ரூ டூ”

 

தாங்கலை”

ராஜசேகர் புன்னகையுடன், இன்னொரு முறை சொல்லு நிஷு”

 

அவன் எதை சொல்கிறான் என்பதை நன்கு அறிந்த ஜெனிஷா புன்னகையுடன், தாங்கலை”

 

ஏய்! நான் இதையா சொன்னேன்?” என்று சிறு ஏமாற்றத்துடன் ராஜசேகர் கூற,

சொல்லு ராஜ்.. எதை கேட்கிறநீ சொன்னா தானே எனக்கு தெரியும்” என்று அவன் கூறியதையே திருப்பி கூறினாள்.

ராஜசேகர் புன்னகையுடன், எனக்கே வா!”

 

அது என்ன உனக்கே வா!”

 

சரி அதை விடு.. நான் கேட்டதை சொல்லு..”

 

எப்படி விட முடியும்?”

 

ஓகே ஓகே.. நான் ஒன்னும் பெரிய இவன் இல்லை.. போதுமா”

 

என்னடா இப்படி பட்டுன்னு சரெண்டர் ஆகிட்ட.. சப்புன்னு போச்சே!”

 

உன்னிடம் தானே சரெண்டர் ஆனேன்..” என்று காதலுடன் கூற, ஜெனிஷா, இப்படி பேசியே என்னை மயக்குற டா நீ”

ராஜசேகர் புன்னகையுடன், அப்படியா!”

                       

ஹ்ம்ம்..”

 

அப்படியே மயக்க கிறக்கத்துடன் அந்த நாலு வார்த்தையை சொல்லு டா செல்லம்”

நாலு வார்த்தையா!”

 

ஆமா.. என் பெயரையும் சேர்த்து சொன்னேன்”

 

ஆஷா சொன்னது போல் அவர்களின் பேச்சு காலைவரை நீடித்தது. என்ன பேசினார்கள் என்று கேட்டால் அதற்கு அவர்கள் பதில் ‘தெரியாது’ அல்லது ‘ஒன்றுமில்லை’ என்பதாக தான் இருக்கும்.

காலை 6 மணிக்கு பேச்சை முடித்த போது ராஜசேகர், இன்னைக்கு அரை மணி நேரம் முன்னாடியே  காலேஜ் வந்துரு நிஷு செல்லம்..” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

மழை 19:

CSE வகுப்பு :

வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின் உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின் இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை உரசியவாறு இடதுபுற ஓரத்தில் இருந்த இருக்கையின் ராஜசேகர் அமர்ந்து கண்களால் அவளை பருகிக் கொண்டிருந்தான்.

[இருவர் மட்டுமே இருந்தனர். இருவரும் அமர்ந்திருந்த இடத்தை சற்று தொலைவில் இருந்து ஜன்னல் வழியாகவோ வாசல் வழியாகவோ பார்த்தால் தெரியாது]

ஜெனிஷா, இப்படி அமைதியா உட்கார்ந்துட்டு இருக்க தான் என்னை சீக்கிரம் வர சொன்னியா?”

ராஜசேகர் கண்ணில் காதலுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, ஜெனிஷா, நீ சரி வர மாட்ட.. நான் என் ப்ளேஸ்க்கு போறேன்” என்று கூறி இறங்க,

ராஜசேகர், நீயே சொல்லிட்ட.. இப்போ என் கைக்கு வேலை கொடுக்கவா வாய்க்கு கொடுக்கவா?” என்று கேட்டபடி ஒற்றை விரலால் அவளது இடது கன்னத்தை வருடியபடி அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

ஜெனிஷா சற்று திணறித் தான் போனாள். ஒருவாறு தன்னை சமாளித்து, அவன் விரலை தட்டிவிட்டுவிட்டு, உன் கைக்கு ஒன்னும் வேலை தர வேணாம்”

 

ராஜசேகர் கண்கள் மின்ன, அப்போ வாய்க்கு வேலை தரவா நிஷு”

 

வாயை திறந்து பேசு என்ற அர்த்தத்தில் ஆமா என்று சொல்ல வந்த ஜெனிஷா அவன் கண்கள் சொன்ன செய்தியில், ஏய்!” என்று கூறி ஆள்காட்டி விரலால் மிரட்டியபடி பின்னால் நகர சுவற்றில் முட்டி நின்றாள்.

ராஜசேகர் அவளது இருபுறமும் சுவற்றில் தனது கைகளை பதித்து, கண்களை பார்த்து, கிசுகிசுப்பான குரலில், என்ன நிஷு.. ஸ்பெஷல் கிப்ட் வேணாமா?”

 

ஜெனிஷாவின் நெஞ்சம் படபடத்தது, எழும்பாத குரலில், அவனது தோளைப் பார்த்து, ராஜ்.. இது கிளாஸ் ரூம்”

 

ராஜசேகர் மென்னகையுடன், யாராது வந்தா குரு விசிலடிப்பான்” என்று கூறியபடி அவளை சிறிது நெருங்கினான், ஆனால் தொடவில்லை.

ஜெனிஷாவின் இதயத்துடிப்பு அதிகரித்தது, பயம் கலந்த எதிர்பார்ப்புடன் கண்களை மூடிக்கொண்டாள்.

ராஜசேகர் புன்னகையுடன் “கண்ண திற நிஷு”

 

ஜெனிஷா கண்களை திறக்காமல் மறுப்பாக தலையை ஆட்டினாள்.

ராஜசேகர் புன்னகையுடன் ஜெனிஷாவின் முகத்தை நெருங்கி, இதழை குவித்து அவளது மூடிய இரு கண்கள் மேலும் லேசாக காற்றை ஊதி, நிஷு.. ஐ லவ் யூ டா” என்று கூறி அவளது வலது கரத்தில் ஒரு ப்ரேஸ்லட்டை அணிவித்தான்.

ஜெனிஷா கண்களை திறக்க, ராஜசேகர் அவளது வலது கை மணிக்கட்டை அவளது முகத்திற்கு முன் கொண்டு வந்து கண்ணில் குறும்புடன்  புருவம் உயர்த்தினான்.

ராஜசேகரின் முத்தத்தை எதிர்ப்பார்த்த ஜெனிஷாவிற்கு ஏமாற்றமாக இருந்தாலும், அதை பெளிப்படையாக கூற முடியாமல், தன் மனதை மறைத்து அந்த ப்ரேஸ்லட்டை பார்த்தாள். சங்கிலியின் நடுவே இரு இதயங்கள் இணைந்திருக்க, அவை இணைந்த இடத்தில் சிறிய வெள்ளைக் கல் இருந்தது. ஜெனிஷாவிற்கு மிகவும் பிடித்தது. அதை அவள் கண்கள் மின்னியத்தில் இருந்து அறிந்த ராஜசேகர்,

இமிடேஷன் தான்.. நம்ம என்கேஜ்மென்ட்க்கு தங்கத்தில் போடுறேன்” என்று கூறி கண்சிமிட்டினான்.

 

எனக்கு பிடிச்சிருக்கானே கேட்கலை.. அதுக்குள்ள என்கேஜ்மென்ட்.. கோல்ட் ப்ரேஸ்லட் னு………………….”

 

உனக்கு பிடிச்சிருக்கு னு எனக்கு தெரியும்”

 

நான் அப்படி சொல்லவே இல்லையே!”

 

நீ சொல்லலைனாலும் எனக்கு தெரியும்”

 

அது எப்படி……………”

 

உன் காதலை கூட தான் நீ சொல்றதுக்கு முன் கண்டுபிடிச்சேன்” என்று கூறி வழக்கமான வசீகர புன்னகையை உதிர்த்தான்.

