in , , , ,

14 நினைவைத் தேடும் நிலவே

பதிவு 14

            “உனக்கு என்ன உன் மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பா?.. ஓவரா பண்ணிக்கிட்டு இருக்க…” என்று நிலா தன் பங்கிற்கு சீற, அவனோ கெக்கபுக்கவென சிரித்துவிட்டு தொடர்ந்தான்..

           “என்ன பேபி நீ, இவ்ளோ நேரம் என் கூடவே இருந்துட்டு, என்ன பத்தி புரியாம இருக்கியே…”என்று சொல்ல, ஏதோ வினோத ஜந்துவை பார்ப்பது போல் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்… அவன் தன் வாய்க்குள்ளேயே சிரிப்பை அடக்கிக்கொண்டிருக்க, எதேச்சையாக திரும்பி பார்த்தவளுக்கு கடுப்பாகத்தான் இருந்தது..

           ” மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பு! ஆளும் மண்டையும் பாரு, சீய் பே…” என்றபடியே கைகளில் கிடைத்த ஏதோ ஒன்று தூக்கி அவன் மீது வீசி விட்டு அவள் அவளுடைய அறையை நோக்கி செல்ல, இவன் சிரித்தபடியே ஹாலில் அமர்ந்து கொண்டு சுவர்களில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை ஆராய்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தான்..

              ஒரு ஐந்து நிமிடம் கழிந்திருக்கும், முரளிராஜன் சொன்னதைப்போல ப்ரஷ் ஆகி வெளியே வர, அவரை தொடர்ந்தபடியே வள்ளியும் வந்தார். இருவரையும் பார்த்தவன் மெல்ல எழுந்து நிற்க, முரளிராஜன் தனக்கென ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டு அவனையும் அமர சொன்னார்.

           “உட்காருங்க தம்பி.. சொல்லுங்க என்ன விஷயம்?…”ஏதோ ஒன்றுமே தெரியாதது போல அவர் முதலிலிருந்து பேச்சை ஆரம்பிக்க, வள்ளியிடம் சொன்ன அதே கதையை இன்னும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் எல்லாம் சேர்த்து இவரிடம் சொல்லிவிட்டு நிறுத்தினான்… 

      ஒரு 10 நிமிடங்களுக்கு அங்கு வெறும் அமைதியை நீடிக்க, நிலாவும் குளித்துமுடித்து விட்டு வெளியே வந்து விட்டாள்.. த்ரீ போர்த் பேண்டும் முழுக்கையில் தொலதொலவென்ற  சட்டையும் போட்டுக்கொண்டு அலட்சியமாக தோள்களில் புரண்ட கூந்தலை ஒதுக்கியபடியே வந்தவள், தந்தையிடம் அவன் சொன்ன அதே கதையை கேட்டுவிட்டு தலையில் அடித்துக்கொண்டு நிற்க, அவளை பார்த்தவர் அவரருகே அழைத்தார்…

           “நிலா…”

          “ப்பா…”

         “இங்க வாடா…” என்று அவளை அழைத்தவர் மகளை தனதருகே அமர்த்திக்கொண்டு, மகளின் விழிகளை பார்த்து கேட்டார்…

          “இந்த தம்பி சொல்லுறதெல்லாம் உண்மையாம்மா.. அவர் சொன்னதுல எனக்கு எந்த நம்பிக்கையும் வரலடா..  என் பொண்ண நானே நம்பலைன்னா எப்படி?…” என்று சொன்ன தந்தையை பெருமை பொங்க பார்த்தவள், அதனை சுட்டிக்காட்டும் பொறுட்டு கெத்தாக திரும்பி அவனை ஒரு பார்வை பார்க்க, இந்த திமிருக்காகவே இவளை அள்ளிக்கொண்டு போக அவன் கைகள் துடித்தது.. இவரிடம் பொய் சொன்னால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்தவன், அவரிடம் தனியாக பேசவேண்டும் என்று சொல்ல இருவருமாக மொட்டைமாடிக்கு சென்றனர்…

