in , , , , ,

விழிகளிலே ஒரு கவிதை25

      சூர்யா அவள் ஷாக் ஆகி நிற்பதை பார்க்க அங்கே அந்த ட்ரெயினில் பார்த்த தாத்தாவும் பாட்டியும் நின்றிருந்தனர். நட்சத்திரா ஐயோ! இவங்க எப்படி இங்கே?  ஒரு வேளை இதே ஃபங்ஷனுக்கு தான் வந்திருப்பாங்களோ?  நான் அள்ளி விட்டதை இந்த பாட்டி இங்கே சொல்லியிருச்சுனா என்  கதி அதோ கதிதான் என நினைத்து பயந்து கொண்டே சூர்யாவை பார்த்தாள்……..

      சூர்யாவும் அதே மனநிலையில் நட்சத்திராவை பார்த்தான்.  நட்சத்திரா மாமா வசமா மாட்டிகிட்டோமே?  இப்போ என்ன பண்றது மாமா? என்றாள்.  சூர்யா ஆங்… வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்களை வெல்கம் பண்ணுவோம் என்றான்.  நட்சத்திர அதிர்ந்து மாமா என்றாள்.  சூர்யா என்ன மாமா? செய்றதை எல்லாம் செஞ்சிட்டு பச்ச புள்ள மாதிரி முகத்தை வச்சிக்குற?  என்னாலலாம் எதுவும் செய்ய முடியாது. நீ பண்ண தப்ப நீயே சரி பண்ணு. நீயே சமாளிச்சுக்கோ என்றான்……

        நட்சத்திரா இவன் இப்படி பேசினா வழிக்கு வர மாட்டான் என நினைத்தவள் எனக்கு ஒன்னும் இல்லை.  மாட்டுனா அத்தை மாமா கிட்ட நீ தான் பொய் சொல்ல சொன்னேன் என்று சொல்லிவிடுவேன் என்றாள் கூலாக. சூர்யா சரியான எமகாதகியா இருப்பா போலயே என நினைத்தவன்  அவர்கள் கண்ணில் படும் முன்  அவளை இழுத்துக் கொண்டு சென்றான்…….

         அனு, என்னடா இது!  எலியும் பூனையும் போல சுத்துனதுங்க இப்போ இப்படி கைய புடிச்சிட்டு சுத்துதுங்க என நினைத்து, நட்சத்திராவிடம் என்ன ஆச்சு?  என சைகையில் கேட்டாள்.  நட்சத்திரா இல்லாத காலரை தூக்கிவிட்டு உங்க அண்ணனை கவுத்துட்டேன் என்றாள். சூர்யா அவளை யாரும் இல்லாத இடத்திற்க்கு கூட்டி சென்றவன் இங்கேயே  பங்க்ஷன் முடிகிற வரைக்கும் இரு என்றான்……

       நட்சத்திரா செல்ல முயன்றவனை இழுத்து அணைத்து கொண்டாள். அவளின் இந்த திடீர் அணைப்பு அவனை ஏதோ செய்தது. சூர்யா ஏய் என்னை விடுடி என்றான். அவள் இதுதான் சாக்கென்று நன்றாக ஒட்டி கொண்டாள்.  சூர்யா மனம் கட்டுப் பாட்டை இழந்தது. அவன் மூளை எச்சரிக்க இது சரிபட்டு வராது என நினைத்தவன் அவளை இழுத்து தனியே பிரித்து நிறுத்தியவன் ஏய் நீ பொண்ணு ரூம்ல போய் இரு.  அதுதான் உனக்கு சேப்டி என்றான் . நட்சத்திராவும் அவனின் பேச்சை கேட்டு ரீமாவின் அறைக்கு சென்றாள்……

