in

அடேய் விநாயகா..! 4

அடேய் விநாயகா..!!

அத்தியாயம் நான்கு

மந்திரத்தை சொன்ன விநாயக் தன்னுடைய வீட்டின் விலாசத்தை பாட்டியிடம் கொடுத்து விட்டு, “கூடிய சீக்கிரம் எங்க வீட்டில் திரும்பி பார்போம் பாட்டி.”, எனச் சொன்னவன் ஏசிபி மற்றும் அந்த இரு குட்டி பொண்ணுங்களோடு கிளம்பி விட்டான்.

போகும் வழியில் பிரீத்தி சும்மா இல்லாமல் போலீஸ் ஆக என்ன படிக்கணும்..? எந்த விளையாட்டில் சிறந்ததாக இருக்கணும்..? எந்தத் தற்காப்பு கலைகளைக் கற்பது சிறந்தது..? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

ஆஷா ஒண்ணும் பேசாமல் விநாயக் கின் பல்லை சோதித்துக் கொண்டு இருந்தாள். அவளுக்குச் சந்தேகம் எப்படி அவன் பித்தளை பொருட்கள், கயிறு, நாற்காலி என எந்த வித்தியாசமும் இல்லாமல் கடித்துச் சாப்பிட்டான் என்று.

அந்த ஏசிபிக்கு அறியாமல் அவன் காது வழியாகக் கேள்வி கேட்கவும் அவள் மறக்கவில்லை..

ஆஷா, “நீ உண்மையாகவே மனுஷன் தானா..?”

விநாயக், “ஏன் இப்படிக் கேட்கிற..?”

ஆஷா, “பின்ன எப்படி அவ்வளவு பொருளை சாப்பிட்டே..?”, என்று கேட்டாள்.

“தெரியல.. பசி வந்தா நான் நானாக இருக்க மாட்டேன். அந்தப் பசியில் தான் கையில் கிடைத்த எல்லாத்தையும் சாப்பிட்டேன்.”, என்று சொல்லி வெட்கத்தில் சிரித்தான்.

ஆஷா, “என்னடா டிவி விளம்பரம் மாதிரி சொல்ற..? எங்க வப்பா அடிக்கடி சொல்வார். எப்போ பார்த்தாலும் பசியில் இருக்கும் மனிதனை சைத்தான் சொல்வார்களாம். சைத்தானின் பசி அவ்வளவு சுலபமா போகாது என்றும் கொஞ்சம் விட்டால் பசியில் உணவு கொடுத்த மனிதனையே சாப்பிட்டு விடுமாம். நீ ஒன்னும் சைத்தான் இல்லை ல..?”, பயத்தில் கேட்க

விநாயக், “அந்த அளவுக்கு எல்லாம் இல்ல ஆஷா. நான் சுத்த சைவம், அதனால் நீ பயப்பட வேண்டாம் சரியா..?. என்ன கொஞ்சம் பசி வந்தால் கையில் கிடைக்கும் பொருட்களை மட்டும் வித விதமாகச் சுவை பார்ப்பேன். அப்போ பசி அடங்கினால் மட்டும் போதும் என இருக்கும். எனக்கு எப்பவும் அம்மாவே சாப்பாடு தந்து விடுவார்களா..! அப்போ உடனே பசி போய்டும். இந்தத் தடவை தான் ரொம்ப ஓவரா போச்சு.”, என்றான்.

அந்த இருவரும் ரகசியம் ஏதோ பேசுவதைப் பார்த்த ஏசிபி, “என்ன குட்டீஸ்..? என்ன ரகசியம் அங்க போகுது..?”, என்று சிரிப்பில் கேட்டார்.

விநாயக், “ஒண்ணும் இல்ல போலீஸ் அங்கிள். நான் தினமும் எவ்வளவு சாப்பிடுவேன் கேட்டாள். அவ்வளவு தான்..”, என்று சொல்லி சமாளித்தான்.

