in , , , , ,

3. உனது விழிகளின் வழியே எனது தேடல்…!

மிகவும் சிரமப்பட்டு இமைகளை பிரித்தவளுக்கு இமை மீது ஏதோ பாராங்கல்லை வைத்ததைப் போல பாரம் கூடிப் போனது… நேற்று இரவு சாப்பிட்ட தூக்க மாத்திரையின் வீரியம் இன்னும் மிச்சம் இருக்கலாம்… ஒன்று உண்டாளா… அல்லது இரண்டா… இப்போது சிந்தித்துப் பார்த்தால் அவளுக்கு நினைவில்லை…

பிரிந்த இமைகளோ மீண்டும் இணை சேர அவளிடம் கெஞ்ச… முயன்று அதை ஒதுக்கி வைத்தவளை அந்த கனவு வந்து ஆக்கிரமித்துக் கொண்டது… கனவில் என்ன கண்டாள் என்று கேட்டால் அது அவளுக்கே அதை தெளிவாக சொல்ல தெரியாது… அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்சிகள் மங்கலாகவே நினைவிருந்தது… ஆனால் அந்த கண்கள்… அதில் தெரிந்த வெறி… அது உண்டாக்கிய பயம்… இப்போது நினைக்கையிலும் உடலில் மீண்டும் ஒரு அதிர்வு உண்டாகி அடங்கியது… முயன்று அதையும் ஒதுக்கி வைத்தவள் கண்களை கசக்கிக் கொண்டு கடிகாரத்தை காண… அதுவோ காலை ஒன்பது மணி என்றது…

“இவ்வளவு நேரமா தூங்குனோம்… யாராவது எழுப்பக் கூடாது… காலையில பத்து மணிக்கு திறப்பு விழாவுக்கான பூஜை வேற இருக்கே…” என்ற எண்ணம் தோன்ற… அவசரமாக எழுந்தவள் கையில் கிடைத்த துண்டையும் தனக்கு தேவையானவற்றையும்  எடுத்துக் கொண்டு வேகமாய் வெளியே வந்தாள்… 

அழகான குருவிக்கூடு போல பாந்தமான வீடு அது… கீழ்தளத்தில் மூன்று அறைகள்… நடுநாயகமாக ஒரு கூடம்… கொஞ்சம் பெரியதாய் சமையலறை…  வலதுபுற ஓரத்தில் ஒரு சிறிய பூஜையறை… மேல்தளத்தில் ஒரே ஒரு படுக்கறை என அம்சமாய் அமைந்தது அந்த இல்லம்…

கீழ்தளத்தில் அமைந்திருந்த ஒரே ஒரு அறையில் மட்டும் இணைந்தது போல குளியலறை இருக்க அதை அவளின் பெற்றோர் உபயோகித்தனர்… மற்றபடி பொதுவாக இருத்த குளியலறையே சிறியவர்கள் இருவருக்கும்… மேல் தளத்தில் இருந்த அறையில் இணைந்தது போல குளியலறை இருந்தாலும் அதை விருந்தினருக்கு என ஒதுக்கி இருந்தனர்…

வெளியே வந்து பார்வையை சுழற்றியவளுக்கு வீட்டில் யாரும் இருப்பது போல தெரியவில்லை… குளியலறையில் இருந்து மட்டும் சத்தம் கேட்க… அதற்கு வெளியே நின்று கதவை தட்டினாள்…

“ஏய்… குட்டச்சி… எழுந்துட்டீயா… சரியான கும்பகர்ணிடீ நீ… என்ன நடந்தாலும் தூக்கத்த மட்டும் விட்டு தர மாட்டியே… கடைய திறக்கற முதல் நாளாச்சேனு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா உனக்கு…”

“டேய்… வந்தேன் தூக்கிப் போட்டு மிதிச்சுடுவேன்… இவ்ளோ நேரம் நீ என்னடா பண்ண… ஒழுங்கு மரியாதையா வெளியில வா மொதல்ல…”

“யாரு… நீ… என்ன தூக்கிப் போட்டு மிதிப்ப… என் இடுப்பு உயரம் இருந்துட்டு பேச்ச பாரு…  நடக்கறத பேசுடீ குள்ள வாத்து…”

