in

வில்லேந்தும் மொழியாளே 9

அத்தியாயம்-9:

“உள்ளவா பேட்டா… ” கதீஜா மேடம் அன்போடு உள்ளே அழைக்க, புன்னகையுடனே உள்ளே நுழைந்தான் தருண்.

“உங்களை வந்து தொந்தரவு பண்றதுக்கு மன்னிச்சுடுங்க ஆன்ட்டி” என்றவாறே ரவியும் உடன் நுழைய, பதிலுக்கு அமைதியான புன்முறுவலை சிந்தினார் கதீஜா.

அவர்கள் அருந்துவதற்கு தண்ணீர் எடுத்து வந்தவர், அவர்கள் எதிரே வந்தமர்ந்தார்.

ரவி சற்று சங்கடத்துடன் தான்  அமர்ந்திருந்தான். அந்த அளவிற்கு தருணை தனிஷா ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தாள். அவனுக்கு புரியவில்லை, தருண் இனி செய்யப்போகும் செயல்கள் எவ்வித எதிர்வினையை கொடுக்குமென்று.

“நீ நேத்து என்கிட்ட என்னோட அலுவலகத்தில் வச்சு பேசுனதெல்லாம் உண்மைதான்னு நிஷா மூலமாவே தெரிஞ்சுகிட்டேன். ஏன்? நீ இன்னைக்கு இங்க வருவேன்னு கூட அவளுக்கு தெரியும். தெரிஞ்சு தான் அலுவலகத்துக்கும் கிளம்பி போனா. உனக்கே தெரியும் அவ குடும்பத்துக்கே அவ ஒத்தை பெண்வாரிசு. திருநெல்வேலி ஜமீன்தார் வம்சாவளி அவங்க அப்பாவும் சித்தப்பாவும். அவங்க கொஞ்சம்பட்ட அவசரத்தால இன்னைக்கு வாழ்க்கையை தொலைச்சு, உறவுகள் எல்லாத்தையும் உதறிட்டு வந்து தனியா வாழ்ந்துகிட்டுருக்கா. இன்னும் அவ மனசை நோகடிக்கனுமா தம்பி? ” கதீஜா அம்மையாரின் நீண்ட விளக்கத்தில் ரவி ஒருமாதிரி ஆகிவிட, தருண் எந்தவித உணர்வையும் பிரதிபலிக்காமல் அமர்ந்திருந்தான்.

அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவன், ” நடந்த எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டுதான் நான் இவ்வளவு தூரம் போராடிகிட்டுருக்கேன்.

அவளுடைய உணர்வுகள் நியாயமானதுதான். ஆனாலும் வாழ்க்கையை வாழ வேண்டிய வயசுல அவ எடுத்துருக்குற இந்த முடிவைத்தான் நான் எதிர்க்கிறேன் ஆன்ட்டி. அவ என்கிட்ட கொஞ்சநேரம் பேசினாலும் என்னால அவளை மாறவைக்க முடியும்.

அவ என்னை கட்டிக்கலனாலும் பரவாயில்லை, வேற யாரயாச்சும் கட்டிக்கனும்னு எதிர்பார்க்கிற தியாகியெல்லாம் நானில்லை. இனியும் அவளை விட தயாராயில்லை” தருணின் விளக்கத்தில் கதீஜாவின் முகத்தில் சற்று தெளிவு பிறக்க, ரவியின் முகம் திகிலானது.

‘டைலாக்லாம் பலமா பேசறானே? பூனாவுல இருந்து கிளம்பும் போது டின்னு கட்டி அடிவாங்கி பூனை மாதிரி நடக்கவச்சே கூட்டிப்போறான் போலேயே? சும்மாவே அவ வாயாலேயே அருவா வீசுவா.  இவன் பேசற வீரவசனத்த பார்த்தா லேடி டைசனா கும்மிடியடிக்கப்போறா?? இப்பவே கண்ண கட்டுதே’ ரவியின் சிந்தனை பல கோணங்களை தொட்டு வந்தாலும், தப்பிக்கும் மார்க்கம் மட்டும் அவன் கண்களுக்கு புலப்படவில்லை. திருதிருத்த விழியுடன் வீட்டை சுற்றிலும் சுழற்ற, அவன் பார்வை வாயிலில் வந்து நிற்க, குதிங்கால் செருப்பை கழற்றிக்கொண்டிருந்த கால்கள் தென்பட,

“அய்யய்யோ வந்துட்டா டா!!” மனக்குரலென்று நினைத்து ரவி சத்தமாகவே பேசிவிட, கதீஜா சிரிக்க ஆரம்பித்து விட்டார். தனிஷாவை அந்நேரம் கண்ட இன்ப அதிர்ச்சியில் தருண் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவளை கண்டு கொள்ளாது உள்ளே வந்தவள்,

“என் வீட்டுக்குள்ள உட்கார்ந்துகிட்டு என்னையே நக்கலடிக்கிறாயாலே?” ரவியை பார்த்து ஒற்றை விரலை ஆட்ட, அசடு வழிந்தான் அவன்.

கதீஜா சிரித்து முடித்தவர்,” என்னடா இன்னைக்கு போன உடனே திரும்பி வந்துருக்க? ” தனிஷாவை கேட்டார். அவளின் வாழ்வு மீண்டு விடாதாவென்ற ஆர்வம் அவரது கண்களில்.

