in

ஆல(ழ)கா(த)லன் அத்தியாயம் 4-6

  அத்தியாயம் -4

“ஹேய் மிஷ்டிம்மா இத நீதான் செலக்ட் பண்ணியா… பேசாம இதையே முகூர்த்தத்துக்கு கட்டுறா…?? அந்த ஒல்லிக்குச்சி (ஹி..ஹி..யவனிம்மா…அவங்க உலகப்புகழ் பெற்ற டிசைனர்மா..) டிசைன் பண்ண புடவையை விட இது ரொம்ப சூப்பரா இருக்கு குட்டிமா…” மகளின் கையில் இருந்த புடவையை பார்த்து அசந்து விட்டார் யவனி.

மிஷ்டியின் அமைதியை கவனிக்காதவராக… யவனி புடவையின் அழகில் மயங்கியவர்.. அதனை பில் போட சொல்ல… 

மேனேஜர் அதை பணிவாக கையில் வாங்கியவர்…  ஐந்து லட்சத்திற்கு.. பில்போட்டு எடுத்துக்கொண்டு வர…

பில்லைப்பார்த்த மிஷ்டியின் முகத்தில் ஏளனப்புன்னகை சடுதியில் தோன்றி மறைந்தது. அதே புன்னகையோடு அங்கிருந்த ஊழியர்களை அழைத்து ஏதோ விவரங்கள் கேட்டுக்கொண்டிருந்த விதுரனை பார்க்க… அவனோ மும்முரமாக அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“இது ஐந்து லட்சமாம்… ஹ்ம்ம்… அடேய் நானும் நிர்வாக மேலாண்மை படித்தவள் தான்டா… பதினைந்து லட்சம் மதிப்புள்ள தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஐந்து லட்சமா…??”… 

“திமிரு..திமிரு..அவ்வளவும் திமிரு.. எங்கம்மா வாயாலேயே முகூர்த்தப்புடவைன்னு சொல்ல வைச்சு.. என் அன்ஷூமன என் வாயாலாயே அப்பறமா பேசறேன் … தயவுசெஞ்சு இப்போ கிளம்புங்கன்னு சொல்ல வச்சவனாச்சே…” என்றவளின் நினைவுகள் அன்ஷூமனை நோக்கி செல்ல…

கால் பேசி முடித்த அன்ஷூமன் யவனியை நோக்கி வரும்போது…. ஆஜானுபாகுவான உயரத்துடன் நின்றிருந்த விதுரனை…

“யார்.. இவன்… இவ்வளவு சிரித்து பேசிகிட்டுருக்கானே..??” என்ற யோசனையோடே யவனியை நெருங்க…. 

“வாங்க மாப்பிள்ளை” யவனி மீண்டும் ஒருமுறை அன்ஷூமனை அழைத்தவர்..

“விது கண்ணா… நம்ம மிஷ்டிய கல்யாணம் செய்துக்கப்போறவர்… கார்மேகம் அண்ணாவோட பையன்.. அன்ஷூமன்.. கே.எம். குரூப் சேர்மன்…” விதுரனிடம் அறிமுகம் செய்து வைக்க…

“ஹலோ..மிஸ்டர்.அன்ஷூமன்…” விதுரன் கைகுலுக்க…

“வசுதேவண்ணாவோட பையன் தம்பி….. விதுரன்… ” என்ற யவனியின் குரலில்… காதில் அமிழமழை பொழிந்ததுபோல் இருந்தது அன்ஷூமனுக்கு. அவனும் இப்பொழுதுதான் விதுரனை முதன்முறை பார்க்கிறான். எவ்வளவோ முயன்றும் இவனைப்பற்றிய துளி விவரத்தை கூட.. வசுதேவனின் காவலை மீறி  அவர்களால் பெற முடியவில்லை. 

கார்மேகத்திற்கு கூட.. விதுரனைப்பற்றிய விபரங்களை அவன் தாயகம் திரும்பிய பின்புதான் தெரிந்துகொள்ள முடிந்தது. அதை தெரியப்படுத்துமாறு செய்ததும் வசுதேவனே.

“ஹலோ.மிஸ்டர் விதுரன்…” என்று பதிலுக்கு கைகுலுக்கியவன்… முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது… யவனியிடம் சிறு தலை அசைவுடன்.. மிஷ்டியை நோக்கி நகர்ந்து விட்டான்.

யவனி தொடர்ந்து விதுரனிடம் பேச ஆரம்பிக்க… அவனின் பார்வை முழுக்க.. முழுக்க.. மிஷ்டியிடம் பேசிக்கொண்டிருக்கும் அன்ஷூமனை மட்டுமே நோட்டமிட்டுக்கொண்டிருந்தது…

அன்ஷூமன் அருகே வரவும்…

“டா..டார்லிங்..” என்று அவள் பேச்சை ஆரம்பிக்க….

பேசாதே என்றவாறு கையை உயர்த்தி காட்டியவன்…

“இப்பவே என்னோட கிளம்பு மிஷ்டி..” என்று அடிக்குரலில் சீற…

மிஷ்டியின் கண்களுக்கு பட்டது தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் விதுரன் மட்டுமே….

“மிஷ்டி…” என்று அன்ஷுமன் மறுபடியும் குரல் கொடுக்க…

“ஹான்… புரிஞ்சுக்கோங்க அன்ஷூ… என்னால வர முடியாது…” அவளின் பதிலில் ஆத்திரம் வரப்பெற்றவனாக…

“உன்னை என்ன கேட்டுகிட்டு… ” அவளது கையை பிடிக்க வர… சட்டென்று ஓரடி பின்னால் நகர்ந்தாள் அவள்.

“ப்ச்…” என்று நெற்றியை தேய்த்துக் கொண்டவன்…

“நாளை மறுநாள்.. நம்மளோட கல்யாணம்… இப்பகூட நான் உன்ன தொடக்கூடாதா மிஷ்டி..??” என்று கேட்க…

“நீங்க என்னிடம் காதலை சொல்லும்போதே … நான் இது ஒன்னுதான கேட்டேன் அன்ஷூ.. கல்யாணத்துக்கப்பறம்தான் எல்லாம்னு சொன்னது ஒரு தப்பா… 

உங்களுக்காக நம்ம காதல பகிரங்கமா வெளிய சொல்லாம.. உங்க விருப்பப்படியே அரேன்ஜ்டு மேரேஜாதான நடந்துட்டுருக்கு.. இருபதாம் நூற்றாண்டு பெண்ணா இருந்தாலும்.. எனக்கு பிடிச்ச கோட்பாடுகள நான் விட்டுக்குடுக்கறதா இல்ல….” எதைச்சொன்னால் அவன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கமாட்டானோ…. அதையே சொல்ல….

“ஃபைனல்லி… இப்ப என் கூட வர முடியுமா… முடியாதா.. மிஷ்டி..??” அன்ஷூமன் விடாப்பிடியாக நிற்க…

“என்னைப்புரிஞ்சுக்கோங்க அன்ஷூ… இதை முடிச்சிட்டு மட்டும் வந்துடறேன்… தயவுசெஞ்சு இப்போ கிளம்புங்க.. வீட்டுக்கு வந்துட்டு நான் உங்களுக்கு கால் பண்றேன்… ” என்று இதுவரை தான் கடைபிடித்த கோட்பாட்டையும் மீறி அவனது கைகளை பிடிக்க… அதில் சற்று மனம் குளிர்ந்தவனாக…

“சரி… இப்போ நான் கிளம்புறேன்…. ஆனால் உன் காலுக்காக வெயிட் பண்ணிட்டிருப்பேன்…” என்றவனின் பதிலில் அவள் நிம்மதியுடன் தலையசைக்க… அவளிடம் இருந்து திரும்பியவன்… யவனியிடம் விடைபெற்றுக்கொண்டு.. விதுரனிடம் ஒரு அழுத்தப்பார்வையை செலுத்த… பதிலுக்கு அவன் பார்த்த ஏளனப்பார்வையில் ஆத்திரம் தலைக்கேறினாலும்… தனது வேகநடையில் வெளியே சென்றுவிட்டான்.

பின்பு யவனி மகளிடம் வந்தவர்…

“என்னடா குட்டிமா.. நீயும் மாப்பிள்ளையும் என்ன செலக்ட் பண்ணிங்க..???” என்று கேட்க…

தாயின் தலைக்கு மேல் தெரியும் முகத்தில் சிரிப்பதே தெரியாமல்.. உதட்டை அழுத்திப்பிடித்துக் கொண்டிருக்கும் விதுரனைப்பார்த்து விழித்து நின்றாள் அவள்.

மகளின் பார்வையை உணர்ந்து.. யவனி பின்னே திரும்பியவர்… ” குட்டிம்மா.. நம்ம வசுதேவ் அங்கிள் பையன்டா… விதுரன்… நியூயார்க் ரிடர்ன்… ” என்று அவளுக்கும் அறிமுகம் செய்ய… 

அன்னையின் அறிமுகத்தை ஆமோதிக்கும் விதமாக.. சிறு புன்னகையோடு அவள் தலையசைக்க… பதிலுக்கு தலையசைத்து அவளது வணக்கத்தை ஏற்றுக்கொண்டவன்…

“அத்தை… ஒருவேளை… இவங்களுக்கு இங்க இருக்குற கலெக்ஷன் பிடிக்கலையோ என்னவோ…?? அடுத்த ஃப்ளோர்ல… டிசைனர் செக்ஷன் இருக்கு.. அங்க போகறிங்களா… மிஸ்.மிஷ்டி…” என்றவாறே திரும்பிபார்க்க… அத்தளத்தின் சூப்பர்வைசர் வேகமாக அவர்கள் அருகே வந்தவர்…. 

“வாங்க மேடம்..” அவன் அழைத்துச்செல்ல.. யவனி முன்னே படிகளில் ஏறி சென்றுவிட்டார்.. அவரை பின்தொடர்ந்து இவர்களும் செல்லும்போது

“சார்… இதுல ஒரு சைன் மட்டும்..” என்று மேனேஜர் வந்து நிற்க… அதில் தனது கையொப்பத்தை பதிவிட்டு திரும்பியவன்…

“என்ன செல்லம்… காதலனை கொஞ்சி முடிச்சாச்சா…???”…  என்ற விதுரனின் கேள்வியில்… மிஷ்டி முறைத்துப்பார்த்தவள்… அன்னை முன்னே சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்டு…

“ஆமாண்டா…” மிதப்பாக கூற… அவளின் பதிலில்… ஒருகனம் தன்னை மறந்து நின்றவன்… இதழில் புன்முறுவலோடு…

“மரியாதை ரொம்ப தூக்கலா இருக்கே செல்லம்…” சொல்லி மயக்கும்புன்னைகையை மறுபடியும் வீச…

“மனுஷனுக்குதான் நான் மரியாதை குடுப்பேன்… உனக்கில்ல… நீ மிருகம்…” அனல்கக்கும் பார்வையை அவனைப்பார்த்து வீசினாள்.

