in , , , ,

வில்லேந்தும் மொழியாளே 8

அத்தியாயம்-8:

“அடடே வா அம்மணி…‌” அருணின் வரவேற்பில்,  குழப்பமா ? பதற்றமா? இரண்டும் கலந்த பார்வையுடன் அவனை சந்திக்க அவனது தொழிற்சாலைக்கே வந்திருந்தாள் ஷண்மதி.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” உதிரிபாகங்களுக்கு மிக வேகமாக ஸ்க்ரூக்களை பொருத்திக் கொண்டிருந்த, ஊழியர்களின் புறம் அவள் பார்வை சென்று மீள,

“சரி அங்க வா அம்மணி” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு தனது அலுவல் அறைக்கு அழைத்துச்சென்றான்.

“உட்காரு.. ” இருக்கையை அவளுக்காக இழுத்து நிறுத்த, நுனியை ஒட்டி அமர்ந்திருந்தவளை கண்டு , ஆராயும் பார்வையுடன் அவளெதிரே அமர்ந்தான் அருண்.

“சொல்லுங்க.. ” அவளின் முகத்தை பார்த்தவாறே அமர்ந்திருந்தான் அருண்.

அவனின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள், “நா.. நா.. நான்‌ முதல்ல உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். உங்களை முறைச்சதுக்காக”  தைரியங்களை கோர்த்து ஒருவாறு சொல்லிவிட்டாள்.

“ம்ம்.. சரி..‌இதை சொல்லத்தான் வந்தியா?” இப்பொழுது அருணின் பார்வை அவள் செருகியிருந்த மஞ்சள் ரோஜாவில் பதிந்திருந்தது.

“ஆ..ஆமா..‌அதுமில்லாம..‌ஒரு உதவியும் கேட்டு வந்துருக்கேன்” வறண்டது போலிருந்த தொண்டையால் உதடுகளை நாவால் அவள் ஈரமாக்கிக்கொள்ள, தன்முன்னாலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான் அருண்.

“இ…இல்லை வேண்டாம்… ” என அவள் மறுக்க,

“சரி.. என்ன உதவின்னு சொல்லு?” அருணின் பார்வை இப்பொழுது அவளது உதடுகளில் தொக்கி நிற்க,

“உங்களுக்கு என்னை பொண்ணு கேட்டு, அப்பத்தாவும் உங்கம்மாவும் தமயந்தி அத்தை கிட்ட கேட்டுருக்காங்க. அதுக்கு தமயந்தி அத்தை சம்மதம் சொல்லிட்டாங்க. எனக்கு இந்த கல்யாணம் பொண்ணு பார்க்கறதுல இஷ்டமில்லை. நீங்க இந்த சம்பந்தத்தை வேண்டான்னு சொல்லிடுங்க” ஷண்மதியின் பேச்சில் , கோபத்தில் அருணின் நரம்புகள் முறுக்கேற, சிலநொடி அங்கே மௌனம் மட்டுமே நிலவியது.

நடந்தது இதுதான். முதல்நாள் கல்லூரிவிட்டு வந்தவளை சந்தோஷ உற்சாகத்துடன் வரேவற்றனர் தமயந்தியும், சந்தீப்பும். அண்ணனின் முகத்தில் வெகுநாளைக்குப்பிறகு மகிழ்ச்சியை கண்டதில் சந்தோஷமாகவே அணைத்துக்கொண்டாள் ஷண்மதி.

“புள்ள நீ ரொம்ப நல்லா வாழப்போற?? எம்மவனே உன்னைக்கட்டிக்கறான்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி” என்ற தமயந்தியின் பேச்சில் குழம்பினாள் அவள். ஏனென்றால் ரவியை அவள் இன்னொரு சந்தீப்பாக, அவளது மற்றொரு அண்ணனாகவே நினைத்து அவனுடன் வளர்ந்தவள். அவனும் அப்படித்தான்.

