in , ,

அழகிய அசுரா 46

அழகிய அசுரா 46

தன்னையே முறைத்துக்கொண்டிருக்கும் பவித்ராவை பார்த்து எச்சில் கூட்டி விழுங்கிய அஷ்வின் ” ஐயோ இவ சும்மானாலே சாமி ஆடுவாளே ….இதுல இதுக்கு என்ன பண்ண போறாளோ ”  என்று மனதுக்குள் அலறியவன்.வெளியில்….

” ஹி..ஹி.. வா பவி ” என்றவன் ” என்ன அதுக்குள்ள வந்துட்டே ” என்று ஒன்றும் அறியாதவன் போல சாதார்ணமாக வினவ …

அதில் கோபத்தின் உச்சிக்கே சென்றவள் அவனருகில் வந்து அடி மொத்தி எடுத்துவிட்டாள் …அவனை ஒவ்வொரு முறை அடிக்கும்போதும் ” நான் அழுறது உனக்கு சிரிப்பா இருக்கா ….இப்ப நீ அழு ” என்றவாறு அவனை கதற கதற அடி வெளுத்து விட்டாள்.

தன் மனம் திருப்தி பெறும் வரை அவனை அடித்தவள் பின் ஓய்ந்து அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து மீனாட்சி , சரண்யா , அஷ்வின் என மூவரையும் வெறியாய் முறைத்தாள்.

அவர்க்ளோ இப்படி கையும் களவுமாய் பிடிபட்டுவிட்டோமே என திருதிருத்துக்கொண்டு இருக்க அஷ்வினோ ” ஐயோ இவ என்ன பஸ்டுல இருந்து முறைக்குறா …ஆதா ஆச தீர அடிச்சிட்டாளே இதுக்கு மேல அடிவாங்க எனக்கு தெம்பில்லமா தாயே ….மீ …பாவம் ” என மானசீகமாய் அவளிடம் கெஞ்சியவன் வெளியில் பாவமான முகத்துடன் அவளை பார்த்து வைத்தான்.

அனைவரையும் ஒரு பார்வை பார்த்த பவித்ரா ” சோ….எல்லாமே டிராம இல்லையா ” என்று கேட்க…

அதில் பதறிய மீனாட்சி எங்க இதை காரணமாய் வைத்து வீட்டிற்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடுவாளோ என்று பயந்து ” இல்ல பவி மா …எல்லா உன் நல்லதுக்கு தான் டா செஞ்சோம் …இதுனால நீ எடுத்த முடிவ மாத்திக்காம நம்ம வீட்டிக்கே பழையபடி வந்திடுடா ” என்று கேட்க…

அதில் சம்மந்தமே இல்லாமல் விழுந்து விழுந்து சிரித்தாள்….பவித்ரா ..

அவள் சிரிப்பதை எல்லோரும் ஙே என்று பார்க்க அஷ்வினோ ஒரு படி மேலே போய் ” என்ன இவ சம்மந்தமே இல்லாம சிரிக்கிறா ஒரு வேளை நாங்க நடத்துன டிராமாவ பார்த்து அதிர்ச்சி ஆகி பைத்தியம் ஆகிட்டாளோ ” என்று அவளை யோசனையுடன் பார்க்க.

சிரித்து முடித்த பவித்ரா மீனாட்சியை பார்த்து ” ஐயோ மீனா குட்டி நீங்க என்ன வானு சொன்னா நான் வர போறேன் அதுக்கெதுக்கு பிளீஸ் எல்லாம் சொல்லிகிட்டு என்றவள் ஆனா உங்களுக்கு ஹார்ட் அட்டேக்னு நினைச்சு நான் எவ்வளவு பீல் பண்ணேன் தெரியுமா அதுவும் அதெல்லாம் வெறும் நடிப்பு தான்னு தெரிஞ்சதும் அப்பிடி ஒரு கோபம் வந்திச்சு அதா என் கோபத்தை எல்லாம் சேர்த்து வச்சு இந்த அஷ்வின வாங்கு வாங்குனு வாங்கிட்ட …தென்  ரிலாக்ஸ் ஆகினப்புறம்  …என்ன நீங்க எல்லாரும் சேர்ந்து  டிராமா போட்டு பயம்புடுத்துன மாதிரி நம்மளும் அப்படி ஒன்ன போட்டு உங்கள பயம்புடத்தலாம்னு கொஞ்சம் டிரரா பேசுனா அதுக்குள்ள நீங்க பீளீஸ்னு சொல்லி ஆப் பண்ணிட்டீங்க ”  என்றவாறு அவள் புன்னகைக்க.