“ஃபைல் வச்சிட்டு போயிட்டேன் அம்மி. அது எடுக்கதான் வந்தேன். பின்ன இவனுங்கள பார்க்க வந்தேன்னு நினைச்சிங்களா?” என்றவள் தருணை அங்கிருக்கும் ஒரு பொருளாக கூட மதிக்காது தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவளது அலட்சியத்தை உணர்ந்தாலும்,” தப்பா எடுத்துக்காதிங்க ஆன்ட்டி” என்ற தருண், அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை ரவியும்,கதீஜாவும் உணரும் முன்பே அவளது அறைக்குள் சென்று கதவை அடைத்து விட்டான்.

கதவை அடைக்கும் சத்தம் உணர்ந்தாலும்,கதீஜா என்று நினைத்து,தனது ஃபைலை அலமாரியில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தவளோ, ” அம்மி. இவனுங்கள எதுக்கு வீட்டுக்குள்ள விட்டுருக்கிங்க? நான் போனதும் முதவேலையா வெளிய அனுப்பிவிட்டுருங்க”  ஃபைலை தனது கைப்பைக்குள் வைத்தவள் திரும்ப, தருணை கண்டு அதிர்ந்து நின்றாள்.

“எலே நீ இங்க என்னவே பண்ணுத? லே.. ரவி..ரவிஈஈஈஈஈஈஈ” என்று காட்டுகத்தலாக கத்தினாலும், இருந்த இடத்தை அசையவில்லை தருண்.

அவன் அசையாது நிற்பதை கண்டு, ஏதோ தீர்மானித்து நின்றிருப்பதை உணர்ந்துகொண்டவளாக முதலில் தன்னை நிதானப்படுத்த முயற்சித்தாள். இதற்குள் தருண் அவளை நெருங்கி வர,

“தருண் நீ தப்பு பண்ற? முதல்ல இங்கிருந்து வெளில போ. எதுவா இருந்தாலும் வெளில போய் பேசிக்கலாம்” அவன் முன்னேற இவள் பின்னெட்டு வைக்கவென, பதற்றம் அதிகரித்தது அவளுக்கு.

மனம்கொண்டவன் முன்னே நிற்கிறான், மறுதலித்த விதியை நொந்து கொள்வதை தவிர வேறுவழியேது? தனக்குத்தானே போட்டுக்கொண்ட நெருப்புவேலியை ஈர்க்கும் இலவமாக நெருங்குபவனை விலக்க முடியாமல் தவிப்புக்குள்ளானாள் பேதை.

இதற்குள் அவளை நெருங்கியவன்,அவளது தோள்களை பிடித்திருந்தான். அனிச்சையாக தனிஷாவின் கைகள் கைப்பைக்குள் வைத்திருந்த பெப்பர்ஸ்ப்ரேயை ஸ்பரிசிக்க, தருணின் தீண்டலின் முன்பு அவள் கைகள் வேலை செய்ய மறுத்தது.

“யாரு.. நீ என்கிட்ட பேசறவ? நாய் மாதிரி அலையறேன்டி உன்பின்னால , இந்த ஒரு வருஷமா? உங்க ஊர் அல்வாவ என்கிட்டயே கிண்டற பார்த்தியா?” என்று பதில் பேசியவனிடம் சிலிர்த்து, அவன் கைகளை தட்டிவிட்டு , கட்டிலை விட்டு நகர்ந்து அங்கிருந்த ஒற்றை நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“இப்ப சொல்லு என்ன பேசனும்? ” என்றவள் அவனை பார்க்காது முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“நாம கல்யாணம் செய்துக்கலாம். என்கூட கோயம்புத்தூர்க்கு வந்துடு” நேரடியாக விஷயத்திற்கு வந்தான் தருண்.

“நடக்கறதை பேசு. நான் மிஸஸ். தனிஷாகௌஷிக். இனிமேலும் அதேதான்” என்றவள் பேசி முடிக்கும் முன்பே கைகொட்டி சிரிக்க ஆரம்பித்தான் தருண்.

“எலே எதுக்குடே சிரிக்கிற? ” அவனின் பரிகாசத்தில் கோபமாக பேசிக்கொண்டே அவனருகே வந்து நின்றாள் தனிஷா.

“இல்ல..‌ போட்டுதள்ளுனவனுக்கு குடுக்குற மரியாதையை நினைச்சேன் சிரிச்சேன் ? ” என்ற தருணின் பதிலில் அவனது குரல்வளையை பிடித்திருந்தாள் அவள்.

“ஒரு கொலை பண்ணாலும், இரண்டு கொலை பண்ணாலும், கொலை கொலைதாம்லே. உன்னையவும் கொல்லுனும்னு ஆசைப்படுதியோ?” குரல் நொந்து தோய்ந்திருந்தாலும் பிடி தளரவில்லை.

“கொல்லு. ஆனா அப்ப உன்பேர் தனிஷாதருணா மாறியிருக்கனும்‌. அப்படின்னா ஓகே?” என்றவனின் பேச்சில் அவளின் கைகள் தானாக இறங்கியது.

அவனை விட்டு விலகியவள், கீழே அமர்ந்து முட்டியில் தலை குமித்து கதறி அழ, தானும் அவளுடன் கீழே இறங்கி அமர்ந்தான் தருண்.

“சிட்டு என்னைப்பாருடி? அழாத” அவளது தலையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க, இசையவில்லை அவள்.