‘இதென்ன அத்தை இப்படி உளர்றாங்க?’ என்றவள் குழப்பத்துடன் முழிக்க, அப்பொழுதுதான் ஹாலுக்கு வந்த சிவா ஷண்மதியின் குழப்பத்தை புரிந்து கொண்டவனாக அவளருகே வந்தான்.

“ஏண்டி..‌விவரஞ்சொல்றவ புள்ளைக்கு ஒழுங்கா சொல்லமாட்டியா? நம்ம ரவிய சொல்லலடா அவ, தாட்சாயிணி மவன் அருண‌ சொல்றா?” என்றவர் அவரது தலையை தடவிக் கொடுக்க,

“ம்ம்..சரிங்க மாமா… ” அதிர்ச்சிக்குள்ளானாலும் முயன்று முறுவலித்தாள் ஷண்மதி.

” இன்னும் இரண்டு சந்தோஷமான விஷயமும் இருக்கு மதி” என்றான் சந்தீப்.

“என்னண்ணா?” குழப்பங்களை ஒதுக்கி வைத்து அவன்முகம் பார்த்தாள்.

“அருண் சாரோட மேஜர் கான்ட்ராக்ட் ஒண்ணு கிடைச்சிருக்கு. அதோட நம்ம ரவியும் தருணும் அடுத்தவாரம் ஊருக்கு திரும்புறாங்க” அண்ணனின் சந்தோஷம் தங்கைக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதை அவள் வெளிக்காட்ட முடியுமா?

“ஹை‌… ரவிண்ணா வர்றாங்களா?” குதூகலித்து அனைவரின் கவனத்தையும் திசைதிருப்ப அது வேலையும் செய்தது. அதன்பின்பு ஒரு முடிவெடுத்தவளாக இதோ நேரே அருணின் முன்பு வந்து அமர்ந்திருக்கிறாள்.‌

அவனிடமிருந்து பதில் வராமல் போக, அவள் தலையை நிமிர்த்திய மறுகணம்,      ” ஏன்?? ” என்ற கேள்வி மட்டும் வந்தது அருணிடமிருந்து.

“எனக்கு உங்களை பிடிக்கலை” இதை அவன் முகத்துக்கு நேராகவே சொல்ல,

” ஓ…‌ என்ன காரணம்?” என்றான் அருண்.  

“ஒரு நல்ல ஆண்மகன் கையில என் வாழ்க்கையை ஒப்படைக்கனுன்னு ஆசைப்படறேன். உங்களுக்கு அந்த தகுதி கிடையாது” அவனது குரல், புயலை உள்ளடக்கிய குரலென்பதை உணராது, முட்டாள்தனமாக வார்த்தையை விட்டாள் ஷண்மதி. ஆம்.. அரைகுறை அறிவு என்றுமே ஆபத்து என்பதை அவள் உணர தவறவிட்டாள் போலும். இப்பொழுதாவது அவள்‌மனதிலிருப்பதை முழுவதுமாக சொல்லியிருந்தால் பின்னால் நேரப்போகும் நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம்.

“ம்ம்.. அப்ப நான் ஆம்பளை இல்லன்னு சொல்ல வர்ற? ” அவனது கேள்வியில் அதிர்ச்சியுற்றவளாக,” இ.. “இல்லை என பதில் பேச வந்தவளை பேசாமல் அமைதியாக இருக்குமாறு அவன் வாயில் விரல் வைக்க, விழித்தாள் ஷண்மதி.

“உன் பாஷைல சொன்னா நல்ல ஆம்பிளை இல்லை..?? என்ன சரியா?” இருக்கையிலிருந்து எழுந்து நின்று அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் அருண்.

அவனது செய்கையில் பயந்தவளாக, ஷண்மதி இருக்கையை விட்டு எழுந்து செல்ல  முயற்சிக்க, அவளது தோளை அழுத்தி அமரவைத்தான் அவன்.