“ப்பா… ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது செல்லம்….  அப்ப உன் காதலன் அன்ஷூமன் என்ன..??”… அவனும் பதிலுக்கு கேட்க… 

“என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி அவர் எப்படி இருந்தாலும்.. இப்ப எங்களோட காதல் மீது ஆணையா அவர் ஸ்ரீராமனாவேதான் வாழ்ந்துட்டுருக்கார்….” என்ற அவளது பதிலில்… சத்தமாகவே சிரித்துவிட்டான் விதுரன்.

அவனின் சிரிப்பு சத்தத்தில் யவனி திரும்பி பார்க்க.. இவர்களும் தளத்தை அடைந்துவிட்டனர்.

“ஒரு சின்னஜோக் அத்தை..”என்றவனின் பதிலில் சிரிப்புடனே.. புடவைகளை பார்வையிட ஆரம்பித்தார் அவர். அவரின் கவனம் அங்கிருப்பதை உறுதி செய்துகொண்டவன்…

“நல்ல ஜோக் செல்லம்… ” என்று கூறி சிரித்தவனின் கண்ணசைவில்… அதே தளத்தில் சுவற்றைப்போலவே அமைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து ஒருவன்…. கையில் ஒரு அட்டைப்பெட்டியோடு வந்தவன்…  நேராக அதை மிஷ்டியின் கையில் கொடுத்து விட்டு செல்ல… 

அதிர்ச்சியோடு அதை வாங்கிக்கொண்டவள்… நம்மகிட்ட தானே பேசிக்கிட்டு இருந்தான்… இவனோட கண்ணசைவிலையே எல்லாத்தையும் நடத்திக்காட்டுறானே… மனதிற்குள் வியந்தவாறே நிற்க….

“காதலன் எப்படியோ இருந்துட்டு போகட்டும்… இனி இந்த புருஷன்தா உனக்கு கடவுள் செல்லம்… “அவளை பார்த்து கண்சிமிட்டியவன்….

“உனக்கு தான் … நம்ம கல்யாண புடவையும்… டிசைனர் ப்ளவுசும்.. அளவெல்லாம் பக்காவாதான் இருக்கு… ” என்று இரட்டை அர்த்தத்தில் கூற… கண்களை அழுந்த மூடி தன்னை சமன் செய்து கொண்ட மிஷ்டி பதில் பேச முனைய….

“முதல்ல பிரிச்சு பார்த்துட்டு… பேசு.. மை டைக்ரஸ்…” அவனது டைக்ரஸ் என்ற அழைப்பில் அவள் நிமிர்ந்து பார்க்க… 

“மிருகத்துக்கு ஜோடியும் மிருகமாத்தான் இருக்க முடியும் செல்லம்…” என்ற அவனின் பதிலில் வெகுண்டவள்…  புடவையை தூக்கி எறிய முற்படும்போது…. புடவை அட்டைப்பெட்டியிலிருந்து கீழே விழவும்… மகள் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள்…. என்று யவனி திரும்பி பார்க்கவும் சரியாக இருந்தது.

கீழே விழுந்த புடவையின் அழகிலிருந்து… கண்களை திருப்ப முடியவில்லை மிஷ்டியால். யவனியும் மகளை நோக்கி வந்தவர்.. மகளைப்பார்த்து ” நீதான் செலக்ட் பண்ணியா மிஷ்டிம்மா….” என்று கேட்கும்போது….

“இல்ல… நான் இத எடுக்கல…” என்று கத்த வேண்டும் போல் இருந்தது மிஷ்டிக்கு… ஆனால் அடுத்த சில மணித்துளிகளில் பில் செய்யப்பட்டு புடவை அவர்களின் வசம் ஒப்படைக்கப்பட… தன்னை மீறி நடக்கும் செயல்களை நினைத்து ஆத்திரமாக வந்தது.

“ம்மா… இன்னும் ரெண்டு புடவை எடுத்து வைங்கம்மா.. நம்ம டிரைவர் அங்கிள் வைஃப்கும்.. அவர் பொண்ணுக்கும் விட்டுப்போயிடுச்சுன்னு சொன்னிங்களே…” என்று தனது தாய்க்கு நியாபகப்படுத்தியவள்… தனது ஊழியனிடம் பேசிக்கொண்டிருந்த விதுரனை பார்த்துக்கொண்டே… 

“நான் இந்த புடவையை கீழே இருக்குற பெரிய மிரர்ல வச்சு பாத்துட்டு வரேன்..” புடவையை எடுத்துகொண்டு கீழே இறங்கி சென்றுவிட்டாள்.

விதுரனும் யவனியிடம் சென்றவன்…” நீங்க எடுக்க அத்தை… பட் கண்டிப்பா இதுக்கு நான் பில் போட மாட்டேன்… அதுதான் கல்யாண புடவை கண்டிப்பா பில்போடனும் சொல்லிட்டிங்க….” என்று பேச…

“விதுகண்ணா… முகூர்த்தப்புடவைய எப்படி பணமில்லாம எடுக்க முடியும்… அதனால்தான் அப்படி சொன்னேன்..” என்றவரின் பதிலில் சமாதானமடைந்தவனாக…

“சரி.. நீங்க பாருங்க அத்தை.. நான் இவங்களுக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் இன்ஷ்டரக்ஷன் குடுக்க வேண்டியிருக்கு… நான் என் வேலையை முடிச்சிட்டு கீழ வெயிட் பண்றேன்….” என்றவாறு அங்கிருந்த தனது அறையை நோக்கி சென்றவன்… அங்கு பொறுத்தப்பட்டிருந்த தானியங்கியின் வழியாக கீழே இறங்கி சென்று விட்டான்.

மிஷ்டி கீழே இறங்கியவனை நோக்கி வேகமாக வந்தவள்….

“ரொம்ப ஆணவத்துல ஆடாத மிஸ்டர்.. கடைசி நிமிஷத்துல சொன்னாகூட அன்ஷூமன் என்னை காப்பாத்திடுவாரு…” ஆத்திரத்தோடு பேச….

“அவன் காதலியை அவன் காப்பத்தலாம். ஆனால் என் பொண்டாட்டியை காப்பாத்த நானிருக்கேன் செல்லம்…” அவளது கன்னத்தில் தட்ட…

“இன்னொரு தடவை என்ன தொட்ட உன்னை கொன்னுடுவேன்…” அவன் தொட்ட கன்னத்தை அழுத்தி துடைத்துக் கொண்டே பேச…

“அடிப்படையே தப்பாருக்கே மை டைக்ரஸ்… ” மீண்டும் கன்னத்தில் அழுந்தக்கிள்ளியவன்….

“முதல்பகல்தான் ஏதோ அவசரத்துல நடந்துடுச்சு… அதனால் இனி அடுத்து நடக்கப்போற இரவுக்கு எனக்கு பிடிச்ச மாதிரி இருக்க ரெடி ஆகிக்கோ செல்லம்…”

“இனி அப்படி எதுவும் நடக்க நான் விடமாட்டேன்…” மிஷ்டி சூளுரைக்க…

“அப்ப கல்யாணம் என்னோடதான்னு மறைமுகமா சம்மதம் சொல்லிட்ட…” என்றவனின் பேச்சில் அவள் அதிர்ந்து நிற்க…

“கவலைப்படாத செல்லம் எல்லா ஏற்பாட்டையும் நான் பார்த்துக்குறேன்….” என்றவன்.. அவளே எதிர்பாராத வண்ணமாக தானியங்கியினுள் பிடித்து தள்ளியவன்… தனது அதரங்களால்… அவளின் அதரங்களை பட்டும்படாமல் ஒருமுறை சிறைப்பிடித்து விட…

“சம்மதம் சொன்ன இந்த வாய்க்கு பரிசு குடுக்க வேணாம்மா.. மை டைக்ரஸ்… சந்தோஷமா நம்ம கல்யாணத்துக்கு தயாராகு… ” என்று கன்னத்தில் ஒருமுறை தட்டிவிட்டு… அங்கிருந்து வெளியேறி… சமத்து பிள்ளையாக தனது கௌச்சில் சென்று அமர்ந்து கொண்டான்.

மிஷ்டியும் தன்னைத்தானே சமாளித்துக்கொண்டு வெளியே வந்தவள்.. அவனை முறைத்துக் கொண்டு எதிரில் இருந்த இருக்கையில் அமர.. யவனியும் எடுத்த புடவைகளை பேக் செய்து கொண்டு வந்துவிட்டார்.

மகளின் சோர்வான முகத்தை கண்டவர்…

“என்னாச்சு மிஷ்டிம்மா.. ரொம்ப டையர்டா இருக்காடா…??” என்றவாறே அவளது நெற்றியில் கை வைத்து பார்க்க… காய்ச்சல் இல்லை. நன்றாக விட்டிருந்தது.

“சரி விது கண்ணா… புடவைங்கள பேக் பண்ணி வாங்கிட்டேன்…  வா.. அப்படியே நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகலாம்… ” என்றழைக்க… 

வனிஈஈஈஈ…ஈஈஈஈ… மனதிற்குள் பல்லைக்கடித்தாள் மிஷ்டி.

“ம்மா… அவருக்கு நிறைய வேலை நிறைய இருக்கும்… எனக்கு டையர்டா இருக்கு.. வா நம்ம கிளம்பலாம்…” கையை பிடித்து இழுக்க… 

மகளின் சின்னபிள்ளைதனமான செயலைக்கண்டு அவளை முறைத்தவர்…

“முட்டாள் மாதிரி பேசாத குட்டிம்மா… வராத பிள்ளை வந்துருக்கான்.. நீ வந்தே ஆகனும் விதுகண்ணா…வா வீட்டுக்கு…” என்றழைத்தவர் மனமோ… இக்கட்டான ஒரு நேரத்தில் வசுதேவன் அவருக்கு செய்த உதவியை நினைந்து.. மனம் நன்றியால் நிறைந்தது.