“வேண்டாம்லே ராஜாளி.. போயிடுலே … இன்னும் இங்கன இருந்தன்னா உன்ன கண்டமேனிக்கு ஏசிப்புடுவேனோன்னு பயமா இருக்குலே.. போயிடுலே”  அழுகுரலில் தேம்ப ஆரம்பித்தாள் தனிஷா.

அவளது ராஜாளியென்ற அழைப்பில், அன்று குதூகலித்த தினம் தானாக நினைவு வந்தது அவர்களுக்கு.

பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரி பருவத்தில் முதலடி எடுத்து வைத்திருந்தாள் தனிஷா. அருளுக்கு சொந்தமான கல்லூரியில் தான் அவளுக்கு கவுன்சிலிங்கில் சீட் கிடைத்திருந்தது. அவள் நினைத்திருந்தால்  திருநெல்வேலியிலேயே படித்திருக்கலாம். ஆனால் அவளது நெருங்கிய தோழி, அஷ்வதி கோவையைச் சேர்ந்தவளாகையால், அவளை பிரிய கூடாதென்ற ஒரே முடிவுடன் தந்தை சிவநாதனையும்-தாய் காந்திமதியையும் கரையோ கரையென்று கரைத்து, இதோ சிறுவாணி ஆற்றை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது தாமிரபரணி.

நெல்லையில் மகிவும் பிரசித்திபெற்ற வியாபாரி சிவநாதன். உள்ளூரில் பேர்சொல்லப்படும் தனவந்தரும் கூட‌‌. இவர்களின் ஒரே மகள் தனிஷா. சிவநாதனுக்கு உறவாக இருப்பது அவரது தம்பி ருத்ரன் மட்டுமே. சிறுவயதிலியே பெற்றோரை இழந்ததால் அண்ணனை விட்டு எதையும் யோசிக்கமாட்டார் ருத்ரன். சிவநாதன் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணம் மட்டும் செய்து கொள்ளவில்லை அவர். ஏனோ திருமணத்தில் விருப்பமில்லை என்பதில் ஸ்திரமாக நின்றுவிட்டார் ருத்ரன். அதில் அவருக்கு மனவருத்தமே.

“ஏம்லே..‌எனக்குதான்…ஒத்த புள்ளையா நின்னு போச்சு. நீயாச்சும் கல்யாணத்தை முடிச்சு எனக்கு இன்னும் இரண்டு மவளுகள மவனுங்களையும் குடுக்கலாம்லலே?” சிவநாதனின் ஆதங்கப்பேச்சிற்கு,

“புள்ளைங்கள்ள ஆணென்ன பெண்ணென்ன பேதமென்ன அண்ணாச்சி. அதான் மகளா.. என் சிங்கக்குட்டி தனிஷா இருக்காள்ள… அதுபோதுங்க” என்ற பேச்சோடு முடித்து விடுவார். காந்திமதியின் தாய்வழியிலும் அவர் ஒற்றைப்பெண் வாரிசு.‌ அவரது நெருங்கிய சொந்தமாக அவரது பெரியம்மாவின் அண்ணன் மட்டுமே. அன்னை வழியில் உறவினர்கள் அதிகம் தனிஷாவிற்கு. ஆனாலும் மாமன் மகன் கௌஷிக்கை மட்டும் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அவளை விட ஏழு வயது மூத்தவனாக இருந்தாலும், அவனது நடவடிக்கை சரியிருக்காது. எப்பொழுதும் தொட்டு தொட்டு பேசும் அவனது தொடுகையிலேயை அருவருத்துப்போய் ஒதுங்கி விடுவாள் தனிஷா.

இதோ இன்று வெற்றிகரமாக ஜி.எஸ்.எம் பொறியியற் கல்லூரியில் காலடியும் எடுத்துவைத்துவிட்டாள்.

“ஏன் அம்மிணி எனக்காக நீ இந்த ஹாஸ்டல்ல கிடக்கனுன்னு தலையெழுத்தா? இருந்தாலும் உன் நட்பு பாசத்துல நா கல்வழுக்கி விழுந்துட்டேன்டி” அஷ்வதி செல்லமாக அழுத்துக்கொள்ள,

“ஏட்டி உனக்காக அம்மையையும் அப்பனையும் ஏய்ச்சு , இங்க வந்து சேர்ந்தா நீ இன்னும் பேசுவ இதுவும் பேசுவட்டீ” தனிஷா தனது தோழியை முறைத்துக் கொண்டே பதிலளித்தாள்.

“டீ.. முதல்ல இப்படி பேசுறத நிறுத்து. பசங்க பிடிச்சா ஓட்டாம விட மாட்டானுங்க. நம்ம பேச்சு வழக்கெல்லாம் நம்ம வூட்டுக்குள்ளாற மட்டும் வச்சுக்கனும்”  என்று பேசிக்கொண்டே வந்த அஷ்வதியின் கைக்குட்டை கீழேவிழுந்து காற்றில் பறக்க, அதை பிடிக்க அவள் ஓட, தோழி தன்னருகே இல்லாததை கவனிக்கவில்லை தனிஷா.

“அதெல்லாம் பாத்துக்கிடலாம்.. ” என்றவள் காற்றில் அண்ணாந்து பார்க்க வானில் ராஜாளி பறந்து கொண்டிருந்தது.

