in , , , ,

13 நினைவைத் தேடும் நிலவே

பதிவு 13

             நிலாவுக்கு கைகாலெல்லாம் வெலவெலத்து ஆட்டம் கண்டுவிட்டது. அவன் விடாது வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டே போக, இவள் அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள்.. எத்தனையோ நாட்கள் இவள் கதை கதையாக அம்மாவிடம் ரீல் விட்டிருக்கிறாள் தான்.. அதையெல்லாம் ஒரு நொடியிலே கண்டு கொள்ளும் அவளின் தாய், அவன் சொல்லிக்கொண்டே போனதையெல்லாம் கேட்டபடியே இவளைப்பார்த்து முறைத்துக்கொண்டு நிற்க, இன்று தான் தனது வாழ்நாளின் கடைசிநாள் என்ற முடிவுக்கே வந்துவிட்டாள்.. அவன் அந்த பக்கம் அம்மாவோடு பேச பேச இவளுக்கு வாய் வரைக்கும் வந்த வார்த்தைகள் யாவுமே வெளியேறவே மாட்டேன் என்றது…

          ‘ஆத்தி… என்னம்மா அளந்து விடுறான். இந்த வள்ளி என்ன அவன் சொல்லுறதுக்கெல்லாம் என்னப்பாத்தே மொறைக்குது. ம்மா அவன நம்பாதம்மா அவன் சரியான ப்ராடு.. டேய் பானிபூரி உன்னப்போய் கொஞ்சம் நல்லவன்னு இந்த, இந்த வாயால  தானேடா சொன்னேன், ஒரு பத்து நிமிசத்துல ஆயுதமே இல்லாம என்ன போட்டுத்தள்ள பாத்துட்டியே.. கொடுமைக்காரா உன்ன… அய்யோ இந்தநேரம் பாத்து என்னால எதுவுமே சொல்லவும் முடியல செய்யவும் முடியலையே.. நான் இவன எதாவது செய்யப்போய் விக்ரமை இவன் எதாவது பண்ணிட்டா! டேய் சிந்துபாத், போதும்டா டேய்.. நீ இப்ப போட்ட பிட்டுக்கே இந்த ஜென்மம் முழுக்க எனக்கு தொடப்பக்கட்ட அடி தான் கெடைக்கும்.. விட்டுடுடா நான் உண்மைக்குமே ரொம்ப பாவம்.. அப்பா ஈஸ்வரா உன் புள்ளய நீ தான்யா காப்பாத்தணும்.. எதாவது பண்ணே…’

               என்று அவள் மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டிருக்க அவன் ஒருபுறம் தன்னால் முடிந்த அளவிற்கு அனைத்தையும் சொல்லிவிட்டு வள்ளியை பார்த்தான்…

             “சாரி ஆன்ட்டி, உங்களுக்கு நான் சொன்னது ரொம்ப வருத்தமா இருக்கலாம். ஆனா என்ன பண்ணுறது நான் இப்ப சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். நிலா கூட இப்போதைக்கு எதையும் சொல்ல வேணாம்னு தான் சொன்னா… சாரி நிலா…” என்று அவன் சுற்றி வளைத்து நிலாவை பார்க்க, அந்த நிமிடம் அவளோ அம்மாவையே நடுக்கத்தோடு பார்த்தாள்…

           ‘என்னப் பெத்த ஆத்தா, சத்தியமா நான் அப்படி எதுவுமே சொல்லல. இவன் யாருன்னு உன் ஆத்தாவ பெத்த ஆத்தா மேல சத்தியமா எனக்கு தெரியவே தெரியாது.. இன்னைக்கு தான் பாத்தேன்…’ ஏதோ வாய்விட்டே சொல்வது போல பயத்தில் கண்கள் கலங்கிய நிலையிலேயே அம்மாவை பார்க்க, அவர் என்ன நினைத்தாரோ? அவளை எதுவும் சொல்லாமலேயே அவனை பார்த்தார்…

             “தம்பி நீங்க சொல்லுறது எனக்கு நல்லாவே புரியுது. ஆனால் இந்த விசயத்துல நான் மட்டும் எந்த முடிவும் எடுக்க முடியாதில்லையா? நிலாவோட அப்பாவும் முடிவு பண்ணனும். அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவனும் சொல்லணும்” என்று நிறுத்த, அவன் அதே நிலையிலேயே இருந்து கொண்டு இதழோர புன்னகையுடனே சொன்னான்…

