in , , , , , , ,

அடேய் விநாயகா..! 6

அடேய் விநாயகா..!!

அத்தியாயம் ஆறு

கார்த்திகேயன் பிறந்து ஒரு வருடம் கழித்து..

வினய் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். கிட்டதட்ட இருபது கிலோ வெயிட் தன் மேல் போட்டது போல அவனுக்கு இருந்தது.

அதற்குக் காரணம் நம்ம கார்த்திகேயன் தான். எப்போ எழுந்து நடக்க ஆரம்பித்தானோ அப்போ இருந்து தன் அண்ணன் மேல் படுத்து தூங்குவதே அவனுக்கு விளையாட்டா போச்சு.

எப்படியோ தன் அம்மாவின் உதவி மூலம் அவனைத் தன் மேல் இருந்து விலகி விட்டு எழுந்தான் வினய். அவன் தினம் தினம் என்ன தான் சுப்ரபாதம் போலத் தன் தம்பியின் சேட்டைகளைச் சொன்னாலும் யாருமே அதனைக் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் “உன் அளவுக்கு இல்லை”, என்று சொல்லி விட்டு சென்று விடுவார்கள்.

வினய் எவ்வளவோ திட்டி பார்த்தாலும் கார்த்திகேயன் கேட்க மாட்டான். ‘ அட அண்.. அட அண்..’ எனப் பின்னாடியே ஓடி வருவான். அதனைப் பார்த்து ஈஸ்வர், சிவகாமிக்குச் சந்தோசமாக இருக்கும். ஈஸ்வர் அதனை வெளிக்காட்ட மாட்டார். ஆனால் சிவகாமி, “என்னங்க பாருங்க இப்போவே ரெண்டு பசங்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்காங்க. பார்க்கவே ராம் லட்சுமண் மாதிரி இல்ல..?”, என்று சந்தோஷப் பூரிப்புடன் சொல்வார்.

ஈஸ்வர், “எங்க..? அதற்கு வினய் ராமர் மாதிரி இருந்தால் தானே..?. அதான் நீ தினமும் பார்க்கிறியே! எப்போ பார்த்தாலும் கார்த்தியை குறை சொல்லி கொண்டே இருப்பது. கார்த்திப் பிறந்த போதே அவன் சொல்லிட்டான். அவனுக்குப் பதிலுக்குப் பதில் பேசி சண்டை போடும் தம்பி தான் வேண்டுமாம்.”, என்றார்.

சிவகாமி, “ச்சே! ச்சே! நம்ம கார்த்தி அப்படியெல்லாம் இல்ல. இந்த ஒரு வயசிலேயே அண்ணன் மேல் எம்புட்டு பாசம்!. அண்ணனை கட்டிக்கொண்டு தான் தூங்குவேன் என்கிற அளவுக்குப் பாசம்.”, என்றார்.

ஈஸ்வர், “நீ ஒரு வயசு சொல்ற. ஆனால் பார்க்க குழந்தை அப்படியா தெரிகிறான்..?. மூன்று வயசு பையனுக்கான வளர்ச்சியில் இருக்கான். யாராவது புதுசா கார்த்தியை பார்த்தால் எப்போ ஸ்கூல் சேர்க்க போறீங்க..? எனக் கேட்கும் அளவுக்கு வளர்ச்சி. இந்த வளர்ச்சியைப் பார்த்து பயந்து போய் டாக்டரை பார்த்தால்! வாய்க்கு நுழையாத ஏதோ ஏதோ மருத்துவப் பெயர்களைச் சொல்லி குழப்பிவிட்டது தான் மிச்சம். நாளுக்கு நாள் பருமன் ஆகும் இவன் அதிகம் சாப்பிடுவது கூட இல்லயே. அதிகம் சாப்பிடுவது நம்ம விநாயக்! ஆனால் வெயிட் போடுவது நம்ம கார்த்திகேயன். இப்படியே போச்சு, இன்னும் கொஞ்ச வருடத்தில் யாருக்கு யார் அண்ணன் என்றே தெரியாத அளவுக்கு விநாயக், கார்த்தி இருக்க போறாங்க.”, என்றார்.