“அத்தை..”விதுரன் மறுப்பு கூறவர…

“மறுவார்த்தை பேசாதே.. கிளம்பு…” யவனியின் அன்பு கட்டளையில் மறுக்காமல் அவரோடு முன்னே நடந்து விட்டான். 

வினைய பேக் பண்ணி இந்த வனிம்மா வீட்டுக்கு கூட்டி வருது… மனதிற்குள் நொந்துகொண்டவள் காரில் ஏற… இரண்டு கார்களும்.. நந்தனின் வீட்டில் வந்துதான் நின்றது.

மிஷ்டி வேகமாக உள்ளே சென்று விட…

“வா.. விதுகண்ணா…” கையோடு கூட்டிச் சென்றார் யவனி.

ஹாலில் அவனை அமரச் செய்தவர்… “உனக்கு லெமன்டீ தான பிடிக்கும் விது.. கொஞ்சம் வெய்ட் பண்ணு… இதோ எடுத்துட்டு வந்துடறேன்… ” யவனி வேகமாக கிட்சனுக்குள் நுழைய…. மிஷ்டி தனது அறைக்குள் சென்று விட்டாள். அறைக்குள் சென்றபிறகுதான் ஞாபகம் வந்தது… 

“அச்சோ.. ஃபோன கார்ல விட்டுட்டேன் போலவே.. ப்ச்.. அன்ஷூ இந்நேரம் எத்தனை கால் பண்ணிருக்காரோ…??? ” விதுரன் ஹாலில் அமர்ந்திருப்பதையும் மறந்தவளாக ஓடிவந்தவள்… காரில் சென்று பார்க்க.. எங்கு தேடியும் ஃபோன் அவளது கைகளில் அகப்படவில்லை.

சோர்ந்த நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தவள்.. தலையில் தட்டி யோசித்துக்கொண்டே உள்ளே நுழைய… எதன் மீதோ இடித்துவிட்ட உணர்வுடன் தலையை தடவிக்கொண்டே நிமிர்ந்து பார்க்க… விதுரனின் மீது தான் இடித்துக்கொண்டிருந்தாள்.

அவன் பார்வையில் எந்த உணர்வையும் பிரதிபலிக்காது அவளையே கூர்ந்த பார்வையுடன் பார்த்துக்கொண்டு நிற்க..

“நகர்றானா பாரு.. வெள்ளை ஹல்க் மாதிரி நின்னுகிட்டுருக்கான்… ” மனதிற்குள் திட்டிக்கொண்டே அவனைப் பார்த்து முறைத்தவள்…

“இப்ப எதுக்கு இங்க நிற்கற மிஸ்டர்.. ஒரு அஞ்சு நிமிஷம் கூட என்ன ஃப்ரீயா இருக்க விடமாட்டியா…??”…  அன்னையின் காதில் விழக்கூடாதென்று அடிக்குரலில் சீற….

“இதக்குடுக்கலான்னுதான் நின்னேன் மை டைக்ரஸ்…” அவளது ஃபோனை நீட்ட…

மிஷ்டி “இது எப்படி இவன் கைகளில்..??” (படிக்கற எங்களுக்கே தெரியுதும்மா.. கடைல தான் விட்டிருப்பன்னு) என்று சிந்தித்தவாறே மொபைலை வாங்க கையை நீட்ட…

“கடைலதான் விட்டுட்ட ….ஆனால் நீ வச்சுட்டு போன நேரத்துல இருந்தே … மிஸ்டர்.அன்ஷூமன் கிட்ட இருந்து கால் மேல கால்… சரி பாவம்.. என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சவனாச்சே.. கவனமாக காதலன் என்பதை தவிர்த்தவன்… 

மிஷ்டி என்கூட கொஞ்சம் பிஸியா இருக்கா… அப்பறம் பேசுங்க மிஸ்டர்.அன்ஷூமன்னுதான் சொன்னேன்.. ஏதோ உடையுற சத்தம் கேட்டுச்சு செல்லம்..அப்பறம் கட் ஆயிடுச்சு…” குறும்பு கண்ணனின் பாவனையை முகத்தில் சுமந்து பதிலளிக்க… கொதி நிலைக்கு சென்றாள் மிஷ்டி.

“உனக்கு எவ்வளவு தைரியம்…?? ” அவள் அவனது சட்டையை பிடிக்க வர…

அவன் முறைத்து பார்த்த ஒற்றைப்பார்வையில் தானாக பின்னடைந்து.. சர்வமும் நடுங்க ஓரடி தள்ளி நின்றாள் மிஷ்டி.

“பெண்ணே… நீ சிறுபெண்கறதை அடிக்கடி உன் செயல்களால் நிருபிக்கற… உன்னை செல்லம் கொஞ்சுட்டிருக்கேன்னு.. மரியாதை குறைவாகவோ.. இல்லை என்னை மீறியோ நீ செயல்பட நினைத்தால்… என்ன நடக்கும்னு உனக்கு ஏற்கனவே சொல்லிட்டேன்.. 

அதையும் மீறி ஏதாவது செய்ய முயற்சி பண்ணாதே…” மாற்றி பேசிய அவன் குரலை கேட்டு வியர்த்து விட்டது அவளுக்கு.

சரியாக அந்நேரம் யவனி டீயுடன் வர…

“வா… வந்து என்னுடன் .. அங்கே சோஃபாவில் உட்கார்…” அடிக்குரலில் அவளுக்கு ஆணையிட்டு முன்னே நடந்து இருக்கையில் அமர… 

யவனி அவனது கைகளில் டீயை கொடுத்தவர்… மகளும் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு…

“மிஷ்டிம்மா.. நீயும் கீழே இறங்கி வந்துட்டியா..” வியர்த்து நிற்கும் மகளின் அருகே வந்தவர்..

“காய்ச்சல்  நல்லா விட்டுடுச்சு குட்டிமா.. அதான் இப்படி வியர்க்குது… நீயும் உட்கார்.. உனக்கும் சூடா குடிக்க எடுத்துட்டு வரேன்..” மீண்டும் உள்ளே செல்ல..

உடல் அயர்வினால்.. விதுரனுக்கு பக்கவாட்டு இருக்கையில் சென்று அமர்ந்து விட்டாள்.

“நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்திக்கோ மை டைக்ரஸ்… ” டீயை ரசித்து குடித்தவாறே பேச….

அவனது அக்கறையில் எரிச்சலுற்றவளாக….

“நீ எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும்… உண்மைகாதலை பிரிக்க முடியாது…” பதில் மொழிய… நிதானமாக டீயை குடித்து முடித்துவிட்டு அவளருகே சற்று நகர்ந்து அமர்ந்தவன்…

“உண்மைகாதாலா இருந்தாதானே செல்லம்…” விதுரனின் உண்மைகேள்வியில் உறைந்து அமர்ந்துவிட்டாள் மிஷ்டி.

“இவனுக்கு எப்படி… “இதயம் வேகமாக துடிக்க….

விதுரன் எழுந்து நின்றவன்.. அலைபேசியை அவளிடம் வைத்தவன்.. யவனி வரவும் விடைபெற்று கிளம்பி சென்றுவிட்டான்.

அத்தியாயம் 5 

இந்திரபுரியோ என்று வியக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.. அந்த கல்யாண மாளிகை… ஆம் மாளிகை.. பெரும் தனக்காரர்களால் மட்டுமே உபயோகப்படுத்த கூடிய… நகரின் புகழ்பெற்ற அந்த கல்யாண மாளிகையில்… வாசலில் வண்ண கலவைகளை கொண்ட பலூன்களாலும்….வண்ண வண்ண மலர்களாலும் அலங்கரிக்கபட்டு வாயிற்தோரணமா அல்லது பூந்தோரணமா என்று வியக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகே இருந்த அலங்கரிக்கப்பட்ட பேனரில் “அன்ஷூமன் வெட்ஸ் மிஷ்டி” மணமக்களின் பெயர்கள் பொன்நிற மெட்டல்களால் பொருத்தப்பட்டு… சுற்றிலும் மலர் அலங்காரம் செய்து.. காண்பவர் கண்களை கவர்ந்திழுத்துக்கொண்டிருந்தது.

விதவிதமாக வடிவமைக்கப்பட்ட வண்ண விளக்குகள்… அந்த மாலை நேரத்து இருளை பகலாக்கிக் கொண்டிருக்க…. திருமண பூரிப்பில் பிரகாசமாக இருக்க வேண்டியவளது முகமோ… களையிழந்து காணப்பட்டது.

குளிரூட்டப்பட்ட அந்த மணமகள் அறையில்… நெற்றியில் சற்றே வியர்வைப்பூக்கள் பூத்திருக்க….தன் முன்னே விரிந்து கிடந்த அந்த பட்டுப்புடவையை வெறித்தவாறு பார்த்துக்கொண்டே… அமர்ந்திருந்தாள் மிஷ்டி. 

ராணி பிங்க் எனப்படும் இளஞ்சிவப்பா அல்லது ரோஜாவின் வண்ணமா என்று அறிய முடியாது…. அவளது பால் வண்ண நிறத்தை தூக்கிக்காட்டும் வர்ணத்தில்…. தங்க இலைகள் புடவையின் கரைகளில் இழைந்தோட.. மின்னும் நட்சத்திரமோ என்று வியக்கும் வண்ணம்… பொடியாக வெட்டப்பட்ட வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த புடவை.

அன்று விதுரன் பேசிவிட்டு சென்றபிறகு அன்ஷூமனுக்கு எத்தனையோ முறை முயன்றும் அவன் அவளது அழைப்பை ஏற்கவில்லை. 

வேறுவழியில்லாது கார்மேகத்தின் வீட்டு எண்ணிற்கு அழைக்க… வர்ஷினிதான் எடுத்து பேசினார். அவளின் க்ஷேம நலங்களை விசாரித்தவர்… உடம்பை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறி.. அரைமணி நேரத்திற்கும் மேலாக பேச… அப்பொழுது வெளியே செல்வதற்காக கிளம்பி அன்ஷூமன் படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான்.

“மாம்… நான் வெளிய கிளம்புறேன்… ” ஃபோனில் அவனது குரல் கேட்க…

வர்ஷினியும்” அன்ஷூ.. மிஷ்டிதான்டா பேசறா…” என்று குரல் கொடுக்க… அவர் சொன்னதை கேட்காதவாறே நடக்க ஆரம்பித்தான் அவன்.

