in , , , ,

மௌனமாய் எரிகிறேன் காதலிலே…!❤️37

               மௌனமாய் எரிகிறேன்                             காதலிலே…!

மௌனம்❤️37

“டாடா பாய் குட்டிஸ்” என சிறுவர்களுக்கு டாடா காண்பித்து கொண்டே காரில் வந்து ஏறினாள். ரௌத்திரன் காரை கிளப்ப தயாராக அந்நேரம் மலரோ,

“தீரா எனக்கு தலை சுத்துது. மயக்கமா வருது” என கூறிக்கொண்டே காருக்குள் மயங்கி சரிந்தாள்.

அவள் மயங்கி சரிவதை கண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனதினுள் ஏதோ ஒரு வித பயம் சூழ பதறிக்கொண்டு,

“நிதி ஹே நிதி என்னாச்சு. எந்திரி டி. நிதி மா…” என தன்னை மீறி தன் மனதில் இருந்த வார்த்தைகள் பயத்தின் வெளிப்பாடால் வெளியே வர பதறியவரே அவளின் கன்னம் தட்டி எழுப்ப அவளிடம் அசைவே இல்ல. காரில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை அவளின் முகத்தில் தெளித்து,

“நல்ல தான டி இருந்த என்னடி ஆச்சு திடிர்னு. கண்ணு முழிச்சு பாரு நிதி” என தொடர்ந்து அவனின் இரும்பு கைகள் அவளின் பட்டு கன்னத்தில் தட்டியவாறே பதறியது. ‘இது போதும் எனக்கு. என் தீரனோட மனசுல நான் இருக்கேன். அவர் என்னை நிதி னு கூப்பிட்டாரு. ஐயோ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.’ என மனதினுள் குதூகலித்தவளுக்கு அவனின் தட்டல் அவளின் கன்னத்தில் லேசாக வலி எடுக்க ஆரம்பிக்க, ‘போதும் டி மலர் இதோட உன் நடிப்பை நிறுத்திக்கோ அவன் அக்கறை ல தட்டுற தட்டே உனக்கு வலிக்குதுனா இப்போ நடிப்பு னு தெரிஞ்ச அப்றம் அவன் கொடுக்க போகுற  அரைக்கு ரெடியா இரு ‘ என மனதினுள் நினைத்துவிட்டு மெதுவாக கண்ணை திறந்து அவள் பார்க்க அவனுக்கோ அப்பொழுது தான் மூச்சே வந்தது போல் இருந்தது.

“கண்ணு முழிச்சுட்டியா. என்னாச்சு என் மயக்கம் போட்டுட்ட. உடம்புக்கு எதுவும் பண்ணுதா ஹாஸ்ப்பிட்டல் போவோமா.” என இன்னும் அவளின் மயக்கம் உண்மை என்று நம்பியவாறே அவன் வருத்தமாய் கேட்க மலருக்கு தான் ஒருமாதிரி ஆகிவிட்டது. அவனின் அக்கறை அவளுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் அவன் வருத்தமாக கேட்பது மலரின் மனதை பிசைந்தது.

“தீரா நான் ஒன்னு சொன்னா கோவ படமாட்டீங்களே” என தயங்கி தயங்கி மலர் கேட்க, அவனோ புரியாமல் முழிக்க,

“அது வந்து.. நான் மயக்கம் போடல.. சும்மா மயங்குன மாதிரி நடிச்சேன்” என பயந்து பயந்து இவள் கூறி முடிக்கவும் மலர் ஏற்கனவே எதிர்பார்த்தது போல் பளாரென இடியாய் அவளின் வலது கன்னத்தில் விழுந்தது அவனின் அடி. அடித்த அடியில் அவளின் கன்னம் நன்கு சிவந்துவிட்டது. ஆனால் அதனை காட்டிலும் ரௌத்திரனின் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தது. காரை விருட்டென கிளப்பியவனோ கடுமையான வேகத்தில் பறந்தான். அவன் செல்லும் வேகமே அவனின் கோபத்தின் அளவை பறைசாற்றியது. வேகத்தை கண்டு லேசாக மலருக்கு உதறல் எடுக்க மெல்ல வாய் திறந்தவளோ,

“சாரி தீரா.” என பயந்து கொண்டே அவள் கூற அவனோ சட்டென பிரேக் போட்டு நிறுத்தினான்.