ஒரு நொடி தன்னை மறந்து ரசித்தவள், தன்னை சுதாரித்து, பட் இது கரெக்ட் இல்லை”

ராஜசேகர் புன்னகை மாறாமல், அப்படியா!”

 

ஆமா”

 

எங்க..என் கண்ணை பார்த்து சொல்லு.. உனக்கு பிடிக்கலை னு” 

 

ஜெனிஷா அவன் கண்களை பார்த்து, நான் பிடிக்கலை னு சொல்லலையே பட் நீ சொன்னது கரெக்ட் இல்லை”

ராஜசேகர் புருவம் உயர்த்த, ஜெனிஷா புன்னகையுடன், எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குது”  என்று புன்னகையுடன் கூறி தலை சரித்து, இரண்டுமுறை புருவம் உயர்த்தினாள்.

ராஜசேகர் மென்மையாக சிரித்தான், ஜெனிஷாவும் சிரித்தாள்.

ராஜசேகர் ஜெனிஷாவின் இடதுப்புற நெற்றியில் இருந்து நாடிவரை ஒற்றை விரலால் வருடியபடி, ஆனா நீ எதிர்பார்த்தது இது இல்லை தானே நிஷு” என்று கிறக்கமான குரலில் கூற,

ஜெனிஷவின் சிரிப்பு மறைந்து இதயத்துடிப்பு அதிகரித்தது, ராஜசேகரின் விரல் அவளது நாடியில் இருக்க, அதை தட்டிவிடும் எண்ணம் கூட இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

அப்பொழுது விசில் சத்தம் கேட்க, இருவரும் சட்டென்று விலக, ஜெனிஷா அவசரமாக தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள். முதல் வரிசையிலேயே அமர்ந்த ராஜசேகர் ஜெனிஷாவின் பை அடுத்த இருக்கையில் இருந்ததை பார்த்து, அவசரமாக அதை எடுத்து, நிஷா….பக்” என்று கூறி அதை வீச, அதை சரியாக பிடித்த ஜெனிஷா, அதை தன் மேஜை மேல் வைத்து, அதை திறந்து, உள்ளிருந்து எதையோ எடுப்பது போல் பாவனை செய்ய, ராஜசேகர் மேஜையில் தாளம் போட ஆரம்பித்தான்.

சில நிமிடங்கள் கழிந்தும் யாரும் வராமல் போக, ராஜசேகர் ஜெனிஷாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மெல்ல எழுந்து வெளியே சென்றான்.

வெளியே சிவகுருவை தவிர வேறு யாரும் இல்லை.

ராஜசேகர், என்ன டா.. எதுக்கு விசில் அடிச்ச”

 

நான் எப்போ டா அடிச்சேன்?”

 

இப்போ தானே டா அடிச்ச!”

அப்படியா!”

 

டேய்!”

 

மச்சான்.. கூல்.. நான் விளையாடலை.. நிஜமாவே நான் தெரியாம தான் அடிச்சேன்”

 

அது எப்படி டா தெரியாம அடிப்ப?”

 

அது வந்து டா.. பிருந்தா கேன்டீன் போறதை பார்த்தேனா! அதான் என்னை அறியாம.. ஹி ஹி ஹி” என்று சிரிக்கவும், ராஜசேகர் கடுப்புடன் அவனை முறைத்தான்.

சிவகுரு, என்ன மச்சான்.. கிஸ் மிஸ் ஆகிருச்சோ!”

 

ராஜசேகர் இன்னமும் கடுப்புடன் முறைக்க, சிவகுரு அவனது தோளில் கை போட்டு,

விடு டா மச்சான்.. நாளைக்கு கிஸ் அடிச்சுக்கலாம்”

 

ராஜசேகர் பல்லை கடித்துக் கொண்டு, உன்னை போய் காவலுக்கு நிக்க சொன்னேன் பாரு…………”

சிவகுரு அலட்டிக் கொள்ளாமல் “பட்டா செருப்… இல்ல பட்டா ஷு வச்சு உன்னை நீயே அடிச்சுக்கோ

 

இரு டா.. எனக்கு ஒரு காலம் வரும்.. அப்போ உன்னை கவனிச்சுக்குறேன்”

 

எங்க டா! இங்க லுக்குக்கே வழியை காணும்.. இதுல எங்க”

 

நீ இப்படியே ஏறுக்கு மாறா பேசிட்டே இருந்தா!”

 

ச்ச்.. என்ன பண்றது கூடவே பிறந்தது”

 

பிறக்கும் போதே பேச ஆரம்ச்சிட்டியா!”

 

நீ கூட நல்ல கடிக்குற டா மச்சி”

 

என்ன பண்றது.. சகவாச தோஷம்”

 

சிவகுரு சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, “அது தான் அய்யாவோட ஸ்பெஷல்”

 

ராஜசேகர், தூ”

 

சரி.. விடு.. விடு.. வரியா.. கேன்டீன் போய் ஒரு டீ அடிக்கலாம்”

 

என்னவோ சரக்கு அடிக்க கூப்பிடுறது போல் கூப்பிடுற..”

சிவகுரு புன்னகையுடன், அதை விட இது அதிக கிக் தரும் டா”

ஒரு நொடி யோசித்த ராஜசேகர் புன்னகையுடன், “ஓ உன் ஆள் கேன்டீன் போனதா சொன்னியே.. இரு நிஷா கிட்ட சொல்லிட்டு வரேன்”

தேவியார் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டீங்களோ” என்று சிவகுரு கலாட்டா செய்ய, ராஜசேகர் புன்னகையுடன், இரு டா.. உன்னையும் பார்க்க தானே போறேன்”

 

பாரு டா.. நல்லா பாரு”

பார்க்கிறேன்” என்று கூறிய படி வகுப்பறை உள்ளே சென்று ஜெனிஷாவிடம் சொல்லிவிட்டு வந்தான்.

மாலினி வருவதை கேன்டீன் உள்ளே இருந்து பார்த்த பிருந்தா அவசரமாக மாலினி‘ என்று அழைத்தபடி ஓடி வந்தாள்.

திரும்பி பார்த்த மாலினி, புன்னகையுடன் நின்றாள். பிருந்தா அவள் அருகே வந்ததும்,

குட் மார்னிங் ஜில்ஸ்.. எங்க நேண்டியை காணும்!”

 

அவ இன்னைக்கு வரலை.. தலை வலி னு சொன்னா”

 

என்ன திடீர் னு?”

 

தலை வலி என்ன சொல்லிகிட்டா வரும்?”

 

அது இருக்கட்டும்.. நீங்க என்ன மேடம் கேன்டீன் உள்ள இருந்து வரீங்க! நேத்து ஏதோ சொன்னதா நியாபகம்!”

 

நான் ஒன்னும் சாப்பிடல போகலை”

 

அப்பறம்!”

சிவகுரு, என்ன டா சொல்லிட்டு வந்த?”

 

ராஜசேகர், “PT வந்துட்டு இருந்தாராம்.. அப்பறம் திரும்பி போயிட்டாராம்.. அதான் விசில் அடிச்சிருக்கான் னு சொல்லிட்டு வந்தேன்”

 

எதுக்கு டா பொய் சொன்ன?”

 

ஆமா நாமலாம் அரிச்சந்திரன் பரம்பரை! பேசாம வா டா..

 

பொய் சொல்ல கூடாது னு சொல்லலை டா.. எதுக்கு சொன்ன னு தான் கேட்டேன்”

 

ஏற்கனவே முதல் நாளே  நீயும் அவளும் சண்டை போட்டீங்க.. இப்போ தான் அதை மறந்துட்டு இருக்காஇதுல இதை சொன்னேன்!”