“ஏட்டி… பாத்தியா?? ராஜாளிய பாத்தா நல்ல சகுனன்னு எங்க அம்மத்தா சொல்லும். என்ஜினியரிங்க முடிச்சு நம்ம பேருல ஒரு டேம் கட்டப்போறாம் போலலே” சிரித்துக்கொண்டே அஷ்வதியின் தோளில் அடிக்க, அது தோளல்ல மார்பு. அதுவும் ஒரு ஆடவனின் மார்பு.

சற்றே நிமிர்ந்து பார்க்க, அவளது பேச்சில் கன்னக்குழி புன்னகை விழ சிரித்துக்கொண்டு நின்றிருந்தான் தருண். எதிர்பாராது இவனை கண்டதால், தனிஷா வாய்பிளந்து நிற்க, கைக்குட்டையை எடுத்துக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தாள் அஷ்வதி.

“ஓய் சிட்டுக்குருவி.. என்ன பருந்த வேடிக்கை பார்த்துக்கிட்டுருக்க?? ஹூம்??” இன்னும் அடக்கிய சிரிப்புடன் அவனது உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

“எலே.. யாருவே சிட்டுக்குருவி??  யாருலே நீ?? நா எதை வேடிக்கை பார்த்தா உனக்கென்னலே வந்துது?” அவனது சிட்டுக்குருவியென்ற விளிப்பில் , தான் அவ்வளவு சின்ன உருவமாகவா இருக்கிறோமென்ற கோவம் வந்து விட்டது அவளுக்கு‌. தனிஷாவின் கத்தலில் முன்னே  சென்று கொண்டிருந்த தருணின் நண்பர்கள் இவர்களை நோக்கி வர, வேகமாக வந்து தனிஷாவின் வாயைப்பொத்தினாள் அஷ்வதி.

“அண்ணா மன்னிச்சுக்கங்கண்ணா. இவ நம்ம ஊருக்கே புதுசுங்க” அஷ்வதி அவன் யாரென்பது தெரியுமாகையால் வேகமாக பேசி முடித்தாள்.

“ம்ம்..‌கொஞ்சம் சொல்லிவை அம்மணி. வாயை திறந்தா மரியாதை அருவியா கொட்டுது” தன்னை நோக்கி வரும் நண்பர்கள் நெருங்கும் முன்பே,

“வரட்டுமா சிட்டு?? ” அவளிடம் தலையாட்டிவிட்டு இவர்களை நெருங்கும் முன்பே நண்பர்களிடம் சென்றுவிட்டான் தருண்.

“ஏண்டி வந்ததும் வம்பிழுக்கிற? ஒத்துக்கறேன் தாமிரபரணி ஆத்து தண்ணிக்கு வீரம் ஜாஸ்திதான். ஆனா இது காலேஜூ கொஞ்சம் அடக்கி வாசிடி” அஷ்வதி அவளுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் போதே,

“கொஞ்சம் வழிவிட்டு நில்லுங்க அம்மணிங்களா” என்ற குரல் கேட்க, அவனை பார்த்த மாத்திரத்தில் விழிபிதுங்கி நின்றாள் தனிஷா. ஏனென்றால் இப்பொழுது வந்தது அருண். அவன் இவர்களை கண்டு கொள்ளாமல் முன்னே சென்றுவிட,

“லூசாடி இவன். இப்பத்தான் இவன் வேற ஒரு ட்ரெஸ் போட்டுருந்தான். இப்ப வேற ட்ரெஸ் மீசைல்லாம் வச்சுகிட்டு வர்றான்” பேசிய தனிஷாவின் வாயில் அடித்தாள் அஷ்வதி.

“நீ எனக்கு சமாதி கட்டாம கிளம்பமாட்டடி. இது அருணு.. உன்கிட்ட பேசுனது தருணன்னன். இரண்டு பேரும் இரட்டைபிறவிங்க” என்றவளின் விளக்கத்தில் ,’ ராஜாளி’ என அவளது உதடுகள் முணுமுணுக்க, அவளை பிடித்து உலுக்கினாள் அஷ்வதி.

“ஏண்டி உலுக்குற? இவனுங்க டபுள் ஆக்ட்டுன்னு எனக்கு எப்படி தெரியும்?” என்றவளை இழுத்துக்கொண்டு தங்களது வகுப்பறை நோக்கி நடந்தாள் அஷ்வதி.

“ம்ம்..சரிதான்டி.. நான் இனிமேல் ஒழுங்கா நடந்துக்குறேன்” தனிஷாவும் தோழியின் பேச்சிற்கு அதிசயமாக ஒத்துக்கொண்டு நடந்தவளின் சிந்தனை முழுவதும் தருண் மட்டுமே.

அதன்பிறகு கல்லூரி கலாட்டாக்களிலும், புத்தும்புது நட்புக்களின் அறிமுகத்திலுமாக கல்லூரிக்காலமும் பயணிக்க ஆரம்பித்தது.

அவ்வப்போது ஒருவரை ஒருவர் எதிர்ப்படும் போது ஆரம்பித்த பார்வை பரிமாற்றம் ஒரிரு வார்த்தைகள் நின்று பேசும் அளவிற்கு வந்திருந்தது.