“நான் இன்னும் முடிவ சொல்லலியே அம்மணி? அதுக்குள்ளாற என்ன அவசரம்?” என்றவன் அவள்முன்னால் இருந்த டேபிளில் ஏறி அமர்ந்தவன்,

“இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என்றவனின் பதிலில் இதயம் ஒருமுறை பலமாக துடித்து அடங்கியது அவளுக்கு.

“என்னைப்பார்த்து ஒரு பொம்பளபுள்ள இப்படி ஒரு கேள்வி கேட்டுருக்க? நா நல்ல ஆம்பளைதான்னு உனக்கு நிரூபிக்க வேணாம்மா?” அமைதியான அவன் குரலில் முதுகுத்தண்டு சிலீரிட்டது ஷண்மதிக்கு.

“நீ..‌நீங்க தப்பு செய்றிங்க?” கலங்கிய கண்களுடன் அவனை பார்க்க,

“இல்லை.. எல்லாம்.. சரியாத்தான் செய்றேன். எல்லாம் சரிவர தெரிய வரும்போது, நீ இப்ப பேசுன வார்த்தைகளுக்கு உனக்கு என்கிட்ட இருந்து மன்னிப்பு கிடைக்காது” அவனது குரலில் தெறித்தது உண்மை மட்டுமே. அது ஷண்மதிக்கும் இப்பொழுது புரிய ஆரம்பித்தது.

“நா.. நா.. வேண்டாம் என்னை விட்டுடுங்க” எதுவாக இருந்தாலும் மனம் முரண்ட, எழுந்து நின்றவள் அவனிடம் கடைசி முறையாக மன்றாடினாள்.

அவளைப்பார்த்து நக்கலாக முறுவலித்தவன்,” என்ர பொண்டாட்டி ஆகப்போறவ இப்படி கெஞ்ச கூடாது கண்ணு. நீ கிளம்பி பத்திரமா வூட்டுக்குப்போயி சேரு அம்மணி” அமர்ந்திருந்த மேஜையிலிருந்து குதித்தவன், அவளது தலையிலிருந்த ரோஜாவை கையிலெடுத்திருந்தான்.

“இது உன்னைப்போலவே ரொம்ப அழகா இருக்கு. என்கிட்ட இருக்கட்டும்” என்றவன் அவளது பதிலை எதிர்பாராது வெளியே சென்றுவிட்டான்.

வினையை வம்படியாக இழுத்துவிட்ட தனது அறிவீலித்தனமான செயலை நினைத்து நொந்தவளாக வெளியேறினாள் ஷண்மதி.

தன்னை அண்ணாந்து பார்க்கும் அன்றலர்ந்த மலரை, பார்த்து வெள்ளைப்பற்கள் பளீரிட முறுவலித்தான் டேனி.

(இவர்களது ஆங்கில உரையாடல் தமிழில்)

“என்ன பேப் அப்படி பார்க்கிற? ” இப்பொழுது கைக்குட்டையை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டிருந்தான் அவன்.

“இல்லை நான் பார்க்குற எல்லாமே அவதார் ஃபேமிலியாவே இருக்காங்களே? அதான் யோசிக்கிறேன். பை தி வே..மைசெல்ஃப் மொழி. இந்தியாவில் இருந்து வந்துருக்கிறேன். ஏர்க்ராஃப்ட் மெயின்டெனன்ஸ் பிரான்ச்” அறிமுகம் செய்து கொண்டாள்.

“நீ ரொம்ப வேடிக்கையா பேசறே பேப். மைசெல்ஃப் டேனியல் டெவியன். நான் உனக்கு சீனியர். அப்பா கரீபியன் ஐ மீன் வெஸ்ட்இண்டீஸ்.. அம்மா அமெரிக்கன். நம்ம ரெண்டு பேரும் ஒரே டிபார்ட்மென்ட் தான். அண்ட் உனக்கு ஒரு விஷயம்… ” என்று ஆரம்பித்தவன், பின்பு என்ன யோசித்தானோ? அதோடு நிறுத்திவிட்டான்.