சிவகாமி, “ஆச்சோ! என்ன இது..?. நாமளே நம்ம பசங்க மேல் கண்ணு வைக்கிறது போல் பேச்சு. கைகளில் ஐந்து விரல்களே ஒன்றோடு ஒன்று ஒரே மாதிரி இல்லாத போது, நம்ம ரெண்டு பசங்க இடையே வித்தியாசம் இருக்கத் தானே செய்யும்..?. நமது கண் முன்னே தம்பியை திட்டி கொண்டிருந்தாலும் வீட்டில் இருக்கும் போது கார்த்திக்கு சாப்பாடு ஊட்டாமல் விநாயக் சாப்பிட மாட்டான். அந்த அளவு பாசம் போதுமே.”, என்றார்.

இவர் இப்படிச் சொல்லிக்கொண்டு இருக்க, அதே நொடி தன் ஒரே தம்பிக்கு சோறு ஊட்டி கொண்டிருந்தான் வினய்.

வினய், “கார்த்தி, உனக்கு ஒன்னு தெரியுமா டா..? நாளை முதல் உங்க அண்ணன் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் போகப் போறேன். புதுக் கிளாஸ், புது ப்ரெண்ட்ஸ் எனச் செம்ம ஜாலியாக இருக்கப் போகுது. நீயும் சீக்கிரம் வளர்ந்து எங்க ஸ்கூல் ல ஜாயின் பண்ணிடு டா! அப்பறம் ரெண்டு பேரும் சேர்ந்து ஸ்கூல் போகலாம் சரியா..?”, எனச் சொல்லி கொண்டே சோறு ஊட்டினான்.

கார்த்தி, “அட அண்.. ஓகே..”, எனச் சில வார்த்தைகளைச் சொல்லி கை தட்டி சிரித்தான்.

இப்படித் தான் கொஞ்ச நாளாகச் சிறு சிறு வார்த்தை கூடப் பேச ஆரம்பித்து விட்டான். ஒரு வயசு குழந்தை பேசுது சொன்னால் யாராவது நம்புவார்களா?

நம்ம வினய் மாதிரி கார்த்திகேயன் சுட்டி எல்லாம் இல்லை. ஒருவேளை தன் சுட்டி தனத்தைக் காட்ட சரியான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கான் போல.

வினய் பிறந்ததில் இருந்து செய்த மாதிரி எந்த அதிசயத்தையும் கார்த்திகேயன் செய்யவில்லை. அவன் செய்யும் அனைத்துமே அவன் அண்ணனை சுற்றி மட்டும் தான் இருக்கும். தன்னுடைய அப்பா, அம்மா விடத் தன் அண்ணனிடம் தான் அவன் உயிராகச் சுற்றிக் கொண்டிருந்தான். அவனைப் பொறுத்தவரை அவன் அண்ணன் என்ன சொன்னாலும் கை தட்டி சிரிப்பான். அவன் எழுந்து நடக்க ஆரம்பித்த நாள் முதல் தன் அண்ணன் மேல் தான் படுத்துத் தூங்குவான். அதனை வினய் ரசித்தாலும் வெளியில் மட்டும் குறை சொல்வான்.

என்ன பண்றது வலி வேற டிபார்ட்மெண்ட் ல..😵😵

என்னதான் கார்த்தி ரொம்பச் சமத்து பையனாக இருந்தாலும் அவன் பாட்டி தெய்வநாயகி கிட்ட அப்பப்போ ஏதாவது லூட்டித்தனம் பண்ணுவான். இந்த ஒர் விஷயத்தில் மட்டும் தன் அண்ணனை போல் இருப்பான். சும்மா போய்க்கொண்டிருக்கும் தெய்வநாயகிடம் தன்னைத் தூக்க சொல்லி விட்டு அதே மாதிரி அவர்கள் தூக்கும் போது அவர்களின் உடையில் சிறுநீர் கழித்து விட்டு ஓடி வந்து விடுவான். அதைத் தவிர அவர்களின் உணவில் உப்பை கொட்டுவது, அவர்கள் தூங்கும் நேரத்தில் முடியை வெட்டி விடுவது என அவன் செய்யும் சில குறும்புக்கள் எல்லாம் வினய் மேல் தான் சந்தேகக் கண் திரும்பும்.

