in

ரங்கா vs ரங்கா -18-23

 அத்தியாயம் 18

காலேஜில் ஒரு சீனியர் மாணவன் கொஞ்ச நாட்களாக ரங்காவை பின் தொடர்ந்து கொண்டிருந்தான்….

 

அதை கவனிக்காத ரங்கா கூட படிக்கும் மாணவி அவனை வைத்து அவளைக் கிண்டல் செய்ய அதன் பின்னரே அவனை கவனித்தாள்..

 

பெரிய பணக்கார குடும்பத்து பையன்லோக்கல் அரசியல்வாதியின் மகன்.. தங்கள் தொழில்களுக்கு ஏற்ற வக்கீல் வேண்டும் என்பதற்காகவே அந்த படிப்பை எடுத்து படிப்பவன் இந்த விஷயங்களை, கூட படிக்கும் தோழர்கள் மூலம் அறிந்தவள்வீட்டில் பாட்டி. வாசுவிடம் சொன்னாள்.

 

“நான் வேணும்னா உனக்கு துணைக்கு வரட்டுமா…?”

 

“எத்தனை நாளைக்குஇது ரெண்டாவது வருஷம். இன்னும் ஒரு வருஷம் இருக்கு.. எல்லா நாளும் என் கூட வந்து கொண்டிருக்க முடியாது.. என்னோட பிரச்சினையை நானே பாத்துக்கிறேன்.. உங்ககிட்ட விஷயத்தை சொன்னேன் அவ்வளவுதான்..!”

 

அவனுடைய அப்பாவை நேரிலேயே சந்திக்கச் சென்றாள்.. “என்னம்மா என்ன விஷயம்? எதுவும் டொனேஷனா அல்லது உதவியா..?”

 

“உதவி தான் சார்..!”  தன்னைப் பற்றி சுருக்கமாக சொன்னவள், “சார் எனக்கு காதல், கல்யாணம் இதெல்லாம் நம்பிக்கை இல்லை.. கொஞ்ச நாளா உங்க பையன் என்னை பின்தொடர்ந்து வர்றார்.. அது எனக்கு தெரிய  கூட செய்யாது.. என் நண்பர்கள் சொல்லித்தான் தெரியும்..

 

அது தப்புன்னு சொல்ல மாட்டேன்… வயது கோளாறு.. காதல், அந்தப் பொண்ணுக்கும் விருப்பம் இருக்கிற பட்சத்தில, ஓகே… ஆனால் எனக்கென்று சில கனவுகள் இருக்குது கல்யாணத்தை தவிர..

 

உங்க பையன் கிட்ட நேரடியா சொல்லி அவர் மனசசை  சங்கடப் படுத்துவதை விட உங்க கிட்ட சொல்லி,  நான் இதை பிரச்சினை இல்லாம முடிக்க நினைக்கிறேன்..

 

“உங்க பையன் பின் தொடர்வதை தவிர வேற எந்த தொந்தரவும் கொடுக்கலை.. தொந்தரவும் பண்ணலை.

இன்னும் சொல்லப்போனால் அந்தஸ்து, பணம் பழக்கவழக்கம் எல்லாத்திலேயும் எதுவுமே ஒத்துப் போகாத ஒரு வாழ்க்கை முறை எங்களது.. இது உங்க கிட்ட சொன்னால்தான் புரியும்னு உங்களை பார்க்க வந்தேன்.. நீங்களே அவர் கிட்ட இதை சொல்லிடுங்க…!” என்றவள் பதிலை எதிர் பாராமல் வந்து விட்டாள்..

 

அடுத்த இரண்டாவது நாளே அவள் முன்னால் வந்த அந்த சீனியர் மாணவன் தன்  நடத்தைக்கு மன்னிப்பு கேட்டதோடு மட்டுமில்லாமல் காலேஜ் முடியும் வரை அவளுக்கு எந்த தொந்திரவும் யாரும் தராமல் பார்த்து கண்டான்,

 

“DO NOT LIVE SOMEONE ELSE’S LIFE AND SOMEONE ELSE’S IDEA OF WHAT WOMANHOOD IS.WOMANHOOD IS YOU.”

                                                                                 VIOLA DAVIS 

 

“ரங்கா இந்த கேஸ் பத்தி கொஞ்சம் குறிப்பு எடுத்து வைத்திரு.. நான் அப்புறமா செக் பண்ணிக்கிறேன்.. என்று சொல்லிவிட்டு ரங்கபாஷ்யம்  கோர்ட்டுக்கு கிளம்பிவிடரங்கா அலுவலக லைப்ரரியிலிருந்து தடித்தடியாய் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து  வைத்து பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள்..

 

“ஏய் என்ன பண்ற நீ..” என்றவாறு அருகில் வந்த லீலா

 

“எதுக்கு இவ்வளவு பழைய புத்தகம் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து வச்சிருக்க..” என்று கேட்க..

 

“இல்ல லேட்டஸ்டா உள்ள புக்ஸ் எல்லாம் நமக்கு சாப்ட்வேர்ல  கிடைச்சுடும்.. ஆனா இதெல்லாம் சீனியரோட தாத்தா படிச்ச புக்ஸ்.. இதில நெறைய விஷயம் நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு,. 

 

அந்த காலத்திலேயே எந்த மாதிரி ஜட்ஜ்மெண்ட் கொடுத்திருக்காங்க அப்படின்னு நம்ம ப்ரூவ் பண்ணி சொல்றப்ப ஸ்ட்ராங்கா நிக்கும்.. அதுக்காக எடுத்து படிக்கலாம்னு. கொஞ்சம் எப்படியும் ஃப்ரீ டைம் இருக்குல்ல அதுல படிப்பேன்..!”

 

“என்னதான் சொல்லு நீ யோகக்காரி தான்.. சீனியர்  உன்னை  ஒரு வார்த்தை சொல்ல அனுமதிக்க மாட்டேன் என்கிறார்…!” என்று குத்தலாக லீலா சொல்ல..  

 

“அப்படியா எனக்கு எதுவும் தெரியாது..” என்று பொத்தம் பொதுவாக முடித்து கொண்டாள்.

 

இப்பொழுது அலுவலகத்தில் அலுவலக வேலை தவிர வேறு எதுவும் பேச வந்தால்  நாசுக்காக ரங்கா ஒதுங்கி விடுவதுஎல்லோருக்கும் தெரிந்துதான் இருந்தது.. தேவையில்லாமல் மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று ஒதுங்கி செல்ல ஆரம்பித்தாள்.

 

இதனால் மற்றவர்கள் அவள் இல்லாத சமயம் அவளைப் பற்றி கூடி விவாதித்தனர்.. இது தெரிந்த ரங்கபாஷ்யம் ஒரு நாள் அனைவரையும் கூப்பிட்டு, “எதுக்கு இந்த மாதிரி பண்றீங்க..?” என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல் அனைவரும் விழித்தனர்.

 

அவரே மேலும்“உங்கள்ல  யாருக்கும் ஏதாவது பிரச்சினை என்றால், ரங்கா இந்த மாதிரி பேசி இருப்பாளா அதை மட்டும் யோசிங்க, தேவையில்லாம அடுத்தவங்கள பத்தி பேசாதீங்க.. இதுக்கு மேல இந்த மாதிரி பேசுவதை நான் கண்டேன், என்னோட ஆபீஸ்ல அவங்க இருக்க வேண்டாம்..” எச்சரித்து அனுப்பி விட்டார். அதைத்தான் லீலா என்று சுட்டிக்காட்டினாள்..

 

லேசாக பார்த்துவிட்டுரங்கா புத்தகத்தில் ஆழ்ந்துவிடலீலா தனது தோளைக் குலுக்கிக் கொண்டு தன்னுடைய இடத்திற்கு சென்று விட்டாள்..

 

இவள் சீனியரின் அறையில் இருந்ததால் வேறு யாரும் அங்கு இல்லை… லீலா சென்றதும்தனது வேலையில் கவனமாக மூழ்கிவிட்டவளை‘ம்கூம்’என்ற தொண்டை செருமல் இவ்வளவு உலகுக்கு அழைத்து வந்தது..

 

நிமிர்ந்து பார்த்தால் விஷ்வா… ஆறு மாதம் கழித்து ஊருக்கு வந்தவன் இன்று அவளை பார்க்க என்றே தந்தை இல்லாத சமயம் அலுவலகத்துக்கு வந்திருந்தான்

 

கம்ப்யூட்டர் டேபிளுக்கு முன்னால் இருந்த சேரில் உட்கார்ந்து இருந்ததால் அவளது வயிறு,  டேபிளின் முன் முகப்பு மறைத்திருந்தது..

 

அவளைப் பற்றிய விஷயம் தெரியாத விஷ்வா, “என்ன ரங்கா… எப்படி இருக்கீங்க….?” என்று விசாரித்துக்கொண்டு அவளின் பின்னால் வந்து நின்றான்..

 

திடீரென்று பின்பக்கமிருந்து குரல் வரவும் நிமிர்ந்து பார்த்தே ரங்கா, விஷ்வா என்றதும் சற்று மிரண்டு போனாள்…  ‘அய்யோ இவனா.. விஷயம் தெரிஞ்சு பேச வந்து இருக்கானா அல்லது விஷயம் தெரியாமலேயே பேச வந்து இருக்கானா, ஐயோ எப்படி இருந்தாலும் சமாளிக்க வேண்டுமே…!’ என்று மனதிற்குள்ளேயே குழம்பியவள்…  

 

வெளியே சிரித்துக்கொண்டுவாங்க எப்ப வந்தீங்க..? நல்லா இருக்கீங்களா…?” என்று கேள்விகளை அடுக்கினாள்

 

“ரிலாக்ஸ்… எதுக்கு இத்தனை கேள்வி வரிசையா..! நேத்து வந்தேன்… நல்லா இருக்கேன்… போன தடவையே உன்னை பார்த்து பேசணும்னு  நினைத்த விஷயம் அப்படியே இருக்கு.. அதனால உன்ன பார்த்து பேச தான் இப்ப வந்தேன்… 

 

ரங்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு…. நீங்க சரின்னு சொன்னா, நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன். எங்க வீட்ல கண்டிப்பா சம்பாதிப்பார்கள்.. உங்க பாட்டி கிட்ட.. நான் எங்க அப்பா வீட்டு பொண்ணு கேட்கிறேன்…!” 

ஐயோ இவன் கிட்ட எப்படி மறுப்பு சொல்வது’ என்று தெரியாமல் மொட்டையாக “சார் எனக்கு கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல… ப்ளீஸ் நீங்க தப்பா நினைக்காதீங்க

 

“இன்ட்ரஸ்ட் இல்லைன்னா… என்ன அர்த்தம் புரியல..!”

 

“கல்யாணமே பண்ணிக்க போவதில்லை என்று அர்த்தம்..!”

 

“வாட்… கல்யாணமே பண்ணிக்க போறதில்லையா..!”

 

“இதுல என்ன இவ்வளவு ஆச்சரியம்.. கல்யாணம் பண்ணிக்காம பொண்ணுங்க நிறையபேர் இல்லையா என்ன….!”

 

“இருக்காங்க அவங்களுக்கெல்லாம் எதோ ஒரு காரணத்தினால் கல்யாணம் நடக்காமல் இருக்கும். ஒண்ணு அவங்க அழகுல  ஏதாவது மைனஸ்.. அல்லது வேறு ஏதாவது குறை.. இல்ல வசதி வாய்ப்புகள் கம்மியா இருக்கலாம்..  அவங்களுக்கு ஏதாவது குடும்ப பொறுப்புகள் இருக்கலாம்… இப்படி பல விஷயம்… உங்களுக்கு இதுல என்ன விஷயம்…?

 

“இந்த மாதிரி கமிட்மென்ட் இருந்தால்தான் கல்யாணம் நடக்காமல் போகும்னு  நீ யார் சொன்னா…? ஆண்களையே பிடிக்கலைன்னாலும் கல்யாணம் நடக்காமல் போகும்!” என்று ரங்கா சொன்னதும் சிரித்து விட்டான்..

 

“குட் ஜோக்.. ஏன் ஆண்களை பிடிக்கல..அப்படி பார்த்தா நீங்க ஆண்கள் கூட, ஐ மீன்  ஆபீஸ்ல எல்லார் கூடவும்  நல்லா தான் பேசுறீங்க… உங்களுக்கு ஒரு பிரதர் உண்டுன்னு என்று நான் கேள்விப் பட்டிருக்கேன்.  யார் கிட்டேயும் தேவையில்லாமல் கோபப்பட்டதில்லை, வெறுப்பை காட்டியதில்லை, அப்புறம் என்ன….?

 

“சில விஷயத்துக்கு காரணம் எல்லாம் சொல்ல முடியாது…!

 

“அது எப்படி காரணமில்லாமல் ஓண்ணு பிடிக்காமல் போகும்.. எனக்கு என்னவோ இது உன்னோட உண்மையான பதிலை தெரியல.. என்ன தவிர்க்க நீ சொல்ற பதிலா தான் தோணுது..!”

 

 “ச்ச அப்படி எதுவும் இல்லை…” 

 

அதற்குள் வேறு யாரோ  அறைக்குள் வரும் அரவம் கேட்டு விஷ்வா வெளியில் சென்று விட்டான். அவன் போகும்வரை இவள் எழுந்திருக்காததால் அவளுடைய நிலையை அவன் அறியவில்லை

 

மாலையில் கொஞ்சம் பொருள்கள் வாங்க கடைக்கு செல்ல வேண்டும் என்று வாசுவிடம் சொல்லி வைத்திருந்ததால் அவன் மதியம் சாப்பாடு முடிந்ததும் கிளம்பி ரங்காவை அழைக்க  வந்து விட்டான்

 

ரங்காவும் சீனியரிடம் போனில் சொல்லிவிட்டு கிளம்பினாள். அவள்  வாசலுக்கு செல்லவும் அப்போதுதான் அம்மாவை வெளியே காரில் அழைத்துச் சென்றுவிட்டு திரும்பிய விஷ்வாகாரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழையவாசலில் அம்மாவுடன் ரங்கா நின்று பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தான்..

 

“என்னம்மா இன்னைக்கு சீக்கிரம் கிளம்புனா மாதிரி இருக்கு..!”

 

ஆமா ஆன்ட்டி கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும், அதுக்காக கடைக்கு  போறேன்!”

 

“மந்திலி செக்கப் எல்லாம் போயிட்டு வந்துட்டியா…? நல்லா இருக்கா?” 

 

“ஆமா ஆன்ட்டி…” என்று சொல்லிக்கொண்டே வாசலை பார்த்தவள், அங்கு விஷ்வா இவளது  தோற்றத்தை பார்த்துவிட்டு அதிர்ந்து நிற்பது   தெரிந்தது….

 

முகம் கருக்க  கோபத்துடன் தன்னை உறுத்து விழித்தவனிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்,  சங்கடமாய் அவனை  நோக்கவும்,…

 

அவளது  பார்வை சென்ற திசையை பார்த்த மீனா,  “விஷ்வாவை  பார்க்கிறாயா… நேத்துதான் வந்தான். என்னமோ இந்த தடவை கல்யாணத்துக்கு சரின்னு சொன்ன மாதிரி இருக்கு. இனிமே தான் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கணும் என்று சொல்ல…

 

“ஆண்களை பிடிக்காது என்று சொன்னவள் இப்படியா..” என்று அவன் மனதுக்குள் இகழ்ந்ததை அவனுடைய பார்வையே சொல்ல

 

சற்று முன்னர் ஒரு தேவதை போல தன்னை நினைத்து பார்த்தவனின் பார்வை ஒரு நொடியில் மாறிய விதத்தை கண்டு முதன்முறையாக அவமானத்தில் சுண்டினாள்..

 

“சரிமா… மாமாவுக்கு சாப்பாடு வைக்கணும். விஷ்வா நீயும் வா…” என்று சொல்லிவிட்டு மீனா  நேராக உள்ளே சென்று விட..

 

மெதுவாக ஆனால் அழுத்தமான காலை வைத்து அருகில் நெருங்கிய வந்த விஷ்வா, “அது எப்படிஆண்களையே எனக்கு பிடிக்காது, என்று சொன்னவள்  இதுக்கு!”  என்று  பார்வையாலேயே அவளது நிலையை குறிப்பிட்டுகேள்வி கேட்டவன்… அவள் பதில் சொல்லாததை கண்டு..

 

“உன்ன நான் ரொம்ப பெருசா நினைசசிருந்தேன்…. அனால் நீ இத்தனை கேவலமான பொண்ணா இருப்பேன்னு நான் சத்தியமா எதிர் பார்க்கலை….

 

அட, நான் அத்தனை கேட்டப்ப.. இல்ல சார்.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல.. ஒரு கல்யாணம் ஆனவ  கிட்டேயா நான் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டே ங்கிறப்ப, எனக்கு எத்தனை அவமானமா இருக்கு, தெரியுமா…?”  

திருமணமாகி தான் குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டவன் பேச.. அதற்கும் அவள் ‘ஐயோ இன்னும் உண்மை தெரிந்தால் என்ன நினைப்பான்’ என்று மனதுக்குள்ளேயே தலையில் கையை வைத்துக் கொண்டவள்“ச்ச..” என்ற ஒற்றைச் சொல்லோடு விஷ்வா நகரவும்ஒரு விடுதலை உணர்வோடு வெளியேறினாள்

 

அவசரமாக வந்து காரில் வெளியேறிய ரங்காவை பார்த்தவன்என்ன ரங்கா அவசரமா வர.. மெல்ல வர வேண்டியதுதானே.

 

“இல்ல நீ வந்து நேரம் ஆச்சுல்ல….”

 

“அதனால் என்ன.சரி.. எங்க போகணும் சொல்லு..” 

 

“ஏதாவது ஒரு பெரிய ஜவுளிக் கடைக்கு போ…”

 

அவர்கள் வீட்டுக்குப் போகும் வழியிலேயே உள்ள மிகப் பெரிய ஜவுளிக் கடையில் இறக்கிவிட்டு, “நீ உள்ள போய் வெய்டிங் ஹாலில் உட்காரு.. நான் காரை பார்க் பண்ணிட்டு வந்துடறேன்..!” என்று சொல்லி விட்டு வாசு  சென்று விட்டான்..

 

மெல்லப் படியேறி கீழ்தளத்தில் உள்ள வெயிட்டிங் ஹாலில் சோபாவில் அமர்ந்து அவள் சுற்று முற்றும் வேடிக்கை பார்த்தாள்

 

பத்து நிமிடம் கழிந்தது  வாசு வந்ததும்இருவரும் லேடிஸ் இன்னர்  செக்சன் சென்றனர். வாசு அவளை  உள்ளே அனுப்பிவிட்டு வாசலில் உள்ள சோபாவில் உட்கார்ந்தான்

 

கொஞ்ச நேரத்தில் ரங்கா வந்துவிட,  “முடிஞ்சுதா..” என்று கேட்ட வாசுவுக்கு…

 

“எனக்கு முடிஞ்சது!” பாட்டிக்கு ரெண்டு சாரி எடுக்கணும்.. அப்புறம் உனக்கு ஷர்ட்…”

 

“பாட்டுக்கு மட்டும் எடு… எனக்கு வேண்டாம்… என்று கூறிய வாசு அங்கே இருந்த பணியாளிடம் “வயதானவர்களுக்கு அணியும் காட்டன் சாரி உள்ள  செக்சன்   எது..?” என்று கேட்டு அவளை அழைத்து சென்றான்

 

லிப்டுக்கு  இவர்கள் போகவும், இடது புறம் இருந்த ஒரு பெரிய அறையில் இருந்துவெளியே வந்த உபேந்திராகூடவே வந்த ஒருவரின் கையை பிடித்து குலுக்கி விடை பெற்று, லிப்டை நோக்கி நடந்தான்

 

இவர்களும் லிப்டுக்காக காத்திருக்க,, அருகே வந்த உபேந்திராரங்காவை பார்த்ததும்  இகழ்ச்சியுடன் உதட்டை வளைத்து விட்டு, வாசுவைப் பார்த்து…

 

“உங்க சிஸ்டர்னு தானே அன்னைக்கு நீங்க என்கிட்ட சொன்னீங்க…?  உங்க கிட்டயாவது உண்மையை சொன்னாங்களா.? அல்லது நீங்களும் அவங்க மாதிரி தானா…?” என்று  அக்கறையாய் கேட்பது போல கேட்க , அதில் உள்ள குத்தல், நக்கல் புரிந்த வாசு..

 

“சார் உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க.. அனாவசியமா எங்களைப் பத்திய பேச்சு வேண்டாம்..!” என்றான் அடக்கப் பட்ட கோபத்துடன்..

 

 “என்னோட வேலையைத்தான் பார்க்கிறேன்.. என் வேலை விசயமா தான் இந்தக் கடைக்கு வந்துட்டு போறேன்.. 

இந்தக் கடை ஓனர் என்னுடைய கிளையன்ட்… அது தெரியுமா…  அதே மாதிரி பெரிய பெரிய பிஸ்னஸ் மேன் எல்லாரும் என்னோட கிளையன்ட்..  ஆனா உங்க தங்கைக்கு ஒரு ஆள்  கேஸ்  கிடைச்சதும்,  என்னம்மா துள்றாங்க.. அப்ப என்னோட எதிரியை பழிவாங்குவதும் என்னோட வேலைதான்…”

 

சார் அது பிசினஸ். அவங்க அவங்க தொழில் அதுக்கும் சொந்த வாழ்க்கைக்கும் முடிச்சுப் போடுவது எந்த விதத்தில் நியாயம்..?’

 

எப்படி நியாயம் இல்லை என்னோட ஃபிரண்ட் அமரேஷ்  கேஸ்ல  அவன் டைவர்ஸ் கேட்டது தப்பு அப்படின்னு உங்க தங்கை தானே சொன்னாங்க..  ஆனா தப்பு ரைட் பத்தி சொல்றதுக்கு கூட ஒரு தகுதி வேணும்..  அந்த தகுதி உங்க தங்கச்சி கிடையாது. ஏன்னா அவங்க தப்பானவங்க தானே..!” என்பவன் லிப்டுக்காக அதிக கூட்டம் இருக்கவும்  படி வழியாக நடந்து சென்று விட்டான்..

 

அவன் சென்றதும் லிப்டில் இறங்கிகாரில் ஏறி வீடு வந்து சேரும் வரை ரங்கா ஒரு வார்த்தை பேசவில்லை… கோபத்தில் கொதித்து கொண்டிருந்த மனதுடன் வந்த வாசு வும் ஒன்றுமே பேசவில்லை… 

 

அவளை வீட்டில் இறக்கி விட்டு போயிட்டு வரேன் பாட்டி…” என்று கிளம்பிய வாசுவிடம் ஒரு பார்சலை கொடுத்து கீர்த்தியிடம் கொடுத்து விடு…” என்று சொன்ன ரங்கா மேலே அவன் பேசுமுன் தனது அறைக்குள் சென்று விட்டாள்..

 

என்ன  வாசு  உம்முன்னு போறான்…?”

 

ஒண்ணுமில்லை..” என்றவள்  பேசாமல் படுத்து விட்டாள்.. கண்மூடி படுத்திருந்த பேத்தியின்  அருகில் வந்த பாட்டி அவள் நெற்றியை வருடிவிட்டு என்னடா  என்ன பிரச்சனை..?  உனக்கும் அவனுக்கும் சண்டையா..அதான் கோபமா போய்ட்டானா..?”

 

 கண் விழித்து பார்த்தபோது என் கண்களிலிருந்து கண்ணீர் வழியவும்,  என்னம்மா சொல்லு..வயித்துல குழந்தை இருக்கும்போதுசிரிச்சுக்கிட்டே இருக்கணும்கோபப்படக்கூடாதுவருத்தப்படக் கூடாது.. உன்னோட உணர்வுகள் அத்தனையும் உன்னோட குழந்தையை பாதிக்கும்..  இதுக்கு தான் நான் உன்னை வெளியில போகாதேன்னு சொல்றேன்..

 

“ வெளியில் போகாமல் வேலை பார்க்காமல் எப்படி பாட்டி  வாழ முடியும்…?  நான் எப்படி இருந்தால் இவனுகளுக்கு என்ன…?”

 

அது நமக்கு தெரியுது..  ஏதோ ஒரு விதத்துல அவங்களுக்கு புரியலை இல்லையா..? அப்படின்னா நீ எந்த விதத்திலேயோ  அவங்களை பாதித்து இருக்கேன்னு  அர்த்தம்…!’

 

அதுக்கு நான் என்ன செய்றது…?  நானா என்னை  விரும்ப சொன்னேன்…?”  என்று அவள் வாயை விட

 

இது என்ன புது கதையா இருக்கு’  என்று மனதுக்குள் நினைத்தபடி அவளிடம்

 

யாரும்மா…?  என்ன சொன்னா..?  சொன்னாதானே தெரியும்..!?”

 

ரங்க  பாஷ்யத்தின் மகன் விஷ்வா பேசியது கூறினாள்… ‘நல்ல இடம்..  கொஞ்சம் லேட்டா சொல்லிட்டான்..” என்று  பாட்டி கூற..

 

‘முன்னாடியே சொல்லியிருந்தா என்ன செஞ்சு இருப்பீங்க…?”

 

உன்ன  சம்மதிக்க வைக்கவாது  முயற்சி பண்ணி இருப்பேன்…!”

 

நீங்க எப்ப சொல்லியிருந்தாலும் என்னோட பதில் நோ தான்..!

 

சரி விடு. அந்தப் பையன் உனக்கு கல்யாணம் ஆயிருச்சு அப்படின்னுதானே   நினைத்து இருக்கான்.. அப்படியே இருக்கட்டும்…”

 

“அது மட்டும் இல்லை. இன்னொரு விஷயமும் நடந்தது..”  என்று உபேந்திராவை சந்தித்ததையும்,  வாசுவிடம் அவர் பேசியது சொன்னாள்..

 

இந்த பையன் எதுக்கு அடிக்கடி  இவ விஷயத்தில் தலையிடறான்…?’ என்று யோசித்த பாட்டி,  ‘இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்’ என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார்.

 

சரி விடு… நான்  இட்லி பண்ணி வச்சிருக்கேன்…  சாப்பிட்டு ரெண்டு பேரும் தூங்குவோம். அப்புறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்..  தாராவை ஆஸ்பத்திரில  சேர்த்து இருக்கு..  சரவணன் போன் பண்ணி சொன்னான்..

 

“நம்ம வீட்ல இருந்து யாரும் போன் பண்ணலையா பாட்டி…?”

 

“ இல்ல.. ஆனா பணம் வேணும்னு மட்டும் கேட்டாங்க..?”

 

“ யார் கேட்டா..?

 

காயத்ரியை விட்டு கேட்டாங்க..!

 

ஓ.. நீங்க என்ன சொன்னீங்க..?”

 

“ நாளைக்கு காலைல வந்து வாங்கிட்டு போன்னு சொல்லி இருக்கேன்..  சரி நம்ம வேலையை பார்ப்போம்..  அவங்க அப்படித்தான் தெரியும்..  இதுல புதுசா வருத்தப்பட என்ன இருக்கு….!” என்று சொன்ன பாட்டி சாப்பாடு எடுத்து வைக்க உள்ளே சென்று விட்டார்..

 

மறுநாள் அதிகாலையிலேயே காயத்ரி வந்து கதவை தட்ட, “உள்ள வா…” என்று அவளை அழைத்து உள்ளே உட்கார வைத்துவிட்டு பாட்டி வந்து ரங்காவை எழுப்பினார்..

 

“என்ன பாட்டி…?

