in , , , , , ,

அடேய் விநாயகா..! 5

அடேய் விநாயகா..!

அத்தியாயம் ஐந்து

ஆறு மாதமே கர்ப்பிணியான சிவகாமிக்கு பிரசவ வலி வர, அதனைக் கண்டு ஒரு நொடி! ஒரே நொடி தான்! ஈஸ்வர் அதிர்ச்சியில் நின்றார். அதன் பிறகு தங்களின் காரை தயார் செய்து விட்டு மருத்துவமனைக்குக் குடும்பமே கிளம்பியது.

ஒர் காரில் ஈஸ்வர் தன் மனைவி சிவகாமியோடு கிளம்பினார். வினய் (விநாயக்), அவனின் சித்தப்பா விஷ்வா மற்றும் தெய்வநாயகி என எல்லாரும் பின்னாடி இன்னொரு காரில் வந்தார்கள்.

வினய், “சித்தப்பா, இன்னிக்கே தம்பி பாப்பா வந்திடும் ல..?”, எனச் சந்தோசத்தில் கை தட்டி கேட்டான்.

தன் தாயை போல விஷ்வாவுக்குத் தன் அண்ணன் சொத்து மேல் தனி விருப்பம் எதுவும் இல்லை. ஏற்கனவே அவரின் தந்தை அவர் பேரில் எழுதிவைத்த சொத்தை வைத்தே இப்போ தனக்கென்று ஒரு சின்னச் சூப்பர் மார்கெட் நடத்தி கொண்டு இருக்கார்.

அதில் அவர் அம்மா தெய்வநாயகியே அறியாத ஒன்று என்னவென்றால் நம்ம விநாயக்கின் அப்பா ஈஸ்வர் தன் பங்கு சொத்தில் பாதியை தன் தம்பியின் பிஸினஸில் தன் மகன் விநாயக் பேரில் 25% போட்டு விட்டார் என்பது அதுவும் விஷ்வாவின் கட்டாயம் பெயரில்.

அண்ணன் தம்பி என்னவோ ஒற்றுமையாகத் தான் உள்ளார்கள். ஆனால் அதைப் புரியாத தெய்வநாயகி தான் ஈஸ்வரி பெயரில் இருக்கும் சொத்தை எப்படியாவது தன் மகன் விஷ்வாவின் பெயருக்கு மொத்தமாக மாற்ற வேண்டுமெனச் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்.

                   ********************

ஹிந்து கடவுள் கிரகத்தில் சிவன் மற்றும் சக்தி மறுபடியும் உரையாடி கொண்டு இருந்தார்கள்.

சக்தி, “சுவாமி, என்ன இது..? ஏன் நம்ம விநாயகன் இப்படியெல்லாம் பண்ணுகிறான்..?. தம்பியை பார்க்கணும் ஆசை இருக்க வேண்டும் தான். அதற்கு இப்படியா..? ஆறு மாச கருவாகியா கார்த்திகேயன் பிறந்தால் அது அவனுக்கு நன்மையா..?”, எனக் கவலையில் கேட்டார்.

சிவன், “சக்தி, எல்லாம் காரணம் காரியத்தோடு தான் நடக்கிறது. விநாயகன் ஒன்று செய்கிறான் என்றால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். நம்ம மகன் புத்திசாலி மட்டும் இல்ல தந்திரச்சாலியும் கூட. இப்போ உனக்கு அவன் அவசரப்பட்டுக் கார்த்திகேயனை சீக்கிரம் பூமிக்கு அழைத்தது போல உமக்குத் தெரியும். ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போகும் வேடிக்கையை மட்டும் பார். நம்ம மகன் ஒரே நேரத்தில் மூன்று திருவிளையாடல்களைச் செய்தது புரியும்.”, எனச் சொல்லி அவர் மர்ம புன்னகை பூத்தார்.

சிவன் சொன்னது போலச் சக்தி மாயை திரை மூலம் ஆப்ரேஷன் தியேட்டரில் இருக்கும் சிவகாமியின் நிலையைக் கண்டார்.

டாக்டர் விஜயா வெளியூர் போன காரணத்தால் சிவகாமிக்கு மற்றொரு பெண்மணி பிரசவம் பார்த்தார். சிறிது பயத்துடனேயே பிரசவம் பார்த்த அந்த டாக்டர் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆறு மாத கர்ப்பிணியான பெண் வயிற்றில் இருந்து ஒன்பது மாத வளர்ச்சியுடன் கூடிய ஒரு குழந்தை பிறக்கும் என்று.

அதுமட்டுமல்லாமல் அந்தக் குழந்தையை வெளியே எடுத்து அடுத்த நொடி வயிற்றில் இருந்த கருப்பையும் காணாமல் போய்விட்டது. அந்தக் கர்ப்பப்பை வந்த நோக்கமே கார்த்திகேயனை சரியான விதத்தில் வளர்ப்பதற்கு மட்டுமே. அதன் கடமை முடிந்தது உணர்த்த அது மறைந்து விட்டது.

அது எதுவும் புரியாதா அந்த டாக்டர், கர்ப்பப்பை காணாமல் போன விஷயத்தை வெளியே சொல்லாமல் குழந்தையை மட்டும் வெளியே காத்திருந்த ஈஸ்வரிடமும் அவரின் குடும்பத்துடனும் காண்பித்து விட்டு நர்ஸே குழந்தையை ஒரு தனியிடத்தில் படுக்க வைக்கச் சொன்னவர், உடனே டாக்டர் விஜயாவுக்குப் போன் செய்தார்.

