in , , , , ,

விழிகளிலே ஒரு கவிதை 49

     

                 நாட்கள் வேகமாக ஓட நட்சத்திராவிற்கும்  சூர்யாவிற்கும் செமஸ்டர் தேர்வு வந்தது.  முதலில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும்.  பின்னரே முதலாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும்.  சூர்யாவிற்கு செமெஸ்டர் தேர்வு முடிந்தது……..

           இன்னும் இரண்டு நாட்களில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. நட்சத்திரா படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.  ஒன்றும் புரியாமல் புக்கை வைத்துக்கொண்டு முழித்துக்  கொண்டிருந்தாள். சொல்லி குடு மாமா என்று வாய் திறந்து சூர்யாவிடம் கேட்கவில்லை……..

       சூர்யாவிற்கு அவளைப் பார்த்து வருத்தமாக இருந்தது.  தனக்காக தானே கடல் கடந்து ஆஸ்திரேலிய வந்து கஷ்டப்படுறா  என்று……நட்சத்திரா இங்க வா  நான் சொல்லி தரேன் என்றான் சூர்யா……

     நட்சத்திரா, ‘அவன் சொல்லி கொடுத்தா நான் அவளை பார்ப்பேனா? இல்லை  சொல்லிதருவதை பார்ப்பேனா?’ என நினைத்தாள்….. சூர்யா, “என்ன  யோசிக்கிற?”……. நட்சத்திரா, “சொன்னா திட்டுவானே  என நினைத்தவள் ஒன்னும் இல்லை மாமா” என்றாள்………

       சூர்யா பொறுமையாக மிக சிரத்தையாக  சொல்லிக் கொடுத்தான். நட்சத்திராவிற்கு தான் தன் கவனத்தை அவனிடமிருந்து திசைத்திருப்ப  கடினமாக இருந்தது………

             சூர்யா எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு,”என்ன புரிஞ்சுதா?” என்றான்.  நட்சத்திரா ஙே வென  முழித்தாள்.  சூர்யா, “என்னடி முடிக்கிற?”…….நட்சத்திரா, ‘போச்சு லெஸன் கவனிக்காம அவனை பார்த்தேன் என்று கண்டுபிடிச்சா  நான்  செத்தேன் என்று பயந்தவள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு “ஒண்ணுமே புரியல மாமா” என்றாள்……

சூர்யா கோபப்படாமல் மீண்டும் பொறுமையாக விளக்க ஆரம்பித்தான். நட்சத்திரா என்னடா இது எல்லாம் தலைகீழா நடக்குது என் விழி விரித்துப் பார்த்தாள். அவன் மீண்டும் சிரத்தையுடன் விளக்குவதால் லெசனை  கவனிக்க ஆரம்பித்தாள்.  சூர்யா செமஸ்டர்  தேர்வு முடியும் வரை நட்சத்திராவை எந்த வேலையும் செய்யவேண்டாம் என கூறிவிட்டான்……..

        காலையில் விரைவாக எழுந்து அவளை எழுப்பி படிக்க வைத்து காபி போட்டு தந்தான்……நட்சத்திரா ‘சும்மாவே இவன் மேல பைத்தியமா சுத்தீட்டு இருக்கேன். இதுல இவன்  இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்தா நான் முழு பைத்தியம் ஆகிடுவேனே’ என மனதிற்குள் புலம்பினாள்.

சூர்யா சமையல்  வேலையை கூட  அவனே பார்த்துக் கொண்டான்.  நட்சத்திரா சூர்யா  சமைத்ததை  சாப்பிட்டுவிட்டு, “மாமா சூப்பரா  சமைக்கிற.  கல்யாணத்துக்கப்புறம் தினமும் நீயே சமைச்சுடு”……..சூர்யா, “ஏய் குட்டச்சி  முதல்ல படிக்கிற படிக்கிற வேலையைப் பாரு.  அப்புறம் கல்யாணத்தை பத்தி பேசுவோம்   எப்ப பார்த்தாலும் இதே நினைப்புதான்” என்று சொல்லி அவன் தலையில்  கொட்டினான்……

           எப்படியோ ஒரு வழியா நட்சத்திரா செமஸ்டர் தேர்வு எழுதி முடித்து விட்டாள். தேர்வு முடிந்ததும் சூர்யா, ” பாஸாகுற அளவுக்காவது  எழுதியிருக்கியா?” கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுத்தேன்”….. நட்சத்திரா என்ன சொல்வதென்று தெரியாமல்  நாலாபக்கமும் தலையை ஆட்டினாள்.  சூர்யா, “என்னடி தலைய இப்படி  ஆட்டுற?”  என்றான்.

               நட்சத்திரா, “அட போ மாமா ரிசல்ட் வரும்போது  அதை பாத்துக்கலாம்” என்றாள்.