மிஷ்டியும் இங்கிருந்தே கத்த ஆரம்பித்தாள்… 

“அத்தை ஒரு நிமிஷம் நான் கூப்பிடறேன்னு சொல்லி கூப்பிடுங்க.. ” ஏதோ அவர்களுக்குள் ஊடல் என்பதை புரிந்து கொண்டவராக… வர்ஷினி மகனை அழைத்தவர்..

“அன்ஷூ.. உன்னதான் கூப்பிடறா… வந்து பேசிட்டு போ…” அதில் நீ பேசியே ஆக வேண்டும் என்ற கட்டளை இருக்க.. 

ஃபோனை எடுத்தவன்..” எஸ்… மிஷ்டி..” 

“அன்ஷூ.. நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க… இது ஏற்கனவே முடிவு பண்ணி போறதா இருந்த ஷாப்பிங்…. நீங்க புரிஞ்சுப்பிங்கன்னுதான் நான் கிளம்ப சொன்னேன்… 

மொபைல நான் கடைல விட்டுட்டு வந்துட்டேன்… அப்பறம்தான் என் கைக்கு கிடைச்சது… அப்ப இருந்து உங்களுக்கு எத்தனை கால் அடிக்கிறேன்.. எதுக்கு சுவிட்ச் ஆஃப் பண்ணிருக்கிங்க…?? எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம்…??” விதுரன் பேசியதை கவனமாக தவிர்த்தளாக… கெஞ்சலில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தாள் மிஷ்டி.

அவளின் கோபத்தில் அன்ஷூமன் சற்று சுதாரித்தவன்… இந்த கல்யாணத்தை முடிச்சுட்டு உன்னை கவனிக்கிறேன்டி.. மனதிற்குள் கருவியனவாக…

“இல்ல டார்லிங்… கொஞ்சம் பிஸினெஸ் டென்ஷன்.. அதான்டா பேபி… இப்ப நாம மீட் பண்ணலாமா…??” காரியத்தில் கண்ணாக கேட்க…

“எங்க…?? அத கேட்டுதான் திட்டு வாங்கி உட்கார்ந்திருக்கேன் அன்ஷூ… நாளைக்கு காலைல எனக்கு முகூர்த்த காப்பு கட்டிடுவாங்களாம்… வனிம்மா என்ன எங்கேயும் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க…

இனி நாளைக்கு நேரா மண்டபத்துக்கு தான்.. காலை மெஹந்தி முடிஞ்சு…சாயங்காலம் நடக்கப்போற சங்கீத்க்குதான் உங்கள பாக்க முடியும் அன்ஷூ…” குரலில் வருத்தத்தோடு கூற….

“அப்ப சரி…” ஒரே வார்த்தையில் ஃபோனை வைத்து விட்டான் அன்ஷூமன்.

அப்போதிருந்து இப்போது வரை எல்லா சடங்குகள் முடிந்தும்.. அன்ஷூமன் அவளிடம் பேச முயலவில்லை.

ஒருமுறை அவள் வலிய பேசிய போதும்… “கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம் மிஷ்டி..” என்ற அவனது வார்த்தைகள் சொல்லாமல் சொல்லியது.. இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்று.

இதற்குள் மேல் இவனிடம் பேச முடியாது என்பதை புரிந்து கொண்டவளாக.. தன் அறைக்குள் வந்து அமர்ந்து விட்டாள் மிஷ்டி.

வந்து அமர்ந்தவளின் கண்களில் பட்டது அந்த முகூர்த்த புடவை. விதுரனின் ஞாபகம் வரப்பெற்றவளாக.. வேகமாக தனது பெற்றோரை நோக்கிச்சென்றாள். மண்டபத்தில் நந்தனும் கார்மேகமும் சிரித்துப்பேசி கொண்டிருக்க….. வர்ஷினியுடன் சேர்ந்து யவனி வேலைப்பாடு செய்த தட்டுகளில்… ஐயர் சொன்ன பொருட்களை.. அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

அதில் சற்று நிம்மதியுற்றவளாக… அறையில் வந்தமர்ந்து விதுரனை எப்படி சமாளிப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தாள். 

“இவன் சொன்னதெல்லாம் செஞ்சா.. அன்ஷூவோட நிலை… ஆனால் அம்மா-அப்பாவும் முக்கியமாச்சே…”

“உடலால் உன்னை அடைந்து விட்டானே…??? ” அதற்கென்ன செய்யப்போகிறாய் மிஷ்டி அவளது மனசாட்சி குரல் கொடுக்க…. 

“மனதால் நான் களங்கமில்லாதவள்… அவன் நடந்து கொண்டது ஒரு மிருகநிலையின் வெளிப்பாடு.. என்னால் அன்ஷூமனை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள முடியாது….” மனது ஓலமிட… அழுது கொண்டே   கைகளை நெற்றியில் அடித்துக்கொள்ள வந்தவள்.. அப்பொழுதுதான் தனது கைகளில் இருந்த மருதாணி கோலத்தை கவனித்தாள்.

அந்த மருதாணி கோலம் மிக நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது… வலது கையில் மாப்பிள்ளை அமர்ந்திருக்கும் பல்லக்கும்… இடதுகையில் மணப்பெண் அமர்ந்திருக்கும் பல்லக்கும்.. இரண்டு கைகளையும் இணைத்துப்பார்த்தால்.. பந்தல் தோரணம் இதய வடிவில் வரையப்பட்டிருந்தது. 

மணப்பெண் பல்லக்கில் ‘எம்’ என்ற எழுத்து இடம்பற்றிருக்க… மாப்பிள்ளை பல்லக்கில் ‘வி’ எழுத்திருந்தது. 

அதிர்ச்சியில் தன்னை மறந்து எழுந்து நின்றாள் மிஷ்டி. 

“இது எப்படி சாத்தியம்….???”  உறைந்து அமர்ந்தவள்… அப்படியென்றால் அவன் சொன்னபடி…. 

“என் கழுத்தில் தாலி கட்டப்போவது அவன்தானா….??”… அடுத்து நடக்கப்போவதை எண்ணி பயந்தவளாக அமர்ந்திருந்தவள்… எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ… அன்னையின் வரவில் அவளது மோனநிலை முடிவுக்கு வந்தது.

“குட்டிமா.. இந்த லெஹங்காவ இன்னுமா மாத்தாம உக்காந்திருக்க…???” அன்னை அருகில் வர…

“கொஞ்சம் பதட்டமா இருக்குமா…” உண்மை மனநிலையை அப்படியே உரைத்தாள் அவள்.

திருமணம் செய்து போகப்போவதால் மனதில் மறுகுகிறாள் போல… என்று நினைத்துக் கொண்டார் யவனி.

“இதெல்லாம் சகஜம்டா குட்டிமா… நாளைக்கு இந்நேரம் பாரு.. சந்தோஷமா மாப்பிள்ளையோட பேசி சிரிச்சுட்ருப்ப… “மகளின் தலையலங்காரத்தை கலைத்துக்கொண்டே பேச… சட்டென்று திரும்பி… அன்னையை அணைத்துக்கொண்டாள் மிஷ்டி. 

மகளை தன்னோடு அணைத்துக்கொண்ட யவனி… “இங்கதானடா இருக்கப்போற குட்டிமா… உன்னை பாக்காம எங்களால இருக்க முடியுமா.. உன்ன பக்கத்துல பார்த்துக்கிட்டே இருக்கனும்னுதான… அப்பா இந்த சம்பந்தத்துக்கே ஒத்துகிட்டாங்க… கல்யாண பொண்ணு சந்தோஷமா இருடா… ” மகளை உடைமாற்றச்செய்து விட்டு தானும் அவளருகே படுத்து உறங்கிவிட்டார். அடுத்து தன் வாழ்வில் ஏற்படபோகும் பிரளயத்தை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனையிலேயே தூங்காது இரவை கழித்தாள் மிஷ்டி.

“பொண்ண கூட்டிண்டு வாங்கோ…” ஐயர் குரல் கொடுக்கவும்… மணமகள் அறையை திரும்பி பார்த்தான் அன்ஷூமன். வர்ஷினி மிஷ்டியை மணமகள் அலங்காரத்தில் அழைத்துவர… பார்த்தது பார்த்தபடியே இருந்தான் அன்ஷூமன். அவளது பேரழகின் மயக்கத்தில்… அவள் மேல் இருந்த கோபம் கூட பின்னுக்கு போனது. ஆனால் மிஷ்டியோ குனிந்த தலை நிமிராது… நடந்து வந்தாள். 

நிமிர்ந்து பார்த்தால் விதுரனை பார்த்து விடுவோமோ என்ற பயம் அவளது மனதை ஆட்கொண்டது. நேற்றுவரை வசுதேவன் அன்கிளிடம் அவரது மகனை பற்றிய உண்மைகளை சொல்லலாமா என்ற யோசனையில் இருந்தவள்… அவரிடம் உண்மையை சொல்லிவிட்டால் ஆத்திரத்தில் தனது பெற்றோரை ஏதாவது செய்துவிட்டால்.. கடைசியில் அந்த முயற்சியையும் கைவிட்டாள்.

அன்ஷூமன் அவள் அருகே அமர்ந்ததும்.. 

“என்ன டார்லிங்.. வெட்கப்படறியா…” பேச்செடுக்க… 

“இன்னும் கொஞ்சநேரத்தில் நீதான்டா அவமானத்தில் வெட்கப்பட போற…” உள்ளம் பரிதவிக்க.. அவனை நிமிர்ந்து பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைக்க… அவளது புன்னகையில் துணுக்குற்றவன்… அதன்பின்பு பேசவில்லை. 

அதன்பின்பு ஐயர் சொல்லும் சடங்குகளை செய்ய ஆரம்பிக்க.. மணமக்கள் சடங்குகள் மேற்கொள்வது அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்ப பட்டுக்கொண்டுருந்தது. 

மிஷ்டி நிமிர்ந்து பார்க்க இயலாதவளாக.. திரையை பார்க்க.. அங்கு விதுரனோ.. வசுதேவனோ.. வந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதில் அவள் தன்னை அறியாது பெருமூச்சு விட.. அவள் பெருமூச்சை கவனிக்காதது போல் கவனித்து கொண்டிருந்தான் அன்ஷூமன்.

சரியாக ஒன்பது மணிக்கு உள்ளே நுழைந்தனர்.. வசுதேவனும்… விதுரனும். முகூர்த்த நேரமும் அப்பொழுதுதான் தொடங்கியிருந்தது.