                அம்மாவும் பெண்ணுமாக ஹாலில் குறுக்கும் நெடுக்குமா நடந்தபடி இருக்க, ஒரு பத்து பதினைந்து நிமிட இடைவெளிகளில் மொட்டைமாடிக்கு சென்றவர்கள் திரும்பி வந்தனர்… இந்த இடைப்பட்ட நிமிடங்கள் யாவுமே பல யுகங்களைப் போலவே அடிமேல் அடிவைத்து மெல்ல கடக்க, அழகிற்காக வளர்க்கப்பட்டு நகப்பூச்சிட்டு இருந்த நகங்கள் யாவுமே கடித்து குதறப்பட்டன… அப்பா மீது அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது தான், தன்னை அவர் முழுதுமாக நம்புகிறார். ஆனால் அந்த பானிபூரி? அவனை எப்படி நம்பமுடியும்? ஏதோ சொல்லி அழைத்து வந்தவன் வீட்டிற்கு வந்ததுமே ஒரு புதியகதையை திரித்துவிடவில்லையா? அவளின் அந்த புளுகுமூட்டையை தான் அவள் நம்பமுடியாமல் வாசலையே பார்த்தபடி காத்திருக்க, ஒருவழியாக இருவருமே வந்து சேர்ந்தனர்…

           உள்ளே நுழைந்த இருவரின்  முகங்களிலுமே எந்த ஒரு உணர்வையும் கணிக்க முடியவில்லை. உள்ளே நுழைந்தவர்கள் அமைதியாக வந்து அமர, முரளிராஜன் தான் தன் மனைவியை அழைத்து சொன்னார்…

           “வள்ளி இன்னைக்கு நைட் தடபுடலா சமைச்சுடு, மாப்பிள்ளைக்கு இன்னைக்கு நம்ம வீட்டுல விருந்து..”  என்றபடியே மகளிடம் வந்தவர் அவர் கன்னம் தட்டி சிரித்தபடியே உள்ளே செல்ல, வள்ளியும் கணவரிடம் விசாரிப்பதற்காக சென்றுவிட்டார்…

             ஹாலிலேயே நின்றவள் அவனை முறைத்து பார்த்துவிட்டு வேகமாக அவனருகில் வர, ஏதோ போன் பேசுவது போல வராத போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு அவன் காரை நோக்கி சென்றான்… நிலாவிற்கு பைத்தியமே பிடிப்பதாய் இருந்தது… என்ன சொல்லியிருப்பான்? என்ன சொல்லியிருப்பான்? என்று தனது மூளைய முன்னூறு தரம் கசக்கி பார்த்தாலும் எதுவுமே பிடிபடுவது போலவே இல்லை…

             அடுத்து நடந்த நிகழ்வுகள் யாவுமே நிலாவிற்கு எரிச்சலை வரவழைப்பதாகவே இருந்தது. ஏதோ மறுவீட்டுக்கு வந்த மாப்பிள்ளை போல அந்த பானிபூரி ஹாலில் கால்மேலு கால்போட்டுக்கொண்டு டிவியை பார்க்க, நிலாவை பெற்றவள் அவனை கவனித்த கவனிப்பை பார்க்க வேண்டுமே.. விக்ரமிற்கு கூட இந்த அளவிற்கு செய்திருப்பார்களா என்று அவள் மனம் யோசித்து யோசித்து பார்க்க, இல்லை என்று தான் பதில் வந்தது…

              அவனுக்கு எதிரினிலேயே அமர்ந்தவள் அவனையே குறுகுறுவென பார்க்க, புதிய இடம் என்ற எந்த கூச்சநாச்சமுமே இல்லாமல் இரவு உணவை ஒரு வெட்டு வெட்டிவிட்டு தான் கிளம்பினான்.. கடைசியாக அவனை நிலாவையே வாசல் வரைக்கும் சென்று வழியனுப்பி வைக்க சொல்ல, இது தான் சரியான தருணம் என விசாரிக்க பார்த்தாள்…

          “ஏய்… ன்னா? நானும் பாத்துட்டே இருக்கேன்.. ஓவரா ஆடிட்டு இருக்க… என் அப்பாட்ட அப்படி என்ன சொன்ன?…”என்று அவள் கேட்க, புன்னகையை பரிசளித்தவன் ஏதோ சினிமா வசனம் போல,

           “உண்மைய சொன்னேன் பேபி…”என்று சொல்லிவிட்டு செல்ல, போகும் அவனின் விலையுயர்ந்த காரையே பார்த்தபடி நின்றாள் இவள்…

