in , ,

உள்ளம் கொள்ளை போன தருணம்..24

                   தருணம் -24

அநேஷ்வியா அங்கிருந்து கிளம்பியதற்குப் பிறகுதான் வண்டியை கிளப்பினான் வருண்.மெதுவாகத்தான் வண்டியை இயக்கினான்  ஓரவிழியால்  அவளைப் பார்த்தவாறே.அவளோ பார்வையை வெளிப்புறம் பதித்தவாறு அமர்ந்து இருந்தாலும் அவனது பார்வை தன்னைத் துளைப்பதை அறிந்திருந்தாள் தான்.  ஏனோ அவன் புறம் திரும்ப நாணமது பெண்ணவளை தடுத்திட அவன் பக்கம் திரும்பாமலேயே வெளியில் பார்வையைப் பதித்திருந்தாள்.

காருக்குள் நிலவிய அமைதியை கலைக்க முன்வந்தான் வருண். மெதுவாக தன்வியின் புறம் திரும்பி,

“ ஏன் ? என்ன பாக்க மாட்டேங்கற தன்வி”  என்றான் ஒருமையில்.அவன் இதுநாள் வரை தன்வியை வாங்க போங்க என்று தான் அழைத்துப் பேசி இருக்கிறான் இன்று ஒருமையில் அழைத்ததும் சட்டென்று அவன் புறம் திரும்பியவள் விழிகளாலே என்னவென்று கேட்க அவளது  விழியசைவில்  வீழ்ந்தவன், 

“இந்தச் சுடியில உண்மையாவே நீ  ரொம்ப அழகா இருக்க தன்வி” என்றான்.

அவனது தன்வி என்ற அழைப்பில் விழிகளை ஆச்சரியத்தில்  விரித்தவள்,“ நீங்க இப்படியெல்லாம் கூட பேசுவீங்களா?  ஆனா இதுக்கு முன்னாடி இந்த மாதிரி உரிமையாவும் , செல்லப் பேரு வச்சு கூப்டுற மாதிரியும்  எங்கிட்ட பேசினது இல்லையே”

“ இதுக்கு முன்னாடி பேசினது இல்ல ஆனா இனிமே இப்படித்தான் பேசுவேன்”  என்றான் அவளது  விழிகளை ஊடுருவியவாறே.

“ அது ஏன்னு  நா தெரிஞ்சுக்கலாமா?”  என்றவள் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்ட அழகில் மீண்டும் அவள் புறம் சாய்ந்த மனதை அவள் காலடியில் சமர்ப்பித்தவாறே,

“நான் ஏன் இப்படி பேசுறேன்னு உனக்கு தெரியாதா? தன்வி”

“ நீங்க ஏன் இப்படி பேசுறீங்கன்னு எனக்கு தெரியுதோ? தெரியலையோ?   அது வேற விஷயம்.  ஆனா அதஉங்க வாயால சொல்லிட்டா  நல்லாருக்கும். ம்ம்ம் சொல்லுங்க நீங்க ஏன்?  இப்படி நடந்துக்குறீங்க?”  என்றவள் உள்ளுக்குள் துளிர்த்த  சிரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இதழை தன் பற்களால் கடித்துக்கொண்டே அவனுக்கு பதில் அளித்தாள்.

அவளது செய்கை கண்டு தனக்குள் எழுந்த உணர்வுகளை சட்டென்று கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தவாறே வண்டியை ஓரமாக நிறுத்தினான். பின்பு அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தவாறு,

“ இங்க பாரு தன்வி  எனக்கு எதையும் சுத்தி வளச்சி பேச  தெரியாது.  அது மட்டுமில்லாம இன்ன வரைக்கும் இந்த மாதிரி என் மனசுல இருந்தது இல்ல அதனால உன்னை சாதாரணமாகப் பார்க்க முடிஞ்சது மரியாதையோட பேச முடுஞ்சது.  ஆனா எப்ப என்னோட மனசுல உன் மேல இருக்கிற அன்பு, காதல் தான்னு உறுதியாச்சோ  அந்த நிமிஷத்துல   இருந்து உன்ன சாதாரணமா  பாக்க முடியல, உன்கிட்ட நார்மலா  பேச முடியல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன். இதுக்கு மேல இத என் மனசுல வெச்சுக்கிட்டு என்னால மூச்சுவிட முடியாது,  மூச்சு முட்டுற மாதிரி இருக்குது தன்வி. நான் உன்னை விரும்புறேன்,  ரொம்பவே விரும்புறேன் லைஃப் லாங் உன்கூட வாழ்க்கைத் துணையாக வர ஆசைப்படுறேன், நீ என்ன சொல்ற?” என்று பட்டென்று உடைத்துவிட்டான் தன் காதலை.

இந்த நேரத்தில் இப்படி ஒரு சூழ்நிலையில் அவனது காதலை உரைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.  எனவே விழிகள் ஆச்சரியத்தில் விரிந்த நிலையில் நிலைகுத்தி நிற்க அவளும் “  நீங்கதான் என்ன  விரும்புறீங்க  ஆனா நான் விரும்பலையே? எந்த தைரியத்தில இத எங்கிட்ட சொல்றீங்க ”  என்றாள் அவனிடம் இருந்து என்ன பதில் வரும் என்பதை தெரிந்து கொள்வதற்காக.

