in , ,

தகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் !! – 2

தகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் !! – 2

அத்தியாயம் -2

அந்த இரவு நேரம்

சுற்றி மரம் செடியுடன் கூடய இயற்கைசூழலில்…. அந்த பெரிய  இடத்தை தனக்கே தனக்கு என ஆக்ரமித்து கம்பீரமாய் வீற்றிருந்தது அந்த பெரிய பங்களா   .

பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அழகாய் வடிவமைக்கப்பட்டு சுற்றி புல்வெளி மற்றும் செயற்கை நீரூற்றுடன் கண்ணுக்கு விருந்தாய் இருந்தது.  

அந்த அழகு கோட்டைக்குள் இருக்கும் தனது அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவன் …

ஆறடி உயரமும் , அலையலையான கேசமும் , தினமும் வர்க்கவுட் செய்வதன் பயனாய் முறிக்கிய புஜங்களும்  , தூங்கும் போதும் நான் இப்படி தான் இருப்பேன் என்றும் சொல்லும் படி இறுகிய தாடையும்  , நான் சிரித்தால் முத்து உதிர்ந்து விடும் என்பதுபோல சிரிக்காத அழுத்தமான உதடுகளும் , கூர் நாசியும் , எதிரியை கண்களாலே கூர் போடும் ஆழமான அழுத்தமான கூர்மையான பார்வையும் , சுண்டினால் ரத்தம் வரும் என்று சொல்லும் படியான கலரும்  என மொத்தத்தில் பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களும் ஒருகணம் தங்களை அறியாமல் ரசிக்கும் அழகான கம்பீரமான முகதோற்றம்  கொண்டவன் அவன் ” ருத்ரேஷ் வர்வா” 

தொழில் உலகில் முடிசூடா மன்னன் அவன் எதிரிகளுக்கு கொடுமையான வில்லன் அவன்…..

கட்டிலில் அவன் கண்களை மூடி உறங்கிக்கொண்டிருக்க , அப்போது அவன் அருகில் கத்தியுடன்  நெருங்கியது அந்த உருவம் .

அவன் அருகில் நடுங்கும் கத்தியுடன் நெருங்கியவன் , அருகில் வந்ததும் அவன் வயிற்றில் ஓங்கி குத்த போக …அக்கணம் விழித்துக்கொண்ட ருத்ரேஷ் தனது வலிமையான காலை வைத்து  அவன் வயற்றில் எட்டி ஒரு மிதிமிதித்தான்.

அதில் கத்தி வைத்திருந்தவன் தூர போய் விழ  , அதை பார்த்து ஒரு ஏளன சிரிப்பை உதித்தவன் தனது கட்டிலுக்கு அருகில் இருக்கும்  பழம் வெட்டக்கூடிய கூர்மையான கத்தியை கையில்  எடுத்து …அழுத்தமான பார்வையுடன் அவனை அடைந்தவன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சிறு சிரிப்புடன் ” நெக்ஸ்ட் வாட் ” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க..

அதில் பயந்து போன அவன் ” சார் மன்னிச்சி….” என்று சொல்லவருவதுக்குள்  அவனது தொண்டை குழியில் ஆழமாய் கத்தியை இறக்கி இருந்தான்.

அதில் அவன் உடல் ஒரு முறை துடிக்க அதை இகழ்ச்சியாய் பார்த்து ரசித்தான். 

அவன் இறந்ததும் அந்த அறையை ஒட்டி இருந்த பாத்தரூமிற்குள் நுழைந்தவன் தன் மேல் இருந்த ரத்த துளிகளை சுத்தப்படுத்தி  விட்டு தனது மொபைலை எடுத்தவன் அதில் ஒருவனுக்கு அழைத்து ஏதோ சொல்ல , அடுத்த நிமிடம் பதறியடித்துக்கொண்டு அவன் முன் வந்து நின்றான்  கபிலன் .(ருத்ரேஷ்சின் வலது கை மற்றும் பி.ஏ)

“பாஸ் ” என்று அவன் அழைக்க அதில் அவனை நிதானமாக பார்த்த ருத்ரேஷ் செத்து கிடந்தவனை குறிப்பிட்டு காட்டி ” டிஸ்போஸ் ஹிம் ” என்றான் சாதார்ணமாய்…

அதில் இது என்றும் நடப்பது தானே என்று நினைத்த கபிலன் எதுவும் அலட்டிக்கொள்ளாமல் ஆட்களை அழைத்து அவன் சொன்னதை போல் செய்து முடித்தான்.

இப்போது மீண்டும் தன் இருக்கையில் இருந்து நிதானமாக எழுந்த ருத்ரேஷ் கபிலனிடம் திரும்பி ” இன்னைக்கு யார் யார் எல்லாம் வீட்டு பின்னாடி  செக்கூரிட்டிக்கு நின்னங்களோ அவங்கள ஹாலில்ல அசம்பிள் ஆக சொல்லு “என்று சொன்னவன் விறு விறு வென ஹாலுக்கு சென்றான்.

ஹாலுக்கு வந்தவன் அங்கிருந்த சோபில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாய் அமர்ந்தான்.

அடுத்த நிமிடம் அவன் முன் ஆஜர் ஆனார்கள் அந்த வீட்டின் பின் இன்று பாதுகாக்க நின்றவர்கள்.