           ‘உண்மைய சொன்னானாம்? ஆளப்பாரு வாயத் தொரந்தாலே ஒரே பொய்யும் புருட்டும் தான் வருது. இது உண்மைய சொன்னுச்சாம்.. நம்புற மாதிரியா இருக்கு… இவன் தான் என்ன மாதிரியான டிசைனா இருப்பான்? ஒரே நாளுல ஆளானப்பட்ட என்னையையே போட்டுப் பாத்துட்டானே.. நெசமாவே நம்மள கல்யாணம் பண்ணிடுவானோ! ஆத்தி.. இந்த பானிபூரிய கட்டிக்கிட்டு வருசம் பூரா நான் சப்பாத்தியவா தேய்க்குறது? நோ நடக்கவிடக்கூடாது ‘ என்று புலம்பியபடியே நின்றவளை விதி வேறுமாதிரி பார்த்து சிரித்து வைத்தது…

               வேண்டும் எனும்பொழுது என்ன தான் போராடினாலும் கிடைக்காது. வேண்டாம் என்று நினைக்கயில் தான் அத்தனையும் கைமேல் கிடைக்கும்..அவளுக்கும் தான் அவள் கேட்காத பொழுது அந்த வாழ்வு கிடைத்து வைத்தது… அவளின் அந்த பாழாய்போனவன் அப்படி என்ன தான் செய்தானோ! அவன் வந்து சென்ற ஒரு வாரத்திலேயே திருமணம் வரைக்கும் பேச்சை கொண்டு சென்றுவிட்டான்…

                நிச்சயதார்த்தத்தை சென்னையிலேயே வைப்பதாகவும், திருமணத்தை அவனுடைய ஊரில் நடத்துவதாகவும் அவன் சொல்லி வைக்க, பெங்களூர் வரைக்கும் திருமணத்திற்கு அப்படி யாரும் வரமாட்டார்கள் என்று முரளிராஜன் நிச்சயதார்த்தத்தையே திருமணம் போல பெரிதாக நடத்த ஏற்பாடு செய்தார்… திருமணப்பேச்சுவார்த்தை முடிந்த மூன்றாம் வாரத்தில் வந்த முகூர்த்தத்தில் நிச்சயதார்த்த தேதி குறிக்கப்பட்டது… ஏன்டா இவ்வளவு அவசரம் என்று முணுமுணுத்தவளை பேபி பேபி என்று செல்லம் கொஞ்சியே கதிகலக்கியவன் விக்ரமிடம் மச்சான் மச்சான் என்று தோளில் கையைப்போட்டுக்கொண்டு திரிய இவளுக்கு பற்றிக்கொண்டு எரிந்தது… 

           “நாசமா போறவன் அவன போட்டுத்தள்ளுறேன்னு தானே என்ன டார்கெட் பண்ணான்.. இப்ப என்னடான்னா மச்சானாம் மச்சான்.. டேய் விக்ரம் நீயெல்லாம் ஒரு அண்ணனாடா?…” என்று வாய்விட்டே புலம்பியவளை கண்டுகொள்ள அவனுக்கொன்றும் நேரமே இல்லை போலும்…

              நிச்சயதார்த்திற்கு மொத்த உறவுகளும் வந்திருந்தனர்… இந்த ப்ரஷா சித்தார்த்தை பார்த்த நிமிடத்திலிருந்தே அத்தான் சொத்தான் நொத்தான் என்று கொஞ்சிக்குலவ, சித்திகள் எல்லாம் மருமகனே மருமகனே என்று, தங்கள் வீட்டிற்கு வந்த மூத்த மருமகனை இடுப்பில் தூக்காத குறையாக வள்ளியை மிஞ்சியவர்களாக கொஞ்ச, நிலாவால் ஒன்றுமே செய்யமுடியவில்லை… ஏனோ அவளுக்கு ஒன்று மட்டும் புரியாமலேயே இருந்தது.. தன்னால் இந்த திருமணத்தை நிறுத்தமுடியும் என்று தெரிந்துமே அவள் அதனை நிறுத்த எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல் உண்மையாகவே திருமணத்திற்கு தயாரானாள்…

                   அவளுக்கும் அவனை பிடிக்கும் என்பதை அவள் உள்மனம் ஏற்கவில்லையென்றாலும், திருமணத்தை நிறுத்தும் முயற்சியையும் எடுக்கவில்லை. அவனை பிடிக்கும் என்பதை தாண்டி வேறெந்த ப்ளா ப்ளா ப்ளாவுமே அவனிடத்தில் தோன்றாததால் அவள் அமைதியாகவே இருக்க, அவனை பார்க்கும் சமயங்களில் மட்டும் அவனிடம் வம்பு வளர்க்க தோன்றும்.