“ நீ  மொதல்ல எஸ் ஆர் நோன்னு உன்னோட பதில சொல்லு அதுக்கப்புறம் நான் சொல்றேன்”  என்றான் இவனும் விடாப்பிடியாக.

“ ஒருவேளை என்னோட பதில் நோ அப்படின்னு இருந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க.” என்று அவள் குறும்பாக கேட்டதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,

“  சிம்பிள் ஒன்னும் பண்ண மாட்டேன் இதோ என் பக்கத்துல இருக்க உங்கையை பிடிச்சு  இழுத்து ஜஸ்ட் ஒரு லிப் லாக் பண்ணிட்டு உன்னோட ஞாபகத்தையும், உன்னையும்  மறந்திட்டு  வீட்ல  பாக்குற பொண்ண  கல்யாணம் பண்ணிட்டு லைஃப்ல செட்டில் ஆகிடுவேன்”  என்று அவன் சொல்லி முடித்த மறு நிமிடம் சட்டென்று அவன் தோள்பட்டையில் பட்பட்டென்று  அடிக்க ஆரம்பித்தாள் ‌

“ யூ.. யூ.. பொறுக்கி பிராடு எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு போவேன்னு சொல்லுவ, நான் சொன்னனா?  உன்ன லவ் பண்ணலன்னு  சொன்னனா. நோ  சொன்ன என்ன பண்ணுவேன்னு தானே கேட்டேன் அதுக்கு இப்படி ஒரு பதில் சொல்லுவியா?  அப்போ உன்னோட லவ்  அவ்வளவுதானா?”  என்று சொல்லியவாறு அவனை அடித்துக் கொண்டிருந்தவளின் கைகளை தன் கைகளால் பிடித்து தடுத்து நிறுத்தியவன்,

“  இதுக்கு என்ன அர்த்தம் தன்வி  நோ  இல்லன்னா அப்புறம் என்ன  எஸ்ஸா?”   என்றான்  ஒருவித எதிர்பார்ப்போடு.

அவன் அவ்வாறு கேட்டதும் சட்டென்று தலையை கீழே குனிந்து கொண்டு ஆமாம் என்று தலையசைத்துவிட்டு சட்டென்று தன் மடியில் முகத்தை புதைத்துக் கொள்ள, வருணுக்கு  சந்தோஷத்தில் காரிலிருந்து இறங்கி ஓவென்று கத்தனும் போலிருந்தது.  இருக்கும் இடம் கருதி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் தன் அருகில் அமர்ந்திருந்த தன்னவளின் கரங்களை தைரியமாக பற்றி அதில் தன் இதழ்களை பதித்தவாறு,

“ லவ் யூ சோ மச் தன்வி”  என்றான் ஒட்டு மொத்த நேசத்தையும் தேக்கி.

அவனது இதழ் பதிப்பில் உணர்வு பெற்றவள் நிமிர்ந்து  அவன் முகத்தைப் பார்த்தவாறு“  நானும் தான்.  அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு ரொம்ப ஹேன்சமா அழகா  இருக்கீங்க”  என்று சொன்னதும் இதழில் தோன்றிய புன்னகையோடு,

“ உன்னோட ஆளுல்ல, சும்மா  பேரழகனா தான் இருப்பேன்”  என்றானே பார்க்கலாம் அவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு.முகம் கொள்ளா புன்னகையோடு அவனைப் பார்த்து கண் சிமிட்டி தலைசாய்த்து,

“லவ் யூ வருண்”  என்றாள்அவளது வார்த்தையில்  மெய்சிலிர்த்து போனவன்,“ எங்க நீ நோ  சொல்லிருவியோன்னு  ரொம்பவே பயந்துட்டேன்  தெரியுமா?”  என்று சொல்லி அவன்  முகம் வாடுவதை தாங்க இயலாமல் தவித்தவள்,

“  உங்களை புடிக்கலைன்னு சொன்னா நான் ஒரு நல்ல மனுசனை மிஸ் பண்றதுக்கு அர்த்தம். உங்கள எனக்கு   புடிக்கும் ஆனா அது உங்க மேல வச்சிருந்த காதல்னு  புரிஞ்சுக்குறதுக்கு  கொஞ்சம் லேட்டாயிடுச்சு அவ்வளவுதான்.  சரி காலேஜ்கு  போலாம் அநேஷ்வி வெயிட் பண்ணுவா”  என்றதும் அப்போதுதான் அவனுக்கும் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.  அவள் வலது கையை  தன்இடது கையால் பிணைத்துக் கொண்டு கார் கியரில் வைத்துக் கொண்டவன் மற்றொரு கையால் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு காரை இயக்கினான்.

அந்தக் கார் கல்லூரி அடைவதற்குள் இருவரும் ஓராயிரம் முறையாவது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பர்.  இந்த உணர்வும் புதியதாகவும், அதே நேரம் சுகமாகவும், அவஸ்தையாகவும்  இருந்தது இருவருக்கும்.கல்லூரி  வாயில் காரை நிறுத்திய அவனிடம் பாய்  சொல்லி விட்டு இறங்கி செல்ல முயன்றவளின் கரத்தை பிடித்து நிறுத்தினான். அவளது ஒரு கால் வெளியே இருக்க மற்றொரு  காலோ காரின் உள்ளே இருந்தது. பாதி உடல் வெளியே தெரிந்தது,  மீது காரினுள் மாட்டிக் கொண்டிருந்தது. 