தருண் மூன்றாம் வருட முடிவிலும், தனிஷா முதல் வருட முடிவிலும் இருந்தனர். இதுநாள் வரை தனிஷா கவனத்திற்கு வந்த ஒன்று, தருணை எப்பொழுதும் வட்டமிடும் பெண் தோழிகள். அருணை விட தருண் கலகலப்பான பேர்வழி. அவனது பெரிய மீசையை வைத்தே அவளுக்கு அடையாளம் காணவும் எளிதாக இருந்தது. அருண் அவ்வளவு கலகலப்பானவனாக இருப்பதில்லை. அணுகும் நபர்களை பார்வையாலே நிறுத்தி விடுவான். தருண் அவ்வாறு இல்லாதது அவளுக்கு சற்று வருத்தத்தை அளித்தது. அத்தோடு தருணின் குறும்புகளும், அவன் பேசி முடித்த முன்புதான் பேசிய நபருக்கு  புரிய ஆரம்பிக்கும், அவன் அவர்களை  கேலி செய்திருக்கிறானென்று.

இவையெல்லாவற்றையும் தாண்டி தருணின் மீது அவளது நெஞ்சம் படர காரணம், அவளுக்கென பிரத்யேகமாக அவன் செலுத்தும் விழிவீச்சு. அதில் அப்பட்டமான காதல் மட்டுமே தெரிந்தது.

சில சமயங்களில் அவளும் யோசித்திருக்கிறாள்,” இதெல்லாம் இந்த வயசுல வர்ற ஈர்ப்புதானோ? இல்லை கண்டதும் காதலா? ” விடை குழப்பமாகதான் இருக்கும்.

இப்படி குழப்பிக் கொண்டிருக்கும் போதுதான் ஒருவர் மனதை மற்றவர் தெரிந்து கொள்ளும் அந்த நாளும் வந்தது.

“ஏங்கண்ணே பட்டுடும் போல அவ்வளவு அழகா இருக்க கண்ணு” கையில் கொண்டு வந்திருந்த காஃபி ட்ரேயை வைத்துவிட்டு நிமிர்ந்த ஷண்மதியை மீனாட்சி நெட்டி வழிக்க, முகம் கூம்பாமல் காக்க மிகுந்த சிரமபட்டாள் அவள்.

“மீனு.. பேத்தி முகத்தை நீ மட்டும் பார்த்தா போதுமா ? நாங்களும் பார்க்கோனும். இப்படி வந்து உக்காரு” குணசேகரனின் அலம்பலில் சிரித்துக்கொண்டே அவரருகே வந்தமர்ந்தார் மீனாட்சி‌.

“ரொம்பத்தே மாமோய்… இன்னும் மீனாட்சி அயித்தை உங்க பக்கத்துலயே தான் இருக்கனுமாக்கும்” தமயந்தி வம்பிழுக்க, சற்றுநேரத்திற்கு அங்கு சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்டது.

“அப்படிக்கேளுடி தந்தி.. வயசானாலும் மாமன் என் வூட்டுக்காருருக்கு போட்டியா பொண்டாட்டிய தாங்குறாரு” தாட்சாயிணியும் சேர்ந்து கொள்ள, அவ்விடத்தில் கலகலப்பிற்கு கேட்கவா வேண்டும்.

“மருமவப்புள்ளங்களா நீங்க உங்க வூட்டுக்காரனுங்களுக்கு சரியா ட்ரெயின்ங்க் குடுக்கலியாக்கும். என்ற மீனம்மா எனக்கு குடுத்த ட்ரெயினிங் அப்படியாக்கும்” குணசேகரன் ஒரே போடாக போட, பல்ப் பளீரென்று எரிந்தது இருவரது முகத்திலும். அதைப்பார்த்து சிரித்த அருளும், சிவாவும் மனைவிமார்களின் ஏகோபித்த ஆட்சேபனை பார்வைக்கு ஆளாகினர். இத்தனை சலசலப்பிற்கு நடுவிலும் அருணின் முகத்தில் மட்டும் எள்ளளவிலும் சிரிப்பில்லை. பார்வை ஷண்மதியின் முகத்திலியே நிலைத்திருக்க, அது அருள்-தாட்சாயிணியின் கண்களுக்கும் தவறவில்லை.

முதலில் சுதாரித்த சிவா,” ஷண்மதி உட்காருடா. எதுக்கு நின்னுகிட்டே இருக்க?” என, சந்தீப் நகர்ந்து அவளுக்கு இடமளித்தான்.

“ஷண்மதி இந்த பொண்ணு பாக்குற சடங்கெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயத்துக்கு தான்டா. உனக்கு அருணை கட்டிக்க சம்மதமா மட்டும் சொல்லு போதும். அதுக்கு மட்டும் என்மவன கொஞ்சம் நிமிர்ந்து பார்த்துடேன். எம்மவன் வச்ச கண்ணு வாங்காம பார்க்குற முதபொண்ணு நீதான்” தாயாக தாட்சாயிணி மகனை நினைத்து பெருமையுடன் பேச, அதை ஆமோதிக்கும் விதமாக புன்னகைத்தான் அருள்.

இப்பொழுது வேறுவழியில்லாது அரும்பாடுபட்டு முகத்தில் வருத்தத்தை காண்பிக்காமல், சிரித்த முகமாக அருணை நிமிர்ந்து பார்க்க, சரியாக அருணின் அலைபேசி ஒலித்தது. மொபைலை எடுத்தவன் அதை கட்செய்து விட்டு, மீண்டும் பேக்கெட்டுக்குள் போட, மீண்டும் ஒலித்தது.

இந்த முறை வீடியோ காலில் அழைத்திருந்தது மொழி. சந்தோஷமாகவே அழைப்பை ஏற்றான் அருண்.