 

“ காயத்ரி வந்திருக்கா..

 

“ ஓ.. ஓ.. இந்த வரேன்..

 

மெல்ல படக்குனு எழுந்ருந்திருக்க கூடாது. ஒரு சைடாக திரும்பி படுத்து ஒரு கையை மெல்ல ஊணி அப்புறம் தான்  எழுந்திருக்கணும்…”

 

பாட்டி இந்த குழந்தை  பெத்துக்குறதுக்குள்ள  நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்  உங்ககிட்ட இருந்து தெரிஞ்சுக்கணும் போல இருக்கு…!” என்று வேடிக்கையாய் சொல்லிக்கொண்டே மெல்ல எழுந்தவள்,   முகம் கழுவ சென்றாள்..

 

தாரா எப்படி இருக்கா…?”

 

நல்லா இருக்காங்க பாட்டி.. ஆனால் சிசேரியன்தான் பண்ணனும்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க..?”

 

“ சிசேரியனா நிறைய செலவாகுமே..?”

 

ஆமாம்,  அம்மாகிட்டேயும் இவர் கிட்டேயும் அவ்வளவு பணம் இல்லை.. அதான் உங்க கிட்ட கேக்க சொன்னாங்க…!”  அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ரங்கா வந்துவிட..

 

அக்கா எப்படி இருக்கீங்க..?” கேட்ட காயத்ரி   எழுந்து வந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டாள்

 

நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? வீட்ல அம்மா அப்பா மோகன் எல்லாரும் எப்படி இருக்காங்க..?”

 

எல்லாரும் நல்லா இருக்காங்க அக்கா…  ஆமா வயிறு  பெருசா இருக்கு உங்களுக்கு…! தாரா அக்காவுக்கு இவ்வளவு பெருசா இல்லையே….?”

 

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்..  நாளைக்கு உனக்கு எப்படி இருக்கும்னு  எப்படி சொல்ல முடியும்..?” பாட்டி பதில் சொல்ல காயத்ரிக்கு வெட்கம் வந்தது..

 

நீ மட்டும் தனியாவா வந்த..?”

 

இல்ல அக்கா எனக்கு உங்க வீடு தெரியாது. அவர்தான் கூட்டிட்டு வந்தாரு..!

 

அப்ப அவன் எங்க..?” 

 

வாசல் கேட்டுக் கிட்டே நிற்கிறார்..  நான்  உள்ளே வர சொன்னேன்.  மாட்டேன்னுட்டார்…”

 

“அதற்குள் பாட்டி ஐம்பதினாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு வந்து ரங்கா கையில் கொடுக்க, ரங்கா  அதை காயத்ரியின் கையில் கொடுத்து இவ்வளவுதான் எங்க கிட்ட இருக்கு.. கொஞ்சம் சிக்கனமா செலவு பண்ண சொல்லு அம்மாவை…!”  என்று கூறி அவளுக்கு காபி கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தாள்..

 

அவள் சென்றதும் பாட்டி, “வாசல் வர வரத்தெரியுது… ஆனால்  வீட்டுக்குள்ள வந்து நீ எப்படி இருக்க, என்று ஒரு வார்த்தை கேட்க மனசு இல்ல… ! என்று புலம்ப..

 

தெரிஞ்சதுதானே விடுங்க..   ஏற்கனவே என்னை  பிடிக்காது..  இப்ப என் மேல கோபம் வேற..!

 

அதான் கோபம் இருக்குல்ல… அப்புறம் எதுக்கு பணம் கேட்டு விடணும்..!

 

இவ்வளவு நாள் எந்த கேள்வியும் கேட்காமல் நீங்க தானே  உதவி  செஞ்சீங்க.. இப்ப நான் தான் இந்த மாப்பிள்ளையை தேடிபிடித்து கல்யாணம் பண்ணி கொடுத்தேன்..  அப்ப நீயே செய்..  அப்படின்னு சொல்லாமல் சொல்றாங்க..  யாருக்காக  செய்யணுமோஇல்லையோ..  சரவணனுக்காக  நாம இது செஞ்சுதான் ஆகணும் பாட்டி…. விட்டு தள்ளுங்க..!” என்றவள்  சற்று நேரம் நடந்து விட்டு வருவதாக கூறி கீழே இருக்கும் பார்க்குக்கு சென்றாள்..

 

விஷ்வா மனம் தாளாமல்  அப்பாவிடம், “என்னப்பா ரங்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு  நீங்க சொல்லவே இல்ல ..?” என்று கேட்க..

 

கல்யாணம் ஆயிடுச்சுன்னு  யார் சொன்னா…?”

 

கல்யாணம் ஆகலையா..என்ன சொல்றீங்க…?  அவங்க பிரக்னென்சி போல  தெரியுது…!”

 

“ இப்ப எதுக்கு உனக்கு அது…?  உன் வேலை எது உண்டோ அதை மட்டும் பாரு..?” என்று மகனிடம் ரங்கபாஷ்யம் சத்தம் போட..

 

இல்லப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னதே அவளை மனசுல வச்சு தான்..  அதனால எனக்கு உண்மைத் தெரிஞ்சாகனும்…” என்று சொன்ன மகனை,  சற்று பரிதாபத்துடன் பார்த்தார்

 

“ என்னப்பா என்ன விஷயம்..?”

 

இதை நீ கொஞ்ச நாளைக்கு முன்னாடியே சொல்லி இருந்திருக்கலாம்… .!”

 

 “ஏன் அப்படி சொல்றீங்க…!”

 

ஆக்சுவலா  எனக்கும்  அந்த எண்ணம் இருந்தது..  சரி, அவங்க வீடு, இப்ப அவளோட வருமானத்தை நம்பி தான் இருக்குது. கொஞ்ச நாள் ஆகட்டும் அப்படின்னு நினைச்சேன். அது தப்புன்னு தோணுது. அப்பவே ஒரு வேளை நான் பேசி இருந்தேனா, அவங்க வீட்ல கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருப்பாங்களோ என்னவோ..?”

 

ஏன் இப்ப நீங்க கேட்டா அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களா..?”

 

கேட்கக்கூடிய சூழ்நிலையிலேயே அவங்க இல்லை…!  இதுக்கு மேல எதுவும் கேட்காதே.. என்னை நம்பி ஒருத்தர் என்கிட்ட சொன்ன உண்மையே நான் எக்காரணம் கொண்டும் வெளியில் சொல்ல மாட்டேன்… அவளை மறந்துடு.. உனக்கு வேற பொண்ணு பார்க்கலாம்…!”  என்று சொல்லிவிட்டு அவர் வெளியில் சென்று விட..

 

அம்மாவிடம் என்னம்மா ஒரே மர்மமா இருக்கு..  லவ் மேரேஜாஅல்லது ஏதாவது தப்பு தண்டா நடந்துருச்சா..?”

 

நான் கேட்டதற்கும் இதே பதில்தான்டா..  அதுல அவகிட்ட எதுவுமே கேட்க கூடாது,  அவளுக்கு  இடையில் ஏதாவது குடிக்க கொடுன்னு  எனக்கு ஆயிரம் அட்வைஸ்.. 

கேட்டதற்கு நான் சொன்னதை செய்னு,  ஒரே  திட்டு வேற..  அதனால நான் எதுவுமே கேட்கல..  

 

ஆபீஸ்ல எல்லாரும் அவளை தப்பா தான் பேசுறாங்க. ஆனா அவள் எதைப்பற்றியும் கவலைப் பட்ட மாதிரியும்  தெரியல. காதில் போட்டுக்கவும் இல்லை..  வர்றா.. அப்பா சொன்ன வேலையை செய்றா..  கிளம்பி போய்டுறா..  இப்படித்தான் நடக்குது..”  தன் பங்கிற்கு மிகவும் புலம்பி விட்டு சென்றார். மொத்தத்தில் அவனுக்கு எந்த விஷயமும் தெரியவில்லை..

 

மதியம் இரண்டு  மணிக்கு தாராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. சிசேரியன், ஆபரேஷன் பண்ணி தான் குழந்தையை வெளியில் எடுத்தனர்..

 

சரவணனுக்கு பெண்குழந்தை என்பதில் மிகவும் மகிழ்ச்சி…  மோகனிடம் “பாட்டிக்கு சொல்லியாச்சா..?” என்று கேட்க அவன் தயங்கி நின்றதைப் பார்த்து ‘சொல்லவில்லை’ என்று புரிந்து கொண்டுஅனைத்து விஷயத்தை தெரிவித்தான்.

 

“ரொம்ப சந்தோஷம் தாராவும் குழந்தையும் எப்படி இருக்காங்க..?”

 

“நல்லா இருக்காங்க… ஆபரேஷன் தான்… அவ இன்னும் மயக்கத்தில் இருந்து எந்திரிக்கலை…!

 

“ரங்கா கிட்ட சொல்லிடுங்க..!”

 

“சரி…” என்ற பாட்டி விஷயத்தை ரங்காவிடம் போன் பண்ணி சொன்னாள்..

 

“ஈவினிங் கிளம்பி இருங்க. நம்ம நாலு பேரும் போய் பார்த்துட்டு வருவோம்..!”

 

“தேவையா ரங்கா..!”

 

“தேவைன்னா தேவை.. தேவையில்லை என்றால் தேவையில்லை என்னோட ஆபீஸ்ல கூட வேலை பாக்குற ஒருத்தருக்கு குழந்தை பிறந்திருக்கு.. நாம போய் பார்ப்போம்….”

 

“சரி” என்ற பாட்டி அரைமனதாய் சம்மதித்தாள்.

 

நாலு மணிக்கு அலுவலகத்திலிருந்து ரங்காவும், வாசுவும் திரும்பிவிட்டனர்.. அதன் பிறகு கிளம்பி வாசு, ரங்கா கீர்த்தி, பாட்டி நான்கு பேருமே ஹாஸ்பிடலுக்கு தாராவை பார்க்க சென்றனர்..

 

ஏற்கனவே காயத்ரியிடம் இந்த ஹாஸ்பிடல் என்று கேட்டு வைத்திருந்ததால் நேராக அங்கு சென்றனர் 

 

ரூம் நம்பர் தெரியுமா..?

 

“தெரியாது…” என்றதும் வாசு ரிசப்சனில் விசாரித்து விட்டு அங்கு அழைத்துச் சென்றான்..

 

அவர்கள் செல்லும்போது அறைக்கு தாராவையும் குழந்தையை மாற்றி இருந்தனர்.. அம்மாவும், ராஜமும் தாராவுக்கு துணை இருந்தனர்..

 

வைதேகி அவர்களை வா, என்று கூட கேட்கவில்லை ராஜம்  மட்டும் பொதுவாக எல்லாரையும் பார்த்து “வாருங்கள்..” என்றார்..

 

நேராக தொட்டிலுக்கு சென்று குழந்தையை பார்த்தவளுக்கு சின்னஞ்சிறு ரோஜா ஒன்று கை கால் முளைத்து இருப்பதுபோல் இருந்தது.

 

பெண் குழந்தை நல்ல கலராகவும் தாராவின் ஜாடையிலும் அழகாக இருந்தது,…

 

டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை வாங்க போயிருந்த சரவணன் அறைக்குத் திரும்பியதும் பாட்டி, ரங்காவை பார்த்துவிட்டு சந்தோஷமாக “வாங்க, வாங்க..” என்றான்..

 

“கங்கிராட்ஸ் சரவணன்..” என்று வாசு கட்டிப்பிடித்துக் கொள்ள ரங்கா, வாழ்த்துக்கள்…” என்றாள்.

 

பாட்டிக்கு தனது அடுத்த தலைமுறையை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. 

 

சரவணன் எல்லாருக்கும் சாக்லெட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு “உட்காருங்க..” என்று அங்கிருந்த நாற்காலியை நகர்த்தி போட்டான்..

 

‘தன்னை எப்படி இருக்கிறாய்? என்று ஒரு வார்த்தையாவது அம்மாவா தங்கையாவது கேட்பாரகள்’ என்று எதிர்பார்த்திருந்த ரங்காஅவர்கள் இவளை வா என்று அழைக்காதது  மட்டுமல்லாமல்ஏன் வந்தாய் என்ற ரீதியில் பார்த்து வைக்க, முதன்முதலாய் அவளுக்கு மனதுக்குள் வலித்தது..

 

தாராவின் அருகில் படுக்க வைத்திருந்த குழந்தையை பக்கத்தில் சென்று பார்த்து விட்டு தூக்க முனைந்த போது, “தொடாதே..’ என்று வைதிகேயின் குரல் கேட்டு, குழந்தையை தூக்க சென்ற கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டவள் அம்மாவின் முகம் பார்த்தாள்.

 

அதில் தோன்றிய வெறுப்பையும், கோபத்தையும் பார்த்தவள், தன்னையறியாமல் தான் கையில் கொண்டு வந்த பொருட்களை தங்கையின் அருகில் வைத்து விட்டு திரும்பினாள். 

 

வைதேகியின்  முகத்தை சரவணன் அதிருப்தியோடு நோக்கவும், மற்ற எல்லோரும் பார்க்கவும், வைதேகி, “இல்ல டாக்டர் யாரும் குழந்தையை தூக்க விடாதீங்க.. இன்பெக்ஷன் ஆயிடும்னு சொல்லி இருக்காங்க.. அதனாலதான் அப்படி சொன்னேன்…” என்று சமாளிக்கவும் யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை. 

 

 தான் வாங்கி வந்து இருந்த குழந்தைக்கான பொருள்களை கொடுத்ததும், வாசுவின் முகம் பார்க்க அவளின் முகத்தையே பார்த்து இருந்த வாசு “போவோமா..” என்றான்….

 

சரவணனுக்கும் அங்குள்ள சூழ்நிலை புரிந்ததால் இதனால் ரங்காவின் நிம்மதி கெட வேண்டாம் என்று அவர்களை செல்ல அனுமதித்தான்..

 

“வாசு கொஞ்ச நேரம் கடற்கரையில் இருந்து வீட்டுக்கு போகலாமா..கீர்த்தியும் கல்யாணம் ஆனதிலிருந்து எங்கேயும் போகல.. என்ன கீர்த்தி போகலாமா..?

 

“போகலாம்…” என்றதும் மெரினா பீச் சென்றனர்.. அங்கு சற்று தள்ளி சென்று கொஞ்சம் கூட்டம் குறைவான இடம் பார்த்து அமர்ந்த ரங்கா, வாசுவையும், கீர்த்தியையும் அழைத்து “கொஞ்ச நேரம் அப்படியே நடந்துட்டு வாங்க.. எப்ப பார்த்தாலும் வேலை, வேலைன்னு  நீயும் அவளும் இருக்கீங்க… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க…’ என்று அனுப்பி வைத்தாள்.

 

                 அத்தியாயம் 19 

ரங்கா மூன்றாவது வருடம் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தாள்.. ரங்கா புட் புராடக்ட்ஸ் நல்ல வளர்ச்சி கண்டு இருந்தது..  வழக்கம் போல் எல்லோருக்கும் தீபாவளிக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்தார் பாட்டி..

 

“தீபாவளிக்கு நீங்க எல்லோரும் இங்க வந்திடுங்க..” என்று அதிசயமாய் வைதேகி சொல்ல, பாட்டி “சரி” என்று சொல்லி வந்து விட்டார்..

 

“பாட்டி நாம வழக்கம் போல நம்ம  வீட்டில கொண்டாடுவோம். அங்க போனா எதாவது பிரச்சினையை அவங்க இழுத்துடுவாங்க.. வேண்டாம்..”

 

“அதெல்லாம் மாட்டாங்க… உங்க அம்மாதான் இந்த தடவை கூப்பிட்டு இருக்கா..!”

 

“அதனாலதான் எனக்கு சந்தேகமே பாட்டி…”

 

“ரங்கா அவ உன்னை பெத்தவ…!”

 

“பெத்தது மட்டும்தான் பாட்டி.. அவங்களுக்கு நான் ஒருத்தியா இருந்திருந்தா தன்னோட குழந்தைன்னு நினைவு இருந்து இருக்குமோ என்னவோ..? ஆனால் தனக்கு இன்னும் இரண்டு குழந்தைகள் இருப்பதால், அந்த ஏக்கம் வர வழியில்லை.. அல்லது ஏதோ ஒன்று.. என்னோட இடத்தை நிரப்ப ஆள் இருக்கு.. தட்ஸ் ஆல்…!”

 

பாட்டியால் ரங்காவின் ஆதங்கத்திற்கு பதில் சொல்ல இயலவில்லை.. தீபாவளிக்கு முந்தின நாள் சென்றனர்.. எல்லோரையும் வாங்க, வாங்க என்று வீட்டில் உள்ள அனைவரும் வரவேற்க, பாட்டியும், வாசுவும் சந்தோசமாய் அவர்களுக்கு பதில் அளித்தனர். ஆனால் ரங்கா வழக்கம் போல் ஒட்டாமல் பதில் சொன்னாள்.

 

இரவு உணவு முடிந்ததும், எல்லோரும் அமர்ந்து பேசி கொண்டு இருக்க, ரங்கா படிக்கும் சாக்கில் தனது புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு பேச்சை கவனித்து கொண்டு இருந்தாள்..

 

கேசவன் அம்மவிடம், “அம்மா உன்னோட கம்பெனி நன்னா போறதா..?” என்றார்..

 

“ஓரளவு போகுது….”

 

“அம்மா அது முழுக்க முழுக்க உன்னோடது தானே..!”

 

“ஆமா அதுக்கு என்ன  இப்போ..?”

 

“இல்ல.. நம்ம  மோகனை உன் கூட கூட்டு சேர்த்துட்டு தொழில் கத்துக் கொடுத்தால், கொஞ்ச நாள்  கழித்து உனக்கு வயசாகும் போது அவன் பார்த்துப்பான்..  என்ன சொல்றே.. என்ன இருந்தாலும் உன்னோட பேரன் தானே..?”

 

“என்னோட பேரன் தான்.. யார் இல்லேன்னா..? ஆனால் இவனுக்கும், உழைப்புக்கும் ரொம்ப தூரம் ஆச்சே.. சும்மா அங்க  உட்கார்ந்து கல்லா பெட்டி எண்ண  முடியாது..!” 

 

“ஹிஹி.. அதெல்லாம் கத்துக்குவான்..!”

 

“அப்ப ஒண்ணு பண்ணு.. நாளேல இருந்து அங்க அவனை வேலைக்கு வர சொல்லு.. டெய்லி சம்பளம் போட்டு கொடுத்திடலாம்..!”

 

“என்னது தினக்  கூலியா..?” என்று வைதேகி ஆங்காரமாய் கேட்க.. 

 

“ஏன் தினக் கூலின்னா மட்டமா..? அடிப்படை வேலை எல்லாம் தெரிஞ்சா நல்லது.. ஏன்னா இது சின்ன கம்பெனி.. ஒரு வேளை  வேலை ஆள் வரலைன்னாலும் நாம மானேஜ் பண்ணலாம்…!”

 

“ஏன் அதுக்கு கம்பெனில இருக்கிற மத்தவங்க செய்ய வேண்டியதுதான்.. நாளைக்கு முதலாளி ஸ்தானத்துக்கு வரப் போறவன் கிட்ட இப்படி தான் வேலை சொல்வீங்களா.. வேலைக்காரன் வேலைக்காரந்தான், முதலாளி,  முதலாளி தான்..” என்று ஜாடையாய் வாசுவை பார்க்க..

 

“உண்மைதான்.. நானும் பாட்டியுமே அங்க  வேலைக்காரங்க தான்.. அப்ப உங்க பையனும் வேலை பார்க்கிறது தப்பில்லை.. ஏன்னா கம்பெனி முதலாளி வாசுதான்.. அவன் நினைச்சா இந்த நொடி எங்க ரெண்டு பேரையும் வேலையை விட்டு தூக்கி விடும் ரைட்ஸ் இருக்கு..” என்றவள் அடுத்த நொடி பாட்டியையும், வாசுவையும் கிளப்பிக் கொண்டு வந்து விட்டாள்..

 

எனக்கு தெரியும், இப்படித்தான்  ஏதாவது வில்லங்கம் இருக்கும்னு தெரியும்… அதான் நான் வேண்டாம்னு சொன்னேன்…” என்று சொல்ல பாட்டியும் வாசுவும் பதில் சொல்ல வகையற்று போனனர்…

 

I DIDN’T GET THERE BY WISHING FOR ITOR HOPING FOR IT, BUT BY WORKING FOR IT . 

                                                                                                 ESTEE LAUDER     

 

 

அந்த மிகப்பெரிய மாலில் புதிய பொட்டிக்  திறப்பு விழா… திரையுலக புள்ளிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது..

 

வாணி  தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்று தனக்குத் தெரிந்த தையற்கலையை வைத்து புதிதாக பொட்டிக் ஒன்று ஆரம்பிக்க முடிவு செய்தாள்..

 

அதற்காக ஆறு மாதம் தனியாக பயிற்சி எடுத்துக்கொண்டு சில பொட்டிக் போய் நேரடியாக பார்த்து விட்டு, அதன்  பின்னர் தான் இந்த திறப்பு விழா நடக்கிறது.. நேரடியாக வந்து அழைத்து விட்டு சென்று இருந்தாள்.. 

 

நீங்க கட்டயம் வரணும்.. நீங்க கொடுத்த தன்னம்பிக்கையில் தான் நான் இன்னைக்கு புதுசா ஒரு தொழில் ஆரம்பிக்க போகிறேன்.. உங்களோட வாழ்த்து வேணும்..” திரும்பதிரும்ப அவள் அழைத்ததை மறுக்க முடியாமல் ராங்கா வாசுவுடன் கிளம்பி இருந்தாள்…

 

ரங்கா வாசுவுடன் அந்த மாலுக்கு வந்து இறங்கியபோது, விஐபிக்களின் கூட்டம் அப்போது சற்று குறைந்திருந்தது.. அன்று விடுமுறை என்பதால் மாலுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாய் இருக்ககூட்டமாக தெரிந்தது..

 

ரங்காவை இறக்கி விட்டு, “ரங்கா ஐந்தாவது மாடிதானே நான் வந்துடறேன் நீ முதல்ல போ.. எனக்கு எப்படியும் பார்க் பண்ணிட்டு வருவதற்கு பத்து நிமிஷம் ஆகும்..”  என்று சொல்லிவிட்டு வாசு காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

 

 ஆறாவது மாதம் முடிந்து, ஏழாவது மாதம் தொடங்கி இருந்தது.. வயிறு மிகவும் பெரிதாக இருந்தது. நடப்பதற்கு அவளுக்கு சற்று சிரமமாக இருந்தது… எஸ்கலேட்டரில் போவது ரிஸ்க் என்று நினைத்தவள் லிஃப்ட் இருக்கும் பக்கம் சென்றாள்

 

 லிப்ட் வாசலில் ஏகப்பட்ட பேர் நின்று கொண்டிருக்க ஆஹா இந்த கூட்டத்தில் எப்படி போவது..?’ என்று தோன்றினாலும் வேறு வழி இல்லாததால் அங்கேயே நின்றாள்..

 

எஸ்வந்துட்டேன். இன்னொரு பைவ் மினிட்ஸ்ல  வந்துருவேன்.. வெயிட் பண்ணு..” யாரிடமோ போனில் பேசிக் கொண்டே  லிப்ட் அருகில் வந்த உபேந்திரா,  அங்கு நின்று கொண்டிருந்த ரங்காவை கண்டான்.. இவனைக் கண்டதும் அவளுடைய முகம் சற்று மாறியதை கண்டவன்அவளை இரண்டு தரம் அழுத்தமாக பார்த்துவிட்டு திரும்பி நின்று கொண்டான்.

 

லிப்ட் வந்து என்றதும்  அதிலிருந்த மக்கள் வெளியற,  வெளியே காத்து நின்ற கூட்டம் உள்ளே நுழைந்தது..  நாலைந்து பேர் நுழைந்ததுமே ரங்காவும் உள்ளே நுழைந்து விட,  பின்னால் இருந்த மக்கள் அவளை அழுத்தி லிட்டின் ஒரு ஓரத்தில் தள்ள,  அவளது பெரிய வயிறு தடுப்பதை அறியாமல்மற்றவர்கள் நெருக்க, ரங்கா ஒரு நொடி திணறிப் போனாள்..

 

அவளுடைய நிலையை புரிந்துக் கொண்ட உபேந்திரா,  தன் அருகில் இருந்த  இரண்டு ஆண்களை,  இந்த பக்கம் இழுத்து விட்டு,  தான் முன்னேறி அவள் அருகில் சென்று நின்றான்..  அவள் பக்கம் திரும்பி அவளைப் பார்த்து நின்றவன், அவளை மேலே இடிக்காமல் இரு கைகளையும்  லிப்டின் பக்கவாட்டில்   ஊன்றி அவளுக்கு அரணாக நிற்பது போல் நின்று, அவளது வயிறு இடிக்காமல்,  மூச்சு விட வசதியாகஅவள் நிற்கும்படி செய்தான்

 

 ஒரு சென்டி மீட்டர் இடைவெளியில் தன் அருகே நின்ற உபேந்திராவை விழிவிரிய ரங்கா பார்த்தாள்..  அவளே  பெண்களில்  சற்று அதிகமான வளர்த்தி,   அவனது தோள்வரை தான் ரங்கா இருந்தாள்.. அலை அலையாய் புரண்ட கேசமும்,  அழுத்தமான  பிடிவாதத்தை காட்டும் உதடுகளும்கூர்மையான கண்களும்நேரான நாசியும்செதுக்கி வைத்த கிரேக்கச் சிற்பம் போல உடலமைப்பும்,  கொண்ட உபேந்திராவை அவள் கண்கள் அளவெடுத்தன

 

நாசி அவனது மேலிருந்து வீசிய ஆப்டர் ஷேவ் லோஷனின் நறுமணத்தை முகர்ந்தது…  அங்கும் இங்கும் நகரமுடியாமல் அவனது கை சிறைக்குள் அவள் நின்ற கோலம்,  தன்னை சிறை எடுக்க வந்த ராஜகுமாரன் போல் தோற்றமளிக்கஒரு நொடி அவளது முகம் சுணங்கியது..

 

 ஆனாலும் அவன் தன்னுடைய பாதுகாப்புக்காகத்தான் அப்படி நிற்கிறான் என்பது அறிவுக்கு புரிந்ததால், ‘நேற்று இல்லாத மாற்றம் இன்று எப்படி’ புத்திக்கு தோன்றஅதற்கு எதிர்ப்பதமாக மனதுக்குள் சாரல் அடிக்க, அந்த நொடிகளை அனுபவிப்பதா,  அல்லது கடப்பதா என்று  புரியாமல்பார்த்த விழி பார்த்து இருக்க, நின்றாள்.

 

தனது தோள் வரை நின்று தன்னை அண்ணார்ந்து விழி விரித்து பார்த்தவளை உபேந்திராவும் எதற்கு இந்தப் பார்வை’  என்று நினைத்தான். ஏற்கனவே அழகிதான்.. அதிலும் தாய்மை இப்பொழுது அவளுக்கு பூரிப்பை அள்ளித் தெளித்து இருந்தது..  

 

உப்பிய கன்னக் கதுப்புகளும்,  கோவைப்பழம் போல் சிவந்த அதரங்களும்,  அவள் விழி விரித்தபோது  பெரிதான கண்களும்,  வில் போன்ற புருவங்களும்,  நெற்றியில் சுருண்டு கிடந்த முடிக்கற்றைகளும்,  தன்னுடைய நெருக்கத்தை தாளமுடியாமல்,  அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வை பூக்களும்  அவன் கண்களுக்கு விருந்தாக,  முதன்  முறையாக அவளை எதிரியாக பார்க்காமல் ஒரு பெண்ணாக ரசித்துப் பார்த்தான்..

