in , ,

8. நீ என் சினாமிகா

8. நீ என் சினாமிகா

என் கையை பார்த்தவரு என்ன நினைச்சாருனு எனக்கு தெரியலை. பட்டுனு அங்க இருந்து வெளியே போய்ட்டாரு…. நல்லா இருந்த கையை, இப்படி பண்ணிட்டு ஓடவா செய்ற பாகுபலி…. இதுக்கு எல்லாம் சேர்த்து வைக்குறேன்டா நரபலி( சும்மா ரைமிங்காக இருக்கேன்னு  சொன்னதுப்பா… சத்தியமா நரபலி பண்ற அளவுக்கு எல்லாம் சினாமி வொர்த் இல்லை)….. ஏன்னே தெரியலை, நான் அவரை ரொம்ப மரியாதையாக தான் பேசிட்டு இருந்தேன்….ஆனால் எப்போ இவரு மி.சை.பானு தெரிஞ்சுதோ அப்போ இருந்து மரியாதையே கொடுக்க வர மாட்டிங்குது… என்று நினைத்து கொண்டவள், அவள் பாட்டுக்கு சிரிக்க ஆரம்பித்தாள். அந்த நேரம் அங்க நம்ம பாகுபலி கதவை திறந்து வந்துவிட, இவளோ தனியா சிரிச்சுட்டே இருக்க, அதை கண்டவனுக்கோ “பைத்தியமா இவ” என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

“மண்டையில ஏதும் அடிபடலையேனு?” புருவத்தை உயர்த்தியபடி மி.சை.பா கேட்க….

அவனது குரலில் சட்டென்று சிரிப்பை நிறுத்தியவள் “நான் நல்லா தான் இருக்கேன். சிரிக்க கூட கூடாதா?”என்க.

“ஏய் ரவுடி தனியா சிரிச்சா, யாரா இருந்தாலும் இப்படி தான் கேட்பாய்ங்க…” என்று கூறியபடியே என்னருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

“அது என்ன ரவுடி…. என்னை பார்த்தா எந்த ஆங்கிள்ல ரவுடி மாதிரி தெரியுது?” என்றேன் கோபமாக…. 

“இதோ இந்த ஆங்கிள்ல தான்,” என்று அவளது மூக்கை தொட்டவன், “கோபத்துல புடைக்குற மூக்கும், வார்த்தைகளால அம்பை தொடுக்குற உன் உதடுகள் எல்லாமே சொல்லாமல் சொல்லுதே நீ ரவுடினு……”என்று சொன்னானே பார்க்கனும் சினாமிகா முகத்தில் கோபம் எட்டி பார்க்க ஆரம்பித்தது.

“இது எல்லாம் ரொம்ப ஓவர்…. எனக்குனு எங்க அப்பா,அம்மா நல்ல பெயர் வச்சிருக்காங்க. அந்த பேரை சொல்லி கூப்பிடுங்க…”

“அதுக்கு உன் பேரு எனக்கு தெரியனுமே?”

“ரொம்ப அருமையான கல்யாணம்…பேர் கூட தெரியாமல் என்ன தைரியத்துல என் கழுத்துல தாலி கட்டுனிங்க..” என்று ஆவசேத்தோடு நான் கேட்க…. அந்த நொடி எனது இடுப்பை அவனது ஒரு கரம் வளைத்து பிடித்திருக்க, ஒரு கையில் அவன் கொண்டு வந்த பாத்திரத்தை மேசையில் வைத்தவன்,என்னை மேலும் அவனோடு இறுக்கினான்….. 

என் கண்கள், மிக அகலமாக விரிந்தது….நான் விழுங்கும் உமிழ்நீரின் சத்தம் தொண்டைக்குழியில் இருந்து இறங்குவது நன்றாக கேட்டது….. அவனது நெருக்கம் எனக்குள் ஒரு வித பயத்தை தோற்றுவிக்க, எனக்குள்ளே ஒரு தைரியத்தை வரவழைத்தபடி… ” நான் எதுவும் தப்பா சொல்லலையே?” என்றவள் அவனையே திருதிருவென பார்த்தாள்.