             “எனக்கு புரியுது ஆன்ட்டி.. உங்கள மட்டும் நான் எந்த முடிவும் எடுக்க சொல்லலை. அங்கிள் வர்ற நேரம் தானே! அவர் வந்ததும் அவர்கிட்டேயும் சொல்லுறேன். நீங்க ரெண்டு பேரும் கலந்து பேசுங்க. நிலாவோட அண்ணன் கூடவும் பேசிட்டு உங்க முடிவை சொல்லுங்க.. உடனே சொல்லணும்னு கட்டாயம் இல்ல… ஆனால் அது நல்ல முடிவா இருந்தா எங்க இரண்டு பேருக்குமே சந்தோசமாக இருக்கும். என்ன நிலா? ” என்று அவளை பார்த்து புருவம் உயர்த்தி கேட்க, அவளோ திருதிருவென விழித்தபடியே தனக்கு தானே சொன்னாள்…

            ‘யப்பா ராசா, பின்றடா டேய். சொல்லுறதெல்லாம் சொல்லி முடிச்சுட்டு கடைசில என்னடா கேள்வி வேண்டிக்கெடக்கு? ஆத்தி என்னப்பெத்த ஆத்தா என்னைய இந்த பார்வை பாக்குதே..’ என்று புலம்பிய நேரம் வீட்டு வாசலில் ஹாரன் சத்தம் பலமாக கேட்டது… அவர்கள் வீட்டு வண்டி சத்தம் தான் அது, புதிய கேரக்டர் என்ட்ரி ஆகப்போவதற்கான அறிகுறி தான் ஹாரன் சத்தமே… அந்த சத்தத்தை கேட்டதுமே இவளுக்கு இன்னும் வியர்த்து வழிய, வள்ளி வாசலை எட்டிபார்த்துவிட்டு சொன்னார்…

         “தம்பி கொஞ்சம் இருங்க.. நிலாவோட அப்பா வந்துட்டாருன்னு நெனைக்குறேன்… இதோ வந்துடுறேன்.. ” என்று கணவரை வரவேற்று நடந்த நிகழ்வுகளை வாசலிலேயே ஒப்பிக்க அவர் செல்ல, போகும் அவரையே பார்த்துவிட்டு இவன் மெல்ல நிலா இருந்த பக்கமாக திரும்ப, அவள் அங்கே இல்லை…

          “ஏய்ய்ய் பேபி, எங்க போயிட்ட?…” என்று கேட்ட நொடிதனிலேயே அவன் முதுகில் தலையிலும் நங்குநங்கென்று அடிவிழ, சிரித்தபடியே அடிக்கிறேன் என்ற பெயரில் மலர்தூவிக்கொண்டிருந்தவளின்  கரத்தை பற்றி இழுத்து தன் முன்னே கொண்டு வந்தான்…

           “டேய் மவனே இன்னைக்கு நீ செத்தடா.. யாருடா உன்ன லவ் பண்ணா? அதுவும் ரெண்டு வருசம்..  புளுகு மூட்ட, புளுகு மூட்ட, புளுகுறதுக்கும் ஒரு அளவு வேணாமாடா? ஒரு நியாயம் தர்மம்ன்னு எதுவும் வேண்டாமா? நான் பேஸ்புக்கயே பாத்தது இல்லடா? அந்த புத்தகம் என்ன! என் பாடப்புத்தகத்தையே ஒழுங்கா பாத்தது இல்ல, இதுல நானும் நீயும் பேஸ்புக்ல லவ் பண்ணோம்னா சொல்லி வைக்குற?…”

            “என்ன பேபி, நீ இப்படி சொல்லிட்ட? நீ பேசுற ரேஞ்சுக்கு எல்லாம் ஏழெட்டு பேக் ஐடியாச்சும் வச்சுருப்பன்னுல நான் நெனச்சேன்…”

            “அடேய்.. நாசமத்து போற நாதாரி.. உண்மையிலேயே இந்த நிலா அப்புரானிடா.. என்னப்பத்தி தெரியாம இந்த உலகம் என்ன ரொம்பவே சோதிக்குது.. இதுல நீ வேற.. கைய விடுடா பன்னி. என் அப்பா வேற வந்துடுவாரு…”

           “பேபி நீ அப்புரானின்னு நீயே தான் பேபி சொல்லிக்கணும்.. யப்பா என்னா வாயி… கொஞ்சம் வாய மட்டும் கண்ட்ரோல் பண்ணு பேபி…”

            “அட்ச்சு வாய உடைக்க போறேன் பாரு.. பேபியாம் பேபி.. இன்னொருவாட்ட என்ன பேபின்னு சொல்லு…” அவள் அதட்டிக்கொண்டிருக்க, அவன் பயம் ஏதும் இல்லாமலேயே திரும்பவும் சொன்னான்…