“அறிவு இல்ல. படிச்ச பொண்ணு தான. எதுல விளையாடனும் ஒரு விவஸ்தை இல்ல. உன் மனசுல என்ன தான் நெனச்சுட்டு இருக்க. நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. விளையாட்டித்தனமா இருக்கலாம் தான் ஆனால் அதுக்கு ஒரு லிமிட் இருக்கு. உன் லிமிட் எதுவோ அங்க நின்னுக்கோ. அது தான் உனக்கு நல்லது.” என படபடவென பொரிந்து தள்ள அவளோ எதுவும் பேசாமல் பார்த்தாள். பின்,

“நான் ஏற்கனவே உங்க மனசுக்குள்ள லிமிட் தாண்டி வந்துட்டேன் தீரா. நீங்க தான் இன்னும் அத உணரல.” என மலர் கண்ணீருடன் கூற,

“ஏய் இங்க பாரு. இப்படியெல்லாம் முட்டாள்தனமா பேசிட்டு இருந்த என்ன பண்ணுவ்வெண் னு எனக்கே தெரியாது. கோபத்தை கிளறாத.’ என மிகக்கடுமையாக ரௌத்திரம் கூற,

“நீங்க என்கிட்ட பிடிக்காத மாதிரி நடிச்சாலும் உங்க மனசு எனக்கு உண்மைய காட்டிக்கொடுத்துட்டு. நீங்க அடிச்சது வலிக்குது தான். பட் அத விட நீங்க எனக்கான பதறுனா பதறலும் எந்திரி டி ப்ளீஸ் டி னு கதறுன கதறலும் வார்த்தைக்கு வார்த்தை நிதி நிதி னு கூப்பிட்டதும் எனக்கு புரியவச்சுட்டு. உங்க மனசுல நான் வந்துட்டேன் னு. ரொம்ப சந்தோசமா இருக்கு. இது போதும் தீரா. இப்போவே நான் செத்தா கூட சந்தோசமா செத்து போவேன். அவ்ளோ சந்தோசமா இருக்கேன்.” என அவள் கண்ணீருடன் சிரித்துக்கொண்டே கூற அவளின் பேச்சில் ரௌத்திரனுக்கு வார்த்தை வரவில்லை. அவளையே உணர்ச்சியற்று பார்த்தான்.

“தீரா….உங்களுக்கு என்மேல காதல் வராம இருந்திருந்தா கூட கட்டாய படுத்தி காதல வர வைக்க கூடாது னு நெனச்சு இருந்துருப்பேன் உங்க நெனப்போட. ஆனால் நீங்க வந்த காதல உணர முடியாம இருக்கீங்க. இல்ல இல்ல உணர முடியாம னு இல்ல உணர கூடாதுனும் அத என்கிட்டே காட்ட கூடாதுனும் பிடிவாதமா இருக்கீங்க. அதனால வெரி சாரி. இந்த விஷயத்துல உங்க பிடிவாதத்தை விட என் பிடிவாதம் தான் பெருசு னு நான் காட்டுறேன். கண்டிப்பா உங்கள என் காதல ஏத்துக்க வைப்பேன்.”  என தன் மனதில் இருந்த அனைத்தையும் தெள்ள தெளிவாய் வெளிச்சம் போட்டு காண்பிக்க,

அதனை கேட்டவனுக்கு அவளின் காதலின் ஆழத்தை நினைத்து வியப்பதா, போயும் போயும் தனக்காக இவ்வளவு உருகுறாளே என வருத்தப்படுவதா, இல்லை ஒவ்வொரு முறையும் அவளை கோபத்தில் அறைந்து காயப்படுத்துகிறோமே என பரிதாபப்படுவதா. இவ்வாறு கலவையான உணர்ச்சிகளால் பிணைக்கப்பட்டிருந்தவனோ சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்துவிட்டு,