அதேல்லாம் செய்தது தன் தம்பி தான் என்று தெரிந்தும் அந்தப் பழியைத் தன் மேல் தான் போட்டு கொள்வான். மந்திரம் மூலம் வினய் எவ்வளவோ சுட்டித்தனம் பண்ணி இருந்தாலும் கார்த்திகேயன் பிறந்த பிறகு அதனை அவன் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தும் அளவுக்கு எந்தச் சூழ்நிலையும் வரவில்லை போல.

மந்திரம் போல “அடேய் விநாயகா..!” என வினய் சொல்லல என்றாலும் சமயம் கிடைக்கும் போது கடவுள் விநாயகனை திட்டும் வேலையை மட்டும் விடல..

என்ன தான் தன் மேலயே இவனுக்குக் கோபமோ..??🙄🙄

                         **************

அன்று சாயங்காலம் வினய் வீட்டுக்கு எதிர் வீடு மற்றும் பக்கத்து வீட்டில் இரு குடும்பங்கள் குடி வந்தனர்.

முதலில் பக்கத்து வீட்டை பார்போம்..

ப்ரீத்தி மற்றும் அவளின் அப்பா தாமஸ் – அம்மா மேரி. பேங்க் லோன் எல்லாம் போட்டுச் சொந்தமாக இந்த வீட்டை வாங்கி விட்டார்கள். தாமஸ் மற்றும் மேரி இருவரும் சொந்தமாக மூன்று பேக்கரி நடந்துக்கிறார்கள். அதில் ரெண்டு பேக்கரியே ஆளுக்கு ஒருவர் தங்கள் கண் பார்வையில் வைத்துக் கொண்டு மற்றொரு பேக்கரியே தங்களின் உறவினர் ஒருவருக்கு லீஸாகக் கொடுத்து உள்ளனர்.

முதலில் ப்ரீத்தி இந்தப் புது வீட்டுக்கு வர பிடிக்கல என்று சொன்னாலும் பிறகு அவளின் அப்பா தந்த ரெண்டு மூன்று கேக் துண்டுக்கு ஆசைப்பட்டுச் சரி எனச் சொல்லி விட்டாள்.

எதிர் வீட்டை பார்போம்…

ஆஷா மற்றும் அவளின் அப்பா அம்மா அப்துல் கான் – நிஷா கான். மிலிட்டரி மேன் அப்துல் கான் ஒரு மாச விடுமுறையில் வந்த அவர் தன் கிராமத்தில் வித்த நிலங்களை வைத்து வந்த பணத்தில் ஒரு பங்கை கொண்டு இந்த வீட்டை வாங்கி விட்டார். மிச்சம் இருந்த பங்கை தன் மகள் மற்றும் மனைவி பேரில் பேங்க் ல ஒரு ஃபிக்சட் டெபாசிட் என்ற பெயரில் போட்டு விட்டார்.

ஏற்கனவே வினய் வீடு இங்க இருப்பது ஆஷாவுக்குத் தெரிந்து தான் இருந்தது. அவள் அப்பாவோடு சென்ற வாரமே வீட்டை பார்க்க வந்தவள், வாசலில் தன் தம்பி கூட விளையாடி கொண்டிருந்த வினயை பார்த்தாள். அப்பறம் வீடு எப்படி இருக்கு..? என்று கூடக் கவனிக்காமல் அந்த வீட்டை வாங்கியே ஆகணும் என ஒரே பிடிவாதம் பிடித்து வாங்கவும் வைத்து விட்டாள்.

                      **************

அடுத்த நாள் முதல் ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்தால் தன் தம்பி கூட விளையாடும் நேரம் குறைந்து விடுமே! என எண்ணியவன் கார்த்தியை தன் சைக்கிள் பின் உட்கார வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பார்க்கிற்குச் சென்றான்.

என்ன பண்ணுவது..? தம்பியை இடுப்பில் வைத்துக் கொண்டு போகணும் என்று தான் ஆசைப்பட்டான். ஆனால், கார்த்தியோ ஓவர் வெயிட். அந்தக் காரணத்தால் தான் தன் சைக்கிளில் அமர வைத்துக் கொண்டு சென்றான்.

