in , , ,

வில்லேந்தும் மொழியாளே 14

அத்தியாயம்-14:

பூச்சிகளின் ரீங்காரம் அந்த இரவு நேரத்தில் அவளது காதுகளில் கீதமாய் ஒலித்துக்கொண்டிருக்க, தூங்காமல் தன் கையில் வைத்திருந்த மினியேச்சர் ப்ளேனை பார்த்துக்கொண்டு, முகத்தில் ஏகாந்த புன்முறுவலுடன் தனது அறையில் அமர்ந்திருந்தாள் மொழி.

அன்று மாலை அருளின் வரவில் நொடிக்கும் குறைவான க்ஷணமே அவன் அதிர்ந்ததும், வேண்டுமென்றே வீட்டில் நுழையும் முன்பு அவன்கையில் வாரிக்கொணர்ந்த டூடுலை இறக்கி விட்டதும் நினைவு வர, அதரங்கள் தானாக புன்னகையை சிந்த,

“எங்கப்பாவ கூட கட்டிப்பிடிக்க விட மாட்டறான் அவதார் ” உதட்டை சுழித்தவளுக்கு, டூடுலை நினைத்தும் சிரிப்பு வந்தது.

டூடுல் அருகே வந்ததும் கட்டிக் கொண்டிருந்த தந்தையை விட்டு விலகி அருளின் பின்னால் மொழி நிற்க,

“ஹே டூடுல்.. கம் ஹியர் பாய் ” அருளின் அழைப்பையும் அலட்சியம் செய்து, சோஃபாவை நோக்கி நகர்ந்தது அது.

அருள் வின்சென்ட்டை பார்த்து சிரித்தவன், தனது ஷோல்டர் பேகில் வைத்திருந்த பாக்ஸ் ஒன்றை எடுக்க, முகர்ந்த வாசனையில் வேகமாக அவனருகே வந்தது டூடுல்.

அதன் செயலை மொழி வியந்து பார்க்க, வில்லியமோ தலையில் கைவைத்து கொண்டான்.

‘சில்க்கி பார்க்குறாளே !! ‘

பின்னே மொழிக்கு எந்த ரகசியத்தை தெரியாமல் பாதுகாத்து வந்தானோ அதை இன்று அருள் உடைத்துக் கொண்டிருந்தான்.

தன் கையில் இருந்த பாக்ஸை திறக்கும் முன்பே அருளிடம் தாவியது டூடுல். அதை பிடித்து தன் மடியில் வைத்த அருள்,” பார்த்தியா பையா.. உனக்காகவே மறக்காம கேரமல் பாப்கார்ன்ஸ் வாங்கிட்டு வந்துருக்கேன்” அருளின் கையை நாவால் தடவிக்கொண்டே யாரையும் கண்டுகொள்ளாமல் பாப்கார்னை வெளுத்துக்கட்ட ஆரம்பித்தது டூடுல்.

பின்னே கனடாவிற்கு வரப்போகும் சந்தோஷத்தில் அவள் வருவதற்கு முதல்நாள் வில்லியம் வாங்கிக்கொடுத்தது.

“ப்பா.. இது பாப்கார்ன் பப்பியா ப்பா… இதை வச்சு இவன் ஓவரா சீன் போட்டான்பா ” டூடுலையும், வில்லியமையும் சேர்த்தே கலாய்த்த மொழி, கைகொட்டி குதூகலித்து சிரிக்க, சிரிப்பில் ஒதுங்கும் கன்னங்களை கடிக்கும் நோக்கத்துடன் மொழியை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தான் வில்லியம்.

மகனின் பார்வையை உணர்ந்த வின்சென்ட்” ம்க்கும்… ” தொண்டையை சற்றே கணைக்க, அமர்ந்திருந்த சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தான் அவன்.

“அருள் உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இவனுக்கு பாப்கார்ன் குடுக்காதேன்னு. வில்லியமையே திட்டி திட்டி இப்பதான் கன்ட்ரோலுக்கு கொண்டு வந்துருக்கேன். ஹெல்த்துக்கு நல்லதில்லை” சற்றே கடிதலுடன் அருளுக்கு பிடித்த ப்ளாக் காஃபியை அவனுக்கு கொண்டு வந்து கொடுத்தாள் லினா.