“நீதான்டா தடி தாண்டவராயன்… இப்போ வெளிய வர போறீயா… இல்லையா… எனக்கு லேட்டாகுது… நான் கிளம்பனும்…”

“ஏன் இவ்வளவு நேரம் தூங்கனீங்களே மேடம்… அப்போ தெரியலையா லேட் ஆகறது…”

“தெரியல… இப்ப நீ வெளிய வர போறீயா… இல்லையா…”

“முடியாது போடி…” என்றவன் பைப்பை திறந்துவிட்டு சத்தமாக பாடியபடி தனது குளியலை தொடர… வேறு வழியில்லாது கதவை ஓங்கி ஒரு முறை அடித்தவள், கோபத்துடன் மேலே இருந்த அறைக்கு குளிக்கச் சென்றாள்…

அவள் குளித்து தயாராகி வெளியே வந்த சமயம்… இனியன் தயாராகி உணவு உண்டு கொண்டிருந்தான்… அவள் பதுங்கி பதுங்கி வருவதைப் பார்த்தப் போதே அவன் சுதாரித்திருக்க வேண்டும்… உணவு பிரியானான அவன் பூரியிலேயே தனது கவனத்தை பதித்திருக்க… அது அவளுக்கு வசதியாகிப் போனது… 

சிவப்பு மை கலந்த நீரை மறைத்து மறைத்து எடுத்து வந்தவள், அதை அவன் தலையில் கொட்டி கவிழ்க்க… தலையோடு சேர்த்து அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையும் சிவந்து போனது…

“குள்ள கத்திரிக்கா… உன்ன… இருடீ இருக்கு உனக்கு…” என்றவன் அவளை தாவிப் பிடிக்க முயல… லாவகமாக அவனிடமிருந்து தப்பித்தவள்… “எனக்கு லேட் ஆக்குன இல்ல… திரும்ப ஒரு தடவ குளி… அப்போ தான் உனக்கு புத்தி வரும்…” என்றவள் சிட்டாய் வாசலுக்கு பறந்திருந்தாள்…

“ஏய்… இருடீ நானும் வரேன்…”

“அதெல்லாம் நீ பொறுமையா கிளம்பு ஆடி அசைந்து அம்மாவாசைக்கு வா… எனக்கு லேட் ஆகுது நான் கிளம்புறேன்…” என்றபடியே அவள் தனது ஸ்கூட்டியை எடுத்து விட, “ஏய் அம்மா… உன்ன சாப்பிட்டு தான் வர சொன்னாங்க… சாப்பிடாம போன அடி வாங்குவ…” என்ற வசனத்தை அவன் தனியே காற்றோடு தான் சொல்ல வேண்டி இருந்தது…

நேரமாகி இருந்தாலும் மித வேகத்திலேயே சென்றால் மிளிர்… உயிரை விட எதுவும் முக்கியமில்லை என்ற ஞானோதயம் சாலையோர புளிய மரத்தடியில் தான் பல ஞானிகளுக்கு கிடைக்கிறது… 

அவள் வளைவு ஒன்றில் திரும்ப… ஒன்றன் பின் ஒன்றாக அதிவேகமாக சென்ற நான்கு பைக்களில் ஒன்று அவள் வாகனத்தை உரசி சென்றது… நல்ல வேளையாக அவள் மெதுவாகவே சென்றதால் தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டாள்… காற்றை கிழித்து சீறிப் பாய்ந்த அந்த வாகன ஓட்டிகளின் மீது அதித கோபம் ஏற… அவர்களை திட்டியபடியே நிமிர்ந்தவளுக்கு இருபதடி தூரத்தில் அவளுக்கு நின்றவனே முதலில் கண்ணுக்கு தெரிந்தான்… இவளை இடித்துவிட்டு சென்றவனும் அவனே… 

மெல்ல திரும்பி ஹெல்மெட்டின் முன்பக்கம் இருந்த கண்ணாடியை மட்டும் உயர்த்தி அவளுக்கு ஏதேனும் அடிபட்டு இருக்கிறதா என ஆராயும் பார்வை பார்த்தான் அவன்… அவள் சுதாரித்து நின்று விடுவே நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் ஆழ்ந்து அவளை ஒருமுறை பார்த்துவிட்டு விருட்டென கிளம்பிவிட்டான்…