அவளின் செவிமடலின் அருகே வந்தவன். “எந்த தைரியத்துல என்னை நீ கல்யாணம் பண்ண சம்மதிச்சயோ, அதே தைரியத்துல தான் உன்னை கல்யாணம் பண்ணேன்….இப்போ சொல்லு உன் பேரு என்ன?”

இதுக்கு கொஞ்சம் தள்ளியே நின்னு கேட்ருக்கலாமே….. எதுக்குயா இப்படி கட்டி அணைச்சு பச்சை புள்ளைய பயம்முறுத்துற….. என்று மனதில் நினைத்துக் கொண்டே அமைதியாக இருந்தாள் சினாமிகா.

அவளது அமைதியை கண்டு அவனோட பிடி மேலும் இறுக, இது வேலைக்கு ஆகாது….. நான் சொல்லாத வரைக்கும் இவன் இறுகிட்டே இருப்பான் போல….. என்று நினைத்தவள் மறுநொடியே… “சினாமிகா அதான் என் பேரு” என்று  சொல்ல, அப்போ தான் அவனது இறுக்கம் சற்று தளர்ந்தது…. 

அடேய் பாகுபலி, என்னடா ஒரு பேரு கேட்குறதுக்கே இப்படி நசுக்குற….. சரிபட்டு வராது. ஒருவேளை கரும்பு ஜூஸ் கடை வச்சுருப்பானோ…… என்னமோ போ இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். என்றபடி நான் அவனிடமிருந்து விலகி சற்று தள்ளி அமர்ந்து கொண்டேன். 

அவளது செயலை பார்த்து அவனது இதழின் ஓரத்தில் சிறு புன்னகை உதிர்க்க…. ‘அடேய் பாகுபலி நீ சிரிக்க எல்லாம் செய்வியானு?’ ரொம்ப ஆவலோடு அவன் முகத்தை பார்த்தாள் சினாமிகா. அவனோ அவளது ஆவலை உணர்ந்தானோ என்னவோ மீண்டும் முகத்தை இரும்பாக்கி கொண்டான். 

‘கண்டிப்பா இவன் பேரு இரும்பன்னு இருக்கும்…. அதான் ஸ்டீல் மாதிரி பாடியும், அதுக்கு ஏத்த மொகரைகட்டையும் வச்சுருக்கான்….’ என்று நினைத்துக் கொண்டே அவனது பேரை கேட்கலாம்னு நினைச்சேன். கொஞ்ச நேரம் முன்னாடி தான் பேரு கூட தெரியாமல் என்னை எந்த தைரியத்துல கட்டிக்கிட்டனு கேட்டு அவனை கோபப்படுத்திட்டோம். இப்போ எந்த மூஞ்சியை வச்சு நான் கேட்பேன்’ என்று கேட்கும் எண்ணத்தை தற்போதைக்கு நிறுத்திக் கொண்டவள் அமைதியாக சமத்து பிள்ளையை போல அமர்ந்து கொண்டாள். 

அப்புறம் நான் அமைதியாக இருக்க, அவரோ என் அருகில் வந்து அமர்ந்தார்…. இவன் பண்றது எதுவும் சரியில்லையே, என்று பதட்டத்தோடு அவரை பார்க்க, அவரோ என்னை மேலும் நெறுங்கி இருந்தார்…… பட்டுனு என் கையை பிடிச்சு இழுக்க…. 

அந்த நொடி எனக்கு பயங்கர கோபம்…. “இங்க பாருங்க கையை விடுங்கனு” கத்தினேன்.

அவளை ஒரு அக்கினி பார்வை ஒன்றை பார்த்தவரு…. “என்னடி ரொம்ப சிலுத்துக்குற?”…. என்றபடி அவர் முறைத்துக் கொண்டே மேசையிலிருந்த பாத்திரத்தை எடுத்தவன் அருகில் இருந்த மயில் இறகையும் எடுத்துக்கொண்டு, பாத்திரத்தில் இருந்த எண்ணெயில் அதை மூழ்க செய்து அவளுடைய கன்றி போயிருந்த கையில் காயப்பகுதியின் மீது தடவினான்.