“உன்னை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் டேனி” ஏனோ மொழிக்கு பார்த்த மாத்திரத்திலேயே டேனியலிடம் நட்புகரம் கோர்க்க, மனம் விரும்ப, சந்தோஷமாகவே அவனுடன் தங்களது டிபார்ட்மெண்ட் நோக்கி நடந்து சென்றாள்.

“நீ பார்ப்பதற்கு மிகவும் அழகா…ம்ம்… எங்க கரீபியன் லில்லி மாதிரி இருக்கே.. மொ.. மொ.. மொலி என்னால உன்பெயர் சொல்ல முடியல? கொஞ்சம் டைம் எடுக்கும்னு நினைக்கிறேன். அதுவரைக்கும் உன்னை லில்லி கூப்பிடலாமா?” அவனது மொலி.. எலி என்பதைப்போல் அவளது காதில் கேட்க, அடக்கமாட்டாது சிரித்தாள் மொழி‌. அதில் முன்னால் சென்று கொண்டிருந்த மாணவர்கள் சிலர் திரும்பி பார்க்க, அவளை மறைத்து நின்றான் டேனி.

“ஹேய்..டேனி..தயவுசெஞ்சு என்பேரை மட்டும் சொல்லாத.. நீ எந்த பூ பேரு வச்சுன்னாலும் கூப்பிடு.. நோ ப்ராப்ளம்” அவனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தாள். அவளது பேச்சில் டேனி சற்று அசடு வழிய, அதுவும் அவனுக்கு அழகாகத்தான் இருந்தது.

இருமனங்கள் இணைந்து இதத்தை உணர்வது காதலில் மட்டுமா? நட்பிலும்தான். க்ளாஸ்ரூமின் காரிடரை தொடும் வரை இருவரும் அவர்களது ஆதி முதல் அந்தம் வரை பேசி முடிக்க, நின்று சிரித்துக்கொண்டினர் இருவரும்.

“லன்ச்க்கு உன்னை ஜாயின் பண்ணிக்கலாமா மொ…மொழி” ஒருவழியாக அவளது பெயரை உச்சரித்து விட்டான் டேனி.

“அடடே.. டேனி … என் பெயரை அழகா சொல்லிட்டியே? இதுக்காகவே நாம லன்ச் சேர்ந்து சாப்பிடலாம். அண்ட் ஈவினிங் மறக்காம நீ எனக்கு உன்னோட ட்ரெயினிங் ஏர்க்ராஃப்ட் காண்பிக்கனும். டீல்?” அவளின் பேச்சில் மிகவும் சந்தோஷமாக உணர்ந்த டேனியும் சம்மதித்தான்.

பின்பு தனது அலுவல் வேலைகளை முடித்துவிட்டு, க்ளாஸ் அட்டென்ட் செய்த மொழிக்கு திருப்தியாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த சில மாணவர்களும்  அவளுடன் நட்புகரம் நீட்ட, அவர்களது கலகலப்பும் பேச்சும் மதியம் டேனி வந்து அழைக்கும் வரை தொடர்ந்தது.

டேனி வந்து அழைத்ததும், கூட இருந்த நட்புகள் ” உனது பாய்ஃப்ரெண்டா?” என கேட்க, ” நோ.. ஃப்ரெண்ட் லைக் யூ ஆல்” என்றுவிட்டு அவனுடன் நடந்தாள்.

உணவுண்ணும் இடத்திற்கு செல்லும்முன்பு, தனது கறுப்பின நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தி வைத்தான் டேனி‌. அவர்களுடனும் மொழி சிரித்து பேச, சுற்றியிருந்தோர் கவனத்தை ஈர்த்தனர் இவர்கள். அதில் சில இனவெறி பிடித்த வெள்ளைக்கார மாணவர்களின் குழுவும் அமர்ந்து இவர்களது செயலை கவனித்துக் கொண்டிருந்தனர்.