அவள் அவனை கேள்வியாக பார்க்க வருணோ“  ஒரே ஒரு தடவை லவ் யூ சொல்லிட்டு போ தன்வி” என்றான்  ஏக்கமாக.

வருணின் கண்களில் இருந்த ஏக்கத்தைப்  பார்த்தவள்“  சொல்ல முடியாது போ”  என்றாள் குறும்புச் சிரிப்போடு.

“ ஏய் தன்வி  இப்ப  மட்டும் நீ  சொல்லாம போனே?  அப்புறம் நடக்குற சம்பவத்துக்கு நான் பொறுப்பு இல்லை”  என்றான் மிரட்டும் தோணியில்.

“ என்ன பண்ணுவீங்க திட்டுவீங்களா? இல்ல அடிக்கப் போறீங்களா?”  என்றாள்.

“ ச்ச்சே ச்ச்சே  அடிக்கல்லாம் மாட்டேன்”  என்று இழுவையாய்  நிறுத்தியவன் தான்  பிடித்திருந்த அவளது கரத்தை பிடித்து  தன்னை நோக்கி இழுக்க மலர்க்கொத்தென அவன் மேல் வந்து விழுந்தாள் மங்கையவள்.

தன் மீதே விழுந்த  தன்னவளின் முகத்தில் விழுந்த முடிக்கற்றையை காதோரம் ஒதுக்கி தள்ளியவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்து,

“ இன்னொரு தடவ  பொறுமையா  கேட்க மாட்டேன் நீ ஐ லவ் யூ சொல்லிரு.  இல்லன்னா இந்த இதழ் ஒற்றலை வேற இடத்துல வாங்குவ”  என்று சொன்னவனின் பார்வை அவள் அதரங்களை தொட்டு மீண்டது.

அவனது செயலும் பேச்சும் அவளுக்கு சற்று பயத்தை கொடுக்க“  நீங்க ஏன்  எப்படி இருக்கிறீங்க?  அதுதான் தெரியுதுல்ல  நா உங்கள  லவ் பண்றேன்னு அப்புறம்  ஏன்? தேவையில்லாம  வார்த்தையில கேட்க நெனைக்கிறீங்க” 

“ இன்னொரு தடவ ஒ வாயில இருந்து வர்ற  வார்த்தை வழியா  கேக்கணும் போல இருக்கு ப்ளீஸ் ஒரே ஒரு தடவ சொல்லு தன்வி ”  என்றான் கெஞ்சலாய்.

அவன் கையணைவில்  இருந்தவாறு  அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவள்“  லவ் யூ வருண் லவ் யூ சோ மச்”  என்று சொன்னதோடு ஏதோ மயக்கத்தில் இருப்பதுபோல் மயங்கியவள் தானாய் அவன் கன்னத்தில் தன் அதரங்களை ஒற்றி எடுத்துவிட்டு ஒரே ஓட்டமாக  ஓடி விட்டாள் கல்லூரிக்குள்.

அவளது லவ் யூ வருண் என்ற வார்த்தைகளோடு அவளின் இதழ் தீண்டலும் கிடைத்த சந்தோஷத்தில் குஷியாகவே அலுவலகம் கிளம்பி சென்றான் வருண். முதல் நாள் அனுபவம் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நல்ல முறையில் இருந்தது.  அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.அனைவரிடமும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பேசும் அவன் நொடியில் ஒட்டிக் கொண்டான்.

மீட்டிங் முடித்துவிட்டு 12 மணி போல் வந்த மதன் அனைவர் முன்பும் வருணனை நிறுத்தி“ ஹீ ஈஸ்  வருண்  இந்த கம்பெனியோட  ஜி. எம்”  என்று அறிமுகப்படுத்த அனைவரும் வியந்தனர்.  சாதாரண எம்ளாயியாக இருப்பான் என்று எண்ணியவர்கள் அவனை ஜிஎம் சென்றதும் வியந்தவாறே அவனை பார்த்து வணக்கம் வைக்க அனைவரையும் பார்த்து சின்ன தலைப்போடு அதை ஏற்றுக் கொண்டவன், மதன்  அங்கிருந்து சென்றதும்

“ யாரும் டென்ஷன் ஆகாதீங்க நா எப்பவுமே உங்க நண்பன் மாதிரி தான் ஓகே வா ”   என்று சொல்லிவிட்டு மதனது அறைக்கு ஓடினான்.

