in , , , ,

10 நினைவைத் தேடும் நிலவே

பதிவு 10

            ” எவன்டா அவன்! என் போனுக்கு உசுரக்குடுத்ததுமே கால் பண்ணுறது… அட இது அதே நம்பருல்ல, யாரா இருக்கும்? அட்டண்ட் பண்ணி தான் பேசுவோமே…”

என்றபடியே அட்டண்ட் செய்ய அந்தபுறம் கரகரப்பான ஆண்குரல் கேட்டது…

            ” ஹலோ, மிஸ்.வெண்ணிலா முரளிராஜனா?…”

           ” ம்ம்ம், ஆமா நீங்க?…”

           ” உன் அண்ணன் தானே விக்ரம்?…”

           “அட ஆமாப்பா ஆமா.. நீங்க யாரு?…”

இவள் கேட்க அந்தப்புறம் இருந்த நக்கலான கூடவே கறாரான குரல் கேட்டது…

  

          “யாருன்னு சொன்னா தான் மேடம் பேசுவிங்களோ!…”

          “அய்யோ.. எதுக்கு சார் மொக்க போடுறிங்க? ஏற்கனவே வீட்டுக்கு போக நேரமாச்சேன்னு கடுப்புல இருக்கேன்… இதுல நீங்க வேற…”

           “உன் பிரசங்கத்தை கேட்கவெல்லாம் என்கிட்ட நேரமில்ல… முதல்ல நான் சொல்லுறத கேளு…”

           “ஐயடா, நானெல்லாம் என் அம்மா சொல்லுறதயே கேட்கமாட்டேன்…”

          “நான் சொல்லுறத கேட்டுத்தான் ஆகணும்…”

          “யாரு சார் நீங்க? சரி அப்படி என்ன தான் சொல்ல வர்றிங்கன்னு கேப்போம். இன்னா மேட்டர்?…”

   

          “ம்ம்ம், உன் அண்ணன் விக்ரம் இன்னும் கொஞ்சநேரத்துல பரலோகம் போகப்போறான்…” என்றுவிட்டு அந்தப்பக்கம் அமைதியாக,  நிலாவிற்கு தூக்கிவாரிப்போட்டது… அது நேரம் வரைக்கும் இருந்த குறும்புத்தனமும் உற்சாகமும் சட்டென்று எங்கேயோ ஓடி ஒழிந்து கொள்ள, பதற்றம் வந்து ஒட்டிக்கொண்டது…

           “என்ன! என்ன சொல்லுறிங்க? என் அண்ணனுக்கு என்னாச்சு?…” இவள் பதற அந்தப்பக்கம் அமர்த்தலான சிரிப்பொலி பதிலுக்கு கேட்க, இவளுக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசைவது போலவே தோன்றியது… உடல் முழுவதுமே குப்பென்று வியர்க்க ஆரம்பித்தது… நடுநிசியில் ஏதேனும் கெட்டகனவு கண்டால் எப்படியிருக்கும்? பயத்தில் உடலெல்லாம் வியர்த்து கொட்டுமே! அதைப்போல தான் அந்த நிமிடம் நிலாவிற்கும் தோன்ற, எதிர்முனையில் அப்படியொரு ஆக்ரோசமான சிரிப்பு சத்தமும் அதனை தொடர்ந்தே அந்த ஆடவனின்  குரலும் கேட்டது…

           “பார்றா! அண்ணன் மேல அத்தனை பாசம், ம்ம்ம்… இருக்கட்டும் இருக்கட்டும்… இருக்கத்தானே வேணும்…”

          “என் அண்ணனுக்கு என்னாச்சு? அவன் எங்க இருக்கான்…” ரோடென்றும் பார்க்காமல் அவள் கத்த அவன் பொறுமையாக சொன்னான்…

         “அச்சச்சோ! ரொம்ப பயப்படாதம்மா… இந்த நிமிசம் வரைக்கும் உன் அண்ணன் நல்லா தான் இருக்கான், ஆனா!!…”

         “ஆனா என்ன ஆனா?…”

         “கொஞ்சம் கேப் விடு, இப்போ நான் அப்படியே லைன்ல இருக்கேன், நீ உன்னோட வாட்ஸ்ஆப் ஓபன் பண்ணி ஒரு போட்டோ வந்துருக்கான்னு பாத்துட்டு திரும்பவும் பேசு…”இப்படி சொல்லி ஒரு இரண்டு நொடி கூட ஆகாத நிலையில் அவள் விரல்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டது… அவன் சொன்னது போலவே அவன் போன் செய்த அதே நம்பரில் இருந்து போட்டோ வந்திருக்க அதனை பார்த்தவள் உறைந்தவளாக நின்றாள்…