அவர் போன் செய்து கொண்டிருந்த சமயத்தில்தான் காய்ச்சல் காரணமாகத் தன் பெற்றோருடன் அந்த மருத்துவமனைக்குள் வந்த பிரீத்தி ஊசிக்கு பயந்து ஓடி ஓர் இடத்தில் ஒளிந்தவள், அவர்களின் போன் உரையாடலை கேட்டுவிட்டாள்.

டாக்டர் பெண்மணி, “டாக்டர் விஜயா, உங்க ரெகுலர் பேஷன்ட் சிவகாமிக்கு இப்போ தான் குழந்தை பிறந்தது. அதில் ஒரு சிக்கல்..”, எனச் சொல்ல

விஜயா, “என்ன சிக்கல் மேடம்..? ஒருவேளை ஆறு மாசத்தின் பிரசவம் என்ற காரணத்தால் குழந்தை அல்லது தாய்க்கு ஏதாவது..?”, எனத் தன் சந்தேகத்தை அவள் கேட்க

டாக்டர் பெண்மணி, “அது இல்ல விஜயா மேடம். அவங்க வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்த அடுத்த நொடி கர்ப்பப்பை காணாமல் போனது. இதை எப்படி நம்ம வெளியில் சொல்ல முடியும்..?. யாருக்காவது இது தெரிந்தால் நம்ம ஹாஸ்பிடல் பெயர் தானே கெட்டு போகும்..?”, எனப் பயத்தில் கேட்க

விஜயா, “சரி இப்போ என்ன பண்ணலாம் என முடிவில் இருக்கீங்க.?”

டாக்டர் பெண்மணி, “தெரியல. நீங்களே சொல்லுங்க மேடம்.”, என முடிவு எடுக்கும் பொறுப்பை டாக்டர் விஜயாவிடம் கேட்டார்.

சிறிது நேரம் யோசித்த அந்த விஜயா, “சரி. இன்னும் ஒரு மணிநேரத்தில் நான் அங்க வருகிறேன். உடனே வேற ஒரு கர்ப்பப்பை அவருக்கு வைத்து விடுவோம்.”, என்றாள்.

டாக்டர் பெண்மணி, “மேடம், என்ன சொல்றீங்க..? கர்ப்பப்பை என்ன கிட்னி, இதயம் மாதிரியா..? வேற யாரோ ஒருத்தரின் கர்ப்பப்பையை இவர்களின் உடலில் பொருத்த..? இன்னும் நமது விஞ்ஞானம் அந்த அளவுக்கு வளரவில்லை.”, என்று கேட்டார்.

விஜயா, “அதை நானே வந்து சொல்றேன். அதுவரை யாரையும் சிவகாமி கிட்ட யாருமே நெருங்க விடாமல் பார்த்து கொள்ளுங்க.”, என்று சொல்லி போனை வைத்தார்.

போனை வைத்த இந்த டாக்டர் பெண்மணி, ‘இந்த விஜயா மேடம் என்ன லூசா..? கர்ப்பப்பையை எப்படி அறுவை சிகிச்சை செய்து மாற்றமுடியும். தட்ஸ் இம்பாசிபிள்!.’, என்று நினைத்தவர் சிவகாமியை வைத்திருந்த அறைக்குச் சென்று விட்டார்.

அவ்வளவு நேரம் அங்க நடந்த உரையாடல்களை மறைவான இடத்தில் ஒளிந்து கேட்ட பிரீத்தி, அந்தப் பெண்மணியே பின் தொடர்ந்து போனாள். அவர் போன இடத்திற்கு அருகே அவள் கண்ட வினயிடம் (விநாயக்கிடம்) போய்ப் பேசினாள்.

ப்ரீத்தி”அடேய் என்னடா உள்ள இருப்பது உங்க அம்மாவா?”, எனக் கேட்டாள்.

வினய், “ஆமாம் பிரீத்தி. நீ இங்க எப்படி..?”, என அவனும் பதில் கேள்வி கேட்டான்.

பிரீத்தி, “எனக்குக் கொஞ்ச காய்ச்சலாக இருந்தது அதான் டாக்டரை பார்க்க அம்மாவோட வந்தேன். டாக்டர் சொட்டையன் ஊசி போட வர, ஒர் இடத்தில் போய் ஒளிந்து கொண்டேன். அப்போ அங்க போற அந்த டாக்டர் லேடி யாரிடமோ ஃபோனில் பேசுறது கேட்டேன் டா. எதிர் லைனில் யார் என்ன சொன்னாங்க தெரியல. ஆனால் இவங்க பேசியது விட்டது பார்த்தால், உங்க அம்மாவுக்குப் பிரசவம் பார்த்து முடித்து விட்டு அவங்க பார்க்கும் போது ஏதோ ஒரு கர்ப்பப்பை காணாமல் போச்சாம். அதற்கு மாற்றுக் கர்ப்பப்பை போட போவதாக ரகசியமாக லேண்ட்லைன் ஃபோனில் பேசிக்கிட்டு இருந்தாங்க. ஹ்ம்ம்.. கர்ப்பப்பை என்றால் என்னடா? ஏன் அது காணாமல் போனதுக்கு இப்படி டென்ஷன் ஆகிறார்கள்..?”, எனக் கேட்க