      சூர்யா ஷீலாவிடம் அம்மா அந்த தாத்தா பாட்டி யாருமா?  என்று  அவர்களை சுட்டி காட்டி கேட்டான்.  ஷீலா, அவங்க மாப்பிள்ளையோட சொந்தம்.  மாப்பிள்ளைக்கு தாத்தா பாட்டி முறை என்றார். சூர்யாவிற்கு இதைக் கேட்டதும் அப்போ கண்டிப்பா நமக்குச் சங்குதான் என நினைத்தான் . ஷீலா நீ ஏன்டா அவங்கள பத்தி கேட்கிற? என கேட்டார். சூர்யா ஒண்ணுமில்லம்மா சும்மா தான் கேட்டேன் என சமாளித்தான். சூர்யா இப்போ இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது? என யோசித்துக் கொண்டிருந்தான்……

         ரேஷ்மா வந்து மாமா என்னோட டிரஸ் எப்படி இருக்கு? என கேட்டாள். சூர்யா இருக்க கடுப்புல இவ வேற மேலும் என்ன கோவப்படுத்துறா என நினைத்து விட்டு நன்றாக இருக்கு என்றான். ரேஷ்மா உண்மையாவா? நல்லா இருக்கா மாமா ? என கேட்டாள்  சூர்யா உண்மையாவே சூப்பரா இருக்கு. போதுமா?  இப்போ கொஞ்ச நேரம் என்ன தனியா விடு. எனக்கு வேலை இருக்கு என்றான் குரலில் எரிச்சலுடன்……..

        இதைக் கேட்டதும் ரேஷ்மாவின் முகம் சுருங்கியது.  சூர்யா நட்சத்திரா வெளியே வந்து விடுவாளோ என்ற அச்சத்தில் அந்த ரூமையே பார்த்துக்கொண்டிருந்தான். ரேஷ்மா என்ன விட்டுட்டு அவன் அங்க என்ன பார்க்கிறான் என அங்கே சென்றாள். அந்த ரூமில் ரீமாவும் நட்சத்திராவும் தான் இருந்தனர் . ரேஷ்மா இவள தான் பார்க்கிறானா?  இருக்குடி உன்னை இங்கே இருந்து அவமானப்பட்டு ஓட வைக்கிறேன் என கருவினாள். ரேஷ்மா அவளுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அந்த டேபிள் மேல் இருந்த செயினை அடியில் தள்ளி விட்டாள்….

       ரீமாவின் அம்மா வந்து இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணை கூப்பிட்டு வர சொல்லு வாங்க. சீக்கிரம் ரெடி பண்ணுங்க என்று விட்டுச் சென்றார். ரேஷ்மா எல்லா நகைகளையும் எடுத்து ரீமாவுக்கு போட்டு அலங்காரம் செய்தாள். நட்சத்திரவும் அவளுக்கு உதவி செய்தாள். ரேஷ்மா, ரீமா  அக்கா இன்னொரு மாங்கா மாடல் போட்ட செயின் இருந்துச்சே. அது எங்க?  அந்த செயின் உனக்கு அழகாய் இருக்கும் என்றாள்.  ரீமா இங்க தான் இருந்துச்சு என தேடினாள். ரேஷ்மாவும் தேடுவது போல நடித்தாள்……

      நட்சத்திரா என்னவென கேட்க  ரேஷ்மா ஒரு செயினை காணோம். அதான் தேடுறோம் என்றாள். நட்சத்திராவும் அவர்களுடன் சேர்ந்து தேடினாள். இவர்கள் தேடிக்கொண்டிருக்க ரீமாவின் தாயார் ரீமாவை கூட்டிட்டு வாங்க என்றாள். ரேஷ்மா பெரியம்மா அக்காவோட செயினை காணோம் என்றாள். அவர் இங்கே தான் இருக்கும் நல்லா பாருங்க என்றார். ரீமா இங்க தான் இவ்வளவு நேரம் இருந்துச்சுமா என்றாள்.   ரேஷ்மா, ஆமா பெரியம்மா இவ்வளவு நேரம் இங்க தான் இருந்துச்சு. ஆனா இப்போ காணோம் என்றாள்…….