ஆனால் திட்டிக்கொண்டே நிமிர்ந்து பார்த்த மிளிர்தான் அப்படியே உறைந்து போனாள்… அந்தக் கண்கள்… அந்த கண்கள்… அவள் கனவில் பார்த்த அதே கண்கள்… எத்தனை தொலைவில் இருந்தால் என்ன… அதை அவளால் அடையாளம் காண முடியாதா என்ன… அவள் சம்பித்து நின்றதென்னவோ சில நொடிகளே… அடுத்த நொடி அவனை வேகமாக பின்தொடர தொடங்கியிருந்தாள்… யார் அவன் அவளுக்கு… எதற்காக அவள் அவனை பின் தொடர வேண்டும் என அவளையே கேட்டாலும் அவளுக்கு பதில் தெரியாது… ஆனால் ஏதோ ஒன்று அவனை பின் தொடர சொல்லி அவளை ஊக்கியது… 

அவளின் சதாரண ஸ்கூட்டியால் அவனின் விலையுயர்ந்த பிரத்தியேகமாக ரேஸ்க்கு என்றே தயாரிக்க பட்ட பைக்கை விரட்டி பிடிக்க முடியுமா என்ன… அதி வேகமாக வந்தவள் எந்த திசையில் செல்வது என தெரியாமல் திருதிருத்து நடுவீதியில் நின்று அந்த பைக் எங்கே சென்றிருக்கும் என சுற்றுமுற்றும் ஆராய அவளை உரசியபடி வந்து நின்றது காவல்துறை வாகனம் ஒன்று…

காவல் துறை வாகனத்தில் இருந்து ஸ்டைலாக குதித்து இறங்கியவன்… “ஹாலோ மேடம்… என்ன பிளைட் ஓட்டறதா நினைப்பா… இந்த ரோட்டுல இவ்வளவு ஸ்பீடா போறீங்க…” என்றபடியே அவள் முன் வந்து நிற்க…

“ரோஸ் ஓட்டுறவன எல்லாம் விட்டுடுங்க… சாதாரண ஸ்கூட்டிய கொஞ்சம் ஸ்பீடா ஓட்டுன என்ன வந்து புடிங்க…” என எண்ணியவள் அவனை பரிதாபமாக பார்த்தபடி நின்றாள்…

“ஹலோ ஹெல்மெட் கழட்டுங்கனு தனியா சொல்லனுமா…” என அவன் சிடுசிடுக்க… எத்தனை மெல்லமாய் முடியுமோ அத்தனை மெல்லமாய் அதை கழட்டினாள் அவள்… 

“சாரி சார்… தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது… அதான் ஸ்பீடா போய் புடிச்சுடலானு…” என்றவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்… 

பிறை நெற்றி… அதில் தவழ்ந்தாடும் கற்றை கூந்தல்… நிமிடத்திற்கு ஒரு முறை அதை ஒதுக்கி காதுக்குள் நுழைக்க முயலும் நகப்பூச்சு பூசிய அவளின் வெண்டை பிஞ்சு விரள்கள்… நெற்றியின் மத்தியில் ஒட்டிய மிளகளவு பொட்டு… திருத்திய புருவம்… மை தீட்டிய மான் விழிகள்… கூர் நாசிதான் என்றாலும் அதன் குறைவான நீளம் அதை குட்டை மூக்காகவே காட்டியது… சிவந்த அதரங்களில் லிப்கிளாஸ் போட்டிருந்தாள்… அது இன்னும் அவள் இதழ்களுக்கு பொழிவை வழங்கி இருந்தது… கொழுத்த கன்னங்கள்… மாநிறம்… அவள் போட்டிருந்த பவுன்டேஷன் அந்த நிறத்தை இன்னும் எடுத்துக் காட்டியது… இறுதியாக வலது தாடையையும் காது மடலையும் இணைக்கும் இடத்தில் இருந்த மச்சம்… பக்கவாட்டு தோற்றத்தில் அவளை இன்னும் அழகாய் காட்டியது… தோள் வரை புரண்ட அடர்ந்த கூந்தல்… மத்தியில் ஒரு சிறு கிளிப்பால் அதை அடக்க முயன்ற அவள் மடத்தனம்… அதையும் மீறி அது காற்றோடு கதை பேசிய விதம்… இன்னும் இன்னும் அவளை அனுஅனுவாய் ரசித்து அளவெடுத்துக் கொண்டிருந்தான் அவன்…