வினய், “யாருக்கு தெரியும்..? அது ஏதாவது நகையாக இருக்கும் போல. அம்மாவை ஆபரேஷன் தியேட்டர் உள்ள கூட்டிகிட்டுப் போவதற்கு முன்னாடி அவங்க நகையை எல்லாம் கழட்டி ஒர் ஓரமா வைத்ததே பார்த்தேன். அதில் தான் ஏதோ ஒர் நகை திருட்டு போய் இருக்கும் போல! ஒருவேளை அந்த நகை பெயர் கர்ப்பப்பை என்று கூட இருக்கும். நீ அப்படிப்பட்ட நகையின் பெயரை கேள்விப்பட்டு இருக்கியா..?”.

ப்ரீத்தி, “தெரியலையே! நான் ரொம்பச் சின்னப் பொண்ணு ல.? அதான் என்ன என்ன நகைகள் இருக்கு..? அதன் பெயர்கள் என்ன..? என்று கூடத் தெரியாது. எங்க மதத்தில் அதிகமா நகை அணியும் பழக்கம் வேற இல்ல. எங்க அம்மா கூடக் கழுத்தில் ஒரு சிலுவை, கையில் இரு வளையல்கள் என்று தான் அணிந்து இருப்பாங்க.”, என்று அவளுக்குத் தெரிந்தது பற்றிச் சொன்னாள்.

வினய், “ஓ! அப்படியா..?. அப்போ நாம இப்போ என்ன தான் பண்றது..?. நாம பேசாமல் போலீசுக்கு போன் பண்ணி சொல்லி விடுவோமா..? படத்தில் கூட ஏதாவது காணாமல் போகிற சீன் வந்தால் போலீஸுக்கு தானே போவாங்க..?”, என யோசனை கூறினான்.

ப்ரீத்தி, “சூப்பர் ஐடியா டா..!. நேற்று நம்மளை வீட்டில் விட்ட போலீஸ் அங்கிளின் நம்பர் எனக்கு இன்னும் நினைவில் இருக்கு. அது அவரின் ஸ்டேஷன் நம்பர் என்று சொன்னார். நாம ஹாஸ்பிடல் லேன்லைன் மூலமா அவருக்குப் போன் பண்ணி சொல்லி விடுவோமா..?”, என்று கேட்க

வினய், “சரி! சரி! நீ நம்பரை மட்டும் சொல்லு. ஏற்கனவே நீ ஊசிக்கு பயந்து ஓடி வந்திருக்க! இப்ப என் கூட மட்டும் நீ வெளியே வந்தே, யாராவது உன்னைப் பார்த்து ஊசி போட்டுட்ட போறாங்க. நான் மட்டும் போய்ப் போன் பண்ணிட்டு வரேன்.”, என்றான்.

அவள் சரி என்று சொல்லிவிட்டு நம்பரை மட்டும் சொன்னாள். அந்த நம்பரை தன் நினைவில் ஏற்றிக்கொண்டவன் ரிசப்ஷன் ஏரியாவில் இருந்த லேண்ட்லைன் போன் மூலம் ஏசிபி அருளுக்குப் போன் செய்தான்.

அருள், “ஹலோ! போலீஸ் ஸ்டேஷன். என்ன பிரச்சினை சொல்லுங்க..?”, என்று கம்பீர குரலில் கேட்டார்.

வினய், “போலீஸ்காரர் அங்கிள், நான் வினய் என்ற விநாயக் பேசுறேன். நேத்துக்கூட என்னை எங்க வீட்டில் விட்டீர்களே..!. அதே நாலு வயசு பையன் குட்டி பையன் தான் பேசுறேன்.”, என்றான்.

அருள், “சொல்லு! குட்டி பையா, என்னோட போலீஸ் ஸ்டேஷன் நம்பரை அந்தப் பிரீத்தி பொண்ணுக்கு மட்டும் தானே கொடுத்தேன்..? உனக்கு எப்படி இந்த நம்பர் தெரிஞ்சது..?”, எனக் கேட்க

வினய், “ஹலோ..! போலீஸ்காரர் அங்கிள், கேள்வி கேட்காமல் நான் சொல்வதைக் கவனமா கேளுங்க. எனக்கு இன்னிக்கு தான் தம்பி பாப்பா பிறந்தது. எங்க அம்மாவை ஆபரேஷன் செய்யக் கூட்டிகிட்டுப் போவதற்கு முன்னாடி அவங்க நகையைக் கேட்டு வாங்கி வச்சாங்க. அதுல ஏதோ ஒரு நகை காணோம் எனச் சொல்லிக்கிட்டு ரகசியம் பேசுறாங்க. அந்த நகை பெயர் கூட ‘ கர்ப்பப்பை ‘ என்றாங்க அந்த டாக்டர் லேடி. அந்த நகை எப்படி இருக்கும் கூட எனக்குத் தெரியாது அங்கிள். அது ரொம்பக் காஸ்ட்லி நகையா..? அதனாலே தான் அது தொலைஞ்சு போச்சுனு சொல்லி அந்த டாக்டர் டென்ஷன் கூட டென்ஷன் ஆகிட்டாங்க போல. இங்க வந்து என்ன ஏதுன்னு பாக்கறீங்களா? பிளீஸ்! பிளீஸ்!.”, என்று சொல்லி கெஞ்சினான்.