அவர்கள் அந்தப் பார்க்கிற்குப் போவதற்கு முன்னாடியே பிரீத்தி அவளின் அம்மா மேரி கூட அங்கே வந்து இருந்தாள்.

ஊஞ்சலில் அவள் விளையாடி கொண்டு இருக்கையில் அங்கே தன் தம்பியுடன் வந்த வினய் அவளைக் கோபத்தோடு முறைத்துக் கொண்டு பார்த்தான்.

தன் அண்ணனின் கோபத்துக்குக் காரணம் புரியாது முழித்த கார்த்தி, “அட அண்.. என்.. ஆச்..”, எனத் தன் மழலை குரலில் கேட்டான்.

வினய், “அதுவா கார்த்தி..? நான் அடிக்கடி சொல்வேன் ல! நீ பிறந்த போது ஒரு பொண்ணு நம்ம அம்மாவோட நகையைக் கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணி விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போய்ட்டானு..? அந்தப் பிரீத்தி இவள் தான்.”, எனக் கோபம் குறையாத அதே குரலில் சொன்னான்.

கார்த்தி, “ஓ.. அட அண்.. ஓகே..”, என்றவன் பிறகு என்ன யோசித்தானோ உடனே ஊஞ்சலில் ஆடி கொண்டிருந்த பிரீத்தியின் முடியை போய் இழுத்தான்.

வினய், “ஓய் கார்த்தி! விடு டா! அவளின் முடியை விடு! ஏன்டா இப்படிப் பண்ற..? பாவம் அவளை விடு! அவள் கிட்ட நல்லா இருப்பதே அவள் முடி தான். அதைப் போய்.”, எனக் கூறினான்.

எப்படியோ பல போராட்டத்துக்குப் பிறகு கார்த்தியை அவளிடம் இருந்து பிரித்தவன், “ஏன் கார்த்தி இப்படிப் பண்ண..?”, எனச் சிறு கோபத்தில் கேட்டான்.

கார்த்தி, “அட.. அண்.. அது.. அவள்.. உன்.. ஏமாற்.. போ.. னா..‌ல..”, எனத் திரும்பி தன் மழலை குரலில் சொன்னான்.

வினய், “அடேய் தம்பி! நீ என்னமோ சொல்ல வரே மட்டும் தெரியுது. ஆனால், அது என்னன்னு மட்டும் இந்த அண்ணனுக்கு ஒண்ணுமே புரியல டா..”, எனக் கூறி தன் தலையைச் சொறிந்தான்.

கார்த்தி, “அட.. அண்..”, என்றவன் தன் அண்ணனுக்குப் புரியவைக்க முடியல என்ற மனவருத்தம் கொண்டு வினய்யை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்.

வினய், “கார்த்தி! நீ என் குட்டி ல..? என்னடா ஆச்சு..? ஏன்டா இப்படிக் குழந்தை மாதிரி அழுதுகிட்டு இருக்க..? ஐயோ! நீ உண்மையில் குழந்தை ல அதை மறந்துட்டேன் பார். என் செல்லக்குட்டி ரொம்பக் கோபக்காரன், தைரியமானவன் ஆச்சே! அவன் இப்படியெல்லாம் அழுவானா..? சொல்லு! சொல்லு! இன்னும் என் செல்லம் அழுகை நிறுத்தாமல் இருக்கானே! அப்போ நீ என் செல்ல குட்டி இல்லையா..? வேற யாரோ வா.”, எனக் கட்டிக்கொண்டு சமாதானம் பல செய்தான்.

கார்த்தி, “இல்ல! அட.. அண்.. நா.. உன் செல்.. குட்.. தா..”, எனக் கண்ணைத் துடைத்துக் கொண்டு சொன்னான்.

வினய், “இப்ப கூடப் பார்! நீ என்ன சொல்ற புரியல. ஹ்ம்ம்.. இருந்தாலும் அழுகை நின்றதில் சந்தோசம்.”, என்றவன் அதற்குப் பரிசாகத் தன் தம்பியின் கன்னத்துக்கு முத்தம் ஒன்றை வைத்தான்.