அதில் அமர்ந்திருந்த ஒருவன் மற்றொருவனை கண்காண்பிக்க, அதிலிருந்த நால்வர் அவர்களை நோக்கி நகர ஆரம்பித்தனர். இது தூரத்தில் மொழியை தேடி வந்து கொண்டிருந்த வில்லின் கண்களில் பட்டது. ஏதோ விபரீதம் நடக்க போவதை உணர்ந்து, வேகநைடயுடன் வந்து கொண்டிருந்தான் வில்லியம்.

“ஷிட்.. இதைப்பத்தி அவளுக்கு எச்சரிக்கை பண்ணாம விட்டுட்டேனே?”  என்றவன் கிட்டதட்ட ஓடிவந்தான்.

அதற்குள் அவர்கள் டேனியின் நண்பர் குழுவை நெருங்கியிருந்தனர்.

அதில் தலை முழுவதும் ப்ரவுன் நிறம் சாயமும், கடுக்கனுமாக பார்க்கவே வித்தியாசமாக இருந்தவன், மொழியை நெருங்க, டேனி அவனை தள்ளிவிடுவதற்குள் அவளது கையில் வைத்திருந்த கைப்பையை பிடுங்கியிருந்தான் அவன்.

“ஹேய்…யூ.. ” என்றவள் கத்தி அவனை நெருங்குவதற்குள், டேனி அவளை முந்த, சரியாக அவன் மென்று துப்பிய பபிள்கம் எச்சிலுடன் அவன் முகத்தில் தெரித்தது. அவனது செயலில் மொழி அதிர்ந்து நிற்க, டேனியின் நண்பர்கள் அவனை அடிக்க வர, பதிலுக்கு இவர்களும் தாக்க ஆரம்பிக்க, அவர்களை நெருங்கியிருந்தான் வில்லியம்.

உள்ளே வந்தவன், அவர்கள் இருவரையும் பிரித்துவிட முயற்சிக்க, அதில் ஒருவன் வில்லியமின் வரவை தன் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தான். வில்லியமின் செல்வாக்கு தெரிந்ததால் அவர்கள் பின்வாங்கி ஓடிவிட டேனியின் நண்பர்கள் மூர்க்கமாக தாக்கியதிலிருந்து கடைசி நிமிடத்தில் தப்பித்தான் வில்லியம்.

“கைஸ் ஸ்டாப் இட்… ” அவர்களை சற்று அமைதிப்படுத்தியவன், மூக்கில் ரத்தம் புனலாக ஓடிக்கொண்டிருந்த டேனியின் ரத்தத்தை கட்டுப்படுத்த முதலுதவி பெட்டி எடுத்து வருமாறு அவனது நண்பர்களை ஏவினான். அருகில் இருந்த குழாயை பார்த்தவன், தண்ணீர் பிடித்து வர அங்கு வேகமாக ஓடியவன், மொழியை ஆராயவும் தவறவில்லை. அவள் எந்தவித சேதமும் இல்லாததை உணர்ந்தவன், ” சில்க்கி இவனை கூட்டிட்டுப் போய் அங்க உட்காரவைச்சுட்டு. நீ கிளாஸ்க்கு போயிடு” அவளை பணித்துவிட்டு ஓடினான்.

இதற்குள் மொழி தனது பையை தேடி எடுத்தவள், அதிலிருந்த தண்ணிரை எடுத்து அவனுக்கு கொடுக்க, வேகமாக அருந்தியவன், முகத்தை கழுவி சற்று ஆசுவாசமடைந்தான்.

“எதுக்கு டேனி உன்னை இப்படி அடிச்சாங்க? நீ என்ன பண்ண அவங்கள?” மொழிக்கு தெரிந்துகொள்ளா விட்டால் மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது.