அருள், “தம்பி நான் தெளிவா சொல்லு காணாமல் போனது நகையா? கர்ப்பப்பையா?..”, எனக் கூறிய அவர் குரலில் குழப்பம் தெரிந்தது.

வினய், “அடப் போய்யா! நானே எவ்வளவு கஷ்டப்பட்டு மூச்சு பிடிக்க இவ்ளோ நேரம் சொல்றேன், அதைச் சரியா காதில் வாங்கிக்க வேண்டாமா..? கர்ப்பபை என்பது நகையா என எனக்குத் தெரியாது. ஆனால், அது காணாமப் போச்சு அது மட்டும் தான் தெரியும். அப்படித் தான் டாக்டர் யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்ததாகப் பிரீத்தி என் தான் சொன்னாள். நீங்க வந்தா வாங்க! வராட்டி போங்க! நானே அந்த நகையைத் தேடி கண்டுபிடிக்கப் போறேன். டாட்டா! பாய்! பாய்.” – வினய்

அருள், “குட்டி பையா! குட்டி பையா! பொறு! பொறு! ஹாஸ்பிடல் பெயர் மட்டுமாவது சொல்லு. உடனே கிளம்பி வரேன்.”, என்று தன் கெத்தை விட்டு கெஞ்சி கேட்டார்.

போனில் ஹாஸ்பிடல் பெயர் சொல்லிவிட்டு ப்ரீத்தியை காண சென்றான். ஆனால் அவன் அங்குச் செல்வதற்குள் பிரீத்தியை கண்டுபிடித்த அவளின் அம்மா, அவளை இழுத்துக்கொண்டு ஊசி போட அழைத்துச் சென்றுவிட்டார்.

வினய், “சே! இவளுக்கு இதே வேலையா போச்சு. நேற்று நான் டா! டா! சொல்லியும் பதிலுக்குத் திட்டிவிட்டு, முறைத்து விட்டு அவள் வீட்டுக்குள் போனாள். இன்னிக்கும் அந்தத் திட்டும் இல்ல! முறைப்பும் இல்ல!. அடுத்தத் தடவை இதற்குத் தண்டனையாகப் பத்துத் தோப்புக்கரணம் போட சொல்லணும். ஹ்ம்ம்.. அதன் சரி.”, என்றவன் தன் குடும்பத்திடம் கூட அருளுக்குப் போன் செய்தது எதுவும் சொல்லாமல் அமைதியாகத் தன் தம்பி பாப்பாவை படுக்க வைத்திருந்த இடத்தைத் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான்.

அப்போ அவன் அருகே வந்த அவனின் தந்தை ஈஸ்வர், “விநாயக், என்னப்பா.? ஆசைப்பட்ட மாதிரி தம்பி பாப்பா வேற வந்துட்டான். அப்புறம் என்ன..? இனி நீ தினமும் அப்பா அம்மாவைக் கூட மறந்து விட்டு தம்பி பாப்பா கூட விளையாடுவே! சரியா..?”, என்று கேட்டு விட்டு சிரித்தார்.

வினய், “இல்லப்பா! இனி நான் ஜாலியா மத்த பசங்க மாதிரி என் தம்பி பாப்பா கூடச் சண்டை போட்டுவேன். டிவியில் வரும் சண்டைக் காட்சிகள் போல நானும் என் தம்பி பாப்பாவும் சேர்ந்து மல்யுத்தம் பண்ணி சண்டை போடுவோம். அதெல்லாம் கற்பனை பண்ணி பார்த்தாலே செம சூப்பரா இருக்கு..😋😋” – வினய்

அவன் சொன்னதைக் கேட்டு சிரித்தவர், “பார்க்கலாம்! பார்க்கலாம்! உன் ஆசை நிறைவேறுகிறதா..? இல்லையா..? என. எனக்கு என்னமோ அவன் உன் சொல்பேச்சு கேட்கும் நல்ல பிள்ளையாக இருப்பான் தான் தோணுது.”.

வினய்,”ஹி.. ஹி..அதற்கு வாய்ப்பு இல்லப்பா!. நான் 90’s கிட் அவன் 20’s கிட். உலகமே சொல்லுது 90’s kid – 20’s kid பேருக்குமே ஆகவே ஆகாது என. அப்போ என் தம்பி பாப்பா மட்டும் எப்படி..? என் சொல் பேச்சு கேட்டு இருப்பான்..?. எனக்கும் பேச்சும் ஒவ்வொரு வார்த்தைக்கு வார்த்தை சண்டை போடுற தம்பி தான் வேண்டும்.”, எனத் தன் எதிர்பார்ப்பை சொன்னான்.

ஈஸ்வர் தன்னுடைய இஷ்ட தெய்வம் விநாயகரிடம் அவரின் மகனின் வேண்டுதலை ஏற்க வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொண்டார். அவருக்கு எப்படித் தெரியும்..? அவரின் மூத்த மகன் தான் அந்தக் கடவுள் விநாயகன் மற்றும் அவரின் ரெண்டும் மகன் இப்போ பிறந்த குழந்தை தான் அந்தக் கடவுள் முருகன் தான் என்று.