“ஏங்கண்ணு தூங்காம இதென்ன அழிச்சாட்டியம்” கடிந்துகொண்டே அவளிடம் பேச,

“பாருங்க தாத்தா.. அண்ணன் என்னை திட்டுது. எங்கண்ணியை நா பார்க்க வேணாங்களாப்பா” தாத்தனிடம் ஆரம்பித்து தந்தையிடம் முடித்தாள் மொழி.

“ரோஜாக்குட்டி கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கியே டா??”  அருளின் குரலில் உண்மையான வருத்தம்.

“ஆமா.. போன பத்தே நாள்ள உங்க மவ இளைச்சு போறாளாக்கும். ரொம்பத்தே.. எங்கண்ணன் சாப்பாடு போடாம விட்டுருவாகளா? போனதுக்கு இப்ப கன்னம் வச்சுருக்கா பாருங்க” மகளை பார்த்து நொடித்துக்கொள்ள,

“அம்மணி… உனக்கு பொறாமை. ஆமாங்கப்பா.. இளைச்சு போயிட்டேனுங்க. நீங்க கனடாக்கு வாங்கப்பா. வாரப்ப இந்த அம்மணியை மூட்டைகட்டி தூக்கிட்டு வந்துடுங்கப்பா” என, மீண்டும் அங்கு சிரிப்பலை பரவியது.

” காலேஜூ எப்படி இருக்குதுங்க சின்ன ராஜாத்தி? அங்க எல்லாரும் சௌக்கியமுங்களா?” குணசேகரன் பேத்தியை விசாரிக்க,

“அதெல்லாம் அந்த அவதார் பத்திரமா என்னை கூட்டிட்டுப் போயிட்டு வந்துட்டானுங்க தாத்தா” அந்த நேரத்திலும் கப்கேக்குளை தின்று கொண்டே பேச,

“பார்றா.. வில்லுபயகூட ராஜாத்தி ராசியாகிட்டிங்களா?” உண்மையான சந்தோஷம் அவரது குரலில்.

“நோ…நோ…என்ன பாத்து எப்படி கேட்டுப்போட்டிங்க தாத்து? இன்னைக்கு அவன் என்னை வீட்டுல விடும்போதுகூட அவனை கார்ல இருந்து உருட்டி விட்டேனுங்க” என்றவள் அங்கிருந்தே ஹை-பை கொடுக்க, பதிலுக்கு குணசேகரனும் ஹை-பை கொடுக்க, அதன்பின்பு தான் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தனர் தாத்தாவும் பேத்தியும்.

“என்ன தைரியமிருந்தா எம்மருமவனை உருட்டிவிடுவ?” தாட்சாயிணி கத்த,

“இதெல்லாம் தப்புடா ரோஜாக்குட்டி” கண்டிப்பை கொஞ்சலாக சொல்லிக்கொண்டிருந்தான் அருள்.

“தந்தி சித்தி பாருங்க அம்மணி என்னை திட்டுது. நா உங்களுக்கே மகளா வந்துடுறேன்? என்னை தத்தெடுத்துக்குங்க” இறுதியாக தமயந்தியிடம் சரணடைந்தாள் மொழி.

“ஏண்டியம்மா.. இப்பதான் நான் உன் கண்ணுக்கு தெரியறனா? இருந்தாலும் என் சப்போர்ட்டு உனக்குதான்டா” என, அதற்கு மொழி கொடுத்த புன்னகையை யாராலும் மறக்க முடியாது.

“லவ் யூ சித்தி.. உம்மாஆஆஆ… ” என்றவள்,” சிவா சித்து.. நல்லாருக்கிங்களா? டாடிய விட இப்பவும் நீங்கதான் சூப்பரா இருக்கிங்க? ஆமா..‌பக்கத்துல என்னயே ” பே” ன்னு பாத்துட்டுருக்க அந்த ரெட் டிஷர்ட் யாரு? அண்ணி பக்கமும் கொஞ்சம் மொபைலை திருப்புங்களே?” என்று முடிக்க, அசடு வழிந்தது சந்தீப்பின் முகத்தில்.

ஆம்..இத்தனை நேரம் அவளது கலகலப்பான பேச்சில் , தங்களது வீட்டில்தான் இருக்கிறோமா? இல்லை அருளின் வீட்டிலிருக்கிறோமா? என்று எண்ணுமளவிற்கு இருந்த இடத்திலிருந்தே சபையை நிறைத்திருந்தாள் அருளின் பெண்ணரசி. வீடு முழவதும் ஆட்கள் நிரம்பியிருக்கும் இந்தச்சூழல் ஒற்றையாக குழந்தைப் பருவத்தை கழித்த சந்தீப்பிற்கு சுவாரஸ்யமாகவும், மனதிற்கு இதமாகவும் இருக்க சற்று ஆர்வத்துடனே மொழியை பார்த்தான் அவன்.

“நான் நல்லாருக்கேன் செல்லக்குட்டி. இந்த ரெட்டீஷர்ட் தான் உங்க அண்ணியோட அண்ணன். ம்ம்..உனக்கு மாமா முறை” பதிலளித்த சிவா, சற்றே அலைபேசியை நகர்த்தி, ஷண்மதியை காண்பிக்க, அழகாய் புன்முறுவல் பூத்தாள் அவள்.