லினாவின் பேச்சில் அவளை  நிமிர்ந்து பார்த்த டூடுல், பின்பு பாப்கார்ன் சாப்பிடுவதிலேயே மும்முரமாகி விட,

“கொஞ்சம் எடுத்துக்கொடுடா ரோஜாக்குட்டி” அருள் மகளை டூடுலுக்கு கொடுக்க சொல்ல,

“ம்ஹீம்.. இல்லை வேண்டாம் ப்பா.. பயமா இருக்கு” கண்களில் ஆசை இருந்தாலும் உடல்மொழியால் நடுக்கத்தை காண்பிப்பவளை கண்டு அனைவரின் முகமும் மாற,

“என்னப்பா சர்ப்ரைஸ் விசிட்?? அம்மணியை ஏன்ப்பா கூட்டிட்டு வரலை?” பேச்சை மாற்றியவள், அருளின் தோள் சாய, மகளின் தலைமீது தனது தலையை சாய்த்துக் கொண்டான் அருள்.

“அருண் அண்ணா அம்மா பக்கத்துல வேணுன்னு சொல்லிட்டான்டா. இல்லைன்னா நானும் அவளும்தான் சர்ப்ரைஸா வர்றதா ப்ளான். அண்ணனுக்கு திடீர்னு பொண்ணு அமைஞ்சதால இன்னும் இரண்டு வாரத்துல நிச்சயம் வேற, அங்க கொஞ்சம் ஏற்பாடு பண்ணனும்.‌அதான் அம்மாவை அங்க விட்டுட்டு வந்துட்டேன்”  காஃபியை அருந்திக்கொண்டே அருள் மகளிடம் பேச, நண்பர்களுக்கு அது உவப்பாக இருக்க,

‘இந்த சில்க்கி என்மேல எப்பவாச்சும் இப்படி சாய்ஞ்சுருக்காளா?’ மனதிற்குள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தான் வில்லியம்.

“வாவ் அருண் என்கேன்ஜ்மென்டா?? வெரி ஹாப்பி ஃபார் யூ அருள் ” லினா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த,

“கங்கிராட்ஸ். கண்டிப்பா வர ப்ளான் பண்றேன் அருள்” நண்பனை தழுவி வாழ்த்து தெரிவித்தான் வின்சென்ட்.

“இப்ப வர்றது ஓகே.. ஆனால் மேரேஜூக்கு நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா என்கூட இருக்கனும்” அருள் இப்பொழுதே நண்பர்களின் வரவை உறுதிசெய்து கொள்ள விரும்ப,

“இதை நீ கேட்கனுமா அருள்? வீய்னியும் நானும் இல்லாம மேரேஜ் பண்ணிடுவியா நீ?” லினா வம்பிழுக்க,

“டேட் மட்டும் கரெக்டா சொல்லு. செடியூல்ஸ ஃப்ரீ பண்ணிக்கிறேன்” உறுதியளித்தான் வின்சென்டும்.

நண்பர்களின் பேச்சில் மகிழ்ந்தவன் “கிடைச்ச டைம்ல உன்னை பார்க்க வந்துட்டேன்டா ரோஜாக்குட்டி. ஆனால் உன் கேம்பஸ்ல எப்படி பெர்மிஷன் குடுப்பாங்கன்னு தெரியலை? இப்பதானே ஜாயின் பண்ணிருக்க? சரி பார்க்கலாம்” அருள் யோசனையாக,

“அதை நான் பார்த்துக்கறேன் அருள்‌. லிட்டில்ப்ளம்மையும் லினாவையும் நான் அனுப்பி வைக்கிறேன். நீ இன்னும் இரண்டுநாள் ஸ்டே பண்ணிட்டு போ” நொடியில் தீர்வளித்தான் வின்சென்ட்.

“அப்ப உடனே கிளம்புறிங்களாப்பா?” சோககீதம் வாசித்தாள் அருமை மகள்.

“ஆமாடா ரோஜாக்குட்டி இரண்டுநாள் தான் இருக்க முடியும். அங்க வேலை நிறைய இருக்கே.. ” அவனின் மடியில் சாய்ந்து கொள்ள முடியாமல், டூடுல் அருளின் மடியில் அமர்ந்திருக்க,

“முதல்ல இந்த மொசக்குட்டியை இறக்கிவிடுப்பா” மகளின் கோரிக்கையில் அருள் டூடுலை தூக்க, அவனின் கழுத்தை தொற்றி முகத்தை நாவால் தடவியது அது.