ஏசிபி, “ஹ்ம்ம்.. சரி! சரி! இருந்தாலும் குட்டி பையா, நீ வெறும் நாலு இட்லி தான் சாப்பிட்டே. ஏன் இப்படி ரொம்பக் கொஞ்சமாகச் சாப்பிடுற..? பார் ரொம்ப மெலிந்து போய் இருக்க. நல்ல சாப்பிட்ட தானே குட்டி பையா உன் உடம்பு ஸ்ட்ராங்கா இருக்கும்.”, என்று அக்கறையில் சொன்னார்.

விநாயக், “முயற்சி பண்றேன் போலீஸ் அங்கிள்.”, என்று சொல்லி சிரித்தான்.

அப்போ பிரீத்தி மனதுக்குள், ‘அடப்பாவி இதுக்கு மேல் நீ முயற்சி வேற பண்ண போறீயா..? உன் ஒரு வேளை பசியே இவ்வளவு கொடுமை என்றால் நீ இன்னும் அதிகமாக வேற சாப்பிட்டே.. இந்தியாவின் மொத்த உணவும் ஒரே நாளில் தீர்ந்து போய்டும். உனக்கு இருப்பது வயிறா? இல்ல அகல பாதாளமா? கொட்ட கொட்ட நிறையாமல் இருக்கே..😱😱’, என்று யோசித்துப் பார்த்து ஷாக் ஆனாள்.

முதலில் பிரீத்தி வீட்டில் அவளை விட்ட போது விநாயக் அவளிடம், “ப்ரீத்தி கூடிய சீக்கிரம் சந்திப்போம்..🤞🤞”, என்று சொல்ல

ப்ரீத்தி, “போடா! போடா! உன்னைத் திரும்பி சந்திக்கவே எனக்கு விருப்பம் இல்ல.. பிசாசு! பிசாசு! நீ சரியான பிசாசு.”, என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

விநாயக், “உன் பாராட்டுக்கு ரொம்பத் தேங்க்ஸ்..”, என்றான்.

ப்ரீத்தியின் பெற்றோரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்த ஏசிபி மற்ற இரு குழந்தைகளோடு கிளம்பினார்.

அடுத்து ஆஷாவை அவள் வீட்டில் விட்ட பிறகு..

விநாயக், “ஆஷா, கூடிய சீக்கிரம் சந்திப்போம்..🤞🤞”, என்று அதே வார்த்தைகளைச் சொன்னான்.

ஆஷா, “ஆஹ்.. பார்க்கலாம் வினய். எங்க அம்மா கூட என்னை நீ படிக்க ஸ்கூல் ல தான் சேர்க்க போறதா சொன்னார்கள். எங்க வப்பா கூடப் புது வீட்டை வாங்குறது பற்றிப் பேசிட்டு இருக்கார். நான் அவர் கிட்ட சொல்லி உங்க வீடு பக்கத்திலேயே பார்க்க சொல்றேன்.”, என்று சொல்லி அவனுடன் நட்பை வளர்க்கும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.

விநாயக்,”ஆய் ஜாலி! அப்படியே பண்ணு ஆஷா. I’m waiting..😎😎. நீ அங்கே வந்த பிறகு அந்த ஏரியாவையே ஒரு வழி பண்ணுவோம்”, என்றான்.

ஆஷா, “ஓகே. டா டா..👋👋 வினய்.”, என்று சொல்லி விட்டு அவள் வீட்டுக்கு சென்று விட்டாள்.

விநாயக், ‘ வினய்… ஹ்ம்ம் என் பெயரை இப்படிக் கூடச் சுருக்கி கூப்பிடலாம் போல..? நல்ல தானே இருக்கு..?. இனி இதையே ஃபிக்ஸ் பண்ணிடுவோம்.’, என்று நினைத்து விநாயக் வினய்யாகச் செட் ஆனான்.

ஆஷாவின் அம்மாவிடம் பேசிவிட்டு வந்த ஏசிபி அடுத்துப் போனது வினய்யின் வீட்டுக்கு தான்.

தன் மகனை திரும்பி பார்த்த அந்த ஆறு மாத கர்ப்பிணியான சிவகாமி தன் நிலை மீறி அவனை மடியில் உட்கார வைத்து கட்டி அழுதார்.