             விக்ரம்… வெண்ணிலாவின் ஒற்றை உடன்பிறப்பு. கம்யூட்டர் என்ஜினியரிங் படித்து விட்டு, பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவன்.. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சென்னைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்து செல்வான். அப்படி அவன் வரும் சமயங்கள் எல்லாம் அண்ணனும் தங்கையும் ஆடும் ஆட்டத்தை நினைத்தாலே பக்கத்துவீட்டுகாரர்களுக்கு எல்லாம் வயிற்றை கலக்கும்… விக்ரம் கொஞ்சம் அமைதிப்பூங்கா தான், ஆனாலும் தங்கையோடு சேர்ந்துவிட்டால் மட்டும் பூவோடு சேர்ந்த நாராகிவிடுவான். மொத்தத்தில் சொல்லப்போனால் இருவருமே அண்ணன் தங்கை என்பதைக்காட்டிலும் நல்ல நண்பர்கள் என்று தான் சொல்லவேண்டும்… அம்மா அப்பாவை விடவும் அண்ணனை தான் அதிகம் பிடிக்கும். அண்ணனுக்காக உயிரையும் கொடுப்பாள்…  வாயாடியே மற்றவர்களின் உயிரையும் எடுப்பாள்… இது தான் அவளுடைய குணம் என்று புரிந்து தான் அலைபேசி ஆடவனும் அவளுக்கே போன் போட்டு அவளை அதிர வைத்துக்கொண்டிருந்தான்…

            திரையில் தெரிந்த போட்டோவை அவளுடைய கண்கள் மேய்ந்தன… விக்ரம் ஏதோ ஒரு மாலில் நின்று போன் பேசியபடி இருக்க அவனை துப்பாக்கியால் குறிவைத்தபடி அவனுக்கு சற்று தூரத்திலேயே ஒருவன் நிற்க, அவர்கள் இருவருமே தெளிவாக தெரியும்படி வேறு யாரோ ஒருவன் போட்டோ எடுத்து அனுப்பியிருந்தான்…  போட்டோவில் ஒரு ஓரத்தில் இருந்த எலக்ட்ரானிக் க்ளாக்கில் இருந்த நேரத்தை பார்த்தவளுக்கு கதிகலங்கியது. ஏனெனில் ஒரு அரைமணி நேரத்திற்கு முன்பு தான் அந்த போட்டோவே எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிய, அண்ணனுக்கு என்னவானதோ என்ற பதற்றத்துடனே கத்தினாள்….

            “டேய் யாருடா நீ? என் அண்ணனை என்னடா பண்ண?.. உன்ன இரு இப்பவே…” என்று போனை கட் செய்து அவனுடைய அண்ணன் நம்பருக்கு டயல் செய்ய, அதிலே கம்யூட்டர் வாய்ஸ் தான் ‘நீங்கள் டயல் செய்த வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்’ என்று தெலுங்கில் பேசிவைத்தது…  அப்படி கேட்டுமே அடங்காமல் இவள் திரும்ப திரும்ப கால் செய்து துவண்டு போய் நிற்க, அதே நேரம் அந்த முகமறியா ஆசாமியிடம் இருந்து போன் வந்தது… கைகள் எல்லாம் நடுங்க வியர்த்து வழிய பயத்துடனே போனை அட்டண்ட் செய்ய அவனோ கூலாக சொன்னான்…

            “என்ன பேபி? உங்கொண்ணனுக்கு போனை போட்டியா? எடுத்தானா! போன் போயிருக்க வாய்ப்பில்லையே…” என்று சிரிக்க இவளுக்கு மொத்த நம்பிக்கையுமே தொலைந்ததை போலவே இருந்தது.. ஆனாலும் விட்டுக்கொடுக்காமலேயே கத்தினாள்…

            “டேய்… யார்டா நீ? தைரியமான ஆம்பளையா இருந்தா நேருல வந்து பேசுடா நாயே. என்ன என் அண்ணன் போட்டோவ காட்டி மெரட்டுறியா? உன் பூச்சாண்டியையெல்லாம் வேற யார்க்கிட்டயாச்சும் காட்டு என்கிட்ட வேணாம்…”