 

 அவள் மேலிருந்து வீசிய சோப்பும்பெர்ப்யூம் கலந்த ஒருவித நறுமணம்,  அவனது நாசிகளில் அவன் விரும்பாமலே நுழைந்தது..  அது வேறு அவனுக்கு சுகந்த வாசத்தை அளிக்க,  தன்னை அறியாமலே அவளது அருகாமையை  மிகவும் ரசித்தான்.

 

ஐந்து நிமிடங்கள் ஐந்து யுகங்களாக தோன்ற இவள் இறங்கவேண்டிய ஐந்தாவது தளம்   வந்தது.. உபேந்திரா இறங்க வேண்டியது ஆறாவது தளம்..  ரங்கா அவனிடம்,  “இறங்கணும்”  என்று சொல்லஅவளை பாதுகாப்பாக நகர்த்தி வெளியே கொண்டு வந்து விட்டான்… 

 

 நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும்,  சொல்ல வாய் வராததால்ஒருமுறை அவனைப் பார்த்து விட்டு அவள் நடக்க ஆரம்பிக்க,   அவனும் கூட நடந்தான்,   எஸ்கலேட்டரை  நோக்கி..

 

 பத்து  அடி செல்வதற்குள் எதிரே வந்த மதிவாணன் இவர்கள் இருவரும் ஒன்றாக நடப்பதைப் பார்த்து ஹாய்” என்று இருவருக்கு எதிரிலும் பொதுவாக வந்து நின்றான். 

 

அவன் எதிரே நின்றதால்,  நகர முடியாமல் இருவரும் நிற்க, “வாட் எ சர்ப்ரைஸ்..  எதிர்க்கட்சியா இருந்தவங்க எப்போ ஒரே கட்சியா மாறுனீங்க..?” என்று கேட்க..

 

 புரியாமல் விழித்த இருவரிடம், “அதான் சார்,  வாணி மேடம் கேஸ்ல  ரெண்டு பேரும் எதிர்க்கட்சியா இருந்தீங்க..  இப்ப எப்படி ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப் ஆ..?”

 

வொய்பா..  அதுவும் இவங்களா…  எனக்கு…?”  என்று நிறுத்தி நிதானமாக,  எள்ளலாக கேட்டவன் தன் பாயும் விழிகளை அவள் பக்கம் திருப்பி, “குட் ஜோக் பார் தி இயர்..”  என்று சொல்ல..

 

அவமானத்தில் முகம்   சுருங்கி,  தன் உதட்டை கடித்தவள்,  “நோஏ.சி சார்ஐ அம் நாட் மாரீட்…!”  என்ற உண்மையை உரைத்ததும்,  அவன் முகம் போன போக்கையும் பார்த்துவிட்டு,  “பை…” சார் என்று சொல்லிவிட்டு தன் போக்கில் நடந்தாள்..

 

 அவள் சொன்ன செய்தி,  மூளைக்கு எட்ட சில நொடிகள் தேவைப்பட்டது மதிவாணனுக்கு… வியப்புடன் அவள் சொல்வதை திரும்பிப் பார்த்த அவனிடம் என்ன ஏ.சி சார்,  அப்படி பாக்குறீங்க அவங்கள…!  அவங்க சொன்னது உண்மைதான்…  she’s not married but  has carried… !”

 

 

“What is the problem..?”

 

“I don’t know. லீவ் இட்.. என்ன இந்த பக்கம்..?”

 

விவி  சாரோட டாட்டர் இன்னைக்கு இங்க ஒரு பொட்டிக் திறக்கிறாங்க..  அதுக்கு வந்தேன்..  ஓகே பார்க்கலாம் சார்..”  என்று கை குலுக்கி விடை பெற்றான்…  ஆனாலும் ரங்காவின் விஷயத்தில் ஒரு ஆர்வம் வந்தது

 

 நடந்து கொண்டிருந்த ரங்காவுக்கு மதிவாணன் தங்கள் இருவரையும் பார்த்து கணவன், மனைவி என்று நினைத்ததும், அடுத்த நொடி உபேந்திராவின் பதிலால் அவன் அதிர்ச்சி அடைந்ததும்,   அவள் இருந்த நிலையும்,  அவளுடைய பதிலும்,  அவனுக்கு அதிர்ச்சியின் உச்சத்தை அளித்தது என்றால் மிகையில்லை.. என்பது புரிந்தது.. புரிந்த விஷயம் மனதுக்கு உவப்பனதாயில்லை..

 

 அதற்குள்  இவளை பார்த்த வாணி வெளியே வந்து இவளை  அழைத்துக் கொண்டு தனது கடைக்கு சென்றாள்சிறிய ரூம் தான்.. ஆனால் விதவிதமாக பெண்களுக்கென்று சுடிதார்சாரீஸ்பட்டு சாரி என்று ரகம் ரகமாக இருந்தது

 

 தனக்கு போடுவதற்கு இரண்டு சுடிதார் மெட்டீரியல் எடுத்து அதற்கு பில் போடச் சொன்னாள்.. “ வேண்டாம்..” என்று வாணி எவ்வளவோ  மறுத்த போதும்பணத்தை பிடிவாதமாக அவள் கையில் திணித்து விட்டாள்..  

 

சற்று நேரம் இருந்து கடையை பார்வையிட்டுநடக்கும் வியாபாரத்தை பார்த்துவிட்டு,  அவள் தந்த கூல்ட்ரிங்க்ஸை குடித்துவிட்டு கிளம்பலாமா என்று யோசிக்கையிலேயே  வாசுவும்  உள்ளே நுழைந்தான்.

 

 அவனை வாணிக்கு அறிமுகப்படுத்த,  அவனும் கீர்த்திக்கு இரண்டு செட் சுடிதார் எடுத்தான்..  உடனே இருவரும் கிளம்பிவிட்டனர்..  வெளியே வந்து காரில் ஏறியதும்.. “ நான் ஏசி மதிவாணனைப்  பார்த்தேன்…!”

 

ம்ம்…  நானும் பார்த்தேன்…!” என்று ரங்கா சொல்லவும்,  அவள் முகத்தில் என்ன தெரிகிறது என்று உற்றுப் பார்த்தான்..  சலனமே இல்லாமல் இருந்த அந்த முகத்தை பார்க்கும்போது கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடிக்கும்’ குழந்தை போல தான் அவள் தோன்றினாள்..

 

என்ன ரங்கா எதுவும் சொன்னாரா..?”

 

“ இல்ல.. அதுக்கு பதிலா இன்னொருத்தர் சொன்னார்…”

 

“ யாரு…?”

 

உபேந்திரா…”

 

“ உபேந்திராவாஅவர் இங்கெங்கு வந்தார்…?”

 

தெரியாது..” ஒற்றை வார்த்தையில் அவள் பதில் அளித்த திலிருந்தே, அவளது மனநிலை சரியில்லை என்று புரிந்து கொண்ட வாசு  நேராக வண்டியை வீட்டுக்கு விரட்டினான்.. வீட்டிற்குள்  சென்றதும்ரங்கா  நேராக தனது அறைக்குள் சென்று விட,  வாசு பாட்டியிடம் நடந்ததைக் கூறினான்..

 

அவளை  பாத்தா பாவமா இருக்கு பாட்டி..  சொல்லவும் முடியாமல்முழுங்கவும் முடியாமல் அவள் தவிக்கிற தவிப்பு பார்த்து எனக்கு தாங்கல. எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுக்கனும்..?  இப்ப கஷ்டப்படணும்..?  ஒரு வருஷம் ரெண்டு வருஷத்துல தீர்ற கஷ்டமா இது..வாழ்க்கை முழுவதும் இந்த ஒரு அவச்சொல் அவளைத் துரத்திக் கொண்டே இருக்குமே..  நீங்க எப்படி அவளை  தெரிஞ்சே இவ்வளவு பெரிய குழிக்குள்ள  தள்ளலாம்..?” என்று அவரிடம் காய்ந்தான்..

 

நான் எவ்வளவோ சொன்னேன்..  அவள்  கேட்க மாட்டேன்ன்னுட்டா.. வாழ்க்கை முழுவதும் யாருமே இல்லாமல் தனிமையா போயிடுவான்னு தான், நான் இதுக்கு சம்மதிச்சேன்.  கண்டிப்பா கேசவனும், அந்த  வைதேகியும்  இவளை பார்க்க மாட்டாங்க. மோகனும்தாராவும் கேட்கவே வேண்டாம்…!”

 

அதற்காக இப்படி ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டுமா..?

 

தவறான முடிவு இந்தக் காலத்துல சரி.. வருங்காலத்தில் இதுவே நடைமுறை ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. இந்த கால இளைஞர்களின் போக்கு அப்படி தாண்டா இருக்கு..

 

“என்னவோ போங்க.. எனக்கு அவளைப் பார்த்தாலே கஷ்டமா இருக்கு..!” என்று கிளம்பிக் கொண்டே வெளியில் சென்று விட்டான்

 

பாட்டி ஒரு முடிவுடன் ரங்காவின் அறைக்கதவை சாத்தி விட்டுஹாலுக்கு வந்து லேண்ட் லைனில் தனது நண்பர் சேதுராமனை  அழைத்தார்..

 

“என்ன ரங்கா..? என்ன விஷயம்..? போன்ல எல்லாம் கூப்பிட மாட்டேயே..!”

 

“ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட பேசணும்..” என்றவர் இரண்டு, மூன்று தடவையாக உபேந்திராவுக்கு ரங்காவுக்கு இடையில் நடந்த பிரச்சினைகளைப் பற்றி கூறினார்.

 

“ஓ… அப்படியா, நீ முதல் தடவை நடந்தப்பவே இதை சொல்லி இருக்கலாமே…?”

 

“சரி. முதல் தடவை இது ஒரு பெரிய விஷயமா நினைக்கவேண்டாம்னு  நெனச்சேன். ஆனா மறுபடியும் மறுபடியும் ரெண்டு பேரும் முட்டிக்கும் போது ரங்காவோட மனசு காயப்படும்.. அவ சந்தோசமா இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்….!

 

அதனால தான் இன்னைக்கு உங்க கிட்ட சொல்லிடலாம்னு சொல்லிட்டேன். நீங்க எப்படியாவது நாசுக்கா இந்த பிரச்சனையை கையாளுங்க.. ஆனால் உண்மையை தயவுசெய்து சொல்ல வேண்டாம்….!”

 

“ஓகே… நான் பாத்துக்குறேன்…”

 

பாட்டிக்கு அவரிடம் சொன்ன பிறகு தான் சற்று நிம்மதி ஏற்பட்டது

 

இரவு நேரம் கழித்து வீட்டுக்கு வந்த உபேந்திரா தாத்தா தூங்காமல் விழித்திருப்பது பார்த்து, “என்ன தாத்தா இன்னும் தூங்கலையா..நான்தான் லேட்டா வருவேனு போன் பண்ணி சொன்னேன் இல்ல… எதுக்கு முழிச்சிட்டு உடம்பை கெடுத்துக்கிறீங்க..!”

 

“எனக்கு ஒரு விஷயம் உன்கிட்ட பேசணும்…!”

 

“அது நாளைக்கு காலையில பேசக்கூடாதா…!”

 

“இல்ல.. அதை  எனக்கு கேட்கலைன்னா தூக்கமே வராது..!”

 

“அப்படி என்ன விஷயம், உங்களைத் தூங்கவிடாது அளவுக்கு..?

 

“உட்கார் ஃபர்ஸ்ட்… சாப்டாச்சா…”

 

“அதெல்லாம் டின்னர் ஆச்சு ஆச்சு… நீங்க..?

 

“ம்ம்… ஆச்சு…”

 

“என்ன விஷயம் தாத்தா சொல்லுங்க….!”

 

“என்னோட ஃபிரண்ட் ரங்கா பாட்டி உனக்கு தெரியுமில்ல..!”

 

“ஆமா, தெரியும்..!”

 

“அவங்க இன்னைக்கு போன் பண்ணாங்க, எனக்கு…!”

 

“உங்க பிரண்டு உங்களுக்கு தான் போன் பண்ணுவாங்க…! பின்ன எனக்கா  பண்ணுவாங்க…!”

 

“டேய், விளையாண்டது போதும்டா, நான் சொல்லுறத கேளுநீ அவங்க பேத்தி ரங்கா கிட்ட, ரெண்டு மூணு தடவையா அவளை டீஸ்  பண்ற மாதிரி பேசுனியா..!”

 

“ஓ… அவ எனக்கு பதில் சொல்ல முடியாமல், பாட்டிய விட்டு உங்களுக்கு தூதனுப்பிச்சிட்டாளா..?”

 

“டேய் அதெல்லாம் இல்லடா.. ரங்காவா தான் போன் பண்ணி என் கிட்ட சொல்லி இருக்கா. என்னோட யூகம் சரின்னா அதுகூட அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்காது. அது ரொம்ப சுயமரியாதை பாக்குற பொண்ணுடா…!”

 

“தாத்தா சுய மரியாதை பார்க்கிற பொண்ணு, இந்த மாதிரி செயல் எல்லாம் செய்ய மாட்டாங்க..!”

“அது அவளோட பர்சனல்.. அதை எதுக்கு தேவை இல்லாம பேசுறே…? ஏதோ ஒரு கேஸ்ல அவ உன்னை ஜெயிச்சதாவே இருக்கட்டுமே.. அதுக்காக பெர்சனல் பத்தி பேசுவதெல்லாம் நல்ல பழக்கம் இல்லை….!

 

ஏன், இதுக்கு முன்னாடி நீ எந்த கேசிலேயும் தோத்ததே இல்லையா ஆரம்பத்துல?

 

நீயும் கல்யாண வயசுல தான் இருக்கே நீ தப்பு பண்ணினது இல்லைன்னு  என்கிட்ட சொல்லு பார்ப்போம்…”

 

“தாத்தா…”

 

“இனி ஒரு தடவை அந்த பொண்ணு கிட்ட நீ வம்பு வச்சுக்க கூடாது.. அப்படி தெரிஞ்சுதுன்னா நான் உன்கூட பேசவே மாட்டேன்.. அவ்வளவுதான்..” என்று கோபமாக சொன்னவர்தூங்குவதற்கு எழுந்து சென்றார்

 

முதன்முறையாக தாத்தாவின் கோபம் அவனை ஆச்சரியப்பட வைத்தது…  ‘தன்னோட பிரெண்டோட பேத்தி என்றதும் தாத்தாவுக்கு தாங்கல போல இருக்கு‘ என்று எண்ணிக் கொண்டவன் அசால்டாக தோள்களைக் குலுக்கிக் கொண்டு மாடி ஏறி விட்டான்..

 

இரவு பால்கனியில் உள்ள சேரில் உட்கார்ந்து வெளியே நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த ரங்காவிடம் வந்த பாட்டி “என்னடா தூக்கம் வரலையா…?

 

“இல்ல.. இன்னைக்கு மதியம் நடந்ததை  நினைச்சேன்.. என்ன சொல்றதுன்னு புரியல, உங்ககிட்ட நான் சொல்லவே இல்ல…”

 

“வாசு சொல்லிட்டான்..”

 

“சொல்லிட்டானா.. நான் அவன் கிட்டயும் எதுவும் சொல்லல..!”

 

“அதுக்குதான் வருத்தமாய் இருக்கியா!”

 

“ஆமா பாட்டி கொஞ்சம் சங்கடமா இருந்தது..!” 

 

“ஒரு முடிவு எடுக்கக் கூடாது.. எடுத்தச்சுன்னா அதிலிருந்து பின்வாங்கக்கூடாது. இனிமே நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே..  உன்னோட பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டியது உன் பொறுப்பு

 

விஷயங்கள் நமக்கு எதிரா தான் இனிமே நடக்கும்…  இந்த சொசைட்டி இந்த மாதிரியான விஷயங்களை லேசில் விடாது..”

 

 “ஏன் இப்படி இருக்காங்க பாட்டி..?”

 

“எப்பவுமே நமக்கு கிடைக்காத விஷயம் மத்தவங்களுக்கு கிடைக்கும் போது, அதில் ஒரு லேசான ஒரு பொறாமை  உணர்வு இருக்கும்.. அவங்க மட்டும் என்ன அப்படி பெரிசான்னு..? 

 

ஸ்கூல் படிக்கும்போதே பாரேன்.. டீச்சர் ஏதாவது ஒரு டிசிப்ளின் ரூல் சொல்லுவாங்க.. அதை யாராவது ஒருத்தருக்கு லேசா ரிலாக்ஸ் பண்ணினா.. அவன் மட்டும் என்ன டீச்சர் ஸ்பெசல்? அவன் மட்டும் அப்படி பண்ணலாமா?  அந்த மாதிரியான புகார் மற்ற  குழந்தைகள், டீச்சர் கிட்ட சொல்லும்…

 

எல்லா மனிதர்களுக்கும் அந்த மனப்பான்மை இருக்கத்தான் செய்து. நாம  ஆளு தான் வளர்ந்திருக்கோம்.. ஆனால் குணங்கள் அப்படியேதான் இருக்கு..

 

வளர வளர நாம் என்ன செய்கிறோம்… நம்ம நல்ல குணங்களை மட்டும் வெளிய காட்டிக்கிறோம்… கெட்ட குணங்களை வீட்ல உள்ளவங்க கிட்ட மட்டும் காட்டுறோம்…

 

அதே,  நமக்கு ஏதாவது ஒரு இடத்துல கஷ்டம், துன்பம் மத்தவங்க செய்தாங்க, அப்படின்னா அவங்க கிட்ட  நாம் ஒரிஜினல் குணத்தை காட்டிடறோம்.. இதுதான் உண்மை

 

இந்த சமூகத்தில் நிறைய பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்காங்க.. அவங்க எல்லாருக்கும் எங்கேயோ, எப்போதோ, யாரோ ஒருவர்  பழிச்சொல் சொல்லி இருப்பாங்க.. எல்லாருக்கும் அது நடந்திருக்கும். 

 

மாமனார், மாமியார், கணவன் அல்லது சொந்த வீட்டிலேயேஇப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்களுக்கு நிறைய கண்டன பேச்சுக்கள் கிடைத்திருக்கும். அதற்கெல்லாம் வடிகால்….

 

இந்த மாதிரி யாராவது தப்பு பண்ணும் போது, அவங்களை சொல்வதன் மூலம் தன்னை ஒழுக்கமானவ,  கெட்டிக்காரி நல்லவங்க இந்த மாதிரி ப்ரூஃப் பண்ணிப்பாங்க.. இது ஆணுக்கும் பொருந்தும்.. எல்லாம் தனக்கு தானே… வேற வழி  இல்லை.. ஏதோ ஒரு ஆறுதல் தேவைப் படுது.. அல்லது காயம் பட்ட மனதுக்கு மருந்து….

 

அதுதான் பிரச்சினை.. நாம இருக்கிறது அமெரிக்கா இல்லை இந்தியா. இந்த நாட்டோட அடிப்படை அமைப்பு  குடும்ப அமைப்புதான்..

 

அது இப்ப கொஞ்சம். கொஞ்சமா சிதறி, சின்னா பின்னமாகி, சிதைந்து கிட்டு வருது.. அதனுடைய உச்சம்தான் நீ எடுத்திருக்க முடிவு..

 

என்னை  பொறுத்த அளவுல நீ ஒரு ஆரம்பம்.. கண்டிப்பா இது வருங்காலத்தில் ஒரு தொடர்கதையா  மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு..

 

இந்த சமூகத்தில் குடும்ப அமைப்புகளே  இருக்காது.. எந்தக் குழந்தைக்கும் தாய் யார்தந்தை யார்என்று நிச்சயம் உண்மையாக தெரியாது..

 

வளர்க்கிறவங்க தாயாக இருக்கலாம்.. தந்தையாக இருக்கலாம்.. ஆனால் வேர் எது?

 

இப்ப ஒரு செடி இருக்கு. அல்லது ஒரு மரம் இருக்கு. அதனுடைய வேர்.. அல்லது விதை அதனுடைய அடுத்த செடியை அல்லது மரத்தை உருவாக்க உபயோகப்படுது..

 

விஞ்ஞானம் என்ற பெயரில் இப்ப நிறைய கிராஸ் பண்றாங்க.. ஒரிஜினல் எங்கேயும் கிடையாது.. அதே நிலைமை தான் இன்னிக்கி சமூகத்தில் மக்களுக்கும்.. நிறைய கிராஸ், நேரடியாகவும், மறைமுகமாகவும்.. ஆயிரத்தில் ஒன்றாக இருக்கும் போது அது மாயம், விஞ் ஞானம், சரித்திரம்.. ஆனால் அதுவே வாழ்க்கையில் எல்லோரும் கடை பிடித்தால் அது ஆயுதம்…

 

ஒரு நாட்டை கெடுக்கணும்னா, அல்லது சீர் குலைக்கணும்னா குண்டு போட வேண்டாம்.. அந்த நாட்டோட கலாச்சாரத்தை சீரழித்தாலே போதும்…

 

ஏன்..? ஆதி காலத்துல அயல் நாட்டு மன்னர்கள் எல்லோரும் வந்து நம்ம நாட்டில் உள்ள கோவில் நகைகள், புரதான பொக்கிசங்களை கொள்ளை  அடித்தார்கள்.. மக்களை கொன்று குவித்து இருக்கலாமே…?

 

மக்கள் மடிந்தாலும் புதிய தலைமுறையை இருக்கும் மக்கள் உருவாக்குவார்கள்.. செல்வமும், வளமும், கனிமங்களும் இருந்தால், நாட்டோட வளர்ச்சியை புதிய தலைமுறை கொண்டு சாதிக்க முடியும்… ஆனால் மக்கள் வாழும் வழியையே அடைத்து விட்டால்.. அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.. 

 

இன்று மற்ற எதிரிகள் தேவை இல்லை.. நமக்கு நாமே செய்து கொள்கிறோம்… உணவு, உடை, வாழ்க்கை முறை எல்லாத்திலும் கலாச்சார சீரழிவு.. இது இந்த நாட்டையே அளிக்கும் மாபெரும் ஆயுதம்.. 

 

இதை பெருமையாக சொல்றதாவிஞ்ஞான வளர்ச்சின்னு  எடுத்துக்கொள்றதான்னு, எங்களை  மாதிரி வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் இருக்கிற பெரியவங்களுக்கு புரியல..

 

பெண்ணின் கரு முட்டையும், ஆணின் விந்தணுவும் சேர்ந்து ஒரு உயிர் உருவாகுது.. ஒரு செல்.. அதில் இருபத்தி மூன்று குரோமோசோம்.. இரண்டும் சேர்ந்து இரண்டு செல் 46  இதுதான் ஒரு உயிர்.. அந்த உயிருக்கு 23 தலைமுறை  முன்னோர்களின் குணநலன்களும்நிறம் உருவ அமைப்புஅல்லது வியாதிகள் எல்லாமே அதற்குள் அடங்கியிருக்கு..

 

இப்படி பாரம்பரியமான  அந்த தாயுடைய 23 தலைமுறை, தந்தையோட 23 தலைமுறைக்கு  உள்ள விஷயங்கள் ஒரு குழந்தை கிட்ட இருக்கு.. 

 

தெரியாத ஒரு ஆணோட விந்தனு மூலமா உருவாகிற குழந்தையின்  குண நலன்களை   எப்படி சொல்லுவது? அல்லது உருவ அமைப்புநிறம் இதையெல்லாம் எப்படி சொல்ல முடியும்? அதில் நல்லது கேட்டது எல்லாம் கலந்து இருக்கு….

 

எல்லா மனிதர்களும் நல்லவர்கள் இல்லை.. அந்த விந்தணு  யாருடையதாகவும் இருக்கலாம்.. ஒரு தீவிரவாதிதிருடன்கொலைகாரன்… இந்த மாதிரியாக இருந்தால் பிறக்கும் குழந்தையிடமும் அந்த குணநலன்கள் படியாது என்பது என்ன நிச்சயம்..?

 

இதற்குத்தான் குலம் பார்த்து கோத்திரம் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சாங்க… ஏன் அப்படி குலம் பார்த்து கோத்திரம் பார்க்கிறவங்க கிட்டயும் இந்த தப்புகள் இல்லையா..அப்படின்னு நீ கேட்கலாம்..

 

வெளிப்படையா தெரிஞ்சு இருந்தா நாம செய்து வைக்க மாட்டோம் இல்ல… அதையும் மீறி நடந்தால் அது பகவானின் செயல்..

 

மேலும்  வேணுமின்னே யாரும் இப்படி போய் செய்கிறதில்லை இல்லை….!” பாட்டியின்  பிரசங்கத்தைக் கேட்ட ரங்காவிற்கு தலைசுற்றி போயிற்று

 

அதில் உள்ள உண்மைகள் உரைக்க, முதன் முதலாய் தன்  வயிற்றில் வளரும் குழந்தைகள் பற்றிய கவலை வந்தது.. அந்தக் குழந்தை பிறக்க மூலமாய் இருந்தவன் நல்லவன் ஆக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையும் வந்தது..

 

                ————————————– 

 

                                         

                  

 

 

               அத்தியாயம் 20

 

மூன்றாவது வருடம் படிக்கும்போது ஒரு ஞாயிற்றுக்கிழமை தீவில் வாசு அவளிடம் வந்துகிளம்பி நம்ம வெளில போறோம்..

 

“ எங்க…?”

 

“ சஸ்பென்ஸ்…” என்று அவளை கூட்டிக் கொண்டு சென்ற இடம் ஒரு டூ வீலர் ஏஜென்சி..

 

என்ன இங்க கூட்டிட்டு வந்திருக்கே..!  உனக்கு பைக் வாங்க போறியா..!

 

உள்ள வா சொல்றேன்…!”  என்றவன் அங்குள்ள ரிசப்ஷன் சென்று  ஒரு ஸ்கூட்டி பார்க்கணும்…” என்றான்.

 

ஏய் உனக்கு பைக் வாங்கு..! எதுக்கு ஸ்கூட்டி வாங்குற…!”

 

“ எனக்கு வாங்கல… உனக்குதான் வாங்குறேன்…!

 

எனக்கா..! எனக்கு எதுக்கு..?  நீதான் ஒரு பழைய  டிவிஎஸ்  வண்டி வைத்திருக்க…  உனக்கு பிசினஸ் பண்ண இப்ப கட்டாயம் புது வண்டி தேவை.. உனக்கு வாங்கு..!

 

“ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு எனக்கு வாங்கிக்கலாம்..   உனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல படிப்பு முடிஞ்சிரும் அதுக்கு அப்புறம் நீ டெய்லி ரங்கபாஷ்யம் சார் ஆபீஸ்க்கு போகணும். வண்டி ஓட்டி படிச்சிக்கோஅதான் நல்லது..” என்றவன் அவள் மறுப்பைப் ஏற்றுக்கொள்ளாமல் வண்டியை அவள் பெயருக்கே வாங்கினான்..

 

பாட்டியிடம் சொன்னதும் அவரும்அம்மா சொன்னதையே சொன்னார்.. பாட்டி இது என்னோட ஆசை… அவளுக்கு வாங்கிட்டு தான் எனக்கு வாங்கணும்னு நான் நினைச்சேன் அதனால இத பத்தி நீங்க மேல பேசாதீங்க…!”