பிரீத்தி, அவளின் அம்மா மேரி இருவரிடமும் மன்னிப்பு கேட்டான்.

வினய், “சாரி பிரீத்தி! சாரி ஆன்ட்டி!. இவன் என் ஒரே தம்பி தான். ஏன் இப்படிப் பண்ணான் தெரியல! தயவு செய்து தப்பா நினைக்காதீங்க. பிளீஸ்! பிளீஸ்! சாரி.”, எனத் திரும்பி திரும்பி மன்னிப்பை வேண்டினான்.

மேரி, “சாரி சொன்னா! நடந்ததெல்லாம் இல்லைன்னு ஆயிடுமா..?”, எனக் கூறி அவனின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றார்.

என்ன காரணமோ? மேரிக்கு வினய், கார்த்தியை பார்த்த நொடி முதல் பிடிக்கவில்லை. அதனைப் புரிந்து கொண்ட பிரீத்தி , “மம்மி நான் அன்னிக்கே சொன்னேன் ல! ஒரு பையன் என்னைச் சாப்பாடு சாப்பிட்டே கடத்தல் கும்பலிடமிருந்து காப்பாற்றினான் என்று. அவன் இவன் தான் மா! விநாயக் என்னோட ஃப்ரெண்ட்.”, என்று கூறி பேச்சை மாற்றினார்.

மேரி, “விநாயக். ச்சே! இது என்ன பெயர்..? கேட்கவே கேவலமாக இருக்கு.”, எனக் கூறி முகம் சுளித்தார்.

மேரி ஒரு தீவிர கிறிஸ்தவப் பெண்மணி. தன் மத ஆட்களிடம் மிகவும் அன்பு செலுத்தும் இவர் மற்ற மத மனிதர்களிடம் தொழில் பேச்சு வார்த்தை தாண்டி சிறு புன்னகையுடன் கூடப் பேச மாட்டார். ஆனால், அவரின் கணவர் தாமஸ் இவருக்கு நேர் எதிர். எல்லா மதமும் சம்மதமே என்கிற கொள்கை கொண்டவர் எல்லாரிடமும் நட்பாகப் பழகுபவர். அதனாலேயே அவர் கண் பார்வையில் இருக்கும் கடையில் மட்டும் கூட்டம் அலை மோதும். தன் எதிரில் நிற்கும் மனிதர்களிடம் தன் சிரித்த முகத்துடனே பேசிப் பேசியே நட்புடன் நெருங்கி விடுவார்.

இருவரும் என்னதான் இந்த விஷயத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் தன் ஒரே பெண் விஷயத்தில் மட்டும் அன்பு மழை பொழிவார்கள்.

வினய், “ஆமாம் ஆன்ட்டி! எனக்குக் கூட இந்தப் பெயர் பிடிக்கல. அதன் எல்லாரையும் என்னை வினய் என்று மட்டும் கூப்பிட சொல்லிட்டேன். வினய்… ஹ்ம்ம்.. சூப்பரா! ஸ்டைலா இருக்குல..?”, எனக்கூறி ஸ்டைலாகத் தலைவாரிக் கொண்டான்.

மேரி, “ஹ்ம்ம்.. அந்தப் பெயரை விட இந்தப் பெயர் ஓகே தான்.”.

அதற்கு மேல் என்ன பேசுறது எனப் புரியாத அவர்களின் அமைதியை உடைக்கவே பிரீத்தி பேச ஆரம்பித்தாள்.

பிரீத்தி, “அப்பறம் வினய், உன் வீடு எங்க இருக்கு..?”.

வினய், “அதோ அங்க தூரத்தில் ப்ளூ பைண்ட் (Blue paint) அடித்த வீடு தான் எங்க வீடு. உன்னை இந்த ஏரியாவில் பார்த்ததே இல்லயே! இங்கே என்ன வேலையாக வந்தே..?”, எனப் பதில் அறியும் ஆவலில் கேட்டான்.

