in

தூரிகையென வந்தவன் 2

உனக்காக காத்திருக்கிறேன்

உன் கண்ணின் ஈர்ப்பில் அகப்பட்டுநான் சிக்கி தவிக்கும்  அந்த நொடிக்காககாத்திருக்கிறேன்டா..

இப்படிக்கு 

சித்தார்த்தவி..!!!

என எழுதி முடித்து அதை பதிப்பித்த உடனே அவளிற்கு விமர்சனங்கள் வர ஆனந்த அதிர்ச்சியடைந்தாள்..  மூரித்திகண்ணன் என்றவரின் “சூப்பர் டா” என்ற விமர்சனமும், அடுத்தடுத்து அந்த தளத்தின் சொந்தங்களின் விமர்சனங்களும் வர அனைத்திற்கும் பதில் அளித்தவளின் இதழில் அழகிய சிரிப்பு ஒட்டிக் கொண்டது..அந்த தளத்தில் அவளை பாலோவ் செய்பவர்கள் குறைவே என்றாலும் அவளுக்கு வரும் விமர்சனங்கள் மற்றும் பார்வையாளர்கள் வைத்து அத்தனை சந்தோசம் அடைந்தாள். 

“அம்மா… இவை போனையே பார்த்துட்டு சிரிச்சுட்டு இருக்கா மா.. என்னனுக் கேளுங்க…” என்ற தன் தங்கை தர்ஷினியின் குரலில் தன்னிலைக்கு வந்தவள்

“அம்மா இவ பொய் சொல்றாமா…” என்றவாறே தன் தங்கையைப் பார்க்க அவளோ சிரித்துக்கொண்டே ஆர்த்தியை நக்கலாகப் பார்க்க கடுப்பானவள் அவளை துரத்த அங்கு ஒரு பிரளயமே நடக்க ஆரம்பமாக 

“ஏய்ய… எதுக்கு இப்போ ரிக்கார்டு டேன்ஸ் ஆடற கூட்டம் மாதிரி ஆட்டிட்டு இருக்கிங்க.. ஆர்த்தி… இன்னைக்கு உனக்கு இன்டெர்வியூ, ஞாபகம் இருக்குல்ல சீக்கரம் கிளம்பு…” என தன் தாயின் குரலில் நடக்க இருந்த பிரளயத்தை பாதியில் நிறுத்தியவள்

“சரி மா…” என கூறியவள் சற்றே அங்கிருந்து நகர அவளின் தாயின் குரலில் நின்றாள்

“இங்க பாரு ஆர்த்தி. இப்பவும் சொல்றேன், எனக்கு நீ இந்த படிப்பு படிச்சது கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை..இருந்தாலும் நீ ஆசைப்படறன்னு தான் உன்னைப் படிக்க வைச்சேன். இப்ப அதே படிப்புல வேலைக்கும் அனுப்பற.. நான் சாமிக்கிட்ட வேண்டிட்டே  இருக்கேன் டி உனக்கு இந்த வேலைக் கிடைக்க கூடாதுன்னு. அப்படி கிடைக்கலன்னா நூறு தேங்கா ஓடைக்கறதா வேண்டி இருக்கேன்..” என்ற தாயின் சொல்லில் கடுப்பானாள் ஆர்த்தி. 

“நல்லா வேண்டிக்கோ.. நல்லவங்க சொல்றதே இப்பெல்லாம் சாமி கேட்கறது இல்லை.. நீ சொல்றது எல்லாம் எங்க கேட்க போகுது…” என கூறியவள் அடுத்த நொடி தன் அறை கதவை இழுத்து சாத்திக் கொள்ள அவளின் அறைகதவில்  டனீர் என்ற சின்ன சத்தத்தில் விழுந்தது குழம்பு கரண்டி…

அறைகதவை இழுத்து சாத்தியவள் பெருமூச்சுடன் திரும்ப அங்கு அமர்ந்திருந்த  தன் தங்கையைப் பார்த்தவள்  “ஏய் நீ எப்போ டி இங்க வந்த…” எனக் கேட்டவாறே அவளின் அருகில் அமர்ந்தாள் ஆர்த்தி.. 

“அம்மா உன்னை திட்டும் போதே வந்துட்டேன்.. இன்னும் கொஞ்சம் நேரம் நான் அங்க இருந்தா எனக்கும் திட்டு விழும் அதான் ஓடி வந்துட்டேன்…” எனக் கூறியவளின் தலையில் தட்டியவாறே

“உஷாரு டி நீயெல்லாம்…” என கூறியவளை முறைத்தவள்

“ஏய் எதுக்கு டி அடிச்ச பன்னி மாடு.. ஒண்டி தீனி.. எனக் கத்திய தன் தங்கையின் வாயை அடைத்து 

“கத்தி தொலைக்காத வீரமங்கை வேலுநாச்சி இங்க வந்துச்சு.. மறுபடியும் புராணம் படிக்க ஆரம்பிச்சுடும்…” எனக் கூறியவள் தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு நுழைந்து கொண்டாள்.  