 

முதல் நாள் இல்லை டா ரெண்டாவது நாள்”

 

எங்களுக்கு அது தானே முதல் நாள்”

 

ஓகே.. பட் அவ மறந்திருக்க மாட்டா… உன் பிரெண்ட் னு விட்டுருப்பா”

 

ஏதோ ஒன்னு.. சமாதானம் ஆனா சரி..”

 

பட் உன் ஆளு அத்தோட விட்டுருக்க மாட்டாளே!”

 

ஹ்ம்ம்… இவ்ளோ நேரம் இதையா பேசிட்டு இருந்தீங்க னு கேட்டா.. நீ என்னை ஓட்டிட்டு இருந்த னு சொன்னேன்… நீ என்ன பைக் ஆ காரா ஓட்டுறதுக்கு‘ னு கேட்டா..ஆஷா உன்னை ஓட்டுனா னு சொன்னியே.. அப்போ நீ என்ன பைக் ஆ காரா?’ னு கேட்டு, ‘கேன்டீன் போயிட்டு வரேன்‘ னு சொல்லிட்டு வந்தேன்

ஹ்ம்ம்.. இதுக்கு உண்மையையே சொல்லி இருக்கலாம்”

 

அது இல்ல டா  மச்சி.. பிருந்தா பத்தி நீயே இன்னும் ஒழுங்கா முடிவு பண்ணலை……”

 

யாரு சொன்னா?”

 

அட பாவி.. நீ தானே டா நேத்து சொன்ன”

 

அது நேத்து சொன்னது..”

அப்போ இன்னைக்கு?”

 

அது.. அது வந்து.. நான் அவள.. லவ் பண்றேன் டா”

 

சிவகுரு சொன்னவிதத்தில் ராஜசேகர் நின்றேவிட்டான்.

ராஜசேகர், டேய் மச்சி.. என்ன டா பொண்ணு மாதிரி வெக்கப் படுற!”

 

என்ன பண்றது.. என் ஆளு கண்டிப்பா வெக்கப் பட மாட்டா..”

 

ராஜசேகர் புன்னகையுடன், அதுனால நீங்க படுறீங்கலாக்கும்”

 

ஹி ஹி ஹி”

மாலினி குரலில் இருந்தே அவள் தன்னை நம்பவில்லை என்பதை உணர்ந்த பிருந்தா சிறு கடுப்பு கலந்த குரலில், நிஜமா தான் மாலு.. நான் சாப்பிட போகலை.. நான் வரும் போது அந்த குரங்கு காரிடரில் நிக்குறதை பார்தேனாசும்மாவே கிண்டல் பண்ணி கடுப்பேத்துவான்இதுல தனியா போனா.. சொல்லவா வேணும்! அதான் கேன்டீன் போனேன்.. நீ வந்ததும் உன் கூட ஜாயின் பண்ணிட்டேன்”

மாலினி புன்னகைக்கவும், பிருந்தா, எதுக்குடி சிரிக்கிற?”

 

சிவாக்கு பயப்படுறியா?”

 

அந்த குரங்குக்கு யார் பயந்தா?”

 

அப்பறம் எதுக்கு மேடம் கேன்டீன் போய் ஒளிந்தீங்க”

 

அது பயம் இல்லை.. அவன் எதையாது பேசி என்னை டென்ஷன் பண்ணுவான்”

 

இப்போ மட்டும் பண்ண மாட்டானா?”

 

பண்ணுவான் தான்.. நீ ஏதாவது சொல்லி ஆஃப் பண்ண மாட்ட!”

பார்க்கலாம்” என்றவள் சிரிப்புடன், நூறாயுசு”

 

யாருக்கு?”

 

இவ்ளோ நேரம் யாரை நீ புகழோ புகழ் னு புகழ்ந்துட்டு இருந்தியோ அவனுக்கு தான்”

 

பிருந்தா மாலினியை பார்க்க, மாலினி, ‘அங்க பாரு’ என்று கண்ணால் செய்கை செய்தாள்.

மாலினி சுட்டிக்காட்டிய திசையில் சிவகுரு வருவதை பார்த்த பிருந்தா எரிச்சலுடன்,

மாலு.. நாம அந்த வழியா போகலாம்” என்றாள்.

பிருந்தாவும் மாலினியும் வழியை மாற்றுவதை பார்த்த சிவகுரு சத்தமாக, மச்சான் கேன்டீன் போக வேண்டாம் டா.. வா க்ளாஸ்க்கே போகலாம்”

ராஜசேகர் ‘ஏன்?’ என்று கேட்கவில்லை ஆனால் சிவகுரு மீண்டும் சத்தமாக பேசினான், எதுக்கா.. இப்போ கேன்டீனில் ஒன்னும் இருக்காது டா.. எல்லாம் காலியாகி இருக்கும்..”

பிருந்தா கோபமாக அவனை முறைக்க, மாலினி, “பிருந்தா எதுவும் பேசாம வா..”

 

அது எப்படி மாலு! அவன் என்னை தான் சொல்றான்”

 

நீ பேசுனா தான் ஏதாது சொல்வான்.. நீ அவனை கண்டுக்கவே இல்லை னா விட்டுருவான்”

 

பேசலைனா இன்னும் அதிகமா தான் பேசுவான்.. இரு அவனை ஒரு கை பார்த்துட்டு வரேன்”

 

சொன்னா கேளு பிருந்தா……………..”

பிருந்தா சிவகுருவை நோக்கி சென்றாள். மாலினி, ‘சொன்னா கேட்க மாட்டியே! என்று முணுமுணுத்தபடி பிருந்தா பின் சென்றாள்.

பிருந்தா கோபமாக சற்று குரலை உயர்த்தி , டேய் கொழுப்பா?”

 

சிவகுரு இரண்டு கைகளையும் முகத்திற்கு அருகே வைத்து, தோள்களை லேசாக குலுக்கி, பயப்படுவது போல் பாவனை செய்து, ஐயோ பயமா இருக்கே! சேகர் என்னை காப்பாத்து டா” என்று அலறுவது போல் கூறியவன்(பிருந்தா கை முஷ்டியை இறுக்கமாக மூடி, அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்) சிறு புன்னகையுடன், என்ன கேட்ட! கொழுப்பா னா.. (முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு) கொழுப்பு இல்லையே நேத்து கூட ப்ளட் டெஸ்ட் பண்ணி பார்த்தேனே!”

பிருந்தா உதட்டை பிதுக்கி, ஒழுங்கா செக் பண்ணு.. ரொம்ப லோ கொலெஸ்ட்றால் இருந்தா நியுரோ-பயோலாஜிக்கல் ப்ராப்ளம் ஆர் கன்சர் இருக்கும் னு முன்னாடி எதுலையோ படிச்சேன்”

சிவகுரு புன்னகையுடன், தகவலுக்கு நன்றி.. பட் இது உன் ஸ்டைல் இல்லையே (பிருந்தாவை போல் உதட்டை இடது புறமாக சுளித்து, நாடியை இடது தோள்பட்டையில் இடித்து) இது தானே உன் ஸ்டைல்”

 

பிருந்தா கண்களை லேசாக சுருக்கி, தலையை ஆட்டியபடி வழித்து காண்பித்துவிட்டு நகர முற்பட, சிவகுரு விரிந்த புன்னகையுடன் அதை ரசித்தான்.

சிவகுரு, நான் சொன்னேன் னு டயட் ஆரம்சுட்ட போல” என்று புன்னகையுடன் கூற,

பிருந்தா பின்னால் திரும்பி மாலினியை முறைத்தாள்.