பிரீத்தி, “இன்னிக்கு தான் இந்த இடத்துக்குக் குடி வந்தோம். உன் வீட்டுக்கு பக்கத்து வீடு தான்.”, எனக் கூறி சிரித்தாள்.

வினய், “ஆய் ஜாலி!. அப்போ இனி அடிக்கடி மீட் பண்ணலாம்.”, என்றான்.

மேரி, “இங்க பார் வினய், அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் எனக்குப் பிடிக்காது! புரியுதா..?” – மேரி

சோகமாக முகத்தை வைத்தவன் அதே குரலில், “ஓ! சரி ஆன்ட்டி. இட்ஸ் ஓகே.”, எனக் கூறி கண்ணைக் கசக்கி அழுவது போல நடித்தான்.

அவன் சோக முகம் மேரியை ஏதோ பண்ண, “சரி! சரி! வீட்டுக்கு வா. ஆனால் ரொம்ப நேரம் எல்லாம் தங்க கூடாது. அது எனக்குப் பிடிக்காது! வந்தியா! சத்தம் போடாமல் விளையாடிட்டு போய்ட்டே இருக்கணும்.”, எனக் கண்டிப்பான குரலில் சொன்னார்.

அவன் அதற்குச் சரி எனத் தலை ஆட்டி விட்டு, “அப்பறம் பிரீத்தி நீ எந்த ஸ்கூல்..?”, எனக் கேட்டான்.

பிரீத்தி, “UKG வரை பல்லாவரத்தில் இருந்த ‘Sebastian Matriculation Higher Secondary School’ தான் டா. இப்போ அது எங்க வீட்டில் இருந்து ரொம்பத் தூரம் சொல்லி பம்மல் ல இருக்கும் ‘Sri Sankara Matriculation Higher Secondary School’ அப்பா சேர்த்து விட்டுட்டார். புது ஸ்கூல் எப்படி இருக்கும் நினைத்தால் பயமா இருக்கு.😣”, என கவலை குரலில் சொன்னாள்.

வினய், “ஓய்! நானும் அதே ஸ்கூல் தான். நாளை முதல் ஐயா ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் ல!. ஹ்ம்ம்.. அப்பறம் ஸ்கூல் பற்றிக் கவலைப்படாதே நான் இருக்கேன்.”, என நம்பிக்கை தந்தான்.

என்ன தான் மேரிக்கு வினய்யே பிடிக்கல என்றாலும் தன் பொண்ணு கூட ஒரே ஸ்கூல்! ஒரே கிளாஸ்! எனப் போறவன் என்ற காரணத்தால் எதுவும் அதற்கு மேல் சொல்லாமல் இருந்தார்.

தன் பொண்ணு காலையில் இருந்து அழுத அழுகை அவரின் மனதில் இருந்த மத வேறுபாட்டை வினய் விஷயத்தில் கொஞ்சம் ஒதுக்கியது.

தன்னை விட்டு தன் அண்ணன் மற்றவர் கூடவே பேசிக்கிட்டு இருக்கானே என்ற கோபத்தில் கார்த்தி, “அட அண்.. சூசு..வருது.”, எனக் கார்த்தித் தன் சுண்டு விரலை காண்பித்தான்.

வினய், “ஓ! சரி பிரீத்தி, ஆன்ட்டி. என் தம்பிக்கு அவசரம் சொல்றான் அதனால் இப்போ நான் கிளம்புகிறேன். பிரீத்தி, அப்பறம் பார்போம் பக்கத்து வீடு தானே..? நீயும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போ.”, என்று கூறி கிளம்பி விட்டான்.

கார்த்திகேயன் ட்ரெஸ்ஸில் சிறுநீர் கழிப்பதற்குள் உடனே அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போக வேண்டும் என்று நினைத்து சைக்கிளை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றான்.

மேரி, “ப்ரீத்தி, இங்க பார் ப்ரெண்ட், கூடப் படிக்கிற பையன் சொல்லி ரொம்பவே ஆட்டம் போட கூடாது. ஓகே..? நீ குழந்தை, நம்ம பழக்க வழக்கம் அவங்களின் பழக்க வழக்கம் என்னன்னு உனக்குத் தெரியவே தெரியாது.”, என்றார்.