“இவன் எப்பவும் என்னை மதிக்கவே மாட்டறான் ப்பா” மொழியின் புகாரில் லினா சிரிக்க, இத்தனை சம்பாஷணைகளிலும் அமைதியாகவே அமர்ந்திருந்தான் வில்லியம்‌. அவனது கண்களில் கருத்தினில் மொழியே நிறைந்திருக்க, பொக்கிஷ தருணங்களை நெஞ்சிற்குள் சேமித்துக்கொண்டிருந்தான் அவன்.

அதைக்கவனித்த அருள்,” வில் ஆர் யூ கே? நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் ரொம்ப அமைதியாக இருக்கியே?” அவனின் கன்னக்குழி புன்னகையுடனான பேச்சில் வில்லியமின் முகம் தானாக மலர்ந்தது.

“நோ அங்கிள். அம் வெரி ஹாப்பி. பட் அத்தே வந்திருந்தா இன்னும் ஹாப்பியா இருக்கும்” என்றவனின் பேச்சில் அருள் ஒற்றை விரலை காண்பித்து எச்சரிக்கை செய்வதை போல் செய்து காண்பித்தவன்,

“இவன் அப்படியே உன்னை மாதிரி லினா. குறும்பு குறையவே குறையாது. உன் அத்தை அவ பொண்ண பார்க்க வர்றாளோ இல்லையோ உன்னை பார்க்கதான்‌ ரெடியானா? ஆனால் இப்ப தருணும் ஊருக்கு திரும்புறான்னு சொன்னதால, அங்கேயே ஸ்டே பண்ணிட்டா வில்” எழுந்து அவனருகே வந்தமர,

“அத்தே லைக்ஸ் மீ மோர் அங்கிள். ஐ மிஸ் அத்தே” இதை மொழியை பார்த்துக்கொண்டே அவன் சொல்ல, வில்லயமின் பேச்சில் தாட்சாயிணியின் மீதான உண்மையான பிரியம் தெரிய, அவனது கைகளை தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டு புன்னகைத்தான் அருள்.

“என் பையன் பாரு இவ்வளவு கேட்கறான்?? இந்த தாட்ச் பேபிக்கு வரனும் தோணுச்சா பாரு அருள். அவ பேபியை‌ பார்க்க வரலன்னாலும் என் பேபியை பார்க்க வந்துருக்கனுமில்ல? மேடமை இனி அப்பாயின்மென்ட் வாங்கிதான் பார்க்கனும் போல?” குறைப்பட்டு‌ கொண்டாள் லினா.

“ஹேய்..‌பசங்களுக்கு அவ இல்லாம ஒண்ணுமே ஓடாது லினா. இதே என் ரோஜாக்குட்டிக்கு நான்தான் வேணும்” என்றவனின் பேச்சில் மொழி எழுந்துவந்து தந்தையின் கையோடு கை கோர்த்துக்கொண்டாள்.

“ஓகே..‌ஓகே… சென்டிமென்ட் ‌டைம் ஓவர். டின்னர் முடிச்சிட்டு ரெஸ்ட் எடு அருள். யூ நோ நம்ம செட்ல ரோஸி இருந்தால்ல புதுசா ஒரு பர்ஃப்யும் ஸ்டோர் ஆரம்பிச்சுருக்கா.. ” தங்கள் நண்பர்களின் கதைகளை பேசிக்கொண்டே அருளை அழைத்துச்செல்ல, வின்சென்டும் அவர்களோடு சென்றிருந்தான். பாப்கார்ன் சாப்பிட்ட திருப்தியில் டூடுல் தனது பெட்டில் குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருக்க, தந்தையை பின்தொடர்ந்தவளை, தானும் பின்தொடர்ந்த வில்லியம் தனது அறையை கடக்கும்போது பிடித்து உள்ளே இழுத்து விட்டான்.

“கிஸ் குடுத்துட்டு எதுக்குடி ஓடி வந்த?” மொழியை நகரவிடாமல் பிடித்துக்கொள்ள,

“என்னடா பண்ற அவதார்? உனக்கு பாவம் பார்த்து கிஸ் குடுத்தது தப்பா போச்சு. விடு நான் டாடி கிட்ட போகனும்” என்ன முயன்றும் தன் குரல் குழைவதை மொழியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

“உன் டீலை நீயே மீறிட்டடி சில்க்கி? நீ ஐ லவ் யூ சொன்னப்பறம் தான சாக்லேட் குடுப்பன்னு சொன்ன? இப்ப உன் டீல நீயே ப்ரேக் பண்ணிட்ட? அதுக்கு பனிஷ்மென்டா உடனே நீ, ” ஐ லவ் யூ” சொல்ற?” என்றவன், அவளது கண்ணை உறுத்திக்கொண்டிருந்த  குழல்கற்றையை ஒதுக்கி விட்டான்.