கல்லூரியில் தன்வியின் வரவிற்காக மரத்தடியில் அமர்ந்த காத்திருந்தாள் அநேஷ்வியா.  உள்ளம்  முழுவதும் மகிழ்ச்சியோடும்,  முகம் முழுவதும் பூரிப்போடும்   அநேஷ்வியின் அருகில் வந்து அமர்ந்த தன்வியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள், அநேஷ்வி.  அவளது மகிழ்ச்சியும் பூரிப்பும் அவளுக்கு எதையோ உணர்த்த தன்வியின்  வாயிலிருந்தே அவளது மகிழ்ச்சிக்கான காரணம் வரட்டும் என்று பொறுமையாக காத்திருந்தாள்.  தன்வியிடம் எந்த மாற்றமும் இல்லை. வருணின் குறும்பு பார்வையும், காதல்  வார்த்தைகளும், இதழ் தீண்டலும் அவளை  ஏதோ மயக்க நிலையில் வைத்து இருந்ததோ? என்னவோ? அதிலிருந்து மீளமுடியாமல் அமர்ந்திருந்தாள்.

விட்டால் இவள் பொழுதுனிக்கும்  இப்படியே தான் இருப்பாள் வகுப்பிற்கு வேற தாமதம் ஆகிறது என்பதை உணர்ந்த  அநேஷ்வி  அவளது தோளில் கைவைத்து உலக்கி,

“  என்னை தன்வி ரொம்ப ஹாப்பியா இருக்க. என்ன எங்கண்ணன்  புரபோஸ்  பண்ணிட்டாரா? என்ன”  என்றாள். சட்டென்று நிமிர்ந்து அநேஷ்வியின் முகத்தை பார்த்தவள் வெட்கத்தோடு ஆமாம் என்று தலையசைக்க.

“ பதிலுக்கு நீ என்ன சொன்ன?”  என்றாள் ஆர்வத்துடன்.

“ நான் என்ன சொல்வேன் நானும் ஓகே சொல்லிட்டு வந்துட்டேன்”  என்று சொன்னவாறு கைகளில் முகத்தை புதைத்தவளாய் வெட்கி கலகலவென்று  தன்வி  சிரித்த சிரிப்பில் தானும் இணைந்து கொண்டவள்,

“  வாவ்  சூப்பர்… ஐ அம் சோ ஹேப்பி அண்ணியாரே!  வாங்க கிளாசுக்கு போகலாம் ஆல்ரெடி லேட். எவ்வளவு நேரம் தான் இப்புடியே  வெட்கப்பட்டுட்டு  இருக்க போற காலேஜ் முடிஞ்சு  வீட்டுக்கு போனதுக்கப்புறம் நைட் ஒ ஆளு கிட்ட போன் பண்ணி மிச்சமிருக்க வெக்கத்தை வார்த்தையா கொட்டு சரியா!  வா போலாம் ” என்று சொல்லி  தன்வியை இழுத்துக் கொண்டு சென்றாள்  அநேஷ்வியா.அநேஷ்வியாவின்   அண்ணி என்று அழைப்பு தன்வியை  உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை குளிர வைத்தது.

தேர்வு நெருங்குவதால் பாடங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு இருக்க, அனைவரும் சும்மாதான் வகுப்பறையில் உட்காந்திருந்தனர். ஒவ்வொரு நிமிடமும் தன்வியை  கிண்டல் செய்து கொண்டே இருந்தாள் அநேஷ்வி.  

ஆனால் ஒரு புறம்‘மித்ரனும் தன்னை விரும்ப வேண்டும்,  தன்னிடம் இருப்படி காதலை தெரிவிக்க வேண்டும், தன்னை வெக்கத்தில் திக்கு முக்காட வைக்க வேண்டும் ’என்ற எண்ணற்ற கற்பனைகள் அந்த வானைப் போல் இலக்கில்லாமல் பரந்து விரிந்தது அவள் மனதில்.

வார்த்தைகள் கொண்டு எனையவன் வெக்கத்தில் மூழ்கடித்து என்னுள்ளே அவனும் மூழ்கிட வேண்டுமென்ற ஆவல் பரந்து  விரிந்திட்ட வான்வெளியைப்போன்று கற்பனைகளாய் பரவுகிறதடா,இப்பாவையவளின் உள்ளமதிலே!!

மண்டியிட்டு  காதலை உரைக்காவிடிலும்பேதையிவளின் கூர்விழிகண்டுகொண்ட நேசத்தினைஇதழ்வழி உரைத்திடலாமே..என்ற பேராவல்  பேரலையாய்எழும்பி  நிற்கிறதடா!பேதையிவளின் உள்ளக்கிடங்கில்…

தன்வி தன்னவனுடனான  கனவுலகில் சஞ்சரிக்க,  மித்திரனின் நினைவில் தானும் கண் மூடி இருக்கையில் தலை சாய்ந்தாள் அநேஷ்வியா.அவள் மித்ரனை நினைத்துக் கனவு கொண்டிருக்க அதே நேரம் மித்திரன் பயிற்சியில் தனது திறமையை வெளிக் காட்டிக் கொண்டிருந்தான்.  அவனது கட்டுடல் மேனி வியர்வையில் குளித்து கொண்டிருக்க, அவனது ஒவ்வொரு நடவடிக்கையும் அவனது ட்ரெயினரான ஜவஹரின் மனதில் அவனை உயர்ந்த நிலையில் அமர்த்தி இருந்தது. அவனது துடிப்பும் வேகமும், திறமையும், சாமர்த்தியமான பேச்சும், எளிதில் எவரையும்  எடை போட்டுவிடும் கூர் பார்வையும் சத்தியமாக மித்திரனை ஒரு திறமையான காவல் அதிகாரியாக கொண்டு வந்து நிறுத்தும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

அவர் சொன்ன வேலையை முடித்துக்கொண்டு உடலில்  பூத்திட்ட வியர்வை முத்துக்களை பூத்துவாளைக் கொண்டு துடைத்தவாறே  ஜவஹர் முன் பிரசன்னமானான்.அவனை மெச்சுதல் பார்வை பார்த்தவர், “  யுவர் யங் அண்ட் வெரி வெரி டேலண்டெட் பர்சன். யுவர் அப்சலுட்லி எலிஜபிள் பாஃர்  திஸ் கைன்ட் ஆஃப்   டிபார்ட்மென்ட் சர்வீஸஸ்”  என்றார்.

