in

விதியின் சதி 10

                                    சதி 10

கலையை உள்ளே அழைத்துச் சென்ற மதி கதவை தாளிட்டு அவளை ஓர் அறை அறைந்தாள்.

மதியின் இந்த எதிர்பாராத செயலால் கலை திடுக்கிட்டாள். அவள் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் இப்பவோ அப்பவோ விழுவேனா என்றிருக்க, மதியை நோக்கினாள்.

கண்ணீர் துளிகளின் புண்ணியத்தால் சற்று மங்கலாக தெரிந்த மதியின் உருவம் அந்நிலையிலும் ருத்ர தாண்டவமாக தோன்ற கண்களை துடைத்தபடி மீண்டும் நோக்கினாள்.

அப்போது இன்னும் பயங்கரமாக தோன்ற, அதில் இவள் செய்ய முற்பட்ட காரியத்தை மதி கண்டு கொண்டாள் என்று அறியவும், ஓடிச்சென்று அவளை கட்டிக்கொண்டு அவளின் தோளில் முகம் புதைத்து அழுதாள்.

“ என்னைய மன்னிச்சுடுடி…எனக்கு அப்ப வேற வழி தெரியல. உன்னையே மாதிரி வளைஞ்சு குடுத்து போக எனக்கு தெரியல.” என்று கட்டிக்கொண்டவாறே அழுக, அவளின் கண்ணீரைத் துடைத்தாள் மதி.

“ இங்க பாருடி …கலை…என்னைய பாருடி…” என்று அவளின் முகத்தை நிமிர்த்தினாள்.மதியின் கண்களில் இருந்த அன்பில் தாயைக் கண்டவளின் மீண்டும் கலங்க அதை துடைத்த மதி “ நான் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போறேனு யார் சொன்னா…அதுனால தான் நேத்து இந்த விசயத்தை என் கிட்ட மறைச்சயா?…” என்று கேட்டிட,

இவளோ என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.

மேலும் தொடர்ந்தவள், “ நீயும் மத்த எல்லாரையும் மாதிரி தான் என்னைய நினைச்சுட்டு இருக்க.” என்று கண்களில் நீர் வடிய கேட்டவளின் முகம்தனை கண்ட கலையின் மனதில் ஒரு வலி உண்டானது.

அதனை மறைத்தவள், “ அப்படி எல்லாம் இல்லடி, உன் கிட்ட சொல்லி உன்னையும் ஏன் கஷ்டப்படுத்துவானேன் னு தான் சொல்ல ல…”

“ அதை விடு… நேத்து உன் ஆபிஸ் ல என்ன நடந்துச்சு. வீட்ல நான் வரதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு. உண்மையை சொல்லு.”

கலையும் ஆபிஸ் நடந்தவற்றைக் கூற, மதியின் முகம் மாறிக்கொண்டே வந்தது. அதை கவனிக்காத கலை, மேலும் தொடர்ந்தாள்.

“ வீட்டுக்கு வந்த எனக்கு  என்ன பண்றது னு தெரியல மதி… அதான் இப்படி பண்ண நினைச்சேன்” என்று தான் தற்கொலைக்கு முயன்றதைக் கூறினாள்.

நேற்று அலுவலகத்தில் இருந்து வந்ததும், கட்டிலில் முகம் புதைத்து அழுத கலையின் மனதில் ஆண்களைப் பற்றி தவறான எண்ணம் வந்தது.

‘ நாம் எங்கு சென்றாலும் சுதனைப் போல ஆண்கள் இருக்கத்தான் செய்வார்கள். வேலையை விட்டு வீட்டிற்கு சென்றாலும் இது தொடராது என்று என்ன நிச்சயம். ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் வெறும் போகப் பொருள் தானா ’

என்று மனம் போன போக்கில் எண்ணியவள், அவளின் தந்தையும் ஓர் ஆண் என்பதை மறந்து விட்டாள்.

தன் டைரியை எடுத்து மனக்குமுறலை கவிதை வரிகளாக கொட்டியவள்,

திரும்பும் திசையெங்கும்திருடர்கள் ராஜ்ஜியமே….திருட நினைப்பது பொன்னல்லவே…விட்டுவிட,திவ்யமான எனது பெண்மையை…திருட்டிற்கு பயந்து திசை மாறாது, காமத்தினவிற்கு பலியாகாமல் என்னையே பலியாக்கிக்கொண்டேன்…

கூடவே தன் தாய் தந்தையருக்கு ஒரு கடிதம் எழுத முற்படும் வேளையில் தான் மதியின் அலுவலகத்திருந்து அழைப்பு வரவும் இதனை மறந்து போனாள்.

மறந்தவள் இதனை மறைக்கத்தவறியதால், மதியின் கண்களில் பட்டு இப்போது குற்ற உணர்ச்சியில் மருகிக்கொண்டு  இருக்கிறாள்.