ஈஸ்வர், “ரொம்ப நன்றி சார். இவன் நாங்க வணங்கும் விநாயகர் கொடுத்த வரம். இவன் இல்லாத ஒரு வாழ்க்கை நினைத்தாலே முடியல சார். எங்க உயிரையே திரும்பி கொடுத்த உங்களுக்கு எப்படி நன்றி கடன் செலுத்துவேன்..?”, என்று சொல்லி கண்ணீர் வடித்தார். அவரின் கண்ணீரில் குழந்தை திரும்பி கிடைத்த சந்தோசமும் இருந்தது.

ஏசிபி, “மிஸ்டர் ஈஸ்வர், உங்க கஷ்டம் எனக்கும் புரியும். எனக்கும் ஒரு மகன் இருக்கான். அவன் பெயர் பாலகிருஷ்ணன். எங்களுக்கு ஒரே பையன் வேற. உங்க பையனை போல என் பையனை யாராவது கடத்தி இருந்தால், நான் ஒரு போலீஸ் என்பதைக் கூட மறந்து இடிந்து போய் இருப்பேன். நம்ம வெளி உலகில் எப்படி இருந்தாலும் வீட்டை பொறுத்தவரை அன்பான உறவுகளால் பிணைக்கப்பட்ட வெறும் மனிதர்கள் தானே..?.”, என்று ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னார்.

ஈஸ்வர், “சரியாகச் சொன்னீர்கள். அப்பறம் உங்க பெயர் இன்னும் நீங்க சொல்லவே இல்லை”.

ஏசிபி, “அருள். ACP அருள்.”, என்றார்.

வினய், “போலீஸ் அங்கிள், நீங்கள் கூடிய சீக்கிரம் ACP அருள் ல இருந்து DGP அருளாகத் தான் போறீங்க..” – வினய்

அருள், “பார்க்கலாம் குட்டி பையா..”, என்றவர் அந்தக் கடத்தல் காரர்களைப் போய் மிதிக்க கிளம்பி விட்டார்.

(இவர் வேற யாரும் இல்ல… என் முதல் முன்று கதையில் வந்த அதே டிஜிபி அருள் தான். “ஒருவர் மீது இருவர் சாய்ந்து..!!” என்ற கதையில் பாலகிருஷ்ணன் என்பவனுக்கு அப்பாவாக வந்து இருப்பார்)

திரும்பி கண்ணை மூடி தன் மந்திரத்தை சொன்ன வினய், சில ஆசைகளைக் கேட்டான்.

பிறகு..

வினய், “அப்பா நம்ம தெய்வநாயகி பாட்டி எங்கே?”

ஈஸ்வர், “அவங்க நீ காணாமல் போன துக்கத்தில் ரூமுக்கு போனவங்க தான். அப்பறம் அதே கவலையில் வெளியில் வரல. நீயே போய்ப் பாட்டியை பாருப்பா. உன்னைத் திரும்பி பார்த்த சந்தோசத்தில் எழுந்து டான்ஸ் கூட ஆடுவங்க.”, என்றார்.

வினய், “சரி பா..”, என்றவன் தெய்வநாயகியை பார்க்க ஓடி சென்றான்.

அவன் போன பிறகு இங்கே அவனின் தாய் சிவகாமி, “நம்ம பிள்ளை விநாயக் முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் ல..? என்ன தான் உருவத்தில் கடவுள் முருகன் மாதிரி இருந்தாலும் நமக்கு அவன் அந்தக் கடவுள் விநாயகரின் மறு உருவம் தான். என்ன அவனுக்கு ஒரே ஒரு கெட்ட பழக்கம். எப்போ பார்த்தாலும் அந்த விநாயகரை திட்டுர மாதிரி ‘ அடேய் விநாயகா..!! அடேய் விநாயகர்..!!’ எனச் சுவாமி சுலோகம் சொல்ற மாதிரி அடிக்கடி சொல்லி கிட்டு இருப்பான். அதை விட்டால் நம்ம மகன் ரொம்பச் சமத்து தான்”, எனச் சொல்ல