சிவகுரு, ஸோ நான் சொன்னது உண்மை..” என்று சத்தமாக சிரித்தவன், மாலினியை ஏன் முறைக்கிற.. அவ ஒன்னும் சொல்லலை.. நேத்து நீ கேன்டீனில் எதையும் வாங்கி சாப்பிடலை.. அதை பார்த்து தான் ஒரு கெஸ்ஸில் கேட்டேன்.. நா………………….”

பிருந்தா சிவகுருவை கோபமாக முறைத்துக் கொண்டு நிற்க, மாலினி வேகமாக தலையை ஆட்டி ‘எதுவும் சொல்லாதே’ என்று கண்ணால் செய்கை செய்தாள். மாலினி கூறுவது புரியவில்லை என்றாலும் சிவகுரு பேச்சை நிறுத்தினான்.

ஆனால் மாலினி எதற்காக அவசரமாக தலையை ஆட்டி சிவகுருவின் பேச்சை நிறுத்தினாளோ அது பயனின்றி போனது. பிருந்தா கோபமாக, சிறு ஆவேசத்துடன், நீ சொன்னேன் னு டயட் இருக்கேனா! லூசு.. நீ சொல்லி நான் செய்வதா.. நான் டயட் ஒன்னும் இருக்கலை.. இருக்கவும் மாட்டேன்”

மாலினி தனக்கு தானே தலையை மறுப்பாக ஆட்டி பெருமூச்சை வெளியிட, சிவகுருவுக்கு முன்பு மாலினி என்ன சொன்னால் என்பது புரிந்துவிட, சிறு புன்னகையுடன் பிருந்தாவிடம், அதானே பார்த்தேன்.. என்ன டா இவ டயட் இருக்க போறாளா! அது இவளால முடியாத காரியமாச்சே னு ரொம்ப ஆச்சரியப் பட்டேன்”

 

பிருந்தா ஆவேசமாக, டேய் குரங்கு.. டயட் இருந்து காமிக்கிறேன் டா “

 

சிவகுரு சிரிப்புடன், ஏய் பிந்துஸ் காமெடி பண்ணாத டா.. டயட் னா ஒரு நாள் இருக்கிறது இல்லை”

பிருந்தா பல்லை கடிக்கொண்டு, உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கடா?”

                                      

அது இருக்கு நிறைய.. அது எதுக்கு உனக்கு?”

 

ஹ்ம்ம்.. குப்பையில் போட”

 

என் மனசுக்குள்ள தனியா ஒரு ரிசைக்கில்-பின் வச்சிருக்கிறேன்.. ஸோ அந்த வேலையை நானே பார்த்துக்கிறேன்.. நீ வீணா கவலைப் படாத”

பிருந்தா உதட்டை இடது புறமாக சுளித்து, நாடியை இடது தோள்பட்டையில் இடித்தாள்.

சிவகுரு புன்னகையுடன், இத இத இதத்தான் எதிர்ப்பார்த்தேன்”

பிருந்தா பல்லை கடித்து, கையை கோபமாக உதறிவிட்டு வேகமாக வகுப்பறையை நோக்கி சென்றாள்.

பிருந்தா போன திசையை பார்த்து ராஜசேகர், பாவம் டா அவ..”

 

தோடா.. சொல்ல வந்துட்டார் பாசமலர் சிவாஜி.. நீ ஜெனிஷாவை பண்ணாததா?”

 

அது.. நீ ரொம்ப பண்றியோ……………..” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் அப்போழுது தான் மாலினி அங்கே நிற்பதை பார்த்து, என்ன சிஸ்டர்?” என்றான்.

மாலினி சிவகுருவை பார்த்து சிறு புன்னகையுடன், தேங்க்ஸ்” என்றாள்.

ராஜசேகர் ஆச்சரியமாக பார்க்கவும், மாலினி புன்னகையுடன் ராஜசேகரிடம், தேங்க்ஸ் சொன்னது பிருந்தா இனி டயட் மெயிண்டன் பண்ணுவா..  அக்ஷுவலி.. நியாயமா பார்த்தா கோபம் தான் வரணும் பட் எனக்கு சிவாவை பற்றி தெரியுமே.. அதான் இதில் தலையிடலை”

 

சிவகுரு, என்ன தெரியும்?”

             

அவர்கள் இருந்த இடத்தை சுற்றி ஒரு பார்வை பார்த்த மாலினி சிறு புன்னகையுடன் , நீ பிருந்தாவை லவ் பண்றது”

                   

சிவகுருவும் ராஜசேகரும் வாயடைத்து நிற்க, மாலினி, எதுக்கு இவ்ளோ ஷாக்கிளாஸ்க்கு தானே.. நடந்துட்டே பேசலாமே.. ரொம்ப நேரம் இங்கேயே நிற்பது நல்லதல்ல”

நடந்தபடியே சிவகுரு,”அவ்ளோ வெளிபடையா வா தெரிது?” என்றும்

ராஜசேகர், எப்படி சிஸ்டர்?” என்றும் ஒரே நேரத்தில் சிறு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கேட்டனர்.

மாலினி, மத்தவங்களுக்கு ஈஸியா தெரியாது பட் நான் உன்னை ஸ்கூலில் இருந்தே பார்த்துட்டு இருக்கிறேனே!”

 

சிவகுரு, “பட் நாம ஒரே கிளாஸ் இல்லை.. ஈவன் பேசிகிட்டது கூட இல்லையே”

 

செல்வா விஷயத்தில் நீ எப்படி என்னை நம்புன?”

 

“…”

 

பசங்க பொண்ணுங்களை பற்றி பேசுவது போல் பொண்ணுங்க பசங்களை பற்றி பேசுவாங்க தானே.. நான் ஓரளவுக்கு ஒருத்தரை கரெக்ட்டா தான்  ஜட்ஜ் பண்ணுவேன்.. ஆல்ஸோ(புன்னகையுடன்) நீ தான் ஸ்கூலில் பேமஸ் அவுட் ஸ்டாண்டிங் பர்ஸ்னாலிட்டி ஆட்சே”

சிவகுரு தன் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்ள, ராஜசேகர், ஸ்கூலில் மட்டும் இல்லை சிஸ்டர்.. இங்கேயும் தான்..”

சிவகுரு, விடுடா.. ஓவரா புகழாத”

 

ராஜசேகர், சிஸ்டர் PT” என்று கூற, மாலினி இரண்டடி இடைவெளி விட்டு முன்னால் அமைதியாக செல்ல, ராஜசேகரும் சிவகுருவும் தங்களுக்குள் பேசிக் கொள்வது போல் பாவனை செய்து மாலினியை கண்டுக் கொள்ளாமல் நடந்து சென்றனர்.

மாலினி வகுப்பறை உள்ளே சென்று அமர்ந்ததும் பிருந்தா சிறு கோபத்துடன், அந்த குரங்கு கூட உனக்கு என்ன அரட்டை”

 

நான் சிவா கூட தான் பேசினேன் னு எப்படி சொல்ற?”

 

வேற யார் கூட பேசிட்டு இருந்தயாம்?”

 

சேகர் கூட தான் அங்க இருந்தான்”

 

என்னவோ போ.. ஆனா நீ பண்றது எனக்கு பிடிக்கலை மாலு”

 

என்ன பிடிக்கலை?”

 

நீ பார்ஷியாலிட்டி பார்க்கிற”

 

வாட்?”

 

என்ன வாட்? புடலைங்கா வாட்..” என்று பிருந்தா எரிச்சலுடன் கூற, மாலினி சிரித்தாள்.

பிருந்தா கோபமாக, மாலு.. அம் சீரியஸ்”

                       

மாலினி தீவிரமான குரலில், ஓகே சொல்லு.. நான் என்ன பார்ஷியாலிட்டி பார்க்கிறேன்?”