‘ச்சே… இந்த நல்ல மனுசனை போய் தப்பா நினைச்சுட்டனேனு’ அவளுக்கு ரொம்பவே வருத்தமா போச்சு….. 

இந்த முறை என் விரல்களை அவரது இடது கைகளால் மிக மிருதுவாக பிடிச்சிருந்தாரு. அவரோட வலது கைகளால் மயிலிறகை கொண்டு எண்ணெயில் வைத்த பின் என் கைகளில் வருடிவிட்டாரு…. அந்த வலிக்கு அது ரொம்ப இதமாக இருந்துச்சு…… 

மயிலிறகால் என்னை வருடும் மாயவனே…. நீ நல்லவன் தானா….என்று யோசித்து கொண்டே அவரேயே பார்த்தேன்…… 

அப்படி யோசிச்சு தான் ஏமாந்திட போறனு…… கொஞ்ச நேரத்துலயே அவளுக்கு உணர்த்துவாருனு சினாமிகா கனவுல கூட நினைச்சுருக்க மாட்டாள்.

“ஏய் ரவுடி இந்த எண்ணெயை ஒரு மூணு நாள், தேய்சசா சரி ஆகிடும், சரியா…..”

“ம்ம்ம் சரி” 

“அப்புறம், உன்னை இங்க எல்லாரும் ஏத்துக்க கொஞ்சம் காலம் பிடிக்கும் தான். அதுக்குனு போய் யாருட்டயும் வம்பு பண்ணிடாத….. எல்லாருக்கான மரியாதையையும் நீ கண்டிப்பாக கொடுக்கனும்….மாடர்ன் டிரஸ் போடவே கூடாது. நேரத்துல எந்திரிக்கனும். வீட்டுல யாரு என்ன வேலை சொன்னாலும் செய்யனும் என்று ஒவ்வொரு செயல்களையும் அவர் அடிக்கிக் கொண்டே போக…. ஒருகட்டத்திற்கு மேல் எனக்கு கடுப்பானது.

” இங்க பாருங்க…. எப்படி நடந்துக்கனும், எப்படி பேசனும்னு கூட தெரியாம எங்க வீட்ல என்னை வளர்க்கல….. இந்த கல்யாணமே ஒரு கட்டாயத்துல தான் நடந்துருக்கு, அப்படி இருக்கப்போ வந்த மொத நாள்லே இவ்ளோ ரூல்ஸ் போட்டா எப்படிங்க… முதல்ல உங்களை ஏத்துக்குறதுக்கே எனக்கு நாள் பிடிக்கும்” என்று அந்த கடுப்பில் வார்த்தைகளை விட்டவள், அந்த வார்த்தையின் வீரியத்தை அறியாமல் போனாள்.

அதுவரை அமைதியாக இருந்த பாகுபலியின் முகம் வரமிளாகாவை விழுங்குனாப்புல சிவப்பாக மாறுச்சு…….

‘அய்யய்யோ…. இவன் முகம் சிவக்குறது பார்த்தால் திரும்பவும் நசுக்குனாலும் நம்மள நசுக்கிடுவான்….நான் இப்போ என்னத்த தப்பா சொன்னேனு இவன் இப்படி ரியாக்ட் பண்றான்…. நம்ம வேற அவன் பக்கத்துல இருக்கோம். சோ எப்படியாவது எந்திரிச்சு தூக்கம் வருதுனு எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்.’ என்று மனதில் நினைத்தவள், அவனை பார்த்து “மீதிய நாளைக்கு பேசலாம்… தூங்கலாம் இப்போ குட்நைட்.” என்றபடி  கட்டிலிலிருந்து எழுந்து நகர்ந்து செல்ல பார்க்கவும், அவளது சேலையின் முந்தானையை, பிடித்து ஒரே இழு, அவன் இழுக்கவும் சரியாக இருந்தது. அவன் இழுத்த மறுநொடியே , நிலைத்தடுமாறியவள், அவனின் இரும்பு மார்பின் மீதே மோதி நின்றாள்.