    

           “பார்றா, மேடம் ரொம்ப கோவக்காரங்களா இருப்பாங்க போலயே… ஏய்ய்ய்ய்ய்… ஓவரா பேசன வாயப்பேத்துடுவேன். போன்ல தானே பேசுறான் நம்ம இஸ்டத்துக்கு பேசுவோம்னு எண்ணமே வரக்கூடாது. நீ வாய் பேசப்பேச உன் அண்ணனோட உயிர் போகப்போற நேரம் கொறைஞ்சுட்டே இருக்கும். சின்ன சாம்பிள் பாக்குறியா!…” அவன் சொல்ல இவளுக்கு திக்கென்றிருந்தது…

           “உன் வாய் சவுடாளுக்கு எல்லாம் நா பயப்படமாட்டேன். தைரியமானவனா ஆம்பளயா இருந்தா நேருல வா. பொட்ட மாதிரி ஒழிஞ்சுட்டு…” எனும்பொழுதே போன் கட்டாக, இவள் ஒன்றும் புரியாமல் போனை பார்த்தபடி பயந்துவிட்டானோ என்று எண்ணி நிம்மதிப்பெருமூச்சு விட்ட நேரம் ரோட்டில் ஓரமாக நின்றவளின் முன்னே கிறீச்ச்ச் என்ற சத்தத்துடன் ஒரு விலையுயர்ந்த கருப்பு நிற கார் பளபளவென அவள் முகம் தெரியும்படி வந்து நிற்க, இவள் துள்ளிக்கொண்டு ஒருஅடி பின்னே நகர்ந்து நின்றாள்…

             “ஹேய்ய்ய் யூ…  ஆர் யூ மேட்?…” என்று சத்தமிடும் பொழுதினிலே கார்க்கதவை திறந்து கொண்டு ஆறடி உயரத்தில் வட இந்திய சாயலில் ஒருஅழகிய இளைஞன் இறங்கிவர, அவள் கொஞ்சம் அவனை பிரம்மிப்பு  மாறாமல் பார்த்துவிட்டு அதே வீராப்புடனே கேட்டாள்…

            “ஓய் பானிப்பூரி.. உனக்கு என்ன பைத்தியமா?…” என்க, அருகே வந்தவன் அவளை கோப விழிகளோடு பார்த்தபடியே சுத்ததமிழில் முழங்கினான்…

           “யாரப்பாத்துடி பொட்டன்னு சொன்ன? நான் தைரியமான ஆம்பளடி…” என்க அவளோ புரியமலேயே புருவம் சுருக்கி பார்க்க, அப்பொழுது தான் இவன் தான் அவன் என்ற நினைவே வந்தது… வாயைப் பிளந்தவளாக, ‘இது என்னடா டப்பிங் சீரியலா இருக்கு!’ என்று நினைத்தபடியே அவள் பார்க்க, விறுவிறுவென வந்தவன் அவள் கையை இறுக்கமாக பிடித்து அவனுடைய காருக்குள் இழுத்துக்கொண்டு போய் போட்டான்… அவள் கொஞ்சம் சுதாரிப்பதற்குள் அவனும் இரண்டே எட்டில் சுற்றிக்கொண்டு வந்து காரில் ஏறிக்கொண்டு வண்டியையும் எடுத்துவிட்டான்…

        “ஏய்… யார்டா நீ? என்ன எதுக்கு இழுத்துட்டு வந்த? எங்க கூட்டிட்டு போற? என் அண்ணன் எங்க?…” அடுக்கடுக்காக அவள் கேள்விகளை கேட்க மெல்ல திரும்பி அவளையும் அவள் ஒருக்கழித்து அமர்ந்திருந்த கோலத்தையும் பார்த்துவிட்டு சொன்னான்…

              “ம்ம்ம்ம்… ஒவ்வொன்னா கேட்டா சொல்லுறேன்…”

              “போடா அறிவுகெட்டவனே… நீ என்ன பாடமா நடத்துற? நான் ஒவ்வொரு சந்தேகமா கேட்க!…”

             “பேட் காமெடி… வேற எதாவது சொல்லு…” கேசுவலாக சொல்லிவிட்டு படக்கென்று அவன் காரை ஒடித்து திருப்ப, கார் போன வேகத்தில் சீட் பெல்ட் போடாமல் இருந்தவள் பொத்தென்று போய் அவன் மீது சாய, அவனோ இல்லாத அறைகுறை மீசையை தடவியபடியே சொன்னான்…