“தேங்க்யூ சார்” என்றவன் தன் நண்பனைத் தேடி புறப்பட்டான்.அந்த கிரவுண்டில் பாதி  தொலைவு கூட சென்றிருக்க மாட்டான் சட்டென்று எங்கிருந்தோ பறந்துவந்த தோட்டவானது  அவனது இடது தோள்பட்டையை  உரசிக் கொண்டு சென்றது.  நல்லவேளையாக அவனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி அருந்து   கீழே விழ அதை எடுப்பதற்காக கீழே குனிந்ததால்   அவன் நெஞ்சைப் பதம்  பார்த்திருக்க வேண்டிய தோட்டாவானது அவனது  தோள்பட்டையினைப் பதம் பார்த்திருந்தது. அவனையே  வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்த ஜவஹருக்கு  இந்நிகழ்வு கண்ணில் பட்ட அடுத்த நொடி  பதறி ஓடியதோடு ஆம்புலன்சை வரவழைத்து மித்ரனை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  நல்லவேளையாக தோட்டாவானது  தோள்பட்டையின் தோலை  உரசிக் கொண்டு சென்றதால் அதிக அளவில் காயமில்லை என்றும் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் மருத்துவர்கள் சொன்னதற்குப் பிறகு தான்  அவருக்கு  போன உயிர் வந்தது போலிருந்தது.

ஒரு வேலையாக நிர்மலை  டிரெய்னர் வெளியே அனுப்பி இருந்ததால் அப்போதுதான் கிரவுண்டுக்கு வந்தவனுக்கு விஷயம் தெரிவிக்கப்பட பதறியடித்து  மருத்துவமனை வந்து சேர்ந்தான்.  அவனது கண்கள் கண்ணீரில் மிதந்திட, கலக்கத்தோடு மித்ரனைப் பார்த்தான். 

மித்ரனோ நிர்மலுக்குத்  தைரியம் சொன்னான். “ நம்ம போலீஸ் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் மச்சான். எனக்கு சின்ன காயம்  அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்லடா,  நீ பதறாத சரியா. என்ன எல்லாரும் போஸ்ட்டிங்ல உக்காந்ததுக்கு அப்புறம் இதையெல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க நா இப்பவே ஃபேஸ் பண்றேன் போல. ” என்று விளையாட்டாக அவன் சொல்ல.

நிர்மலோ கலங்கியவாறு,“ லூசா டா நீ… பாத்து கவனமா இருந்துருக்கலாம்ல. உனக்கு எதாவது ஒன்னுன்னா ஒ வீட்” என்று எதையோ சொல்ல வந்தவன் சொல்லாது நிறுத்தி பின்னர்,“  உனக்கு ஒன்னுனா நான் எப்படி தாங்கிக்குவேன் ”   என்று மாற்றிச் சொன்னான்.அதேநேரம்  மருத்துவரை  பார்த்துவிட்டு உள்ளே நுழைந்த ஜவஹர் அவர்கள் இருவரையும் பார்த்து நல்ல நண்பர்கள் என்று மனதில் நினைத்து கொண்டார்.அதேநேரம் அரக்கப்பரக்க மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தாள்  ஜவஹரின்  மகள், ஜோதா. 

தந்தை நிற்பதை கூட கண்டுகொள்ளாமல் அவசரமாக உள்ளே நுழைந்தவள் கட்டிலில் கட்டோடு  மித்ரன் படுத்திருப்பதை கண்டு ஒரு பக்கம் ஆசுவாசம் அடைந்தவள், ஓரவிழியால் மித்ரனை விட்டு சற்று தள்ளி நின்றிருந்த நிர்மலை விழிகளால் தழுவினாள்.அவனுக்கு எதுவும் இல்லை என்று விழிகளால் கண்டதற்குப் பிறகே அவளது மனம் நிம்மதி பெற்றது.

தாய் தந்தையை அழைத்து வரச் சொல்லவும் ஜவஹரைத் தேடி கிரவுண்டுக்கு  வந்தவளுக்கு,‘  தமிழ்நாட்டு பசங்க இருத்தாங்கல்ல அவங்க ரெண்டு பேருல  ஒருத்தனுக்கு அடிபட்டுருச்சி’  என்ற மொட்டையான தகவல் அவளது செவியை  வந்தடைய நிர்மலுக்குத் தான் ஏதோ அடிபட்டு விட்டதோ? என்று பதறி  அரக்கப்பரக்க மருத்துவமனை  வந்து சேர்ந்தாள்.  இங்கே  வந்ததற்கு பிறகு  நிர்மலுக்கு எதுவும் ஆகவில்லை என்பதைக் கண்டதற்குப் பிறகு தான் மித்ரனின் நலத்தினை விசாரித்தாள் .அவளது இந்த தவிப்பை ஜவஹர் தவறாக புரிந்துகொண்டவர்,  தான் போட்ட கணக்கு தப்பாது என்று மனதில் நினைத்தவாறே மகளோடு வீட்டிற்க்கு கிளம்பினார்.