ஆரஞ்சு வண்ண பேன்டும் துப்பட்டாவும்… ரோஸ் நிற டாப்பும் அவளின் நிறத்தை இன்னும் அழகாக்கி காட்டியது… பனை ஓலைப் போல அடுக்கடுக்காய் போட்டிருந்த ஸ்டெப் துப்பட்டா கனகச்சிதமாய் அவள் மார்பை தழுவி இருந்தது… அத்தனை நேர்த்தியாக அவள் அணிந்திருந்த பாங்கு இன்னொரு முறை பார்க்க தூண்டியது எனவும் சொல்லலாம்… 

அவன் பார்வை அவளை அளவெடுப்பதை உணர்ந்தவள் எரிச்சலாக… “ஹலோ சார்… பாத்து முடிச்சாச்சுனா சொல்லுங்க… எனக்கு நிறைய வேலை இருக்கு… நான் கிளம்பனும்…” என்றாள்…

அதில் சுயம் திரும்பியவன், “பரவாயில்லை… இப்ப எல்லாம் ஹெல்மெட் போடறீங்க போல…” என்றான்…

அவன் மீது எரிச்சலில் இருந்தவள் அவனின் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க தவறிப்போனாள்… “ஏன் ஹெல்மெட் போடக் கூடாதுனு புதுசா எதுமும் சட்டம் போட்டு இருக்கீங்களா என்ன…” என்றாள் எரிச்சல் சற்றும் குறையாத குரலில்…

“இனிமே அத பத்தி யோசிக்கறோம்… இப்போ நீங்க ஸ்பீடா வந்ததுக்கு…”

“எத்தன தடவை சொல்லறது சார்… தெரிஞ்சவங்க வந்தாங்க… அதான் கொஞ்சம் வேகமாக வந்து அவங்கள பிடிக்க ட்ரை பண்ணுனேனு…”

“இவ்வளவு ஸ்பீடா போனா முன்னால போறவங்கள புடிக்க முடியாது… எமனோட எருமைய தான் புடிக்க முடியும்…”

“இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை… இதானே… இதுக்கு தானே இவ்வளவு பேசறீங்க…” என்றவள் அவன் எதிர்பார்க்க சமயத்தில் அவன் கரத்தை பற்றி இருநூறு ரூபாய் நாள் ஒன்றினை அவன் கரத்தில் திணித்துவிட்டு… அவன் சுதாரிப்பதற்குள் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள்…

“அடிப்பாவி…” என்ற எண்ணத்துடன் அதிர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தன்னையும் அறியாமல் புன்னகை வந்து இதழ் கடையோரம் அமர்ந்துக் கொண்டது…

“முன்ன விட கொஞ்சம் குண்டாகிட்டா… மத்தபடி அப்படியே தான் இருக்கா… பழசெல்லாம் நியாபகம் வந்திருக்குமா… அப்போ என்னையும் நியாபகம் வந்து இருக்கும் தானே… ஆனா அவ பேசனத பாத்தா என்ன தெரிஞ்ச மாதிரியே தெரியலையே… ஒரு வேளா இருட்டுல என்ன பாத்ததால அடையாளம் தெரியலையா… என்னவா இருக்கும்…” என்று அவள் நினைவிலேயே அவன் மனம் உழன்றுக் கொண்டிருந்தது…

அவள் அவன் கையை பற்றிய அந்த நொடி முதல் முறை உயிர் போராட்டத்தில் அவன் கையைப் பற்றியவளின் பரிசத்தையே அவன் உணர்ந்தான்… அதனாலேயே அப்படியே சம்பித்து நின்றுவிட்டான்… ஏதோ அவளை காப்பது தனது கடமை என்று எண்ணியே அன்று அவளை மருத்துவமனையில் சேர்த்தது… அவள் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டது கூட ஒரு மனிதாபிமான அடிபடையிலேயே… அதன் பிறகு அந்த லாரி ஓட்டுனரே வந்து சரணடைந்துவிட வழக்குகாகவும்  அவளை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லாது போனது… மற்ற தகவல்களை அவள் பெற்றோரிடமிருந்தும் இனியனிடமிருந்துமே அவன் சேகரித்துக் கொண்டான்… பழைய விசயங்களை அவளுக்கு நினைவு படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் சொன்னதும் அதற்கு ஒரு காரணம்…