பிறகு ஈஸ்வரின் தம்பி விஷ்வா அவரின் அருகே வந்து, “அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம். அது எப்படி..? அண்ணி ஆறு மாதம் தான் கர்ப்பமாக இருந்தார்கள். பின் எப்படி..? குழந்தை முழு ஆரோக்கியத்துடன் பிறந்து இருக்கும்..? ஒருவேளை டாக்டர் சரியா கணக்கு சொல்ல வில்லையா..?”, என்று தன் சந்தேகத்தைக் கேட்டார்.

ஈஸ்வர், “தெரியல டா! விஷ்வா, ஆனால், உன் அண்ணிக்கு சிவகாமிக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகல, அது போதும் டா!. குழந்தை எடை தான் வழக்கத்தை விட அதிகம் சொல்றாங்க. முழு வளர்ச்சி அடைந்த பத்து மாத குழந்தையே அதிகப்பச்சம் மூன்றரை கிலோ தான் இருக்கும். ஆனால் நம்ம பாப்பாவுக்கு இந்த ஆறு மாச வளர்ச்சியிலயே நான்கரை கிலோ இருக்கு. ஹ்ம்ம்.. சிவகாமிக்கு பிரசவ வலி வந்தது கூட ஒரு விதத்தில் நல்லது தான் போல..?. இன்னும் சில மாசம் ஆகி இருந்தால் இன்னும் குழந்தையின் எடை எவ்வளவு கூடி இருக்குமோ..?. அந்தக் கடவுள் விநாயகனின் அருளால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.” – ஈஸ்வர்

விஷ்வா, “ஆமாம் ணா! எல்லாம் அந்த விநாயகரின் அருள்”, எனக் கூறி அவர் பங்குக்கு விநாயகருக்கு நன்றி சொன்னார்.

அப்போ அங்கே அவசர அவசரமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் விஜயா ஓடினாள். விநாயக் பிறந்த சமயத்தில் தெய்வநாயகி சொன்னதன் பேரில் சிவகாமியின் கர்ப்பப்பையை யாரும் அறியாமல் எடுத்து வைத்திருந்தாள். ஏதோ ஒன்று அப்போதே அவளின் மனதை உறுத்திய காரணத்தால் அதைக் கடந்த நான்கரை வருடமாகப் பதப்படுத்தி வைத்திருந்தாள். இப்போ அதனை மறுபடியும் சிவகாமிக்கு பொருத்தும் நிலையும் வந்து விட்டது. அந்தக் கர்ப்பப்பை திரும்பி பழையபடி செயல்படுமா என்பது தெரியாத போதிலும், உறைந்த நிலையில் இருந்த அதனை எப்படியோ முயன்று தங்களின் ஹாஸ்பிடலின் சில மருத்துவர்களின் உதவியுடன் வெற்றிகரமாகப் பொருத்தி விட்டாள்.

யாருக்குமே அது மறுபடியும் செயல்படும் என்கிற நம்பிக்கை இல்லாத போது, என்ன மாயமோ..? மந்திரமோ..? அந்தக் கர்ப்பப்பை எடுத்த போது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலைக்குச் செயல் பட ஆரம்பித்து விட்டது. ஆனால், இனி அதனால் இன்னொரு குழந்தையைத் தாங்க முடியாது. அதற்கு ஏற்றது போல் ஈஸ்வரே சிவகாமி ரெண்டாவது முறை கர்ப்பம் தரித்த செய்தி அறிந்த அதே நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

எல்லாம் சரியாக முடித்த சந்தோசத்தில் டாக்டர் விஜயா மற்றும் மற்ற மருத்துவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்னும் அவர்களின் ஏமாற்று வேலை வெளிச்சம் போட்டு காட்ட அதே நேரத்தில் அந்த ஹாஸ்பிடலே ஏசிபி அருளால் முற்றுகையிடப்பட்டது. ஏற்கனவே அந்த ஹாஸ்பிடல் மேல் உறுப்பு திருட்டு செய்தது எப்படியோ தெரியவர, அந்தக் காரணம் கொண்டே விஜயா கூடச் சேர்த்து இன்னும் சில மருத்துவர்களைக் கைது செய்தனர் போலீஸார்.

சிவகாமி விஷயத்தில் மட்டும் அவர்களால் கர்ப்பப்பை திருட்டு நடந்ததை நிருபிக்க முடியவில்லை. ஏனென்றால், சிவகாமி வயிற்றில் இருந்தது அவரின் கர்ப்பப்பை தான் எனச் சில சோதனை மூலம் உறுதியானது. அதே சமயத்தில் விநாயக் தான் விளையாட்டாக ஃபோன் செய்து விட்டான் என்றே அருள் நினைத்தார்.

அவரைப் பொறுத்தவரை நடந்தது அது தான். அதில் கூடப் பல நன்மைகள் நடந்ததாக நினைத்தவர் அவனைப் பாராட்டி விட்டு சிவகாமியுடன் சேர்த்து மற்ற நோயாளிகளை வேறு ஹாஸ்பிடலுக்கு மாற்றும் வேலையில் இறங்கினார். விஜயாவின் மருத்துவமனையை இழுத்து மூடி சீல்லும் வைத்தார்கள்.