அதனை ஆமோதித்த ஈஸ்வர், “ஹ்ம்ம்.. உனக்கு அப்படித் தோன்றுகிறது. ஆனால் எனக்கு அப்படி இல்ல. இங்க பார் சிவகாமி, பக்தியில் ரெண்டு வகை இருக்கு. முதல் வகை, நமக்கு ரொம்பப் பிடித்த கடவுளை எந்த நேரமும் துதி பாடிக்கிட்டே இருந்து எல்லாருக்கும் நம்ம பக்தியை உணர்ந்துவது. இன்னொரு வகை, அதே பக்தி முற்றி போய் அந்தக் கடவுளே நண்பனாகவோ குழந்தையாகவோ நினைத்துச் சண்டை போடுவது, நம்ம விநாயக் மாதிரி. நம்ம பக்தியில் ‘ஓம் கணபதி! ஓம் கணபதி!’ எனச் சொல்கிறோம். நம்ம மகன் அவன் பக்தியை நிருபிக்க ‘அடேய் விநாயகா! அடேய் விநாயகா!’ எனச் சொல்கிறான். சின்னக் குழந்தை தானே போகப் போகச் சரியாகி விடுவான். என் கவலையே நமக்கு அடுத்து பிறக்க போகிற குழந்தைக்கும் உனக்கும் பிரசவ சமயத்தில் எந்தக் கஷ்டமும் வர கூடாது என்று தான்.”, அவரின் கலலையைச் சொன்னார்.

சிவகாமி, “ஏன் அப்படிச் சொல்றீங்க?”

ஈஸ்வர், “அது இல்லமா.. நீயோ ஆறு மாசம். ஆனால் குழந்தையின் வளர்ச்சியோ ஒன்பது மாத அளவுக்கு இருக்கு. ஏதாவது பிரச்சனையா என்கிற மாதிரி ஒரு சின்னப் பயம்..”, என்றார்.

ஈஸ்வர் வாயை தன் கையால் முடிய சிவகாமி, “இங்க பாருங்க, எனக்கும் சரி! நம்ம குழந்தைக்கும் சரி! ஒண்ணுமே ஆகாது. அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தால் அந்தப் புராண சாவித்திரி அவள் கணவனின் உயிருக்குச் சண்டை போட்ட மாதிரி, நீங்க உங்க பொண்டாட்டிக்கும் உங்களின் குழந்தையின் உயிருக்காகவும் அந்த எமனிடமே சண்டைக்குப் போக மாட்டிங்க..??”, என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

ஈஸ்வர், “கண்டிப்பா. நான் சமையல் செய்யும் கரண்டி கொண்டு ஒரு பெரிய போர் செய்ய எமனுக்கு எதிரா நின்று சண்டை போடுவேன்.”, என்று சொல்ல

அதனைக் கற்பனையில் நினைத்து பார்த்த இந்த ஜோடிகள் சிரித்தார்கள்.

அதே நேரத்தில் தெய்வநாயகியை பார்க்க சென்ற வினய் என்கிற நம்ம விநாயக், “இந்தக் கிழவி போய் நமக்காக ஃபீல் பண்ணுது சொன்னால் நம்ப முடியலையே..?. ஏதோ தப்பா இருக்கே..?. முதலில் அந்தக் கிழவி என்ன தான் பண்ணுது என்பதை ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வருவோம். அதன் சரி.”, எனச் சொன்ன நம்ம வினய் ஜன்னல் வழியாகப் பார்த்தான்.

அங்கே அந்தத் தெய்வநாயகி..

Happy இன்று முதல் HappyHappy இன்று முதல் Happyகோடை மழை மேகத்தைக் கண்டுஆடும் மயிலே வாஆடி வரும் தோகையைக் கையில்மூடும் அழகே வாதுணை எங்கே… இதோ இங்கே…சுகம் எங்கே… இதோ இங்கேஆ…Happy இன்று முதல் ஹேப்பிஆ…Happy இன்று முதல் ஹேப்பி

என்ற பாடலை பாடிக்கொண்டு விநாயக் காணாமல் போன சந்தோசத்தில் நடனம் ஆடி கொண்டு இருந்தாள்.