 

மோனிக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ற.. பட் என் விஷயத்தில் அந்த குரங்கை நீ ஒண்ணுமே சொல்வதில்லை”

 

ஹே லூசு.. நீயும் மோனியும் ஒன்றா?”

 

“…”

 

” அவ குழந்தை மாதிரி.. பட் நீ அப்படியா! முதல்ல சிவா விஷயத்தை நீ ஏன் இவ்ளோ பெருசா நினைக்கிற?”

 

நான் பெருசா நினைக்கிறேனா… அப்போ அவன் என்னை இன்சல்ட் பண்றது சப்ப மேட்டர் னு சொல்றியா?”

 

நான் அப்படி சொல்லலை டா.. நீ பதிலுக்கு பதில் பேசுறதால் தான் அவன் உன்னை சீண்டிட்டே இருக்கிறான்”

 

அவன் என்ன வேணாலும் பேசுவான் நான் அமைதியாவே இருக்கனுமா.. என்னால முடியாது”

 

அப்போ அவனும் சீண்டிட்டே தான் இருப்பான்”

 

ச்ச்”

 

அவன் ஏன் சீண்டுறான்னு யோசிச்சியா?”

“…”

 

மே பீ அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கலாம்.. அதான் வி……………………”

 

அவனுக்கா சான்ஸ்யே இல்லை..(பிருந்தா ஆவேசமாக பேசுவதை பார்த்துக் கொண்டே சிவகுரு தன் இருக்கையில் அமர்ந்தான்.. அதை கவனித்த பிருந்தா )

பார்க்கிறதை பாரு.. கண்ணு ரெண்டையும் நோண்டணும்.. முதல்ல அந்த வாயை தைக்கணும்”

 

மாலினி சிரிப்புடன், இதை மேக்ஸ் சார் கிட்ட சொல்லு.. சந்தோஷமா ஆதரவு தருவார்”

                        

என் நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா!”

 

இல்லை டா.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. கூல் டோவ்ன்..” என்று கூறி தண்ணீர் பருக கொடுத்தாள்.

பிருந்தா நீரை பருகிவிட்டு, சிறிது சாந்தமான பிறகு, மாலினி மெல்ல பேச்சை திசை திருப்பி அவளை இயல்பிற்கு கொண்டு வந்தாள்.

அதே நேரத்தில், ஜெனிஷா ராஜசேகரை முறைத்துக் கொண்டே, கேன்டீன் போனமா வந்தோமா.. இல்லாம வரவழில என்ன அரட்டை”

(ராஜசேகர் மாலினியுடன் பேசியபடியே வரண்டாவில் நடந்து வந்ததை ஜன்னல் வழியாக ஜெனிஷா பார்த்துவிட்டாள்.)

ராஜசேகர், குரு தானே பிருந்தா கூட பேசினான்.. நான்…………..”

               

அது எனக்கு தெரியாது.. நான் அதை சொல்லலை”

 

 

பின்ன.. (சிறு புன்னகையுடன்) ஓ சிஸ்டர் கூட பேசினதை சொல்றியா?” 

 

அவ என்ன உன் கூட பிறந்தவளா?அவ கூட என்ன பேச்சு உனக்கு?”

 

ராஜசேகர் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது, தீவிரமான குரலில், கூட பிறக்கலை-னாலும் மாலினி என் சிஸ்டர்……….”

 

அதுக்குள்ளே அப்படி என்ன பாசமலர் சிஸ்டர்?”

பார்த்த முதல் நாளிலேயே  உன்னை என் உயிராய் நினைக்கலையா?”

ஜெனிஷா கோபமாக, டோன்ட் கம்பர் ஹர் வித் மீ”

                        

நீ கேட்டதுக்கு விளக்கம் கொடுத்தேன்.. அவ்ளோ தான்

 

நீ அவ கூட பேசுறது எனக்கு பிடிக்கலை”

 

எனக்கு கூட தான் நீ சிஸ்டரை மதிக்காதது பிடிக்கலை”

 

என்னை விட அவ முக்கியமா?”

 

நான் அப்படி சொல்லலை.. பட் நீயும் சிஸ்டரும் எனக்கு முக்கியம்” 

 

ஜெனிஷா அதிகரித்த கோபத்துடன், “ரெடிகுலஸ்”

 

ராஜசேகர் அமைதியாக இருக்கவும் அவள் பல்லை கடிதத்துக் கொண்டு, “உனக்கே இது ஓவரா தெரியலை?”

 

“ஏன்?”

 

“அவ உன் கூட பிறந்தவள் இல்லை” 

 

“இதற்கு நான் பதில் சொல்லிட்டேன்”

 

ஓ!” என்றவள் அடக்கப்பட்ட கோபத்துடன் ரெண்டில் ஒன்னு தான் னா?”

 

உனக்கு சிஸ்டரை ஏன் பிடிக்கலை? ஒரு வலிட் ரீசன் சொல்லு”

 

“….”

 

பார்த்தியா காரணமே இல்லாம வெறுப்பை வளர்க்கிற”

பிடிக்காததுக்குலாம் காரணம் சொல்ல முடியுமா! எனக்கு பிடிக்கலை அவ்ளோ தான்”

 

ஒருத்தரை பிடிக்கிறதுக்கு வேணா காரணம் இல்லாம போகலாம்பிடிக்காததுக்கு கண்டிப்பா காரணம் இருக்கும்”

 

அவளை வச்சு நமக்குள்ள வாக்குவாதம் தேவையா?”

 

அதை நீ தான் சொல்லணும்.. நீ தான் இதை ஆரம்ச்ச”

 

ச்ச்.. எனக்கு அவளை பிடிக்கலை ராஜ்..”

 

அது தான் ஏன்?”

 

“..”

ராஜசேகர் தீர்க்கமாக ஜெனிஷாவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஜெனிஷா, தெரியலை”

 

உன் காரணமற்ற பேச்சுக்களை என்னால் ஏற்க முடியாது நிஷா”

 

தேங்க்ஸ்” என்று கூறி கோபமாக ஜெனிஷா திரும்பிக் கொண்டாள். ராஜசேகரும் திரும்பிக் கொண்டான்.

வகுப்பு தொடங்கும் நேரத்தில் பிருந்தா, “எங்கடி உன் காவலனை காணும்?”

 

மாலினி முறைக்கவும், பிருந்தா, ஓகே.. எங்கடி பூந்தோட்ட காவல்காரனை காணும்?”

                                   

என்னை கேட்டா?” என்று மாலினி அக்கறையற்று பதிலளித்தாலும் மனதினுள், ஏன் வரலை?காயத்தை ஒழுங்கா கவனிக்காம பிவர் வந்துருக்குமோ! என்று கவலைக் கொண்டாள்.

பின்ன உன்னை கேட்காம?”

 

பிருந்தா.. நான் ஆல்ரெடி சொல்லிட்டேன்.. அவன்…………”

 

உன் பிரெண்ட்.. அதானே.. நான் இப்போ என்ன கேட்டுட்டேன்! உன் பிரெண்ட் ஏன் வரலை னு உன்னை கேட்டா தானே தெரியும்”

 

கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுது.. அதை கவனி”

 

எஸ்கேப் ஆகாத”

 

நான் ஏன் எஸ்கேப் ஆகணும்.. தெரிஞ்சா தானே சொல்வேன்.. அப்படி உனக்கு அவசியம் தெரியனும்னா புழாவை கேளு”

ஆமா நான் கேட்டதும்  அந்த மௌனகுரு வாய் திறந்து முத்தை உதித்திர போறான்..”

மாலினி பிருந்தாவை பார்த்து சிறிது புன்னகைத்துவிட்டு வகுப்பை கவனிக்க தொடங்கினாள்.