           எக்ஸாம் நடந்து கொண்டிருந்தால் இருவரும் வீட்டில் ஒழுங்காக வேலை செய்யவில்லை.  நட்சத்திரா எல்லா பொருட்களையும் ஒழுங்காக அடுக்கி வைத்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். சூர்யா, “ஏய் குட்டச்சி  எதுவும் உதவி செய்யவா?” எனக் கேட்க…… நட்சத்திரா,  “இல்ல மாமா, ஏற்கனவே நீ நிறைய வேலை செஞ்சிட்ட.  நானே பாத்துக்கிறேன்” என்றாள்.

                சூர்யா, “சரி ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு” என்று விட்டு ஹாலில் அமர்ந்துந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான்.  நட்சத்திரா மேல  இருந்த பெட்டியை எடுக்க முயற்சி செய்து முடியாமல் போகவே சூர்யாவை அழைத்தாள். அவன் போன் பேசிக் கொண்டிருந்ததால் இரண்டு நிமிடத்தில்  வர்றேன் என்றான்…… அவன்  வருவதற்கு தாமதமாகவே அவளை ஸ்டூலைப்  போட்டு எடுக்க முயற்சி செய்தாள்.

              நட்சத்திரா  பேலன்ஸ் இல்லாமல் கால் தவறிக் கீழே விழப் போக சரியாக அதே நேரம் உள்ளே வந்த சூர்யா அவளை தாங்கி பிடித்து விட்டான்…… கீழே விழப் போகிறோம் என்ற பயத்தில் கண்ணை மூடியவள்  சூர்யா பிடித்தவுடன் தான் மூச்சே வநது  கண்ணை திறந்து பார்த்தாள்.

             கண்ணைத் திறந்தவள் அப்படியே சிலை ஆகிவிட்டாள் சூர்யாவின் பார்வையில். சூர்யா அவளையே விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். சூர்யாவின் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று நட்சத்திரவை கட்டிப்போட்டது அவர்களின் பார்வை பரிமாற்றம் சிலகணங்கள் நீடித்தது.

சூர்யாவின் இதழ்கள் அவளை நோக்கி குனிய நட்சத்திரா கண்களை இறுக மூடிக்கொண்டாள். சூர்யாவின் இதழ்கள் அவள் கன்னத்தை உரசும் வேளையில் சரியாக

          “ஆகாய சூரியனை ஒற்றை             

           ஜடையில் கட்டியவள்…..

என்ற பாடலுடன் நட்சத்திராவின் போன் ரிங்காகி அவர்களின் மோன நிலையை கலைத்தது. இருவரும் சுயநினைவு பெற்றனர்.

              சூர்யாவிற்கு  சே! என்னக் காரியம் பண்ண பார்த்த என்று தோன்ற நட்சத்திராவை  வேகமாக இறக்கிவிட்டு அவள் முகத்தை  பார்க்கவே சங்கடப்பட்டு வெளியே வந்துவிட்டான்……

         நட்சத்திரா யாரது சிவ பூஜையில் கரடி மாதிரி என திட்டி கொண்டே போனை அட்டெண்ட் செய்து பேசினாள். சூர்யா தன்னையே கடிந்து கொண்டான்.’ சூர்யா வரவர நீ உன் கட்டுப்பாட்டை இழந்து கிட்டே போற’ என தனக்குத்தானே புலம்பிக்கொண்டு டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்…….

       நட்சத்திரா மாமா என அழைத்துக் கொண்டே ஓடி வந்தவள் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று அவனை அணைத்து கன்னத்தில் இதழ் பதித்தாள்.  அவள் செயலில் சூர்யா அதிர்ச்சி ஆகி விட்டான். சூர்யா, “ஏய் குட்டச்சி என்ன நடந்துச்சு?  நீ ஏன் இப்படித் துள்ளிக் குதிக்கிற” என்றான்……..

       நட்சத்திரா, “மாமா நீ அப்பாவாக போற” என்றாள்……. சூர்யா நான் உன்னை கிஸ் கூட பண்ணலையே அதுக்குள்ளயுமா என அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்………

                                கவிதைகள் தொடரும்…..

    சாரி டியர்ஸ், கொஞ்சம் ஃபெர்ஷனல் வேலை. அதான் என்னால இரண்டு நாளைக்கு அப்டேட் கொடுக்க முடியல. அப்புறம் கமெண்ட் கூட ரிப்ளை பண்ணலை. நாளைக்கு கண்டிப்பா கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்றேன். ஸ்டோரி ரொம்ப டல்லா போகுதாபா. எனக்கு தோணுது. அதான் கேக்குறேன். டல்லா போகுதுன்னா  சொல்லுங்க. நான்  கொஞ்சம் இன்ட்ரஸ்ட்டா கொண்டு போக ட்ரை பண்றேன் டியர்ஸ்…..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

2 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Janu Writer

Story MakerContent Author

11. உனது விழிகளின் வழியே எனது தேடல்..!

8. நீ என் சினாமிகா