“இங்க பாரு நான் பொறுமையா சொல்றேன். உன்னோட இந்த ஆழமான காதலுக்கு தகுதியானவன் நான் இல்ல. அத புரிஞ்சுக்கோ. மதிப்பே இல்லாத எடத்துல உன்னோட அன்ப காட்டுறது வேஸ்ட். அப்படியே உன் மேல எனக்கு காதலே வந்தாலும் என்னால உன்கிட்ட சகஜமா இருக்க முடியாது. எங்க ஒவ்வொரு தடவையும் கோபப்பட்டு உன்னையும் சாவடிச்சுருவேனோ னு பயம் தான் இருக்கும். கோபத்தை விடணும் னு நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்துட்டேன். அது என்னால முடியல. என் அம்மாவையே கொன்னவன். நீ எல்லாம் எனக்கு எம்மாத்திரம். உனக்கு உன் உயிர் மேல பயம் இல்லாம இருக்கலாம். ஆனால் உன் அப்பா அம்மாவை நெனச்சு பாத்தியா. அவங்களுக்கு நீ தான் எல்லாமே. என் அம்மாவை கொன்னை குற்ற உணர்ச்சியே இன்னும் என் மனசுல இருந்து போகல. அது போகவும் போகாது. எங்க அம்மாவே உயிரோட வந்து நீ என்னை கொல்லல டா கண்ணா னு சொன்னா மட்டும் தான் அது போகும். ம்ஹும் அது நடக்க வாய்ப்பில்லை.” என விரக்தி சிரிப்போடு கூறியவன் “மறுபடியும் அந்த மாதிரி ஏதும் நடத்துற கூடாது னு தான் நான் எல்லார்கிட்டயும் இருந்து விலகி இருக்கேன். அதனால ப்ளீஸ் புரிஞ்சுக்கோ என்னை. எனக்கு உன்மேல காதல் இல்ல. வரவும் வராது. வரவும் விடமாட்டேன்.” என ரௌத்திரன் தன் மனதில் இருப்பதை கொட்டி தீர்க்க அவளோ,

“சரி. அப்போ காதல் இல்லாம தான் கொஞ்ச நேரம் முன்னாடி அப்படி பதறுனீங்களா.” என மலர் கேள்வியாய் கேட்க,

“அது எப்படி காதலாகும். என்னை நம்பி நீ வந்துருக்க. உன்னை பத்திரமா வீட்டுக்கு கொண்டு போய் விடுறது என்னோட பொறுப்பு. அதனால தான் உங்க அப்பா அம்மா கிட்ட என்ன பதில் சொல்ல போறேனோ னு தான் பயந்தேன். பதறினேன். அண்ட் நிதி ங்குற பேரு எனக்கு பிடிச்சிருந்தது. பேர் மட்டும் தான். எல்லார் கூப்டுற மாதிரி கூப்பிடாம விதியாசமா கூப்பிட்டா அது காதலா. இதெல்லாம் சின்ன பிள்ளைத்தனமா இருக்கு. உனக்கு நான் புரிய வைக்கணும் னு அவசியம் இல்ல. நீயே சைக்காலஜி ஸ்டூடெண்ட் தான. எல்லாம் தெரிஞ்சும் தான் நீ இப்படி பண்ற. சோ ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டன்ட். ஐ டோன்ட்(don’t) லவ் யூ. ஐ காண்ட் (can’t) லவ் யூ. ஐ வோண்ட் (won’t) லவ் யூ.” என அழுத்தமாய் சாலையை வெறித்தபடி ரௌத்திரன் கூற,

“சரி ஓகே. என்னோட லவ்வ ரிஜெக்ட் பண்ண ஒரு வேலிட் ரீசன் சொல்லுங்க பாப்போம்.” என மலர் அவனை கேட்க அவனோ,

“ஏன் னா எனக்கு லவ் வரல. அதான் ரீசன்.” என மனதைக்கல்லாக்கி கொண்டு கூற,

“இப்போ வரல சரி. ஒருவேளை இனிமே வந்தா.” என புருவம் உயர்த்தி அவனிடம் கேட்க,

“நான் தான் சொல்றேன் ல. வரவும் வராது கண்டிப்பா. உனக்கும் எனக்கும் செட் ஆகாது. நம்ம ரெண்டு பேருக்கும் எந்த விஷயமும் ஒத்து போகாது.” என அவன் யதார்த்தமாய் கூற,