தனது வழக்கமான புன்னகையுடன் உள்ளே நுழைந்தவனை வாசலுக்கே வந்து வரவேற்றார் நந்தன். கார்மேகத்திற்கு எரிச்சல் வந்தாலும்…

“உன்னை ஜெயிக்கறதுக்கான நேரம் வந்துருச்சு வசுதேவா…” மனதிற்குள் சந்தோஷப்பட்டவராக.. அவரும் தன்பங்குக்கு நன்றாகவே வரவேற்றார்.

நந்தனும் யவனியும் அவர்களை வரவேற்று முன்னால் விஐபிக்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர வைத்தனர்.

விதுரன் அமரவும்.. மிஷ்டி நிமிர்ந்து அவனைப்பார்க்கவும் சரியாக இருந்தது. நிமிர்ந்து பார்த்தவளை பார்த்து விதுரன் தனது வழக்கமான புன்னகையை சிந்த… அவனைக்கண்டு சர்வமும் ஒடுங்கியது மிஷ்டிக்கு. 

அவளை பார்த்துக்கொண்டே தனது கடிகாரத்தில் அவன் மணி பார்க்க.. அவனது திட்டத்தை செயல்படுத்த போகிறான் என்பதை புரிந்து கொள்ள முடியாத முட்டாளா அவள்.இருந்தும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள். 

“என்னதான் செய்வான் பார்ப்போமே…” மூழ்கும் நேரத்து துணிச்சல் ஒன்று வருமே… அதுபோல அசட்டுதைரியத்தில் அமர்ந்திருந்தாள்.

அவளது முகபாவனைகளை கவனித்துக்கொண்டு…அவளை விட்டு பார்வையை திருப்பாது அமர்ந்திருந்தான் விதுரன். இவை அனைத்தையும் கண்டும் காணாதது போல் அமந்திருந்தார் வசுதேவன்.

காலையில் திருமணத்திற்கு கிளம்பும் முன்…. மகன் அவருக்கு கொடுத்த வாக்கில் பெரும்மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தார்.

தங்களது திட்டம் வெற்றிபெற போவதாலும்… மகனின் வாழ்க்கையில் முக்கியமான தினம் என்பதாலும்… பூஜை அறையில் நின்று மனைவி யசோதாவின் படத்தை பார்த்துக்கொண்டு மனதிற்குள் அவருடன் பேசிக்கொண்டிருந்தார் வசுதேவன்.

“நம்ம விதுகண்ணாக்கு… கல்யாணம் சதும்மா… எங்கே இவன் கல்யாணமே பண்ணிக்க மாட்டானோன்னு பயந்து போயிருந்தேன்… ஆனால் இன்னைக்கு நல்லபடியா நடக்கபோகுது… ” சந்தோஷத்துடன் அவர் திரும்ப… விதுரனும் உள்ளே நுழைந்தவன்… தாயின் புகைப்படத்தை வணங்கி நிற்க… 

“கர்ணா… நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்று பேசனும்…” வசுதேவன் ஆரம்பிக்க…

“சொல்லுங்க டாட்…” 

” உனக்கு திருமணத்துல விருப்பம் கிடையாதுன்னு எனக்கு தெரியும்… உன் மனசுல ஒரு பொண்ணு இருக்கான்னும் எனக்கு தெரியும்… “

“டாட்….”

“அது இப்ப பிரச்சனை இல்லை…. ஆனால் மிஷ்டிய நீ கல்யாணம் செய்துகிட்ட பிறகு… வேற எந்த நினைப்பும் உன் மனசுல வரக்கூடாது விதுகண்ணா… உன் மனைவிக்குரிய மரியாதையில் சின்ன குறைவு கூட ஏற்படக்கூடாது… எனக்கு என் பேரன் பேத்திகளை பார்த்து சந்தோஷமா இருக்கனும்… அதுக்கு நீ  முழு மனசோட அவளை ஏத்துக்கனும்…செய்வியா கர்ணா…” கண்களில் எதிர்ப்பார்ப்போடு கேட்க…

கண்களை ஒருமுறை அழுந்த மூடியவன்.. கைகளை இறுக்கி தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

“அடுத்த வருஷம் உங்க பேரக்குழந்தை உங்க கையில் இருக்கும் டாட்… இப்போ கிளம்பலாமா…???”

“கர்ணா… ” மகனை அணைத்துக்கொண்டவர்… அதே சந்தோஷத்துடன்…இதோ.. இப்பொழுது மண்டபத்திலும் அமர்ந்திருக்கிறார்.

அரைமணிநேரம் கடந்திருந்தது… ஐயர் முகூரத்தப்புடவையை மாத்திக்கொண்டு வரச்சொல்ல.. மிஷ்டியை அழைத்துச்சென்று முகூர்த்தப்புடவை அணியச் செய்து அழைத்து வந்தனர்.

அவள் மணமேடையை நெருங்கவும்…. “என்னை விட்டுடுங்க…” என்ற அலறல் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

அனைவரும் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று திரும்பி பார்க்க… அதுவரை கல்யாண நிகழ்வுகளை ஒளிபரப்பிக்கொண்டிருந்த அந்த பெரிய திரையில் கண்களும் கைகால்களும் கட்டப்பட்ட நிலையில்…. ஒரு இளம்பெண் கதறிக்கொண்டிருந்தாள். அவளை சுற்றி நான்கு முரட்டு உருவங்கள் நிற்க.. ப்ரவுன் நிற ஷூ அணிந்த கால்கள் அவர்களை நெருங்குவது தெரிந்தது.

அந்த காலணிகளே சொல்லாமல் சொல்லியது அது அன்ஷூமன் என்று.

“என்னடா இப்படி கத்த விட்டுட்டுறிக்கிங்க… கொஞ்சம் பவுடர் எடுத்து இவ வாயில கலந்து ஊத்திவிடுங்க… இவ போதைல இருந்தாதான் வசதி… ” அவன் கட்டளையிட….

“சார்.. இத தூக்கறதுக்குள்ள பேஜாரா.. போச்சு… நம்மதான் இப்பலாம் வேற டீலிங்தான பாக்குறோம்…” அடியாட்களில் ஒருவன் அலுத்துக்கொள்ள…

“அந்த கிழட்டு ******* பிரபல பெரும்புள்ளியின் பெயரை கூறியவன்… இவதான் வேணும்னு நிக்கறான்டா… இப்பதான் தெரியுது.. இவதான் வேணும்னு ஏன் கேட்டான்னு…???” போதையில் மயக்கமுற்ற அப்பெண்ணை தனது கண்களில் வெறியோடு நெருங்க.. அடியாட்கள் சிரித்துக்கொண்டே வெளியேறினர்.

அவர்கள் வாயிலை நெருங்கவும்… போலிஸின் சைரன் கேட்கவும் சரியாக இருந்தது. 

“சார்.. போலிஸ் சார்… ” 

“ச்ச…நீங்க முதல்ல தப்பிச்சுடுங்கடா… பின்னாடி குடவுன் வழியா போனா.. மெயின் ரோட்ட பிடிச்சுடலாம்….” அவர்கள் தப்பி வெளியேற…

“எந்த **** போலிஸ் வரானோ… நாளைக்கு கல்யாணம் மட்டும் இல்லன்னா.. இங்கேயே உன்னை அனுபவிச்சுட்டு… எவனா இருந்தாலும் குடுக்க வேண்டிய லஞ்சத்தை குடுத்துட்டு போய்கிட்டே இருப்பேன்…” குனிந்து அவளை அவன் பார்த்த பார்வையை…. அந்த காணொளியை கண்ட எவராலும் மறக்க முடியாது. அங்கிருந்து அவன் வெளியேறும் காட்சி முடியவும்…

கார்மேகம் மகனை..”பளார்… ” என்று அறையவும் சரியாக இருந்தது.

“ப்பா… ” கன்னத்தை பிடித்துக்கொண்டவன்… கண்கள் கலங்க நின்றிருந்த மிஷ்டியை பார்த்து.. “மிஷ்டி இது நானில்ல… மார்ஃபிங்…” என்று சமாதானப்படுத்த முயல…தன் மனதை கல்லாக்கி கொண்டவள்…

“ச்ச… நீயெல்லாம் ஒரு ஆம்பளையா…???” மாலையை கழற்றி அவன் முகத்தில் தூக்கி எறிந்தவள்… “ப்பா…” நந்தனிடம் சென்று அடைக்கலம் புக.. மகளை அணைத்துக்கொண்டு ஆறுதல்படுத்தியவர்.. அன்ஷூமனை பார்த்த பார்வை… “ச்சீ.. அற்ப பதரே..” என்று சொல்லாமல் சொல்லியது.

கார்மேகம் ” இனி இந்த கல்யாணம் நடக்காது…. மரியாதையா உன்குடும்பத்தை கூட்டிகிட்டு வெளியேறு..”என்று சொல்லியே விட்டார். அன்ஷூமன் நந்தனை பார்த்து முறைக்க.. கல்யாணத்தில் கலந்து கொள்ள வந்த போலீஸ் உயர் அதிகாரி.. “மிஸ்டர் அன்ஷூமன்.. முறையான அரெஸ்ட்வாரன்டோட வரேன்… தயாரா இருங்க… ” அவர் பங்கிற்கு எச்சரித்து சென்றுவிட்டார். அதற்குமேல் கார்மேகம் அங்கு நிற்கவில்லை… குடும்பத்தை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

வசுதேவன் நந்தனின் அருகில் வந்தவர்… “இப்பவாவது உண்மை தெரிஞ்சுதேன்னு சந்தோஷப்படு யது… மேடை வரைக்கும் வந்த கல்யாணம் நிக்கறது நம்ம பொண்ணுக்கு நல்லதில்லை… ” சரியாக காரியத்திற்கு வர… முதல் முறையாக மிஷ்டிக்கு வசுதேவன் மேல் சந்தேகம் வந்தது. 

“இவருக்கும் விதுரனின் திட்டத்தில் தொடர்பிருக்குமா…???” அழுத விழிகளோடு அவரை பார்க்க… 

தொடர்ந்து பேசினார் வசுதேவன்…” நம்ம சங்கரன் பையன் ரொம்ப தங்கமான பையன்… அவனை பேசுவோமா… ??” செல்வநிலையில் இவர்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும்.. வசுதேவனின் நெருங்கிய நண்பர் அவர்.