 

அதன் பிறகு வண்டியை ஓட்ட அவனே சொல்லிக் கொடுத்தான்.. முதல்ல கொஞ்ச நாள் பக்கத்தில் மட்டும் ஓட்டு..  அப்புறம் மெல்ல மெல்ல ஓட்டி பழகு,  எடுத்த எடுப்பில் டவுனுக்குள்ள போயிராத…”   அவனுடைய அன்பும் அக்கறையும் பாசமும் ரங்காவை பிரமிக்க வைத்தது..

 

 சம்பாதிக்க ஆரம்பித்ததும் ரங்காவுக்கு கழுத்துக்கு ஒரு மெல்லிய செயின் காதுக்கு கம்மல்  வாங்க என்று அவன் பணம் கொடுத்த போது ரங்கா மறுத்துவிட்டாள்..

 

 அதுவும் அவளை கேட்காமல்  தானே வாங்கி வந்து கையில் கொடுத்து, “ என்னோட தங்கையா இருந்தா செய்ய மாட்டேனா,  நீ இனி வேலைக்கு போக போறே..  இப்படி போலியானது போட்டுட்டு போனா நல்லாவா  இருக்கும்..  என்னை உன் கூட பிறந்தவனாக நினைச்சேன்னா   நான் எது செஞ்சாலும் நீ மறுக்க கூடாது…!  அன்றிலிருந்து வாசு எது சொன்னாலும் அவள் மறுத்ததுதில்லை கல்யாணத்தை தவிர…..

 

 இந்த விஷயங்கள் எல்லாம் வைதேகிக்கு  தெரியவர,   அவள்  ரங்காவையும்வாசுவையும் கண்டாலே எரிந்து விழ  ஆரம்பித்தாள்.. ஆனால் ரங்காவும், வாசுவும் எதையும் கண்டுகொள்ளாமல்வைதேகி குடும்பத்திற்கு பண உதவி செய்தனர்.

 

 பணம் கொடுக்கும்போது மட்டும்,  ஏதோ அது இவர்கள் கடமை என்பது போலவும்அவர்கள் உரிமை உள்ளவர்கள் என்பது போலவும் பேசும் வைதேகி கண்டு எப்போதும் ரங்காவிற்கு சிரிப்பு தான் வரும்.  ஆனால் அதற்கும் ஏதாவது பேச்சு வரும் என்பதால் கவனமாக அதை கடந்து விடுவாள்.

 

Women are complicated. women are multifaceted not because women or crazy.  but because people are crazy, and women happen to be people.

 

                                                                           Tavi gevinson 

 

 

 

பாட்டியும் ரங்காவும் ஹாஸ்பிடல் வந்திருந்தனர்….  மகாலட்சுமி ரங்காவை  பரிசோதித்துவிட்டு,  “இப்ப ஏழாவது மாசம் நடக்குது இனி கொஞ்சம் நீங்க வாக்கிங் போகலாம். ஈவினிங்.. ஒரு அரை மணி நேரம். அப்புறம் கொஞ்சம் சாப்பாட்டுல உப்பு கொஞ்சம் குறைச்சுக்கோங்க… மத்தபடி எல்லாம் நார்மலாக இருக்கு. இன்னும் ஒரு இருபது நாள் கழிச்சு வாங்க குழந்தையோட ஹார்ட் பீட் இதெல்லாம் எப்படி இருக்குன்னு செக் பண்ணி பாத்துடலாம்

 

“டாக்டர் டெலிவரி எப்ப இருக்கும் உத்தேசமா..?” பாட்டி தான் கேட்டார்..

 

“ ஒன்பதாவது மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வர இருக்கும்..  நிச்சயமா சிசேரியன்தான்..  ஆனாலும் எட்டாவது மாதம்  பாதியில் இருந்தே நாம கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கலாம்..  ஏதாவது வித்தியாசமா இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் வந்துருங்க..  இங்கேயும் வெளியூர் எதுவும் போக வேண்டாம்..

 

 “டெலிவரிக்கு எவ்வளவு ஆகும்னு உத்தேசமா சொல்ல முடியுமா? நாங்க கொஞ்சம் அதை தயார் பண்ணி வச்சுக்கிறோம்..”

 

 “எனக்கு சரியா தெரியல. நான் இங்கு உள்ள சிஸ்டர்ட்ட சொல்லி வைக்கிறேன். அவங்க விசாரிச்சு உங்க நம்பருக்கு போன் பண்ணுவாங்க

 

 “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லி வெளியே வந்தனர்… தனது வழக்கமான இன்ஜெக்ஷனை போடுவதற்காக ரங்கா   சிஸ்டர் இருக்கும் இடம் சென்றாள்..  அப்போது அங்கு உள்ள ஸ்டாப்ஸ்  நர்சுகளிடம்,  ஒரு சிறிய பரபரப்பு தென்படவேஎன்னவென்று பார்க்க டாக்டர் கல்யாணசுந்தரமும்அவரது பேரன் உபேந்திராவும் தங்களது அறைக்கு சென்று கொண்டு இருந்தனர்..

 

எதுனாலும் நீயே பார்த்துக்க வேண்டியது தானே..என்ன எதுக்கு  இழுக்குற ..?

 

 

நோ தாத்தா உங்களுக்கும் எல்லாம் தெரிஞ்சு இருக்கணும்,,  இது நீங்க உருவாக்கின ஹாஸ்பிடல்.  நாளைக்கு உன் இஷ்டத்துக்கு எல்லாம்  மாத்திட்டேன்னு சொல்லக்கூடாது..

 

என்னோடதா இருந்தா என்ன…? அது எல்லாமே உனக்கு தான் சொந்தம்…!” பேசிக்கொண்டே தங்களது அறைக்குள் நுழைந்து கொண்டனர்..  ரங்கா தான் அவர்களைப் பார்த்தாள்..  ஆனால் உபேந்திரா அவளைப் பார்க்கவில்லை..

 

 கம்பெனி வரவு செலவு கணக்கு ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்தது… ஹாஸ்பிடல் இன்னும் கொஞ்சம் நவீனம் ஆகலாம் என்ற எண்ணத்தோடு அதைப் பற்றி பேசுவதற்கு தாத்தாவையும் அழைத்து வந்திருந்தான்..  

 

  அங்கு ஏற்கனவே இருந்த ஆடிட்டர் மற்றும் சில தலைமையை மருத்துவர்களுடன் அவர்களது  டிஸ்கஷன் ஆரம்பித்தது…   டாக்டர்  சேதுராம் வந்திருப்பதை அறிந்து மகாலட்சுமியை நேரடியாக அவருக்கு போன் செய்தாள்..

 

அதான் உங்களுக்கு தான் டாக்டர் மகாலட்சுமி..” போனை எடுத்த உபேந்திரா தாத்தாவின் கையில் கொடுத்து விட..

 

 அதை வாங்கியசேதுராம், “சொல்லுங்க டாக்டர் என்ன விஷயம்…?”

 

சார்,  உங்க பேமிலி பிரண்ட்  பேத்தி ரங்கா வந்திருந்தாங்க,  செக்கப்புக்கு..  பாட்டியும் கூட வந்து இருந்தாங்க..  டெலிவரிக்கு என்ன என்ன செலவாகும்னு  கேட்டாங்க..?  உங்க கிட்ட கேட்டு சொல்றேன் சொல்லிட்டேன்..!

 

நோ எந்த சார்ஜ் கிடையாது..  இதுவரைக்கும் பீஸ்  எதுவும் வாங்கி இருக்கீங்களா..?”

 

“ இல்லசார்..!

 

“ அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க..  ஆமா  அவங்க போய்ட்டாங்க இருக்காங்களா..!

 

“ ரிஷப்ஷனில் இருக்காங்க சார்.. ஓகே நீங்க அங்க வாங்க நானும் வரேன்…” என்றவர் இப்ப வந்துடறேன்…” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

 

ரிசப்ஷனில் அமர்ந்திருந்த ரங்காவின் முன்னால் சென்ற டாக்டர் சேதுராம், “என்ன  ரங்கா பேத்தியை காணோம்.?” என்று கேட்க… 

 

அவரது குரலால் கலைந்த பாட்டி ரங்கா.. நீங்களா..?  என்ன இவ்வளவு தூரம்..?”

 

“ இந்த கொஞ்சம் வேலை இருந்தது..எங்க ரங்கா..?”

 

அதோஇன்ஜெக்க்சன் போட்டுட்டு வரா..!” என்று பாட்டி  ரங்கா சொல்லவும்திரும்பிப் பார்க்கபெரிய வயிற்றுடன் சற்று சிரமத்துடன் நடந்து வந்த பேத்தி  ரங்காவை  பார்த்தார்..

 

ரங்கா அவர்களது அருகில்  வந்ததும் சேதுராம், “எப்படி இருக்கேம்மா…?”  என்று சிரித்த முகத்தோடு கேட்க

 

 முதலில் அவரை பார்த்து திகைத்த ரங்கா,  அவரது இயல்பான விசாரிப்பில் சற்று ஆசுவாசப் பட்டு,  “நல்லா  இருக்கேன் தாத்தா..!” என்று பளிச்சென்று சிரித்த வண்ணம் கூறினாள்.

 

 அதற்குள் மகாலட்சுமியும் அங்கு வந்துவிட,  “ டாக்டர்  இவங்க ரிப்போர்ட்ஸ் எப்படி இருக்கு..?” என்று சேதுராம் கேட்க, அடுத்த பத்து நிமிடம் அவர்கள் இருவரும் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொண்டனர். .

 

ஓகே யூ  கேரி  ஆன்..!”  என்று மகாலட்சுமி அனுப்பி வைத்துவிட்டு, பாட்டியிடம் திரும்பி டோன்ட் வொரிஎல்லாம் நார்மலா இருக்கு.. கேர்புல்லா  பாத்துக்கோ..” என்று கூறி.. 

 

பேத்தி ரங்காவின் தலையை தடவி,  “பயப்படாதே எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று ஆசீர்வதித்து அவர்களை அனுப்பி வைத்தார்

 

 அறைக்குள் தனது வேலையில் இருந்தாலும் உபேந்திராவுக்கு தாத்தா எங்கு சென்றார் என்பது ஒரு குடைச்சல் ஆகவே இருந்தது.. அப்போது தற்செயலாக தனது கம்ப்யூட்டரில் உள்ள சிசிடிவி கேமராவை பார்க்க அதில் ரிசப்ஷனில் தாத்தா பாட்டியுடன் பேத்தியுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது… ‘ஓ இதுக்குத்தான் இவ்வளவு அவசரமா போனாரா.. .என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். 

 

உபேந்திராவுக்கு தாத்தா ரங்காவை ஆசீர்வாதம் செய்தது புதிதாக இருந்தது…  பொதுவாக அவனுடைய அப்பா அம்மாவை விட தாத்தா ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர்.. அப்படியாப்பட்ட ஒரு மனிதர்,  ரங்காவின் செயலை எவ்வாறு எடுத்துக் கொண்டார்..?  ஒருவேளை தப்பாகவே இருந்தாலும் தனது தோழிக்காக பொறுத்துக் கொண்டாரா…?அல்லது வீட்டில் தனக்கு மட்டும்தான் உபதேசமாமற்றவர்களுக்கு கிடையாதா?” பலவிதமான கேள்விகள் அவனுள் எழுந்தன..

 

திரும்ப அந்த தாத்தாவிடம், “என்ன வேலை தாத்தா..?” என்று தெரியாதது போல் கேட்டான். 

 

ஒன்னும் இல்ல.. ஒரு பழைய பிரண்டு ஒருத்தர்  வந்திருந்தார் அவர பார்த்துட்டு வந்தேன்…!”

 

அதன் பிறகு இருவருமே விட்ட பேச்சை தொடர,  மருத்துவமனை இன்னும் சற்று நவீனமாக்க சில திட்டங்களை உபேந்திரா கூறினான்

 

நவீனமாக்கிறது முக்கியம்தான்..  ஆனால் கட்டணத்தை பெரிதளவு ஏற்றக்கூடாது.. இது என்னுடைய கோரிக்கை…!”

 

“ ஓகே அதை நான் பாத்துக்கறேன்…” என்றவன்.. 

 

அது சம்பந்தமாக எவ்வளவு செலவாகும்னுஒரு எஸ்டிமேட் கொடுங்க…!”  என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.

 

காரில் திரும்பும் போது தாத்தாவிடம், “ஆமா உங்க ஃப்ரெண்ட் எதுக்கு வந்தாரு..?”

 

பிரெண்டு எதுக்கு வருவாங்க..என்ன பார்க்கத்தான் வந்தாங்க..?”

 

உங்களுக்கு 25 வயசுலே  எல்லாம் பிரண்ட் இருக்கும் போல இருக்கு.. எனக்கு கூட அந்த மாதிரி பிரெண்டு எல்லாம் கிடைக்கலை..!

 

அப்படியாநீ பிரெண்ட் மாதிரி ட்ரீட் பண்ணி இருக்க மாட்ட…”  நான் அந்த வயதிலும் தனது குசும்பை  காட்ட..

 

“ அது எப்படி பிரண்டு மாதிரி ட்ரீட் பண்றது..?”

 

பிரண்ட பிரண்டா தான்  நடத்தணும்..  உன் கூட பழகுற  கேஸ் எல்லாம் பிரண்ட் லிஸ்ட்ல சேர்க்காத..  அதெல்லாம் பிரண்டுன்னு சொல்லிட்டு வேற லெவல்ல பழகுற கேஸ்..!”  தாத்தா ஒரே போடாக போட, அவன்  வாயை மூடிக்கொண்டான்.. அது உண்மைதானே..  டெல்லியில் இருக்கும் வரை  நட்பு வட்டம் நட்போடு நின்றதில்லை..

 

 சென்னையில் தாத்தா  இருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறான்..  அவன் பழகும் சொசைட்டியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்..  அந்த ஒரு காரணத்தினாலேயே அவனுக்கு பெண்களின் மீது மதிப்பும் இல்லை,  கல்யாணத்தில் இஷ்டமும் இல்லை..

 

நாட்கள் விரைந்து கொண்டிருந்தது  பகலில் கொஞ்ச நேரம் ஆபீஸ் சென்று விட்டு ஈவினிங் சீக்கிரமே வந்து விடுவாள் ரங்கா.. 

 

தனது அப்பார்ட்மெண்ட் பக்கத்தில் இருக்கும் சிறிய பூங்காவில் நடந்து விட்டு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்து விடுவது வழக்கம் ஆயிற்று.

 

ரங்காவுக்கு கடவுளிடம் பெரிதாக எதுவும் வேண்டிக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றியதே இல்லை..

 

ஆனால் தற்போது இரண்டு மூன்று தடவையாக, அந்த விநாயகரிடம்,  ‘இந்த குழந்தைகள் பிறப்பிலேயே நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும்..’ என்று தன் வயிற்றை தடவி அந்த கடவுளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தாள்..

 

இன்னும் பத்து நாள்கள் கழித்து விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து  சீனியரிடம் கேட்டபோது“தாராளமா எடுத்துக்கோ.. ஆறு மாசம் கழிச்சு ஆபிஸ் வா போதும்! என்றார்

 

“சார், அவ்வளவு நாள் நான் வேலைக்கு வராம இருந்தா என்னோட வேலையே  மறந்து போயிடும்!”

 

“அதெல்லாம் பார்த்துக்கலாம்…” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார்..

 

சரவணனிடம் “குழந்தை எப்படி இருக்கிறது…?” என்று கேட்டதற்கு..

 

“பாப்பா நல்லா இருக்கா… நாளை மறுநாள் உபநயனம், பெயர் வைக்க ஏற்பாடு பண்ணி இருக்காங்க..” 

 

“ஓ அப்படியா…” என்று முறுவலித்தவளிடம்..

 

“அப்போ உங்களுக்கு சொல்லவில்லையா….!?” என்று விசாரிக்க..

 

“இல்லை…” எனும் விதமாக தலையாட்டினாள் ரங்கா..

 

“நான் சொல்றேன், தாரா  கிட்ட உங்களை கூப்பிட சொல்லி..!”

 

“வேண்டாம்..  கூப்பிட்டாலும் என்னால வர முடியாது… அதுக்கு எதுக்கு அவங்களை கூப்பிட சொல்லணும்.. விட்ருங்க எதுவுமே தானா வரணும்..!”

 

“அம் சாரி  ரங்கா….!”

 

“நோ ப்ராப்ளம்..” என்றவள் தனது அறைக்கு சென்றுவிட்டாள்..

 

இவங்க கிட்டேயும் பேச முடியலயார்கிட்டயும் சொல்ல முடியல…. என்னதான் பண்றது…’ மனதுக்குள்ளே சலித்துக் கொண்டான்..

 

ஆபீஸில் இருந்து வந்ததும் தனது பீரோவில் எதையோ தேடிக் கொண்டிருந்த  ரங்காவிடம் பாட்டி, “ என்ன தேடிட்டு இருக்கே..?”

 

“ என்  பாஸ் புக் பாட்டி..!

 

“ அது எதுக்கு இப்போ…?” 

 

பாட்டி விளையாடுறீங்களா.. அடுத்த மாசம் எவ்வளவு பணம் வேணும்..  உங்களுக்கு தெரியாதா..?”

 

அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.  உன்னோட சேவிங்க்ஸ்  இருக்கட்டும்  பின்னால தேவைப்படும்…”

 

சரிமுதல்ல பாஸ்புக் இருக்குதான்னு செக் பண்ணிக்கிறேன்…”  தனது உடைகளுக்கு இடையில் இருந்த பாஸ் புக்கை தேடி எடுத்து விட்டாள்..  எவ்வளவு இருக்கு என்று பார்க்கையில் ஒரு லட்ச ரூபாய் அதில் இருந்தது..

 

“ பாட்டி  ஒரு லட்ச ரூபாய் இருக்கு போதுமா…?”

 

போதும் எங்கிட்ட குடு. நான் பத்திரமா வச்சிருக்கேன்…” என்று வாங்கி வைத்துக் கொண்டார்

 

“ குழந்தைக்கு தேவையான சாமான் வாங்க வேண்டாமா..!

 

“ வாங்கணும்…!”

 

“ இன்னைக்கு போய் வாங்கலாமா…!”

 

குழந்தை   பிறப்பதற்கு முன்னாடி எதுவும் வாங்கி வைக்க கூடாது…!”

 

“ இது என்ன புது ரூல்ஸ்….?”

 

புதுசு இல்ல பழசுதான்…  அந்த காலத்திலேயே எங்க அம்மா சொல்லி இருக்காங்க,  குழந்தை பிறந்த பிறகுதான் புதுசு  எதுவும், அதுக்கு வாங்கணும்..  அந்தக் காலத்துல குழந்தை பிறந்ததும் பழைய  வேஷ்டியில் தான் குழந்தையை சுத்தி வச்சிருப்பாங்க…!”

 

பாட்டி அது உங்க காலம்..  இப்ப எல்லாம் இன்பெக்ஷன்  ஆயிடும்…!”

 

அதுவும் சரிதான்… ஆனாலும் குழந்தை பிறந்த பிறகுதான் புதுசு..

 

அப்ப நான் செலக்ட் பண்ணி வாங்க முடியாதா…?”

 

கொஞ்சமா நாங்க வாங்குகிறோம்… அப்புறம் நீ  நிறைய வாங்கு…!”

 

என்ன,  ரெண்டு பேரும் தீவிரமா எதை பத்தி பேசிட்டு இருக்கீங்க….?” என்று கேட்டுக்கொண்டே   கீர்த்தியும் வாசுவும் உள்ளே நுழைந்தனர்

 

அவளுக்கு இப்பவே குழந்தைகளுக்கு டிரஸ் எடுக்கணுமாம்..?”

 

“ இப்பவே, வா போவோம்…!”

 

நீ இப்படி சொல்லி தாண்டா அவளைக் கெடுத்து வச்சிருக்கே…!”

 

என்ன பாட்டி நீங்க..?  அவ என்ன அவளுக்கு  டிரஸ் வேணும்னு கேட்டாளா..?  நகை  எடுக்கணும்னு சொன்னாளா …? குழந்தைகளுக்கு தானே எடுக்கணும்னு  சொல்றா..இதுல  என்ன தப்பு ..?”

 

தப்பு எதுவும் இல்லை.. ஆனால் குழந்தை பிறந்த பிறகு தான் எடுக்கணும்..  அது தான் ஐதீகம்….!”

 

“ ஓகேடா..  குழந்தை பிறந்த பிறகு நாம எல்லாரும் போய் நிறைய எடுத்துடலாம்..!” அவன் சொன்னதைக் கேட்டு கீர்த்தி சிரித்தாள்..

 

ஏய் நீ எதுக்கு சிரிக்கிற..?”

 

இல்லகுழந்தை பிறந்ததும் அக்கா கொஞ்ச நாளைக்கு வெளியவே வர முடியாது. அப்புறம் எங்க  டிரஸ் செலக்ட் பண்றது…?”

 

ஒரு மாசம் கழிச்சு போகலாமில்ல..  அப்ப போறோம் என்ன ரங்கா..?”  என்று வாசு  அவளுக்கு பரிய

 

அதானேநீங்க அக்காவை விட்டு கொடுத்துடுவீங்களா என்ன…?”

 

அவ எந்த காலத்திலேயும்  என்னை  விட்டுக் கொடுத்ததே கிடையாது.. அப்புறம் நான் எப்படி..?” என்றவனுக்கு கண்கள் லேசாக கலங்கியது.

 

“ எப்ப இருந்து நீ லீவு போடற..?”

 

இன்னும் பத்து நாள்  தான்  ஆபீஸ் போகணும் அப்புறம் லீவு தான்..!

 

அடுத்த செக்கப் எப்போ..?”

 

லீவு எடுத்த அன்னைக்கே ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு  வந்துடலாம்.. அப்புறம் அவங்க சிசேரியனுக்கு நம்மள தான் நாள் பார்க்கச் சொல்லி இருக்காங்க.. ஒரு நல்ல நாள் பார்த்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆயிட  வேண்டியதுதான்..!” பாட்டிதான் பதில் சொன்னார்.

 

பத்து நாட்கள் கழித்து ரங்கா லீவு போட்டு வந்ததும் ஹாஸ்பிடல் சென்று செக்கப் பண்ணி விட்டு வந்தனர்..

 

அடுத்த பத்து நாட்களில் ஒரு நல்ல நாள் பார்த்து பாட்டி சொல்ல அன்று சிசேரியன் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

 

வாசுவும் கீர்த்தியும் கொஞ்சநாள் இவர்களோடு வந்து தங்கி விடுவது என்று முடிவு செய்தனர்..

பாட்டி மட்டும்  தனியாக ஒரு பிரசவத்தை சமாளிக்க முடியாது என்று  வாசு தீர்மானமாகச் சொல்லி விட்டான்..

 

பாட்டியும் அது சரிதான் என்பதால் மவுனமாக ஒத்துக்கொண்டார்.. குறிப்பிட்ட நாளில் ஹாஸ்பிட்டலில் ரங்கா  சேர்க்கப்பட்டாள்…

 

மறுநாள் காலை முதல் சிசேரியன் ரங்காவுக்கு தான்.. இரவு சற்று மனக் கலக்கத்துடன் இருந்த பேத்தியிடம் பாட்டி, “ரங்கா நான் உன்னை என்றுமே ஒரு பக்குவமான அனுசரித்துப் போகக் கூடிய பொண்ணாதான் பார்த்து இருக்கேன்….

 

இப்ப நான் சொல்லப்போறது உனக்கு தெரிந்தாலும் கூட அதை அனுபவபூர்வமாக உணர்ந்தவள் என்கிற  முறையில  நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ…

 

பிரசவம் என்பது குழந்தைக்கு மட்டும் பிறப்பு கிடையாது ஒரு தாய்க்கும் அது பிறப்பு தான்…. சிறு குழந்தையாக பிறந்து, சிறுமி, குமரி, மனைவி என்ற பருவம் மாறி தாய் என்கிற கருணை தேவதை அங்கு பிறக்கிறாள்..

 

யாரும் சொல்லி வைத்து அது  நடக்கிறது இல்லை… அந்த தொப்புள் கொடிக்கான  பந்தம் அந்தத் தாயை பிறக்க வைக்கிறது…

 

குழந்தைக்கு பால் கொடுக்கும் போதும் சரி, அது பசியில் அழும் போதும் சரி, அதன் குரல் கேட்கும் போதும் சரிஅதன்  அம்மாவுக்கு ஏற்படும் பரவசம், துடிப்பு  அதை உணர்ந்து பார்த்தால்தான் தெரியும்….

 

எல்லாருக்கும் இது சாதரணமா  நடக்கும்… ஆனால் உனக்கு ஒரு கட்டத்தை மீறி அசாதரணமா இந்த கட்டம் நடக்குது..

 

மனைவிங்கற பருவத்துல உனக்கு கிடைக்க வேண்டிய சந்தோஷம் எதுவும் கிடைக்கல… நீ அதுல உள்ள பிரச்சினைகளை மட்டும் தான் பார்த்த ரங்கா, அதிலும் சில நினைவுகள், சந்தோஷங்கள் எல்லாமே இருக்கு… அதை அனுபவிக்காமல் அதுக்கு அடுத்த கட்டத்துக்கு  நீ தாவிட்டே… இந்தத் தாய் என்கிற இந்த ஸ்தானத்திலாவது  உன்னோட சந்தோசத்தை பரிபூரணமாக நீ அனுபவி….

 

எதுவும் நம்ம கையில இல்ல.. ஒவ்வொரு தாயும் தன்னுடைய குழந்தைகளுக்காக தன்னை உருக்கிக்கிறா.. இந்த குழந்தைகளுக்காக நீயும்  உன்னை உருக்கிகித்தான்   போறே… அந்த சமயத்தில் எந்த விதமான எதிர்ப்பு வந்தாலும் ஒரு நொடி கூட இந்த குழந்தைகளை,  விடவோ,  வெறுக்கவோ கூடாது…

 

 

இந்தக் குழந்தைக்காக நீ  என்ன வேணா செய்யணும்.. ஏன்னா  அது தான் உன்னோட வாழ்க்கை. உன்னோட லட்சியம்.. இதை மட்டும் உன் மனசுல வச்சுக்கோ…. உனக்கு தைரியம் தானா கிடைக்கும்…! பாட்டி அவளுக்கு புரியும் படி எடுத்து உரைத்தார்..

 

“பாட்டி ரொம்ப தேங்க்ஸ்..!

 

*எதுக்கு.?

 

“முதல்ல நான் இப்படி ஒரு முடிவு எடுத்ததை நீங்க ஆதரிப்பீங்கன்னு   நான் எதிர்பார்க்கல.. இரண்டாவது எனக்கும் இந்த உலகத்தில், எனக்காகவே என்னை நேசிக்கிற ஏதாவது ஒரு ஜீவன் வேண்டும்னு ஒரு ஆசை  இருந்தது..  அது கணவனா தான் இருக்கணும்னு எதிர் பார்க்கலை…

ஆனால் குழந்தைங்ககிறது நாம அன்பு செலுத்தும்போது  பிரதிபலன் பாராமல் அதுவும் திருப்பி நம்ம கிட்ட அன்பு செலுத்தும் இல்லையா..? அதுவும் எந்தக் குழந்தைக்கும் அம்மான்னா ஸ்பெசல்.. அதான் நான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்.. கண்டிப்பா நான் என் குழந்தைகளுக்காக எந்தவித சோதனையும் தாங்கி வாழ்வேன் பாட்டி.. இது உங்க மேல சத்தியம்….!” மனபூர்வமாக ரங்கா பாட்டியிடம் கூறினாள்..