“ஒத்திட்டுபோகாதா. என்ன சொல்றீங்க. புரியல.” என மலர் அவனை சந்தேகமாய் பார்த்தபடி கேட்க,

“ஆமா. ஒத்துப்போகாது. நான் ரொம்ப அமைதி, கோபக்காரன். நீ கலகலப்பா இருக்கனும் னு நெனைக்குறவ. எனக்கு இட்லி பிடிக்கும். உனக்கு இட்லி பிடிக்காது தோசை தான் பிடிக்கும். எனக்கு டீ தான் பிடிக்கும். உனக்கு காபி தான் பிடிக்கும். எனக்கு மழையில நனையுறது பிடிக்கவே பிடிக்காது. உனக்கு அது தான் பிடிக்கும். இப்படி சின்ன சின்ன விசயத்துல கூட நம்ம முரண்பாடா தான் இருக்கோம். சோ சரியா வராது விட்டுரு.” என படபடவென பேசி முடிக்க அவன் பேசுவதை கேட்டவளோ கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்.

“இப்போ எதுக்கு சிரிக்குற” என கோபமாய் அவன் கேட்க,

“பின்ன என்ன தீரா. இதெல்லாம் ஒரு காரணம் னு சொல்லி காமெடி பண்ணா சிரிக்காம என்ன பண்றது.” என அவள் சிரித்துக்கொண்டே கேட்க,

“இது நான் ஒரு எடுத்துக்காட்டுக்கு சொன்னேன். இதுவும் காரணம் தான்.” என  அவன் புரியவைக்கும் நோக்கத்தோடு கூற,

“தீரா. நான் ஒரு விஷயம் சொல்லவா. சைன்ஸ் எல்லாம் படிச்சது இல்லையா. சேம் சைட் ரிப்பெல் ஈச் அதர். ஆப்போசிட் சைட் அட்ராக்ட் ஈச் அதர் னு. அதாவது  ஒத்த துருவம் ஒத்து போகாது. எதிர் எதிர் துருவம் தான் ஒத்து போகுமாம். அதனால நம்ம பெர்பெக்ட் மேட்ச்.” என மலர் கூலாக சொல்ல,

“அதெல்லாம் சொல்ல நல்லா இருக்கும். வாழ்க்கைல சரி பட்டு வராது. இங்க பாரு. இதெல்லாம் கொஞ்ச நாளுக்கு உனக்கு தோணும். நான் இப்படியே உன்ன கண்டுக்காமயே இருந்தா ரெண்டு மூணு மாசத்துல உனக்கே வெறுத்து போயிரும்.” என அவன் சலிப்பாக கூற,

“என் காதல பத்தி நீங்க என்னை நெனச்சு வச்சிருக்கீங்க.” என ஆதங்கமாய் மலர் கேட்க,

“நிஜமா தான் சொல்றேன். நான் சொல்றது தன் எதார்த்தம். சரி முடிஞ்சா ஒரு சேலஞ் பண்ணுவோம். நான் இந்த வீட்டுக்கு மே 6 வந்தேன். அப்போ மே 5 தான நீ என்னை முதல் தடவ பார்த்த, அடுத்த வர்ஷம் மே 5 வர இதே லவ்வோட நீ இருந்த னா பாக்கலாம். அப்போ கூட எனக்கு அந்த நேரம் என்ன தோணுதோ அது தான் சொல்லுவேன். அக்செப்ட் பண்ணுவேன் னு நிச்சயமா சொல்ல முடியாது.” என அப்பொழுதாவது உன் காதலும் வேணாம் ஒன்னும் வேணாம் என கூறுவாள் என நினைத்துவிட்டு ரௌத்திரன் வேறு வழியின்றி கூற அவனை தீர்க்கமாய் மலர் பார்த்து,