மிஷ்டிக்கு வந்த சந்தேகம் வந்த வேகத்திலேயே காணாமல் போக…. யவனி தானே முன்வந்து… வசுதேவனை பார்த்து…

“யார் யாரோ எதுக்குண்ணா…?? நம்ம விதுகண்ணாதான் எங்க வீட்டு மாப்பிள்ளையா வரனும்… நந்து என்ன பார்த்துட்டுருக்கிங்க..??…. ” கணவனின் தோளில் கை வைக்க…

மகளை ஒருமுறை பார்த்தவர்… ” ஆமா.. வசு.. விதுரனுக்கு இதில் சம்மதமான்னு கொஞ்சம் கேட்டு சொல்லேன்…” என்று கேட்க…

” என் பேச்ச அவன் தட்டமாட்டான் நந்தா.. நீ அடுத்து ஆகவேண்டியத கவனி.. ” வார்த்தைகளால் தெம்பூட்டியவர் மகனிடம் சென்றுவிட்டார்.

விதுரனிடம் அவர் பேசுவதும்.. அவன் “சரி” என்று தலையாட்டுவதும் நன்றாகவே தெரிய… சந்தோஷத்துடன் யவனி மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.

நந்தன் மகளை பார்த்தவர்.. “குட்டிமா.. வா.. நம்ம போய் கொஞ்சம் ரிஃப்ரேஷ் பண்ணிகிட்டு வரலாம்….” மணமகள் அறையை நோக்கி அழைத்துச்சென்றார்.

அவளுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசபடுத்தியவர்… மகளிடம் மெதுவாக…

” நீ அன்ஷூமன லவ் பண்ணேனு எனக்கு தெரியும் குட்டிமா..”  

“ப்பா..” மிஷ்டி பேசவர…

“ஆனால் இனிமேலும் உன்னை அவனுக்கு கட்டிகொடுக்க எனக்கு மனசில்லை… அதனால விதுரன ஏத்துக்க தயாராகு… எனக்கு நல்ல மகள்ங்கிறத விட… அவனுக்கு நீ நல்ல மனைவியா இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்… ” அத்துடன் பேச்சை முடித்தவர்…

 “கிளம்பலாமா…??” கையை நீட்ட.. மறுவார்த்தை பேசாமல் அவருடன் மணமேடைக்கு வந்து.. அங்கு அமர்ந்திருந்த விதுரனின் பக்கத்தில் அமர்ந்து விட்டாள் மிஷ்டி.

மனதை ஏதோ உறுத்த.. மெதுவாக அவனை திரும்பி பார்க்க… கைகளை அடக்கிக்கொண்டு முகத்தில் எந்தவித உணர்வுகளையும் காட்டாது… தன் எதிரே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த மலர் வண்ணங்களின் கலவைகளை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் விதுரன்.

“வினு… இப்ப இந்த அந்தி வானம் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா… செங்கதிரவனோட சிகப்பு இழைந்தோட.. அதை சுற்றி பொன்மஞ்சளும்… ஆகாய நீலமும் கலந்த இந்த மேகக்கலவைகளை பார்க்கும்போது அவ்வளவு அழகாயிருக்கு….” அவனது கைகளை பிடித்து கொள்ள…

“அப்படின்னா அந்த கலர் எல்லாத்தையும் கௌரி அத்தைகிட்ட வாங்கி குடுக்கறேன்டா ஷம்மு… “

“வினு.. நீ ரொம்ப ஸ்வீட்….” அவனது கன்னத்தில் முத்தமிட… நினைவலைகளில் இருந்து வெளிவர தவித்துக்கொண்டிருந்தான் விதுரன்.

இங்கே அருகில் அமர்ந்திருந்த மிஷ்டியோ

“இவன் நினைப்பதை நடத்திட்டு.. பிடிக்காத மாதிரி சீன் போட்டு உட்காரந்திருக்கான்….” ஆத்திரத்தில் முனுமுனுக்க.. அது அவனது காதுகளில் விழுந்து.. நிகழ்காலத்தை நினைவுபடுத்த….

“ஆமா… செல்லம்… சீன்தான்… நான் சொன்ன மாதிரி முதல் இரவுக்கு ரெடியா இரு…” அவளை சீண்டிவிட…

“செய்றதெல்லாம் செஞ்சுட்டு உனக்கு முதல் இரவா…??” அவளும் பதில் பேச…

“நிஜமாவே.. இன்னைக்கு தான் நமக்கு முதல் இரவு செல்லம்.. அன்னைக்கு பண்ணது வெறும் செட்-அப் தான் … முழு கொண்டாட்டத்திற்கும் ரெடியா இரு மை டைக்ரெஸ்….” மிஷ்டி அவனை அதிர்ந்து விழித்து பார்க்கும்போதே… கெட்டிமேளம் ஓங்கி ஒலிக்க… அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகளை போட்டு முடித்திருந்தான் விதுரன்.

அத்தியாயம் 6

காலை ஆறுமணிக்கு அவளது செல்போனில் அலாரம் அடிக்க… தனது மேட்ரஸினுள்ளேயே புரண்டாள் மிஷ்டி. 

“ம்.. இதென்ன மேட்ரஸ் இன்னைக்கு ரொம்ப மிருதுவா இருக்கே.. ” அரைதூக்கத்திலேயே தன் முகத்தை வைத்து தேய்க்க…..  பின்பு தன்மீது கனமாக ஏதோ அழுத்துவதை உணர்ந்தவள்… 

சட்டென்று விழித்து பார்க்க… அவள் கனமாக உணர்ந்தது விதுரனின் கைகள்… இவள் அவனது மார்பில் முகத்தை வைத்து தேய்க்கவும்… அனிச்சை செயலாக அவனது கைகளால் அவளை அணைத்துக்கொண்டு தூங்க…. முதலில் மிரண்டு விழித்தவள்… பின்பு ஆத்திரமுற்றவளாக அவன் கைகளை தட்டிவிட்டு  எழுந்து அமர்ந்துகொண்டாள். 

அவளது அசைவில் விழித்த விதுரனோ…. தூக்கத்தை தொடரவிரும்பும் அரைக்கண்களால் அவளை பார்த்தவன்…. “என்ன டைக்ரஸ்… ” என்று கேட்க… 

“உன் தலை…” சூடாக பதிலளித்தவள்… எழுந்து சென்று அந்த அறையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ஃப்ரென்ச் விண்டோவை திறக்க… மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு.. சிறிய தோட்டம் போன்றே காட்சியளித்த… பலவித வர்ணங்களை கொண்ட பூச்செடிகள்… கொதித்துக்கொண்டிருந்த அவளது மனநிலையை சற்று சமன்படுத்தியது.

சற்று முன்னர்தான் கண்கள் அசந்து தூங்கியதால் பாதியில் விழித்தது… தலையை வேறு வலித்து தொலைத்தது. 

கொஞ்சம்கூட என் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லையே இவன். 

“ஆண்டவா… உன் திருவிளையாடலுக்கு அளவில்லையா…??? இப்படி ஒரு குடும்பசூழலுக்குள் சிக்கக்கூடாது.. உயிரைக்கொடுத்தாவது… நான் செய்த சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேனே… 

நான் ஒன்று நினைக்க… நீ என்னை வேறுவழிக்கு இழுத்து செல்கிறாயே….

இப்ப அம்மா-அப்பா எதிர்பார்ப்பையும்… வசுதேவ் அன்கிளயும் நான் எப்படி சமாளிப்பேன்…. ”  சிந்தித்தவாறே திரும்பிபார்க்க… 

உதட்டில் உறைந்த புன்னகையுடன்… காலைத்தென்றலின் காற்றில் அவனது கேசம் அசைந்தாட… நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தான் அவளது கணவன்.

“அதுவும் இவன் இருக்கானே… குழந்தை மாதிரி முகத்தை வச்சுகிட்டு… 

என்னோட எல்லா திட்டத்தையும்… தவிடுபொடியாக்கறதுக்குன்னே வந்துருக்கான் இந்த ஹல்க்….” இதற்குமேலும் பார்த்தால் இவனை விட்டு பிரிவது கஷ்டமா இருக்கும் என்று அவள் நினைக்க… 

“கஷ்டமா…உனக்கா..??” அவளது அறிவு கேட்க….

“அதானே… ஒருவேளை மஞ்சள்கயிறு மேஜிக்குங்கறது இதுதானா…??? ஒரு நாலுநாள் முன்னாடி வரைக்கும் இவன் யாருன்னே எனக்கு தெரியாதே…

ஆனா இப்போ என்னவோ காலம்காலமா பழகுனவன் மாதிரி உணர்றேனே…” சிந்தனையின் கனம் தாங்க முடியாமல் … தலையை பிடித்துக்கொண்டு அவள் நின்றிருக்க… பின்னாலிருந்து அவளை அணைத்தான் விதுரன்.

அவனது அணைப்பில் சட்டென்று அவனை விலக்கி அவள் தள்ளி நிற்க…

” என்னாச்சு.. காலைலயே என் டைக்ரஸ் பயங்கரமா சீறிகிட்டிருக்க மாதிரி இருக்கு…??” அவளை வம்படியாக பிடித்து இழுத்து அணைக்க… 

அவனது அணைப்பில் திமிறியவள்…

“விட்றா…விட்றா என்னைன்னு சொல்றேன்ல… ஹல்க் மாதிரி இருந்துட்டு… வலிக்குது… விடு என்னை…” மேலும் திமிற… அணைப்பென்னவோ இன்னும் இறுக்கமாகத்தான் ஆனது. 

வலிதாளாது அவள்.. அவனை நிமிர்ந்து பார்க்க… அந்த பார்வையில் ஏனோ உதறலெடுத்தது மிஷ்டிக்கு. கண்இமைகளை கூட இமைக்காது அவன் பார்த்த பார்வையில்…

“என்னை மீறினால்.. உன் உயிர் உடலில் இருக்காது…” என்ற செய்தி இருக்க…. மனதளவில் உடைந்து போனாள்.

அவளின் பயத்தை உணர்ந்தவனாக… சற்றே குறும்பு குரலில்… ” புருஷனுக்கு கொஞ்சமாச்சும் மரியாதை குடுக்கனும் செல்லம்… இல்லன்னா இப்படிதான் நடக்கும்… ” அணைப்பை விலக்காதவாறே பேச….

“ச…சரி…விடுங்க… எனக்கு வலிக்குது… ” அவளின் சரணடைவில்… அணைப்பை சற்று தளர்த்தினான் அவன்.