 

மறுநாள் அதிகாலையிலேயே ரங்காவுக்கு ரெட்டை குழந்தைகள் பிறந்தது.. ஆண் ஒன்று, பெண் ஒன்று. ஆபரேஷன் முடிந்து வெளியில் வந்த டாக்டர் மகாலட்சுமி “பாட்டி  உங்க பேத்திக்கு ஆணும், பெண்ணுமா இரட்டை குழந்தைங்க..  சூப்பரா இருக்கு பிள்ளைங்க… போய் பாருங்க…!” என்று கூறிக் கொண்டே தனது அறைக்கு சென்றார். 

 

அங்கு சென்றதும் முதல் வேலையாக சேர்மன் சேதுராமிற்கு  போன் பண்ணி, “சார்  ரங்காவுக்கு சிசேரியன் முடிஞ்சிருச்சு.. ஆண் குழந்தை ஒன்று..  பெண் குழந்தை ஒன்று..” என்று சொன்னதும்.. 

 

அவர் “ரொம்ப தேங்க்ஸ். மகாலட்சுமி உங்க உதவி இல்லைனா இது நடந்திருக்காது.. எனிவே நான் உங்களுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன்…”

 

“டாக்டர், என்ன இது? நாங்க உங்க ஆஸ்பத்திரியில் வேலை பாக்குற டாக்டர். நீங்க சொன்னதை நான் செஞ்சு தான் ஆகணும்..!”

 

“உதவி வேற, கடமை வேற. நீங்க செஞ்சது உதவி..   அதுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்..

 

நல்ல பன்னீர் ரோஜா நிறத்தில்,  சுருட்டை முடியுடன், கருவண்டு விழிகளை கொண்டு  பிறந்த குழந்தைகளை பார்த்த பாட்டிக்கும், வாசுவுக்கும், கீர்த்திக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை..

 

சந்தோஷத்தில் பாட்டி போன் பண்ணி வைதேகிக்கும், கேசவனுக்கும் விஷயத்தை சொல்ல, “உங்களுக்குத்தான் மானம் இல்லை என்றால் எங்களுக்கு இல்லையா…? அப்பன் பெயர் தெரியாத பிள்ளைகளுக்கு நீங்க சந்தோசப்பட்டு நிக்கிறீங்க…! வெக்கமா இல்ல… போனை  கீழே வைங்க.. நாங்க பார்க்க வருவதாக இல்லை..!” என்று பொரிந்து விட்டு போனை கீழே வைத்தாள்.

 

                அத்தியாயம் 21

 

ரங்கா காலேஜில் முதல் ரேங்க் எடுத்து பாஸ் பண்ணி இருந்தாள்.. ரிசல்ட் வந்ததும் ரங்க பாஷ்யத்திற்கு போன் பண்ணிஅங்கிள் நான் பாஸ் பண்ணிட்டேன் டிஸ்ட்ங்சன்…” என்று சொல்ல..

 

“ஓகே, கங்குராஜுலேசன்ஸ். நல்ல நாள் பார்த்து நம்ம  ஆபீஸ் வந்துருமா…?

 

“தேங்க்ஸ் அங்கிள்…..!” என்றவள்  அவர் சொன்னபடி நல்ல நாள் பார்த்து ஆபீஸில் சேர்ந்துவிட்டாள். 

அவள் கூடவே புதிதாக நான்கு பேர் வேலைக்கு சேர்ந்தனர். சரவணன், லீலா, மகேஷ், வினோத் 

 

ஆரம்பத்தில் மற்றவர்கள் எடுத்து வைத்த குறிப்பை டைப் பண்ணி கொடுப்பதுசில விஷயங்கள் காப்பி பண்ணி கொடுப்பது என்று சின்னச் சின்ன வேலைகள்தான் கொடுக்கப்பட்டது..

 

முதன்முதலாக கேஸ் குறிப்புகள் கொண்ட பேப்பரை எடுத்துக் கொண்டு சீனியருக்கு உதவியாக ஒரு நாள் கோர்ட்டுக்கு சென்றாள்.

 

முதல் நாள் என்பதால் சற்று படபடப்பாக இருந்தது.. வழக்கமாக வரும் இன்னொரு உதவியாளர் அன்று லீவு வரவில்லை.. எனவே ரங்காவையும், மகேஷையும் அழைத்துக்கொண்டு சீனியர் கோர்ட்டுக்கு சென்றிருந்தார்..

 

முக்கியமான கிரிமினல் கேஸ் வேறு.. இரண்டு மூன்று ப பைல்களில் அவரது குறிப்புகள் இருந்தது..

 

நேரம்  பார்த்து அவற்றை அவரிடம் சேர்ப்பிக்க வேண்டிய வேலை மகரிஷிக்கும்ரங்காவுக்கும் கொடுத்திருந்தார்..

 

முதலில் பயந்தாலும் சற்று தெளிந்து விட்ட ரங்காநிதானமாக அவர் கேட்க, கேட்க ஒவ்வொரு பேப்பராக மாற்றி, மாற்றி எடுத்து கொடுத்ததில் சந்தோசமடைந்த ரங்கபாஷ்யம் வீட்டுக்கு வந்ததும், *பரவாயில்ல நீ பயந்து விடுவேன்னு  நினைச்சேன் சமாளிச்சிட்டே.. இப்படித்தான் இருக்கணும் வெரி குட்..” என்று பாராட்டினார்.

 

முதல் மாத சம்பளமாக ஒரு சிறிய தொகை எல்லோருக்கும் வழங்கப்பட்டது.. மற்றவர்கள் எல்லோரும் சாதாரணமாக வாங்கிக்கொள்ள ரங்கா மட்டும் அவரது காலில் விழுந்து வணங்கி வாங்கிக் கொண்டார்.

 

“என்னம்மா இதெல்லாம்..?” என்று கேட்டதற்கு..

 

“எங்க பாட்டிக்கு அப்புறம் நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது நீங்க மட்டும் தான் சார்.. நீங்க ஆசீர்வாதம் பண்ணினால் எனக்கு சந்தோஷம்..” என்று அவள்  சொன்ன பதில்ரங்க பாஷ்யத்தை நெகழ்த்தி விட்டது.. 

 

I WAS SMART ENOUGH TO GO THORUGH ANY DOOR THAT OPENED

 

                                                                                          JOAN RIVERS 

 

ரங்கா  கண் விழித்ததும் கீர்த்தியும், பாட்டியும் அவளிடம் குழந்தைகளை கையில் ஏந்திக் கொண்டு வந்து காட்டினர்..

 

குழந்தைகளை பார்த்ததும் ரங்காவின் கண்களில் தன்னை அறியாமல் கண்ணீர் சுரந்தது..

 

சின்னஞ்சிறு கண்ணும், வாயும் கொண்டு ஒரு உள்ளங்கை அளவே இருந்த இரண்டு குழந்தைகளும், இரண்டு குட்டி ரோஜாப்பூக்கள் கை கால் முளைத்து இருப்பது போல் அவளுக்கு தோன்றியது.

 

ஒரு நாள் முழுவதும் அவளை ஐசியூவில்   வைத்திருந்துவிட்டு இன்று காலை நான் அறைக்கு மாற்றி இருந்தனர்.

 

சற்று நேரத்தில் ஒரு நர்ஸ் உள்ளே வந்து மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு பாட்டியின்  உதவியோடு இரண்டு குழந்தைகளுக்கும் ரங்காவை தாய்ப்பாலூட்ட வைத்தார்..

 

“இந்த மாதிரி தான் கொடுக்கணும். அரை மணி நேரத்துக்கு ஒரு பத்து நிமிஷம் கொடுங்க, அவ்வளவுதான் அதுக்கு வயிறு.. முதல் ஒரு மாதம் ஒரு நாளைக்கு இருபது  தடவையாவது இந்த மாதிரி பண்ணனும்..!”

 

குடுக்கிறதுக்கு  முன்னாடி என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக சொல்லி விட்டு பாட்டியிடம் “நீங்க இருக்கீங்க… எல்லாம் கொஞ்சம் பாத்துகோங்க பாட்டி..!” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

 

பிறந்த பச்சை மண்அது தன்  செப்பு வாயில் பால் குடிக்கும்போது கங்காவிற்கு இந்த உலகமே  மறந்த்து. குழந்தையின் தலையை தன் மார்போடு அணைத்து, அதன் கால்களை வருடி, அதற்கு அமுதூட்டி அதன் வாயை துடைத்துபசி ஆறி தூங்கிய குழந்தையை பாட்டி வாங்கி தன்  அருகில் கிடத்திய போது ரங்காவிற்கு எழுந்த உணர்வுகளை வார்த்தையால் வடிக்க இயலாது போயிற்று..

 

அதிலும் இரண்டு குழந்தைகள் தன் உயிரே இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகளாக உருக்கொண்டதோ என்ற நினைவில் அவைகள் லேசாக வீறிடும் முன் தன்னை அறியாமல் குழந்தைகளுக்காக பாட்டியிடம் கையேந்தினாள்..

 

மறுநாள் ரங்காவையும், குழந்தைகளையும் அவர்களது ரூமில் பார்க்க வந்த  சேதுராம், குழந்தைகளைப் பார்த்ததும் பாட்டி ரங்காவிடம் வெரி குட், பெண் ஒண்ணு ஆண் ஒண்ணு.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. பேத்தியும்,  பேரனும்.. வஞ்சனை இல்லாம ரெண்டு கிடைச்சிருச்சு என்ன ரங்கா.. சொல்லி சிரிக்க பாட்டியும் இணைந்து சிரித்தார்.

 

“அப்புறம் முக்கியமான விஷயம். அதை சொல்லத்தான் வந்தேன். பத்து நாள் ஆஸ்பத்திரில இருந்துட்டு போங்க. இங்கே உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா ஒரு நர்ஸ் போட    சொல்லி இருக்கேன்.. ஒத்தையில சிரமப்பட வேண்டாம்..” 

 

“எதுக்கு தேவை இல்லாம..?

 

“மூச்.. ஒன்றும்  பேசக்கூடாது.. நீ மட்டும் தான் இங்க  துணை இருக்க. கீர்த்தி வீட்டுக்கு போய் சமையல் பண்ணி எடுத்துட்டு வரா.. அப்புறம் என்ன? நர்சு துணை இருக்கட்டும்…!” என்று முடித்துவிட்டார்.

 

பாட்டி ரங்காவுக்கு மிகவும் சந்தோஷம். உதவி செய்த நண்பனுக்கு  மனதார நன்றி கூறினார்.

 

இடையில் ஒரு நாள் ஹாஸ்பிடலுக்கு வந்த உபேந்திராவுக்கு ரங்காவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கும்  விஷயம் தெரிந்தது

 

வீட்டிற்கு சென்றதும் தாத்தாவிடம் “உங்க பிரெண்டு பேத்திக்கு ஜாக்பாட்  அடிச்சிருக்கு போல இருக்கு…” 

 

“என்ன சொல்ற..?

 

“டிவின்ஸ் பிறந்திருக்கிறதை தான் சொல்றேன்..!”

 

”அதுவா.. ஆமா ஆசைக்கு ஒரு பெண்.. ஆஸ்திக்கு ஒரு ஆண்…!”

 

“யாரோட ஆசைக்கு..? யாரோட ஆஸ்திக்கு..!” அவ்வளவு பெரிய பணக்காரங்களா என்ன…?”

 

“ஏன் அப்ப பணம் இருக்கிறவங்கதான் அவங்க ஆஸ்திக்கு குழந்தை பெத்துக்கணுமா என்ன..? பணம் இல்லாதவங்க குழந்தை வந்தா கூட அதை அழிச்சிரணுமா என்ன..?”

 

“அப்படி இல்ல.. நீங்க ஆஸ்திக்குன்னு சொன்னீங்களே…!”

 

“ஆமா சொன்னேந்தான்.. அதெல்லாம் அர்த்தத்தோட பார்க்கணும்.. அவங்க கிட்ட என்ன இருக்கோ அதுதான் அவங்க ஆஸ்தி.. அது எவ்வவளவு வேணா  இருக்கட்டும்.. அதைதான் சொன்னேன்.. ஏன் நீ கூட இப்ப பணக்காரனா தான் இருக்கே.. உனக்கு எந்தப் பிள்ளை இருக்கு..? உன்னோட ஆஸ்திக்கு..?” என்றவர் அவன் பதில் சொல்லுமுன் எழுந்து சென்றார்..

 

தாத்தாவின் கோபத்தை கிளறி விட்டு விட்டோம், என்று உபேந்திராவுக்கு நன்கு புரிந்தது.. 

 

ரங்கபாஷ்யம் தனது மனைவி மீனாவோடு குழந்தைகளை பார்க்க ஹாஸ்பிடல் வந்தார்.. வாங்க சார்..!”  என்று புன்னகையோடு வரவேற்ற  ரங்காவை பார்த்து, “ ரொம்ப சந்தோஷம்மா,  நீ ஒரு குழந்தை கேட்ட, இறைவன் இரண்டு கொடுத்துட்டேன் போல இருக்கே..  இன்னும் பொறுப்பு ஜாஸ்தியா ஆயிடுத்து..!”  என்று சொல்லிக்கொண்டே தன் மனைவி கையில் இருந்த, குழந்தைக்கு வாங்கியிருந்த பொருட்களை பாட்டியிடம் கொடுத்தார்.

 

 நிறைய வாங்கியிருந்தார்..  டிரஸ் குழந்தைகள் குளிப்பதற்கு சோப்பு, க்ரீம் டவல் என்று ஒரு பெரிய பார்சல்…“ எதுக்கு சார் இவ்வளவு  வாங்கிட்டு வந்திருக்கீங்க..?”

 

“எனக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பிறந்தான் வாங்கி தர மாட்டேனா..  எனக்கு நீ ஒரு மக மாதிரிதான்ம்மா.  அது என்னவோ உன்னை மட்டும் என்னால பிரிச்சு பார்க்க முடியல..  என்ன இரண்டு குழந்தைக்கு வாங்கனேன்,  அதனால ரெண்டு செட் வாங்கிட்டேன்…!

 

மீனாவின் முகமே சரியில்லை..  அதை வைத்து அவருக்கு விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்டு பாட்டியும் ரொம்ப பேசவில்லை. கேட்ட வார்த்தைக்கு பதில் சொன்னதோடு சரி..  

 

குழந்தைகளை பார்த்து விட்டு ரங்கபாஷ்யம் ரொம்ப அழகா இருக்கு உன்ன மாதிரியே..  நல்லா பார்த்துக்கோ..  ஆறு மாசம் கழிச்சு முடிஞ்சா வேலைக்கு வா.. இல்லைனா ஒரு வருஷ லீவு எடுத்துக்கோ..!

 

பார்க்கலாம் சார்..  முடிஞ்சவரை சீக்கிரமா வர பார்க்கிறேன்….!”

 

சற்று நேரம் இருந்து பாட்டியிடம் ரங்காவின் உடல்நிலை,  குழந்தைகளைப் பற்றி எல்லாம் பேசி விட்டு,  கடைசியில் “இந்தாங்க..” என்று பாட்டியின் கையில் ஒரு பணக்கட்டை எடுத்துக் கொடுத்தார்.

 

“ ஐயோ என்ன இது…?”

 

இல்ல இருக்கட்டும்..  உங்களுக்கு இப்ப கண்டிப்பா தேவைப்படும்..  ரங்காகிட்ட முதலிலேயே கொடுக்கணும்னு நினைச்சேன்..  ஆனா அவ ரொம்ப தன்மானம் பார்க்கிறவவாங்க மாட்டான்னு தெரியும்.. அதனாலதான் உங்க கிட்ட கொடுக்கிறேன்..  உங்க பையன் கொடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா..?  என்னை  உங்க பையனா நெனைச்சுக்கோங்க..  உங்களால எப்ப முடியுமோ எனக்கு அப்பா திருப்பிக் கொடுங்கள்.. கடனாக தான் தரேன்…”  என்று சொல்லி  கொடுக்கபாட்டியால் மறுக்க இயலவில்லை.

 

கடன்தான்..  எப்படியாவது நானும் ரங்காவும் திருப்பிக் கொடுத்திடுவோம்…!”

 

கண்டிப்பா வாங்கிக்கிறேன்..” என்றவர்  சொல்லிக் கொண்டு கிளம்பினார்.

 

வீட்டுக்கு சென்றதும் மீனா ரங்கபாஷ்யத்தை  பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டாள்.. நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல..?’

 

ஏன்,  திடீர்னு இப்படி ஒரு கேள்வி..?”

 

போகும்போது எங்க போறோம்னு  சொல்லவே இல்ல..  ஏற்கனவே தேவையான பொருள் வாங்கி சாமான வச்சிட்டீங்க போல இருக்கு,  அங்க போனதும் தூக்கி குடுக்குறதுக்கு ரெடியா..  அப்ப நான்  இதை விரும்பமாட்டேன்னு  உங்களுக்கு தெரிஞ்சு தானே இருக்கு. அப்புறம் எதுக்கு என்னை கூட்டிட்டு போனீங்க…?”

 

பாட்டி ரங்கா உன்னோட  சொந்தம்..  நான் மட்டும் போனா நீ வரலைன்னு,  உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க..!

 

இதுல தப்பா நினைக்க அதுக்கு என்ன இருக்கு…?  தப்பா நடந்திருக்கிற ஒரு விஷயத்துக்கு நான் வரலைன்னா தப்பில்லை…!”

 

தப்பா பேசாத மீனா..?”

 

என்ன தப்பா பேசாத..  ஆமா நானும் தான் கேட்கிறேன்..  தட்டழிந்தது,  கெட்டழிந்து  போனவளை  நீங்க எதுக்கு தலையில தூக்கி வெச்சு கொண்டாடுறீங்க..?”

 

ரங்கா தப்பா நடந்து இருக்க மாட்டா..  அதைவிட முக்கியம் தப்பான ஒரு காரியத்துக்கு பாட்டி துணை  போயிருக்க மாட்டா..!

 

ஓ.. உங்களுக்கு பாட்டியும் பேத்தியும் ரொம்ப நல்லா தெரியும் போல இருக்கு…!” மீனாவின் வார்த்தைகளில் குத்தல் தெரிந்தது.

 

என்ன பேசுற நீ..பார்த்து பேசு..!  உனக்கு இன்னொரு  பொண்ணு இருந்து,  அவளுக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை என்றால்,  நீ சப்போர்ட் பண்ண மாட்டியா..!

 

என் வயித்துல பொறந்த பொண்ணு இந்த மாதிரி பண்ண மாட்டா..  அப்படி பண்ணுனா நான் வெட்டி போட்டுருவேன்..!

 

முட்டாள்தனமா பேசாதே..  குழந்தைங்க நம்ம மூலம் இந்த பூமிக்கு வந்தவங்க,  அவ்வளவுதான். அவங்களோட வாழ்க்கையில் தலையிட கூடிய உரிமை யாருக்கும் கிடையாது..  இது தெளிவா புரிஞ்சதுனால தான் பாட்டி  அவளுக்கு சப்போர்ட் பண்ணி  நிக்கிறாங்க…!”

 

அவங்க  பேத்தி,  அதனால சரி…  ஆனால் உங்களுக்கு என்ன உறவு..?”  என்று மீனா கேட்டதும் கோபத்தில் கொதித்து எழுந்த ரங்கபாஷ்யம் மனைவியை ஒரு அறை விட..

 

 அத்தனை நேரம் ஏதோ சத்தமாக இருக்கே என்று உள்ளே வந்து அவர்களுக்கு தெரியாமல் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த விஷ்வா அப்பா..” என்று அதட்டினான்..

 

ஏய் நமக்கு கல்யாணம் ஆகி இருபத்தி ஐந்து  வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு..  இதுக்குள்ள நீ என்ன புரிஞ்சுக்க வச்சுருக்க  வேண்டாம். அப்படி புரியலைன்னா நாம  வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை..  ச்ச..”  என்றவர் அறையை விட்டு உடனே வெளியேறி விட்டார்.

 

என்னமா பிரச்சினை..?  எப்போதும் அப்பாவுக்கு கோபம் வந்தா நீங்க அமைதியா போயிடுவீங்க..  இன்னைக்கு என்ன..?”

 

ஒண்ணும் இல்ல..   அந்த கேடு கெட்டவளுக்கு ஆஸ்பத்திரியில் இரட்டை குழந்தை பிறந்து இருக்கு..  அதை பார்ப்பதற்கு என்னை  என்கிட்ட சொல்லாமலே கூட்டிட்டு போனார்…  அது மட்டும் இல்ல, அந்த குழந்தைகளுக்கு ஒரு செம  சாமான் வாங்கி இருக்கிறார் எனக்கு தெரியாமல்..  அங்கே போயி ஒரு லட்ச ரூபாய் கட்ட எடுத்துக் கொடுத்து செலவுக்கு வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கிறார்..  இவ்வளவு தூரம் செய்யறதுக்கு அவ என்ன நமக்கு ரொம்ப முக்கியமான ஆளான்னு  நான் கேட்டேன், இது தப்பா..?”  அம்மாவின் உணர்வுகளை  அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

“சரிம்மா  விடுங்க..” அம்மாவிடம் சொல்லி விட்டான். ஆனாலும்  ரங்கா விஷயத்தை  ஜீரணிக்க முடியவில்லை..

 

 ‘எப்படி இந்த மாதிரியான ஒரு விஷயத்துக்கு அவள் சம்மதித்தாள்’ என்பது அவனுக்கு   புரியாத  புதிராகவே இருந்தது..  அப்பாவின் அலுவலகத்தில் வெகுநாட்களாக பணிபுரிபவள் என்ற விதத்தில் அவனுக்கு அவளை நன்றாகவே தெரியும்..  மேலும் அப்பாவும் அடிக்கடி அவளைப் பற்றி வீட்டில் நல்லவிதமாகவே சொல்லி இருந்தது வேறு அவனுக்கு அவளைப் பற்றிய நல்லெண்ணத்தை மனதில் விதைத்து இருந்தது..

 

 முக்கியமாக எந்தவித அலட்டலும் இல்லாத பாவனையை அவளிடம் அவன் எப்போதும் கண்டிருக்கிறான்.. அந்த ஒன்றே அவளிடம் அவனுக்கு பெருமதிப்பை தோற்றுவித்திருந்தது..  

 

இந்த கால பெண்களின் நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே சற்று எல்லை மீறியதாக தோன்ற,  அவளுடைய நேர்மையும், தன்னம்பிக்கையும்,  தன்மானமும்  அவனுக்கு மிகவும்  பிடித்துப்போக காதல் என்று சொல்லி தன்னுடைய இமேஜை குறைத்துக் கொள்ள விரும்பாமல் நேரடியாக கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான்..

 

 அவன் சொல்வதற்கு முன்னே அவள்  இப்படி ஒரு முடிவெடுப்பாள்  என்றும்அதற்கு பின்னாடி ஒரு காதல் அல்லது ஒரு ஏமாற்றம் இருக்கும் என்றும் அவனால் கணிக்க முடியவில்லை..  காதலித்து ஏமாற்றி விட்டு விட சிறிய குழந்தை அல்ல.. அது அவனுக்கு தீர்மானமான எண்ணம்..  அவளை அறியாமல் இந்த குழந்தை வந்திருக்க வாய்ப்பு இல்லை..  எப்படி என்று அவனும் தெரிந்த விதத்தில் எல்லாம் மண்டையை குழப்பி கொண்டான் . ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை..

 

ஒருவேளை கல்யாணம் யாருக்கும் தெரியாமல் பண்ணி கொண்டனரோ..அதன்பிறகு அவர்களுக்கு இடையில் பிரிவு ஏற்பட்டிருக்குமோ இந்த மாதிரி தான் நினைக்கத் தோன்றிற்று..

 

 வெளிப்படையாக அப்பாவிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.. இன்னும் தன்னுடைய எண்ணத்தை வீட்டில் சொல்லாததால்,  அவளுடைய இந்த முடிவு அவனுக்கு  அவள் மீது ஒரு தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்த,  அதை அவரிடம் சொல்ல  முடியாத நிலையில்,  இருந்து வந்தான்.

 

 இப்போது அப்பா அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசவும்,  அம்மாவின் கோபம் நியாயமானது என்று தோன்ற, “ அப்பா வரட்டும் நான் கேட்கிறேன்..  நீங்க இப்ப பேசாம  இருங்க..! என்று சொல்லி அம்மாவை சமாதானப்படுத்தி வைத்தான்

 

 கோர்ட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்த அப்பாவிடம் விஷ்வா எதுக்குப்பா  அம்மாவுக்கு பிடிக்காத விஷயத்தில் எல்லாம்  நீங்க தலையிடுகிறீங்க..?”

 

என்னோட விஷயம் உங்க அம்மாவுக்கு பிடிக்கணும் எந்த கட்டாயமும் இல்லை..  அவளுக்கு பிடிக்கலைன்னா  அவளை ஒதுங்கிக்க சொல்லு..  அதை விட்டுவிட்டு தேவையில்லாத பேச்சோ, பிரச்சனையோ  இருக்கக் கூடாது..  நான் யாருக்கு உதவி பண்ணனும், உதவி பண்ண கூடாது இதெல்லாம் சொல்லக்கூடிய அதிகாரம் யாருக்குமே கிடையாது..  நான் குடும்பத்திற்கு தேவையான எல்லா விசயமும்  கரெக்டா செஞ்சுட்டு தான் இருக்கேன்..  உங்களுக்கு எதையும் பாக்கி  வச்சுட்டு நாம மத்தவங்களுக்கு அள்ளிக் கொடுக்கலை..

 

 ஒரு நேர்மையும், தன்னம்பிக்கையும்  நிறைஞ்ச  பொண்ணு அவ..  உங்களுக்கு எல்லாம் தப்பா தெரியற ஒரு விஷயம் அவளுக்கு சரியாக தெரிஞ்சிருக்கு.. அதனால அப்படி பண்ணி இருக்கா..  என்கிட்ட வாய் திறந்து  அவ உதவி கேட்கல..  ஆனா இன்னும் ஆறு  மாசம் ஆகும்  வேலைக்கு வர..  இரண்டு குழந்தைகள் வேற,  சம்பளத்துக்கு பதிலா,   கொஞ்சம் பண உதவி செஞ்சேன் இதுல என்ன தப்பு? கண்டிப்பா திருப்பித் தந்துவிடுவா.. எனக்கு நம்பிக்கை இருக்கு..

 

 இப்பமே அவ தனியா  போர்டு போட்டா நிறைய கேஸ் அவள் கிட்ட வரத்தான் செய்யும்..  ஆனால் எந்த காலத்திலும் அந்த மாதிரி என் கிட்ட பேசினது இல்ல..  அவள் கேசுக்கு குறிப்பு எடுத்துக் கொடுக்கிற  விதமே அலாதியாக இருக்கும்..  ரொம்ப கெட்டிக்காரி.. ஆனா நான் மத்தவங்க கிட்ட சொன்னது கூட கிடையாது..  அவளும் என்கிட்ட எதையும் எதிர் பார்த்தது கிடையாது.  ஒரு சின்ன விஷயம்,  இது உங்க அம்மாவுக்கு பொறுக்காமல் என்னை  தப்பா பேசலாமா..?  என்னோட வயசு என்ன…? அவளோட வயசு என்ன..அதுதான் எனக்கு தாங்கல…!” என்றவர் சாப்பிடாமலே  அவரது அறைக்கு சென்றுவிட்டார்..