“என்ன தீரா என்னோட காதல சோதிச்சு பாக்கீங்களா. பரவாய் இல்ல. நான் இந்த சேலஞ்ச ஏத்துக்குறேன். நான் உண்மையா காதலிக்குறேன். என்னால காத்திருக்க முடியும். பட் நீங்க சொன்ன மாதிரி அதே காதலோட கண்டிப்பா இருக்க முடியாது.” என மலர் கூற அவனோ,

“நிச்சயமா யாராலயும் அதே காதலோட இருக்க முடியாது னு நானும் சொல்றேன்.  ஒன்னு காதல் குறையும். இல்லனா காதலே இல்லாம போயிரும்.” என அவன் தோலை குலுக்கிவிட்டு கூற,

“ஹலோ ஹலோ ஒரு நிமிஷம் மிஸ்டர் ரௌத்திரன். நான் சொல்ல வந்ததே வேற. கண்டிப்பா இதே காதலோட இருக்க மாட்டேன். இதோட அதிகமா தான் என் காதல் ஆகும் னு சொல்ல வந்தேன்.” என மலர் தெனாவெட்டாய்  கூற அவனோ நம்பாத பார்வை பார்த்தான்.

“நான் சொல்றது டயலாக் பேசுற மாதிரி உங்களுக்கு தெரியும். ஆனால் நான் நிரூபிச்சு காமிப்பேன். என் காதல் நம்மள சேர்த்துவைக்கும். விளையாட்டுத்தனமா நான் இருக்குற நால என்னோட காதலையும் விளையாட்டா எடுத்துடீங்க அப்டி தான தீரா. பரவாயில்ல.” என மலர் கூறிவிட்டு திரும்பிக்கொண்டாள். ரௌத்திரனும் காரை கிளப்பினான். ஏனோ மலரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.’என் காதல எப்படி அப்படி நினைக்கலாம். என்னை பாத்தா டைம் பாஸ்க்கு லவ் பண்ற மாதிரியா தெரியுது.’ என அவளின் மனது ஆதங்கப்பட்டது.

ஜன்னல் வழியே காற்றடிக்க காற்றின் வேகத்தில் அவளின் கண்ணீர் ரௌத்திரனின் முகத்தில் தெறித்தது. அவள் அழுகிறாள் என ரௌத்திரனும் அறிந்துகொண்டான். ஆனால் ஏதும் கேட்கவில்லை அவளிடம். ஜன்னல் வழியே வெறித்துக்கொண்டிருந்தவள் காற்றின் இதத்தில் அவ்வாறே உறங்கியும் போனாள் கார் கதவில் சாய்ந்தவாறு. ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு அமைதியான இடம் ஒன்றின் ஓரத்தில் காரை மெதுவாக நிறுத்தினான். அவளின் தூக்கம் கலையாதவவாறு நிறுத்தியவன் அவளையே பார்த்தான். கண்களில் கண்ணீர் வடிந்த தடம் அவ்வாறே காய்ந்து போயிருந்தது. அடித்த அடியில் கன்னமும் கன்றி பொய் இருந்தது. அவளை அந்நிலையில் பார்க்க மனது வலித்தது. அவளை பார்த்தவாறே தனக்குள் பேசி கொண்டான்.

‘ஏன் டி இவ்ளோ லவ் பண்ற என்னை. உன்ன நான் கஷ்டப்படுத்துறேன் ல. உன் காதல் உண்மை னு எனக்கு தெரியுது ஆனால் வேணாம் டி. நான் உனக்கு வேணாம் நிதி. எப்போ வேணாலும் என்ன வேணாலும் ஆகலாம் எனக்கு. நீ சந்தோசமா இருக்கனும். ஒரு வர்ஷம் கழிச்சு நாளும் நீ இதே காதலோட இருப்ப னு எனக்கு நீ பேசுறதுலயே நல்ல தெரியுது. ஆனால் அது நடக்கூடாது. நீ என்னை மறக்கனும். மறந்துரு டி என்னை ப்ளீஸ். நிஜமா நீ மயங்கும் போது எப்படி துடிச்சேன் னு எனக்கும் தெரியும். என்னை அறியாம உள்ள இருந்து வந்துச்சு. ஆமா டி  நீ சொல்ற மாதிரி நீ எனக்குள்ள வந்துட்ட தான். என் மனசும் உன்ன தேடுது தான். ஆனால் வேணாம். உன்னை அடிச்சே கொன்றுவனோ னு பயமா இருக்கு டி. கண்டிப்பா என் வாழ்க்கைல உன்னை நான் கொண்டு வரமாட்டேன். அது மட்டும் உறுதி. என் வாழ்க்கை ல வந்த முதல் காதலும் நீ தான். கடைசி காதலும் நீ தான். நான் கடைசி வர என் காதல உன்கிட்ட சொல்லாம மௌனமா எனக்குள்ளேயே எரிஞ்சுகுறேன் டி.” எனக் கண்ணீர் கசிய மனதில் நினைத்தவாறே மெதுவாக அவளின் கன்னம் வருடியவன் அவள் விழிக்காதவாறு அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு,