மித்திரனோ அவள்  வந்ததும் அவள் பார்வை தன்னை பார்த்து நிம்மதியடைந்ததும், பிறகு நிர்மலைக் கண்டு தவிப்பாய்  மாறியதையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.‘ ஓஓஓ  இப்படி வேற டிராக் ஓடுதா’என்று நினைத்தவன் அதை நிர்மலிடம்  சொல்லவில்லை. நிர்மலோ  தீவிரமாக இதை செய்தது யாரா? இருக்கும் என்ற சிந்தனையில் லயித்திருந்தான்.

நிர்மல் தீவிரமான சிந்தனையில் இருப்பதை கண்ட மித்திரன்“ என்னடா  எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்க ” 

“ இல்ல உன்ன யார்? இப்படி ஷூட் பண்ணிருப்பாங்கன்னு  யோசிக்கிறேன்டா? “

“ என்ன யாருடா சூட் பண்ண போறாங்க. வேற யாருக்காவது ஸ்கெட்ச் போட்டு இருப்பானுங்க, அது  மாறி தவறுதலா  என் மேல பட்டுருக்கும் அவ்வளவுதான்.  இந்த பேச்ச இதோட விட்டுடு”  என்றிட.

‘ இவன் சொல்றதும் சரின்னு  தான் தோனுது  ஏன்னா  இங்க அதிக அளவு கலவரங்களும், இதுபோன்று நிகழ்வும் தான் நடக்குது, அதனால மித்ரன் சொல்ற மாதிரி இருக்கவும் வாய்ப்பு இருக்குது’  என்று எண்ணி அதோடு  விட்டுவிட்டான் நிர்மல்.

ஆனால் இங்கே மனநல காப்பகத்தில் மன நிலை பிறழ்ச்சி ஏற்பட்டது போல் நடித்துக் கொண்டிருந்த பிரகாஷின் தந்தை வேணுகோபால் மித்திரன் சாகாமல் தப்பித்து விட்டான் என்ற  செய்தியைக் கேட்டு ரத்தம் கொதிக்க அமர்ந்திருந்தார்.

“  சொன்ன வேலையை கூட ஒழுங்கா உங்களால முடிக்க முடியாதாடா?” என்று தன் ஆட்களை வறுத்து எடுத்துக் கொண்டிருந்த போது  யாரோ வரும் சத்தம் கேட்கவும் சட்டென்று தன் முக பாவனைகளை மாற்றி ஏதோ சிறுபிள்ளை விளையாடுவது போல் தனது செய்கைகளை மாற்றிக் கொண்டார்.

மருத்துவருடன் உள்ளே நுழைந்த வருண் அவரை  சந்தேகக் கண் கொண்டு பார்க்க,  மருத்துவரோ வருணிடம்  அவரது நிலையை விளக்கிக் கொண்டிருந்தார்.

‘இவர் கண்டிப்பா மனப்பிறழ்வு ஏற்பட்டது போல் நடிக்க கூட வாய்ப்பு இருக்கிறது’ என்று அனுமானித்து அவ்வப்போது வந்து அவரை பார்த்து விட்டு செல்வான் வருண். அன்றும் அது போல் தான் வந்திருந்தான்.அவன் செல்லும் வரை தன் நாடகத்தை தொடர்ந்தவர் சென்ற பின்பு  மீண்டும் யாருக்கோ அழைத்து,‘ மறுபடியும் மறுபடியும் முயற்சி பண்ணுங்கடா. என்னோட இந்த நிலைக்கு காரணமானவன  பழிவாங்கியே ஆகனும் அதுக்கு அந்த மித்ரன் சாகனும் ’   என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டார்.

தனது இந்நிலைக்கு காரணமான வருணைக்  கொல்வதை விட அவனுக்கு நெருக்கமான,  முக்கியமான உறவுகளைக்  கொன்றால், என்னைப் போலவே அவனும் துடிப்பான் தானே.அவனது துடிப்பையும், கதறலையும்   கண்களால் கண்டு ரசிக்க வேண்டும் என்று எண்ணினார்.முதலில் மித்ரனைக்  கொன்றுவிட்டு அதன் பிறகு அவன் தங்கை, அவனது குடும்பம் என்று ஒவ்வொருவராக பழிவாங்க வேண்டுமென எண்ணி இருந்தார்.