“நான் கறுப்பினத்தை சேர்ந்தவன் அதான் இப்படி நடந்துக்கிறாங்க பேப்” டேனியின் நிதானமான பதிலில் முறைத்தாள் மொழி.

“நிறத்துல என்ன இருக்கு? இன்னுமா இந்த பாகுபாடெல்லாம் பார்க்குறாங்க?எங்க ஊர்லதான் ஆளாளுக்கு ஜாதிய சொல்லி அடிச்சுக்கறாங்கன்னா. வளர்ந்த நாடுன்னு பேர் சொல்லிக்கறவங்க நாடு அதை விட மோசமா இருக்கே? இன்னும் வளரனும் போல” மோவாயில் கைவைத்து தீவிரமாக பேசியவளை ரசனையுடன் பார்த்தான் டேனி.

அவனது கனிந்த பார்வையில்,” ஹேய் நான் உங்க நாட்டை சொன்னேன்யா. உன்னை இல்லை? இதுக்கு மேல வளர்ந்த ஏணி வச்சுகூட உன்கூட பேசமுடியாது” என்றவளின் பேச்சில் சிரிக்க ஆரம்பித்தான் டேனி.

“ஹப்பாடி சிரிச்சுட்டியா? வா அதே கையோட போய் மேனேஜ்மென்ட்ல அவனுங்க மேல கம்ப்ளைன்ட் பண்ணுவோம்” அவனின் கைபிடித்து எழுப்ப, அவளை பிடித்து அமர வைத்தான் டேனி.

“வேண்டாம். வில் கம்ப்ளெய்ன் பண்ண வேணான்னு சொல்லியிருக்கான். அவன் பாத்துக்கறேன்னு சொல்லியிருக்கான். இதுமாதிரி ஏற்கனவே இரண்டுமூணு தடவை நடந்திடுச்சு. இதை சுமுகமா முடிக்க நாங்க ட்ரை பண்ணிகிட்டுருக்கோம்” என்றவனின் பதிலில் மொழியின் இரத்த அழுத்தம் எகிறியது.

“ஓ அந்த துரை சொல்லிட்டார்னா செஞ்சுடுவாரா? ஆக்ஷன் எடுக்காம எப்படி இவனுங்க அடங்குவானுங்க??” அவளின் சீற்றம் கண்டு பெருமையாகத்தான் இருந்தது டேனிக்கு.

ஆனாலும் இதில் அவளை இழுத்துவிட விரும்பாததால்,” ஹேய் டோன்ட் வொர்ரி.. இங்க இதெல்லாம் சகஜம்… கமான் ச்சியர் அப் ” டேனி ஆறுதல் கூறினாலும், நடந்த சம்பவத்திலிருந்து மொழியால் மீள முடியவில்லை.

” எப்படி டேனி உன்னால இவ்வளவு சகஜமா இருக்க முடியுது? சுதந்திர உலகத்தில நாம வாழ்ந்துட்டுருக்கோம்னு நான் நினைச்சுட்டுருக்கறது பொய்யா? இப்பவும் இந்த கறுப்பின பாகுபாடு இருக்குங்கறதை என்னால நம்பவே முடியலை. இதெல்லாம் தப்பு டேனி” சீற்றத்துடன் பேசிய மென்மொழியாளின் பேச்சில் மனம் குளிர்ந்தாலும், கசந்த முறுவலை மட்டுமே சிந்தியது அவனது உதடுகள்.

“பேப்ஸ்.. மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். எல்லாரும் எப்பவும் மாறனுங்கறது சாத்தியமில்லை. முடிந்த அளவுக்கு நாம நல்லவங்களா இருந்துட்டு போறது நல்லதுங்கற நிலைமைக்கு வந்தாச்சு.