“ நான் சொல்லக்கூடாது னு நினைக்கல மதி…அதுக்குள்ள உன் ஆபிஸ் ல இருந்து போன் வரவும் எனக்கு எல்லாம் மறந்துடுச்சு. எப்படியாச்சும் இந்த வேலைல சேரணும் னு தான் முயற்சி பண்ணேன். “ என்றவள் தமிழ் மீதான தன்  எண்ணத்தை கூற தவறினாள்.( சொல்லி இருந்தால் ஒரேடியாக பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருக்குமோ என்னவோ )

“ பரவாயில்லை விடு… இன்னைக்கு என்ன நடந்தது… ஈவ்னிங் ஏன் டல்லா இருந்த ?”

“ காலையில இருந்து டென்சனா… இன்டர்வியூ முடிச்சிட்டு இன்னைக்கே ரிசைன் பண்ணலாம் னு தான் ஆபிஸ் போனேன். ஆனால் அங்க சுதன் வேற எதையோ பேசி மைண்ட் டைவர்ட் பண்ணிட்டார். ஈவ்னிங் ஹோட்டல்ல பேசிட்டு இருக்கும் போது வாமிட் வந்திடுச்சு. அப்படியே கிளம்பிட்டோம். நீயும் வந்துட்ட. அவ்வளவு தான்…”

“ அவ்வளவு தான் டி… ஆங்… நேத்து சுதன் என் கிட்ட லவ் பண்றதா சொன்னார். ப்ரோபோஸ் பண்ணும் போது போட்டு விட டைமண்ட் ரிங் வாங்கிட்டு வந்திருந்தார்”

“ ஆளு எப்படி டி…?”.

“ ஆள பத்தி ஆபிஸ் ல கொஞ்சம் அப்படி இப்படி னு தான் பேசுறாங்க. ஆனால் நேத்து அவர் என் கிட்ட பேசும் போது அப்படி தெரியல டி…ஏன் இப்ப இதை கேட்குற…”

“ காரணாமாத்தான். ரிசைன் லெட்டர் குடுத்துட்டயா?”

“ இல்லடி… நாளைக்கு தான் குடுக்கணும்…”

“ ஓகே … எனக்கென்னவோ சுதன் உன் கிட்ட நடிக்குற மாதிரி தெரியுது. எதுக்கும் ஜாக்கிரதையா இரு “ என்றவள் சுதனின் செயலைப் பற்றி சொல்லாமல் மறைத்து விட்டாள்.

(சொல்லி இருந்தால் கலை சுதாரித்திருப்பாளோ என்னவோ… காதலைச் சொன்னவன் கண்ணியமானவனாக இருப்பான் என்று தப்பாக எண்ணிக்கொண்டு விட்டாள்.)

மேலும் தொடர்ந்த மதி, “ இன்னொரு குட் நீயூஸ் டி… நீயும் இனி என் டீம் தான்…”

“ என்னடி சொல்ற… என்னால நம்பவே முடியல…சீக்கிரம் ரிசைன்  பண்ணணும்.அப்பதான் இங்க ஜாயின் பண்ண முடியும்.”

“ என்கென்னவோ சுதன் உன்னையே ஈசியா ரிலிவ் பண்ண மாட்டான் னு நினைக்கிறேன். எதுவானாலும் சொல்லு. அப்ப தான் தமிழ் சார் கிட்ட சொல்லி வேற வழி பாக்க முடியும். ஓகே வா”.

தமிழ் பெயரைக் கேட்கவும் திடுக்கிட்ட கலை,  பின் சுதாரித்து “சரி டி…எனக்கு டயர்டா இருக்குடி… நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன் “ என்று கூறி விட்டு உறங்கச் சென்றாள்.

மதியோ கலையை எப்படியாவது சுதனின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்று யோசித்தபடியே டைனிங் டேபிளில் உட்கார்ந்து யோசித்தாள்.

சுதன் மதியின் கையை வருடும் போதே சற்று சந்தேகித்தவள் , இப்போது அவன் கலையை காதலிப்பதாக கூறியதை கேட்கவும் அவளின் சந்தேகம் ஊர்ஜிதயானது.கலையின் வாந்திக்கும் சுதனுக்கும் கூட ஏதாவது தொடர்பு இருக்கலாம் என்று யோசித்தவாறே உறங்கி விட்டாள்…

                                                   சதி தொடரும்….

(விதி மதியுடன் சேர்ந்து தன் ஆட்டத்தை துவக்கி விட்டது)

அடுத்த பதிவு நாளை…

                                       வெற்றி வேந்தன்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Contributor

Written by வெற்றி வேந்தன்

தீராத காதல் தமிழ் உரை நடை வாசிப்பின் மீது

 

கதை படிப்பேன். வரலாற்று புதினம், மர்ம கதைகள்‌ ஆன்மீக கதைகளை விரும்பி படிப்பேன். நான் இங்க வாசிக்க மட்டும் தான் வந்தேன். சில நேரம் தோணுறத எழுதுவேன்.

 

மனசுல இருக்குற கோபத்தை கதையா சொல்லிட ஆசை....

 

 

பெரிசா சொல்ற படி நான் பெரிய ஆள் இல்லை.

 

சிம்பிளா சொன்னா நான் ஒரு அரைவேக்காடு.

அவ்ளோதான்...

Mail id : [email protected]

Story MakerContent Author

அழகிய அசுரா 46

தூரிகையென வந்தவன் 2