அருள் தன் கடமை முடிந்தது என்று கிளம்பும் போது அவரிடம் ஓடி சென்ற வினய், “போலீஸ் அங்கிள், அப்போ கர்ப்பப்பை நகை எங்க தான் போச்சு..?”, எனத் தன் சந்தேகத்தைக் கேட்டான்.

அருள், “அது பாதுகாப்பா உங்க அம்மாவின் வயிற்றுக்குள் இருக்குடா குட்டி பையா.”, எனச் சிரித்துக் கொண்டே வினய்யின் முடியை செல்லமாகக் களைத்தார்.

வினய், “ஓ! அப்படியா..? ரொம்பத் தேங்க்ஸ்! போலீஸ் அங்கிள். இனி நான் அவங்க நகைக்குப் பாதுகாப்பா இருப்பேன்.”, எனச் சொல்லி அவருக்குச் சல்லுட் ஒன்றை வைத்தான்.

பிறகு சிவகாமியை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் சமயத்தில் தான் அவனுக்குக் கொஞ்ச நாள் முன்னாடி இட்லி கொடுத்த அதே பாட்டி அவனின் வீட்டைத் தேடி வந்தார். அதே நேரத்தில் தான் உடம்பு முடியாமல் சிரமத்திற்கு ஆளான சிவகாமிக்கு கூடமாட உதவி செய்ய வயதான பெண்மணியைத் தேடிக்கொண்டிருந்தார் ஈஸ்வர்.

சரியாக அதே நேரத்தில் அந்தப் பாட்டி வர வினாயக் அன்புடன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்தப் பாட்டியை வேலைக்கு நியமித்தார்.

ஈஸ்வர், “அம்மா, உங்களுடைய பெயர் என்ன..?”.

பாட்டி, “சக்தியம்மாள்”.

ஈஸ்வர், “உங்களின் மற்ற குடும்பம் ஆட்கள் எங்க இருக்காங்க..?”.

பாட்டி, “அப்படி யாருமே இல்லப்பா. என் புருசன் சிவனாண்டி அந்தச் சிவனையே போய்ப் பார்க்கவே தூக்கத்திலிருக்கும் போதே காலமானார். அவரைத் தவிரக் குழந்தை குட்டி என்று யாருமில்லை..”.

சிவகாமி, “அப்படிச் சொல்லாதீங்க!. இனி நான் தான் நீங்க பெற்ற பொண்ணு. இதோ உங்க பொண்ணு நான் பெற்ற உங்க ரெண்டு பேரன்கள். இனி இது தான் உங்க குடும்பம். சரியா..?”, எனச் சொல்லி ஒர் தாயை தன் அன்பால் தத்து எடுத்துக் கொண்டார்.

பாட்டி, “நீ சொன்னாலும்! சொல்லாட்டியும்! இவங்க என் பேரன்கள் தான், நீ என் பொண்ணு தான். பேராண்டி விநாயக், இந்தப் பாட்டி சொன்னது சரி தானே..?.”, என்று சொல்லி அவர் பேரனாக நினைக்கும் வினய்யின் முத்தம் ஒன்றை வைத்தார்.

வினய், “சரி தான் பாட்டி. அப்பறம் இனி என்னை எல்லாரும் வினய் என்று தான் கூப்பிடனும். அதான் எனக்குப் பிடித்து இருக்கு. I hate lord விநாயகா.”, என்று சொல்லி அனைவருக்குமே தன் புதுப் பெயரை மனதில் பதிய வைக்கப் பார்த்தான்.

ஈஸ்வர், “அம்மா, நீ தப்பா நினைக்காதீங்க. என்னனு தெரியல பிறந்ததிலிருந்து இவனுக்கு அந்த விநாயகனை மட்டும் பிடிக்கல. என்ன காரணம்..? கூடத் தெரியல மா.”, என்று கூறி கவலை கொண்டார்.

சக்தி, “விடு பா. குழந்தை தானே, போகப் போக எல்லாம் சரியாகும். நம்ம ரெண்டாவது குட்டிக்கு என்ன பெயர் வச்சு இருக்கீங்க..?”.

வினய், “அதை நான் சொல்றேன் பாட்டி. என் தம்பியின் பெயர் கார்த்திகேயன்! சுருக்கமாகக் கார்த்தி.”, என்று அவனையே அறியாமல் சரியான பெயரை வைத்தான்.

சக்தி, “ஹ்ம்ம்… நல்ல பெயர். மூத்த பேரன் விநாயக் ரெண்டாவது பேரன் கார்த்திகேயன். அந்தக் கடவுள் விநாயகன், கடவுள் கார்த்திகேயன் போல இருப்பீங்க என வாழ்த்துகிறேன்.”, என்று மனதால் வாழ்த்துக் கூறினார்.

வினய், “ஓய்! பாட்டி, ரொம்பக் கனவு காணாதே! அந்த விநாயகன் கார்த்திகேயன் ஒரு சாதாரணப் பழத்துக்குச் சண்டை போட்ட மாதிரி, நானும் என் தம்பியும் கூடச் சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் சண்டை போடுவோம்.”, என்றான்.

                   ****************

ஒரு சிறு பழத்துக்குப் போட்டி போட்ட விநாயகன் மற்றும் முருகன்.

கலகத்திற்குப் பெயர் போன நாரதர் யாருக்கும் கிடைக்காத அரிய மாம்பழத்தை சிவனிடம் கொண்டு வந்து கொடுத்தார்.