அவரது கெட்ட நேரமோ என்னவோ?  அடுத்த கட்ட முயற்சியும்  தோல்வியில் முடிய, உச்சக்கட்ட கோபத்தில் இருந்தார் அவர்.‘இங்கே பேசினால் சரிவராது, தனது குரல் எவருக்காவது கேட்டு விடும் ’ என்று எண்ணியவர்  அலைபேசியை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு மொட்டை மாடியில் நின்று தன்  ஆட்களுக்கு கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தவர்,  பேசி முடித்துவிட்டு சட்டென்று அங்கிருந்து நகர முயல யாரோ ஒருவர்  அவரை தெரியாமல் இடித்திட அதில் நிலை தடுமாறியவர்  மேலிருந்து கீழே விழுந்துவிட நடிப்பதற்காக மனநல மருத்துவமனைக்கு வந்தவர் உண்மையாலுமே தலையில் அடிபட்டு மனநோயாளியாக மாறினார்.

விஷியம் கேள்விப்பட்டு வந்த வருண் ரொம்பவே மனமுடைந்து போனான்.  ஏனெனில் நேற்று இரவுதான் அவர் நடிக்கிறார் என்று மருத்துவர் அவனை அழைத்து  சொல்லி இருக்க,  எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என எண்ணி ஆவலாகக் காத்திருந்தான்.ஆனால், இன்று அனைத்தும் மாறிவிட்டது.  வேறு வழி இன்றி இவ்வளவு நாள் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இப்போது உண்மையாகவே அவருக்கு சிகிச்சை அளித்து அவரை மாற்ற முயன்றனர்.மருத்துவர்கள் எவ்வளவுதான் முயன்றும் அவரது மனநிலை மாறுவதாக இல்லை,  இதை சிறுக சிறுக தான் சரியாக்க முடியும் என்று சொல்லிட சோர்வாகவே  வீடு வந்து சேர்ந்தான். 

அவனது எண்ணம் எல்லாம் இவருக்கு ஒரு வேளை மித்ரன்  இருக்கும் இடம் தெரிந்து இருந்தால்,  இவர் மூலமே அவனைக்  கண்டறிந்திடலாம்  என்பதுதான்.  ஏனெனில் அன்று பிரகாஷ் பேசியதை  வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக மித்ரன் இருக்குமிடம் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது . ஆனால் அதற்கு முன்பே  எல்லாம் நடந்து விட்டதால் வருணால்  பிரகாஷை சந்திக்கக் கூட முடியவில்லை. அவனது தந்தைக்கு மட்டும் இவ்வாறு ஆகாமல் இருந்திருந்தால் இந்நேரம் மித்ரன் இருக்கும்  இடத்தைப் பற்றி  தெரிந்து கொண்டிருக்கலாம். சரி காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும் என்று எண்ணியவாறு  தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

பெண்கள் இருவரும் மீதமிருக்கும் கல்லூரி நாட்களை முடித்து தேர்வையும்  எழுதி முடித்து விட்டு ப்ராஜெக்ட் வேலையாக  வெளியில் அலைந்து கொண்டிருந்தனர்.அதேநேரம் வருணும் ஓரளவிற்கு மதனோடு சேர்ந்து கம்பெனியின் பொறுப்பை தன் கையில் எடுத்து இருந்தான். பொறுப்புகள் அனைத்தையும் உணர்ந்து, மதனின் சொல்படி கேட்டு அனைத்தையும் நுணுக்கமாக கற்று தேர்ந்து அவருக்கு பக்கபலமாக இருந்தான்.அவர்கள் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் தன்வியை  அவள் அறியாமல் அவன் ரசித்திட, அவளும் அதைத்தான் செய்தாள்.  இருவரது கண்ணாமூச்சி நாடகங்களை கண்டும் காணாது இருந்துவிட்டாள் அநேஷ்வியா..

பெண்கள்  இருவரையும் படிப்பை முடித்தக் கையோடு அவ்வூரிலேயே மிகவும் பெயர் பெற்ற  லீடிங் லாயர் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்து விட்டிருந்தார் மதன். கூடவே மேற்படிப்பையும்   இருவரும் படிக்கத் துவங்கி இருந்தனர்.நலிவடையும் நிலையில் இருந்த மதனின்  அலுவலகம் மெல்ல மெல்ல உச்சநிலையை எட்டி கொண்டிருந்தது. அதற்கு முழுமுதற் காரணம்  வருண் தான் என எண்ணிய மதன், வருணை  தன் மகன்  ஸ்தானத்தில் வைத்திருந்தவர் சற்று மேலே ஏற்றி மருமகனாக   எண்ணிடத் துவங்கினார்.

இரு வருடங்களுக்கு பிறகு..

இதோ வருடங்கள் அதன் போக்கில் கடந்து இரண்டு வருடம் நொடிப்பொழுதில் கடந்து சென்று இருந்தது.  அநேஷ்வியா தனக்கென்று ஒரு பெயரை தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்து இருந்தாள்.  கூடவே  வருணின் உழைப்பால் மதனின் கடன்கள் அடைக்கப்பட்டு  அவரது தொழில்  வளர்ச்சி ஓரளவுக்கு முன்னேற்றம் அடைய, அந்த மகிழ்ச்சியில்  தானே மனமுவந்து தன் மகளை வருணுக்குத்  திருமணம் செய்து வைக்கிறேன் என்று சம்பந்தம் பேசினார்.அதைக்கேட்டு  அவனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாது போனது.மொத்த குடும்பத்துக்குமே இதில் மகிழ்ச்சி தான். 