 

 ஒரு ஆணாக,  அப்பாவின் கோபம் அவனுக்கு நியாயமாக தெரிந்தது… ஆனால் இதில் தான் செய்ய ஒன்றும் இல்லை என்பதும் புரிந்தது.. கணவன் மனைவிக்கு இடையில் அது மகனாக இருந்தாலும் அவர்கள் விரும்பாமல் தலையிடுவது தவறு..  அப்பாவின் சொல்லில் இருந்த ஒவ்வொரு வார்த்தையும்,  அவரது நேர்மையையும்,  ரங்காவின் மேல் அவர் வைத்திருக்கும் மதிப்பையும் காட்டியது..  இதே காரணத்தினால் தான் அவளுக்கும் ரங்காவை மிகவும் பிடித்து தொலைத்தது

 

ஆனால் இப்போது..இந்த நிலையிலும்  ரங்காவின் மீது அப்பா வைத்திருக்கும் நம்பிக்கை,  தனக்கு இல்லையோ..?’ என்று எண்ணும்போதே,  தன்னைப்பற்றி கீழானவனாக உணர்ந்தான்.

 

 

வைதேகி கேசவனை வறுத்து எடுத்து விட்டாள்…  “கொஞ்சமாவது உங்க அம்மாவுக்கு அறிவு இருக்கா…?  ஏற்கனவேஅவளோட திமிருக்கும், அகம்பாவத்துக்கும்  உங்க அம்மா தான் காரணம். இப்ப இந்த மாதிரி ஒரு காரியத்தை பண்ண வச்சு, அவ வாழ்க்கையையே கெடுத்தது உங்க அம்மாதான்..

 

எல்லாத்துக்கும் மூல காரணம் நீங்க.. நீங்க ஒழுங்கா சம்பாதித்திருந்தா,  நான் ஏன் என் பொண்ண அவங்களுக்கு தாரை வார்க்க போறேன்..  உங்க சம்பாத்தியம் பத்தல, நான் அவளை படிக்க வைக்கிறேன்,  அப்படின்னு சொல்லி அவளை   கூட்டிட்டு போயி  குட்டிச் சுவராக்கி இன்னைக்கு இப்படி பண்ணி வச்சிருக்காங்க

 

அதை பெருமையாக வேற என்கிட்ட சொல்றாங்க “இரட்டைப் பிள்ளை பிறந்திருக்கு வந்து பார்க்க வான்னு..’

 

ஏற்கனவே வெளியில் தலைகாட்ட முடியல. தெரிஞ்சவங்க எல்லாம் அவகிட்ட கேக்குறதுக்கு பயந்துகிட்டு என்கிட்ட கேட்கறாங்க. உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..? அப்படின்னு..

 

இல்லைன்னு, சொன்ன அடுத்த நிமிஷம், அப்புறம் குழந்தை உண்டாகி இருக்காங்களே எப்படின்னு அடுத்த கேள்வி வேற..

 

எனக்கு தெரியாது, எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு, சொல்லி, சொல்லி நானும் அலுத்துப் போய் விட்டேன்..

 

நல்லவேளை தாராவுக்கு, மோகனுக்கும் கலியாணம் நடந்து முடிஞ்சுது. இல்லைன்னா அவங்க ரெண்டு பேர் கல்யாணமும் கேள்விக் குறியாய் போயிருக்கும்..

இப்படி ஒரு பெண்ணை பெத்ததுக்கு, பெறாமல்  இருந்திருக்கலாம்….!” என்று ஆரம்பித்து நாள் முழுவதும் கேசவனை   திட்டி தீர்த்தாள். நின்றால் குற்றம், உட்கார்ந்தார் குற்றம். எல்லாம்  உங்களால் எல்லாம் உங்களால்தான்

 

பொறுக்க முடியாமல் கேசவன் “நான் என்ன பண்ணுனேன் வைதேகி, என்னையே  குற்றம் சொல்ற? நீ எதுக்கு எங்க அம்மாகூட அவளை அனுப்பி வைச்சே,  நீயேன் வைத்திருக்க வேண்டியது தானே…!”

 

“அதைத்தானே ஏன்னு  இவ்வளவு நேரம் பாடம் எடுத்தேன். அது கூட புரியாமல் பேசிட்டு இருக்கீங்க.. மூன்று பிள்ளைகளைப் படிக்க வைக்க வசதி வேண்டாமா!”

 

“ஆமா, எங்க அம்மாவோட பைசா மட்டும் வேணும். மத்தபடி அவங்கள பாக்க கூட மாட்டேன்னு சொன்னது  யாரு..? அவங்களும் நம்ம கூடவே இருந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்குமா…?” என்று சந்தடி சாக்கில் வைதேகியை சொல்லிக் காட்ட..

“ஓஹோ… இன்னும் அது வேற உங்களுக்கு குறை இருக்கா.. அவங்களையே  இங்க வீட்ல வச்சுட்டு… இப்ப ஏதோ ஒண்ணு  ரெண்டு பேர் பார்த்தும், பாராமல் கேட்டாங்க..

 

அவங்க  இங்கேயே  இருந்திருந்தா எனக்கு வேற  வினையே வேண்டாம்.. என்று சொல்லி அதற்கும் பெரிய பாட்டு பாடினாள்.

 

தற்செயலாக போன் பண்ணிய   தாராவிடம் வேறு “உங்க அப்ப பாட்டியை நான் பார்த்துக்கலைன்னு ஒரே சண்டை..” என்று சொல்லி அழ, “போனை அப்ப கிட்ட கொடு..!” என்று சொன்ன தாரா அடுத்த அரைமணி நேரம் அப்பாவை திட்டி விட்டுதான் ஒய்ந்தாள். 

 

திட்டி முடித்ததும் அம்மாவிடம் பேசிய தாரா, “என்னம்மா அக்காவுக்கு ரெட்ட குழந்தை பிறந்து இருக்கா..?”

 

“ஆமா

 

“எனக்கு ஏன் நீங்க சொல்லல..?

 

“இது என்ன சொல்லி பெருமை படுற விஷயமா…?

 

“அதுக்கில்ல, முதலே தெரிஞ்சிருந்தா நான் இவரை போகவிட்டு இருக்க மாட்டேன் இல்லை!”

 

“என்ன சொல்ற…?”

 

“உன் மருமகன்  நேத்து போய் பார்த்துட்டு வந்துட்டு என்கிட்ட சொன்னார்..!”

 

“என்ன சொன்னாரு…?”

 

“உங்க அக்காவுக்கு ரெட்டை பிள்ளை பிறந்திருக்கு. ஹாஸ்பிடல்ல இருக்காங்க.. குழந்தைங்க ரெண்டும் நல்லா இருக்கு அப்படின்னாரு…!

 

நான் கேட்டேன், உங்களுக்கு எப்படி தெரியும்னு..? போய் இப்பதான் பார்த்துட்டு வந்தேன் அப்படின்னார்..

 

நானே போகல. இங்க வீட்டில் யாரும் போகல. நீங்க மட்டும் என்ன..? அப்படி என்ன ஆத்திரம்..? என்று கேட்டதற்கு,

 

உங்க வீட்ல நீங்க போங்க, போகாம இருங்க, அதை பத்தி எனக்கு கவலை இல்லை. நான் உன்னை  கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே அவங்க  என் கூட வேலை பார்க்கிற ஒரு ஆபீஸ் ஸ்டாப். நான் போகாமல் இருக்க முடியாது. நாளைக்கு என்னோட சீனியர் கேட்டால் நான் பதில் சொல்லணும் இல்ல.. அப்படின்னு சொல்லி முடிச்சிட்டாரும்மா!”

 

“ம்கூம், நாம இவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல சொல்லியா கொடுக்கணும்…?”

 

“போனியா அம்மா பார்க்க..?

 

“இல்ல நான் போகல…  இந்த மானங்கெட்ட பொழப்புக்கு,  நான் வேற  போய் பார்க்கணுமாக்கும்..! 

 

“மோகன்… ?

 

“சும்மாவே திட்டிட்டு இருக்கான். நம்ம போனா அதுக்கு வேற திட்டுவான்!”

 

“ஆமாம்மா எனக்கு எங்க மாமியார் கிட்ட பேசவே கொஞ்சம் சங்கடமா இருக்கு.. இவள பாத்துட்டு என்னை  எதுவும் சொல்லிடுவாங்களோ என்று பயமா இருக்குமா..!”

 

“அவ உங்கள பத்திஎங்கள பத்தி எல்லாம் கவலைப் பட்டு இருந்தா இந்த மாதிரி செய்வாளா..?

 

“யாரும் எப்படியும் போகட்டும் எனக்கு எப்படி தோணுதோ அப்படி தான் நான் இருப்பேன்… உங்க பாட்டி கிட்ட இருக்கிற அதே அகம்பாவம் தாண்டி….!” அவளால் தன் மாமியாரை சொல்லாமல் இருக்க முடியவில்லை

 

“சரிமா, கவலைப்படாத. என்ன செஞ்சு தொலைக்க? இவ கூட பிறந்ததற்கு இன்னும் என்ன எல்லாம் அனுபவிக்க வேண்டுமோ..என்று புலம்பிக்கொண்டே தாரா போனை வைத்தாள்.

 

ரங்காவும் பாட்டியும் இருப்பது முப்பத்தி இரண்டு  வீடுகள் கொண்ட நான்கு மாடி அப்பார்ட்மெண்ட்.. ஒவ்வொரு தளத்திலும் எட்டு, எட்டு வீடுகள்

 

குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கல்,  பழக்கமும் உண்டு..

 

ரங்காவின் பிரக்னன்சிக்கு பிறகு அவளிடம் நேரில் கேட்கும் தைரியம் இல்லாததால்ஒருவருக்கு ஒருவர் அவளைப் பற்றி பேசிக் கொள்ளவே செய்தனர். இது எல்லாம் ரங்காவுக்கும் பாட்டிக்கும் தெரிந்தாலும் வெளி நபர்களிடம் தன்னை ஒப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெளிவாக கூறிவிட்டாள்  ரங்கா..

 

இப்பொழுது ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தைகளை கூட்டிக்கொண்டு அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு தான் வந்தனர்.

 

வீட்டில் வேலை செய்யும் பெண்மணி ஆரத்தி எடுத்து வரவேற்க கீர்த்தியும், ரங்காவும்  ஆளுக்கொரு குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தனர்..

 

ரங்காவின் பெட்ரூமில் கட்டிலுக்கு அருகில் இரண்டு தொட்டில்கள் போடப்பட்டு பக்கத்திலேயே பாட்டிக்கும் இன்னொரு சின்ன கட்டில் போடப்பட்டிருந்தது..

 

குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு விட்டு விச்ராந்தியாக கட்டிலில் உட்கார்ந்த ரங்காவுக்கு எப்படி  இதுகளை வளர்க்கப் போகிறோம் என்று ஒரு நொடி மலைப்பு தோன்றி மறைந்தது..

 

“ரங்கா வசதி எல்லாம் போதுமா பாரு..? என்று வாசு வந்து நிற்க

 

“போதும்… வாசு உனக்கும் கீர்த்திக்கு ரொம்ப தேங்க்ஸ்.. இரண்டு பேரும் இல்லைன்னா நானும் பாட்டியும்  ரொம்ப சிரமப்பட்டு இருப்போம்… இதுக்கு எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல..!”

 

“என்ன நன்றி எல்லாம் சொல்லி என்னை தள்ளி வைக்கிறியா..அதெல்லாம் தேவையில்லை…” என்றவன் அவள் அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்..

 

“கீர்த்தி, பாட்டி இங்க வாங்க..!”

 

“என்ன வாசு…?”  என்று வந்து நின்ற பாட்டியிடம்.. 

“கேட்டுக்கோங்க, எனக்கு ஒரு சின்ன யோசனை தோணுது..எல்லோருக்கும் சம்மதம் என்றால் அது படி செய்யலாம்..!”

 

“என்ன..?”

 

“என்னோட அபார்ட்மென்ட்டையும்இந்த வீட்டையும்  வாடகைக்கு விட்டுட்டுபுதுசா ஒரு த்ரி பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் பார்த்து நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கலாமா…?

 

வேலைக்கு ஒரு ஆள் வெச்சிக்கலாம். காலையில கீர்த்தியும், பாட்டியும் எல்லாம் பார்த்துக்குவாங்க. அப்புறம் கீர்த்தி என் கூட ஆபீஸ் வந்துரட்டும். ஈவினிங் திரும்பியதும் மீதத்தை பார்த்துக்கலாம்…!

 

பகல்ல ஒரு ஆள்   குழந்தையை கவனிக்க மட்டும் மட்டும் வச்சுக்கிட்டா.. மற்றதை நம்ம பாத்துக்கலாம்.. என்ன கீர்த்தி சம்மதமா..நாம தனியா இருந்தா எனக்கு தான் கஷ்டம். நான் இங்கேயும் அங்கேயுமா அல்லாடணும்.

 

இன்னும் ஒரு ஆறு மாதத்துக்காவது நம்ம உதவி ரங்காவுக்கு கட்டாயம் தேவைப்படும்..!” என்று சொன்னதும் கீர்த்தி உடனே சம்மதம் சொல்லி விட்டாள்..

 

“வாசு என்ன இது..நானும் பாட்டியும் சமாளிச்சுக்குவோம்.. கீர்த்தியும் நீயும் உங்க வாழ்க்கைய பாருங்கடா கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு.. அதைப் பார்க்க வேண்டாமா…?

 

எதுவாக இருந்தாலும் இந்த ஆறு மாதத்துக்கு அப்புறம்தான்… இந்த குழந்தைக்கு தாய்மாமன் என்கிற முறையில் சொல்றேன்இது என்னோட முடிவு.. மாற்றம் எதுவுமில்லை…!” தீர்மானமாகச் சொல்லி விட்டு“கொஞ்சம் வெளிய வேலை இருக்கு போயிட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு  சென்றான்.

 

                    அத்தியாயம் 22

 

ரங்கா வேலைக்கு செல்ல ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வாசுவிற்கு கம்பெனி நன்றாக லாபம் கொடுத்தது.  மூவருமே சிக்கனமாக செலவு செய்ததால் பணம் தாராளமாக சேர ஆரம்பித்தது..

 

வாசு பாட்டியிடம் “ரங்காவிற்கு நகைகள் செய்யலாம்…” என்று சொல்ல….

 

 ரங்கா அதை மறுத்தாள். “பாட்டி முதல்ல நம்ம குடியிருக்க ஒரு நல்ல வீடு வேணும். அதுக்கப்புறம் தான் மத்த எந்த விஷயமும்..”

 

“மெட்ராஸ்ல தனி வீடு வாங்குற  அளவு நம்மகிட்ட வசதி இல்லை ரங்கா..!”

 

“தனி வீடு எதுக்கு வாங்கணும் பாட்டி, அப்பார்ட்மெண்ட் வாங்கிக்கலாம்….”

 

வாசுவிற்க்கும் அவள் சொன்னது சரி என்று படவே, அப்பார்ட்மெண்ட் வாங்க இடம் தேட ஆரம்பித்தனர்.

 

ஒதுக்குப்புறமாக வேண்டாம் மெயின் ஏரியாவிலேயே பார்ப்போம், கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் அதுதான் வசதி, என்று தெளிவாக திட்டமிட்டனர்

 

அதன்படியே முதலில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி அதில் குடியேறினர்… 

 

வழக்கம்போல் வைதேகி “நாங்க இதுநாள் வரைக்கும் வாடகைக்கு தான் இருக்கிறோம். எங்களுக்கு ஒரு வீட்டு வசதிக்கு வாய்ப்பே இல்லை நீங்க மட்டும் புதுவீடு அதுக்குள்ள வாங்கியாச்சா..!” என்று மல்லுக்கு நிற்க..

 

“இது எங்க வீடு இல்லை. வாசு  வாங்கியிருக்கிறான். நான் என்னோட சம்பாத்தியத்தில் வாங்குவது தான் என்னுடைய வீடு..” என்று உறுதியாக மறுத்து விட்டாள் ரங்கா..

 

“என்ன ரங்கா இப்படி சொல்றே..?” என்று வாசு வருத்தப்பட..

 

“இருக்கட்டும் வாசு, எனக்கு உன்னை  பத்தி தெரியும். நீ இலாபத்தில் சரிவிகிதம் சேமித்து இருப்ப, இன்னொரு சதவீதத்தை பேங்க்ல போட்டு வச்சிருக்கே, அது பாட்டியோட பங்குன்னு  என்று சொல்லுவே..  அதனால இப்ப வாங்கின வீடு உனக்கு தான். பாட்டியோட பங்கு  பாட்டிக்கு உரியது..!

 

இன்னும் ரெண்டு வருஷத்துல எனக்கும் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் நானும் ஒரு வீடு வாங்குறேன். அப்ப தேவைன்னா  நான் உன்கிட்ட பண உதவி வாங்கிக்கிறேன்…!” என்று முடித்துவிட பாட்டி தனது பேத்தியை பெருமையாக பார்த்தாள்..

 

 

 A women With a  voice is, bydefinition a strong woman.

 

Melinda Gates

 

வாசு சொன்னபடியே அருகிலுள்ள இன்னொரு ஏரியாவில் மூன்று பெட்ரூம் வாடகைக்கு எடுத்து இரண்டு வீட்டையும் காலி பண்ணி எல்லோரும் அங்கு ஒரே இடத்தில் குடி புக செய்தான்..

 

 ரங்காவுக்கும் பாட்டிக்கும் மூச்சு விட நேரமில்லை.. கீர்த்தி வீட்டின் மற்ற பொறுப்புகளை ஏற்க, பாட்டி 24 மணி நேரமும் குழந்தைகளுடனும் ரங்காவுடனும் நேரத்தை கழித்தார்.. சுற்று வேலைக்கு ஒரு ஆள்ஏற்பாடு பண்ணிக் கொண்டு கீர்த்தி சமையல் மற்றும் ஆபீஸ்  கணக்கு வழக்குகளை வீட்டில் வைத்தே கவனிக்க, வாசு கம்பெனிக்கு செல்ல ஆரம்பித்தான்..   படித்து முடித்து  வேலை தேடிக்கொண்டிருந்த இன்னொரு பையனை  சேர்த்துக் கொண்டு,  கீர்த்தி இல்லாத குறையை நிவர்த்தி செய்துகொண்டு,  வாசு  கம்பெனியை நடத்தினான்..

 

நேராக முப்பதாவது நாள் பெயர் வைத்து விடலாம் என்று  பாட்டி சொல்ல,  வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது..  பாட்டி  ரங்காவின் சீனியருக்கும்,  டாக்டர் சேதுராமுக்கும் மட்டும் சொல்லுவோம்..”  என்று வாசுவிடமும்  ரங்கா விடவும் கேட்க..

 

வேற யாருக்கும் சொல்ல வேண்டாமா..?” என்று மறைமுகமாக வாசு கேட்டான்..

 

வேண்டாம்.. என்ன தான் தப்பு பண்ணியிருந்தாலும், பெத்த பொண்ணு..  அவ குழந்தைய வந்து பார்க்க முடியல..  பிறகு எதுக்கு  அவங்களுக்கு சொல்லணும்..இனி எது வேணும்னாலும் அவங்களா  தான் என்னை தேடி வரணும்.. நான் தேடி போறதா இல்லை…” பாட்டி  தீர்மானமாகச் சொல்லிவிட்டார்..

 

பாட்டியே  ரங்கபாஷ்யத்தை  போனில் அழைத்து, “நான் ரங்காவோட பாட்டி பேசுறேன்..  நாளைக்கு குழந்தைகளுக்கு புன்யாண்யம்  வைச்சிருக்கோம். காலையில 9 மணியிலிருந்து 10 மணிக்கு உள்ள..  நீங்க கண்டிப்பா வரணும்…”

 

வரேம்மா..  ரங்கா குழந்தைகள் நல்லா இருக்காங்களா ..?”

 

“ நன்னா இருக்காங்க…”

 

சேதுராமிடமும்  அழைத்து கூறினார்.. நானே கேட்கணும்னு நினைச்சேன். நீ சொல்லிட்டே… கண்டிப்பா வரேன்..

 

 மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குழந்தைகளை குளிக்க வைத்து தயார் செய்து விட்டு,  ரங்காவும் குளித்து பாட்டி வாங்கி வைத்திருந்த  புது சேலை உடுத்தி,  தயாராகினாள்..  எட்டு மணிக்கெல்லாம் ஐயர் வந்து ஹோமம் வளர்க்க ஆரம்பித்தார்..   ரங்க பாஷ்யமும்  சேதுராமும்வந்து விட்டனர்..

 

 குழந்தைகள் சற்று சதைப் பிடித்து  அழகாக இருந்தனர்… அதை பார்த்த இருவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அருகில் வந்து  பார்த்துவிட்டு,  ரங்கா உன் பேத்தியும்,  பேரனும் ரொம்ப அழகு..  தினமும் திருஷ்டி சுத்தி வைக்கிறியா..?”

 

 “ஆமாகட்டாயமா…”

 

குழந்தைகளை   தூக்கிட்டு அம்மாவை  வர சொல்லுங்க..” என்று ஐயர்  அழைக்க,  ரங்காவும், கீர்த்தியும் ஆளுக்கொரு குழந்தைகளைக் கொண்டு வந்தனர்.

 

“ பெரியவா யார் இருக்கா பெயர் வைக்கிறதுக்கு..?”

 

“ பாட்டி நீங்க உக்காருங்க..” என்று வாசு சொல்ல.

 

நீங்க ரெண்டு பேரும் உட்காருங்க.. ஆளுக்கு ஒரு குழந்தையை மடியில் வைத்துகொண்டு..  நீங்க தான் பெயர் வைக்க போறீங்க..”  என்று சேதுராமையும் ரங்கபாஷ்யத்தையும்  பார்த்து பாட்டி  சொல்ல, அவர்கள் இருவரும் திகைத்துப் போயினர்..

 

என்ன ரங்கா இது..?”

 

இந்த குழந்தைகளுக்கு நீங்களும் தாத்தா தான்..  அப்புறம் என்ன உக்காருங்க.. வாசு உள்ள இரண்டு வேஷ்டி வச்சிருக்கேன் அதை எடுத்து கொடுஅவங்க ரெண்டு பேருக்கும்..”  என்று சொல்ல  வாசு அவ்வாறே செய்தான்.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவரும் வேஷ்டியை  கட்டிக்கொண்டு வந்து ஐயரின் முன்னால் உட்கார, “ ரங்கா உன் கையில் உள்ள குழந்தையை டாக்டர் கிட்ட கொடு..

 

கீர்த்தி உன் கையில் உள்ள குழந்தையை சார் கிட்ட கொடு..!”  என்று பாட்டி உத்தரவிட்டார்..

 

அவர்கள் முன்னால் இரண்டு தாம்பாளங்களில் பச்சரிசி பரப்பப்பட்டு,  விரலி மஞ்சள்  அதில் வைக்கப்பட்டிருந்தது..

 

“ மோதிரம் போட்டிருக்கேளா..?  என்று அய்யர் வினவ,

 

“ இருக்கு..” என்று இருவரும் கழட்டினர்.

 

அத வச்சு பச்சரிசியில் குழந்தையோட பெயரை எழுதுங்கோ…”

 

என்ன பெயர் நீங்க சொல்லுங்க…!”  என்று ரங்காவிடம் கேட்க..

 

பையன் பெயர் பார்த்தா..  பெண் பெயர் பாவனா.. என்றாள்..

 

பேஷ்,  இரண்டுமே அர்ஜுனனின் இன்னொரு பெயர் என்று சிலாகித்த ஐயர்.. எழுதுங்கோ..” என்றார்.

 

சேதுராம் பார்த்தா என்று எழுதி,  குழந்தையின் காதில் மூன்று தடவை பார்த்தாபார்த்தாபார்த்தா என்று கூறினார்.

 

ரங்கபாஷ்யமும்பாவனா என்று எழுதிகுழந்தையின் காதில் மூன்று தடவை பாவனாபாவனாபாவனா என்று கூறினார்.

 

அப்புறம் அம்மா கிட்ட குடுங்க. அவ குழந்தை  காதுல  மூணு தடவை சொல்லட்டும்..  அப்புறம் மத்தவங்க சொல்லுங்க..”  என்று சொல்ல அதுபோலவே அனைவரும் குழந்தைகளின் காதில் அந்த பெயரை உச்சரித்தனர்..

 

சேதுராம் தான் கையோடு வாங்கி வந்திருந்த செயினை எடுத்து குழந்தைகளின் கழுத்தில் போட,  ரங்க பாஷ்யமும் தான் வாங்கி வந்து இருந்த செயினை  குழந்தைகளின் கழுத்தில் போட்டார்..  வாசு குழந்தைகளுக்கு தங்க வளையல்கள் அணிவித்தான்..  பாட்டி தன் பங்கிற்கு இடுப்பு செயின் அணிவித்தாள்..

 

சந்தோஷத்தில் ரங்காவுக்கு கண்ணீரே வந்துவிட்டது.. “ ஏய் எதுக்கு இப்ப அழறே..?” என்று உரிமையாய் வாசு அதட்ட..

 

ஒன்றுமில்லை..” என்று ஒரு நொடியில் தன்னை சமன்படுத்திக் கொண்டாள்..  ஐயர், மற்றவர்கள்  முன்னிலையில் தன்னுடைய,   உணர்ச்சிகளை காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை

 

பாட்டி தான் இருவரிடமும் “எதுக்கு இதெல்லாம் நீங்க செஞ்சது அதிகம்.. திரும்பத், திரும்ப எங்களை கடனாளி ஆக்கறீங்க..?

 

இப்படி பேசினா எனக்கு ரொம்ப கோபம் வரும்..  நீ எந்த  உரிமைலயில அந்த குழந்தைக்கு என்னை  பெயர் வைக்கச் சொன்னேயோ,  அதே ஒருமையில் தான் நாங்க ரெண்டு பேரும் செஞ்சுருக்கோம்..  இதுக்கு மேல இதை பத்தி பேசக்கூடாது..  என்ன டிபன் அதைக் கொடு முதல்ல..!  என்று உரிமையாய் டைனிங் டேபிளுக்கு  சென்று அமர்ந்து விட,  வாசுவும் கீர்த்தியும்அவர்களுக்கு பரிமாறினர்.

 

அதற்குள் குழந்தைகள்  சிணுங்கவே  அவற்றிற்கு பசி யாற்றுவதற்காக ரங்கா தனது அறைக்குள் எடுத்து சென்று விட்டாள்.

 

ரங்கா உனக்கு என்ன ஹெல்ப் பண்ணா கிட்ட கேளுநான் செய்ய கடமைப்பட்டு  இருக்கிறேன்..   ஒரு நர்ஸ் வேணும்னா கொஞ்ச நாளைக்கு அப்பாயிண்ட் பண்ணி விடட்டுமா..?”

 

இல்ல அதெல்லாம் தேவையில்லை..  வாசு இப்ப எங்க கூட தான் இருக்கிறான்..  அதனால கீர்த்தியும் நானும் பாத்துக்குவோம்..  அதுபோக வெளி வேலைக்கு ஆள் வச்சிருக்கேன்…  இது போதும்.. ஒரு ஒரு வருஷம் கஷ்டமா இருக்கும். அப்புறம் குழந்தைங்க வளர்ந்திடுவாங்க…!” என்று பாட்டி முடித்து விட்டார்.

 

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ என்பதற்கு ஏற்ப குழந்தைகள் வளர ஆரம்பித்தனர்..  குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும்  ரங்காவுக்கு உலகத்தில் உள்ள மொத்த சந்தோஷமும்  அவளுக்கே கிடைத்தது போல் இருந்தது

 

 குழந்தைகளுக்கு  பால் கொடுக்கும் போதும்,  அவைகளை மடியில் வைத்து தூங்க வைக்கும் போதும்,  முழித்து  இருக்கையில் கைகால்களை உதைத்துக் கொண்டு, ‘ங்கா’  என்று அவர்கள் பேசும்போது,  இத்தனை சந்தோஷம் உலகத்தில் உண்டா என்று  அவளுக்கு தோன்றிற்று..