“போனா போகுது பாவம் பார்த்து விடறேன்…” எனக் கூறிய தர்ஷினி படுக்கையில் படுத்தவாறே   தன் அக்கா எழுதிய கவிதைக்கு விமர்சனம் அளித்துக் கொண்டிருந்தாள். 

“ச்சே அக்க்கா… உனக்குள்ள இவ்ளோ திறமையா.. இப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். நான் சொன்னக் கவிதையை காபி பண்ண கிறுக்கி…”  என்ற விமர்சனத்தை அனுப்பிவிட்டு நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டாள்.

****************

“டேய்…. சித்து… எழுந்து தொலை டா.. காலையில பத்து மணி வரைக்கும் தூங்கனுமா நீ.. எழு டா.. இன்னைக்கு உன் ஆபீஸ் போகலையா.. பாவம் சின்னா அண்ணா.. நீ இல்லாத போது சரி இப்பவும் சரி அவரு தான் எல்லாம் பாக்கறாங்க.. எழு…” என்றவாறே தன் தமையனை எழுப்பிக் கொண்டிருந்தாள் அவனின் தங்கை. அதற்கெல்லாம் அசராமல் உறங்கி கொண்டிருந்த சித்துவின் மேல் தண்ணீர் மக்கை கவிழ்த்தியவள் ஒரே ஓட்டமாக அவனின் அறையிலிருந்து ஓட ராணியம்மா வருவதை கவனிக்காமல் அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடியவள் ராணியம்மாவின் கத்தலைக் கூட காதில் வாங்காமல் தன் அறைக்குள் நுழைந்தவளை கழுவி ஊத்தினார்.

“அடியே சீ…றுக்கி…மவ கிறுக்கி.. என் இடுப்பை இப்படி ஓடைச்சு போட்டுட்டு ஓடறயே உன்னையெல்லா…” என தொடங்கியவர் வாயில் வந்தெல்லாம்  திட்டி கொண்டிருக்க அவரின் திட்டு தன் பேரனின் வருகையில் நின்றது.

தலை முழுவதும் தண்ணீர் சொட்ட சொட்ட வந்து நின்றப் பேரனைப் பார்த்த  ராணியம்மா.. ” ஐயோ ராசா.. என்ன டா சாமி இப்படி மழையில நலைஞ்ச கோழி மாதிரி வந்து நிக்கறவ..” என இடுப்பைப் பிடித்தப்படியே  கேட்டப் தன் பாட்டியை கை பிடித்துத் தூக்கி விட்டவன் 

“அந்த குட்டிச்சாத்தான் தான், இப்படி பண்ணிட்டா பாட்டி…” என தூக்கக் குரலில் கூறியவனின் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை ராணிமாக்கு…

“என் ராசா… இம்முட்டு அழாக இருக்கான்…” எனக் கூறியவாறே திருஷ்டி கழித்தவர்.

“வா டா ராசா அந்த சீறுக்கியை ஒரு வழி பண்ணிட்டு வரலாம்…” எனக் கூறியவரின் தோளில் சாய்ந்தவாறே தன் தங்கையின் அறையை நோக்கி நடக்க.. அவலறைக்கு அருகில் சென்றதும் 

“பாட்டி ஒரு நிமிஷம்..” எனக் கூறியவன் அருகில் இருந்த பூ ஜாடியில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டான்.. 

“இப்போ தட்டுங்க பாட்டி…” எனக் கூறியவன்  கதவின் ஓரத்தில் நின்று கொண்டான். 

“ஏய் வெளிய வாடி.. அடியே வெள்ளை சிறுக்கி.. கழுத.. வெளிய வாடி..” என கிழவியின் கத்தலில் வெளிவந்தவள்.”ஏய் கிழவி.. கத்தறத..” என கூறக் கூறவே.. பூ ஜாடியில் இருந்த அழுக்கு தண்ணியை அவளின் தலையில் கொட்டினான் அவளின் பாசமலர் “டேய்…” என கத்தியவள் பூ ஜாடியில் இருந்த வழவழப்பான தண்ணியைப் பார்த்து “ஏய்.. ச்சி… ய்யாக்கு.. என அஷ்டக் கோணலாக முகத்தை வைத்தவள் அடுத்த நொடி மற்றோரு ஜாடியில் தண்ணீரை எடுக்க அங்கிருந்து பறந்தான் சித்து. அவன் கையில் சிக்காத கோபத்தில் அங்கிருந்த  கிழவியின் தலையில் ஊற்றியவள் சட்டென்று கதவை சாற்றிக் கொள்ள வழக்கம் போல் திட்டி தீர்த்தாள் பெரியவள்.