ஏன் போன வருஷம் பரவிய அந்த கொடிய வைரஸ் பரவுன நேரத்துல என்ன நடந்தது தெரியுமா? அரசாங்கம் குடுத்திருந்த ஒருவார ஊரடங்கு கெடுவை மதிச்சு நாங்கல்லாம் வீட்டுக்குள்ள முடங்கியிருந்தப்போ.. எங்களை பிடிக்காத சிலர், வைரஸ் தொற்றே உங்களாலதான்டா வருதுன்னு.. எங்க வீட்டு கதவுகளின் கைபிடியில் நோயுற்ற நபர்களின் எச்சிலை தடவி வைச்சுட்டுபோனாங்க.

திரும்ப அரசாங்கம் மூலமா ஆட்கள் வந்து சுத்தம் செஞ்சுட்டு போனபிறகு தான் எங்களால் வெளிய வர முடிஞ்சது. இதைபத்தி அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துனதும் எங்க வெள்ளைக்கார நண்பர்கள் தான். அப்ப யாரை குறை சொல்றது? இத இப்படியே விட்டுடுங்கன்னு எங்க தலைவர் சொன்னபிறகும் எங்க பசங்க சிலபேர் அப்பாவி வெள்ளைக்கார மக்களை துன்புறுத்திட்டு வந்தாங்க.. இதுக்கு என்ன சொல்றது? நீ மனசு கஷ்டப்படாத பேப்ஸ். நிச்சயம் மனிதர்கள் சகமனிதர்கள் எல்லாரையும் அன்போட பார்க்குற காலமும் வரும்” ஆறுதல் கூற மொழியின் முகத்தில் புன்னகை மீண்டிருந்தது.

அவளது புன்னகையில் மகிழ்ந்தவன் “யா.. நவ் யூ ஆர் லுக்கிங் லைக் மை கரீபியன் லில்லி. எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கனும் ஓகே” என்றவன் கை கொடுக்க, அவனது கைகளை பிடித்து மகிழ்ச்சியோடு எழுந்தவளின் முன்பு, முகமெல்லாம் சிவக்க கோபத்துடன் வந்து நின்றான் வில்.

“இன்னும் இங்க என்ன பண்ற சில்க்கி?” என்றவன் டேனி பிடித்திருந்த கையை பிடித்து தன் பக்கம் இழுக்க, அவனது கையை உதறியவள்,

“வா டேனி போகலாம்” மீண்டும் அவன் கையை பிடித்துக்கொண்டு தங்களது டிபார்ட்மெண்டிற்கு அழைத்துக்கொண்டு நடந்தாள்.

“ம்ஹூம் நில்லு லில்லி” டேனி அவளை பிடித்து நிறுத்தியவன், அவர்கள் பின்னால் வந்த வில்லியமிற்காக நிற்க வைத்துவிட்டான்.

“இந்த ஐஸ்பேக்க வச்சுக்கோ டேனி. ப்ளட் அரெஸ்ட் ஆகிடும். அங்க உன் நண்பர்கள் முதலுதவி பெட்டியோட அங்க வெயிட் பண்றாங்க” என்றதும் ஒரு புன்முறுவலுடன் அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றான் டேனி, மொழியிடம் ” கோபப்படாதே பேப்ஸ்” என்ற கண்சிமிட்டலோடு.

“இன்னும் அஞ்சுநிமிஷம் இங்க நின்ன உன் வாயிலயும் இரத்த அருவி கொட்ட வச்சுருவேன். ஓடிப்போயிடு டேனி” என்ற மிரட்டலோடு வில்லியமின் புறம் திரும்பினாள் மொழி.

அவன் சென்றதும்,” ஹேய் எதுக்குடி அவன்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுற? என்கையை தட்டிவிடற? என்மேல எதுக்குடி கோபப்படுற?” கேள்விக்கணைகளால் வில் துளைத்து எடுக்க, முகத்தை திருப்பிக்கொண்டாள் மொழி.

” ஐ நீட் ஆன்சர். திரும்புடி” என, லஞ்சப்ரேக் முடிந்து மணி ஒலிக்க ஆரம்பித்தது.