பிருந்தா, ஹ்ம்ம்.. இனி பேசுனா திட்டு தான் விழும்.. நாம வழக்கம் போல் தூங்க ஆரம்பிப்போம் என்று மனதினுள் கூறிக் கொண்டு உறங்கும் முயற்சியில் இறங்கினாள்.

மழை 20:

ராஜசேகர்-ஜெனிஷா ஊடல் தொடர்ந்தது.

மதிய இடைவேளையில் மாலினி தன் கைபேசியில் ஏதோ செய்து கொண்டிருக்கவும், பிருந்தா, “என்ன பண்ற?”

 

“மூர்த்தி ஏன் வரலை னு மெசேஜ் பண்ணிட்டு இருக்கிறேன்”

 

“மாட்டுனியா!”

 

“என்ன லூசு சொல்ற?”

 

“உண்மையை சொன்னா நான் லூசா?”

 

“முதல்ல உண்மை என்னன்னு சொல்லு”

 

“யாரோ பிரெண்ட் பிரெண்டுனு சொன்னாங்க பா ஆனா யாருக்கும் தராத அவங்க நம்பரை அந்த ஸ்பெஷஷஷல் பிரெண்டிற்கு மட்டும் தந்திருக்காங்க”

 

“கரெக்ட்.. அவன் ஸ்பெஷல் பிரெண்ட்(அழுத்தம் கொடுத்து கூறினாள்).. அதான் தந்தேன்”

 

“ஏய்.. உண்மையை சொல்லு”

 

“அதான் சொல்லிட்டேனே”

 

“மாலு!!!!!!!!!!!!!!”

 

“போடி லூசு.. உனக்கு சொன்னால் புரியாது.. நீ எத்தனை முறை கேட்டாலும் சரி எப்படி கேட்டாலும் சரி மூர்த்தி என் பிரெண்ட் மட்டும் தான்”

 

“அது என்ன எனக்கு புரியாது?”

 

“புரியாது தான்”

 

“இரு நாளைக்கு நந்து வரட்டும்”

 

“அவளுக்கு நான் சொல்றது தெளிவா புரியும்”

 

“அவளுக்கு புரியும், எனக்கு புரியாதா?”

 

“ஜில்லு நீ சில விஷயத்தில் டியுப் லைட் தான்”

 

“நந்தினி மட்டும் எல்லா விஷயத்திலும் ப்ரைட்டோ!”

 

“நீ எதை மீன் பண்றே னு தெரியுது.. நீ நினைப்பது போல் இல்லை.. அவளுக்கு எல்லாம் புரியும் பட் புரியாதது போல் இருந்துப்பா.. அவ்ளோ தான்”

 

“அப்படியா சொல்ற?”

 

“அப்படியே தான்”

 

“ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டியவள், “ஹே.. டாபிக் மாத்திட்ட.. உண்மையை……………….”

 

“என்னை படுத்தாதடி” என்று கூறியபடி தன் கைபேசியை பார்க்க, பிருந்தா அவளது கைபேசியை பிடுங்கி பார்க்க, மாலினி சிறு கோபத்துடன், “பிருந்தா அதை கொடு”

 

“இரு.. இரு.. பார்த்துட்டு தரேன்” என்று கூறியபடி மாலினியின் கையை தட்டிவிட்டபடி கைபேசியில் வந்த குறுஞ்செய்தியை அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் படித்தாள்.

‘மூர்த்தி’ என்ற பெயரில் இருந்த அந்த குறுஞ்செய்தி – “அஞ்சு நிமிஷம் லேட்டா வந்தேன்னு வாட்ச்-மேன் ரொம்ப ரூல்ஸ் பேசினான்.. கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.. ஒரு விஷயம் மாலினி – டொக்கு டொக்கு னு தட்டி மெசேஜ் அனுப்புறது எனக்கு பிடிக்காது.. ஸோ மெசேஜ் பண்ணாத.. ரிப்ளை பண்ண மாட்டேன்”

 

பிருந்தா, “ரொம்ப தான் ஸீன் போடுறான்டி”

 

“அவன் என்னவும் பண்ணிட்டு போறான்.. முதல்ல என் செல்லை தா” என்று கூறி கைபேசியை பிடுங்கினாள்

பிருந்தா, “பார்க்க தானே போறேன்”

 

மாலினி மனதினுள், ‘இருந்தாலும் கொஞ்சம் ஓவர் தான்.. இப்படியா மூஞ்சுல அடிச்சது போல் சொல்றது!’ என்று கூற அவளது மனசாட்சி, ‘நீ மட்டும் என்ன செய்வியாம்?’

 

‘நான் பிரெண்ட்ஸ் கிட்ட இப்படி ஒன்னும் பட்டுன்னு சொல்ல மாட்டேன்.. கொஞ்சம் பாலிஷ்டா தான் சொல்வேன்’ .என்று தன் மனசாட்சியிடம் சொன்னவள் வீட்டிற்கு சென்ற பிறகு அவனிடம் பேச(திட்ட) வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆஷா, “என்ன தான்டி பிரச்சனை? நானும் காலையில் இருந்து கேட்டுட்டு இருக்கிறேனே!”

ஜெனிஷா, “ஹ்ம்ம்.. நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டா நான் தான் ஜெனி இல்லையே!”

 

“நிஷா இப்போ ஜெனி யா மாறிடிச்சாக்கும்!”

 

“மூடிட்டு உன் வேலையை பார்”

 

“வாட்ச்-வுமன் வேலையா!”

ஜெனிஷா முறைக்கவும் ஆஷா அமைதியானாள்.

அதே நேரத்தில் சிவகுரு, “விடுடா மச்சான்.. பார்த்துக்கலாம்” என்று ராஜசேகரிடம் கூறிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் பரபரப்பாக வந்த ராகேஷ் மேடை மேல் ஏறி, “பிரெண்ட்ஸ்.. ஸ்பை ஸ்குவார்ட் வர போறாங்க.. மொபைல் ரைட்.. நேரமில்லை.. சீக்கிரம் எல்லோரும் மொபைலை ஸ்விட்ச் ஆப் பண்ணி ஒரு பேபரில் சுத்துங்க.. பேப்பர் மேல் உங்க பெயரை எழுதுங்க.. சைலென்ட் மோட் கூட வேண்டாம்.. ஸ்விட்ச் ஆப் பண்ணிடுங்க.. ஹ்ம்ம்.. குய்க்.. குய்க்…” என்று அதி வேகமாக கட்டளைகளை பரப்பினான்.

எல்லோரும் அவன் சொன்னதை செய்ய தொடங்க, அவன், “கேர்ள்ஸ் யாராச்சும் ஐந்து பேர் மட்டும் உங்கள் டிஃப்பன் பாக்ஸ் பேப்பரால் கிளீன் பண்ணுங்க..  அதே மாதிரி பாய்ஸ் ஐந்து பேர் பண்ணுங்க.. கம் ஆன்.. ஹர்ரி அப்” என்று அவசரபடுத்தினான்.

அவன் கூறியது போல் அனைவரும் செய்ததும், வேக வேகமாக உணவு டப்பாக்களை எடுத்து கைபேசிகளை அதனுள் அடைத்து, டப்பாக்களை மேடை அடியில் தள்ளியவன் அவசரமாக தன் இடத்தில் அமரவும் ஸ்பை-ஸ்குவார்ட் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அவர்கள் வந்த பிறகு தான் சக்திவேல் வந்தான். அனீஸ் வாய் திறக்கும் முன் ஸ்பை-ஸ்குவார்ட் அனைவரையும் வெளியே வர சொன்னார்கள். ஸ்பை-ஸ்குவாட்-யை சேர்ந்த சிலர் வகுப்பின் உள்ளே இருந்த மாணவர்களது பைகளை சோதனை செய்ய மற்றவர்கள் வெளியே நின்ற மாணவர்களை சோதனை செய்தனர்.