அதனைப் பார்த்த வினய் என்கிற விநாயக், “அடிப்பாவி கிழவி! நான் காணாமல் போனதில் உனக்கு இவ்வளவு சந்தோசமா..? இருக்கக் கூடாதே. இதுக்கு ஒரு வழி பண்ணியே ஆகணுமே.”, என்று சொன்னவன் ஒரு தந்திரம் தீட்டினான்.

இந்தத் தடவை மந்திரம் எதுவும் பயன்படுத்தாமல் ஒரு வாரத்துக்கு முன்னாடி மலம் சரியாக வராத காரணத்தால் அவனின் தந்தை ஈஸ்வர் தேவைக்கு அதிகமாக வாங்கிச் சில பேதி மாத்திரையை ஒரு லெமன் ஜுஸ்ஸில் கலந்து தெய்வநாயகி இருந்த ரூமின் கதவை தட்டினான்.

முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு கதவை திறந்த அவர் சத்தியமாக அங்கே நம்ம வினய்யை எதிர்ப்பார்க்க வில்லை. அப்படி இருந்தும் நொடிப்பொழுதில் சந்தோசம் கொண்டது போல முகத்தினை மாற்றிக்கொண்டவர், “என் கண்ணா..! என் செல்லமே..! வந்துட்டியாப்பா..?. நீ காணாமல் போனது தெரிந்து என் பாதி உயிரே போச்சு தெரியுமா..?”, என்றெல்லாம் சொல்லி ஓவராக நடித்தார்.

வினய், “அட விடுங்க பாட்டி. உங்க மொத்த உயிரும் இனி என் கையில் தான். உங்களை நான் சும்மா விடுவேனா..? என்னால் உங்களுக்கு ஆக வேண்டிய விஷயங்கள் எத்தனை இருக்கு..? இந்தப் பேரன் அவனின் கடமையை சரியா செய்வான்😈😈. பாருங்க என்னை நினைத்து நினைத்து அழுதிங்க போல..? அதை உங்க முகமே சொல்லுது. நீங்க ரொம்பச் சோர்வாக இருக்கிற மாதிரி வேற இருக்கு. இதோ உங்களுக்காக நான் ஆசையாகக் கலந்த லெமன் ஜுஸ்.”, என்று சொல்லி அவனின் அன்பை காட்டினான்.

அவன் எப்படி வந்தான் என்ற சந்தேகம் இருந்தாலும் அவரின் முன்னால் நீட்டப்பட்ட லெமன் ஜுஸ் அவரின் கண்ணைக் கவர உடனே சிரித்த முகத்தோடு வாங்கியவர் ‘லபக் லபக்’ எனக் குடித்தார்.

சுவையில் ஏதோ வேறுப்பாடு தெரிய, “குட்டி, ஜுஸ் ஏன் பா கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு..?”, என்று கேட்க

வினய், “எனக்குத் தெரியல பாட்டி..! முதல் முதலில் ஜுஸ் போடுறேன் ல..? கொஞ்சம் சர்க்கரை கூடவோ குறைத்தோ போட்டு இருப்பேன். அதான் டேஸ்ட் வேற மாதிரி இருந்து இருக்கும்.”, என்று அவனின் தன் நடிப்பை வெளிப்படுத்தினான்.

தெய்வநாயகி, “ஓ! அப்படியா..? சரி! சரி!. இது கூட நல்லாதான் இருக்கு. இதே மாதிரி அடிக்கடி பாட்டிக்கு கலந்து கொடுக்கணும். சரியா..?

வினய், “நீங்களே சொல்லிட்டீங்க ல.. பின்ன செய்யாமல் இருப்பேனா..? கண்டிப்பா வாரத்துக்கு ஒரு தடவை இதே மாதிரி லெமன் ஜுஸ் நீங்களே வேண்டாம் சொன்னாலும் கலந்து கொடுப்பேன்”, என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

அவனின் சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் சேட்டை புரியாது நன்றி சொல்லிவிட்டு அவரின் வேலையை பார்க்க சென்றார்.

ஆனால் அன்று இரவு நடந்தது தான் வேடிக்கை. கிட்டதட்ட பத்துக்கும் அதிக முறை மலம் கழிக்கும் பிரச்சனையால் இரவு கழிவறையே தெய்வநாயகியின் இருப்பிடமாக ஆனது.