           “எதுக்கு பேபி இவ்ளோ டென்சனாகுற? ப்ரியாகு…”

           “அடிங்க்…. நல்லா பத்த வச்சுட்டு இப்ப ஏன் டென்சனாகுறியாவா?.. நான் எப்படா உன்ன லவ் பண்னேன்?…”

           “நீ பண்ல பேபி, உன் அண்ணன் தான் பண்ணான். என் தங்கச்சிய…”

           “அந்த நாய் பண்ணா நான் என்னடா பண்ணுவேன்? அவன் லவ் ஸ்டோரிய என் லைஃப்ல திருப்பிவிடுற?…”

            “இப்டி பிரிச்சு பேசாத பேபி.. இது நம்ம லைஃப்…”

           “நோ இது என் லைஃப்…”

           “நீயும் நானும் வேற வேறயா பேபி… புருசன் பொண்டாட்டிக்குள்ள எதுவுமே தனித்தனி இல்ல…”

           “அடிங்க்… யாருடா உனக்கு பொண்டாட்டி?…”

           “இதுல சந்தேகம் என்ன? இந்த ஜென்மத்துக்கு நீ மட்டும் தான்…”

            “ஐயோம்மா படுத்துறானே… நிலா ரொம்ப பாவம்டா, வேணாம் போதும்.. இல்லன்னா அழுதுடுவேன்…” என்க அவளை கண் இமைக்கும் நேரத்தில் இழுத்து சட்டென்று அணைத்துக்கொண்டு நிற்க, எதிர்பாராத இந்த நிகழ்வினால் தடுமாறியவள் அவள் அணைப்புக்குள் இருக்கிறோம் என்பதை உணர்ந்து விலக முற்பட்டு, முடியாமல் திணறி அவன் அணைப்பை ஆத்மார்த்தமாக உணரும் சமயம் சட்டென்று விலக்கி நிறுத்தினான்…

            எதிர்பாராமல் நடந்த நிகழ்வால் அவள் சிக்குண்டு கிடக்க, என்ன நடந்தது என்பதை உணரும் முன்பாகவே அவளை விலக்கி நிறுத்தியவன் புன்னகைத்த முகமாய் நின்றான்… அவளோ அவனை நிமிர்ந்து பார்க்கும் சக்தியில்லாதவளாய் முதன்முதலில் ஒரு ஆண்மகனின் தீண்டலினால் ஏற்பட்ட பிரேமையில் அவனை பார்க்க சிரமப்பட்டு நிற்க அவனே தொடர்ந்தான்…

             “நீ ராபின்கிட்ட சொன்னத மறந்துட்டியா பேபி? நீ வேணா அவன்கிட்ட சும்மா சொல்லியிருக்கலாம்.. ஆனா நான் உன்ன உண்மைக்குமே அப்படி தான் பேபி பாக்குறேன்… உன்ன நான் கட்டாயமெல்லாம் படுத்தல.. அதுவும் இல்லாம உனக்கும் என்ன பிடிச்சுருக்கு…” என்று அவன் சொல்லி வைக்க தன்னையறியாமலேயே அவள் விரல்கள் தந்தியடித்தது…

              ‘ஆத்தீ, இவனுக்கு எப்படி தெரிஞ்சது?…’ என்று நினைத்தவள் விழியுயர்த்தி பார்க்க, அவனோ எதையோ பெரிதாக சாதித்துவிட்ட தோரணையில் நின்றான்.. இரண்டு நிமிடங்கள் அமைதியாகவே இருந்தவள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு பழைய நிலாவாகவே தொடர்ந்தாள்…

             “இங்கப்பாரு… உன்ன எனக்கு பிடிக்கவெல்லாம் இல்ல… சும்மா உனக்கு நீயே கற்பனை பண்ணிட்டு…” என்று சொல்ல அவன் பார்த்த பார்வையில் அடுத்து அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை…

             “என்ன பேபி? பேச்ச நிறுத்திட்ட? என்ன வெறும் காத்து தான் வருதா?..” என்க திரும்பவும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உண்மையை ஒப்புக்கொண்டாள்.?.