             “சீட் பெல்ட்டுன்னு ஒன்னு இங்க இருக்கு…”

            “கொய்யால… புள்ளப்புடிக்குற கும்பலாடா நீ? இப்படி அடாவடியா கூட்டிக்கிட்டு போற? என்ன இறக்கிவிடு நான் என் அம்மாட்ட போணும்…”

           “பார்றா, பச்சக்கொழந்தைய… போன்ல மட்டும் எவ்வளவு வாய் பேசுன! அந்த வாய்க்குன்னே உனக்கு இருக்குடி… எப்படி? எப்படி? ஆம்பளயான்னா கேட்ட? வா நா ஆம்பளயான்னு ஒனக்கு இன்னைக்கு காட்டுறேன்…” இரட்டை அர்த்தத்தில் சொன்னவனை எரித்துவிடுவது போல பார்த்துவிட்டு அவன் கைகளிலேயே ஓங்கி ஓங்கி குத்தினாள்…

          “டேய் பானிபூரி.. நான் செத்தாலும் நீ நெனைக்கிறது நடக்காது.. நடக்க விடமாட்டேன்…”

          “நடக்கலைன்னா உன் அண்ணனை கொன்னுடுவேன்…” அவன் சாதாரணமாக சொல்ல அதுவரைக்கும் விடாமல் கத்திக்கொண்டும், குத்திக்கொண்டும் வந்தவள் சட்டென்று கையை எடுத்துக்கொண்டு அமைதியாக, அவன் அவளை பார்த்துவிட்டு இடுங்கிய கண்களோடு சொன்னான்…

         “என்னப்பாத்தா ஒனக்கு எப்படி தெரியுது? வாயா பேசுற? நெஜமா நான் சொல்லுறது நடக்கலைன்னா உன் அண்ணன் செத்தான்… வேணும்னா ஒரு சேம்பிள் காட்டவா?…” என்றபடியே அவனுடைய போனை எடுத்து ஏதேதோ செய்துவிட்டு அவள்புறம் திருப்ப, நிலாவுக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது… விக்ரம் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தூணில் கட்டப்பட்டிருக்க உதடு கிழிந்து ரத்தம் வந்தபடி இருந்தது…

             “விக்ரம்…” மெல்ல அவள் இதழ்கள் முணுமுணுக்க அவனை எதுவும் செய்யமுடியா நிலையில் ஒருபார்வை பார்த்தாள்.

            “அண்ணன் மேல அத்தனை பாசம் போல?…”

           “என் அண்ணனை விட்டுடு… அவன் பாவம்…”

          ” பார்றா? நவீன பாசமலர் சிவாஜிகணேசன் சாவித்திரிய பார்த்த மாதிரியில்ல இருக்கு…”

          “என் அண்ணன விட்டுடு…”

         “ம்ம்ம்ம்… விடணுமா?…”

         “ப்ளீஸ்… என் அண்ணன விட்டுடு…”அவள் கெஞ்ச அவனோ அவளை பார்த்து நக்கலாக சிரித்தபடியே கேட்டான்..

         “விட்டுடணுமா? சரி விட்டுடுறேன்… ஆனா ஒரு கண்டிசன்…”

          “என்ன?…”

          “நான் சொல்லுற மாதிரி அவன் நடந்துக்கணும்…”

         “ஹான்!!!…”

         “புரியலைல, உன் அண்ணன் என் தங்கச்சிய விட்டு தூரமா ஓடிப்போகணும்… இன்னும் புரியலைல… உன் அண்ணனுக்கு மனசுல பெரிய இவன்னு நெனப்பு… பாலும் சோறும் ஊட்டி  தங்கமா வடிச்சு வைரமா இளைச்சுன்னு ஓரு பொண்ண வளத்தா! காதலிக்குறேன் கல்யாணம் பண்ணுறேன்னு என் தங்கச்சி மனச கெடுத்து வச்சுருக்கான்… சொல்லி சொல்லி பாத்தேன்… இரண்டு பேருமே கேட்குறமாதிரி தெரியல, அதான்…” அவன் சொல்லிக்கொண்டே போக இவள் அவன் சொல்வதின் அர்த்தம் உணர்ந்து ஆச்சர்யத்தோடு அவனை பார்த்தாள்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

தவறிய பனிமலர் 19

11 நினைவைத் தேடும் நிலவே