அவளை முற்றிலும் மறக்கவில்லை என்றாலும்… தேடவுமில்லை என்பதே உண்மை… என்றாவது இப்போது அவள் எப்படி இருப்பாள் என்று நினைத்து பார்ப்பான் அவ்வளவே… ஆனால் இந்த ஒன்றரை வருடத்திற்கு பிறகும் அவளின் சில நொடி தீண்டலில் அன்றலய தீண்டலை உணர்ந்தவனுக்கு அதை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை…

அவனை இதுவரை இப்படி பாத்திராத வாகன ஓட்டுனரோ அதிசயமாக பார்த்து வைத்தார்… எத்தனை வற்புறுத்தினாலும் லஞ்சம் வாங்கதவன்… அதே சமயம் அடுத்தவர் விசயத்திலும் மூக்கை நுழைக்காதவன்… நியாயமாக பார்த்தாள் அந்த பெண் இருநூறு ரூபாய் கொடுத்ததற்கு கோபப்பட்டிருக்க வேண்டும்… அவனோ புன்சிரிப்போடும் யோசனையோடும் அவள் சென்று மறைந்த திசையையே பார்த்தபடி நின்றிருந்தை கண்டால் வியப்பாக தானே இருக்கும்…

“சார் லேட்டாகுது… கமிஷ்னர் வர சொல்லி இருக்காரு… போகலாமா சார்…” என ஓட்டினர் கேட்டதுமே தனது சிந்தனையில் வெளிவந்தான் மித்திரன்…

“ஹான்… போகலாம் அண்ணா…” என்று அவன் ஜீப்பில் ஏறி அமர… அவரும் வாகனத்தை எடுத்தார்…

என்ன தான் மனதுக்கு கடிவாளம் போட்டு அவனை பற்றிய சிந்தனைகளை ஒதுக்கி வைக்க முயன்றாளும் முடியவில்லை மிளிரால்… அவனின் பளபளக்கும் அந்த பச்சை நிற கண்களே அவள் சிந்தனையில் தோன்றி இம்சையை கூட்டியது… 

“சே… மிஸ் பண்ணிட்டேன்… கொஞ்சம் ட்ரை பண்ணி இருந்தா அவன புடிச்சு இருக்கலாம்…” என நினைத்தவளுக்கு அது சாத்தியமில்லை என்பதும் புரிந்தது… 

“அவனை பிடித்து இருந்தால் மட்டும் அவனை உனக்கு யாரென்று தெரியுமா…” என மனசாட்சி கேள்வி எழுப்ப…

“அவனுக்கு என்ன தெரிஞ்சு இருக்கலாம் இல்ல… ஒரு வேள அவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவனா இருக்கலாம் இல்ல… அதான் அவன் கண்ணு எனக்கு அடிக்கடி கனவுல வருதோ என்னவோ… ஒரு வேள நாங்க லவ்வர இருந்து இருந்தா…” என்றது அவளின் மற்றொரு மனம்…

“லவ்வரா இருந்து இருந்தா ஒன்ரறை வருஷம் அவன் ஏன் உன்ன பாக்க வராம இருக்க போறான்…” என்ற மனசாட்சிக்கு…

“ஒரு வேளை அந்த ஆக்சிடெண்ட்ல நான் இறந்துட்டதா அவன் நினைச்சு இருக்கலாம்…” என்றது அவளின் மற்றொரு மனம்…

அவள் மனம் முழுவதும் அந்த பச்சை நிற கண் கொண்டவனை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க… அந்த கண்களின் சொந்தக்காரனோ ரேசில் தான் ஜெயித்ததை காலையிலேயே மது விருந்தோடு கொண்டாடிக் கொண்டிருந்தான்…

                                தேடல் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 3 சராசரி: 4.7]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Contributor

Written by தமிழ் வெண்பா

அனுதினமும் உருகி

கரையும் உயிரில்

உனையே (தமிழை)

சேர்க்க விரும்பும்

கவிதை காதலி நான்...

விழிகளிலே ஒரு கவிதை25

# Aloo paratha # / # ஆலு பராத்தா #