தெய்வநாயகி வயிற்றுப்போக்கால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க அதற்குக் காரணமான வினய்யோ நல்ல தூக்கத்தில் இருந்தான்.

                     ****************

விநாயக் செய்த கலாட்டாக்கள் எல்லாம் பார்த்த சிவன் மற்றும் சக்தி தங்களுக்குள்ளேயே உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

சக்தி, “சுவாமி, அந்தக் கடத்தல் உங்கள் விஷயத்தில் விநாயகர் சொன்ன மந்திரத்தின் பலன் எல்லாம் சரி. அதன் பிறகு அந்த வயதான மூதாட்டி விஷயத்திலும் அந்தப் போலீஸ்காரர் விஷயத்திலும் அந்த மந்திரத்தின் பலன் என்னவாக முடியும்..?”, என்று தன் சந்தேகத்தைக் கேட்டார்.

சிவன், “முதலில் அந்த வயதான மூதாட்டி விஷயத்துக்கு வருவோம். நம்ம விநாயகன் சொன்ன மந்திரம் அந்த இடத்தில் தெருவோரத்தில் கடை வைத்து இருந்த அனைவரின் வாழ்க்கையையும் விதியையும் சேர்த்து மாற்றிவிட்டது. சாலையை விரிவுப் படுத்தும் எண்ணம் தீடீர் என அந்த இடத்து மினிஸ்டருக்கு வர, உடனே நேரம் காலம் பார்க்காமல் களத்தில் இறங்கி விட்டான். அது மட்டும் அல்லாமல் அங்கே கடை வைத்து இருந்த அனைவருக்கும் மற்றொரு இடத்தில் அரசாங்க சொந்த பணத்திலேயே கட்டிடம் கட்டி கொடுத்துக் கடை வைக்க அனுமதியும் தந்து விட்டார்கள். அந்த வயதான மூதாட்டியால் ஒரு கடை வைத்துத் தனித்துச் சமாளிக்க முடியாத காரணத்தால் நம்ம விநாயகன் சொன்ன இடத்துக்குப் போக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். மொத்தத்தில் யாருக்கும் கஷ்டம் தராத ஒரு விஷயத்தையே மந்திரம் மூலம் விநாயகன் செய்துவிட்டான்.”, என்றார்.

சக்தி, “கேட்டகவே சந்தோசமாக இருக்கு. நம்ம மகன் என்ன செய்தாலும் அதில் யாரும் அறியாத ஒரு பெரும் நன்மை அடங்கியே இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன். உங்களின் திருவிளையாடலை விட அவனின் திருவிளையாடல் மிக அருமையாக உள்ளது. அடுத்து அந்தப் போலீஸ்காரர் விஷயத்தில் நடந்து நன்மை என்ன..?”, என்று கேட்க

சிவன், “காவல் துறையில் உயர்ந்த பொறுப்பு இந்தப் போலீஸ்க்காரனுக்குக் கிடைக்க மந்திரம் சொல்லி விட்டான். சாதாரணமாகப் பார்க்க இது சின்ன விஷயமாகத் தான் தெரியும். ஆனால் ஒரு மனிதனின் மிகப்பெரிய விதியையே தலைகீழாக மாற்றி விட்டான் நமது மகன் விநாயகன். அவன் செய்த மாற்றத்தின் நன்மை இந்தக் கதையில் உமக்குத் தெரியவே தெரியாது. ‘ காதல் எனும் மாயவலை’, ‘என்ன மாயம் செய்தாய்..??’ மற்றும் ‘ ஒருவர் மீது இருவர் சாய்ந்து..!!’ என்ற கதையில் நடந்ததைப் பார்த்தால் உனக்கே தெரியும். அருள் டிஜிபி என்ற ஒரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு உள்ளது என்பது.”, என்று சொல்லி புதிர் போட்டார்.

சக்தி, “ஹ்ம்ம்.. அப்பறம் சுவாமி இப்போ நம்ம விநாயகனுக்குக் கிடைத்த இரண்டு பெண் தோழிகளின் விதி என்ன?”