என் கண்களோ அதிர்ச்சியில் மிரண்டது….. அவனது கோபமான கண்கள் என் முகத்திற்கு நேராக பார்க்க….. எனது இதயமோ பல மடங்கு துடித்தது…… அவனிடமிருந்து, விலக பார்க்க அவனோ எனது இடைவளைவில் அவரது புஜங்களால் அணை ஏற்படுத்தி இருந்தான்…. 

“இங்க பாருங்க, என்னை முதல்ல விடுங்கனு.” எனது ஒரு கையை அவனது நெஞ்சில் வைத்து தள்ளினேன்….. ஒரு சிறு அசைவுகூட அவன் மீது இல்லை….. 

“டேய் மினி சைஸ் பாகுபலி என்ன விடு….” என்று இம்முறை கோபத்தோடு அவள் கத்த….. 

அவனது பிடி மேலும் இறுகியது….. “ஓ…. மி.சை.பாவோட பொருள் இது தானா என் ரவுடி……” என்று கோபமான அவனது முகத்தை சற்று சாந்தமாகி கூறினான்.

“ஆமா….. என்னை முதல்ல விடுங்க…. “

“இப்போ தான் யாரோ டேய்னு சொன்ன மாதிரி இருந்துச்சு…. இப்போ விடுங்கனு மரியாதையா சொல்றீக….. இது தான் உங்க வீட்டில சொல்லிக் கொடுத்த கலாச்சாரமா? ” என்று ஏளனப் பார்வை என் மீது அவர் வீசினார்.

“அது அப்படி இல்லை. நீங்க என் அனுமதி இல்லாமல் இப்படி பிடிச்சதுனால , அப்படி சொல்லிட்டேன். நீங்க எப்படி நடந்துக்கிறீங்களோ , அப்படி தான் நானும் நடந்துக்க முடியும்….” என்று நான் சொன்னது தான் தாமதம்…. அவனது வன்மையான இதழ்கள் என் இதழ்களை மிக முரட்டு தனமாக சிறைபிடித்தது…… அவனை விட்டு விலக நான் போராட ஒரு இம்மியளவு கூட அவனிடமிருந்து என்னால் நகர முடியாத அளவுக்கு அவனது கைகள் எனது இடையை சுற்றி வளைத்திருந்தது……. நேரங்கள் கூடியது, அவனது வன்மையான இதழ் தீண்டல் மட்டும் முடிந்தபாடு இல்லை.  

அவனது இந்த அதிரடி செயலில் செயலிழந்து போனாள் பெண்ணவள். அநியாயத்தைக் கண்டு சீறும் சண்டைக்கோழி இன்று தன்னை காக்கவே முடியாமல் பரிதவித்தாள். அவளால் அவனது செயலை தடுக்க முடியாமல் போனதை நினைத்து அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் கசிய தான் செய்தது.

அந்த நிமிடம் அவள் கண்களிலிருந்து வடியும் நீர் அவனது கன்னங்களில் பட, அந்த நொடி அவளைவிட்டு விலகியவன், அவளை நோக்கி, “இங்க பாருடி இப்படி ரொம்ப எதிர்த்து பேசுனா,  உன்னை அடிக்கவோ, திட்டவோ மாட்டேன்….என் செயல்கள் தான் உன்கிட்ட பேசும். இது தப்பு தான்… ஆனால் நான் ஒன்னும் நல்லவன் இல்லை, அதையும் நீ புருஞ்சு நடந்துக்கோ….. தூக்கம் வருதுனு சொன்னல்ல போய் படுத்துத் தூங்குபோ…..” 

என்று அவன் கூறிவிட்டு அவள் கொண்டு வந்திருந்த பாலை மடமடவென குடித்தபடி. தனது சட்டையை கழற்றி வைத்துவிட்டு ஒரு புறமாக கட்டிலின் மீது படுத்துக் கொண்டான்.