“போடா மக்கு அவதார். நீதான் தரக்கூடாதுன்னு சொன்னே, நானாவும் தரக்கூடாதுன்னு சொல்லலியே” நாக்கை துறுத்தியவளின் கன்னத்தை அழுத்தி கிள்ளினான் வில்லியம்.

“ஷ்… ஆஆஆ…. ” வலித்த கன்னத்தை தேய்த்து கொண்டவள்,

“நீ காட்டுமிராண்டிதான்டா… முதல்ல என்னை விடு. நான் வெளிய போறேன்‌” என்று முறுக்கியவளை கண்களில் நிரப்பியவன்,

“அதெல்லாம் இருக்கட்டும். இன்னைக்கு என்னாச்சுடி சில்க்கி உனக்கு? எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கியே? புத்தாக்கு என்லைட்மென்ட்(ஞானம்) கிடைச்ச மாதிரி உனக்கும் கிடைச்சுருச்சா?” கண்முழுக்க நிரம்பியிருக்கும் அவளது கருவிழிகளை பார்த்துக்கொண்டே பேச,

“ஆமா டேனியானந்தா கிட்ட வாங்கிகிட்டேன்” என்றவளின் பேச்சில் வில்லியம் சிரிக்க, சற்றே தளர்ந்த பிடியில் அவனை தள்ளிவிட்டு வெளியே ஓடிவிட்டாள் மொழி. சரியாக அந்நேரம் அருளும் மகளை தேடி பாதிதூரம் வந்திருக்க,

“ரோஜாக்குட்டி எங்கடா போன?” அவளை அழைத்துக்கொண்டு உணவருந்த செல்ல,

“ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்தேன் டாடி” என்று பதிலளித்தவளின் பின்னால் வந்த வில்லியமும்,

“ஆமா அங்கிள் செம ரெஃப்ரெஷ்மென்ட்” இன்னும் தன்மீது கமழ்ந்து கொண்டிருந்த மொழியின் வாசனைத்திரவியத்தின் மணத்தை நுகர்ந்து அனுபவித்தவாரே அவளுக்கு எதிரே வில்லியம் அமர, எடுத்து வைத்த முதல் வாயிலேயே புரை ஏறியது மொழிக்கு.

அதன்பின்பு பேசி சிரித்துக்கொண்டு உணவருந்தி விட்டு தந்தை மகளுக்கு தனிமை கொடுத்துவிட்டு தூங்க சென்றுவிட, கல்லூரிக்கதைகளை தந்தையிடம் ஒரு மூச்சு பேசி முடித்தாள் மொழி.

“அம்மணிக்கு பேசுவோம்பா.. ” என்றவள் தனது டேபை எடுக்க,

“அம்மா இன்னைக்கு அப்பத்தாவோட குலதெய்வம் கோயிலுக்கு போயிருக்காடா? நாளைக்கு காலைல அவளே பேசுவா . நீ இப்போ நல்லா தூங்கு” என்றவன் மகளை அவளது அறையில் விட்டுவிட்டு தனக்கு கொடுத்த பக்கத்து அறைக்கு தூங்க சென்றான் அருள்.

அறைக்கு வந்தவளுக்கு தூக்கம் பிடிக்காமல் இருக்க, நடந்ததை நினைத்தவளுக்கு நரம்புகள் குறுகுறுக்க, டேனி பேசியதில் இருந்து உடம்பில் புதுரத்தம் பாய்ந்ததை போலொரு உணர்வு தோன்ற அறையில் நடந்தவாறே வில்லியமை அவன் சேஷ்டைகளை தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹாய்.. சில்க்கி… ” தன் பின்னால் கேட்ட குரலில் தூக்கிவாரிப்போட திரும்பி பார்க்க, அவன் பின்னால அவளை பார்த்து வெள்ளை முறுவல் பூத்தது அவள் பூட்டாமல் விட்ட ஆளுயற ஐன்னல்கள்.