    பொண்ணை  கூப்பிட சென்றவர் இன்னும் வரவில்லை என்று மற்றவர்கள் கூட விஷயமறிந்து அங்கே சலசலப்பு ஏற்பட்டது.  ரேஷ்மா,  பெரியம்மா ரீமா அக்கா கூட இவ மட்டும்தான் இருந்தா.  எனக்கு என்னமோ இவ மேல தான் சந்தேகமா இருக்கு என்று ஒரு குண்டை தூக்கி போட்டாள் . இதைக் கேட்டதும் நட்சத்திராவிற்கு பகீரென்றது.  அவள் நான் இதை செய்யவில்லை என்று அதிர்ச்சியாக பார்த்தாள். எல்லோரும் அவளையே குற்றவாளியாக பார்ப்பது போல தோன்றியது அவளுக்கு. அவள் கண்கள் குளமாகியது…….

    ரேஷ்மா எனக்கு தெரியும்.  அந்த நகையை பார்த்த உடனே ஆசை வந்து இவதான் திருடி இருப்பா.  இந்த மாதிரி லோ கிளாஸ் மக்களை உள்ள விடக்கூடாது கூடாது என்றாள். நட்சத்திராவிற்கு இதைக் கேட்டதும் கோபம் வந்து ஏதோ சொல்ல வாயை எடுக்க ஷீலாவும் சங்கரும் அங்கு வந்தனர்…….

      ஷீலா, ரேஷ்மா என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறீயா? தேவை இல்லாம அவ மேல பழி போடாத என்றார். நட்சத்திரா கண்ணீருடன் நான் எதுவும் பண்ணல அத்தை என்று அவரை அணைத்துக் கொண்டாள் . ரேஷ்மா அத்தை நீங்க தான் தெரியாம பேசுறீங்க.  இந்த ரூம்ல இவளும் ரீமாவும் தான் இருந்தாங்க. இவதான் கண்டிப்பா இதை எடுத்து இருக்கணும் என்றாள்……

       சூர்யாவிற்கு இதைக் கேட்டதும் கோபம் வந்துவிட்டது. ரேஷ்மா வார்த்தையை அளந்து பேசு. அவ எங்க வீட்டு பொண்ணு.  அவளை பத்தி எங்களுக்கு தெரியும் என்றவன் ரீமாவின் பெற்றோரிடம் உங்களுக்கு நகை தான் பிரச்சனை என்றால் அந்த நகையை நாங்களே வாங்கி தருகிறோம் என்றான்.  ரீமாவின் பெற்றோர் எங்களுக்கு நகை ஒரு பிரச்சனை இல்லை என்று மறுக்க சூர்யா அப்புறம் ஏன் அவளை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறீங்க?. வீட்டுக்கு வந்த விருந்தாளி கிட்ட இப்படித்தான் நடந்துக்குவீங்களா?. இனிமேல் ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கமாட்டோம்.  நீங்க கூப்பிடதுக்கு மதிச்சு வந்ததுக்கு எங்களை நல்லா கவனிச்சுட்டீங்க என்றவன் அம்மா அப்பா வாங்க போலாம் என்று விட்டு நட்சத்திராவின் கையை பிடித்து இழுத்து சென்றான் ……..

                                  கவிதைகள் தொடரும்….         

என்னுடைய அன்பு வாசகர்களே! ஏன்பா என்னைய இப்படி பேச வைக்குறீங்க? நீங்கள் கெஸ் பண்ணா மனசுலயே வச்சுக்கோங்க செல்லங்களா? இப்படி நான் எழுதுறதுக்கு முன்னாடியே கேட்காதீங்க பா…… அப்படி கேட்டே ஆகனும்னா பிரைவேட் மெசேஜ் பண்ணுங்கபா…..நீங்க இவ்ளோ அறிவாளியா இருந்தா நான் என்னப்பா பண்றது????…..நீங்க முன்னாடியே கெஸ் பண்ணீட்டிங்கன்னு இந்த யூடியை வேற மாதிரி எழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு தலை வலிச்சது தான் மிச்சம்…. பரவாயில்லைன்னு இப்படியே போட்டுட்டேன்….மீ பாவம்ல ….😉😉

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Veteran

Written by Janu Writer

Story MakerContent Author

துணைவனா? துணைவியா? அத்தியாயம் 4(குறுநாவல்)

3. உனது விழிகளின் வழியே எனது தேடல்…!