“ஓ.. அப்படியா? மாம்ஸ்கிட்ட அப்பறம் வரேன். ஹை.‌அண்ணி நெம்ப அழகா இருக்கிங்க? அதும் மஞ்சள் சேரில மங்களகரமா இருக்கிங்க” என்றவள் திரைவாயிலாகவே முத்தத்தை அனுப்ப, மொழியின் மகிழ்ச்சி தானாகவே ஷண்மதியின் முகத்திற்கும் ஒட்டியிருந்தது.

“ஆமா..நீங்க இப்பதான பாக்குறிங்க? அப்பறம் எப்படி அருண் அண்ணனுக்கு பிடிச்ச மஞ்சள் கலர் புடவைல இருக்கிங்க ” மொழியின் தகவலில், அதிர்ந்து நிமிர்ந்தவள், செலுத்தப்பட்ட விசையாக அருணை பார்க்க, கண்களால் அவளை விழுங்கிக்கொண்டிருந்தவனை கண்டு குழம்பிப்போனாள் பெண்ணவள்.

“ம்ம்.. அண்ணனையே பார்த்துக்கிட்டிருங்க.. நடத்துங்க.. நடத்துங்க.. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணி. நா வைக்கிறேன். லப் யூ ப்பா.. அம்மணி காலைல மறக்காம ஃபோன் பண்ணு. அருண் அண்ணா அண்ணி சூப்பர்.எல்லாருக்கும் பை” என்றுவிட்டு வைத்து விட்டாள்.

அவள் பேசிவிட்டு வைத்ததும் மழை பேய்ந்து ஓய்ந்தது போலிருக்க, சந்தீப்பின் மன ஊர்வலத்தில் கலர் கலர் பூவானங்கள் பூக்க ஆரம்பித்தது மொழியை நினைத்து.

“ஷண்மதி-அருணு நீங்க ஏதும் தனியா பேசனுன்னு பிரியபடறிங்களா?” அருள் கேட்க, இல்லையென தலையசைத்தாள் ஷண்மதி.

இப்பொழுது அனைவரும் அருணின் முகத்தை பார்க்க,” கல்யாணத்தை வச்சுடலாம்ப்பா. எனக்கு இவளைத்தான் பிடிச்சுருக்கு” என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டான் அருண்.

மொழி அப்பொழுதுதான் தூங்கலாமென முடிவெடுத்தவள்,” ச்ச.. அத்தை அப்பவே பாக்ஸோட கப்கேக்ஸ எடுத்துக்கோன்னு சொன்னாங்க. டீசன்ஸி பார்த்து நாலு மட்டும் எடுத்துட்டு வந்தது தப்பா போச்சு? இப்ப பசிக்குது. அம்மணி சொன்ன மாதிரி கன்னம் போட்டுட்டோமோ” கட்டிலில் அமர்ந்திருந்தவள், எழுந்து சென்று கண்ணாடியை பார்க்க சற்று பூசினார் போலிருந்தது முகம்.

“இதுவும் இந்த அவதார் பய சதியா இருக்குமோ? அவனுக்கு கன்னத்தை பிடிச்சு இழுக்க வசதியா இருக்கனுங்கறதுக்காகவே எனக்கு பிடிச்ச ஐட்டமா செய்ய சொல்றான் போல?

அடப்பாவி நான் ஃப்ளைட்ல ஏறி  உட்காரும்போது, என் வெயிட் தாங்காம அது கவுரனுங்கறதுக்காவே எனக்கு வெயிட் ஏத்துறானோ? என் பைலட் கனவுல மண்ணை அள்ளி போட பாக்கிறியா? டேய் அவதார்….” என்று பல்லை கடிக்க, அறைகதவு படபடவென்று விடாமல் தட்டப்பட, இந்நேரம் இவனைத்தவிர யாரா இருக்கும்? என்று நினைத்தவள்,

“டேய்..‌ அவதார்… ” பல்லைக்கடித்த படி கதவை திறக்க நின்றிருந்தது வின்சென்ட். அவனின் பின்னால் வில்லியம் சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.

“மா…மா…மாமா” என்று அவள் திக்க,

“என்ன ஆச்சு லிட்டில்ப்ளம்? உன் ரூம்ல செம சத்தமா இருந்தது. எவ்ரிதிங் ஓகே பேபி? உனக்கு ஒன்னும் இல்லியே டா?” பதற்றத்துடன் கேட்க,

“சாரி மாமா…அப்பாகிட்ட எல்லார்கிட்டயும் பேசினேன். அதான் சத்தம் கூடிடுச்சு. இனி இப்படி நடக்காது” மன்னிப்பு கேட்டாள் மொழி.

“நோ நோ லிட்டில்ப்ளம். சாரில்லாம் வேண்டாம்டா. பட் கொஞ்சம் நாய்ஸ் குறைச்சுக்கோ. ரொம்ப சத்தமா இருந்தா கம்ப்ளெயின்ட பண்ணிடுவாங்க. வின்டோஸ் க்ளோஸ் பண்ணிக்கோ. குட்நைட்” என்றவன் திரும்ப, வில் நின்றிருப்பதை பார்த்து விட்டு,

“நீ இங்க என்ன பண்ற வில்? ” என,

“எதிரெதிர் ரூம்தானே. நானும் சவுண்ட் கேட்டுதான் வந்தேன் டாட்” என்றான் வில்லியம்.

“ஓகே.போய் படு.குட்நைட்” வின்சென்ட் தங்களது அறைக்கு சென்றுவிட்டான்.