ப்ரீத்தி, “ஓகே மம்மி..”, வாயால் அவள் அப்படிச் சொன்னாலும் மனசுக்குள், ‘ நீ வேண்டாம் சொல்றதை தான் செய்வேன் போ! இனி வினய் தான் என் க்ளோஸ் ப்ரெண்ட்.’, என நினைத்து உறுதி கொண்டாள்.

                       ****************

வீட்டுக்குள் அவசர அவசரமாகத் தன் தம்பியை அழைத்து வந்தவன் ஹாலில் தன் அம்மா சிவகாமியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த ஆஷாவை பார்த்து விட்டு, “ஆஷா நீயா..? சரி! சரி! ஒரு நிமிசம் வெயிட் பண்ணு. என் தம்பிக்கு அவசரம் சொன்னான் ரெஸ்ட் ரூம் ல விட்டுட்டு வரேன்.” , என ஓடினான்

என்ன பண்றது டிரஸ் ல பெய்ந்து விட்டால் அந்த நாற்றத்தை எப்படித் தாங்குவது?🤢🤢😷

எப்படியோ கார்த்திச் சிறுநீர் கழித்த பிறகு அவனையும் அழைத்து வந்தவன், “ஓய்! ஆஷா, எப்படி இருக்கே..? அன்னிக்குக் கடைசியாகக் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்த போது பார்த்தது. அதற்குப் பிறகு நாம பார்க்கவே இல்ல ல..?”, என ஒரு வருடத்துக்குப் பிறகு தன் தோழியைப் பார்த்த சந்தோசத்தில் கேட்டான்.

சிவகாமி, “விநாயக் கண்ணா, உனக்கு இந்தப் பொண்ணை முன்னாடியே தெரியுமா..?”.

வினய், “ஹ்ம்ம்.. தெரியும் மா! அன்னிக்கு சொன்னேன் ல.. அந்தக் கடத்தல் கும்பலில் மாட்டியவர்களில் என்னுடன் சேர்த்து இரண்டு பொண்ணுங்க இருந்தாக என்று. அந்த இருவரில் இவளும் ஒருத்தி. பெயர் ஆஷா, என் ப்ரெண்ட். ரொம்ப நாளாக உங்களிடம் சொல்லி இவளை போய்ப் பார்க்கணும் நினைத்தேன் ஆனால் கார்த்திப் பிறந்த பிறகு மறந்தே போய்ட்டேன்.”, என்றான்.

சிவகாமி, “ஓ! அப்படியா குட்டி..?. இப்போ இந்தப் பொண்ணு நம்ம எதிர் வீடு தான். இனி அடிக்கடி நம்ம வீட்டுக்கு வருவாள். ஆஷா வருவாய் ல..?”, எனக் கொஞ்சல் குரலில் கேட்டார்.

ஆஷா, “ஹ்ம்ம்.. வருவேன். இதே மாதிரி நான் ஒவ்வொரு தடவை வரும் போதும் இதே மாதிரி டேஸ்ட்டா பாதாம் மில்க் கலந்து கொடுக்கணும். ஓகே.?.”, எனக் கூறி சிரித்தாள்.

அவளின் சிரிப்பில் மகிழ்ச்சி கொண்டே சிவகாமி, “வாலு! வாலு! சரி சரி கண்டிப்பா கலந்து கொடுப்பேன். சரி விநாயக் நீ பேசி கொண்டு இரு நான் கிச்சன் ல இருக்கும் வேலையைப் போய்ப் பார்க்கிறேன்.”, எனக் கூறி சென்று விட்டார்.

அவர் போன பிறகு தன் கையில் இருந்த சாக்லேட்டை கார்த்தியிடம் கொடுத்துக் கொண்டே ஆஷா, “கார்த்தி, செல்லம் இங்க பார் அக்கா உனக்குச் சாக்கி எடுத்துக்கிட்டு வந்திருக்கேன். வாங்கிக்கோ!வாங்கிக்கோ!”, எனக் கொஞ்சி கொடுத்தாள்.