அதில் அவளை பார்த்து ” நான் இந்த பிளான் வேண்ணாம் தான் டா சொன்னேன் …இந்த விளங்காதவன் தான் இல்ல எமோஷனலா அட்டாக் பண்ணா தான் அவ உடனே வீட்டுக்கு வர ஓகே சொல்லுவானு என்னனென்னமோ சொல்லி என்ன நடிக்க வச்சான் நானும் வேற வழியில்லாம அரைமனசா நடிச்சேன் ” என்று அசால்டாய் அஷ்வினை கோர்த்து விட..

அதில் அவள்  மீண்டும் திரும்பி அஷ்வினை முறைக்க ..இப்போது வெளிபடையாகவே ” ஐயம் வீக் பாடி… இதுக்குமேல அடிச்சா சத்தியமா தாங்காது சோ பிளீஸ் கொஞ்சமாச்சும் கேப் விட்டு உன்னோட டூட்டிய பார்த்த நல்லா இருக்கும் ” என்று சொல்ல 

பவி ” இல்லைனா என்ன பண்ணுவ???? “

அச்சு “கொலை விளும்!!! “

பவி  ”  என்னாது ..???!!!”

அச்சு ” நான் என்ன சொன்னேன் மா ” என்று அவன் குமுறி குமிறி அழுவது போல் நடிக்க..

அதை பார்த்து உதடு கடித்து சிரிப்பை அடைக்கியவள் அவனிடம் ” அது !!” என்றாள் கெத்தாக…

பின் மீனாட்சியிடம் திரும்பியவள்…..

அவர் இதில் கலந்துகொள்ளாமல் ஒரு வித பதட்டத்தோடு இவளை பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து அவர் கவலை புரிய தன் கை கொண்டு அவர் கையை அழுத்தமாக பற்றியவள்.” இங்க பாருங்க மீனா குட்டி …..நீங்க இவ்வளவு கஷ்டபட்டு டிராம போட்டத்து எல்லாம் என் மேல உள்ள அக்கரை தானு எனக்கு நல்லா தெரியும் என்றவள் அக்சுவலி நான் உங்க கிட்ட அப்போ சொன்ன மாதிரி உங்க பையன கொஞ்ச நாள் பழிவாங்கிட்டு என் மனசு ரிலாக்ஸ் ஆன அப்புறம்  நானே அங்க வரலாம்னு தான் இருந்தேன் …என்று கூறி நிறுத்தியவள் மீனாட்சியை பார்த்து.

ஆனா என்ன பத்தி மட்டும் யோசிச்ச நான் உங்க எல்லாரோட பிலீங்ஸ்சையும் சுத்தமா மறத்துட்ட …என் மேல எவ்வளவு பாசம் அக்கரை இருந்தா உங்க கிட்ட சொல்லாம கொள்ளாம வீட்ட விட்டு ஓடி போய் எந்த தகவலும் கொடுக்காம உங்கள தவிக்க விட்டு ஆறு வருஷம்  கழிச்சு  வந்த அப்புறம் கூட அந்த பாசம் கொஞ்சம் கூட குறையாம என்  நலன் …என் வாழ்கைகாக  … இப்படி உங்களோட ஸ்டேடஸ் அண்ட் மரியாதையை மறந்திட்டு இன்னிக்கி எனக்காக நான் வீட்டிக்கு வரனும்கிற ஒரே காரணததுக்காக உங்களுக்கு ஒத்துக்கவே ஒத்துக்காத ஹாஸ்பிட்டல் வாசத்துல இவ்வளவு நேரம் டிராம போட்டிருக்கீங்க …என்று மூச்சிவாங்க பேசியவள் மீனாட்சியை பார்த்து ..

அப்பிடி எனக்கு பார்த்து பார்த்து என் மீனா குட்டி போட்ட டிராமாவ நான் சொதப்ப விட்டிடுவேனா என்று கூறி கண்ணடித்தவள் …..எஸ் நானும் உங்க கூடையே நம்ம வீட்டுக்கு வர போறேன் அதுவும் இன்னைக்கே …அங்க வந்து உங்க பையன முன்ன சொன்ன மாதிரியே அச தீர பழிவாங்க போறேன் நான் கொடுக்கிற டார்ச்ரல அவரை துண்ட காணும் துணிய காணும்னு ஓட வைக்கல என் பேரு பவித்ரா இல்லை என்று கூறி முடித்தவள் பின் நியாபகம் வந்தவளாக …

” ஆங் மீனா குட்டி …எனக்கு நீங்க அதுல ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லியிருக்கீங்க  மறந்திட கூடாது ”  என்று ஒற்றை விரலை நீட்டி  பொய்யாய் மிரட்ட …

அதில் வாய் விட்டு சிரித்த மீனாட்சி ” நான் எப்பவுமே உன் பக்கம் தான் டா ” அவள் வீட்டிற்கு வர சம்மதித்ததில் உற்சாகமாகவே பதில் அழித்தார்.