“ப்ரேக் முடிஞ்சது. நா போறேன் போ” என்றவள் முறுக்கிக்கொண்டு கிளம்ப, தானும் அவளுடனே நடந்தான் வில்லியம்.

“லூசா நீ? அவதார்..‌நீ எதுக்குடா என் க்ளாஸ் ரூம் வர?” என்றவள் சண்டைக்கு வர,

“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலியே?” அசரவில்லை அவனும்.

“இப்படி அநியாயம் நடக்குது. நான் பார்த்துக்கறேன்னு நீ இந்த பிரச்சனையை அசால்ட்டா இவ்வளவு தூரம் விட்டு வச்சுருக்க?? லீகலா கம்ப்ளெய்ன்ட் பண்ணியிருக்கலாமில்லை?” நியாயத்தை தட்டி கேட்கும் காரிகையின் கேள்வியில் பெருமையாக உணர்ந்தான் வில்லியம்.

“இதுக்குதான் கோபமா? இவங்க முதல்ல பெரிய கேங்கா இருந்தாங்கடா சில்க்கி. இப்ப இருக்கிறது வெறும் ஆறுபேர் தான். எப்படின்னு நினைக்கிற? ” என்றான் அவனும்.

அவனின் பதிலில் அவள் ஆச்சரியமாக பார்க்க, ” ஆமா. இவங்க மேல இங்க கம்ப்ளெயின்ட் குடுத்தா.. அத ஸ்டுடன்ட்ஸ் ப்ராப்ளம் ஆக்கி, கேம்பஸ்ல பல பிரச்சனைங்கள பண்ணிகிட்டே இருக்காங்க.

அதனால் நாங்க ஒரு ஐடியா பண்ணி ஸ்டூடன்ஸ் செல் அமைச்சோம். கேம்பஸ்கு வெளியே இவங்க ஆக்டிவிட்டிஸ் கவனிக்குறதுதான் அவங்க வேலை. இங்க பண்ற இதேவேலையதான் இவங்க வெளியவும் பண்ண ஆரம்பிச்சாங்க. அதை நாங்க போலிஸ் கவனத்துக்கு கொண்டு போயிடுவோம். இவங்க கேங்க்லீடர் கூட இப்ப ஜெயில்லதான். இப்படி கொஞ்சம் கொஞ்சமா இந்த ப்ராஸஸ் போயிகிட்டிருக்கு” என்றவனின் நீண்ட விளக்கத்தை வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தாள் மொழி.

அவளது செயலில், அவளது இதழ்கள் அவனிடம் தனிக்கதை பேச, அவளை பிடித்து உலுக்கியவன்,” சாக்லேட் சாப்பிடுவோமா சில்க்கி?” என்றான். அவனின் கேள்வியில் தன்னிலைக்கு திரும்பியவள், ஓங்கி அவனின் காலில் மிதித்தாள்.

“ஆஆஆஆ..ஏண்டி இப்படி பண்ணே?” ஒருகாலை பிடித்து வில்லியம் குதிக்க,

” நல்லா வலிக்கட்டும். எப்ப பாரு சாக்லேட்டா? இனிமே நான் ஏமாறமாட்டேன்டா அவதார்” கத்திவிட்டு தனது வகுப்பறைக்கு ஓடிவிட்டாள் மொழி.

” கொல்றியேடி சில்க்கி” அவள் ஓடும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான் வில்லியம்.

ஏந்துவாள்💘💘💘….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 14 சராசரி: 4.1]

4 Comments

Leave a Reply
  1. Enda country ah irundalum inda problem iruka Dan seiudu, mudalla manidanai manidana ninaicha eduvum varadu adai purimjikama irukamga, William super da nee, nice update rudhi dear thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent Author

கொஞ்சும் வண்ண காதல் 1

6. உனது விழிகளின் வழியே எனது தேடல்..!