சிவன், “தெரியாது..!”, என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்.

சக்தி, “ஏன் தெரியாது..? நம்ம மகனின் விதி அவன் கையில் சொன்னிங்க சரி. இந்தச் சிறு பெண்களின் விதி கூட நம்ம கையில் இல்லையா..?”, என்ற கேள்வி எழுப்பினார்.

சிவன், “இல்லை. கண்டிப்பா நமது கையில் இல்லை. நம்மை வழிபடும், பின் படுத்தும் மனிதர்களின் விதியை மட்டுமே பார்க்கும் உரிமை நமக்கு உண்டு. மற்றபடி நம்மைப் பின்பற்றாத மக்களின் விதியை பார்க்கும் உரிமை நமது ஹிந்து கிரகத்துக் கடவுள்களுக்கு இல்லை. ப்ரீத்தி என்ற பெண்ணின் விதி பார்க்கும் அதிகாரம் கிறிஸ்தவக் கிரகத்தில் இருக்கும் கடவுளுக்கு மட்டுமே உண்டு. அதே போல், ஆஷாவின் விதியை பார்க்கும் உரிமை அவள் பின்பற்றும் இஸ்லாமியக் கிரகத்தில் இருக்கும் கடவுளுக்கே மட்டுமே உண்டு. நாம் மனிதர்களை உருவாக்க வில்லை அவர்களின் நம்பிக்கை தான் நம்மை உருவாக்கியது. இப்போ இந்த மனிதர்கள் மதம், சாதி, இனம் என்ற விஷயத்தை மறந்து எப்போ ஒரே இனம், ஒரே மதம் என்ற எண்ணத்துக்கு வருவார்களோ அப்போ தான் அனைத்து கடவுள் கிரகங்களும் இணையும்.”, என்று விளக்கம் அளித்து விட்டு சிரித்தார்.

சக்தி, “ஹ்ம்ம்… அப்போ இவர்கள் உருவாக்கிய மதத்துக்கும் நமக்கும் பொதுவானது என்று எதுவும் இல்லையா..?”, என்று சிறு வருத்தம் கலந்த குரலில் கேட்டார்.

“இருக்கு. அதுவும் ஒன்றே ஒண்ணு. அதன் பெயர் தூய்மையான அன்பு. அந்த அன்பு இப்போ இருக்கும் பெரியவர்களைத் தாண்டி சிறு குழந்தைகளிடம் மட்டுமே உள்ளது. இந்த வயதிலேயே அவர்கள் மனதில் ஓர் ஒற்றுமை உருவாகி விட்டால் நம்மிடையே இருக்கும் மற்ற கிரகங்களின் உறவும் கூடப் பலப்படும். பார்போம், நாம் எதிர்நோக்கும் காலம் எப்போது வரும் என்பது கடவுள் அனைவருக்குமே தெரியாத புதிர். மனிதனின் மனத்தைக் கடவுளால் கூட அறிய முடியாது சக்தி”, என்றார்.

சக்தி, “சரி சுவாமி, அடுத்து என்ன..?”

சிவன், “இவ்வளவு நேரம் விநாயகனின் திருவிளையாடல்களைப் பார்த்தோம். இனி அடுத்து நம்ம கார்த்திகேயன் பிறந்து என்ன செய்யப் போகிறான் என்பதையும் சேர்த்து பார்ப்போமே. 90’s கிட் விநாயக் – 20’s கிட் கார்த்திகேயன். ரெண்டு பேருக்கும் நடுவில் நடக்கப் போகிற விளையாட்டை நாம் வேடிக்கை தான் பார்க்க வேண்டும்”, என்றார்.

அதே நேரத்தில் விநாயக் உடனே தன் தம்பி பிறக்க வேண்டும் என்று மனதில் நினைத்து, “அடேய் விநாயகா..!!”, என்ற மந்திரத்தை சொல்லி மற்றொரு திருவிளையாடலே தொடங்கினான்.

இப்படிக்கு,

உங்கள் நண்பன்

🏹விஜயன்🏹

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Vijayan

Story MakerContent Author

எல்லைச்சாமி

உள்ளம் கொள்ளை போன தருணம்.10