“வில் இப்ப எதுக்கு இங்க வந்த? முதல்ல வெளிய போ” தனது கையில் வைத்திருந்த ப்ளேனை பின்னால் ஒளித்துக்கொள்ள, அவள் பின்னால் எட்டி பார்த்தவன்,

“நான் குடுத்த பரிசுக்கு இந்த ரூம்ல இடமிருக்கு. எனக்கில்லையாடி?” என்று கேட்க,

“அதெல்லாம் இல்லை. சேட்டை பண்ணாம முதல்ல வெளிய போ. அப்பா பக்கத்து ரூம்ல தான் தூங்கிட்டுருக்காரு. விளையாடாம கிளம்பு” என்றவள் ஜன்னலை நோக்கி கைகாட்ட, அவளது கையை தட்டிவிட்டவன் அவளது கட்டிலை நோக்கி நகர்ந்தான்.

“தப்பு பண்றடா அவதார்” எங்கே தந்தைக்கு கேட்டுவிடுமோவென்ற பயத்தில் மொழி மெல்லொலியில் கிசுகிசுக்க,

“இப்பதான்டி எல்லாம் சரியா பண்றேன். ஐ லவ் யூ‌ சொல்லு அப்பதான் வெளியபோவேன்” அவளது கட்டிலில் படுத்து தலைக்கு பின்னால் கைவைத்து படுத்துக்கொண்டு காலாட்டிக்கொண்டே பேச,

“ரைட்டு நீ இங்கயே படுத்துக்கோ. நான் அப்பா ரூமுக்கு கிளம்புறேன்” மொழியாளிடம் செல்லாத தனது சொல் வித்தையில் எழுந்து அமர்ந்து அவளை முறைத்தான் வில்லியம்.

“அது எப்படிடி ஸ்ட்ரைட்டா வர்ற மாதிரி வந்துட்டு யூ டர்ன் போடற?” வார்த்தைகளை அவன் கடித்து துப்ப,

“ம்ம்.. எங்க ஊர் ஆட்டோக்காரர் கிட்ட இன்டர்னா வேலை பார்த்தேன். அதான் பழக்க தோஷம்” என்றாள் மொழி.

“வாட் என்ன சொல்ற புரியலை சில்க்கி?” வில்லியமிற்கு உண்மையில் அவள் சொல்ல வருவது புரியவில்லை.

“இதெல்லாம் உனக்கு புரியாதுடா சார்லஸூ” தனது அஸ்திரத்தை மொழி கையில் எடுக்க, குறி தவறாமல் அடித்தது வில்லியமை.

“ஹேய் சார்லஸூ சொல்லாதடி!” கோபத்துடன் எழுந்து அவளை நோக்கி வர,

“சொல்லக்கூடாதுன்னா முதல்ல வெளிய போ. எனக்கு தூக்கம் வருது” என்றவள் கொட்டாவியை கையால் ஓட்டிவிட,

“போறேன். நீ சொன்னதுக்கு முதல்ல அர்த்தம் சொல்லு” என்றான் வில்லியம். அவளும் தங்கள் ஊரில் ஆட்டோக்காரர்கள் மாற்றி மாற்றி சிக்னல் செய்து குழப்புவதை விவரிக்க,

“ஓ.. அப்ப நீ நேரடியா உன் லவ்வை சொல்ல மாட்ட? சுத்த விடுவ?” விஷயத்திற்கு வந்தவனை பார்த்து மெச்சுதலாக மொழியின் புருவம் உயர்ந்தது.

“வாரே!! உனக்கும் அறிவு இருக்குடா அவதார். நாளைக்கு உனக்கு சுத்தி காமிப்பேனாம். இப்ப நீ கிளம்புவியாம்” என்றவளை நெருங்கி வம்படியாக தன்னிடம் இழுத்தவன், அவளது கழுத்து வளைவில் முகத்தை புதைத்து பரபரவென்று தேய்த்து, அவனது முகத்தில் அரும்பியிருந்த தாடியால் குறுகுறுப்பு மூட்ட, தவிக்கமாட்டாது சிரித்தாள் மொழி.

சிரித்து சிரித்து அவளுக்கு கண்ணில் நீர் வலிந்திருக்க,” நாளைக்கு நான் உனக்கு சுத்தி காண்பிக்கிறேன் சில்க்கி” என்றவன் அவளை தூக்கி படுக்கையில் விட்டுவிட்டு நிமிடமும் தாமதியாது வெளியே சென்றுவிட்டான்.