கையணைவிலேயே அவளை அழைத்துச் சென்றவன்… படுக்கையில் அமர.. அவன் அருகில் அமரச்சென்றவளை தடுத்தவன்… மடியில் அமர்த்திக்கொள்ள…. எதிரில் இருந்த கண்ணாடியில் அவர்கள் உருவத்தை பார்க்கும்போது… நரசிம்மரும் அவரது மடியில் அமர்ந்திருக்கும் அழகான குட்டி லஷ்மியைப்போன்று தோன்ற…. தன்னை மறந்து கண்ணாடியில் கணவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மிஷ்டி.

அதை பார்த்து தன் வழக்கமான புன்சிரிப்பை உதிர்த்தவன்….

” ஹல்க்னு கரெக்டாதான் பேர் வச்சுருக்க டைக்ரஸ்… இத்தனை நாள் நீ கோபத்துல திட்டுறன்னு நினைச்சேன்… ஆனால் இப்பதான் தெரியுது என்னை ரசிச்சு இந்தபேர வச்சுருக்கன்னு…” அவளைப்பார்த்தவாறே தனது மீசையை நீவிக்கொள்ள…. அவனது குரலில் சுயநினைவிற்கு வந்தவள்… சட்டென எழுந்து நின்று கொண்டாள்.

“நான் நினைக்கறதை மீறி நீ நடந்துகிட்டா… அப்பறம் என் கோபத்தை உன்னால தாங்க முடியாது செல்லம்….” அவனும் அவளருகில் வந்து நிற்க…

அவ்வளவு நேரம் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டிருந்தவள்… தன்னை மீறி வெடிக்க…

“என்ன… என்ன பண்ணுவ… என்னை கொன்னுடிவியா…?? கொன்னுடு.. எனக்கு வாழவே பிடிக்கல…” அவனது கைகளை பிடித்து தனது கழுத்தில் வைத்து அழுத்த… தனது கைகளை விலக்கிக்கொண்டவன்.. அவளது முகத்தை தன் மார்பில் வைத்து அழுத்திக்கொண்டு… அணைத்துக்கொள்ள… தனது இயலாமையை அழுகையாக கொட்டி தீர்த்தாள். 

அவளை அமைதிபடுத்தியவாறே…. 

” ஹே… டைக்ரஸ்… விடியவிடிய முதலிரவை நான் கொண்டாடுனப்போ அழுகாதவ… இப்ப ஏன் டேமை திறந்து விட்டுட்டுருக்க…???” எதைச்சொன்னால் அவளது கோபம் திசை திரும்புமோ அதைச் சொல்ல… அது சரியாக வேலையும் செய்தது. 

கோபத்தினாலா.. அல்லது வெட்கத்தினாலா.. என்று அறிய முடியாத அளவிற்கு முகம் சிவக்க… அவனை விட்டு உதறியவள்…

“ச்ச… எப்பவும் உனக்கு இதே பேச்சுதானா…??” முகத்தை திருப்பி கொள்ள… 

“புதுசா கல்யாணம் ஆனவங்க இததான பேசனும் செல்லம்… ” அவளது கன்னத்தில் நிமிண்ட…

“நீ நினைக்கிறது மட்டுமே எப்பவும் நடக்காது…” வலித்த கன்னத்தை பிடித்துக்கொண்டே பேச…

“அப்ப உன்பங்குக்கு என்ன பண்ணனும் சொல்லு.. அதையும் செஞ்சுடலாம்… ” அவளது முகபாவங்களை பார்த்து சிரித்துக்கொண்டே… சோஃபாவில் அமர… 

“என்னை விட்டு விலகி போய்டு…” அமைதியான குரலில் கேட்க… 

அவளை நிமிர்ந்து பார்த்தவன்… 

“நீ என்னை தேடி… என் பின்னாடி வந்துட்டே இருப்பேன்னு சொல்லு… நான் விலகி போறேன்… ” பேசி கண்சிமிட்ட…

“இவனை பேசி ஜெயிக்க முடியாது…” மனதிற்குள் சலித்தவளாக… திரும்ப எத்தனிக்க… அவளது கால்களை அவனது கால்களால் தட்டிவிட… நேராக அவனது மடியில் விழுந்தவளை… தனது கைகளில் தூக்கிக்கொண்டு படுக்கையை நோக்கி செல்ல… திமிறவில்லை அவள்…

“விருப்பமில்லாத பொண்ண… இப்படி உன் ஆசைக்கு இணங்க வைக்கிறியே… உனக்கு வெட்கமாக இல்லையா….??” குரலில் வலியோடு கேட்க… 

“எதுக்கு வெட்கம்… என் மனைவிகிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. இரவின் களைப்பில் நீ அசந்து தூங்கினாலும்…

எல்லாத்தையும் உனக்கு ஒழுங்கா போட்டுவிட்டு பொறுப்பா உன்னை தூங்க வச்ச புருஷனைபார்த்து இப்படி கேட்கிறியே செல்லம்….வெட்கப்பட்டா இதெல்லாம் செய்ய முடியுமா சொல்லு…???” எதிர்கேள்வி கேட்க…. அதற்கு பின் அவள் பேசவும் இல்லை… அவன் பேச விடவும் இல்லை.

அன்னம்மாள் மேலே விதுரனின் தளத்தை எட்டிப்பார்க்கவும்… ஹாலில் இங்கும் அங்குமாக நடக்கவுமாக இருக்க… வசுதேவன் தனது அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.

ஹாலில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருக்கும் அன்னம்மாவை பார்க்க…  

“குட்மார்னிங் சார்…” அவர் தனது வணக்கத்தை தெரிவிக்க…

“வெரி குட்மார்னிங் அன்னம்மா… ஏன் இப்படி நடந்துகிட்டே இருக்கிங்க… ???” என்று கேட்டவாறே அங்கிருந்த இருக்கையில் அமர…

“வள்ளி… சாருக்கு ஓட்ஸ் கஞ்சி எடுத்துட்டு வா..”  அடுக்களைக்கு குரல் கொடுக்க…

” என்ன… அன்னம்மா நீங்க..?? என் மருமகள் வந்த சந்தோஷத்தை கொண்டாடறவிதமா.. இன்னைக்காச்சும் எனக்கு காஃபி குடுக்கலாமே… வித் டபுள் சுகரோட…” சந்தோஷத்துடனே அலுத்துக் கொள்ள…

“விதுதம்பி சொன்னா நான் குடுத்துடறேன் சார்…” சிரித்தவாறே பதில் கூறியவர்… ஓட்ஸ் கிண்ணத்தை அவரது கைகளில் கொடுத்தவர்… மறுபடியும் மேலே நிமிர்ந்து பார்க்க… 

“என்ன அன்னம்மா…?? ஏதும் முக்கியமான விஷயமா..??” வசுதேவன் கேட்க… 

“ஆமா… சார்… யவனி மேடம் நேத்தே சொல்லிட்டு போனாங்க… நல்லநேரம் காலைல ஒன்பது மணிக்கு ஆரம்பிக்குது… 

அதனால மிஷ்டிக்கு கொஞ்சம் ஞாபகப்படுத்தி.. காலைல விளக்கேத்த வச்சு… சின்ன பூஜை மட்டும் பண்ண வச்சுடுங்க அன்னம்மான்னு சொன்னாங்க சார்…” சங்கடத்துடன் பதிலளிக்க…. 

“ஹா…ஹா.. இவ்வளவுதானா… என் மருமகள் எந்த நேரத்துல விளக்கேத்தினாலும் அது எங்களுக்கு நல்ல நேரம்தான் அன்னம்மா…” என்று பதிலளித்தவர்… யவனி நேற்று மிஷ்டியிடம் பேசியதையும் நினைத்து சிரிக்க ஆரம்பித்தார்.

மணமக்களை நேற்று வீட்டிற்கு ஆரத்தி எடுக்க அழைத்து வரும்போது நடந்த நிகழ்வுகளை நினைத்து மேலும் சிரிக்க ஆரம்பிக்க…. அன்னம்மாவிற்கும் அதே நினைவுதான்.. அவரது முகத்திலும் புன்னகை தோன்றியது.

மண்டபத்தில் இருந்து நேராக மாப்பிள்ளையின் வீட்டிற்கு அழைத்து வந்து.. அங்குதான் மற்ற சடங்குகளையும் மேற்கொள்வது வசுதேவனின் வீட்டு வழக்கம்.

அதனால் நேராக மணமக்களை தன் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார் வசுதேவன்.  ஆனால் அவசர கல்யாணம் என்பதால் சொந்தபந்தங்கள் யாரும் இல்லாததாலும்… அன்னம்மாவும் கணவன்குழந்தைகளை பூகம்பத்தில் இழந்தவர் என்பதாலும்.. யவனியே மகளுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

வள்ளி ஆரத்தி கரைத்து எடுத்து வருவதற்குள் மிஷ்டி பொறுமையிழந்தவளாக… அவளுக்கு தான் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையே… உள்ளே நுழையப்போக…

“அதிகப்பிரசங்கித்தனம் பண்ணாத மிஷ்டிம்மா…” கடுமையான குரலில் மகளை கடிந்து கொண்டார் யவனி. அதில் அவளது முகம் சுணங்க… வசுதேவனுக்கும் சங்கடமானது….

“என் கர்ணாவ இந்த பொண்ணு ஏத்துக்குவாளா…” மனதின் வேதனையை அவரது முகம் பிரதிபலிக்க.. மகனின் கண்களுக்கு தப்புமா அது.

வள்ளியும் அப்பொழுதுதான் தட்டை கொண்டு வந்து கொண்டிருந்தாள்….

“என் பொண்டாட்டிக்கு கால் வலிக்குது போல அத்தை… ” பேசிக்கொண்டே அவளை தனது கைகளில் தூக்கிக்கொள்ள… இவன் சட்டென்று தூக்குவான் என்பதை எதிர்பாராத மிஷ்டி… அவனின் கழுத்தை பிடித்துக்கொண்டாள்.

மருமகனின் செயலில் அனைவரது முகமும் சந்தோஷத்தை பிரதிபலிக்க.. மனம் நிறைந்த சந்தோஷத்துடன் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் யவனி.

“விதுகண்ணா… நீ இவளை இப்படி தாங்குனா… இவ உனக்கு அடங்கி இருக்க மாட்டா…” மகளை பத்திரமாக சோஃபாவில் இறக்கி அமர வைத்த மருமகனை பார்த்து பூரித்தவராக… மகளை வாரிவிட… 

அன்னையை முறைத்துக் கொண்டே… நந்தனின் அருகே சென்று அமந்து கொண்டாள் மிஷ்டி. நந்தன் அவளைப்பார்த்து சிரித்தார்… ஆனால் பேசவில்லை. தந்தைக்கு இன்னும் தன்மேல் மனத்தாங்கல் குறையவில்லை என்பதை புரிந்து கொண்டவளாக அமைதியாக அமர்ந்திருந்தாள் மிஷ்டி.

