in , ,

பெண்டாட்டி பிறந்தநாள்

பிறந்தநாள் கொண்டாடுவது இப்ப ரொம்ப விசேஷமா இருக்கு…….. ஆனா முன்னெல்லாம் அப்படி ஒண்ணும் கிடையாது…… அதுலயும் பொண்டாட்டி பிறந்தநாள் பல ஆண்களுக்கு ஞாபகமே இருப்பதில்லை ….. மனைவி அடிக்கடி மறைமுகமா தன் பிறந்தநாளை ஞாபகப்படுத்தினா கூட மண்டைல ஏறவே ஏறாது…… (மன்னிச்சுக்கோங்க இப்படி சொல்றதுக்கு)

எத்தனையோ பெண்களுக்கு வாழ்க்கையில இது பெரிய குறைபாடு……. பெண்கள் பொதுவா கணவருடைய  குழந்தைகளுடைய குடும்பத்தினருடைய பிறந்தநாள் கல்யாண நாள் இதெல்லாம் நல்ல ஞாபகம் வெச்சுப்பாங்க….. ….. நல்லா அந்த நாட்களை மனதார கொண்டாடி அவங்கள சந்தோஷப்படுத்துவார்கள்…………அதேபோல எல்லாரும் தன்னோட பிறந்தநாள ஞாபக வச்சுக்கிட்டு வாழ்த்தணும்னு எதிர்பார்ப்பாங்க……

நம்ம சொல்லாமலே அவங்களே வாழ்த்தினா ரொம்ப பெருமை படுவாங்க….. இது ஒரு சின்ன விஷயம் ஆனா பெரிய சந்தோஷம் கொடுக்கும் ஆனா இது ஏனோ ஆம்பளைங்களுக்கு புரிகிறது இல்லை….

 நகை வாங்குறதுக்கும் புடவை வாங்குறதுக்கு கூட சலிக்காதவங்க பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சலிச்சுக்கிறதோ மறந்து போறதோ ஏன்னே எனக்கு புரியல….

 இதுல என்ன கஷ்டம் உங்களுக்கு? விதிவிலக்கா சிலர் இருக்காங்க ரொம்ப நல்லா மனைவியோட பிறந்தநாளை கொண்டாடி அவர்களை மகிழ்ச்சிப்படுத்து வாங்க…..

உங்களுக்காகவும் உங்க குடும்பத்துக்காகவும் தன்னோட சுக துக்கம் எல்லாம் மறந்து வாழ்றவங்களுக்கு வருஷத்துக்கு ஒரு நாள் சின்ன சந்தோஷம் கொடுக்கக் கூடாதா

இதுவரை இந்த தப்பு பண்ணிட்டு இருந்தீங்கண்ணா இனியாவது மாத்திக்கோங்க சின்ன வேண்டுகோள் இது

“”பார்த்துப்பார்த்துசமைத்திடுவாள்

பாகம் பிரியை ஆகிடுவாள்

ஊருக்கு படைத்து முடித்தாலும் 

ஒருவாய் உண்ண மறந்திடுவாள்

சிரித்த முகத்தை மாட்டிக்கொண்டே

சீண்டல்கள் எல்லாம் தாங்கிடுவாள்

பெண்கள் எல்லாம் ஓர் இனமே

பிறந்தநாள் கொண்டாட ஏங்கிடுமே

வருடத்தில் ஒரு நாள் அவளுக்கென்றே

வாழ்த்த போற்ற தொடங்கலாமே””

எனது தோழி வருடா வருடம் வீட்ல எல்லாரும் என் பிறந்தநாளை மட்டும் மறந்துடுறாங்க

வருத்தபட்டப்ப தோணுச்சு இது……

ஒரு வருஷம் கூட ஒருத்தர் பிறந்தநாள் கூட மறக்காம விருந்து செஞ்சு கொண்டாடி மகிழ்வாள் எல்லாருமே ஃபர்ஸ்ட் இவ வாழ்த்து தான் வரும்னு பெருமையாக சொல்லுவாங்க ஆனா அவளை வாழ்த்த மறந்துடுவாங்க இந்த நிகழ்ச்சி இந்தப் பதிவையும் இந்தக் கவிதையையும் எழுதத் தோன்றியது……

ஊர் உலகத்துல எத்தனையோ பிரச்சினைகள் எத்தனையோ கஷ்டங்கள் இது ஒரு விஷயம் பேசுறேன் நினைக்காதீங்க……. பிரச்சனைகள் இல்லாத பொழுது இல்லை…… கூட இருக்கிறவங்க, நமக்காக இருக்கிறவங்க எதிர்பார்ப்ப,சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி அவங்களுக்கு நாம கொடுக்கிற பெரிய சந்தோஷம் பல மடங்கா நமக்கு திரும்ப கிடைக்கும்றது என்னோட கருத்து………. வணக்கம்….. ஸ்ரீ..

 ஸ்ரீ…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 3 சராசரி: 4.3]

2 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo Maker

விதியின் சதி (6)

3 – செவ்வானம் நாணுமோ பாவையாலே