“லவ் யூ நிதி.” என காற்றுக்கு கூட கேட்காதவாறு மெதுவாக கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவளும் உறக்கத்தில்,

“லவ் யூ தீரா” என புலம்ப மெலிதாக புன்னகைத்தான் அவளின் தீரன்.

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்…!அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்…!விழிகள் முழுதும்.. நிழலா இருளா…!வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா…!சருகென உதிர்கிறேன் தனிமையிலே…!மௌனமாய் எரிகிறேன் காதலிலே…!

எனும் பாடலுக்கேற்றவாறு தான் ரௌத்திரனின் மனநிலை இருக்கிறது இப்பொழுது. பின்பு ஏதோ சிந்தித்தவன் அவளை பார்த்து,

‘நீ என் வாழ்க்கை ல வர கூடாது னா நான் அந்த முடிவு மட்டும் தான் எடுக்கணும். அது உன்ன கஷ்ட படுத்தும் னு எனக்கு தெரியும். ஆனால் எனக்கு அத விட்டா வேற வழியில்லை. மன்னிச்சுரு நிதி’ என அவளின் முகம் நோக்கி மானசீகமாய் மன்னிப்பு வேண்டிவிட்டு காரை கிளப்பினான். மனதில் உள்ள அனைத்தையும் கொட்டிய நிம்மதியிலும், தன்னவன் மனதிலும் தான் இருக்கிறோம் என தெரிந்துகொண்ட மகிழ்ச்சியிலும் நிம்மதியாக உறங்கினாள். அவன் எடுத்த முடிவு தெரிந்த பின் அந்த நிம்மதி காணாமல் போகப்போகிறது என அறியாமல்.

இது தாங்க காதல். எப்போ வந்துச்சு னு நமக்கே தெரியாது. நமக்குள்ள காதல் இருக்கு னு தெரிஞ்ச அந்த நொடி அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கும். உண்மையான காதல் னா தினமும் பாத்து பேசி சிரிச்சு கொஞ்சி வரது மட்டும் இல்லங்க. நெஞ்சுல சுமந்து நெனப்புல வாழனும் னு சொல்லுவாங்க ல அந்த மாதிரி தான். தன்னால அவளுக்கு தான் கஷ்டம் னு நெனச்சி தன்னோட காதல அவகிட்ட இருந்து மறைச்சு அவ நெனப்புலயே இருந்துறலாம் னு நெனைக்குற ரௌத்திரனோட காதல். ஏன் வந்தது எதுக்கு வந்ததுனே தெரியாம காதல் வந்து அவ உயிருக்கு மேலா அவனை நினைச்சி அவன் அடிச்சாலும் பரவாயில்ல கொன்னாலும் பரவாயில்ல னு அவனோட காதலுக்காக ஏங்குற நம்ம மலரோட காதல். இவங்க ரெண்டு பேரோட காதலும் சேருமா…? விதியின் விடை என்னவோ…? பொறுத்திருந்து பார்ப்போம்.

மௌனம் எரியும்…❤️

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 2 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by சுந்தரி💕 "செழிலி💕"

கதை உலகில் புதிதாக பிறந்த குழந்தை நான். ஆதரவு தந்து வளர்ப்பீராக...

Story MakerContent Author

தண்டிக்கப்பட்ட நியாயங்கள் -5

11. உனது விழிகளின் வழியே எனது தேடல்..!