             நிச்சயதார்த்திற்கென அவன் குடும்பத்தை சார்ந்தவர்கள் எல்லாம் வந்திருந்தனர். அவர்களில் ஷிவானியும் வந்திருக்க அவளை பார்த்ததுமே ஏனோ நிலாவுக்கு பிடித்து போனது.. அமைதியும் அழகும் நிறையவே வாய்க்கப்பெற்றவளை விக்ரம் மண்டபத்தில் சுற்றி சுற்றி வர, அவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை கண்டு இவளும் புன்னகை பொங்க பார்த்திருக்க, அவளுக்கு பின்னே அவனின் குரல் கேட்டது…

            “என்ன பேபி? என்ன சைட் அடிக்க சொன்னா என் தங்கச்சிய பாத்து சைட் அடிச்சுட்டு இருக்க?…”என்றவனின் குரல் கேட்டு திரும்பியவள் கொஞ்சம் அசந்து தான் போனான்…

           பட்டு வேஷ்டியும் பட்டு சட்டையும் அணிந்திருந்தவன் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு கூலிங் க்ளாஷோடு நிற்க, நெற்றில் புரண்ட கேசம் ஊசி ஊசியாய் கண்ணாடி வரைக்கும் வந்து விழுந்தது.. அடர்ந்த புருவமும், ஓரங்களில் சற்று முறுக்கியிருந்த மீசையும், அதே ரோஜா நிற உதடுகளும் கொஞ்சம் தாடியும் என தமிழ்பாரம்பரியமாக நின்றவனை விழிகளால் அவள் அளவெடுக்க அந்த ரோஜா நிற உதட்டுக்குள் புன்னகையை மறைத்து கேட்டான்…

           “என்ன பேபி நீ? பப்ளிக் ப்ளேஸ்ல வச்சு என்ன சைட் அடிச்சுட்டு இருக்க?…”என்று கேட்க அசிங்கமா போச்சு குமாரு என்ற தோரணையோடு திருதிருவென விழித்தவள், கன்னம் சிவக்க ஓடிச்செல்ல, அவனுக்கு பின்னே மற்றொருவனின் குரல் கேட்டது…

          “என்னடா சித்தா? ரோமேன்டிக்கா எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட? சரியில்லயே,,,” என்க சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தவன் புன்னகைத்தான்…

           “ம்ம்ம்ம், அதெல்லா சும்மாடா. உன் நட்பு வளையத்துல இருந்துட்டு அதல்லா நான் பண்ணலாமா? இல்ல பண்ணத்தான் முடியுமா?…” என்று கேட்க அவனருகே வந்த அந்த அந்த அந்த பானிபூரியின் நண்பன் சிரித்தான்…

            “சும்மா நடிக்காதடா? எனக்கு தான் காதல பிடிக்காது.. அதுக்குன்னு எல்லாரயுமா கட்டுப்படுத்த முடியும்?…” என்க,

            “ஆனா பாரேன் ஒருநாள் இல்ல ஒருநாள் நீயும் வசமா மாட்டப்போற.. ஆமா கேட்கணும்னே நெனச்சேன் மத்தவங்கள ஏன் கூட்டிட்டு வரல? அட்லீஸ்ட் கௌஷிக்கையாச்சும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல…” என்று நண்பனின் தோளில் கைபோட்டபடி அவன் செல்ல அந்த நண்பன கண்டுபிடிங்க மக்களே…

(அந்த நண்பன் யாருன்னு என் முதல்கதை புன்னகைப் பூவேவை படித்தவர்களுக்கு தெரியும்… படிக்கவில்லைன்னாலும் பிரச்சனை இல்ல.. இவர் வெறும் கெஸ்ட் ரோல் தான்… இவரை பற்றி நிறைய படிக்க புன்னகைப் பூவே கதையை பிரதிலிபியில் படிக்கவும்)

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 5 சராசரி: 5]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

தவறிய பனிமலர் 21

பெண்ணுக்கு மிஞ்ஜின சக்தி இல்லை !1200 KM சைக்கிள் ஓட்டுச்சா? | நல்ல செய்தி – 25 | ஸ்ரீ TALKS |