‘ஏன் நான் அவனை தடுக்கலை…. சினாமி நீ இவ்ளோ வீக் ஆகிட்டயானு என்னை நானே திட்டுனேன். பாகுபலி நீ நல்லவனு நினைச்சேன்டா… ஒரு பொண்ணை அவ இஷ்டமில்லாமல் தொடரதே தப்பு, நீ என்னடானா முத்தம் வேற கொடுக்குறியா? இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு உன்னை கண்டிப்பாக பழி வாங்குவேன்டா என் பாகுபலி…..’ என்று மனதில் சூளுரைத்து கொண்டு, கட்டிலின் மறுமுனையில் வந்து படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த செயலை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதைவிட, தன்னால் அவனை எதுவும் தடுக்க இயலாது போனது தான் அவளை மேலும் காயப்படுத்தியிருந்தது.

‘அவன் ஏன் இப்படி பண்ணான். நான் ஒன்னும் தப்பா பேசலையே…. தாலிகட்டிட்டா என்னை வேனா பண்ணலாமா…. இவனை மாதிரியும், இவனைவிட மோசமாகவும் ஒரு சிலர் நம்ம நாட்டில இருக்க தான் செய்றாங்க…. தாலிகட்டுன மனைவியோட விருப்பம் இல்லாமல் அவளை தொடுறது போன்ற அக்கிரமங்கள் நடந்துகிட்டு தான் இருக்கு.ஐநா சபையின் மக்கள்தொகை நிதியத்தின் படி, இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், குறிப்பாக 15 க்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தங்கள் கணவர்களால், தாக்கப்படுவது, கற்பழித்தல் அல்லது கட்டாயமாக வன்புணர்வுக்கு நிர்பந்திக்கப்படுவது ஆகியவற்றிற்கு உள்ளாகின்றனர் என்பது எவ்வளவு வேதனைக்குரிய விசயம். எத்தனை நேர்க் கொண்ட பார்வை படம் வந்தாலும் இவனை மாதிரி ஆளுங்க திருந்தவே மாட்டானுங்க. 

ஒரு முத்தத்துக்கு போய் இவ்ளோ பேச்சானு நினைக்கலாம். மனைவியின் விருப்பம் இல்லாமல், சின்ன தீண்டல் கூட தவறு தான். இதுக்கு எல்லாம் சேர்த்து பெரிய ஆப்பாக உனக்கு வைக்குறேன்டா மலைமாடு. என்று யோசித்தபடி புரண்டு புரண்டு படுக்க , பாவம் அவளுக்கு  தான் தூக்கமே வரலை. ‘இவன் வேற பக்கத்தில படுத்துருக்கான்…. நம்ம அலார்ட்டாகவே இருக்கனும்னு.’ நினைச்சுக்கிட்டே, பல மணி நேரம் முழித்துக் கொண்டே இருந்தாள். நேற்றிரவில் இருந்து, தூங்க இயலாத காரணத்தினால், நித்திரை அவளின் கண்களில் வந்து குடி கொள்ள  தன்னை அறியாமலே உறக்கத்திற்கு சென்றிருந்தாள் சினாமிகா.

இவ்வளவு விசயங்களை யோசித்த சினாமிகா ஒரு விசயத்தை மறந்துவிட்டாள். பாகுபலி கெட்டவன்னா, அப்போ ஏன் அவளது கண்ணீரை பார்த்து , அவளிடமிருந்து பிரியனும், அவளை தூங்க சொல்லிட்டு அவனும் தூங்கனும், இது அவள் யோசித்திருந்தால், பின்னாளில் வரக்கூடிய பிரச்சினையை தவிர்த்திருப்பாளோ என்னவோ…….  

                   ~ வருவாள் சினாமிகா

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Veteran

Written by Dhivya Sree

Story MakerContent Author

விழிகளிலே ஒரு கவிதை 49

நேசம் மறைத்த என் நெஞ்சம் (பாகம் 2)