அதுவரை அவர்கள் இருவரின் உணர்ச்சிபூர்வமான பேச்சை வேடிக்க பார்த்த அஷ்வின் ” ஆ…சரி சரி அதான் அவ வர ஒத்துக்கிட்டால பெட்டிய கட்டுங்க பெட்டியகட்டுங்க வீட்டுக்கு கிளம்புவோம் அதுக்குள்ள ஒரு எமோஷனல் சீன போட்டுட்டாங்க பா காதுல ஒரே ஒப்பாரி சவுண்டா  கேக்குது ” என்று கூறி வேண்டும் என்றே தன் காதில் விரலை விட்டு ஆட்ட..

அதை பார்த்து கடுப்பான  பவித்ரா ” இரு மகனே …இரு என்னையா கலாய்குற உன்ன என்ன பண்ணுறேன் பாரு என்று கூறிக்கொண்டே அவனை தன் பளபளக்கும் கண்களுடன் பார்க்க..

அதில் இவ திடீர்னு வில்லங்கமா லுக் விடுறா சரி இல்லையே டேய் அஷ்வின் அலார்ட் ஆகு டா அலார்ட் ஆகு ” என்று தனக்குதானே மனதில் கூறிக்கொண்டு அவளை பீதியுடன் பார்க்க.

அவன் நினைத்தது போலவே ” பொறு ராசா அதுக்குள்ளே என்ன அவசரம் என்று கூறிய பவித்ரா மீனாட்சியிடம் திரும்பி ” மீனா குட்டி இந்த அஷ்வின் நேத்து என் ஆபிசுல காலைல  சரண்யா கேபின்ல என்ன பண்ணான் தெரியுமா என்று இவள் கூறி முடிக்கும் முன் வேகமாக இவள் வாயை பொத்திய அஷ்வின் மீனாட்சியிடம் திரும்பி ” ஹி …ஹி அது ஒன்னும் இல்ல மா நம்மா சரண்யா எதோ டாலி  ஆகலைனு சொன்னா அதான் அத டாலி பண்ணி கொடுத்தேன் இல்லையா சரண்யா என்று அவளை துணை இழுக்க அவளோ பயத்தில் என்னசொல்லவது என்று தெரியாமல் தலையை எல்லா பக்கமும் ஆட்டி வைத்தாள்.

அதில் மானசீகமாய் தன் தலையில் அடித்துக்கொண்ட அஷ்வின்  ” நமக்கு வாச்சது எல்லாமே அறிவு மேதாவிகளாகவும்,  உயிர எடுக்கிறதாகவும் இருக்கிதுங்க “என்று நினைத்தவன் மீனாட்சி தன்னிடம் எதோ கேக்க வருவது புரிந்து ” எனக்கும் பவிக்கும் ஒரு முக்கியமான வேலை இருக்கு மா இதோ இப்ப வந்திடுறோம் நீங்க வீட்டுக்கு போக ரெடி ஆகுங்க ” என்றவன் பவித்ராவின் வாயை பொத்தியபடியே வெளியே அழைத்துச்சென்றான்.

வெளியே சென்றதும் தன் வாயை பொத்தியிருந்த அஷ்வினின் கையை கடித்து வைத்தாள் பவித்ரா..

அதில் ” ஸ்ஸ்ஸ்…..” என்றவாறு வலியில் கையை எடுத்தவன் .

பவித்ராவை பார்த்து முறைத்துக்கொண்டே ” ரத்தக்காட்டேரி …ரத்தக்காட்டேரி …எதுக்கு டி என் கையை கடிச்சு வச்ச “என்று கோபமாக கேட்க.

அதில் அவனைபோலவே திரும்பி முறைத்தவள் ” நீ எதுக்கு டா  எரும என் வாயை பொத்துன ” என்று இவள் பதிலுக்கு திட்ட..

அப்போது தான் அவள் மீனாட்சியிடம் சொல்ல போன விஷயம் நினைவுக்கு வந்தது…உடனே தன் குரலை தேன் ஒழுக மாற்றியவன்..

“பவி மா அம்மா கிட்ட என்ன சொல்ல போன” என்றான் குரலுக்கே வலித்துவிடமோ என்பது போன்ற அன்பொழுகும் குரலில்..