நடந்த நிகழ்வுகளில் மொழியின் வதனம் மலர்ந்து விகசிக்க, சில நொடிகள் அவனது அருகாமையை நினைத்துபார்த்தவள், எழுந்து சென்று ஜன்னலை சாற்றி விட்டு சுகநித்திரையில் ஆழ்ந்தாள்.

“நிஜமா தான் சொல்றிங்களாங்கண்ணா?” தகவல் சொன்ன ப்யூனிடம் ஷண்மதி திரும்ப திரும்ப கேட்க,

“அட வாம்மா.. உன்னை தேடி தான் அருண் தம்பி இங்க காலேஜூக்கு வந்துருக்கு” எரிச்சலுடன் சொல்லிவிட்டு சென்று விட்டார் அவர்.

வகுப்பாசிரியையிடம் சொல்லிவிட்டு வேகமாக நடந்து அவள் வெளியே வர, காரிடரின் ஓரம் நின்றிருந்தவனை சுற்றியே பெண்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க,

‘இந்த கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட்காரிங்களுக்கு இதே வேலையா போச்சு. க்ளாஸ்ல இருக்கிறதே இல்லை. அதுசரி அதுங்க இன்சார்ஜே வெளியேதான் சுத்திட்டு இருக்கும்’ மனதிற்குள் அர்ச்சித்து கொண்டே வந்தவளுக்கு, அவளையுமறியாது அருணிடம் ஓர் உரிமை உணர்வு எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது.

அவளருகே வந்ததும்,” என்ன அம்மணி சேலை புடிச்சுருந்துச்சா?” என்று கேட்டவனை அவள் பயப்பார்வை பார்க்க,

“நிசமாவே பயப்படறியா கண்ணு? அதை அப்பறம் வச்சுக்குவோம். உங்கிட்ட பேசனும் அம்மணி பக்கத்துல இருக்கற கோயிலுக்கு வா” என்றவன் தனது புல்லட்டை எடுத்துக்கொண்டு அக்கோயிலை நோக்கி சென்றுவிட, மனக்குளத்தில் பயம் சலசலக்க, கோவிலுக்குள் சென்றாள் ஷண்மதி.

அங்கிருந்த மண்டபத்தில் அருண் அமர்ந்திருக்க, அவனருகே சென்று நின்றாள் அவள்.

“இன்னிக்கு மஞ்சரோஜா கிடைக்கலிங்களா?” என்று பேசியவனை அவள் ஆராய்ச்சியாய் பார்க்க,

“சரி உட்காருங்க. பேச வந்தத பேசிடுவோம்” தனது பக்க இடத்தை காட்டினான் அருண்.

“இ…இல்லை நான் நிக்கறேன்” நடுக்கத்தை மறைக்க, அவள் துப்பட்டாவை திருகு திருகென்று திருக, அவளது செய்கையில் புன்னகைத்தவன், தனது கையில் வைத்திருந்த ஃபைலில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவளிடம் நீட்டியவன்,

“இதை படிச்சு பாருங்க அம்மணி” என, தயக்கத்துடன் அதை வாங்கினாள் அவள்.

படித்து பார்த்தவளுக்கு தனது கண்களை தன்னாலேயே நம்ப முடியவில்லை. தவறு முழுவதும் தன்மீதே எனதறிந்து, தனது மடத்தனத்தை நொந்தவளாக, வியர்த்து விறுவிறுத்து அருணை பார்க்க,

“இனி மன்னிப்பு கேட்டாலும் கிடைக்காது அம்மணி” என்ற அருணின் குரலில் கண்ணீர் குளம் கட்டியது ஷண்மதியின் கண்களில்.

ஏந்துவாள்💘💘💘…..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 14 சராசரி: 4.1]

6 Comments

Leave a Reply
  1. William kalakkura da vidatha avalai sikirama love ah solla solluda unnai suthal ah viduvala parkalam, Arun appadi Enna iruku anda paper la nice update rudhi dear thanks.

  2. Nalla kadhaikalam. Especially Arun and shanmathi ku enna problem nu therinjukka aarvama irukku. Will and mozhi pora pokka paatha padippu mudiyuma nu doubt dhan😂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent Author

கோடி ல ஒருத்தர் தான் இப்படி ஒரு வேலைய செய்ய முடியும் ! ! ! | நல்ல செய்தி – 37 | ஸ்ரீ TALKS|@WAYAM TV

மழலையின் மாண்பு