அவரைப் பார்த்து சிவன், “என்ன நாரதா, கலகமூட்ட உனக்கு இன்று வேறு இடம் கிடைக்கவில்லையா?”, என்றார். பிறகு சக்தியிடம் பழத்தை கொடுத்து சாப்பிட சொன்னார்.

அவர் தனக்கு மாம்பழம் வேண்டாம் என்று மறுக்க, அந்தச் சமயத்தில் விநாயகரும், முருகனும் அங்கு வந்தனர்.

“பழம் எனக்குத் தான் வேண்டும்” என இருவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

விநாயகர், “அம்மா நான் தான் மூத்த பிள்ளை எனக்கே பழம் தர வேண்டும்”.

முருகன், “இல்லையம்மா, நான் தான் செல்லப் பிள்ளை. எனக்கே பழத்தை தாருங்கள்”.

உடனே சக்தி, , “சரி! சரி! சண்டை போடாதீர்கள். பழத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துப் பங்கு வைத்துத் தருகிறேன்”, என்றார்.

அதனை ஏற்காத சிவன், “இந்தப் பழம் சக்தி வாய்ந்தது. அதை வெட்டக்கூடாது. அப்படியே முழுமையாகச் சாப்பிட வேண்டும். என்ன நாரதா அப்படித்தானே..?”, என்றார்.

அதற்கு நாரதர், “ஆமாம் சுவாமி.”, என்று பணிவாகச் சொன்னார்.

சக்தி, “பழத்தை இருவரும் கேட்கிறார்களே!. பின் என்ன செய்வது..?”, என்று கவலையில் கேட்டார்.

“அப்படிக் கேள், சொல்கிறேன்” என்ற சிவன், ” “விநாயகா! குமரா! உங்களில் இந்த உலகை யார் முதலில் சுற்றி வருகிறீர்களோ, அவர்களுக்குத் தான் இந்த ஞானப்பழம்”, என்றார்.

மறுவினாடியே, “உலகத்தைத் தானே..? இதோ ஒரு நொடியில் சுற்றி வருகிறேன்”, என்று சொல்லி முருகன் புறப்பட்டார். தனது வாகனமான மயில் மீது ஏறி விர்ரெனப் பறந்தார்.

ஆனால் பதற்றமின்றி நின்ற விநாயகர் சற்று யோசித்தவர் நாரதரைப்பார்த்து, “உலகம் என்றால் என்ன..? அப்பன், அம்மை என்றால் என்ன..?”, என்று கேள்வி கேட்டார்.

இதைத்தான் எதிர்பார்த்திருந்து காத்திருந்த நாரதர் மகிழ்ச்சி அடைந்தார்.

நாரதர், “உலகம் என்றால் அம்மை, அப்பன். அம்மை – அப்பன் என்றால் உலகம் என்று அர்த்தம்”.

விநாயகர், “நன்றாகச் சொன்னீர். அப்படியானால் என் தாய், தந்தையைச் சுற்றி வந்தால் இந்த உலகை சுற்றியதாகத் தானே அர்த்தம்..?”, என்று கேட்டார்.

அதற்கு நாரதர், “ஆமாம். அதில் என்ன சந்தேகம்..?” என்றார்.

இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த விநாயகர் சிவனையும், சக்தியையும் சுற்றி வந்தார்.

விநாயகர், “உலகை சுற்றி வந்துவிட்டேன். பழத்தை எனக்கே தாருங்கள்” என்றார்.

அதை ஏற்றுக் கொண்ட சிவன், அவருக்குப் பழத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.

அந்தச் சமயத்தில் உலகை சுற்றி முடித்து விட்டு முருகன் மயிலில் இருந்து வந்து இறங்கினார். விநாயகர் கையில் பழம் இருப்பதைப் பார்த்ததும் முருகன் அதிர்ச்சி அடைந்தவர், கோபத்தோடு சக்தியை பார்த்து, “தாயே! என்ன இது..?”, என்று சத்தமாகக் கேட்டார்.

பயந்துபோன சக்தி, “எனக்கு ஒன்றும் புரியவில்லையப்பா! தாய், தந்தையைச் சுற்றிவந்தால், உலகைச் சுற்றியதாக அர்த்தமா..? என்று விநாயகன் கேட்டான். நாரதரும் அதற்கு ஒத்துக்கொண்டார். அவனும் எங்களைச் சுற்றி வந்து பழத்தையும் பெற்றுக்கொண்டான்.” என்று விளக்கம் அளித்தார்.

இதைக் கேட்டதும் முருகனின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. அதே கோபத்தோடு, “ஓகோ! பெரியவர் நீங்களே சேர்ந்து நடத்திய நாடகமா இது..?. ஹ்ம்ம்.. உங்கள் நாடகமும் நன்றாக இருக்கிறது. இச்சிறு பழ விஷயத்தில் உங்கள் குணத்தைக் காட்டியதற்கு நன்றி. நான் வருகிறேன்”, என்றவர் ஆவேசத்துடன் புறப்பட்டார்.

அதிர்ச்சி அடைந்த சக்தி, “குமரா..! நில்!”, என்றார்.