கார்த்தி வாங்கிக்கட்டுமா எனக் கண்ணால் வினய்யிடம் அனுமதி கேட்டான். வினய் சரி எனத் தலை ஆட்டிய பிறகு, “தங்க்.. கா..”, எனக் கூறி வாங்கிக் கொண்டான்.

அப்பறம் ஆஷா வினய் பேசினார்கள்..

ஆஷா, “வினய், அன்னிக்கு நம்ம பார்த்த போது உங்க அம்மா கர்ப்பமாகத் தானே இருக்காங்க சொன்னே! இப்போ என்னவென்றால் ரெண்டு மூன்று வயசில் தம்பி பாப்பா எப்படி..?”, எனக் கேட்டாள்.

வினய், “ச்சே! ச்சே! இவனுக்கு ஒரு வயசு தான் ஆகுது. என்ன இவனுக்கு வளர்ச்சி கொஞ்சம் ஓவரா இருக்கு.”, என்றான்.

ஆஷா, “நா அப்பவே நினைத்தேன். என்னடா இவன் இப்படிப் பாத்திரம் பாத்திரமாகச் சாப்பிடுகிறானே! அப்போ இவனுக்குக் கூடப் பிறந்தவங்க யாராவது இருந்தால் எப்படிச் சாப்பிட வாங்கன்னு யோசித்தேன். அதன் எதிரோளி தான் இவன் வளர்ச்சி போல. ஹ்ம்ம்.. நான் சொன்னதெல்லாம் உண்மையா..?”, என்றாள்.

வினய், “ச்சே! என்னை மாதிரி இவன் இல்ல. ரொம்பவே குறையாகத் தான் இவன் சாப்பிடுவான். ஆனால், ஏதோ மெடிக்கல் பிரச்சினையால் இவன் நாளுக்கு நாள் பருமன் ஆகிறான்.”, என்றான்.

அப்பறம் சிறிது நேரம் பேசியே அவர்கள் ஸ்கூல் பற்றிப் பேசு வந்த போது பிரீத்தி போல அவளும் அதே ஸ்கூல் பெயரை சொன்னாள்.

வினய், “சூப்பர்; ஆஷா, நம்மை வச்சு விதி ஏதோ பிளான் பண்ணுது போல. நானும் அதே ஸ்கூல் தான், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம பிரீத்தியே பார்கில் பார்த்தேன் அவளும் இதே ஸ்கூல்லில் அதே கிளாஸில் சேர்ந்து இருப்பதாகச் சொன்னாள்.”, என்றான்.

ஆஷா, “செம்ம போ!. அப்போ அவ வீடு எங்க இருக்கு..?”, என்று கேட்டாள்.

வினய், “நீ எதிர் வீடு என்றால் அவள் பக்கத்து வீடு. உன்னை மாதிரி காலையில் தான் இங்க அவள் குடும்பத்தோடு குடி வந்தாள்.”.

ஆஷா, “ஆய் ஜாலி! இனி நம்ம மூணு பேரும் சேர்ந்து இந்த ஏரியாவை ஒரு கலக்கு கலக்கலாம்.”, எனக் கூறி சிரித்தாள்.

தன் அண்ணன் இப்போ கூடத் தம்பி தன்னை மறந்து இன்னொரு பொண்ணு கூடக் கடலை போடுவதைப் பார்த்த காண்டில் இதனை நாள் ‘ அட அண்.. அட அண் ‘ எனச் சொல்லி கொண்டு இருந்தவன் கோபத்தில் முழுதாகப் பேச ஆரம்பித்தான்..

கார்த்தி, “அடேய் அண்ணா..!!”, எனக் கூறிக் கத்தினான்.

அவனின் திடீர் பேசு மற்றும் தன்னை மரியாதை கலந்து திட்டிய அதிர்ச்சியில் வினய், “அடேய் விநாயகா..!!”, என மந்திரம் இல்லாத வார்த்தை சொல்லி தன் நிலைமைக்குக் காரணம் என அவன் கருதிய அந்த லார்டு விநாயகரை திட்டினான்.

இப்படிக்கு,

உங்கள் நண்பன்,

🏹விஜயன்🏹

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

நீயே என் முதல் குழந்தை 9-10

Benefits of Chocolate Smell