அவர்கள் அனைவரையும் அழுந்தமாக பார்த்த ருத்ரேஷ் கபிலைனை நோக்கி தன் கையை நீட்ட , அதை புரிந்து கொண்ட அவன் அதில் துப்பாக்கியை வைத்தான்.

கையில் துப்பாக்கியுடன் தன் முன் இருந்த தங்கள் முதலாளியை எல்லோரும் பீதியுடன் பார்த்தனர்.

ஆனால் அவனோ அவர்களை பார்த்து கூலாக ” இன்னைக்கு என்னை ஒருத்தன் கொல்ல வந்தான் தெரியுமா “என்று கேட்க அவர்களோ அவன் சொன்ன செய்தியை வைத்து  அடுத்த நடக்தபோவதை யூகித்து அவனை பயத்துடன் பார்த்தனர்.

ஆனால் அதை எல்லாம் சிறிதும் கண்டுக்கொள்ளாதவன் ” சோ உங்களுக்கு கொடுத்த டூட்டிய நீங்க ஒழுங்கா செய்யலை இல்லையா ” என்று கேட்க..

அதில் மிரண்ட அவர்கள் ” ஆம் நாங்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்ததால் கவனம் சிதறிவிட்டது ” என்று உண்மையையா  சொல்ல முடியும் …. ” இல்ல பாஸ் ” என்று எதோ சொல்ல வர அதற்குள் தன் கையில் இருந்த துப்பாக்கியை வைத்து அவர்கள்  அனைவரையும் பாரபட்ச்சமின்றி  சுட்டுதாள்ளியிருந்தான்.

ஆனால் அந்த நேரத்திலும் அவர்கள் காலில் குறிவைத்துதான் சுட்டான் . அவனை பொறுத்தவரை இது அவர்களின் கவனக்குறைவுக்கு கிடைத்த தண்டனை , அதனால் பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் சுட்டுத்தள்ளினான்.

 இதுவே அவர்கள் நெஞ்சில் சுட்டிருந்தால் ஒரு நிமிடத்தில் உயிர் போயிருக்கும் , ஆனால் காலில் சுட்டால் அதன் காயம் சரியாக  கிட்ட தட்ட ஆறு மாதங்கள் மேல் அகலாம் .

அந்த ஆறு மாத காலத்தில் அவர்கள் படப்போகும் வேதனையிலேயே இனி இது போல எந்த தவறையும் செய்ய …கனவில் கூட எண்ண மாட்டார்கள். இது ருத்ரேஷின் எண்ணம்.

அனைவரையும் சுட்டு முடித்தவன் அந்த துப்பாக்கியை தன் முன்னே இருந்த மேசையில் அலட்சியமாய் வீசி விட்டு தனக்கு எதிரே கதறித்துடித்துக்கொண்டிருந்தவர்களை கண்டு எரிச்சலாகி அங்கிருந்து எழுந்தவன் , குரலில் அலட்சியத்தை தேக்கி  ” டிஸ்போஸ் தெம் ” என்று கபிலனிடம் சொல்லியபடி தனது அறைக்கு செல்ல  படிக்கட்டில் ஏறினான்.

படிக்கட்டில் ஏறிவாறே ” அண்ட் இவங்க இந்த காயத்துல இருந்து சரி ஆகுற வரை அவங்க பேமலீஸ்கு எந்த வித பினான்சியல் இஸ்சூவும் வராம பாத்துக்கோ !! ” என்று கட்டளை இட்டவன் மறந்தும் திரும்பி பார்க்கவில்லை.

என்றும் போல் இன்றும் தனது பாஸின் அதிரடியில் வாயை பிளந்தபடி நின்றான் கபிலன்…

இது தான் ருத்ரேஷ் வர்வா அவனது அகராதியில் தவறு செய்தவர்களுக்கு எவ்வழியிலும் தண்டனை வழங்கியே தீருவான் ….அதுவும் அவனுக்கு என்ன நடக்க இருந்ததோ அதை எதிரிக்கு அப்படியே செய்வான்… ஆனால் அவனது ஸ்டைலில்.

இதுவும் ஒரு வகை பழிவாங்குதல் எனலாம்….

எவனா இருந்தால் என்ன

எமனா இருந்தால் என்ன

சிவனா இருந்தாலும் 

உனக்கு சமமாய் அமைவேன் நான்

பணமாய் இருந்தால் என்ன

நீ பிணமாய் இருந்தால் என்ன

நான் உயிரோடிருந்திடவே

எவனையும் உணவாய் உண்பேன் நான்

Bang Bang Boom! Better Think! Better Go!

மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்

Bang Bang Boom! Better Think! Better Go!

மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்

Bang Bang Boom! Better Think! Better Go!

மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்

Bang Bang Boom! Better Think! Better Go!

மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்

படியேறும் தன் பாஸ்சையே பார்த்துக்கொண்டிருந்த கபிலனின் மனதில் இந்த பாட்டு ஒலிக்க .

” இவர் நல்லவரா  இல்ல கெட்டவரா ” என்று தனக்குள்ளே குழம்பியபடி  சிந்தித்து கொண்டிருந்தான்.

தொடரும் ….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 16 சராசரி: 4.1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Thaara Pavi

Story MakerContent Author

விழிகளிலே ஒரு கவிதை 45

கொஞ்சும் வண்ண காதல் 14