****************

“ஹலோ சார்… இங்க எம்.டி ரூம் எங்க இருக்கு..” என அருகில் இருந்தவனை கேட்க

அவனோ அவளை கீழிருந்து மேலாக  ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் கீழ் குனிந்து கொண்டவன் தன் மொபைலை நோண்ட ஆரம்பித்தான்

“கருவாயணுக்கு  ஏகத்தாளத்த பாரேன்..” என முனகியவள் அவனின் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.. 

“டேய். சின்னா.. எங்க டா இருக்க… எவ்ளோ நேரம் வையட் பண்றது…” என கத்தியவாறே எழுந்து சென்றவன்  எம்.டி என்று எழுதப்பட்ட அறைக்குள் நுழைந்தான். 

“நீ ஏன் டா வையட் பண்ற.. உள்ள வரவேண்டியது தானே. உன்னோட ஆபிஸ்.. நீ உள்ள வரதுக்கு என்ன.. இதுல என்னோட பர்மிஷன் கேட்டு உள்ள வரனாம். டேய் உங்கப்பன் இருக்கும் போது இப்படி சொல்லீறாத டா.. என்னை வெட்டி போட்டாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை..” எனக் கூறிய சின்னாவை முறைத்தான் சித்தார்த்.

“சரி சரி முறைக்காத இன்னைக்கு ஒரு பொண்ணை இன்டெர்வீயுக்கு வர சொல்லி இருக்கே அபி.. அந்த பொண்ணு ரொம்ப டேலண்ட்டான பொண்ணு..பொண்ணுங்கள கடலைப் பத்தி அதிகம் படிக்க மாட்டாங்க.. ஆனா இந்த பொண்ணு மேரீன் பைலோஜி படிச்சு இருக்கு.. நமக்கு தெரியாத விஷயங்களை கூட புட்டு புட்டு வைக்கும்.. எனக்கு இவளை இன்டெர்வீயு எடுக்க போயி அவ்ளோ ஆச்சரியம்.. சோ அதான் வர சொல்லிட்டேன். நீ ஒரு தடவைப் பார்த்துடு.. என்னை பொறுத்தவரை அந்த பொண்ணை மிஸ் பண்ண வேண்டாம்னு தான் சொல்லுவேன்..” என அழுத்தமாக சின்னாக் கூற… 

“யாரு டா.. நீயே புகழ்ந்து தள்ளற அளவுக்கு அறிவாளி…” என சித்தார்த் அறியும் ஆவலில் கேட்க

“இப்போ தான் வந்தாங்க.. உன்கிட்ட என்னமோ கேட்ட மாதிரி இருந்துச்சே..” என சின்னா கேட்க.

“அடிங்க நாயே.. நான் வையட் பண்றது தெரிஞ்சு தான் நீ பிஸியா இருக்கற மாதிரி ஸீன்  போட்டயா…” என பொய் கோபத்துடன் கேட்டவனை பார்த்து சிரித்தவன் பின்ன என்ன டா… எம். டி நீயே லேட்டா வந்தா என்ன பண்றது அதான் உனக்கு பனிஸ்மெண்ட் கொடுத்தேன்…” என கூறியவனை முறைத்தவன் “உனக்கு அப்பறம் இருக்கு.. அந்த பொண்ணை வர சொல்லு…” எனக் கூற

அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டேஆர்த்தியை வர சொல்ல உள்ளே வந்தவள் சற்றே அதிர்ச்சியை விழிகளில் காட்டிவாறே நிற்க

“என்ன அப்படி நீக்கறீங்க.. நீங்க என்னை கருவாயான்னு சொன்னது எனக்கு காதுல விழவே இல்லை.. உட்காருங்க…” சித்துக் கூற

தன் முனகியது அவன் காதில் விழுந்துவிட்டது என சற்றே பயந்தாலும் அவனை பார்த்து இளித்தவள் அவன் எதிரில் அமர்ந்தாள்.

“சாரி.. சார்..” என அவள் கூற.

“ம்ம்ம்…” 

“உங்களை அதிகமா எந்த கேள்வியும் நான் கேட்க மாட்டேன்.. ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க…”எனக் கூற

சரியென தலையை ஆட்டினாள் ஆர்த்தி.

“கடல் தண்ணி ஏன் உப்பா இருக்கு…”என சித்து முகத்தை தீவிரமாக வைத்து  கேட்க 

“தண்ணியை குடித்துக் கொண்டிருந்த சின்னா. வாயில் இருந்த நீரைக் கீழே துப்பியவாறே சிரித்தவன் 

“ஆர்த்தி. நீங்க போங்க. நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிக்கோங்க..”என சின்னா கூற

“நன்றி..”  எனக் கூறியவள் சித்துவை முறைத்தவாறே அங்கிருந்து நகர  

அவளைப் பார்த்து வாய்விட்டு சிரிக்க அவனின் சிரிப்பு சத்தம் வெளியில் கேட்க.. அவனை கழுவி ஊத்திக்கொண்டே  அங்கிருந்து நகர்ந்தாள்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Contributor

Written by Bhuvana mathesh

Story Maker

விதியின் சதி 10

காதல் அடைமழை காலம் – 05