 

பாட்டி பார்த்தாவை பாருங்களேன்.. சத்தம் போடும் போதே ஓங்கி குரல் கொடுக்கிறான்…   அதே பாவனா கொஞ்சம் மெல்லிசா சத்தம் கொடுக்கிற மாதிரி இருக்கு இல்ல..!

 

அதெல்லாம் இருக்காது..  உனக்கு பெண் குழந்தை அப்படின்ன உடனேஅதே நோக்கத்தோடு பார்க்கிறதுனால்  அப்படித் தோணுது…  3 மாசம் வரைக்கும் அவர்களுக்கு ஒன்றுமே புரியாது..  தெரியாது… மூணு மாசத்துல தாய் முகம் தெரிய ஆரம்பிச்சுடும்.. அப்புறம் மத்தவங்களை கொஞ்சம் கொஞ்சமா பார்க்க ஆரம்பிக்கும்….  அப்ப தான் அதுக்கு நிறங்கள்  தெரியும்..  அதுவரைக்கும் நிறங்கள் எல்லாம்  தெரியாது..

 

 ஆனால் குரல் நல்லா மனசுல பதியும்.. யார் அடிக்கடி வச்சிட்டே இருக்காங்களோ  அவங்களோட குரல் நல்லா தெரியும்…!”

 

அப்படியா..

 

ஆமா பாரேன்..  உன்னோட குரல் என்னோட குரலோடு  வாசுவோட குரலும்  நல்லா தெரியும்.. நீயே பார்..  காலையிலயும் ராத்திரியும் அவன் தானே பிள்ளைகளை வச்சுட்டு இருக்கான்..”  என்று சொல்லவும் வாசு வரவும் சரியாக இருந்தது

 

  கம்பெனியில் இருந்து வந்த வாசு  முதல்  வேலையாக குளித்துவிட்டு வந்து,  பார்த்தாவை  கையில் எடுத்தான்..

 

“ கீர்த்தி  காபி ..!” என்று குரல் கொடுத்து விட்டு..

 

என்னடா மருமகனே..நான் வருவேன்னு  முழிச்சிட்டு இருக்கியா..  பால் குடிச்சாச்சா..?” என்று அவனிடம் பேசகுழந்தை கை கால்களை அசைத்துக் கொண்டு அவனைப் பார்த்து  சிரித்தான்..

 

 அதற்குள் பாவனா லேசாக சிணுங்கவே, “என்ன மருமகளேஅதுக்குள்ள உனக்கு பொறாமையா..உன்னை தூக்கலைன்னு..”  என்று கூறிக்கொண்டே , “ ரங்கா  அவளை தூக்கி இந்த மடியில வை..

 

 

ரெண்டு குழந்தைய  வைக்க முடியாது..  கீழ தவற  விட்டுறாதீங்க.. அக்கா நீங்க  அவர் சொல்றார்னு  கொடுக்காதீங்க..”  காபியைக் கொண்டு வந்த கீர்த்தி கூறினாள்.

 

ஏய் நீ சும்மா இருடி.. அதெல்லாம் நான் மேனேஜ் பண்ணிருவேன்..! ரங்கா நீ வை..   மருமக அழறா பார்..!

 

சரி நான் வைக்கிறேன்..  முதல்ல பார்த்தாவை  கீழே விட்டுட்டு டிபன் சாப்பிடு.. அப்புறம்   உன்னோட மருமகனையும்,  மருமகளையும்  நானே உன் மடியில வைக்கிறேன். ஓகே வா…!” ரங்கா சொன்னதும்  கீர்த்தியிடம்  இருந்து அவசரமாக  காப்பியை வாங்கி குடித்தவன்,  அவள் தந்த வடையும் சாப்பிட்டுவிட்டு,  “ம்ம்,ஆச்சு.. இப்ப  கொடு..என்று சொல்ல..

 

 ரங்கா ஒரு குழந்தையையும்,  பாட்டி ஒரு குழந்தையையும் எடுத்து அவனது இரு மடியிலும் வைத்தனர்.  அருகிலேயே உட்கார்ந்த கீர்த்தி,  ஒரு குழந்தையை லேசாக பிடித்துக்கொள்ள,  இன்னொரு குழந்தையை ரங்கா பிடித்துக்கொண்டாள்..

 

 இரண்டு குழந்தைகளையும் மாறி, மாறி வாசு கொஞ்சிய அழகை பார்த்து,  எல்லோருக்கும் சிரித்து, சிரித்து வயிறு வலித்து விட்டது

 

 ஒரு மணி நேரம் குழந்தைகளுடன் விளையாடிய பின்னரே குழந்தைகளை கீழே இறக்கி விட்டான்..  பின்னர் அவன் வெளியே சென்றதும் குழந்தைகளுக்கு அமுதூட்டி, இரண்டையும்  தொட்டிலில் இட்டு தூங்க வைத்தவள் வெளியே சாப்பிட வந்தாள்..

 

அதுவரை அவளுக்காக கீர்த்தியும்,  வாசுவும்  காத்துக் கொண்டிருந்தனர்.. வாசு நீ சாப்பிட வேண்டியதுதானே..நேரமாகுதுல்ல..!”  

 

இருக்கட்டும் நீ வா…”  பாட்டி ஏற்கனவே சாப்பிட்டு விட்டார் அதனால் மூவரும் சாப்பிட உட்கார்ந்தனர். 

 

“ வாசு பிஸினஸ் எப்படி போகுது..?”

 

“ நல்லா போகுது….” 

 

“அப்ப என்ன..? இன்னும் கொஞ்சம் புது வகைகள் தயார்  பண்ணி மார்க்கெட்டிங் பார்க்க வேண்டியதுதானே..

 

“ செய்யணும்..  பாட்டி கிட்ட ரெசிபி வாங்கணும். இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் ஆகட்டும்..  முதல்ல  பாட்டியோட பக்குவத்துல புதிய பொருள்கள் அறிமுகப்படுத்தினால் தான் நமக்கு மார்க்கெட்டிங் பிடிக்க முடியும்..  இப்ப குழந்தைகளுக்கு நாலாவது மாசம்..  ஆறாவது மாசம் அன்ன  பாயசம் கொடுக்கணும்னு  பாட்டி சொல்லி இருக்காங்க,  அதுவும் குருவாயூரில்.. அது முடிஞ்சதும்இதைப் பத்தி பேசலாம்….!”

 

நானுமே ஆறு மாசத்துக்கு அப்புறம் வேலையை   வீட்ல வைத்து  பார்க்கலாம்னு நினைக்கிறேன்…!”

 

இப்ப என்ன அவசரம்…?”

 

நீயும் பாட்டியும் எத்தனை நாள் தான் என்னோட பாரத்தை  சுமப்பீங்க…!”

 

நாங்க உன்கிட்ட இதை பாரம்னு சொன்னோமா..?  ஏய் இத்ததனை சந்தோசத்தை தருகிற என்னுடைய மருமக பிள்ளைகளைப் பார்த்துகிறது எனக்கு பாரமா..! இனி இந்த மாதிரி பேசாத..!

 

இந்த வாசு  அது சரி வராது..  என்னால கீர்த்தியும் பாதிக்கப்படறா,  அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது.. அன்ன  பாயசம் குடுத்துட்டு வீட்டுக்கு வரும்போது கீர்த்தி எனக்கு நல்ல செய்தி சொல்லலைன்னா நான் கண்டிப்பா தனியா போயிடுவேன்..  என்ன பத்தி உனக்கு தெரியும்..  உங்க வாழ்க்கையும் நல்லா இருந்தாதான்,  எனக்கு சந்தோஷம்..  அதை நினைவில் வை..!” என்றவள்  கை கழுவிவிட்டு தனது அறைக்குள் சென்றாள்.

 

ரங்கா சென்றதும் வாசுவும் கீர்த்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. “ஏய் நீ எதுவும் அவ கிட்ட சொன்னியா..?” என்று அவளை வாசு அதட்ட..

 

“இல்ல நான் ஒண்ணும் சொல்லலை..” பயந்து கொண்டே கீர்த்தி பதிலளித்தாள்.

 

வாசு அங்க என்ன சத்தம்.. ?”என்று ரங்கா உள்ளிருந்து குரல் கொடுக்கவும்

 

“ ஒண்ணும் இல்லை ..!” வாசு  அவசரமாக பதில் சொன்னான்.. அவன் அதை பார்த்து வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த கீர்த்தியிடம், “ என்ன சிரிப்பு பொத்துகிட்டு வருது..?”

 

இல்ல உங்க  அரட்டல்உருட்டல்,மிரட்டல் எல்லாம் எங்கிட்டயும்  பாட்டி கிட்டயும் தான்.. அக்கா கிட்ட செல்லுபடியாகாது..!

 

“ அதுல உனக்கு ரொம்ப சந்தோஷம் போல இருக்கு..!

 

“ பின்னநான் என்ன சொன்னாலும் உங்க காதுல விழுதா..?  இப்ப அக்காவும் அது தான் சொல்றாங்க..!

 

போதும் உடனே ஆரம்பித்து விடாதே…” என்றவன் கைகளை விட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான்..

 

 எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி விட்டு உள்ளே நுழைந்த கீர்த்தி கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள்..

 

“ என்னாச்சு ஒரே யோசனையா இருக்கு..?”

 

இல்லகம்பெனியை கொஞ்சம் பெருசாஆக்கணும்..  இவ்வளவு நாள்ரங்கபாஷ்யம் சார்  கொடுத்த பணம்,  கொஞ்சம் உதவியாய் இருந்தது. அதையும் திருப்பிக் கொடுக்கணும்.. வீட்டு செலவை சமாளிக்கணும்.  இதுக்கு இடையில நமக்கு குழந்தை வந்தால்  சரியாக வருமா கீது…?”

 

அதுக்கு,   அலை ஓய்ந்து தான் கடல்ல  குளிக்கணும்னு நெனச்சாஅது நடக்கவே நடக்காது..  அந்த குழந்தைகளோட நம்ம குழந்தையை சேர்ந்து வளரட்டும்..  அது அது அந்தந்த காலத்தில் நடந்தால் தான் பிரச்சனை கிடையாது.. காலம் தப்பிட்டுன்னா,  நம்ம கேட்டாலும் கிடைக்காது..” அவள் சொன்னதில் உள்ள நியாயம் புரிய மௌனம் காத்தான்..

 

இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணாம இருந்திடலாம் நினைச்சேன்…” என்ற வார்த்தையை அவன் விடகீர்த்திக்கு கோபம் வந்தது.

 

அப்ப என்னை  கல்யாணம்  பண்ணியது தான் உங்களுக்கு பிரச்சினைன்னு  சொல்றீங்களா..?”

 

அப்படி சொல்லல..  மொத்தத்தில்  நான் கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாதுன்னு சொல்றேன்…” என்று அவன் சொன்னதும்,  கட்டிலை விட்டு இறங்கி ஒரு போர்வையை கீழே போட்டு கீர்த்தி பேசாமல் படுத்து விட்டாள்..

 

அது என்ன கல்யாணம்னு மொட்டையா.. நான்தான் அவரை கட்டி இருக்கேன்.. அப்ப நான் இருக்கிறது தான் பிரச்சனையா.. இல்லேன்னா அவர் அவங்களை மட்டும் பாத்துட்டு இருப்பாரா.. இப்படி நினைக்கிறவர்,  நான் என் காதலை சொல்லும்போதுஇல்ல எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லைன்னு சொல்லி இருக்கலாமே….‘ மனது பலவாறு நினைக்க,  தான் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறோமோ என்ற நினைப்பு  மனதுக்குள் ஓட  தாங்க முடியாமல் அழுகை வந்தது.

 

 வாசுவுக்கும் அவள்  அழுவது தெரிந்தே இருந்தது.  ஆனால் அவனுக்கு இருந்த மனநிலையில்,  அவளை சமாதானப் படுத்துவது இயலாத காரியம் என்று அப்படியே இருந்து விட்டான்..

 

ஏற்கனவே பண நெருக்கடி.. கம்பெனியை விரிவாக்க பணம் தேவை.. இன்னும் வேலை ஆட்கள் போட்டு கம்பெனியை பெரிது பண்ணினால் லாபம் வருவது நிச்சயம்.. ஆனால் இன்வெஸ்ட்மென்ட் கையில் சுத்தமாக இல்லை.. இப்போது கம்பெனி நன்றாக ஓடினாலும் வருமானம் மிகவும் குறைவு.. இரண்டு வீட்டு வாடகை இந்த வீட்டுக்கு வாடகையாக  சரியாக போய்விடுகிறது.

 

 இரண்டு குழந்தைகள்,   மற்றும் மூன்று பெரியவர்கள்,  இவர்களின் செலவு,   அதுபோக  ரங்காவின் அம்மாவிற்கும் பணம் கொடுக்க வேண்டும். மாத மாதம் காயத்ரி வந்து வாங்கி சென்று விடுவாள்

 

குழந்தைகள் மருத்துவம் அவர்கள் பிறந்த ஹாஸ்பிடலில் கவனித்துக் கொள்வதால் அது மட்டும் செலவு இல்லை.. என்ன செய்வது என்று அவன் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.. இந்த நிலையில் தங்களுக்கு ஒரு குழந்தை என்றால் அதை எவ்விதம் வளர்ப்பது என்ற பொருளாதாரப் பிரச்சினை பூதாகரமாக  கண் முன்னால் நிற்க,  கீர்த்தியின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் புரிந்தும்,  கோபம் என்ற போர்வையில் அதை தன் மனதுக்குள் போட்டு புதைத்துக் கொண்டான்.

 

 அவனுக்கு தெரியும் கீர்த்தி எத்தனையோ  விட்டுக்கொடுத்து போய் இருக்கிறாள் என்று..தன்னை தவிர வேறு யாரையாவது மணமுடித்து இருந்தால் இதற்குள் கையில் ஒரு குழந்தை இருக்கும். அவர்கள் சந்தோஷத்திற்கும் குறைவு இருக்காது..  தன்னை மணம் முடிக்க போய்தான்  அவளுக்கு இத்தனை  பாரங்கள் என்பது அவனுக்கு  புரிந்துதான் இருந்தது..

 

 கல்யாணம் முடிந்து ஒன்றரை வருடங்களில் தனக்கென்று அவள் வாய் திறந்து எதுவும் அவனிடம் கேட்டதும் கிடையாது. தன்னுடைய ஆசைகளை சொன்னதும் கிடையாது. அவனது ஒவ்வொரு மூச்சும் பாட்டிரங்கா என்று துடிப்பது அவளுக்குப் புரிந்து தானிருந்தது. 

 

என்றாவது ஒருநாள் அவனது காதல் தனக்கு மட்டும் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.. ஒரு பெருமூச்சுடன் கீர்த்தியை பார்த்துவிட்டு அவன் உறங்க முற்பட்டான்.

 

 மறுநாள் காலையில் கீர்த்தியின் முகத்தை பார்த்த ரங்காவிற்கு சந்தேகம் வந்தது.. என்ன கீர்த்தி முகமெல்லாம் வீங்கி இருக்கு..?”

 

அது அக்கா நைட் ஒரே தலைவலி. தூக்கமே இல்லை..  ஏசி ஒத்துக்கல நினைக்கிறேன்..!

 

 

“ ஓ.. அப்ப  ஹாஸ்பிடல் போயிட்டு வாயேன்..!

 

“ இல்லக்கா சரியாயிடும்..  நான் தலைவலிக்கு மாத்திரை போடுவது இல்லை.  கை பக்குவமா ஏதாவது பார்த்துக்கிறேன்..

 

அப்போ ஒன்னு பண்ணு. நீ போய் குழந்தைகளை பார்த்துக்கோ. நான் கிச்சன்ல நிக்கிறேன்..!

 

ஐயோ அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக்குறேன் நீங்க போங்க..!

 

கீர்த்தி நான் சொன்னா கேப்பியா மாட்டியா..?” ரங்காவின் அழுத்தமான குரல், அவள்  சொன்னதை செய்யாவிட்டால் இப்போது வேறு ஏதாவது நடக்கும் என்பது புரிய கீர்த்தி மௌனமாக அறைக்குள் சென்று குழந்தைகளை பார்த்துக் கொண்டாள்..

 

 காலை டிபன் செய்து முடித்த ரங்காமதியத்திற்கும் காய்கறிகளை எடுத்து கட் செய்ய ஆரம்பித்தாள்.. அப்போதுதான் வாக்கிங் போயிட்டு உள்ளே வந்த வாசு“கீர்த்தி காபி…”  ஹாலில் உள்ள சோபாவில் சாய்ந்தான்..

 

 காபியை கொண்டுவந்து பாட்டி நீட்ட, “ கீர்த்தி எங்க..?”

 

“ உள்ள பெட்ரூம்ல குழந்தைகளோட இருக்கா…!”

 

அப்ப ரங்கா..?”

 

கிச்சன்ல சமையல் செய்றா…!”

 

ஏய் கீர்த்தி..!” என்று அவன் ஓங்கி குரல் கொடுக்க, “இப்ப எதுக்கு நீ அவளை கூப்பிடுறே…” இந்த பாட்டி கேட்டுக்கொண்டிருக்கும் போதே,  கீர்த்தி வந்து அவன் முன்னால் நின்றாள்.

 

ஏன் நீ  சமையல் பண்ணல..?  ரங்கா எதுக்கு கிச்சனில் நிற்கிறாள்..உனக்கு அதை  விட என்ன வேலை..?” 

 

“ இல்ல நான் தான் பண்றேன்னு சொன்னேன்.. அக்காதான் வேண்டாம் நீ உள்ள போய் குழந்தைகளை பார்த்துக்கோ..  நான் சமைக்கிறேன் சொன்னாங்க…” சொல்லிக்  கொண்டு   இருக்கும் போதே அங்கு வந்த ரங்கா

 

நான்தான் அவளை குழந்தைகளை பார்த்துக்க  சொன்னேன். இப்போ என்ன..? ஒரு ஆறு மாசமா அவதான பண்றா.. எனக்கு இன்னைக்கு நான் சமைக்கணும் போல தோணுச்சு.. அதனால நான் செய்யறேன்..  ஏன் நான் சமைச்சா நீ சாப்பிட மாட்டியா..?”

 

ச்சச..  அப்படி  யார் சொன்னது…?   உனக்கு சமையல் சரியா தெரியாது இல்ல..!

 

இனிமேல் கத்துக்க வேண்டியது தான். தனியா போனா பாட்டி குழந்தையை பார்த்துப்பாங்க. நான் சமைச்சுட்டு ஆபீஸ் போகணும்..  அதுக்கு இப்ப ட்ரையல்..!

 

ஏய் இப்ப எதுக்கு தனியா போகணும்..?”

 

இல்ல,  உன் பொண்டாட்டி சமையல் தானே நல்லா இருக்கும்னு   நீ சொன்ன..?”

 

“ நான் எப்ப சொன்னேன்..?”

 

எனக்கு சமைக்க தெரியாதுன்னு சொன்னா, என்ன அர்த்தம்..?’ அவள் மாற்றி, மாற்றி கேட்டதில் கடுப்பானவன்,

 

ஏய்  ரங்கா எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு. இப்படி சுத்தி வளைச்சு என்னை  கடுப்பு ஏத்தாத…?”

 

நேரடியா பேசுறவங்க கிட்ட நேரடியாக பேசலாம்..  இப்படி சுத்தி வளச்சு பேசுறவங்க கிட்ட இப்படி தான் பேச முடியும். ஒழுங்கா சாப்பிட்டு ஆபீஸ் போற வழிய பாரு..” என்றவள் பேச்சு முடிந்தது என்பது போல் கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள்.

 

 இனி கடவுளே வந்தாலும் அவளை பேச வைக்க முடியாது என்று தெரிந்த வாசு நேரமாகி விட்டதால் குளித்து கிளம்ப சென்றான்..  

 

 கீர்த்தி பரிமாற சாப்பிட உட்கார்ந்தான்..  எதிரில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு ரங்கா இருந்தாள். பாட்டி இன்னொரு குழந்தையை ஹாலில்  வைத்து இருந்தார்.. 

 

டிபன்  எப்படி இருக்கு..?”

 

மிகவும் சுமாராக இருந்தாலும் சொல்ல முடியாமல்,  விழுங்கிவிட்டு, “ சூப்பர்..”  என்றான்.

 

கீர்த்தி டெய்லி நானே சமைச்சுதரேன்..  நீ குழந்தைகளை பாத்துக்கோ…” என்று ரங்கா சொல்ல கீர்த்தி வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கினாள்.

 

ஏய் இங்க என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு…?  என்னோட ஆபீஸ் பை  எடுத்து வை..”  என்று கீர்த்தியிடம் பாய..

 

 

 இப்ப எதுக்குடா அவகிட்ட பாயுற..?

 

என் பொண்டாட்டி.. நான் பாயறேன்..?  உனக்கு என்ன..?”

 

உன் பொண்டாட்டிங்கிறது  இப்பதான் நினைவு வந்ததாக்கும்..!

 

“ எப்பவுமே  நினைவில் தான் இருக்கு..!

 

பாத்தா அப்படி தெரியலையே.. நேத்து ராத்திரி உன் பொண்டாட்டிக்கு தலைவலி தூங்கவே இல்லையாமே.. உனக்கு தெரியுமா..?” ரங்கா  வேண்டுமென்றே வம்பு இழுப்பது தெரிய,   கீர்த்தியை ஒரு முறை முறைத்தவன்,  எழுந்து கை கழுவச் சென்றான்..

 

அவன் பின்னாலேயே சென்று ஆபிசுக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்து அவனை வழி அனுப்பி விட்டு வந்த  கீர்த்தியை, “இங்கே வா, சாப்பிடுவோம்..!” என்று ரங்கா அழைத்தாள்..

 

குழந்தைகள் தூங்கி விடவே,  பாட்டியும் பூஜை முடித்து  சாப்பிட வந்து உட்கார்ந்தார். என்ன கீர்த்தி சாப்பாடு எப்படி இருக்கு..?”

 

“ நல்லா இருக்கு அக்கா..  நான் முதன்முதலில் சமைக்கும் போது இந்த அளவு கூட வரல..!

 

அப்புறம் உன் வீட்டுக்காரன் அரை குறையா  சாப்பிட்டு போறான்..” என்றவள், “அதெல்லாம் இருக்கட்டும்.. எத்தனை வருஷம் பிளானில் இருக்கீங்க..!

 

அப்படியெல்லாம் ஒண்ணும்  இல்ல அக்கா..  இந்த பாரு  குழந்தைகளுக்கு அன்ன பாயாசம் கொடுக்க குருவாயூர் போறோம்.. திரும்பி வந்து உனக்கு ஒரு நல்ல செய்தி அப்படினா உன்னை கவனிக்க நானும் பாட்டியும் கூட இருக்கோம்.. இல்லேன்னா  நாங்க பழையபடி எங்க வீட்டுக்கு போறோம்.. இதை தெளிவா உன் புருஷன் கிட்ட சொல்லி வை…!” என்றவள் குழந்தையின் அழுகுரல் கேட்டு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

 

 பாட்டியும் கீர்த்தியிடம்  வாசு  இப்படி பண்ணுவான்னு நான் நெனைக்கவே இல்லை.  எங்களுக்காக பார்த்தா மட்டும் போதுமா…? உன்னையும் பார்க்க வேண்டாமா..!  ரங்கா சொல்றதுதான் சரி..  எங்க பிரச்சினை எங்களோட..  பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சு தானே,  இதெல்லாம் செஞ்சோம்..  அதனால சமாளிக்கிறது எங்க வேலை தான்..!”  வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்க வாசலில் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது..

 

எழுந்து கையைக் கழுவிவிட்டு கீர்த்தி  சென்று கதவை திறந்தாள். டாக்டர் சேதுராம் நின்று கொண்டு  உள்ள வரலாமா…” என்று கேட்க..

 

வாங்க டாக்டர்..”  என்று அழைத்து உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்று பாட்டியிடம்  டாக்டர் தாத்தா வந்திருக்காங்க..” 

 

 “ உட்கார சொல்லுமா.. இதோ வரேன்..” 

 

கை  கழுவி விட்டு வந்து, “ வாங்க வாங்க..  என்ன இந்த பக்கம்எங்கிட்ட சொல்லவே இல்ல…!”  

 

இந்த பக்கம்  வேற ஒரு வேலையா வந்தேன்.. அப்படியே குழந்தைகளை பார்த்துட்டு போலாம்னு எனக்கு ஒரு ஆசை..!

 

“ தாராளமா… அதுக்கு முன்னாடி என்ன குடிக்கிறீங்க..

 

“ஸ்ட்ராங்கா ஒரு பில்டர் காபி..

 

சரி, இதோ  போட்டு எடுத்துட்டு வரேன். கீர்த்தி குழந்தைகள்   குளிச்சாச்சுன்னா நீயும் ரங்காவுமா தூக்கிக் கொண்டு வந்து காட்டுங்க… என்று கூறிவிட்டு காபி போடுவதற்காக கிச்சனுக்குள் சென்றார்.

 

அப்போது தான் குழந்தைகளுக்கு குளிப்பாட்டி அழகாக டிரஸ் அணிவித்துபவுடர் மை எல்லாம் போட்டு அழகு படுத்தி இருந்தாள் ரங்கா..

 

ஹாய் செல்லம் உங்களை பார்க்க ஒரு தாத்தா வந்து இருக்காங்க வாங்க போகலாம்… என்று கூறிக்கொண்டே பாவனாவை கீர்த்தி தூக்கிக் கொள்ள

 

“யார் வந்திருக்கா கீர்த்தி?

 

“பாட்டியோட பிரண்டு டாக்டர் தாத்தா .!” 

 

“அவரா..” என்று கூறிவிட்டு பார்த்தாவை தான் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்..

 

இரண்டு குழந்தைகளையும் அவர் அருகில் சோபாவில் உட்கார்ந்து கீர்த்தியும், ரங்காவும் காட்டகுழந்தைகளின் கன்னத்தை லேசாக தடவிகொடுத்தவர்என்னமா மன்த்லி செக்கப் எல்லாம் பண்ணிட்டியா..தடுப்பூசி போட்டாச்சா.. இனி அடுத்த தடுப்பபூசி  எப்ப போடணும்.?”

 

ரங்கா அவருடைய எல்லா கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னார்..

 

“பரவாயில்லை வெயிட் போட்டு தான் இருக்கு.. மதர் பீட் நிறுத்தி விடாதே. ஆனால் இரண்டு குழந்தைகள் அதனால வேற ஏதாவது எழுதிக் கொடுத்து இருக்காங்களாடாக்டர் யாரு பூபதி தானே சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்..!”

 

“ஆமா..”

 

“டேய் குட்டி பையா…” பார்த்தாவை அழைக்க அது கையை காலை ஆட்டி பொக்கை வாய் கொண்டு சிரித்தது..

 

அதற்குள் பாட்டி காபி கொண்டு வந்து விட அதை வாங்கிக் குடித்தவர் “என்ன வாசு ஆபீஸ் போயாச்சா.. வேற என்ன விசேஷம்

 

“விசேஷம் ஒன்றும் இல்லை… மூணு மாசம் கழிச்சு ஆபீஸ்க்கு போகலாமான்னு ரங்கா சொல்லிட்டு இருக்கா..!”

 

“ஏன், இப்ப என்ன அவசரம்..?