அவனை கண்டுகொள்ளாமல் மொழி கதவை மூடும் நேரம், கையை வைத்து தடுத்தவன்,” என்னை கார்ல இருந்து தள்ளிவிட்டு ஓடினல்லடி இப்ப மாட்டுன” என்றவன், அவளை வெளியே இழுத்து நிறுத்தினான். ஆம்.. மாலை கல்லூரியிலிருந்து கிளம்பும் போது, தான் டேனியுடன் பொதுவாகனத்தில் வீட்டிற்கு வருவதாக மொழி வாதிட, கிட்டதட்ட அவளை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் வில்லியம்.

வழி முழுவதும் அவனிடம் வார்த்தை முரசு கொட்டிக்கொண்டு வந்தவள், வீட்டிற்குள் இறங்கும்போது, அவன் சீட்பெல்ட்டை கழற்றிய மறுநிமிடம், அவனை உருட்டிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள். அதன்பின்பு அவனது கண்களில் படாமல் கண்ணாமூச்சி காட்டியவள், இப்பொழுது வசமாக சிக்கிக்கொண்டாள்.

“அதுக்கு பனிஷ்மென்ட் குடுத்தே ஆகனும்” வாதிட்டான் வில்லியம்.

“டேய் அவதார் ஒழுங்கு மரியாதையா கையவிடு. மாமா இப்பதான் மேல போனாரு. கத்திடுவேன்” மொழியின் எச்சரிக்கையை கண்டு கொள்ளவில்லை வில்லியம்.

“மா… ஆஆஆஆ” என்று கத்தப்போனவளின் அதரங்களை அவன் சிறைசெய்ய, அருகில் அலங்காரத்துக்கு இருந்த பூச்சாடியை கையிலெடுத்து அவனை அடிக்க வர, லாவகமாக அதை கையில் பிடுங்கியிருந்தான் அவன்.

முத்தத்திற்கு நேரக்கணக்கேது? இருவரில் ஒருவருக்கு மூச்சுக்காற்றுக்கு குறை ஏற்பட்டால் மட்டுமே அது முடிவுக்கு வரும். இங்கு மொழி மூச்சுக்குத்திணறிய பின்புதான் அவளை விடுவித்தான் வில்லியம்.

சற்று தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள், அவனை திரும்பியும் பாராது அமைதியாக தனது அறைக்கு திரும்ப,

“இனி எனக்கு பிடிச்ச ஃப்ளேவர் வெண்ணிலா மட்டுந்தான்டி சில்க்கி. தூங்கறப்போ கூட ஸ்வீட் சாப்பிடுவியாடி” என, அவன் கப்கேக்கை சொல்கிறான் என்பது அவளக்கு புரிந்தது. இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல்,

“நான் உன்கிட்ட டைம் கேட்டுருக்கேன் வில். நீ என் பேச்சை மீறுற?” அவனை திரும்பிப்பார்த்து பேச,

“டைம் உனக்குத்தான் கேட்டுருக்க. எனக்கில்லை?” என்றான் அவனும்.

“நான் உன்னை வேண்டான்னு சொன்னா என்ன பண்ணுவடா அவதார்” அடக்கப்பட்ட கோபம் மொழியின் குரலில்.

“எனக்கு வேணுன்னு சொல்வேன் சில்க்கி. உன்னை யாருக்கும் கொடுக்க மாட்டேன்” வில்லியமின் பதிலில் மொழிக்குள் ஏதோ உயிர்க்கும் உணர்வு.

“என்னை என்ன பொம்மைன்னு நினைச்சியா?” அவளது கண்கள் அவனை ஆராய,

“இல்லை. என்கூடவே இருக்கப்போற தேவதைன்னு நினைச்சிருக்கேன். நீ..‌நீ மட்டுந்தான் எனக்கு எல்லாத்தையும் கொடுக்க முடியும் சில்க்கி” அவளது கண்களை தனது கண்களோடு கலக்கவிட, சிவந்த கன்னங்களோடு, அவனது பார்வையின் வீரியத்தை தாங்க இயலாது தனது அறைக்குள் மொழி ஓடிவிட, அவளது கன்னச்சிவப்பு வில்லியமின் உள்ளத்தை உவகையால் பொங்கச் செய்ய, தூங்கா இரவாக அன்றைய இரவை கழித்தனர் வில்லாலனும், மொழியாளும்.

ஏந்துவாள்💘💘💘….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 19 சராசரி: 4.6]

6 Comments

Leave a Reply
  1. Arun Kumar sikirama kalyanam nadaka pogudu, dai William unaku villain oruthan varanda un mozhi ya site adikirane, Avatar posukku nu ippadi kiss panradum velai ah pochi da unaku, nice update rudhi dear thanks ma

    • Arun kalayanatha panni shanmathiya oru vali aakk readyaa irukaan… Ivan romba chettai panran adhan intha Villu paiyanauku oru competitor aa vachachu😂😂😂 thankyou so much chittidear😍😍😘😘😘😘❤️❤️

  2. Arun Kumar sikirama kalyanam nadaka pogudu, dai William unaku villain oruthan varanda un mozhi ya site adikirane, Avatar posukku nu ippadi kiss panradum velai ah pochi da unaku, nice update rudhi dear thanks ma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent Author

கொஞ்சும் வண்ண காதல் 8

8. அம்புத நல்லாள்