in , , ,

கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் – 11

சுஜி : ஒரு வேளை, அந்த கவியோ ? கால் பண்ணிருப்பாளோ ? அவ கிட்டத்தான் இவ்வளவு நேரம் பேசறானா ? என்னை மறந்துட்டு.

சுஜி ஒரு பைத்தியக்காரி. அக்கீரின் பார்வை அவள் மீது மட்டுமே இருக்க வேண்டும். இல்லை என்றால் பித்து பிடித்து அவனையும் பைத்தியக்காரனாக்கி விடுவாள். அதைத்தான் இப்போதும் செய்ய பார்க்கிறாள். அக்கீர் யாருடன் பேசுகிறான் என்றே தெரியவில்லை.

அதற்குள் ஒரு கற்பனையை இவளே உருவாக்கி கொண்டு கண்களை குளமாக்கி கொண்டாள். இவளுக்கு இதே பிழைப்பு. அழுவதை தவிர வேறு ஏதும் தெரியுமா என்றுக் கூட நமக்கே எரிச்சலாகி விடும் சில வேளைகளில். என்ன செய்வது இவள் செய்வது இப்படித்தானே இருக்கிறது.

அக்கீரை தேடித் கொண்டே சென்றாள். அவன் படுக்கை அறையிலிருந்து குரல் கேட்டது. அங்கே விரைந்தாள். இருந்தும் அவனை காணோம். எங்கதான் இருக்கான் இவன்.

தேடித் கொண்டிருந்தவளின் கன்னத்தில் தீடிரென ஒரு முத்தம். பின்னாலிருந்து வந்து, சத்தமான முத்தம் ஒன்றை வைத்து அவளைத் தாண்டி பால்கனிக்கு சென்றான் அக்கீர். அவன் கையில் இன்னும் போன் இருக்கிறது. வீடியோ கால். வேணி சேச்சியுடன். கண்டு பிடித்து விட்டாள். இப்பொழுது அவளுக்கு நிம்மதி.

ஆனால், வேணி சேச்சிக்கு நிம்மதியே இல்லை காரணம் அவளுக்கு சுஜியை பிடிக்கவே பிடிக்காது. அக்கீர் சுஜியை பற்றி அவளிடம் தனக்கு இருக்கும் காதலை பற்றி வேணி சேச்சியிடம் சொன்ன போது எல்லாம் சுக்கு நூறாய் போனது.

அன்றிலிருந்து இன்றுவரை வேணி சேச்சியிடம் அக்கீர் சுஜியின் பேச்சை எடுப்பதே இல்லை. ஆனாலும், வேணி விடுவதே இல்லை. எப்போது அழைத்தாலும் சுஜியை காரித் துப்பும் வசைபாடல் தொடரும். அதனாலேயே, இப்போதெல்லாம் அக்கீர் வேணி சேச்சியை அழைப்பது குறைந்தது.

வேணி சேச்சி என்றுதான் அக்கீர் அவளை அழைப்பான். அவள் கேரளாவில் இருக்கிறாள். ஒன்றாக படித்தவர்கள். அக்கீருக்கு அவளை பார்க்கும் போது அவன் அம்மாவையே சின்ன வயதில் பார்த்தது போல் தோன்றும் அதனாலேயே வேணியை, சேச்சி என்று அழைப்பான். அம்மா என்று அழைத்தாள் அடி விழுமே.

வேணி நல்லவள் தான். இருந்தும் அவளுக்கு சுஜி மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. அது சுஜிக்கே தெரியும். பால்கனியில் நின்று வேணி சேச்சியுடன் பேசிக் கொண்டிருந்த அக்கீர் பறந்து விரிந்த வானை பார்க்காமல் சுஜியை பார்த்தவாறுதான் பேசிக் கொண்டிருந்தான்.

கைகளைக் கட்டி கொண்டு பால்கனியில் நின்று வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த அக்கீரை அவளும் பார்த்தாள்.

சுஜி : வேணிகிட்ட பேசிகிட்டே கிஸ் அடிக்கிறான். என்ன தைரியம் இவனுக்கு. வர வர ரொம்பதான் கொழுப்பு இந்த அட்லசுக்கு. பிடிச்சி வெளுத்து விடணும் இவனே.

பார்த்தவளை கண்ணடித்து தண்ணி வேண்டும் என சைகை வழி கேட்டு மீண்டும் வீடியோ காலில் வேணியிடம் பேச ஆரம்பித்தான் அக்கீர்.

சுஜி : என்கிட்ட பேச முடியல போய்டான் சேச்சி சோசின்னு, கடுப்பாக்கிகிட்டு !

சுஜி முனகி கொண்டே சமையலறை பக்கம் சென்றாள். இருவருக்கும் தேநீர் கலக்கி கொண்டு வந்து அவனிடம் ஒரு கப்பை நீட்டினாள். எதிரே இருந்த அசைந்தாடும் நாற்காலியில் அமர்ந்தாள். முன்னும் பின்னும் அசைந்தாடினாள்.