ஒரு கைபேசி கூட கிடைக்கவில்லை என்ற ஆச்சரியத்துடன் அவர்கள் அடுத்த வகுப்பை நோக்கி சென்றனர்.

மாணவர்கள் சிரிப்புடன் வகுப்பறையினுள் சென்றனர். ராகேஷ் தன் இடத்தில் நின்று, “பிரெண்ட்ஸ்.. இப்ப யாரும் மொபைலை எடுக்க வேண்டாம்.. இன்டர்வெல் டைமில் பார்த்துட்டு எடுத்துக்கலாம்.. இல்லை வீட்டிற்கு போகும் முன் எடுத்துக்கலாம்”

 

பசங்க, “கலக்கிட்ட மச்சான்” என்று மகிழ்ச்சியுடன் கூறி கை குலுக்க, மாணவிகள் தங்களுக்குள் அவனை பாராட்டினர்.

அனீஸ் சக்திவேலிடம், “நீ இன்னைக்கு மொபைல் கொண்டு வரலையா?”

 

“கொண்டு வந்திருக்கிறேனே!”

 

“அப்பறம் எப்டி டா எஸ் ஆன!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”

 

புன்னகையுடன் சக்திவேல் தனது சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு, “எல்லாம் அய்யாவோட திறமை டா” என்று கூறியபடி கையில் இருந்த புத்தகத்தை திறந்தான்.

அந்த புத்தகத்தின் நடு பக்கங்களில் கைபேசியின் வடிவத்திற்கு ஏற்றார் போல் ஓட்டை இருக்க, அதனுள் கைபேசி இருந்தது.

அனீஸ், “அட பாவி” என்று வாயை திறக்க, சக்திவேல் சிரித்தான்.

அனீஸ், “புது புக் டா.. இப்படி வேஸ்ட் பண்ணிட்டியே!”

 

“எப்படியும் படிக்க போறதில்லை.. அட்லீஸ்ட் இதுக்காவது உதவட்டுமே!”

 

“ஹ்ம்ம்” என்றபடி புத்தகத்தை பார்த்த அனீஸ், லைப்ரேரி புக் மாதிரி தெரியுது!”

 

“லைப்ரேரி புக்கே தான்”

 

“திருப்பி குடுக்கும் போது அந்த குள்ளன்(லைப்ரேரியன்) கேட்பானே! என்ன சொல்லுவ?”

 

“திறந்து பார்த்தா தானே!”

 

“பார்த்துட்டா?”

 

“குட் குவெஸ்டீன்.. என்ன பதில் சொல்றதுன்னு இப்போவே யோசிக்க ஆரம்பி”

 

“நான் ஏன் டா யோசிக்கணும்?”

 

“ஏனா.. இந்த புக் உன் கார்டில் எடுத்தது”

 

“அட நாதாரி” என்று அனீஸ் கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி சக்திவேலை அடிக்க தொடங்கினான்.

“வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்! ஆர் யூ ஸ்கூல் கிட்ஸ்” என்ற சைக்கோவின் குரலில் அனீஸ் அடிப்பதை நிறுத்திவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு எழுந்தான். சக்திவேல் அவனுக்கு மேல் ஒன்றும் அறியாத அப்பாவி சிறுவனின் முக பாவத்துடன் எழுந்து நின்றான். சைக்கோ இருவரையும் ஆங்கிலத்தில் சிறிது வசை பாடிவிட்டு வெளியே நின்று கவனிக்க சொல்லிவிட்டு வகுப்பை தொடங்கினார்.

இருவரும் வகுப்பின் வாயிலில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்தனர். அந்த பார்வை, “‘H.O.D ஆனதில் இருந்து துரை இங்க்லீஷில் பேசியே கொல்லுது” என்று கூறியது.

அதன் பிறகு வழக்கம் போல் திட்டோடும் இம்போசிஷனோடும் வகுப்பு சென்றது.

மாலை வீட்டிற்கு சென்ற பிறகு மாலினி கிருஷ்ணமூர்த்தியை அழைத்தாள்.

கிருஷ்ணமூர்த்தி, “ஹலோ”

 

“ஏன் அப்படி மெசேஜ் அனுப்பின?”

 

“எப்படி அனுபினேன்?”

 

“ரிப்ளை பண்ண மாட்டேன்னு!”

 

“அந்த மெசேஜே முதல் முறை னு தான் அனுப்பினேன்”

 

“அதுக்குன்னு இப்படியா அனுபுவ?”

 

“ஏன்? அதுக்கு என்ன?”

 

“என்ன வா?”

 

“ஆமா! எனக்கு லொட்டு லொட்டு னு தட்டி மெசேஜ் அனுப்புறது கொஞ்சம் கூட பிடிக்காது.. அதுக்கு போன் பண்ணி பேசிடுவேன்”

 

“சோம்பேறி”

 

“எனக்கு பிடிக்காது அவ்ளோ தான்”

 

“உன் சோம்பேறி தனத்தை மறைக்க இப்படி சொல்ற!”

 

“இருக்கலாம்.. அதில் உனக்கு என்ன பிரச்சனை? ஏதோ முதல் முறைன்னு உனக்கு பதில் அனுப்பினேன்.. இனி அனுப்பாதே பதில் வராது”

 

“கிளாஸ்ஸில் மெசேஜ் தானே அனுப்ப முடியும்”

 

“அதுக்கு நான் ஒன்றும் பண்ண முடியாது”

 

“மாத்திக்கோ”

 

“எதுக்கு மாத்தனும்?”

 

“எதுக்கு னா!”

 

“எதுக்குனா எதுக்கு தான்”

 

“போடா லூசு”

 

ஒரு நொடி சிறிது அதிர்ந்தவன் பின் புன்னகையுடன், “அதை ஒரு லூசு சொல்ல கூடாது”

 

“ஹும்ம்ம்”

 

“இதோ பாரு மாலினி………………..”

 

“போனில் பார்க்க முடியாது”

 

“ஏன் முடியாது! வீடியோ காளில் பார்க்கலாமே!”

 

“அய்யோடா! எங்களுக்கு தெரியாததை சொல்லிட்டார்”

 

“உனக்கு தெரியாதுன்னு சொன்னேனா?”

 

“அப்போ எதுக்கு சொன்ன?”

 

“நீ சொன்னதில் சிறு திருத்தம் செய்தேன்”

 

“நீர் நக்கீரர் பரம்பரையோ!!!”

 

வாய்விட்டு சிறிது சிரித்தவன், “எனக்கு மெசேஜ் அனுப்புறது பிடிக்காது.. அவ்ளோ தான்.. அல்ரெடி என் தங்கையும் அக்காவும் மாற்ற முயற்சித்து முடியாம விட்டுட்டாங்க.. ஸோ நீ முயற்சி பண்ணாதே!”

 

“என்னவோ போ! சரி இன்னைக்கு ஏன் லேட்?”

 

“லேட் ஆகிருச்சு.. ஏதும் முக்கியமான கிளாஸ் நடந்ததா?”

 

“ஹ்ம்ம்.. PDS மேம் நடத்துனாங்க” என்று கூறி சிறிது நேரம் பாடத்தை பற்றி பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

இரவு உணவை முடித்துவிட்டு ஷங்கரிடம் தன் தந்தையின் கைபேசியில் இருந்து பேசினாள். ஆர்லி பற்றி மோகனா கூறிய அனைத்தையும் கூறினாள்.