யவனி வசுதேவனை நோக்கி திரும்பியவர்… இரவிற்கான நல்ல நேரத்தையும் அதற்கான ஏற்பாடுகளையும் பற்றி பேசிவிட்டு..  மணமக்களுக்கு பால் பழம் கொடுக்கும் சம்பிரதாயத்தையும் முடித்து விட்டு… மிஷ்டியை அழைத்துக்கொண்டு நேராக அன்னம்மாவிடம் அழைத்துச்சென்றார்.

“என்ன வேணும்னு சொல்லுங்க யவனி மேடம்… நானே எடுத்துட்டு வந்துடறேன்… ” பதிலுறைத்தவாறே அன்னம்மா மிஷ்டியை பார்த்து சிரிக்க… 

“உங்க கவனிப்புதான் வேணும் அன்னம்மா… இனி இவ என் பொண்ணு இல்ல உங்க பொண்ணு… விது கண்ணா தாயில்லாம வளர்ந்த பிள்ளை… 

இன்னொருதாயா இருந்து நீங்களும் நல்லபடியா பார்த்துகிட்டிங்க… இனி அந்த பொறுப்பு இவளுக்கும் வரனும்… அது உங்களால தான் முடியும்… வசுதேவண்ணா சொல்ற மாதிரி நானும் உங்களை உடன்பிறவா சகோதரியாதான் பார்க்குறேன்… எனக்காக நீங்கதான் இதை செய்யனும்… ” யவனி தன்மீது வைத்திருக்கும் நன்மதிப்பை கண்டு கண்கள் கலங்கியது அவருக்கு.

“நான் பார்த்துக்குறேன் யவனிமேடம்.. மிஷ்டி எனக்கும் பொண்ணுதான்…” என்று அவளது கைகளை பிடித்துக்கொள்ள… அவளும் அவரது கைகளை பற்றிக் கொண்டாள். முதல் பார்வையிலேயே அன்னலக்ஷ்மியம்மாவை பிடித்து விட்டது அவளுக்கு.

“இவளுக்கு கொஞ்சம் செல்லம்குடுத்தாலும் அடுத்து இவள கைல பிடிக்க முடியாது…” 

“ம்மா..” மகள் பல்லை கடிப்பதை கண்டு கொள்ளாதவறாக… 

“நீ போய்… மாப்பிள்ளை பக்கத்துல உட்காரு.. நான் வந்துடறேன்…” அவளை அனுப்பி வைத்து விட்டார்.

“தப்பா எடுத்துக்காதிங்க அன்னம்மா… என் பொண்ணு பொறுப்பானவதான்.. ஆனால் நடந்து முடிஞ்ச விஷயங்கள் அவ மனசை பாதிக்ககூடாதுன்னுதான் அப்படியெல்லாம் பேச வேண்டி வந்தது.அவளுக்கு அவங்கப்பாவ போலவே இந்த பூஜை புனஸ்காரத்திலெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு.

இதையேன் சொல்றேன்னா….. யசோதா அண்ணிக்கு பூஜைகள்ள நம்பிக்கை அதிகம்னு எனக்கு தெரியும்.. இதனால வசுதேவண்ணா ஏதும் சங்கடப்பட்டுட கூடாது.

சாந்தி முகூர்த்தம் முடிஞ்சு வெளிய வந்ததும்… கொஞ்சம் இதெல்லாம் எடுத்து சொல்லி செய்ய வச்சுடுங்க…” அன்னம்மாவிடம் கோரிக்கை வைக்க… 

“எல்லாத்தையும் நான் நல்லபடியா செய்ய வச்சுடுவேன் மேடம்… நீங்க நிம்மதியா கிளம்புங்க…” என்று வாக்களித்தார் அன்னம்மா.

பின்பு சற்று நேரத்திற்கெல்லாம் மகளை குளிக்க வரச்செய்து… அளவான அலங்காரத்தில் அவளை தயார் செய்து முடித்தவர்…

“குட்டிம்மா… இப்போ நீ தனியாள் இல்ல.. ஒரு குடும்பமே உனக்காக இருக்கு… நடந்ததை நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காத.. விது ரொம்ப நல்ல பையன்டா….உன் வாழ்க்கையை நீ நல்லபடியா பார்த்துக்கனும்…. அடுத்த வருஷமே எங்க பேரப்பிள்ளையை எங்ககிட்ட குடுத்து சந்தோஷப்படுத்து…” மகளை அணைத்துக்கொண்டு விடுவித்தவர்… வெளியே வர… நந்தன் அவர்களை தேடி வந்தவர்… மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு… 

“வனி.. நான் வெயிட் பண்றேன் வெளில…” காரை நோக்கி நடந்து சென்று விட்டார். தந்தையின் பாராமுகம் அவளை ஏதோ செய்ய.. ஆனாலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் நேரம் இதுவல்ல என்பதை புரிந்து கொண்டவளாக… அன்னையுடன் நடந்து சென்றாள்.

யவனி மகளை விதுரனின் அறை வாயிலில் விட்டவர்… “பார்த்து நடந்துக்கோ குட்டிமா… நாங்க இப்ப கிளம்புறோம்… நாளைக்கு மறுவீடு அழைக்க வந்துடுவோம்… நீயும் மாப்பிள்ளையும் சந்தோஷமா வரனும்… ” அறிவுரை கூறியவர்…  வசுதேவனிடம் விடைபெற்று சென்றுவிட்டார்.

விதுரனின் அறைக்குள் அவள் நுழையும் போது.. அவன் அங்கு இல்லை. குளியலறையில் விளக்கெறிய… 

“ஓ.. ஹல்க்.. குளிக்கறானா…?? அவன் வர்றதுக்குள்ள இங்கேயே படுத்து தூங்கிடலாம்.. பாலை அங்கிருந்த மேசையில் வைத்தவள்…. அப்படியே அங்கிருந்த சோஃபாவில் படுத்து முகம் வரை போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். ஆனால் தூக்கம் தான் வருவேனா என்றது…??” இருந்தாலும் அமைதியாக படுத்திருக்க.. 

சற்று நேரத்திற்கெல்லாம் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க… இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டாள்.

அவன் நடந்துவந்து பாலை எடுத்து அருந்தும் சத்தமும் கேட்டது. பின் அவனது காலடிகள் அவளை சமீபப்பதை உணர்ந்தவள்.. மூச்சை அடக்கி படுத்திருக்க….

“அடடே… டைக்ரஸ் கூட பயப்படும்னு இப்பதான் பார்க்குறேன்… “அவளது காதுக்கருகில் குரல் கேட்க.. அவனது சீண்டலில் சிலிர்த்தவளாக… சட்டென எழுந்து அமர்ந்தாள் அவள். 

அவன் அவளருகே மண்டியிட்டு அமர்ந்திருந்தான். 

” எனக்கு இதில் விருப்பமில்லை… ”  நேரடியாக விஷயத்திற்கு வர… 

“எனக்கு விருப்பமிருக்கு செல்லம்… முதல்ல இந்த பாலை குடிச்சிடு..” என்று நீட்ட… அப்பொழுதுதான் அவன் கையில் வைத்திருந்ததை கவனித்தாள்.

“இது நீ குடிச்சது.. நான் குடிக்க மாட்டேன்” என்று வாதிட… 

“அச்சோ.. அப்படியா…” சட்டென்று அவளருகே அமர்ந்து .. அவளது மூக்கை அழுத்தி பிடித்தவன்…தானாக திறந்துகொண்ட வாயில்… பாலை அவளுக்கு புகட்டி விட்டுதான் எழுந்தான்.

அவசரமாக விழுங்கிய பால்.. தொண்டையில் செருமலை ஏற்படுத்த…. கஷ்டப்பட்டு அதை விழுங்கிவிட்டாள்.

அவள் தன்னை சரிசெய்யும் வரை நின்று அவளை பார்த்துக்கொண்டிருந்தவன்… தன்னை அவள் முறைத்து பார்க்கவும்… அவள் எதிர்பாராத வண்ணம் அவளை தூக்கி இருந்தான் விதுரன்.

“ஹே.. விடு என்னை.. எனக்கு சோஃபாதான் வசதியா இருக்கு…நான் அங்கதான் தூங்குவேன்… ” அவன் கைகளில் இருந்து குதிக்க முயற்சி செய்ய… 

” எனக்கு வசதியாக இருக்காது செல்லம்… ” என்றவனின் குரலில் அதிர்ந்து நோக்கியவளை…படுக்கையில் இறக்கியவன்… 

அதிரடியாக அவளது அதரங்களை சிறையெடுக்க… அதன்பின்பு அவனது மென்மையான அணுகுமுறையில் அவளாக களைத்து ஓய்ந்து தூங்கும் வரை அவளை விடாதவன்… விடியலின் தருவாயில் அவளை அணைத்துக்கொண்டே நிம்மதியாக தூக்கத்தை தொடர்ந்தான்.

இதோ இப்பொழுதும் தனது காரியத்தை சாதித்துக்கொண்டு அசந்து தூங்குபவனை… பார்த்தவள்.. பின் மெதுவாக அவன் எழாதவண்ணம் அவனிடமிருந்து விலகி குளித்துவிட்டு தயாராகி கீழே இறங்கி சென்றாள் மிஷ்டி.

படிக்கட்டுகளில் இறங்கி வரும் மருமகளை பார்த்து வசுதேவன் சந்தோஷப்பட.. மிஷ்டியைக் கண்ட அன்னம்மாள் … அவளை பார்த்து நிறைவான புன்னகையை பூத்தவர்… பூஜையறையில் எல்லாம் தயார் நிலையில் இருக்கிறதா என்று பார்க்க சென்றார்.

வசுதேவனைப்பார்த்து மிஷ்டியும் புன்னகை பூத்துக்கொண்டே இறங்கி வர… படிக்கட்டுகளின் வளைவுகளில் இறங்கி வரும் போது… மருமகளின் கையில் இருந்த பெட்டியை பார்த்து அதிர்ந்து நின்றார் வசுதேவன்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 7 சராசரி: 4.6]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent Author

3. அற்றைத் திங்களில்

ஆல(ழ)கா(த)லன் அத்தியாயம் 7-9