திருமண நாளும்  இதோ அழகாய் ஆடம்பரமாய் விடிந்துவிட்டது.மண்டபமானது அதன் தனித்துவத்தோடு அழகாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.மணமகளவன் அலங்காரம் செய்திட்ட கொழு பொம்மை போல் அமர்ந்திருக்க விழிகளோ கலங்கியது.என்ன தான் மனங்கொண்டவன் மணாளனாக வந்தாலும் தமயனவன் இல்லாதது அவளை வாட்டி வதைத்தது.ஐயர் அழைத்ததும் கொழு பொம்மையவள் மணமேடையில் அமர வைக்கப்பட்டாள். 

முகம் முழுதும் பூரிப்புடன் சுற்றிக் கொண்டிருந்த அநேஷ்வியா தன் தோழியின் திருமணத்தை ஆவலோடு காண காத்திருந்தாள்.  மித்ரன் இல்லாமல் தனக்கு திருமணம் வேண்டாம் என்று அடம்பிடித்த தன்வியை அதட்டி உருட்டி மிரட்டி,‘  உன் அண்ணன் வருவார்.  வந்தாஅந்த வீடியோவ  பாக்கட்டும் சொல்லாம கொல்லாம போனதுக்கு இதுவே தண்டனையா இருக்கட்டும்’  என்று அனைவரையும்  சமாதானப்படுத்தி இதோ மணமேடை வரை கொண்டு வந்துவிட்டாள்.  இதோ கலங்கிய கண்களோடு மேடையில் வீற்றிருக்கிறாள் தன்வி  மனம் நிறைந்த மன்னவனைக் கரம்பிடிப்பதற்காக.வாத்தியங்கள் முழங்க ஐயர்  தாலியை எடுத்துக்கொடுக்க அனைவரின்  ஆசீர்வாதத்தோடு தன்னவளது  கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு தன் மனைவி ஆக்கிக் கொள்ளும் முன் கடைசியாக தன் நண்பன் வருவானா?  என்று ஏக்கத்தோடு  வாயிலையே பார்த்தான் வருண்.என்னதான் வெளியே சந்தோசமாக இருந்தாலும் உள்ளுக்குள் மித்திரன் இல்லாமல் நடக்கும் திருமணம் அவனது மன மகிழ்வை அதிகப் படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இறுதியாக ஒருமுறை மணமக்கள் இருவரும் வாயிலையே பார்க்க,  எங்கே? அவன் வருவதற்கான அறிகுறிகள் தான்  தென்படவில்லை.

அவர்களது எண்ணம் என்ன என்பதை புரிந்துக் கொண்ட அநேஷ்வி‍,“  நேரம் ஆகுது பாருங்க அண்ணா தாலிய கட்டுங்க ”  என்று சத்தமாக சொல்ல வேறு வழியில்லாமல் கலங்கிய கண்களில் இருந்து கீழே விழப்பார்த்தக் கண்ணீரை சட்டென்று   உள்ளே இழுத்துக் கொண்டவன்  தன்வியின்  கழுத்தில் முதல்  முடிச்சிட மற்ற இரு முடுச்சுகளை நாத்தனார் ஸ்தானத்தில் இருந்து அநேஷ்வியா போட்டு அவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்தாள்.தன் சரிபாதியாகிய தன்னவளது விரல் பிடித்து அக்னியை வலம் வந்தான் வருண்.  பின்பு பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற மணமக்களைக் கண்டு இருவரது பெற்றோர்களின் கண்களிலும்  தளும்பிய நீர்த்திவலைகள் சொன்னது அவர்களது மகிழ்வின் அளவை.‌இதையெல்லாம் ஓரமாக நின்று பார்த்த அநேஷ்விக்கு இப்போதும் அவன் நினைவே…!!!

ஒவ்வொரு நிகழ்விலும் என்னுணர்வோடு உனை சேர்த்தேகனா  காண்கிறேன்.என் கனவானது  கைசேர்ந்து நிஜமாகுமா?  அல்லது கைநழுவி நிழலாகுமா? 

மாயவனே!! உன் விரல் தொட்டு மணவறை கண்டிட பேராவல் கொண்டேனடா!

மஞ்சள் நாண் தரித்து உந்தன் பாதச்சுவடினை நான் பற்றி ஆயுளுக்கும் அதன்வழியே  நடந்திட  இன்னும்  இன்னுமே பேராவல் கொண்டு கனா காண்கிறேனடா!

கன்னியிவளின் உள்ளத்தின் நாயகனே! ஒருமுறை கைசேர்ந்திடடா?பத்திரமாக பூட்டிக்கொள்கிறேன் மணவறை கண்டு எனது மார்புசேலைக்குள் பத்திரமாக…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ramyachandran

சருகாக மாறிடும் இலைகளைப் போன்று மாறிடாமல்,  மண்ணில் முட்டி மோதி , எதிர்வரும் சூழல்களை சமாளித்து துளிர்த்து வேர் விட்டு தழைத்து செழித்தோங்கிடும் விதைகளைப் போல் தன்னம்பிக்கையோடு போராரிட முனைந்திடும் பாவையிவள்....

Story MakerContent Author

10. மௌனமே மொழியானதே

தண்டிக்கப்பட்ட நியாயங்கள் -5