             “இப்ப எதுக்கு நீ இப்படி பாக்குற? உண்ம தான் உன்ன எனக்கு பிடிச்சது.. அலோ அது ஜஸ்ட் ஃபிசிக்கல் அப்யரன்ஸை வச்சு மட்டும் தான்.. பொதுவா எனக்கு இந்த ஹிந்தி டப்பிங் சீரியல்ஸ் எல்லாம் ரொம்ப பிடிக்கும்… கதைய எப்படி கொண்டு போறானோ ஹீரோ ஹீரோயினை எல்லாம் நல்லா செலக்ட் பண்ணிருப்பான்… கத மொக்கயா தான் இருக்கும் ஆனாலும் நாங்க அதுல வர்ற ஆக்ட்ரர் ஆக்ட்ரஸ ரசிப்போம்.. நல்லா மேக்கப் பண்ணி கலர்கலரா ட்ரஸ் பண்ணின்னு மொக்கயா இருக்கவங்களயும் அழகா காட்டிருப்பான்.. ஹீரோ லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுட்டு வருவானா! அதெல்லாம் பாத்து பாத்து மயங்கி கெடப்போம்… சோ நான் என்ன சொல்ல வர்றேன்னா உன்னயும் அப்படி தான் பாத்தேன்… க்ரஸ்ன்னு கூட சொல்லலாம்… பட் இது லவ் எல்லாம் இல்ல.. பாத்து ஒரு மணி நேரத்துல எவனையும் என்னால லவ் எல்லாம் பண்ண முடியாது…” 

             “தெளிவா பேசுறதா நெனைப்பு போல.. எது என்னவோ என்ன பிடிச்சு இருந்துச்சுல்ல?…”

             “அதுக்குன்னு கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியுமா?…”அவள் சொல்ல சிரித்தவன் வேகமாக சொன்னான்…

            “பேபி உன்ன நான் ரெக்வஸ்ட் எல்லாம் பண்ணல.. கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேட்கவும் இல்ல.. இப்போ இருக்க சூழ்நிலைக்கு நாம கல்யாணம் பண்ணிக்க தான் வேணும்…”

            “அப்படியென்ன சூழ்நிலை சார்?…”

           “மேடம் மறந்துட்டிங்கன்னு நெனைக்குறேன்.. உங்க அண்ணன் என் தங்கச்சிய லவ் பண்ணுறார்…”

          “சோ வாட்? அதான் நான் என் அண்ணன்ட பேசுறேன்னு சொன்னேனே..”

           “அவன் மனச மாத்திக்க மாட்டான்…”

          “எப்படி சொல்லுற?…”

         “அதான் ட்ரூ லவ்… விக்ரம் ஷிவானிய அந்த அளவுக்கு லவ் பண்ணுறான்…” என்று சொல்லிக்கொண்டு இருக்கயிலேயே நிலாவை பெற்றவர்கள் உள்ளே வர, இருவருடைய பார்வையுமே அவர்களிடம் சென்றது…

                  சித்தார்த்தின் பார்வையிலே எந்தவொரு பயமோ பதற்றமோ எதுவுமே இல்லை.. நிலா பயந்தபடியே நிற்க, அவன் சொன்னவைகள் யாவுமே தலைக்குள் ரிங்காரமிட்டபடியே இருந்தது.. தன்னுடைய அண்ணன் பானிபூரியின் தங்கையை உண்மையாக விரும்புகிறான் என்று தெரிந்தும் இவன் எப்படி அவனை கொல்ல முயற்சித்தான் என்று கொலைவெறியோடு அவள் இருக்க, அவள் மனம் புரியாத தாயும் தகப்பனும் மகள் பயத்தில் இருக்கிறாள் என்று நினைத்து அடுத்த நடவடிக்கைகளில் இறங்கினர்…

             “ம்ம்ம்… வாங்க தம்பி.. ஒரு அஞ்சு நிமிசம் வெயிட் பண்ணுங்க ப்ரஸ் ஆகிட்டு வந்துடுறேன்…” என்று நிலாவின் அப்பா முரளிராஜன் அவனை அமைதியாக வரவேற்றுவிட்டு உள்ளே செல்ல, வள்ளியும் அவர் பின்னேயே அறைக்குள் செல்ல திரும்பவும் அவளை குழப்ப ஆரம்பித்துவிட்டான் அவளின் அவன்…

              “என்ன பேபி தீவிரமான யோசனையில இருக்க?…” என்றவனை முறைத்தவள் அறையை ஒருதரம் பார்த்துவிட்டு முணுமுணுத்தாள்…

             “உனக்கு என்ன உன் மனசுல பெரிய ஹீரோன்னு நெனப்பா?.. ஓவரா பண்ணிட்டு இருக்க…” என்று பெண்புலியும் சீற ஆரம்பித்துவிட்டது… 

(ம்ம்ம்ம்… நடக்கட்டும் நடக்கட்டும் டும் டும்)

     

            

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 5 சராசரி: 4.8]

One Comment

Leave a Reply
  1. ரெண்டாவது தடவை படிக்கிற சுகம் இருக்கிறதே…… வாவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

இணை(ந்த ) மனங்கள்

RavaLadoo / ரவா லட்டு / Rava Urundai