அதில் அவனை பார்த்து எதோ பெரிதாய் சொல்ல வருவது போல்  ” அது….என்றவள் அவன் ஆர்வமாய் பார்பதை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவள் வெளியில் ” உண்மைய சொல்ல போனேன் ” என்றாள் நக்கலாய்

அதை கேட்ட அஷ்வினுக்கோ அப்போதே அவள் தலையில் ஓங்கி கொட்ட கைகள் பரபரத்தது ஆனால் ‘காரயிம் ஆகவேண்டுமென்றால் கழுதை காலை கூட பிடிக்கலாம்’ எப்போதோ கேட்ட பழமொழி அவன் காதில் ஒலிக்க அதில் பவியை பார்த்வன் ” இங்க பாரு பவி ரொம்ப பண்ணாத பிளீஸ் என்ன சொல்ல போனேன்னு மட்டும் சொல்லு ” என்றான் வேறு வழியில்லாமல்  கெஞ்சும் குரலில்.

அதை பார்த்து மலையிரங்கியவள் போனால் போகட்டும் என்று நினைத்து அஷ்வின் காதருகே குனிந்து ” அச்சு கண்ணா ” என்று அழைக்க அதில் தன் நிலையை நொந்த படி ” ம்ம்… சொல்லு டி ” என்றான் வேண்டா வெறுப்பாக.

அதற்கு பவி மீண்டும் அவனை வெறுபேற்றும் விதமாக ” என் ஆபிஸ் இருக்கில்ல ஆபிஸ்…” என்க..அதில் கடுப்பானவன் மனமோ ” டேய் நமக்கு  காரியம் முக்கியம் டா காரியம் ” என்க அதில் தன்னை அடக்கிய படி “ஆமா ” என்றான் பல்லை கடித்தபடி .

அவனது குரல் மாற்றத்தை உணர்ந்தவள் மனதில் குத்து டான்ஸ் போட்டவாறு அவனை பார்த்து ” அதுல  ஒவ்வோரு ரூமிலையும் சி.சி.டிவி கேமரா இருக்கு அதை எல்லாம் என் போன்ல டிஸ்பிளே ஆகுறமாதிரி செட்டும் பண்ணி இருக்கு  ” என்றாள் நமட்டு சிரப்புடன்.

அதில் அவளை புரியாமல் பார்த்த அஷ்வின் ” அதுக்கு…என்று அவளை பார்த்து கேட்க அப்போது தான் அவன் மண்டையில் மணியடித்தது அதில் அவரசமாய் பவித்ராவை பார்த்தவன் ” அப்போ …அப்போ….சரண்யா ரூம் ” என்றான் வேகமாய்..

அதில் நமட்டும சிரிப்புடன் அவள் ஆம் என்று தலையாட்ட ….இவனோ பரிதாபமான குரலில் “பாத்துட்டியா ” என்றான் அப்பாவி பிள்ளை பேஸ் கட்டில் .

அதை பார்த்து பொங்கி வந்த சரிப்பை தன் இதழ் கடித்து அடக்கியவள் அவனை பார்த்து “ம்ம்ம்…ம்ம்ம்..” என்று தலையாட்ட..

அதில ” ஓ..மை கருப்பு சாமி ” என்றவாறு பக்கத்தில் இருந்த சுவற்றில் தன் தலையை முட்டிக்கொண்டான்.

பவித்ராவே விடாமல் அவனை பார்த்து ” எப்பிடி …எப்பிடி….இந்த பூனையும் பால் குடிக்குமானு மூஞ்சவச்சுகிட்டு ….இந்த பூனை பீரையே அடிக்குதோ ” என்று அவனை வார…

இதை கேட்ட அஷ்வினின் நிலை தான் மிக மோசமாய் இருந்தது …..போயும் போயும் இவ கண்ணுலையா சிக்கணும் ….என்று நினைத்தவன் ஐயோ இத வச்சு இனி என் பேக்கட்டையே புல்லா காலி பண்ணுவாளே அதோட முடிஞ்சா கூட  பரவால ஆனா இவ என்னவச்சு  எதாச்சும் வில்ங்கமா இல்ல பண்ணுவா என்று  நினைத்தவனுக்கு  தன் நிலை குறித்தே பரிதாபம் வந்தது…

அவன் நினைத்தது மாதிரியே அடுத்த நிமிடம் ” அதை யாருகிட்டையும் சொல்ல கூடாதுனா நீ நான் சொல்லுறது எல்லாம் கேக்கனும் சரியா என்று அவள் டீல் பேச ” 

அதில் தன் விதியை சபித்தபடி வேறு வழியில்லாமல் சம்மதித்தான் அஷ்வின்…. வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன்…..

அசுரன் வருவான்…..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 6 சராசரி: 4.5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Veteran

Written by Thaara Pavi

Story MakerContent Author

21 இடைவெளி குறையுமா?

விதியின் சதி 10