“மோனியை பத்திரமா பார்த்துக்கோ” என்று அவள் பல முறை கூறவும் ஒரு கட்டத்தில் அலுத்துப் போனவன், “மாலினி! நீ மோனியோட பெஸ்ட்-எவர் பிரெண்டா இருக்கலாம் பட் உன்னை விட அவள் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்”

 

“அது எப்…………………”

 

“பிரக்டிகலா யோசிச்சு பாரு.. நீ மோனி கூடவே இருக்க முடியும் என்பது உன் மரேஜ் வரை தான் பட் நான்.. அவளின் வாழ்நாள் வரை கூடவே இருந்து பார்த்துப்பேன்.. ஸோ நீ கவலை படாதே!”

 

“ஹ்ம்ம்” என்று சுருதி இறங்கி கூறியவள், “ஓகே.. பை.. குட் நைட்” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

அவன் கூறிய உண்மை மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் அவனது அன்பில் மோகனா பற்றிய கவலை சற்று குறைந்து நிம்மதியாக உறங்கினாள்.

ஆஷா தன் கைபேசில் ராஜசேகரை அழைத்தாள்.

ராஜசேகர், என்ன ஆஷ் இந்த நேரத்தில்?”

                             

உனக்கும் ஜெனிக்கும் என்ன பிரச்சனை?”

 

அதை அவளிடமே கேட்க வேண்டியதானே!”

 

இதையே தான் அவளும் சொல்றா”

 

“….”

 

படுத்தாம நீயாது விஷயத்தை சொல்லு”

 

“..”

 

“எதில் ஒற்றுமை இருக்குதோ இல்லையோ! ரெண்டு பேருக்கும் என்னை படுத்துறதில் நல்லாவே ஒற்றுமை இருக்கிறது”

 

சேகர் சிரிக்கவும் அவள் கடுப்புடன், “டேய் கடுப்பை கிளப்பாதே”

 

“சரி.. நான் சிரிக்கலை” என்று அவன் கூறினாலும் அவன் சிரிப்பு சத்தம் இவளுக்கு கேட்கவும், அவள், “இப்போ விஷயத்தை சொல்ல போறியா இல்லையா?” என்று சிறு கோபத்துடன் கேட்டாள்.

 

இல்ல ஆஷ்.. நான் சொன்னா சரிவராது.. அவ சொல்லணும் னு நினைச்சா சொல்லட்டும்..”

 

ஏன் டா நீயும் படுத்துற?”

உனக்கே நிஷா பத்தி தெரியும்.. நீ அவளோட க்ளோஸ் பிரெண்ட் அப்படி இருந்தும் அவ சொல்லாத விஷயத்தை நான் சொன்னா.. அது சரி வராது…. நான்.. என்ன…………………………”

 

நீ இந்த விஷயத்தை சொன்னாஅவளை விட என்னிடம் க்ளோஸ் ஆகிட்ட னு கோபம் வரும் னு சொல்ல வரியா?”

 

ஹ்ம்ம்..”

 

இவ்ளோ லவ் இருக்குது தானே! அப்புறம் என்ன டஷ்-க்கு ஈகோ உனக்கு?”

 

எனக்கென்ன ஈகோ?”

 

ஈகோ இல்லாமையா அவளை சமாதானப் படுத்தாம இருக்க?”

 

நான் முயற்சி பண்ணலை னு உனக்கு தெரியுமா?”

 

என்ன பண்ண?”

என் கோபம் பஸ்ட் ஹவர் வரை கூட இல்லை.. அவளிடம் பேச முயற்சி பண்ணா! தெரிந்தும் தெரியாதது போல் இருந்தது அவ தான்.. எவ்ளோ முயற்சி பண்ணியும்அதை மதிக்காமலஞ்ச் நேரத்தில் வேணும் னு ECE கிளாஸ் போய் சாப்பிடுறா.. எனக்கு கோபம் வருமா வராதா?”

 

ஹ்ம்ம்.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு கிறிஸ்டி(ECE) கூட சாப்பிட்டதை வைத்து தான் உங்களுக்குள் பெரிய பிரச்சனையோ னு கேட்டேன்..”

 

இப்போ கூட போன் பண்ணேன் எடுக்கலை”

 

இதுக்கு என்ன தான் தீர்வு?”

 

முடிவு கட்டுறேன்..”

 

என்ன பண்ண போற?”

 

வெயிட் அண்ட் ஸீ”

 

என்னவோ பண்ணு.. ஊடல் போய் கூடல் வந்தா சரி”

ராஜசேகர் புன்னகையுடன் அழைப்பை துண்டித்தான்.

அடுத்த நாள் காலையில் மாலினி, அருணா இன்னைக்கு என்னையும் மோனியையும் காலேஜில் ட்ராப் பண்ணனும் னு சொன்னேனே.. கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்கபோய் குளிங்க”

அருணாசலம் புன்னகையுடன் செய்தித்தாளை மூடிவிட்டு எழும்ப, மாலினியின் முதுகில் புஷ்பா ஒரு அடி வைத்தார்.

மாலினி முதுகை தடவியபடி, பின்னால் இருந்து தாக்குறது வீரனுக்கு. ஓ நீ லேடியோ.. அப்போ வீராங்கனைக்கு அழகல்ல புஷ்”

 

ஆமா இது போர்க்களம் பாரு.. அப்பாவை பேர் சொல்லி கூப்பிடாத னு எத்தனை முறை சொல்றேன்”

 

நானும் எத்தனை முறை சொல்றேன்.. நான் இப்படி தான் பேசுவேன் னு.. அக்சுவளி புஷ்.. உன்னால தான் இது.. முன்னாடிலாம் எப்பவாது தான் பேர் சொல்லி கூப்பிடுவேன்.. இப்போ உனக்காகவே பேர் சொல்லி கூப்பிட தோணுது.. ஒருமையில் கூட பேச தோணுது”

புஷ்பா முறைக்க, மாலினி, இந்த பாசமான லுக் எல்லாம் உன் டார்லிங் கிட்ட வச்சுக்கோ”

                                   

புஷ்பா மீண்டும் அடிக்க வர மாலினி அடியில் இருந்து தப்பித்து ஓடினாள்.

(எல்லோரும் ஜோரா கை தட்டுங்க பா.. நம்ம மோனி செல்லம் காலேஜ் கிளம்பிட்டா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)

 

காரில் செல்லும் போது, மாலினி, என்ன மோனி சொல்லிட்டு இருக்க?”

 

நீ சொன்னதை தான் எனக்கு நானே சொல்லிட்டு இருக்கிறேன்”

 

என்னது?”

 

செல்வா நல்லவன்ஷங்கர் என் பெஸ்ட் பிரெண்ட்ஆர்லி கூட பேச கூடாது”

 

மாலினி சொல்வதறியாது புன்னகைத்தாள்.

காரை விட்டு இறங்கியதுமே மோகனாவிற்கு சோதனை தொடங்கியது..

மாலினி தந்தையுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க, சற்று தள்ளி நின்று கல்லூரியை ஆர்வத்துடன் மோகனா பார்த்துக் கொண்டிருந்த போது, ஹாய் மோனி..” என்ற உற்சாக குரலுடன் ஆர்லி அவளை நெருங்கினாள்.

என்ன தான் ‘ஸ்ரீராம ஜெயம்’ போல் ஆர்லி கூட பேச கூடாது என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும், ஆர்லி புன்னகையுடன் வந்ததும் மோகனாவால் ஆர்லியை ஒதுக்க முடியவில்லை, மோகனாவும் புன்னகைத்தாள்.

மழை தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by GomathyArun

Story MakerContent Author

நேசம் மறைத்த என் நெஞ்சம் (பாகம் 2)

13.கொள்ளை போன இதயம்