 

“அவசரம் இல்லை.. எனக்கும் அதுதான் சரின்னு தோணுது…’ என்று பாட்டியும் சொல்லமூவரையும் நிதானமாக பார்த்தவர்பாட்டியிடம் உண்மையிலேயே நீ என்னை  உன் ஃப்ரண்டு  என்று நினைத்தால், இப்ப என்ன அவசரம் வேலைக்கு போக, அதுக்கு மட்டும் பதில் சொல்லு..?

 

பாட்டி ரங்காவுக்கும், வாசுவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தை சொல்ல, “இவ்வளவுதானே இதுக்கு சொல்யூஷன் வாசு கிட்ட நான் கொடுக்கிறேன் நீங்க யாரும் பேச வேண்டாம்.. ஆபீஸ் அட்ரஸ் மட்டும் கொடு நான் இப்ப போற வழியிலேயே அவனை பார்த்து விட்டு  போறேன்…” என்று கூறி வாசுவின் அட்ரஸ் போன் நம்பர் வாங்கி விட்டு தான் கிளம்பினார்.

 

 

                 அத்தியாயம் 23

 

ரங்கா ஆசைப்பட்டபடியே இரண்டு வருடத்தில் அவளும்  ஓரளவு பணம் சேர்த்து  விட்டாள்..  வாசு கொஞ்சம் பாட்டியின் பணத்திலிருந்து எடுத்துக்கொடுக்க இரண்டையும் சேர்த்து இன்னொரு அப்பார்ட்மெண்ட் வாங்கினர்..

 

வாசு ரங்காவின் கல்யாணத்தை மனதில் நிறுத்தி தன்னுடைய அபார்ட்மெண்டில் தான் வசிப்பதாக கூறி விட்டான்.. பாட்டியும் ரங்காவும் தங்களது அபார்ட்மெண்ட்டில் குடியேறினர்..

 

மோகன் படித்து முடித்து வேலை வேண்டும் என்று கேட்க தனக்கு தெரிந்த இடத்தில் எல்லாம் சொல்லி வாசுவும் ரங்காவும்  வேலை மாற்றி, மாற்றி வாங்கி கொடுக்கதான் செய்தனர்.. ஆனால் ஒரு இடத்திலும் அவன் நிலையாக இருந்ததே இல்லை.

 

அதுபோக,  நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றுவதுஅனாவசிய செலவு என்று அம்மாவிடம் அடிக்கடி தனது சம்பளம் போக பணம் வாங்கிவிடுவான்.. தாராவும் மாதம் ஒரு தடவை அம்மாவை அழைத்துக்கொண்டு சினிமா ஹோட்டல் என்று செலவழித்து இருக்கிற காசை கரியாக்கி விடுவாள்..

 

அவர்களிடம் கொடுத்தால்  அத்தனையும் செலவழிந்து விடும் என்பது புரிந்து  கொடுப்பதில் ஒரு பகுதியை சேமித்துவிட்டு மீதத்தை கொடுக்க ஆரம்பித்தாள்  ரங்கா..

 

அதற்கு வைதேகி அவளிடம் சண்டை போட, “அம்மா நீயும் தாராவுக்கும் எதுவும் சேமிக்க மாட்டேங்கிற.. அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னா கட்டாயம் இந்த பணம் இருந்தால்தான் முடியும். அதுக்காக தான் சேமிக்கிறேன்.. இல்லையென்றால் சொல்லு உன்கிட்ட தந்திடறேன். நீ சேமிச்சுக்.கோ கல்யாணத்தப்ப என்கிட்ட கேக்காத.. என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட,  தன் கையில் இருந்தால் மகனும் மகளும் பிடுங்கிவிடுவார்கள் என்று தெரிந்த வைதேகி அடங்கினாள்.

 

அப்பாவும், தம்பியும் வீட்டைப் பற்றிக் கவலைப்படாமல் அப்படியே இருக்க ரங்காவுக்கு ஆண்கள் மேல் ஒரு வெறுப்பு வளர்ந்து விட்டது.. அதுபோக கோர்ட்டில் அவள் கேள்விப்படும் விஷயங்களும் கல்யாண வாழ்க்கை மீதும் ஆண்கள் மீதும் ஒரு நம்பிக்கையின்மையை தோற்றுவிக்க தனது வாழ்வில் கல்யாணம் என்பதே வேண்டாம் என்று முடிவு எடுத்தாள்.. 

 

I think the best role models for women are people who are  fruitfully  and confidently themselves, who drink light into the world.

 

 Meryl streep

 

ஒரு பெரிய காரில் பாட்டி, வாசு, குழந்தைகள் கீர்த்தி மற்றும் சேதுராம் அனைவரும் குருவாயூருக்கு பயணப்பட்டு கொண்டிருந்தனர்..

 

குழந்தைகளுக்கு அன்னபாயாசம் குருவாயூரப்பன் முன்னிலையில் கொடுப்பது விசேஷம் என்பதால் இந்த பயணம்.. சேதுராம் பிடிவாதமாக பயணத்துக்கு ஏற்பாடு செய்து தானும் கூட வருவேன் என்று கூறிவிட்டார்.

 

உபேந்திரா “எதுக்கு தாத்தா நீங்க..?” என்று ஆட்சேபித்த தற்கு..

 

“நீ மட்டும் உன் ஃப்ரென்ட்ஸ் கூட ஊரை சுத்துற,  நான் போக கூடாதா…? சின்ன பிள்ளை போல் மல்லுக்கு நிற்க அவன் “சரி” என்று விட்டான்.

 

அவனை வைத்து அங்கு நல்ல ஹோட்டல் புக் செய்து, இங்கிருந்து இரண்டு நாள் பயணமாக எல்லோரும் சென்றனர்.

 

குருவாயூரப்பன் முன்னிலையில் நிவேதன பிரசாதத்தை குழந்தைகளுக்கு வாயில் ஊட்டி பிரார்த்தனையை  நிறைவேற்றினார் பாட்டி…

 

ஒரு நாள் முழுவதும் கோயிலை நன்கு சுற்றி பார்த்து தரிசனம் செய்து விட்டுஅன்று அங்கேயே தங்கியிருந்து விட்டு மறுநாள் கிளம்பி வந்தனர்..

 

வந்ததுமே வாசுவை அழைத்து அவனது கம்பெனி பெரியதாக்க என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் கல்யாணசுந்தரம் செய்துவிட்டார்..

 

“கம்பெனி எம்டி நீதான்.. வேலைக்கு எத்தனை ஆட்கள் போடணுமோ, போட்டு கம்பெனியை நடத்து.. உன்னோட லாபத்துல கொஞ்சம் கொஞ்சமா நான் கொடுத்த ரூபாயை திருப்பிக் கொடுத்துடு.. 

 

“என்னை நம்பி இவ்வளவு பெரிய அமௌன்ட் இன்வெஸ்ட் பண்ணிட்டீங்களே… ஒருவேளை என்னால் முடியலை என்றால்..!”

 

“இந்த எண்ணமே தவறு.. ஒரு விஷயம் ஆரம்பிக்கும் முன்னாடி அதோட சாதகம், பாதகம் எல்லாம் பார்க்கணும்.  ஆனா முடிவு எடுத்தாச்சுன்னாஜெயிக்கிறது மட்டும்தான் குறிக்கோளா வச்சுக்கணும்..” என்றவர் “கண்டிப்பா நீ ஜெயிப்ப.. கவலைப்படாதே…” என்று ஆசீர்வதித்தார்..

 

ரங்கா ஆசைப்பட்டபடியே கீர்த்தியும் குழந்தை உண்டாக அவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.    

 

வீட்டிலிருந்து வேலை செய்கிறேன் என்று ரங்கபாஷ்யத்திடம்  கேட்டதற்கு.. “ஒண்ணும் அவசரம் இல்ல, குழந்தைகளோட முதல் பிறந்தநாள் கழிந்தபிறகு நீ வேலைக்கு வநதால்  போதும்…” என்று சொல்லிவிட்டார்….

 

எது தப்பினாலும் மாதம், மாதம் ரூபா வாங்க காயத்ரி வருவது நிற்கவில்லை.. ஆனால் இபோது இரண்டு மாதமாக  மோகன் வர ஆரம்பித்தான். அவன் பாட்டியிடம் மட்டும் தான் பேசுவான். ரங்காவிடம் பேசுவது கிடையாது..

 

பாட்டி காயத்ரி எங்கே என்று கேட்டதற்கு அவளும் கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி தெரிந்து மிகவும் சந்தோஷம் அடைந்தார்..

 

“நல்லா பார்த்துக்கோ..” என்ற ஒரே வார்த்தையோடு, பாட்டி மாதா, மாதம் தான் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டார்..

 

“திருமணத்திற்கு பொண்ணு பார்க்கலாமா..?” என்று விஸ்வாவிடம் கேட்டபோது “இப்போதைக்கு திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை..” என்று அவன் மறுத்து விட்டான்..

குழந்தைக்கு எட்டு மாதம் ஆகிவிட்டதால் அப்பார்ட்மெண்டில் உள்ள கீழே உள்ள பார்க்கில் குழந்தையைக் கொண்டு போய் வேடிக்கை காட்டி விட்டு வருவார்கள் பாட்டியும், பேத்தியும்

 

மற்றவர்கள்  பேச வரும் பொழுது பொதுவான விஷயங்களை பேசுவார்களே தவிர, மற்ற கேள்விகளை தவிர்த்து விடுவார்கள்..

 

அதையும் மீறி குழந்தைகளுடைய அப்பா எங்கே இருக்கிறார். எந்த வேலையில் இருக்கிறார், பாரினில்  இருக்கிறாரா..? என்ற பல கேள்விகள் இவர்கள் முன்னே எழுந்த வண்ணம் இருந்தன..

 

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் சில சமயம் ரங்காவுக்கு கோபம் வரும்.. கோபத்துடன் பாட்டியிடம் “குழந்தையை பார்த்தமாகொஞ்சினமா  இல்லாம, ஏன் பாட்டி தேவை இல்லாத கேள்வி எல்லாம்..?

 

“அது எல்லாருக்கும் பொதுவானது. அது தெரிஞ்சுக்காம அவங்களால இருக்க முடியாது ரங்கா.. ஊரோட இருக்கும்போது. ஒத்து தான் போகணும்.. நாளைக்கு எனக்கு பிறகு நீ மட்டும் தனியா இருந்தேன்னா அக்கம்பக்கம் உதவி வேண்டாமா உனக்கு.. எல்லாரும் சாசுவதம் இல்ல. அதனால எல்லாருக்கும் பக்கத்தில் இருப்பவர்கள். தயவு தேவை படுது.. உன்னை  பத்தி விபரங்களை தெரிந்து கொள்ளணும்னு நினைக்கிறார்கள் இது ஒண்ணும்  தப்பில்லையே..?

 

முடிஞ்சவரை பதில் சொல்லு இல்லைன்னா அமைதியாக இருந்து விடு

 

பிறந்தநாளுக்கும் யாரையும் அழைக்கவில்லை. அப்பார்ட்மெண்டில் தெரிந்த ஒரு சிலருக்கும் டாக்டர் சேதுராம்,இருவருக்கு  ரங்கபாஷ்யம் மட்டும் அழைப்பு விடுத்து கோவிலில் பூஜைக்கு கொடுத்து வீட்டில் வைத்து கேக் வெட்டி சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடி  முடித்தனர்.

 

இந்த ஒரு வருஷ காலத்தில் வைதேகியும், கேசவனும் வந்து எட்டி கூட பார்க்கவில்லை.. சரவணனும் தன்னால் தேவையில்லாத வம்பு வந்துவிடக்கூடாது என்பதால் வரவில்லை.

 

வாசுவுக்கும் கீர்த்திக்கும் ஆண் குழந்தை பிறந்தது. மோகனுக்கு பெண் குழந்தை பிறந்தது.. மனசு கேளாமல் பாட்டி மட்டும் போய் பார்த்துவிட்டு ஒரு செயின் பரிசளித்து விட்டு வந்தார்..

 

ரங்கா தான் வரவில்லை என்று கூறிவிட்டாள்..கீர்த்திக்கும் டாக்டர் மகாலட்சுமியிடம் டெலிவரி வைத்துக் கொண்டனர்

 

பாட்டியும், ரங்காவும்.. கீர்த்தியையும், குழந்தையும் நன்கு பார்த்துக் கொண்டனர் கீர்த்தியின்  அம்மாவும் உதவிக்கு வந்து இருந்ததால் அவர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருந்தது..

 

ஏற்கனவே வாசுவின் கடின உழைப்பும் குழந்தை பிறந்த யோகமும் சேர்ந்து இப்பொழுது அவர்களது பிசினஸ் மிகப்பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் ரங்கா புட் பராடக்ட்ஸில் கிடைக்காத மசாலா பொருட்களை இல்லை எனும் அளவு பெயர் வாங்கி வளர்ந்து நின்றது..

 

ஒரு வருடம் இரண்டு  மாதம் ஆனதும் இதற்குமேல் தன்னால் வீட்டில் இருக்க முடியாது என்று வேலைக்கு ஒரு பெண்ணை அமர்த்திவிட்டு ரங்கா, பாஷ்யத்தின் அலுவலகத்துக்கு செல்ல ஆரம்பித்தாள்

 

குழந்தைகளுக்கு ஒன்றரை வயது ஆனதால்  அவர்கள் அம்மா வெளியே செல்லும் பொழுது சமர்த்தாக டாட்டா காட்டிவிட்டுமாலை அவள் வரும் வரும் நேரத்தை கணக்கிட்டு வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டு இருப்பர்.

 

குழந்தைகளைக் கவனிக்க பகலில் ஒரு பெண்மணியை வேலைக்கு அமர்த்தி இருந்தார் பாட்டி.. பாட்டி வீட்டிலேயே இருப்பதால் கவலை இல்லாமல் குழந்தைகளை அந்த பெண்மணியின் பொறுப்பில் விட்டுவிட்டு ரங்காவும் வக்கீல் ஆபீசுக்கு சென்று வந்ததாள்.

 

குழந்தைகள் அப்போது தான் அம்மா, பாட்டி, அத்தை மாமா என்று பேச பழகி  இருந்தனர்..

 

பாதி நேரம் இருவருக்கும் சண்டை. பஞ்சாயத்து தீர்க்கவே ரங்காவுக்கு,  பாட்டிக்கும் நேரம் சரியாக இருந்தது.

 

“பார்த்தா அப்படியே  அம்மா ஜாடை. பாவனா வேற மாதிரி இருந்தாள். பாட்டி  பார்த்தா கொஞ்சம் நம்ம ஜாடை  மாதிரி இருக்கு. ஆணால் பாவனா வேற மாதிரி இருக்காளே!”

 

“ஆமா அவ அப்பா ஜாடை இருக்கலாம் இல்லை..!”

 

“அந்த மாதிரி ஒண்ணு  இருக்கு இல்ல. நான் யோசிக்கவே இல்லை.. அப்படி இருந்தா என்ன..? எப்படின்னாலும் ஏன் பொண்ணுதான்..”

 

“உண்மைதான் யார் இல்லைன்னு சொன்னா..!” பேசிக் கொண்டிருக்கையிலேயே இரண்டு பேரும் ஒரு காருக்கு சண்டை போட.. 

 

“பாவனா உனக்கு கார் இந்த இருக்கு பாரு.. எதுக்கு அவனோடது எடுக்கிற..?”

 

பாவனா   காலை உதைத்துக் கொண்டு, சத்தமாக  அழ ஆரம்பிக்க பார்த்தா  இரண்டு காரையும் எடுத்துக்கொண்டு தரமாட்டேன் என்று ஓடினான்..

 

இவர்கள் போட்ட சத்தத்தில் வாசுவின் பையன் முழித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.

 

அவனது பெயர் ஹர்ஷத்.. ”நீங்க போட்ட சத்தத்தில் ஹர்ஷத் முழிச்சுட்டு அழறான்  பார்..!” என்று இருவரையும் சத்தம் போட

 

“ஏய் ரங்கா, நீ இதுக்குஎதுக்கு குழந்தைகளை சத்தம் போடுற..? இன்னும் கொஞ்சம்தான் அதுக்காக அழுது ஊரைக் கூட்டும்..!” என்ற பாட்டி அமைதியாக அவளை சமாதானப்படுத்த ஆரம்பித்தார்..

 

அதற்குள் வாசுவும் வந்துவிட இருவரும் அவனிடம் ஓடினர். அவன் அவர்கள் இருவரையும் தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தான்..

 

“வாசு ரெண்டு பேரையும் இறக்கி விடு. நீயே இப்பதான் உள்ள நுழைஞ்சிருக்க. முதல்ல டிபன் ஏதாவது சாப்பிடு. அப்புறம் அவங்க கிட்ட விளையாடலாம்..!”

 

“இருக்கட்டும். குழந்தைகள் இத்தனை  நேரம் என்னை தேடி இருப்பாங்க. எனக்கு இதுதான் சந்தோஷம்..!” என்றவன் தனது அறைக்குள் சென்று அவர்களை இறக்கி விட்டு,” நான் முகம் கழுவிட்டு வந்து உங்க கூட விளையாடறேன்…” என்று கூறி, அதே மாதிரி  பிரஷ் ஆகி வந்து விளயாட ஆரம்பித்தான். 

 

இது அவனுக்கு வழக்கமான ஒன்று. அவனுடைய பையன் கட்டிலில் கையைக் காலை உதைத்துக் கொண்டு கிடக்க இவர்கள் இருவரும் அவன் மேல் ஏறி ஓடிப்பிடித்து விளையாட..

 

“இந்தாங்க காபி..”  என்று கீர்த்தி கொண்டு வந்த   காபியை வாங்கி  குடித்தவன், “இன்னைக்கு என்ன விசேஷம்..? உன் பையன் என்ன பண்றான்..?” என்று கேட்க 

 

“அதுக்குள் நானு, நானு..” என்று பார்த்தாவும் பாவனாவும் வந்தனர்..

 

“என்னடா சொல்லுங்க..?” 

 

“மாமா, மாமா. பாப்பா ஓ.. அழுது, பால் குடிச்சு, சுச்சு போய்.. பாட் பாப்பா..!” என்று தங்களுடைய மழலை குரலில் அவனுடைய மகன் அழுததை அவனிடம் கூறினார்கள்..

 

 ஹர்ஷத் நீ அழுதியாடா குட்டி பையா..  இதோ பார் பார்த்தாவும், பாவனாவும் நீ அழுததா சொல்றாங்க..” என்று கேட்க அவனுடைய மகன் பொக்கைவாய் கொண்டு சிரித்தான்..

 

  எல்லோர்  நொடியையும் பார்த்துக்கொண்டே இருந்த ரங்கா, “ நாளைக்கு கொஞ்சம் கடைக்கு போகணும் வாசு.. கீர்த்தி நீ வர்றியா..?’

 

ம்ம்போகலாம் அக்கா..’  என்று சொல்ல மறுநாள் லீவு என்பதால் பாட்டியைத் தவிர அனைவரும் கிளம்பினர்..

 

குழந்தைகளை வைத்து சமாளிச்சுடுவியா….? என்று பாட்டி கேட்க அதெல்லாம் பார்த்துக்கலாம் பாட்டி என்று கூறிவிட்டு கிளம்பி வந்து இருந்தாள்..

 

மிகப் பெரிய ஜவுளி கடை அது.. ஏழு எட்டு தளங்கள்..  குழந்தைகள் பிரிவுக்கு மூவரும் வந்திருந்தனர்..  இருவரையும் விளையாடவிட்டு,  ஹர்ஷத் வாசுவின் கையில் இருந்தான்.. அவனை கையில் வைத்துக்கொண்டே இவர்களை கண்காணித்துக்கொண்டு வாசு  இருக்க,  இவர்கள் இருவரும் குழந்தைகளுக்கு வேண்டிய ட்ரெஸ் செலக்ட் செய்தனர்..

 

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அங்கும் இங்குமாக பிரிய,  வாசு கையில்  ஹர்ஷத் இருந்ததால் பிடிக்க முடியாமல்தடுமாறிக் கொண்டிருந்தான்.

 

பாவனா ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தவள்அடுத்து ஏதோ ஒரு சாமானை எடுக்க சற்று இடம் பெயர்ந்து நகர்ந்து விட்டாள். பார்த்தாவை கையில் பிடித்தவன் பாவனாவை எங்கே என்று தேட,  அவள் எங்கு இருக்கிறாள்,  என்று தெரியவில்லை.. வரிசையாக குழந்தைகளுக்கு உள்ள விளையாட்டு சாமான்கள் இருக்க,  அடுத்த வரிசையில் உள்ள ஏதோ ஒரு சாமானை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தாள்.

 

ஹாய் பாப்பா அது வேணுமா…?” என்று ஒரு குரல் கேட்க..

 

நிமிர்ந்து பார்த்தவள் வேண்டும்..” என்பதாக தலையாட்ட அந்த பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து அவளை தூக்கிக் கொண்டான் உபேந்திரா..

 

தெரிந்த வக்கீல் ஒருவருக்கு பேரக் குழந்தை பிறந்திருந்தது, அதற்கு ஏதாவது வாங்கிப் பரிசளிக்கலாம் என்று, தனக்கு ட்ரஸ் பர்ச்சேஸ் பண்ண வந்தவன்தற்செயலாக குழந்தைகள் பிரிவுக்கு வந்திருந்தான்..  இந்த குழந்தை பொம்மையை எடுக்க முடியாமல் இழுக்கவும்அதை எடுத்துக் கொடுத்தவன் குழந்தையின் அழகில் கவரப்பட்டவனாய் அதை தூக்கினான்..

 

“ உன்னோட பெயர் என்ன..?”

 

பா..!

 

“ அப்படின்னா.. ?”

 

பா..

 

அவளுக்கு முழு பெயரும் சொல்லத் தெரியாது..  ஆதலால் குழந்தை  பா..” என்றதை அப்பா என்று சொல்லுவதாக தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு,  அந்தக் குழந்தையின் அப்பா எங்கே என்று தேடினான்..

 

அப்போது ‘பாவனா’ என்று வாசு  தேடிக் கொண்டு வர,  அவனைப் பார்த்ததும் குழந்தை இவனிடம் இருந்து இறங்கி ஓடவும்,  அவன்தான் குழந்தையோட அப்பா என்று நினைத்துக்கொண்டு, “நீங்களாஇங்கதான் தனியா நின்னிட்டிருந்தா,  கேட்டதுக்கு பா” என்று சொன்னாள்…” என்று அவன் தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது,

 

வாசு முடிஞ்சிருச்சு, குழந்தைங்க எங்க..?” என்று ரங்கா  தேடிக் கொண்டு வரஉபேந்திராவை பார்த்ததும்  ரங்காவின் முகம் மாறியது..

 

இது உன்னோட குழந்தையா..இவர்தான் குழந்தைக்கு அப்பாவா..இதை முதலில் சொல்வதற்கு என்ன..குழந்தை சொல்லித்தான் தெரிய வேண்டுமா..?”  என்றவன் அவள் பதில் பேசு முன்  முகத்தைச் சுளித்து விட்டு நடந்தான்.. 

 

உபேந்திராவின் பேச்சு கேட்டு  அதிர்ந்து நின்றது  ரங்கா மட்டுமல்ல,  வாசுவும் தான்,  இப்படி ஒரு அவச்சொல் தனது நண்பனுக்கு தன்னால் வந்துவிட்டதை எண்ணி,  பேச முடியாமல் நொந்து போய் நின்றாள்.. 

 

நல்ல வேளை அங்கு கீர்த்தி வரவில்லை.. அவள் இன்னும் பையனுக்கு ட்ரெஸ் எடுத்துக் கொண்டு இருந்தாள்.. வெளிறிய முகத்தோடு நின்ற தன் தோழியை பார்த்தவன், “விடு அவருக்கு தோணியதற்கு எல்லாம் நாம் விளக்கம் கொடுக்கணும்னு அவசியம் இல்லை.. பேசாமல் வா.. யாரிடமும் சொல்ல வேண்டாம்..!” என்று சூசகமாக அறிவுறித்தி அவளை அழைத்துக் கொடு வந்தான்..

 

அலுவலகத்தில் விஷ்வா இவளை  சந்தித்து,  “ரங்கா எனக்கு எல்லாம் தெரியும்.. நடந்தது ஓ.கே. இப்ப கூட நீ சம்மதித்தால் இந்தக் குழந்தைகளை  நம் குழந்தைகளா வளர்க்கலாம்..!”  என்று கேட்க இப்போதும் அவள் அதிர்ந்து விட்டாள்..

 

அவனுக்கு பதிலே சொல்லாமல் வீட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள்.. ஏற்கனவே உபேந்திரா பேசியது.. இப்போது விஷ்வாவின் கேள்வி எல்லாம் சேர்ந்து முதன்  முதலாக அவளுக்கு தான் செய்தது தவறோ என்ற எண்ணம் வர அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது..

 

இனி காலம் முழுவதும் இந்த மாதிரி கேள்விகளுடன் தான் தனது வாழ்க்கை கழியும் என்பது புரிய, அவளது மனது விட்டு போயிற்று…. 

 

                  நிறைவுற்றது…

 

பின்னுரை..

 

முன்னுரையில் நான் குறிப்பிட்டது போல அன்றைய காலகட்டம் எப்படி இருக்கும் என்பது நாம் அறியாதது.. ஒரு வேளை அந்த காலத்துக்கு இந்த கதை பொருந்தவும் செய்யலாம், பொருந்தாமலும்  போகலாம்.. ஆனாலும் பெண்களின் நிலை இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் போய் நிற்கக் கூடாது என்ற கருத்தில் நான் எழுதியது தான் இந்த கதை.. ஒருவேளை இந்தக் கதை அந்த காலகட்டத்துக்கு பொருந்திப் போனால் இதனுடன்    நிறைவுற்றது..

 

ஆனால் நாம் இப்பொழுது 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கிறோம்..  இப்போது உள்ள ரங்காவை போன்ற பாட்டிகள் தனது பேத்தியின் வாழ்க்கை முறை இப்படி இருப்பதை ஒப்புக் கொள்ள முடியாததால்,  இந்த கதைக்கு இரண்டாம் பாகம் எழுதி இருக்கிறேன்.. அதில் ரங்காவின் வாழ்க்கை எவ்வாறு சீர்படுகிறது என்பதை பார்க்கலாம்…

 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ajudhya Kanthan Stories

என்னுடைய பெயர் உமா பாக்கியம். சிறு வயதில் இருந்தே கதைகள் வாசிப்பது என்றால் மிகவும் பிடித்தமான விஷயம். வாசித்து முடித்ததும் அதே கதைக்கு வேறு சில கற்பனைகளை பொருத்தி பார்ப்பது வழக்கம். அந்தக் கனவு தற்போது நனவாகி இருக்கிறது. எனது கனவுகளை எனக்குள் புதைந்து போக விடாமல் சிலவற்றிற்கு வடிவம் கொடுத்து இருக்கிறேன். எனது மனதில் தோன்றும் எல்லா கருத்துக்களும் கதை வடிவம் பெற்று விடுவதில்லை.. சில எண்ணங்கள் என்னை மீறி எனக்குள்  அழுத்தும் போது அவை கதையாக உருவெடுக்கிறது.. என்னுடைய கற்பனை மனிதர்களை உங்களுடன் உலாவ விடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.. அவர்களை நிரந்தரமாக உங்கள் மனதில் வைத்து பூட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் அஜுத்யா காந்தன்...

Story MakerList MakerContent AuthorVideo Maker

ரங்கா vs ரங்கா 11-17

ரங்கா vs ரங்கா – பாகம் 2- 1-10