அவள் அணிந்திருந்த சுடியின் துப்பட்டா தரையில் பட்டு முழுதாய் அவள் கழுத்திலிருந்து கீழே விழ முற்பட்ட போது, பேசிக்கொண்டிருந்த அக்கீர் திடீரென விருட்டென திரும்பி துப்பட்டாவை கையில் எடுத்து அவள் கழுத்தில் அதை சரியாக போட்டு விட்டான்.

சுஜி, அவனையே பார்த்தாள். யோசித்தாள்.

சுஜி : அப்படி திரும்பி பேசிக் கிட்டு இருந்தான். அப்பறம் எப்படி என் துப்பட்டா விழ போதுனு தெரியும் ? எப்படி பிடிச்சான் ?

யோசித்துக் கொண்டே கை கடிகாரத்தை பார்த்தவள் கையிலிருந்த தேநீரை பருகினாள். அவளது காலை தூக்கி எதிரே அக்கீர் அமர்ந்திருந்த நாற்காலியின் பக்கம் இருந்த இன்னொரு நாற்காலியில் வைத்தாள்.

வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த அக்கீர் ஒரு கரத்தால் அவளது காலை பற்றினான். அவளின் பாத விரல்களை மெல்ல வருடினான். சுஜி அவனை பார்த்துக் கொண்டே நமட்டு சிரிப்பு சிரித்தாள். அவன் கைகளில் தன் கால் விரல்களை சிக்க விடாமல் அங்கும் இங்கும் அசைத்து அசைத்து விளையாடினாள்.

அக்கீரும் பேசிக் கொண்டே அவள் பாதத்தை பிடித்தான் ஒரு பிடியாக. கண்களை மூடிக் கொண்டு அசைந்தாடும் நாற்காலியை அசைக்காமல் இருந்தாள் சுஜி. அவனின் இறுக்கமான பிடி மென்மையான வருடலானது. தலையை பின் பக்கம் சாய்த்துக் கொண்டாள். வருலடல்களில் திளைத்தாள் சுஜி.

அக்கீர் வேணியிடமிருந்து விடை பெற முற்பட்ட போது,

வேணி சேச்சி : என்னடா, போன் வெக்கறதுலையே இருக்க ? ஏன் அவ கால் பண்றாளா ?

இல்லை என்று தலை ஆட்டிய அக்கீர் மெதுவாய் முனகினான்,

அக்கீர் : அவ எங்க கால் பண்றா? கண்ணு முன்னுக்குல வந்து ஒக்காந்து இருக்கறா.

வேணி சேச்சி : நான் சொல்லிட்டேன் அட்லஸ், தேவ இல்லாம பிரச்சனையில் மாட்டிக்காத ! ஊர் விட்டு ஊர் போய் போன வேலைய மட்டும் பாரு. அவளை பார்த்துகிட்டு மத்ததெல்லாம் கோட்டை விட்றாத ! புரியுதா ?

அக்கீர் : ஹ்ம்ம்..

வேணி சேச்சி : அவ கிட்ட பேசறத முதல்ல நிறுத்து. அவ நல்லவளே கிடையாது. உடம்பு முழுக்க விஷேம். எல்லாம் வேஷம். எப்படி ஒரு பொம்பளைக்கு ரெண்டு ஆம்பளை மேல காதல் ? கேட்கவே அருவருப்பான இல்ல ? அசிங்கம் பிடிச்சவ, அசிங்கம் பிடிச்சவ. அவ நடிக்கராடா! உன்ன ஏமாத்தறா ! பொம்பளையா அவ ? அவளுக்கெல்லாம் நீ ஒண்ணுமே இல்லே, இன்னிக்கி நீ ! நேத்து யாரோ ? நாளைக்கி யாரோ…

வேணி சேச்சி, சுஜியை கண்மண் தெரியாமல் கரித்துக் கொட்டினாள். பொறுமை இழந்த அக்கீர், காதிலிருந்து ஹேன்ஸ் பிரியை கழட்டி வேகமாக வீசி எறிந்தான். வேணி பேசுவது இப்போது சுஜிக்கும் கேட்டது.

வேணி சேச்சி : துரைக்கு கோவம் வருதோ ? வரட்டும் நல்ல வரட்டும். நீ தப்பு பண்ற அட்லஸ். உனக்கு அது தெரியுதா இல்லையா ? அவனை விட்டுட்டு உன்கிட்ட வரான அவ எந்த மாதிரி …

வேணி சேச்சி முடிக்கும் முன் ஆத்திரத்தில் போனை தூக்கி விசிறி அடித்தான் அக்கீர். போன் நாளா பக்கமும் சிதறியது. ஆத்திரம் தாங்காது பால்கனியின் கம்பிகளை வேகமாக கைகளை மடக்கி பலமுறை குத்தினான் அக்கீர்.

இனி கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் வீசும்….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் – 10

கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் – 12