அதற்கு முருகன், “நிற்க மாட்டேன். தலைப்பிள்ளைதான் செல்லப்பிள்ளை. இளையபிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று காட்டிய உங்களுடன் இனி ஒரு நொடியும் இருக்க மாட்டேன். வருகிறேன்.”, என்று சொன்னபடி நடந்தார்.

பதற்றமடைந்த சக்தி, “குமரா! நில். நான் சொல்வதைக் கேள். எங்கே போகிறாய் நீ..?” என்றார்.

அதற்கு முருகப்பெருமான், “கேட்க மாட்டேன். எங்கோ போகிறேன். எனக்கென்று ஒர் உலகம், மக்கள் என்று ஏற்படுத்திக்கொண்டு வாழப்போகிறேன். முடிந்தால் எல்லோரும் என்னை அங்கு வந்து பாருங்கள்”, என்று சொன்னபடி நடக்கத் தொடங்கினார்.

உடனே சக்தி, சிவனிடம், “சுவாமி என்ன இது..? முருகன் கோபித்துக்கொண்டு போகிறான். அழையுங்கள்”, என்றார்.

சிவனும் குரலை உயர்த்தி, “குமாரா…! நில். தாய் சொல்லைக் கேள்”, என்றார்.

ஆனால் முருகன் எதையும் கேட்கவில்லை. கோபம் தணியாமல் புறப்பட்டுச் சென்றார்.

உடனே சிவபெருமான் வருத்தத்துடன், “பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லுனு என்பதை உணர்த்த உன் மகன் நம்மை விட்டு போகிறான்”, என்றார்.

கோபம் குறையாத முருகப் பெருமான் உடைகளைத் துறந்து, ஒரு முழுக் கோவணத்துடன் குன்றின் மீது வந்து அமர்ந்தார். முருகன் வந்து அமர்ந்த இடம் தான் பழனி எனக் கூறப்படுகிறது.

பிறகு அவ்வையார் வந்து பேசி சமாதானம் பேசியது வேற கதை.

இப்படிப்பட்ட கோபம் கொண்ட முருகன் இப்போ பூலோகத்தில் மனிதனாக வேற பிறந்து வந்துள்ளார்.

                    **************

இவ்வளவு நேரம் விநாயக் மூலம் பூலோகத்தில் நடந்த நிகழ்வை பார்த்த சக்தி, “சுவாமி, எனக்குப் புரியலை. இப்போ நடந்த நிகழ்வை பார்த்ததில் விநாயகன் பண்ணதில் என்ன நன்மை நிகழ்ந்தது..?”, என்று தன் சந்தேகத்தைக் கேட்டார்.

சக்தி சொன்னதில் சிரித்தவர்.

“இன்னுமா புரியல… சரி சொல்கிறேன்.

ஒன்று..கார்த்திகேயன் ஏதோ விநாயகனிடம் போட்டிக்கு அவனைப் போலப் பருமனாகப் பிறந்து வாழ்ந்து காட்டுவேன் சொன்னான். ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயம் இல்ல. என்னதான் மனிதனாகப் பிறப்பது என்றாலும் விநாயகன் போலப் பருமனாக உடல் என்கிற போது அவனைச் சுமக்கும் பெண்ணின் உடல் அந்தப் பாரத்தைத் தாங்குவது நடக்கிற காரியமா..? அதனால் தான் ஆறு மாத கருவாக இருக்கும் போதே மந்திரம் சொல்லி அவனை வெளியே வர வைத்து விட்டான் நமது மகன் விநாயகன். அதில் அந்தச் சிவகாமியின் உயிர் காப்பாற்றப்பட்டது.

ரெண்டு..எத்தனையோ ஏழை மக்களின் உடல் உறுப்பைத் திருடிய அந்த மருத்துவமனையை இழுத்து மூட வைத்தது மட்டும் இல்லாமல் அவர்கள் செய்த வேலையைக் கூட எல்லார் கண்ணிலும் தெரியும்படி செய்து விட்டான். அதே நேரத்தில் சிவகாமியின் கர்ப்பப்பையைத் திரும்பி அவள் வயிற்றுக்குள் வைக்கும்படியும் செய்து விட்டான்.

மூன்று..ஏற்கனவே அவன் போட்ட மந்திரம் பலிக்கவைக்க அந்த வயதான மூதாட்டிரையும் தன் வீட்டுக்கு வர வைத்து விட்டான். பெரிய குற்றம் கண்டுபிடித்த காரணத்தால் அந்த அருளுக்குப் பதவி உயர்வும் வாங்கித் தந்து விட்டான்.

இனி விநாயகன் மற்றும் கார்த்திகேயன் செய்யும் அட்டகாசங்களைப் பார்ப்பது மட்டுமே நம்ம வேலை.

வல்லவனுக்கு வல்லவன் இருப்பது போலக் கார்த்திகேயனின் ஆட்டம் இனி பார்க்க தான் போகிறாய்..”, என்றார்.

இவர்கள் பேசும் அதே நேரத்தில்..

கீழே பூலோகத்தில் வினய் என்கிற விநாயக் திரும்பி மந்திரம் சொல்லி அவனின் அடுத்தத் திருவிளையாடலை தொடங்கினான்.

“அடேய் விநாயகா..!!”

இப்படிக்கு,

உங்கள் நண்பன்,

🏹விஜயன்🏹

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Vijayan

Story MakerContent Author

அழகிய அசுரா 43

வாடகை வீடு